என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 24 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-2


ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை





நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only




 


1)  சிவப்பு பட்டுக் கயிறு:

இது ஒரு வித்யாசமான தலைப்பாக உள்ளது. கதையுடன் பொருந்தி படிக்கும் நம்மையும் கலங்கச் செய்கிறது. 

பொதுவாக பெண்களுக்குத்தான் கல்யாணம் ஆகும்வரை பிறந்த வீடு என்று ஒன்றும், கல்யாணம் ஆனபிறகு புகுந்த வீடு அல்லது தனிக்குடுத்தனம் என்றும் செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளன. 

இது போல ஏதும் ஆண்களுக்கும் உள்ளதா என்றால் நாம் பொதுவாக இதுபோலக் கேள்விப்பட்டது இல்லை என்றுதான் சொல்லுவோம். அல்லது ஒருசிலர் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிச்செல்வது நம் நினைவுக்கு வரலாம்.

நம் தமிழ்நாட்டில் ஓர் குறிப்பிட்ட சமூகத்தினரில், சிறுவயது பிள்ளையாய் இருக்கும்போதே, ஒரு குறிப்பிட்ட நிர்பந்தமான, தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மட்டும், வேறு வழியே இல்லாத சங்கடமிக்கதோர் சடங்குக்காக வேண்டி, இடுப்பில் தான் கட்டியிருக்கும் அரணாக்கயிற்றையும் அறுத்துப் போட்டு விட்டு, தான் ஆண் வாரிசாகப் பிறந்துள்ள தன் குடும்பத்தையே, முற்றிலுமாகத் துறந்து விட்டு வெளியேறி, வேறொரு வீட்டுக்குச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை எடுத்துச்சொல்லும் மிக அருமையான கதை இது. 

இந்த ஒரு நிகழ்வினால், இரு தரப்பினருக்குமே, கொஞ்சம் மன வருத்தங்களும், கொஞ்சம் சந்தோஷத்துடன் கூடிய இலாபமும் ஏற்படத்தான் செய்கிறது என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.

இந்த நிகழ்வினை, பிரஸவத்திற்காகத் தன் தாய் வீடு வந்துள்ள ஓர் பெண்மணி, தன் வீட்டிலேயே இந்த நிகழ்ச்சி நடப்பதைக் காண நேர்ந்து, அவள் பார்வையில் சற்றே வருத்தம் கலந்து சொல்வதுபோல எழுதியுள்ளது, டச்சிங்காக மிகவும் அருமையாக உள்ளது.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

“தாய் வீடு சொந்த சுவாசம் போலவும், மாமியார் வீடு கொஞ்ச காலத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டரில்  சுவாசிப்பது போலவும் இருக்கிறது. வீட்டின் கதவுகள், அலமாரிகள், பொருட்களுடனான பரிச்சயம் அதிகமானபின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

நெல் பயிரை இரண்டு முறை நடவு செய்வதுபோல, ஒரு இடத்திலிருந்து மறு நடவு செய்தபின்தான் அது செழிக்கும் என்றால், அதைத்தானே செய்ய வேண்டும். என்ன சொன்னாலும் வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது ... மண்ணுக்கும் பயிருக்கும்”.

தன் இடுப்பிலிருந்து ஓர் ஆண்பிள்ளை பட்டுக்கயிறு அறுப்பது என்பது தொப்புள்கொடி அறுப்பதற்குச் சமமாகும். 

‘இந்த வீட்டில் உன் உறவு முடிந்துவிட்டது. இனி இன்னொரு ஜன்மம் உனக்கு. இன்னொரு பெயர் உனக்கு’ எனப் பிரிப்பதுபோல. 

[தினமணி கதிர்-2012 இல் வெளியாகியுள்ள கதை இது. காரைக்குடி புத்தகத் திருவிழாவின் சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றுள்ள கதை இது]

 

2) சூலம்

ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் விறுவிறுப்பான கதை. த்ரில்லிங்கான + அமானுஷ்யமான முடிவு.

குடியினாலும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களாலும் அதை உபயோகிப்பவர் மட்டுமின்றி, அவரின் மனைவி, மக்கள், கஷ்டப்பட்டு பணம் புரட்டி செலவழித்து கல்யாணம் செய்துகொடுத்த மாமனார், மாமியார் போன்ற குடும்பத்தார் அனைவருமே எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள்  + அவமானப்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துச்சொல்லியுள்ள, பாராட்டுக்குரிய கதை.

நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்:

’ராசாவின் பார்வை ராணியின் பக்கம்’ என்று டி.வி.யில் வாத்தியாரய்யாவும் சரோஜாதேவியும் பாட, இந்தக்கதையில் கதாநாயகியாக வரும் ’தேவி’ வாத்தியாரய்யாவாக நினைத்து மாரியப்பனை காதலிச்சு அவனைத்தான் கட்டிக்குவேன் என்று ஒற்றைக்காலில் நின்று தான் நினைத்ததைச் சாதித்து இருக்கிறாள் அன்று.

’இந்த மூஞ்சியைப் பார்த்தா காதலித்தோம்’ என்று இப்போதெல்லாம் நினைக்கத் துவங்கி விட்டாள் அதே ’தேவி’. 

30 வயதைத்தொடும், நன்கு படித்த பெண்ணான மேகலா,  தன் தந்தை ’மாரியப்பன்’ + தாய் ‘தேவி’ ஆகியோரின் திருமண உறவைப் பார்த்து, தான் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற வைராக்கியத்திற்கே வந்து விட்டாள்.

 


3) கருணையாய் ஒரு வாழ்வு....

கருணைக்கொலையை ஆதரித்தும் எதிர்த்தும், மருத்துவ மனை செவிலி ஒருவருக்கும், அந்த நோயாளியின்  சுய சரிதையைக் கதையாக எழுத நினைத்து வந்திருக்கும் எழுத்தாளப் பெண்மணி ஒருவருக்கும் இடையே நடைபெறுவதாக புனைந்து எழுதப்பட்டுள்ளதோர் (கற்பனை) உரையாடல் இது.

ஓர் பட்டிமன்றத்தில் அமர்ந்து,  அவர்கள் இருதரப்பினரின் நியாயமான வாதங்களையும் ஆர்வமாகக் கேட்பதுபோல, இதனைப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளது.

நம் சிந்தனைக்காக .... அவர்களின் பேச்சினில் வரும் ஒருசில வரிகள்:-

வந்தவள்: “இத்தனை நீண்ட நாட்களாகி விட்டதே.... 38 வருடங்கள்.... அவளால் உடலால் அசையவேகூட முடியவில்லையே....?”

செவிலி: “உங்களுக்கு ஒன்று தெரியுமா.... அவளின் மாதாந்திரத் தொந்தரவுகளைக்கூட நாங்கள் பார்த்து சுத்தம் செய்திருக்கிறோம். இப்போது அதைக் கடந்து விட்டாள் அவள்.... எங்களுக்கு ஒருபோதும் அருவருப்பு ஏற்பட்டதே இல்லை.... எங்கள் குழந்தைபோல அவள்.... மாங்கலாய்டு, ஸ்பாஸ்டிக், மெண்டலி டிஸ்ஸாடர் உள்ள குழந்தைகளின் பெற்றோர் என்ன செய்வார்கள்.... அதைவிட அதிகம் ஒன்றும் நாங்கள் செய்துவிடவில்லை. 

மனதின் செயல்பாடு எண்ணங்களில் உறைந்திருக்கிறது.... ந்யூரான்களில் பொதிந்திருக்கிறது. ஏதேனும் அதிசயம் நடக்கலாம்.... அவள் விழிப்பாள்.... அப்படி ஒரு சாத்தியக்கூறு இருக்கிறது. எங்களைப் பார்த்து அவள் புன்னகைக்க முடியும். அப்போது அவளைப் பாதுகாக்காமல் விட்டோமே எனத் தோன்றக்கூடாது.... ஓர் உயிர் வாழ்வது பற்றியும் இறப்பது பற்றியும் தீர்மானிக்க நாம் யார்....?”    



[இது 04.09.2011 அன்று ‘திண்ணை’யில்  வெளியிடப்பட்டுள்ளது.]




இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 
36 மணி நேர இடைவெளிகளில்
வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:

பகுதி-3 .... 25.09.2016 ஞாயிறு ........   இரவு  10 மணிக்கு
பகுதி-4 .... 27.09.2016 செவ்வாய் ....   பகல்  10 மணிக்கு
பகுதி-5 .... 28.09.2016 புதன் ..............   இரவு  10 மணிக்கு
பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி .........  பகல்  10 மணிக்கு

தொடரும்

 





என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]

வியாழன், 22 செப்டம்பர், 2016

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1

 




ஓர் சிறுகதைத் 
தொகுப்பு நூலுக்கான மதிப்புரை

 

சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது. 

இந்த ஆண்டு அவர்கள்  ‘சிவப்பு பட்டுக் கயிறு’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பு நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு இந்த 2016 செப்டம்பர் மாதம் எனக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன். 

இது .... நம் ஹனி மேடம் அவர்கள் வெளியிட்டுள்ள வெற்றிகரமான ஐந்தாவது நூலாகும். 

ஆனால் சிறுகதைத் தொகுப்பினில் இதுவே இவர்கள் வெளியிடும் முதல் நூலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
புதிய நூலின் முன்/பின் அட்டைகள் 


 இதுவரை ஏற்கனவே இவர்கள் 
’சாதனை அரசிகள்’ (கட்டுரைத் தொகுப்பு)
‘ங்கா...’ (குழந்தைக்கான கவிதைகள்)
‘அன்ன பட்சி’ (கவிதைத் தொகுப்பு)
‘பெண் பூக்கள்’ (கவிதைத் தொகுப்பு)  

ஆகிய நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இவற்றில் ‘பெண் பூக்கள்’ பற்றிய எனது புகழுரை
இதோ இந்த இணைப்பினில் உள்ளது:



இந்த ஆண்டு 2016 மே மாதம் வெளியிடப்பட்டுள்ள 
புத்தம் புதிய நூலான 
‘சிவப்பு பட்டுக் கயிறு’
 என்பதில் கீழ்க்கண்ட மிகச்சிறப்பான
15 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

(1) சிவப்பு பட்டுக் கயிறு (2) சூலம் (3) கருணையாய் ஒரு வாழ்வு... (4) கத்திக்கப்பல் (5) பட்டாம் பூச்சிகளும் பூக்களும் (6) செம்மாதுளைச்சாறு (7) நான் மிஸ்டர் Y (8) சொர்க்கத்தின் எல்லை நரகம் (9) அப்பத்தா (10) ரக்‌ஷாபந்தன் (11) பிள்ளைக்கறி (12) எருமுட்டை (13) நந்தினி (14) கல்யாண முருங்கை (15) ஸ்ட்ரோக்.

ஒவ்வொரு கதையையும் நான் ஊன்றிப் படித்து வரும்போது, அவர்கள் எடுத்துக்கொண்டுள்ள வெவ்வேறு விதமான கதைக்கருக்களையும், அவற்றை அவர்கள் எழுதியுள்ள மிகச்சிறப்பான தனிப்பாணியையும், ஒருசில கதைகளில் அவர்களின் எழுத்தினில் உள்ள புரட்சிகரமானத் துணிச்சலையும் நினைத்து, எனக்குள் நான் மிகவும் வியந்துபோனேன். 

10.09.2016 அன்று மட்டுமே இந்த இவரின் தொகுப்பு நூல் என் கைகளுக்கு கிடைத்தது. கடந்த ஒரு வாரத்திற்குள், இந்த நூலினை முழுவதும் படித்து முடிக்காமல், என்னால் அங்கு இங்கு என்று எங்குமே நகரவே முடியாமல் என்னைக் கட்டிப்போட்டு விட்டன.  இந்த சாதனை அரசியின் அறிவு பூர்வமான, அர்த்தமுள்ள, மிக அருமையான ஆக்கங்கள் எனக்குப் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தன.

இவற்றில் உள்ள ஒவ்வொரு கதையைப் பற்றியும் ஒருசில வரிகளாவது தங்களுடன் பகிர்ந்துகொள்ள நான் நினைத்துள்ளேன். அதனால் இந்த நூலினைப் பற்றிய என் புகழுரை மேலும் ஒரு சில பகுதிகளாகத் தொடர்ந்து வரக்கூடும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த முதல் பகுதி தான் ‘தேன் கூடு’ என்றால் இனி வர இருக்கும் பகுதிகள் ‘தேன் துளிகள்’ போலவே மிக இனிமையாக இருக்கக்கூடும்.  



காணத்தவறாதீர்கள் !

கருத்தளிக்க மறவாதீர்கள்!!




  



நூல் வெளியீடு:

சிவப்பு பட்டுக் கயிறு 
(சிறுகதைகள்)
நூல் ஆசிரியர்: 
திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்

PUBLISHER:

DISCOVERY BOOK PALACE
# 6, MAHAVEER COMPLEX
MUNUSAMY SALAI
K.K.NAGAR WEST
CHENNAI-600 078

PHONE: +91 - 44-6515 7525
MOBILE: +91 87545 07070

E-mail: discoverybookpalace@gmail.com
Website: www.discoverybookpalace.com 

First Edition: May 2016

Total No. of Pages: 104 
(Excluding wrappers)

Price Rs. 80/- only



இதுவரை கடந்த எட்டு ஆண்டுகளில் தனது வலைத்தளத்தினில் 

சுமார் 2500 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ள  


எழுத்துலக சாதனை அரசி + சகலகலாவல்லி

திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள்
பற்றி நான் ஏற்கனவே கீழ்க்கண்ட என் பதிவுகளில்
சிறப்பித்து எழுதியுள்ளவைகள் 
மீண்டும் தங்களின் பார்வைக்காக இதோ

 


இவர்களது வலைத்தளத்தினில் 

என் சிறப்புப் பேட்டி காண இதோ இணைப்பு:

என் மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்கள் பற்றிய 
இவர்களின் விமர்சனங்கள் காண இதோ இணைப்பு:



இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 
36 மணி நேர இடைவெளிகளில்
வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை:

பகுதி-2 .... 24.09.2016 சனி ...............    பகல்  10 மணிக்கு
பகுதி-3 .... 25.09.2016 ஞாயிறு ........   இரவு  10 மணிக்கு
பகுதி-4 .... 27.09.2016 செவ்வாய் ....   பகல்  10 மணிக்கு
பகுதி-5 .... 28.09.2016 புதன் ..............   இரவு  10 மணிக்கு
பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி .........  பகல்  10 மணிக்கு

தொடரும்




என்றும் அன்புடன் தங்கள்,


[ வை. கோபாலகிருஷ்ணன் ]


‘ப்ராப்தம்’ பதிவர் அனுப்பியுள்ள
’மங்கையர் மலர்’ டிஸம்பர் 2015 இதழின்
இலவச இணைப்பிலிருந்து சில படங்கள்:

  



வியாழன், 1 செப்டம்பர், 2016

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு !




முத்துச்சிதறல் 
வலைப்பதிவர்
திருமதி. 
மனோ சாமிநாதன் 
 
அவர்களுடன் 
மீண்டும் ஓர் இனிய சந்திப்பு  

நாள்: 01.09.2016 வியாழக்கிழமை
இடம்:  ‘பவித்ராலயா’  ( நமது இல்லம் )
நேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை

சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்குப்பின், இன்று நம் ‘முத்துச்சிதறல்’ வலைத்தளத்தின் பிரபல வலைப்பதிவரும், பல்வேறு தனித்திறமைகள் வாய்ந்தவருமான திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்,  மீண்டும் என்னை சந்தித்து மகிழ்வித்தார்.  

ஏற்கனவே இவரை மட்டும், நான் 20.02.2011 அன்று என் இல்லத்தின் அருகேயுள்ள ஓர் திருமண மண்டபத்தில், எங்கள் வீட்டு விழா ஒன்றில் சந்திக்க நேர்ந்தது.

இன்று இவர் தன் அன்புக் கணவருடன் என் இல்லத்திற்கே நேரில் வருகை தந்திருந்தது மேலும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

அவர்களின் இன்றைய அபூர்வ வருகையின்போது, என் இல்லத்தில் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள்:

(திருமதி. மனோ சுவாமிநாதன் தம்பதியினராக)


[ அவர்களுடன் நாங்களும் ]

அவர்கள் முகத்தில் காட்டிய புன்சிரிப்புடன்கூடிய பேரன்பினைத்தவிர, ஓர் பை நிறைய இங்கு எங்கள் வீட்டில் விட்டுச்சென்றுள்ள அன்பு, எங்களை மேலும் திக்குமுக்காட வைத்துள்ளன. அவற்றின் ஒருசில புகைப்படங்கள் இதோ:


கலைநயம் மிக்க அழகிய முக்கோணத்தட்டு.
அதில் சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து
மூன்று சிமிழ்கள்.  

  
அத்துடன்  அரை டஜன் ராயல் ஆப்பிள்கள் !
[ Imported from New Zealand ]

 ஒளிமயமான எதிர்காலத்தின் 
அடையாளச் சின்னமாக .....

ஒளியூட்டிடும்  டார்ச் லைட் +
ரீ-சார்ஜபிள் பேட்டரி + ப்ளக் + 
ஒயர் கனெக்‌ஷன்களுடன்
சப்ஜாடாக ....... :)


எங்கள் இல்லத்திற்கு இன்று அன்புடன் வருகைதந்து, 
சுமார் ஒரு மணி நேரம் பேசி மகிழ்ந்து, 
எங்களையும் மகிழ்வித்துச்சென்ற இனிய தம்பதியினரான
திரு. சுவாமிநாதன் அவர்களுக்கும்
திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களுக்கும்  
எங்கள் குடும்பத்தாரின் சார்பிலும், என் சார்பிலும் 
 என் இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 


எங்களின் முதல் சந்திப்பு
நிகழ்ந்த நாள்: 20.02.2011
பல்வேறு படங்களுடன் காண இதோ இணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html  




என்றும் அன்புடன் தங்கள்,


(வை. கோபாலகிருஷ்ணன்)