கொரனா வைரஸ் பீதி
இந்தியா முழுவதும் ஊரடங்கு
22.03.2020 ஞாயிறு
^22.03.2020 AT TIRUCHIRAPPALLI TOWN^
^22.03.2020 AT MARINE DRIVE - MUMBAI^
வாட்ஸ்-அப்பில் வந்த செய்திகளில்
படித்ததில் மிகவும் பிடித்தது:
*அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள்*
*சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது. மழை அதன் போக்கில் பெய்கின்றது. வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை*
*மான்கள் துள்ளுகின்றன, அருவிகள் வீழ்கின்றன, யானைகள் உலாவுகின்றன, முயல்கள் விளையாடுகின்றன, மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன*
*தவளை கூட துள்ளி ஆடுகின்றது, பல்லிக்கும் பயமில்லை, எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன, காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டுக் குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை*
*மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது , சக மனிதனையும் அதனால் நேசிக்க தயங்குகின்றது, வீட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது*
*முடங்கியது உலகமல்ல, மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம். அதில் அவன் மட்டும் வாழ்ந்தான், அவன் மட்டும் ஆடினான், அவனுக்கொரு உலகம் சமைத்து, அதுதான் உலகமென்றான்*
*மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை, உழைப்பென்றான், சம்பாத்தியமென்றான், விஞ்ஞானமென்றான், என்னன்னெவோ உலக நியதி என்றான்*
*உலகம் பிறந்ததும், உயிர்கள் பிறந்ததும் எனக்காக, நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான்*
*ஆடினான், ஆடினான் அவனால் முடிந்தமட்டும் ஆடினான்*
*ஓடினான், பறந்தான், உயர்ந்தான், முடிந்த மட்டும் சுற்றினான், கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம், அவனால் உயிரை படைக்க முடியும், என்னால் முடியாது அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன், என மார்தட்டினான்*
*ஒரு கிருமி, கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமி, சொல்லி கொடுத்தது பாடம்*
*முடங்கி கிடக்கின்றான் மனிதன் , கண்ணில் தெரிகின்றது பயம், நெஞ்சில் தெரிகின்றது கலக்கம்*
*பல்லிக்கும், பாம்புக்கும், நத்தைக்கும், ஆந்தைக்கும்கூட உள்ள பாதுகாப்பு தனக்கில்லை, இவ்வளவுதான் நான் என விம்முகின்றான்*
*மண்புழுவுக்கும் கூட நான் சமமானவனோ பலமானவனோ இல்லையா என்பதில் அழுகின்றான்*
*முளைத்து வரும் விதை கூட அஞ்சவில்லை, நிலைத்துவிட்ட மரமும் அஞ்சவில்லை எனில், மரத்தை விட கீழானவனா நான் என அவனின் கண்ணீர் கூடுகின்றது*
*மாமரத்து கிளி அவனை கேலி பேசுகின்றது, கண்ணீரை துடைக்கின்றான்*
*காட்டுக்குள் விலங்குகளும், பறவைகளும், மரங்களும், நீர் வீழ்ச்சிகளும்கூட அவைகள் பாஷையில் பேசுகின்றன*
*ஆட்டுமந்தை கூட்டங்களும் , கோழிகளும் கூட பரிகாசம் செய்வதாகவே அவனுக்கு தோன்றுகின்றது*
*தெய்வங்கள் கூட தனக்காக கதவடைத்துவிட்ட நிலையில், காகங்களும் புறாக்களும் ஆலய கோபுரத்தில் அமர்ந்திருப்பதை சிரிப்புடன் பார்க்கின்றான் மனிதன்*
*கோவில் யானை உள்ளிருக்க, பசுமாடு உள்ளிருக்க, மனிதனை வெளியே தள்ளி பூட்டுகின்றது ஆலய கதவு*
*அவன் வீட்டில் முடங்கி கிடக்க, வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம். கொஞ்சி கேட்கின்றது சிட்டு, கடற்கரை வந்து சிரிக்கின்றது மீன்*
*தெருவோர நாய் பயமின்றி நடக்க, வீட்டில் ஏழு பூட்டொடு முடங்கி கிடக்கின்றான் மனிதன். தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல..*
*மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில். வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு*
*அவமானத்திலும், வேதனையிலும், கர்வம் உடைந்து, கவிழ்ந்து கிடந்து கண்ணீர்விட்டு ஞானம் பெறுகின்றது மானிட இனம்*
01-07-1945 TO 22-03-2020
அசாத்யமான அறிவு, ஆற்றல், நகைச்சுவையுடன் கூடிய ஜனரஞ்ஜக உணர்வு, மனிதாபிமானம் ஆகியவற்றின் மொத்த உருவமாய்த் திகழ்ந்த 'விசு' என்ற மிகவும் மகத்தானதோர் மனிதர் நம்மை விட்டு இன்று பிரிந்துள்ளது, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.