அழகு நிலையம்
சிறுகதை
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
நீண்ட நாட்களாக வடக்கேயே வேலை பார்த்து வந்த நமச்சிவாயத்திற்கு, ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முதன்மை மேலாளரான பதவி உயர்வுடன், சொந்த ஊருக்கே மாற்றலும் ஆகிவிட்டது.
சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கே வந்துள்ள அவருக்கு, ஊரில் ஏற்பட்டுள்ள பலவித மாற்றங்கள் அதிசயமாக இருந்தன. புதிய பலமாடிக்கட்டடங்கள், வணிக வளாகங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், போக்குவரத்து நெருக்கடிகள், புதிய பேருந்து நிலையங்கள், மக்கட்தொகைக்குப் போட்டிபோட்டு பெருகியுள்ள வாகனங்கள். மொத்தத்தில் அமைதியாகவும் சற்றே சோம்பேறித்தனமாகவும் இருந்த அந்த ஊர், ஆரவாரமாகவும் சுறுசுறுப்பாகவும் மாறியுள்ளது.
அவர் அந்தக்காலத்தில் வழக்கமாக சம்மர் க்ராப் அடித்துக்கொள்ளச் செல்லும் “அழகு நிலையம்” என்ற முடி திருத்தும் கடை மட்டும் அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் அதே மங்கிய போர்டுடன் ”அழகு நிலையம் - உரிமையாளர்: ‘பங்காரு” எனக் காட்சியளித்தது.
சுழலும் நாற்காலிகளில் நால்வர் அமர்ந்திருக்க, இவர் மட்டும் வெயிட்டிங் லிஸ்ட் நம்பர் ஒன்றாக, அங்கிருந்த சற்றே ஆடும் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து செய்தித்தாள்களைப் புரட்டிக்கொண்டிருந்தார்.
கட்டிங் + ஷேவிங் முடிந்த ஒருவர் நல்ல சுகமான தூக்கத்தில் இருந்தார். அவர் முகத்தில் தண்ணீரால் ஸ்ப்ரே செய்யப்பட்டு, டர்க்கி டவலால் முகம் ஒத்தப்பட்டு, பிறகு ஸ்நோவும் பவுடரும் அடிக்கப்பட்டு எழுப்பி விடப்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருந்தார்.
[பார்பர் ஷாப்பில், நம்முடைய நல்ல சுகமான தூக்கத்தைக் கலைக்காமல் அந்த நாவிதர் ஏதாவது நம் தலையிலும் முகத்திலும் மாற்றி மாற்றி, சீப்பு, கத்தி, கத்தரியால் ஏதாவது கைவேலைகள் மணிக்கணக்காகச் செய்து கொண்டே இருந்தால் தேவலாமே; அந்த சுகமே தனி தானே; அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாதே; அதற்கு எவ்வளவு ஆயிரககணக்கில் பணம் கேட்டாலும் கூட கொடுத்து விடலாமே என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வது உண்டு. அந்த சுகம் பற்றி அனுபவித்தவர்களுக்கே புரியும்; அனைவருக்கும் தெரிய நியாயமில்லை;அதனால் கதைக்குத் திரும்புவோம்]
தலைக்கு மேல் இருந்த தலையாய வேலை முடிந்து எழுந்து சென்றவர் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை கைத்துண்டால் நாலு தட்டு தட்டிவிட்டு, “சார் நீங்க வரலாம்” என்று அழைத்த அந்த முடிதிருத்தும் தொழிலாளியை உற்றுப் பார்த்த நமச்சிவாயத்திற்கு, அவரை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்துப் பழகிய முகம் போலத் தோன்றியது.
”சார், கட்டிங்கா, ஷேவிங்கா அல்லது இரண்டுமா” என்று கேட்டவாறே நமச்சிவாயத்தைச் சுழல் நாற்காலியில் அமர வைத்து, மடித்து வைத்திருந்த ஒரு வெள்ளைத்துணியை உதறி, பொன்னாடை போல அவருக்குப் போர்த்தி, கழுத்தில் சற்றே இடைவெளி கொடுத்து சொருகி விட்டான், அந்தத் தொழிலாளி.
”கட்டிங் + ஷேவிங் இரண்டுமே தான்” என்றார் நமச்சிவாயம்.
வெகு அழகாக முடி வெட்டப்பட்டு, மையாக அரைத்த பருப்புத்தொகையல் போல, பளிச்சென்று வழுவழுப்பாக ஷேவிங் செய்யப்பட்ட முகத்துடன், நமச்சிவாயம் ஒரு பத்து வயது குறைந்தது போலக் காணப்பட்டார்.
அங்கிருந்த கட்டண விபர அட்டைப்படி கட்டிங்+ஷேவிங் ஐம்பது ரூபாய் என்று போட்டிருந்தும், வடக்கே உள்ள ஊர்களைவிட இது மிகவும் மலிவு என்று எண்ணிய நமச்சிவாயம், பத்து ரூபாய் டிப்ஸ் சேர்த்து சலவை நோட்டுக்களாக ஆறு பத்து ரூபாய் நோட்டுக்களை அவனிடம் கொடுத்தார்.
“ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று ஒரு கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டவன், ”நீங்க இந்த ஊருக்குப் புதுசா, சார்? உங்களை இதற்கு முன்பு நான் எங்கேயோ பார்த்தாற்போல உள்ளது, சார்” என்றான், அந்த முடி திருத்தும் தொழிலாளி.
”எனக்கும் உன்னைப் பார்த்ததும் அது போலத்தானப்பா தோன்றியது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் தான் நான். முப்பது வருடங்களுக்கு முன்பு இதே ஊரில் தான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு சென்னைக்குச் சென்று கல்லூரிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு உத்யோக விஷயமாக வடக்கே பல ஊர்களில் பணியாற்றிவிட்டு , இப்போது திரும்ப இந்த ஊருக்கே, பணிமாற்றமாகி வந்துள்ளேன்” என்றார்.
’எந்த ஸ்கூலில் படித்தீர்கள் சார்” என்றதும் நமச்சிவாயம் தான் பதினோராவது வகுப்பு படித்த பள்ளியின் பெயரைச்சொல்லி, படித்து முடித்த வருஷத்தையும் சொன்னதும், “அப்போ உங்க பெயர் நமச்சிவாயம் தானே?” என்று கேட்டு தன் வலது முழங்கையைத் திருப்பிக்காட்டினான், அந்தத் தொழிலாளி. ஆழமாகப் பல் பதிந்திருந்த தழும்பு ஒன்று அங்கு காணப்பட்டது.
”டேய் அப்போ நீ ராஜப்பாவாடா?; ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி ஆகிவிட்டாயேடா; என்று சொல்லி அவனை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டு விட்டார் நமச்சிவாயம்.
பள்ளியில் படிக்கும் போது நமச்சிவாயத்தை விட ராஜப்பா அதிக மதிப்பெண்கள் பெற்று வகுப்பிலேயே முதல் மாணவனாகத் திகழ்ந்தவன். அவனுடைய கெயெழுத்து மணிமணியாக அழகாக இருக்கும். அழகாக ஓவியம் வரையும் திறமையும் அவனுக்கு உண்டு. விஞ்ஞான பாடத்தில் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும் என்றால் மிக அழகாக வரைந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிடுவான்.
எந்த ஒரு வேலையையும் முழுமையாகத் தெளிவாகத் தப்பேதும் இல்லாமல், அழகாக நேர்த்தியாக விரைவாகச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவன். ஆசிரியர்கள் அனைவருக்குமே அவனை மிகவும் பிடிக்கும். நமச்சிவாயத்திற்கு அந்த நாட்களில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்த குருநாதரும் இதே ராஜப்பா தான்.
ராஜப்பாவும் நமச்சிவாயமும் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோறாம் வகுப்பு வரை, ஒரே வகுப்பறையில் ஒன்றாகவே பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து படித்த ஆருயிர் நண்பர்கள்.
ஆறாவது படிக்கும் போது ஏதோ அவர்களுக்குள் ஏற்பட்ட விளையாட்டுச் சண்டையில், நமச்சிவாயம் ராஜப்பாவின் முழங்கைப்பக்கம்,தன் பல் பதியுமாறு நன்றாகக் கடித்து விட்டார்.
ஒருவருக்கொருவர் பழைய மலரும் நினைவுகளில் மூழ்கி, கட்டிப்பிடித்து ஆலிங்கனம் செய்து கொண்டு, பிறகு அந்த அழகு நிலையத்தில் அனைவரும் தங்களையே பார்க்கின்றனர் என்பதை அறிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள்.
”நீ என்னடா இந்தத் தொழிலுக்கு வந்து விட்டாய்? மேற்கொண்டு படித்து வேறு ஏதாவது நல்ல வேலைக்குப் போய் இருப்பாய் என்றல்லவா நினைத்தேன்” என்று பரிவுடன் கேட்டார் நமச்சிவாயம்.
ராஜப்பா ஸ்கூல் படிப்பு முடிந்ததும் தனக்கு ஏற்பட்ட, தன் தந்தையின் திடீர் மறைவையும், குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய நிர்பந்தங்களையும், மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலைகளையும் எடுத்துக்கூறினான்.
மேற்கொண்டு படிப்பைத்தொடர முடியாமல் போய் விட்டதையும் விளக்கினான். தானும் பலவிதமான வேலை வாய்ப்புக்களுக்கு முயற்சித்து, எதுவும் பலனின்றி, கடைசியில் தங்கள் பரம்பரையின் குலத்தொழிலாகிய இந்த முடி வெட்டும் தொழிலில் இறங்கியதில், அதுதான் இன்றுவரை ஏதோ தன் வயிற்றுப் பிழைப்புக்கு வழிகாட்டி வருவதாகச் சொன்னான்.
இப்போது நோய் வாய்ப்பட்டுள்ள இந்தக் கடையின் முதலாளி பங்காரு அவர்களும், இந்தக் கடையை யாரிடமாவது விற்றுவிட முடிவு செய்து, முயற்சித்து வருவதாகவும், அவ்வாறு அவர் ஒருவேளை செய்து விட்டால், தான் பார்த்துவரும் இந்தத் தொழிலுக்கும் ஆபத்து வரலாம் என்றும் அது தான் தனக்கு இப்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது என்று, தன் வருத்தத்தை ராஜப்பா நமச்சிவாயத்திடம் பகிர்ந்து கொண்டான்.
அந்தக்கால பள்ளித் தோழன். பால்ய வயதில் தன் ஆருயிர் நண்பன். தனக்கு சைக்கிள் கற்றுக்கொடுத்த குரு, இவ்வாறு தன் கஷ்ட நிலைமையை எடுத்துக்கூறியதும், நமச்சிவாயம் அவன் மேல் இரக்கம் கொண்டு ஏதாவது அவனுக்கு உதவி செய்திட விரும்பினார்.
மறுநாள் தன்னை தன் அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறு கூறி, தன் விசிடிங் கார்டு ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு, விடைபெற்றுச் சென்றார்.
மறுநாள் அந்த குளுகுளு ஏ.ஸீ. அறைக்குள் நுழைந்த ராஜப்பா பிரமித்துப்போய் விட்டான்.
ஜி. நமச்சிவாயம், சீஃப் மேனேஜர் என்று அழகிய பெயர் பலகை; சிம்மாசனம் போன்ற இருக்கை. படுத்துப் புரளலாம் போல ஒரு மிகப்பெரிய மேஜை; காலிங்பெல் பட்டனை அழுத்தினால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்கும் எடுபிடி ஆட்கள்; கால்வாசி மேஜைக்கு மேல் பல வண்ணங்களில், புத்தம் புது மாடல்களில் நிறைய தொலைபேசி இணைப்புகள்; அழகிய பூப்போட்ட வண்ணத்திரை சீலைகள்; கண்ணுக்கு ரம்யமான பல பூந்தொட்டிகள், கலர் கலராக மிதந்து வரும் அழகான மீன்களுடன் கூடிய மீன் தொட்டிகள். தன்னுடன் ஒரே வகுப்பில் படித்த தன் நண்பர் நமச்சிவாயத்தின் இன்றைய நிலைமையையும்,உயர்ந்த மரியாதைக்குரிய சமூக அந்தஸ்தையும் நினைத்து மிகவும் பெருமைப்பட்டான், ராஜப்பா.
தயங்கி நின்ற அவனை, தானே தன் சீட்டிலிருந்து எழுந்து போய், கைகுலுக்கி வரவேற்று, அங்கிருந்த கும்மென்ற பந்தாவான சோபாவில் அமரச்செய்து, தானும் அவனுடன் மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டு, இரண்டு ஆப்பிள் ஜூஸ் கொண்டுவருமாறு ஆர்டர் செய்தார், நமச்சிவாயம்.
நமச்சிவாயம் அளித்த வங்கிக்கடன் உதவி மூலம், அந்த அழகு நிலையம் ராஜாப்பாவுக்கே சொந்தமாக்கப்பட்டது. அந்தக்கடை மிகவும் நவீனப் படுத்தப்பட்டது. விஸ்தரிக்கப்பட்டது. குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டன. சுத்தம் மற்றும் சுகாதாரம் கடைபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு சில தொழில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அந்தக்கடையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கலர் டீ.வி. பொருத்தப்பட்டது. தொலைபேசி இணைப்பும் வாங்கப்பட்டது.
”முடி வெட்டிக்கொள்ள நினைப்போர் முன் பதிவு செய்து கொள்ளலாம் - தொடர்புக்கு தொலைபேசி எண்: .............................. குறித்த நேரத்தில் காலதாமதமின்றி சேவை செய்து அனுப்பப்படும்” என்று விளம்பரப் படுத்தப்பட்டது.
வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயத்தினால் கடையின் திறப்பு விழா நடைபெற்றது.
நமச்சிவாயத்தின் ஆருயிர் நண்பனான ராஜப்பா இப்போது அந்தக் கடையின் முழு உரிமையாளராக ஆக்கப்பட்டிருந்தார். நேர தாமதம் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, சிறந்த சேவை அளிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அந்தக்கடைக்கே சென்று தங்கள் ஆதரவைத் தொடர்ந்து அளித்து வந்தனர்.
“செய்யும் தொழிலே தெய்வம் - அதில் நாம் காட்டும் திறமையே செல்வம்” என்று நினைத்து, உண்மையாக உழைத்து வந்த ராஜப்பாவை, தெய்வம் கை விடவே இல்லை. நமச்சிவாயம் என்ற நண்பர் ரூபத்தில் வந்து கை தூக்கி விட்டுள்ளது.
நேர்மை, நாணயம், நம்பிக்கை மற்றும் சேவை மனப்பான்மையுடன் துவங்கும் எந்தத்தொழிலும் மேன்மையுடன் விளங்கும் என்பதே உண்மை என்பதற்கு இந்த “அழகு நிலையம்” சாட்சியல்லவா!

-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-
இந்தச் சிறுக்தை ’வல்லமை’ மின் இதழில்
15.11.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளது
Ref: http://www.vallamai.com/archives/10415/