என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

அ ஞ் ச லை - 3 [ பகுதி 3 of 6 ]


”சொல்லுங்க சாமீ .... ஏதாவது ஜில்லுனு குடிக்க உங்களுக்கு சர்பத் வாங்கியாரட்டா? அம்மா நல்லா இருக்கங்களா?” என்று கேட்டாள் அஞ்சலை.

”சர்பத்தெல்லாம் ஒன்றும் வேண்டாம்மா, குடிக்க பானைத்தண்ணி கொடு போதும்; நானும் அம்மாவும் நல்லாத்தான் இருக்கோம். ஒரு மாதமா நீ ஏன் வீட்டுப்பக்கமே வரலை?  மேற்கொண்டு என்ன செய்வதாய் இருக்கிறாய்? 

ஏதோ நடக்கக்கூடாதது தான். போதாத காலமும் ஆகாத வேளையும் இப்படி சோதனையா நடந்து போச்சு. அதையே நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் எப்படிம்மா?” ஒரு வித வாஞ்சையுடன் வினவினார் சிவகுரு.

”நீங்களும் அம்மாவும் அன்னிக்கு இராமேஸ்வரத்துக்கு அவசரமா ஏதோ வேண்டுதல்ன்னு புறப்பட்டுக்கிட்டு இருக்கும்போது, என் புருஷன் ஆஸ்பத்தரியிலே தீவிர சிகிச்சைப் பிரிவுலே தன் உயிருக்குப் போராடிக்கிட்டு கிடந்தாரு. 

அப்போ நல்லவேளையா, நீங்கதான் தெய்வம் மாதிரி சுளையா நாலாயிரம் ரூபாய் கொடுத்துட்டுப்போனீங்க. அந்தப்பணத்துல கால் பகுதிக்குமேல் அந்த ஆஸ்பத்தரி நாயிங்க ஈவு இரக்கமே இல்லாமல் பிடுங்கி பங்கு போட்டுக்கிட்டாங்க. 

போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சு, ஒருவழியா அவங்ககிட்டேயிருந்து ’பாடி’யை வாங்கி சொச்ச காரியங்களைப் பார்க்க செலவழித்தது போக மீதிப்பணம் ஏதோ கொஞ்சம் இருந்திச்சு. 

இந்த மாசம் பூராவும் நான் வேலைக்கு எங்கும் போகாததாலே, அந்த மீதிப்பணம் தான், ஏதோ எனக்குக்கஞ்சி காய்ச்சிக் குடிக்கவும், என் புள்ளைக்கு பால் வாங்கிக்கொடுக்கவும், இன்னிக்கு வரைக்கும் உதவியாய் இருக்குது.

இந்தப் போலீஸ்காரங்களும், அரசாங்க அதிகாரீங்களும் அடிக்கடி வந்து ஏதேதோ விசாரணை பண்ணிட்டுப்போறாங்க. மேற்கொண்டு என்ன செய்யறதுண்ணு ஒண்ணுமே புரியலே .... சாமீ.

நீங்க தான் கடவுள் மாதிரி எவ்வளவோ தடவை பணம் காசு கொடுத்து,  எனக்கு உபகாரம் செய்துகிட்டு இருக்கீங்க. அந்தக்கடனையெல்லாம் இந்த ஜென்மத்திலே நானு எப்படி அடைப்பேன்னு தெரியலை சாமீ.

என் புருஷன் இருந்தவரைக்கும் பகல் பொழுதிலே இந்தப்புள்ளைய அவரு பார்த்துக்கிட்டு, நைட்டுலே வாட்ச்மேன் வேலைக்குப்போயிட்டிருந்தாரு. இப்போ நானும் வேலைக்குப்போனா, இந்தப்புள்ளைய யாரு பார்த்துப்பாங்கன்னு வேறு புரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன். 

இதுக்கு நடுவிலே பட்டணத்துலேந்து ஒருத்தர் வந்தாரு. இந்தக்குழந்தையைக் கொடுத்துடறா இருந்தா, முழுசா பத்தாயிரம் ரூபாய் வாங்கித்தந்துடுவாராம். நல்லா யோசனை பண்ணி வைய்யீன்னு சொல்லிவிட்டுப் போய் இருக்காரு. 

எப்படீங்க கஷ்டப்பட்டு பெத்து வளர்த்த புள்ளையப்போயீ மனசோட விக்க முடியும்?” கண்ணீர் விட்டவாறே புலம்பித்தீர்த்தாள் அஞ்சலை.    

அவளின் சோகக்கதையைக்கேட்டதும் சிவகுருவுக்கும் கண்ணீர் வந்துவிடும் போல வருத்தமாகவே இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்.  

எதிர்புறம் இருந்த டீக்கடையின் ரேடியோவில் “ஏன் பிறந்தாய் மகனே .... ஏன் பிறந்தாயோ .... நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே” என்ற பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்ப ஆரம்பித்த உடனேயே, திடீர் மின் தடை காரணமாக அத்துடன் நின்று போனது.  

”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார்.  

அஞ்சலையின் புருஷனை இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்த ஞாபகம் சிவகுருவுக்கு. 

ஒரு மாதம் முன்பு, அந்தப்பேட்டையில் விஷச்சராயம் அருந்தியதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களை, அள்ளிப்போட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தும், பலனின்றி பலியானவர்களில், இந்த அஞ்சலையின் புருஷனும் ஒருவர்.


தொடரும் 

25 கருத்துகள்:

  1. கதை மிக அருமையாக டேக் ஆப்
    ஆகிவிட்டது
    சீறிப் பறக்கட்டும் வாழ்த்துக்கள்����

    பதிலளிநீக்கு
  2. ”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார். //
    வேதனை! சிவகுருவிற்கு அதிகம்தான்.

    பதிலளிநீக்கு
  3. கதையின் போக்கு புரிவது போல இருக்கிறது.... பார்க்கலாம் உங்கள் முடிவும் நான் யோசித்ததும் ஒன்றா என்று?

    பதிலளிநீக்கு
  4. போன தொடர்கதையில் சிரிக்க வைத்த நீங்கள், இந்த தொடர்கதையில் சராசரி மனிதரின் மன வேதனையை எதார்த்தமாக சொல்றீங்க, கோபு மாமா.

    பதிலளிநீக்கு
  5. அஞ்சலையின் கணவர் இறந்துவிட்டாரா?சரி அடுத்த பகுதிகு எதிர்பார்ப்புடன்

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து கஷ்டங்கள் வந்தாலும் உண்மையில் பெண்கள்
    அதைத் தாங்கும் மன உறுதி கொண்டவர்கள்.அதிலிருந்து மீளவும்
    தெரிந்தவர்கள்.அஞ்சலையும் அப்படித்தான் என்றே எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. கோபு சார்!சௌக்கியமா?

    அஞ்சலை வழக்கமான உங்க ட்ரேட் மார்க் விவரணைகளுடன் மூன்று பார்ட் முடிந்துவிட்டது.

    நடுநடுவில் நீங்கள் கொடுக்கும் க்ளூவுக்கும் முடிவுக்கும் தொடர்பிருக்காது என்றும் யூகிக்கத் தோன்றுகிறது.

    ஒவ்வொரு பாகமும் திரும்பிப் பார்ப்பதற்குள் முடிந்துவிடுகிறது.ஆறை நான்காக்கி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  8. இந்தப்பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, மேலான கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள உங்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    என்றும் அன்புடன் தங்கள் vgk

    பதிலளிநீக்கு
  9. எதார்தமான எழுத்தும்,சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பாடல் பகிர்வும் அருமை.
    கதையை எப்படி போகும் என்று கணிக்க முடியலை..

    பதிலளிநீக்கு
  10. Asiya Omar said...
    //எதார்தமான ழுத்தும்,சந்தர்ப்பத்திற்கு ஏற்ற மாதிரி பாடல் பகிர்வும் அருமை.
    கதையை எப்படி போகும் என்று கணிக்க முடியலை..//

    தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

    நன்கு ரஸித்துப்படித்துள்ளீர்கள் என்பது தெரிகிறது.


    மனமார்ந்த நன்றிகள், மேடம். vgk

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது பதிவை படித்தவர்களை இப்படி இருக்குமோ அப்படியிருக்குமொன்னு பல சிந்தனை தூண்டி விட்டு இந்த பதிவில ஒரு திருப்புமுனையை கொடுத்து அடுத்து என்னன்னு ஆவலை அதிகப்படுத்தி விட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோதரி,

      தாங்கள் ஆர்வமாக இந்தக்கதையின் அடுத்தடுத்த பகுதிகளைப் படித்துக்கொண்டும், கருத்து அளித்துக்கொண்டும் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினைத் தருகிறது.

      அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      என்னுடைய நிறைய சிறுகதைகள் இதுபோலவே ஆங்காங்கே திருப்புமுனைகளுடன், படிப்பவர்களுக்கு மேலும் மேலும் ஆவலை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும்.

      அன்புடன்
      VGK

      நீக்கு
  12. பிள்ளைகள் பெறுவது பேரின்பம்தான் என்றாலும் அஞ்சலை மாதிரி திக்கற்றவர்களுக்கு அதுவே பெரும் பாரமாகி விடுகிறது. இதுதான் விதி என்பது.

    பதிலளிநீக்கு
  13. ம்ம்ம் அடுத்து என்ன ட்விஸ்ட் ??

    பதிலளிநீக்கு
  14. என்னதான் காசு, பணம் இல்லாதவர்களாக இருந்தாலும் எல்லாரும் குழந்தையை விற்று விட மாட்டார்கள். நம்ப அஞ்சலையும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.

    நாங்கள் ஒன்று நினைக்க, கதாசிரியர் நீங்கள் ஒன்று நினைப்பது தானே வாடிக்கை. சரியாக யூகிக்க முடிந்ததாக நாங்க நினைக்கும் போது, வெப்பீங்க பாருங்க ட்விஸ்ட். படிச்சுட்டு ட்விஸ்ட் டான்ஸ் தான் ஆடணும் நாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya May 17, 2015 at 10:35 PM

      //என்னதான் காசு, பணம் இல்லாதவர்களாக இருந்தாலும் எல்லாரும் குழந்தையை விற்று விட மாட்டார்கள். நம்ப அஞ்சலையும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.

      நாங்கள் ஒன்று நினைக்க, கதாசிரியர் நீங்கள் ஒன்று நினைப்பது தானே வாடிக்கை. சரியாக யூகிக்க முடிந்ததாக நாங்க நினைக்கும் போது, வெப்பீங்க பாருங்க ட்விஸ்ட். படிச்சுட்டு ட்விஸ்ட் டான்ஸ் தான் ஆடணும் நாங்க.//

      நீங்க டான்ஸ் கூட ஆடுவீங்களா ஜெயா? சொல்லவே இல்லையே ! :)

      நீக்கு
    2. பாட்டிக்கும், பேத்திக்கும் வேற என்ன வேலை. பாட்டு, கூத்து, டான்ஸ் எல்லாம் இங்க அமர்க்களப்படறது. இன்னிக்கு சாயங்காலம் சிதம்பரத்துல இருந்து வந்துட்டா லயாக்குட்டி. வந்ததுல இருந்து ஒரு ஆயிரம் தடவையாவது பாட்டி, பாட்டின்னு கூப்பிட்டாச்சு. அந்த உற்சாகத்துலதான் அடுக்கடுக்கா வருது பின்னூட்டங்கள்.

      நீக்கு
    3. Jayanthi Jaya May 17, 2015 at 11:05 PM

      //பாட்டிக்கும், பேத்திக்கும் வேற என்ன வேலை. பாட்டு, கூத்து, டான்ஸ் எல்லாம் இங்க அமர்க்களப்படறது. இன்னிக்கு சாயங்காலம் சிதம்பரத்துல இருந்து வந்துட்டா லயாக்குட்டி. வந்ததுல இருந்து ஒரு ஆயிரம் தடவையாவது பாட்டி, பாட்டின்னு கூப்பிட்டாச்சு. அந்த உற்சாகத்துலதான் அடுக்கடுக்கா வருது பின்னூட்டங்கள்.//

      ஆஹா, மிகவும் சந்தோஷம் ! ஜெயாப்பாட்டியை ஆட்டிப்படைக்கும் என் பட்டுக்குட்டி, செல்லக்குட்டி, பட்டுத்தங்கம், என் பேரன் ஆம்படையா லயா குட்டிக்கும், அவளோடு சேர்ந்து பாட்டு, கூத்து, டான்ஸ் என்று பயனுள்ள வகையில் பொழுதைப்போக்கும் ஜெயாக் குட்டிக்கும்.. ஸாரி.. பாட்டிக்கும் என் அன்பான வாழ்த்துகள்.

      ஆடிப்பாடி வாழ்க பல்லாண்டு !

      நீக்கு
  15. அஞ்சலயோட குடும்ப நெல விலாவாரியா சொல்லி புரிய வச்சினிங்க. மொக்கொண்டு இன்னா சொல்லினிவிங்க.

    பதிலளிநீக்கு
  16. அஞ்சலையின் குடும்ப நிலை நன்றாகவே சொல்லப்பட்டிருக்கு. இவளுக்கு குழந்தையை தத்துக் கொடுக்கும் எண்ணமும் இல்லைனு பிரியறது. மேல சொல்லுங்கோ.

    பதிலளிநீக்கு
  17. // எதிர்புறம் இருந்த டீக்கடையின் ரேடியோவில் “ஏன் பிறந்தாய் மகனே .... ஏன் பிறந்தாயோ .... நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே” என்ற பாடல் நேயர் விருப்பமாக ஒலிபரப்ப ஆரம்பித்த உடனேயே, திடீர் மின் தடை காரணமாக அத்துடன் நின்று போனது.

    ”இல்லையொரு .... பிள்ளையென்று ... ஏங்குவோர் பலரிருக்க ... இங்கு வந்து ஏன் பிறந்தாய்.... “ என்று அடுத்துவரும் பாடல் வரிகளை, வேதனையுடன் கொப்பளிக்க நினைத்த சிவகுரு, கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டார். // கதையின் போக்கினை கோடிட்டுக்காட்டுவது போன்ற வரிகள்...

    பதிலளிநீக்கு
  18. //ஒரு மாதம் முன்பு, அந்தப்பேட்டையில் விஷச்சராயம் அருந்தியதால், வாந்தி மயக்கம் ஏற்பட்டவர்களை, அள்ளிப்போட்டு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தும், பலனின்றி பலியானவர்களில், இந்த அஞ்சலையின் புருஷனும் ஒருவர்//
    பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய விதம் அருமை!

    பதிலளிநீக்கு
  19. இதுபோல ஏழைகளுக்கு தான் மன உறுதி நிறைய இருக்கும்போல... அவ சொன்ன சோக கதை கேட்டு சிவகுரு கண்களில்மட்டுமா கண்ணீர் வந்தது.. படிக்கிற எல்லார் கண்களும்தான் கலங்கி விட்டது.. சோக கதையோ நகைச்சுவை கதையோ மத்தவங்க ரசிக்கும்படி எழுதும் திறமை நிறையவே உங்க கிட்ட இருக்கு... ஆண்டவன் கொடுத்த வரம்.....பயனடைவது ரசிகர்களாகிய நாங்கள்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரத்தா, ஸபுரி... June 26, 2016 at 8:32 AM

      //இதுபோல ஏழைகளுக்கு தான் மன உறுதி நிறைய இருக்கும்போல... அவ சொன்ன சோக கதை கேட்டு சிவகுரு கண்களில்மட்டுமா கண்ணீர் வந்தது.. படிக்கிற எல்லார் கண்களும்தான் கலங்கி விட்டது.. சோக கதையோ நகைச்சுவை கதையோ மத்தவங்க ரசிக்கும்படி எழுதும் திறமை நிறையவே உங்க கிட்ட இருக்கு... ஆண்டவன் கொடுத்த வரம்.....பயனடைவது ரசிகர்களாகிய நாங்கள்தான்...//

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகையும் உற்சாகம் அளிக்கும் அழகான பின்னூட்டங்களும் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.

      நீக்கு