என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல் ஆகுமா ? [நிறைவுப்பகுதி 2 of 2]கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

நகைச்சுவை கதை [நிறைவுப்பகுதி 2 of 2]
By வை. கோபாலகிருஷ்ணன்

5]


ஒரு வார காலம் ஓடிப்போனது. வாய்ப் புண்கள் நன்கு ஆறி விட்டது. இன்று எப்படியும் காரியம் நல்ல படியாக முடிந்து விடும் என்று நினைத்துச் சென்ற அவரை, சுழல் நாற்காலியில் அமரச் செய்தார் அந்த டாக்டர்.

களிமண்ணில் பிள்ளையார் பிடிக்க இரண்டு அச்சுகள் வைத்திருப்பார்களே, அது போல கைப்பிடியுடன் கூடிய ஏதோ இரண்டு கோப்பைகள் வடிவிலான (சலூனில் சம்மர் கட் வெட்ட உபயோகிக்கும் மிஷின் போல) ஒரு உபகரணத்தை, வாயைத் திறக்கச் சொல்லி, வாயினுள் நுழைத்து மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஒரு ஆட்டு ஆட்டி இடைவெளி ஏதும் உள்ளதா என சோதனை செய்து பார்த்தார், அந்த டாக்டர்.

எச்சில் கூட விழுங்க முடியாமல் தவித்த பஞ்சாமிக்கு அதனை உடனடியாக வாயிலிருந்து வெளியே எடுத்தால் போதும் என்றாகி விட்டது. அந்த உபகரணத்தை அவர் வாயிலிருந்து வெளியே எடுத்து ஒரு ஓரமாக வைத்தார் டாக்டர்.

பிறகு, ஏதோ ஒரு பாத்திரத்தில், ஏதோ ஒரு பவுடரைத்தூவி, தண்ணீர் விட்டு, ரோஸ் கலரில் சப்பாத்தி மாவு பிசைவது போலப் பிசைய ஆரம்பித்தார். மேற்கொண்டு என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்குமோ, என பஞ்சாமிக்கு கவலை ஏற்பட்டது. அங்கு ஏற்கனவே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல வகை செயற்கைப் பல் செட்டுகள், இவரைப் பார்த்து பல்லைக்காட்டி, பரிகாசமாகச் சிரிப்பது போலத் தோன்றியது, பஞ்சாமிக்கு.

ரோஸ் கலர் சப்பாத்தி மாவை அந்த அச்சுகளில் நிரப்பி, மீண்டும் வாயைப் பிளக்கச்சொல்லி, உள்ளே இறுக்கமாகச் செலுத்தி, வழிந்த மாவை தன் கை விரல்களால் வழித்தெறிந்தபின், டாக்டர், பஞ்சாமியின் தலையில் ஒரு கையும், முகவாய்க்கட்டையில் ஒரு கையுமாக வைத்து ஒரே அழுத்தாக அழுத்தியதும், அந்தப் பசை மாவில் சிறிதளவு தொண்டைக்குழிக்குள் பாய்வது போல ஒரு அருவருப்பும், குமட்டலும் ஏற்பட்டுத் தவியாய்த் தவித்தார், பஞ்சாமி.

பிறகு வாயைத் திறக்கச் சொன்ன டாக்டர், டக்கென்று அவற்றை வெளியே எடுத்து. ஒரு சில டச்-அப் செய்து விட்டு ஓரம் கட்டினார்.

“வாய்க் கொப்பளித்து விட்டு நீங்கள் புறப்படலாம், இரண்டு நாட்கள் கழித்து வந்தால், உங்கள் பல் செட் ரெடியாகி இருக்கும்” என்றார் டாக்டர்.

பாவம் நம் பஞ்சாமியும் பல் விஷயமாக பல நாட்களாகப் படையெடுத்து வருகிறார்.

அடுத்த முறை டாக்டரிடம் படையெடுத்தபோது, இவரின் பல்செட் ரெடியாகி இவரைப் பார்த்து புன்னகை பூத்து வரவேற்றது.

“என் வாழ்வே இனி உன்னோடு தானடா !
இனி உன் வாயே எந்தன் உலகமடா !
அனைத்தையும் நாம் இனி 
கடிப்போம்,
ருசிப்போம், 
சுவைப்போம் 
ஒன்றாகவே !”என அந்தப் பல்செட் பாட்டுப் பாடுவது போலத் தோன்றியது பஞ்சாமிக்கு.


6]

பஞ்சாமியை இருக்கையில் அமரச்செய்து, புதிய பல் செட் இரண்டையும் மேலும் கீழும் பொருத்தி, தன் கை விரல்களால் அழுத்தி இடைவெளியில்லாமல் மேல் ஓட்டிலும், கீழ்த்தாடையிலும் சரியாகப் பொருத்தி விட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கையில் கொடுத்து, “பாருங்கள் - எப்படி உள்ளது” எனக் கேட்டார், அந்த டாக்டர்.

வாயைத்திறந்து பேச பயந்து, தலையை மட்டும் ஆட்டினார் பஞ்சாமி.

காற்றோட்டமாக செருப்புப் போட்டு பழகியவருக்கு திடீரென்று ஷூவும், சாக்ஸூம், அதுவும் டைட்டாகப் போட்டுவிட்டால் ஏதோ ஒரு முதலை, காலைக் கவ்விக் கொண்டிருப்பது போல உணர்வு ஏற்பட்டு கஷ்டப்படுத்தும். அது போல பஞ்சாமிக்கு வாய் முழுவதும் எதையோ வைத்து அடைத்து விட்டது போல ஒரு வித அவதி ஏற்பட்டது.

நாக்கால் தன் புது பல் செட்டைத் துலாவிப் பார்த்த அவருக்குப் பல் நுனிகள் ரம்பம் போல் கூர்மையாக இருப்பது போலத் தோன்றியது. அதெல்லாம் கரெக்ட் செய்து விடலாம் என வாக்களித்த டாக்டர், ஓரிரு முறை பல் செட்டை மெதுவாகத் தானே போட்டு, தானே கழட்டிப் பழகச் சொன்னார். புதியதாக இருந்ததால் கழட்டி மாட்டுவதற்குள் ப்ராணாவஸ்தையாகப் போய் விட்டது பஞ்சாமிக்கு.

புது செருப்பு காலைக் கடிப்பது போல புதுப்பல்செட் கீழ்த்தாடையிலும், மேல் தாடையிலும், ஆங்காங்கே நன்றாகப் பதம் பார்த்து விட்டது.

புண்ணான இடங்களைப் பற்றிய விபரம் அறிந்த டாக்டர் பல்செட்டைத் தனியே எடுத்து தக்ளி போன்ற மிகச்சிறிய சாணைக்கல்லில் ஆங்காங்கே சற்று ராவ ஆரம்பித்தார். உராய்வைக் குறைக்க கிரீஸ் போன்ற போன்ற ஏதோ ஒன்றைத் தடவி மீண்டும் பஞ்சாமியின் வாயில் பொருத்தி, பல்லின் நுனிப்பகுதிகளை சமப்படுத்த, அந்த மிகச்சிறிய சாணைக் கல்லை அவர் வாயருகில் கொண்டு சென்று மீண்டும் ஓடவிட்டு ஃபைனல் டச்-அப் செய்தார்.

சுழலும் சாணைக்கல், வாயில் பொருத்தப்பட்ட, பல் நுனியில் பட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை, பஞ்சாமிக்கு மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒரு வாரம் பழகினால் சரியாக சூட் ஆகி விடும் என்றும், பல்லைப் பத்திரமாகப் பராமரிப்பது எப்படி என்றும், இரவு நேரங்களில் தேவைப்பட்டால் போட்டுக் கொண்டே தூங்கலாம் என்றும், தேவையில்லாது போனால் கழட்டி, அதற்கென தனியாக ஒரு சம்புடத்தில் நீர் ஊற்றி அதில் மிதக்க விடலாம் என்றும், இரண்டு பக்கமும் சமமாக கடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பலவித ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார், டாக்டர்.
7]

தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.

பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.

முதன் முதலாக நான்கு டைமன் கற்கண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு மிகவும் ஆசையுடனும், சற்று பயத்துடனும் கடித்துப் பார்த்தார். கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.

பிறகு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக, பெரு முயற்சி செய்து கொஞ்சம் காராபூந்தியை வாயில் போட்டு மென்று விழுங்கினார். அது ஆங்காங்கே பல்செட் முழுவதும் ஈஷிக்கொண்டு படாத பாடு படுத்தியது.

மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.ஒவ்வொரு முறையும் ஏதாவது சாப்பிட்டவுடன் உணவுத் துகள்கள், ஆங்காங்கே பல்லிலும், அதைச்சுற்றிப் பொருத்தப்பட்டுள்ள செதில்களின் இடுக்குகளிலும் மாட்டி வருவதாக உணர்ந்த பஞ்சாமி, அதை அடிக்கடி வெளியே எடுப்பதும், சுத்தப்படுத்துவதும், திரும்பவும் கஷ்டப்பட்டு மாட்டிக் கொள்வதுமாகவே இருந்து வந்தார்.

நாளடைவில் இது போல செய்வதற்கு சோம்பல்பட்டு, அடிக்கடி ஏதாவது கடித்து சாப்பிடுவதையே குறைத்துக் கொண்டார். வாயின் இறுக்கத்தைக் குறைக்க, பகல் பொழுதினிலேயே பல்வேறு சமயங்களில், பல்செட்டைக் கழட்டி அதற்கு ஓய்வு கொடுத்துவிட்டு, வாயை காற்றாட, சுதந்திரமாக இருக்க விட்டு, தனக்குத் தானே உதவி செய்து கொண்டார்.

அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

அன்றொரு நாள் ... பாவம் .. மீண்டும் விதி நம் பஞ்சாமியுடன் விளையாடி விட்டது.
8]

பாத் ரூமில் சோப்புப் போட்டுக் குளித்துக்கொண்டிருந்த பஞ்சாமி, சோப்பு நுரை வாயில் சற்று பட்டு விட்டதால், துப்பி விட்டு, தன் பல் செட்டைக் கழட்டி, பல்லையும் துலக்கி விடலாம் என அவசரமாக கழட்டும் போது, அதில் ஒன்று கை நழுவி கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது. அது மட்டுமா ! அந்தப் பதட்ட வேளையில் மற்றொன்று கழிவறைப் பாதையில் சோப்பு நுரையுடன் வழுக்கிச் சென்று மறைந்தே போனது. பஞ்சாமி நொந்து நூலாகிப் போனார்.

பல் டாக்டரை நோக்கிய பஞ்சாமியின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஏற்கனவே பல் விஷயமாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விட்ட பஞ்சாமியிடம், டாக்டர் ஆறுதலாகக் கூறியது:

“நவீன பல் சிகிச்சை முறையில், தனித்தனியாக பற்களை எகுறுக் குழிகளில் பதித்து ஸ்க்ரூ செய்துவிடும் மேல் நாட்டு முறை புதியதாக வந்திருப்பதாகவும், அவ்வாறுசெய்து கொண்டு விட்டால், தற்போது ஏற்பட்டது போன்ற விபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், பணம் தான் ஒரு முக்கால் லட்சம் மட்டும் செலவாகும்” என்றார்.

இதைக்கேட்டதும் தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.-o-o-o-o-o-o-o-


முற்றும்


-o-o-o-o-o-o-o-

பின் குறிப்பு:

பஞ்சாமி மயங்கி மூர்ச்சையாய் விழுந்த அதே நாள் இரவு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து டி.வி. சேனல்களிலும் கீழ்க்கண்ட ஒரு பரபரப்புச் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது:
”சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்தவரும், பல்லவராயன் என்ற பெயரில் பல்லாண்டுகளாக பல் டாக்டர் ஆக பணியாற்றி வருபவருமான ஒருவர், போலி டாக்டர் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாலும், அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், அவர் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளதாலும், பல்லவன் பஸ்ஸில், பல்பொருள் அங்காடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பயணம் செய்யும் போது, போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.”நம் பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்தவர் இதே பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயன் தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன?      நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் தானே !


எனவே நண்பர்களே!


போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள். 


பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?பணம் இன்று போகும் !  
நாளை வரும் !![ பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன். .........  அப்போ வரட்டுமா ..........  Bye Bye ...... vgk ]


-ooooooo-
86 கருத்துகள்:

 1. மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.//

  அட்சரலட்சம் பெறும் வார்த்தைகள்.
  அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. இதே போல நிறைய பேர் முடியை கருப்பாக்கிக் கொள்ள சாயமடித்து அலர்ஜியாகி முகமெல்லாம வீங்கி வெளியில் தலைகாட்டமுடியாமல் அவஸ்தை படுவார்கள்.

  பதிலளிநீக்கு
 3. போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்./

  சரியாக விழிப்புணர்வு -பல்லில் பொருத்திக்கொடுத்த அனுபவ மொழிகள்.

  பதிலளிநீக்கு
 4. பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயன் //

  பல் பல்லாய் ஆயிரம் பற்கள் பல்லைக்காட்ட வைத்த - சிரிப்புடன் சிந்திக்கவும் வைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. சிந்திக்க வேண்டியதை நகைசுவையாக சொல்லியிருக்கீங்க. அருமையான கதை. பகிர்வுக்கு நன்றி.ஐயா.

  பதிலளிநீக்கு
 6. நல்லதொரு அனுபவமான இருந்தது..
  தங்கள் பதிவு...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வை.கோ - நீங்கள் கணக்குப் பிள்ளையா ( அக்கவுண்ட்ஸ் ஆஃபீசர் ) அல்லது பல் டாக்டரா ? இத்தொடரில் கற்பனை ஒன்றுமே இல்லை. அத்தனையும் நிஜம் - பல் செட் வைப்பதென்றால் இத்தனையும் அட்சரம் ப்சகாமல் நடக்கும். அது போலியாக இருந்தாலும் சரி நிஜமாக இருந்தாலும் சரி. ரசிச்சு எழுதி இருக்கீங்க - ரசிச்சுப் படிச்சேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 8. உண்மைதான். ஒரிஜினல் எப்பவும் நல்லது. டூப்ளிகேட் கொஞ்சம் கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு
 9. அனுபவப் பதிவு,,
  பயனுள்ள பதிவும் கூட..
  நன்றி+வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 10. வாயெல்லாம் சிரிப்புடன் படித்தோம். போலி டாக்டர்னு போட்டு பஞ்சாமிக்கு ஒரு பஞ்ச் வச்சுட்டீங்களே

  பதிலளிநீக்கு
 11. முதலில் என் உலகிற்கு வந்து அழைத்து வந்ததற்கு நன்றி. :)

  சிரித்துச் சிரித்து வாசித்து முடித்துவிட்டேன். ;)) இது கற்பனை போலவே இல்லையே! அனுபவித்து! எழுதி இருக்கிற மாதிரி இருக்கிறதே!!

  பதிலளிநீக்கு
 12. //அடுத்த முறை டாக்டரிடம் படையெடுத்தபோது, இவரின் பல்செட் ரெடியாகி இவரைப் பார்த்து புன்னகை பூத்து வரவேற்ற// படம் அழகு. ;))))

  பதிலளிநீக்கு
 13. ஐயா மாட்டிவிட்டீங்களா?
  பல்லைக்கட்டச்சென்று அநியாயமாக்கிய பணம் தொடர்பாகவும், அருமையான விளக்கங்களுடன் சுவாரசிகமாக எழுதியிருக்கிறீங்கள்.
  நல்ல விழிப்புணர்வூட்டுகின்ற பதிவு...

  பதிலளிநீக்கு
 14. ஒரிஜினல் ஒரிஜினல் தான் ....
  இந்த அவஸ்தைக்கு பல்லே இல்லாமல் கூட இருந்திடலாம் போலிருக்கிறது.

  நல்ல நகைச்சுவை+ விழிப்புணர்வு பதிவு.

  பதிலளிநீக்கு
 15. ஹா ஹா
  பாஸ் பல்லின் முக்கியத்துவம் இப்போதுதான் தெரிகிறது
  உங்கள் பதிவின் பாதிப்பால்
  இனி பல் மேல் கவனமாக இருப்பேன் இல்ல
  அசத்தல் பயன் உள்ள பதிவு பாஸ்

  பதிலளிநீக்கு
 16. போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்./சிந்திக்க வேண்டியதை நகைசுவையாக சொல்லியிருக்கீங்க. . பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 17. சூப்பர் பாஸ்! பல்சிகிச்சையின்போது நடக்கும் அத்தனை விஷயங்களையும் அப்படியே சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்! அதிலும் நம்மாளுங்க எவளவோ செலவழிச்சு வாங்கிய பல்செட்டை கழட்டி வச்சிட்டு பொக்கை வாயோட இருப்பாங்க..கேட்டா அது கஷ்டமா இருக்குன்னு! :-)

  பதிலளிநீக்கு
 18. வயதான காலத்தில் இவ்வளவு அவஸ்தை இருக்கா என்று
  இப்போதே பயம் வந்து விட்டது
  கதை போல இல்லை நேரடி ஒளிபரப்புபோல்
  அத்தனை சுவரஸ்யமாக விளக்கி இருந்தது அருமை
  டெயில் பீஸ் மிக மிக அருமை
  ரசிக்கத் தக்க பதிவாகவும்
  கொஞ்சம் விஷயங்களை
  நாசூக்காக புரிந்துகொள்ளும்படியாகவும்
  உள்ள அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 19. கடைசியில் போலி மருத்துவரிடம் சென்றதால்தான் ஹீரோவிற்கு அவ்வளவு சிரமம் என்று விட்டீர்கள். ஆனால் தாங்கள் விவரித்த நிறைய விசயங்கள் பொதுவாகவே பல் சிகிச்சையில் நடைபெறுவதுதான். படிக்கும்போத சிறப்பான தங்களின் வர்ணனையால் பல் கூசி கவலைபட வைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
 20. உங்கள் பல் போன பதிவைப் படித்து சிரித்து எனக்குள்ள சில பற்களும் சுளுக்கிக்கொண்டு விட்டன. நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 21. என்னிக்குமே இயற்கையாய் ஆண்டவன் கொடுத்த பல்தான் நல்லது... செயற்கையாய் பொருத்திக்கொள்வதை விட சும்மா இருந்துவிடலாம்....

  நகைச்சுவையுடன் இந்த விஷயத்தினை சொல்லிச் சென்ற விதம் மிகவும் அருமை.....

  பதிலளிநீக்கு
 22. இந்தக் கதை ஒரு பல்சுவை நகைச் சுவை. நல்ல டாக்டராக இருந்தாலும் அவஸ்தையின் அளவு மட்டும்தான் குறையும்.பற்பசைக்காரர்கள் விளம்பரத்திற்காக கதையை எடுத்துக் கொள்ளப் போகிறார்கள், எதற்கும் கவனமாக இருங்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 23. பல்லினால் வரும் பற்பல அவஸ்தைகளை சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்கெனவே இருக்கும் பல் பிரச்னைகள் என்னை பயமுறுத்துகின்றன!

  பதிலளிநீக்கு
 24. பல்லு முப்பத்தி ரெண்டையும் காட்டி சிரிக்க வெச்சுட்டீங்க.

  பதிலளிநீக்கு
 25. //இரவு நேரங்களில் தேவைப்பட்டால் போட்டுக் கொண்டே தூங்கலாம் என்றும்//

  இது எதுக்குங்க....கனவுலயும் சாப்பாட்டை ஒரு கை பார்ப்பதற்கா...

  பதிலளிநீக்கு
 26. பல் செட்டுக்கும் பஞ்சாமிக்கும் உள்ள டூயட் song ...... அட.... "பளிச்" னு இருக்குதே.... :-))))

  பதிலளிநீக்கு
 27. பஞ்சமியை வைத்து
  நீங்கள் மட்டும் அல்ல
  படிக்கும் அனைவர்க்கும்
  சிரிப்பு வைத்தியம் பார்த்து விட்டீர்கள்
  நன்றி சார்
  நல்ல விழிப்புணர்வும் கூட

  பதிலளிநீக்கு
 28. பல்லவர் புராணம் மிகவும்
  அருமை!
  பொக்கை வாயரும் சிரித்திடும்
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 29. //பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.//


  என் அம்மா பல்செட்டால் பட்ட கஷ்டத்தால் எடுத்து விட்டு நிம்மதியாக இருந்தார்கள்.

  என் மாமியார் பல் செட்டால் ஏற்படும் அவதிகளை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

  இயற்கை இயற்கை தான்.

  நல்ல பல் டாகடரிடம் போனாலே நிரைய நாள பல்லுக்காக ஒதுக்க வேண்டி உள்ளது,(நிறைய பணம் வேறு ஒதுக்க வேண்டி உள்ளது.) இதில் போலி பல் டாகடர் வேறா?

  சிரித்து சிரித்து பல் சுளுக்கி விட்டது நல்ல பல் டாக்டர் தெரிந்தால் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 30. நான் பல்லே இல்லாமல் பொக்கை வாயனாக இருந்தாலும் பரவாயில்லை பல் செட் மட்டும் கட்ட மாட்டேன்பா.நல்ல பாடம் சொல்லி கொடுத்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 31. //பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.//

  அப்பாதுரை said...
  //பங்கரை என்றால் என்ன?//

  இது திருச்சியில் அந்தக்காலத்தில் (1970 to 1980) என் முன்னோர்கள் பலரும் சொன்ன ஒரு சொல்.

  பெண் கருப்போ சிவப்போ மாநிறமோ பார்க்கப் பங்கரையாக இல்லாமல் முகம் ஒரு களையாக, லக்ஷணமாக, சுறுசுறுப்பாக, துறுதுறுப்பாக, ஆசையாக, கை நிறைய காரியங்களும், வாய் நிறைய பாட்டும், தலை நிறைய முடியுமாக இருந்தால் சரித்தான் என்பார்கள்.

  நானே நிறைய முறை நிறைய பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். மற்ற ஊர்களில் இந்த வார்த்தை பேசப்பட்டதா, இப்போதும் பேசப்படுகிறதா என்று மற்றவர்கள் தான் கருத்துக்கூற வேண்டும்.

  இதிலிருந்து பங்கரை என்றால் அவலக்ஷணம் என்று மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

  இந்தக்கதையில் மேல் வரிசைப்பற்கள் மிகவும் தூக்கலாக துருத்திக்கொண்டிருந்த பஞ்சாமிக்கு, அந்தப் பற்களை நீக்கிவிட்டு, படிமனான பொய்ப்பற்கள் கட்டப்பட்டதும் அவர் முகம் பார்க்கப் பங்கரை இல்லாமல், இருந்ததாக நானும் எழுதிவிட்டேன். அதாவது முன்புபோல அசிங்கமாக இல்லாத என்ற அர்த்தத்தில்.

  ஏதோ இந்த என் விளக்கம் பங்கரை ஏதும் இல்லாமல் உங்களுக்குத் தோன்றினால், எனக்கும் மகிழ்ச்சியே!

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 32. பல்லாண்டு பல்லாண்டு நீங்க இதே போல எங்களை சிரிக்க வைக்கணும்..

  பதிலளிநீக்கு
 33. ஹா ஹா ஹா... செம போஸ்ட்... நல்லா சிரிக்க வெச்சீங்க சார்... சூப்பர்...:)

  பதிலளிநீக்கு
 34. ஒரிஜினல் ஒரிஜினல்தான்.. டூப்ளிகேட் டூப்ளிகேட்தான்னு புரிஞ்சிக்க பஞ்சாமி ரொம்பவே தியாகம் செஞ்சுருக்காரு :-))

  பதிலளிநீக்கு
 35. விளக்கத்துக்கு நன்றி.. இது போல் எத்தனையோ வழக்குகள் இப்படித் தெரிந்து கொண்டால் தான் உண்டு.

  பதிலளிநீக்கு
 36. பணம் தான் ஒரு முக்கால் லட்சம் மட்டும் செலவாகும்”//

  அனுப‌வ‌ங்க‌ளை ந‌கைச்சுவையோடு சொல்ல‌ முடிகிற‌து உங்க‌ளால்! ப‌ங்க‌ரை ப‌ற்றி த‌க‌வ‌ல் ச‌ரியென‌ப் ப‌டுகிற‌து. 'ப‌ங்க‌ரை மாதிரி நிற்காதே' என‌ கூற‌க் கேட்ட‌துண்டு. அத‌ற்கு விள‌க்க‌ம் 'த‌லையொரு கோல‌ம்; துணியொரு கோல‌ம்'

  ப‌ல் வ‌லியால் ப‌ல் டாக்ட‌ரிட‌ம் சென்ற‌ போது அவ்வ‌னுப‌வ‌த்தை ஒரு த‌ட‌வை எழுத‌ எண்ணியிருந்தேன். உங்க‌ள் எழுத்தை வாசித்த‌பிற‌கு தேவையில்லை என‌த் தோன்றுகிற‌து(இதையும் தாண்டி எழுத‌ முடியுமா என்ற‌ பிர‌ம்மிப்பு)

  பதிலளிநீக்கு
 37. இந்தக்கதையின் இறுதிப்பகுதிக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய கருத்துக்களைக்கூறி, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கியுள்ள என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 38. நல்ல அனுபவம்+செம காமெடி சார்.
  துன்பம் வரும்போது சிரிங்கனு சொல்வது போலவும் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திருமதி thirumathi bs sridhar அவர்களே,

   அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும்
   மிக்க நன்றி. சிரியுங்கள். சிரியுங்கள். தங்களின் சிரிப்பொலி இங்கு திருச்சி வரை கேட்கட்டும். அன்புடன் vgk

   நீக்கு
 39. ஐயா,

  கதை மிக அருமையாக நகைச்சுவையுடன் இருக்கிறது. உங்கள் மற்றக் கதைகளையும் படிக்கத் தூண்டுவதாகவும் உள்ளது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திருமதி SEBA Madam, வாங்க, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மற்ற கதைகளையும் தாராளமாகப் படித்து ரஸியுங்கள்.

   கீழே திருமதி துளசி கோபால் அவர்களுக்காக ஒருசில இணைப்புகள் கொடுத்துள்ளேன். தாங்களும் அவற்றை பயன் படுத்திக்கொள்ளலாம்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 40. அருமை அருமை!

  ஒரிஜனல் ஒரிஜனல்தான்:-))))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகையும், அழகான சந்தோஷமான [முத்துப்பற்களுடன் கூடிய அழகிய முகம் போன்ற] ’அருமை அருமை’ என்ற பாராட்டுக்களும்; ‘ஒரிஜினல் ஒரிஜினல் தான்’ என்று மகிழ்வுடன் ஒப்புக்கொண்டதும், எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

   இதுபோலவே மேலும் பல நகைச்சுவைப்படைப்புகள் கொடுத்துள்ளேன்.

   “எலிஸபத் டவர்ஸ்” பகுதி 1 - 8
   http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html

   “வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்” பகுதி 1 - 8
   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html

   “உடம்பெல்லாம் உப்புச்சீடை” பகுதி 1 - 8
   http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_2406.html

   “தாலி” [குட்டியூண்டு கதை - ஒரே பகுதி மட்டும்]
   http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4903.html

   “எட்டாக்கனிகள்” [ஒரே பகுதி மட்டும் - சிறிய கதை]
   http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html

   ”அமுதைப்பொழியும் நிலவே” {சிறிய கதை ஒரே பகுதி]
   http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html

   "முன்னெச்சரிக்கை முகுந்தன்” [சிறிய கதை ஒரே பகுதி]
   http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html

   மேலும் எவ்வளவோ ஒரு பக்கச் சிறுகதைகள். எல்லாவற்றிலும் ஆங்காங்கே நகைச்சுவையே உணரமுடியும்.

   நேரமிருக்கும்போது ஒவ்வொன்றாய்ப் படித்துக் கருத்துக்கூறினால் மிகவும் மகிழ்வேன்.

   மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 41. கடைசியில் பஞ்சாமி நிலைமை இப்படி ஆகி விட்டதே.
  பணத்துக்கு எங்கே போவார். போலி டாக்டர்களை எப்படி கண்டு பிடிப்பது? எல்லோரையும் பார்த்தால் டாக்டர்களாகத்தான் தெரிகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 42. அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ ஐயா, வாங்க, வணக்கம்.

  தங்களின் அன்பான வருகையையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்தன.

  //போலி டாக்டர்களை எப்படி கண்டு பிடிப்பது? எல்லோரையும் பார்த்தால் டாக்டர்களாகத்தான் தெரிகிறார்கள்.//

  மாடு வாங்குபவர்கள், மாட்டின் பல்லைப்பிடித்துப் பார்த்து, அதன் வயது ஆரோக்யம் முதலிய தரச்சோதனைகள் செய்வார்கள் எனக் கேள்விப் பட்டுள்ளேன்.

  அதுபோல பல்டாக்டரின் பல்லை நாம் சோதித்துப்பார்த்து ஒரிஜினல் டாக்டரா? போலி டாக்டரா? எனக் கண்டுபிடிக்கும் டெக்னிக் ஏதாவது இருக்குமோ?

  இதுபற்றி சந்தையில் நாம் விசாரிப்போம்! ;)))))

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் அண்ணா!
  பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
  ஒருநாளும் யாருக்கும் அப்பிடி ஆகிவிடக்கூடாது;)))
  ஐயோ கதை முழுதும் வாசித்து முடித்தும் சிரித்து முடியவில்லை எனக்கு:)
  சம்பவங்களை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்த என்னை வீட்டில் வித்தியாசமாக பார்க்கிறார்கள்.

  உங்கள் எழுத்துப்பாணி, டயலாக் அப்படியே காட்சியை கண்ணெதிரே காண்பதாய் நிஜமாக எண்ண வைக்கிறது.
  அருமை!
  உங்கள் எழுத்தின் ரசிகை நான் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
  வாழ்த்துக்கள் அண்ணா!

  இவ்வளவு கால இடைவெளிக்குப் பின்பு வந்து வாசிக்க தொடங்கிய பின்பு பஞ்சாமியின் ஐந்தாவது பல்லை இல்லை இல்லை ஐந்தாவது பகுதியை தேடிய எனக்கு அனைத்து பகுதியின் முழு லிங்கையும் தந்துதவியமைக்கும் உங்களுக்கு நன்றிகள் பல;))

  பதிலளிநீக்கு
 44. அன்பின் இளமதி, வாருங்கள், வணக்கம்.

  2011 ஜனவரியில் இதே கதையை எட்டு சிறு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டிருந்தேன். அதில் ஐந்தாவது பகுதியை மட்டும் காணவில்லை என்று தங்கள் மெயில் மூலம் இன்று தான் அறிந்து கொண்டேன்.

  நானும் தேடிப்பார்த்தேன் அதைக் காணவில்லை. அந்தக் காணாமல் போன பல்லை [பகுதியை] யாரோ வாசகர்கள் தான், சிரித்துக்கொண்டே விழுங்கி இருப்பார்களோ என்னவோ?

  நல்லவேளை இந்த மீள்பதிவு என்ற புதுப் பல்செட்டைப் போட்டுக்கொண்டு தாங்களும் படித்து விட்டு, சிரிசிரியென சிரித்து மகிழ்ந்து விட்டீர்கள். தங்களின் அழகான அந்தச் சிரிப்பொலியை நானும் கற்பனை செய்து பார்த்தேன்.

  //ஐயோ கதை முழுதும் வாசித்து முடித்தும் சிரித்து முடியவில்லை எனக்கு:) சம்பவங்களை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்த என்னை வீட்டில் வித்தியாசமாக பார்க்கிறார்கள்.//

  அடப்பாவமே ! இருப்பினும் இதில் தான், தங்களின் பலத்த சிரிப்பொலியில் தான், கதாசிரியரான உங்கள் அண்ணனின் எழுத்தின் வெற்றியே அடங்கியுள்ளது, இளமதி. மகிழ்ச்சி. ;)

  அவர்கள் வித்யாசமாகப் பார்க்கட்டும். அதனால் பரவாயில்லை. நான், தங்களை, வேறு விதமாக என் கதைகளின் ரசிகையாக அல்லவா பார்க்கிறேன். VGK's ரசிகர் [ரசிகை] மன்றத்தலைவராகக் கூடிய வாய்ப்பும் தங்களுக்கு உள்ளது.

  //உங்கள் எழுத்துப்பாணி, டயலாக் அப்படியே காட்சியை கண்ணெதிரே காண்பதாய் நிஜமாக எண்ண வைக்கிறது.
  அருமை! //

  மனம் திறந்து சொல்வது மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி, இளமதி.

  //உங்கள் எழுத்தின் ரசிகை நான் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். வாழ்த்துக்கள் அண்ணா!//

  அடடா, இது நான் செய்த பாக்யம் அல்லவா;
  வாழ்த்துகளுக்கு நன்றிகள், இளமதி.

  //இவ்வளவு கால இடைவெளிக்குப் பின்பு வந்து வாசிக்க தொடங்கிய பின்பு பஞ்சாமியின் ஐந்தாவது பல்லை இல்லை இல்லை ஐந்தாவது பகுதியை தேடிய எனக்கு அனைத்து பகுதியின் முழு லிங்கையும் தந்துதவியமைக்கும் உங்களுக்கு நன்றிகள் பல;))//

  ”ஒரு பல் மட்டும் உடைந்து போய் உள்ளது. அந்த உடைந்து போய்விட்ட ஐந்தாவது பல்லையும் [பகுதியையும்] காணோம் .... நான் இப்போ என்ன செய்வது?” என மெயில் மூலம் என்னிடம் கேட்டு இருந்தீர்கள்.

  நல்லவேளையாக இந்தக்கதையை நான் மீள் பதிவாக, கலர் படங்களுடன் வெளியிட்டிருந்தேன். அதன் லிங்க்கைத் தான் என்னால் உடனடியாக உங்களுக்கு அனுப்பிவைத்து, தங்களின் பல்வலி வேதனையைத் தடுக்க முடிந்தது.

  அதனால் தகவல் கொடுத்த தங்களுக்கு, நான் தான் நன்றி சொல்ல வேண்டும், இளமதி.

  பிரியமுள்ள
  அண்ணா vgk

  பதிலளிநீக்கு
 45. எனக்கு டவுட்டே வந்திருச்சு… டாக்டர் பண்றதெல்லாம் கிட்ட இருந்து பார்த்த மாதிரியே சொல்றீங்களே அந்த டாக்டருக்கு அசிஸ்டெண்டா கொஞ்ச நாள் வேலை செய்தீர்களா? இல்ல அந்த பஞ்சாமி ஹாஸ்பிட்டல் போகும்போதெல்லாம் உங்களை துணைக்கு கூட்டிண்டு போனாரா?

  என்ன ஒரு தத்ருபமா டாக்டரின் எல்லா செயல்களையும் சினிமா படம் பார்ப்பது போல் சொல்லிட்டீங்களே அண்ணா…

  பல்செட் செய்யனும்னா, பற்கள் பிடுங்கனும்னா, செயற்கை பல் பொருத்தனும்னா இப்படி எதுவுமே நிறைய எனக்கு தெரியாத விசயங்கள் எல்லாமே ஆச்சர்யமாக வாசித்து அறிந்தேன். உவமைகளோடு அசத்துறீங்க அண்ணா….( களிமண்ணில் பிள்ளையார் பிடிக்க அச்சு போல , சலூன்ல சம்மர் கட் வெட்ட வைத்திருக்கும் மெஷின் போல… அசத்தல் அண்ணா)

  செயற்கை பல்செட்டெல்லாம் பஞ்சாமியை பார்த்து பரிகாசமாக சிரித்ததாம்… என்ன கொடுமை ஸ்வாமி இது…. கதையாசிரியருக்கும் ரொம்ப தான் பஞ்சாமியை பார்த்தால் இளப்பமாக போயிட்டுது. பாவம் பஞ்சாமி…

  அட கதையாசிரியரின் ரசனையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.. சினிமாவில் ஆண் பெண் ஏன் ஆடு மாடு கூட பேசுவது போல பாடுவது போல காமிச்சாச்சு. கதையாசிரியர் புதுவிதமா பல்செட் பாடுவது போல பாடல் வரிகள் அமைத்தது ஹைலைட்டுப்பா…

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி மஞ்சு! வாங்கோ, வணக்கம்.

   //என்ன ஒரு தத்ருபமா டாக்டரின் எல்லா செயல்களையும் சினிமா படம் பார்ப்பது போல் சொல்லிட்டீங்களே அண்ணா…//

   பற்களைக் க்ளீன் செய்யப்போய் எனக்குm ஒரு சில நேரடி அனுபவங்கள் இதில் உண்டு.

   மேலும் பல்வலியால் தங்களின் சிரமங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டவர்களும் உண்டு.

   பல் பூராவும் சப்ஜாடா எடுத்து விட்டு பல்செட் கட்டிக்கொண்டுக் கொண்டு என்னைப்பார்த்து புன்னகைத்தவர்களுக்கும் உண்டு.

   அவர்களை நான் பேட்டி கண்டதும் உண்டு.

   அவ்வாறு நான் பேட்டி கண்டவர்களில் ஆண்களும் உண்டு, பெண்களும் நிறையவே உண்டு.

   அதில் ஒருவரின் கதை மட்டும் முற்றிலும் வித்யாசமாக இருந்தது.

   அவர் ஏதோவொரு ஆசையில் மிச்சம் மீதியிருந்த ஒருசில பற்களையும் பிடிங்கி விட்டு, புது பல்செட் கட்டிக்கொண்டாரே தவிர, அவரால் அதனுடன் நேசபாசத்துடன் அந்நோன்யமாக இருக்கவே முடியவில்லை.

   முதல் நாள் தன்னுடன் கஷ்டப்பட்டு இணைத்துக்கொண்ட அவர், மறுநாளே டைவர்ஸ் செய்ய நினைத்து அலையோ அலையென அலைந்தார்.

   டாக்டரிடம் போய் தகராறு செய்தார், தனக்கு அளித்த பல்செட்டை ஏதாவது ஒரு பாதி விலையாவது போட்டு திரும்ப எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

   டாக்டர் மறுத்து விட்டார். துரத்தி விட்டார்.

   நொந்து நூலாகிப்போன இந்த மனிதர், ஆத்திரத்தில் அதை எடுத்து, தன் தலையை மூன்று சுற்று சுற்றி, தெருவில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டும் விட்டார்.

   இவை போதாதா ... இதைப்பற்றி மேலும் பலரிடம் பேட்டி கண்டேன் .. பல் சிகிச்சை நிலையங்களுக்குச் சென்றால், ஒருபக்கம் பல் அவஸ்தை இருந்தாலும், நம்மிடம் ஒவ்வொருவர் ஒவ்வொரு கதையைச் சொல்வார்களே!!

   எல்லாவற்றையும் பொறுமையாக மனதில் வாங்கிக்கொண்டு, ஒருங்கிணைத்து, எனக்கே உள்ள நகைச்சுவை உணர்வுகளையும் ஆங்காங்கே தாளித்துக்கொட்டி, இந்தக் கதையைச் சமைத்து முடித்தேன்.

   கதை பிறந்த கதை நல்லாயிருக்கா .... மஞ்சு ?

   தொடரும் .... VGK

   நீக்கு
  2. VGK to மஞ்சு ...

   //பல்செட் செய்யனும்னா, பற்கள் பிடுங்கனும்னா, செயற்கை பல் பொருத்தனும்னா இப்படி எதுவுமே நிறைய எனக்கு தெரியாத விசயங்கள் எல்லாமே ஆச்சர்யமாக வாசித்து அறிந்தேன்.//

   கண்டதை கண்ட நேரத்தில் அசை போட்டுக்கொண்டே இல்லாமல், உடல் எடையை ஸ்லிம்மாக வைத்துக் கொள்வதே வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாகக் கொண்டு, ஏதோ கொஞ்சமாகச் சாப்பிட்டு, உடனுக்குடன் பற்களை தினமும் மூன்று முறை சுத்தமாகத் தேய்த்து, பராமரித்து “பல்லழ்கி” யாகத் திகழும் தங்களுக்கு இவையெல்லாமே படிக்க மிகவும் ஆச்சர்யமாகத் தான் இருந்திருக்கும், என்பதில் எனக்கும் ஆச்சர்யமே இல்லை தான், மஞ்சு.

   //உவமைகளோடு அசத்துறீங்க அண்ணா….( களிமண்ணில் பிள்ளையார் பிடிக்க அச்சு போல, சலூன்ல சம்மர் கட் வெட்ட வைத்திருக்கும் மெஷின் போல… அசத்தல் அண்ணா)//

   உவமைகளோடு சொன்னால் தான், எல்லோருக்கும் உண்மை புரியும். உங்களின் இந்தக் கருத்துக்களும் அசத்தல் தான். ;)))))

   //செயற்கை பல்செட்டெல்லாம் பஞ்சாமியை பார்த்து பரிகாசமாக சிரித்ததாம்… என்ன கொடுமை ஸ்வாமி இது…. கதையாசிரியருக்கும் ரொம்ப தான் பஞ்சாமியை பார்த்தால் இளப்பமாக போயிட்டுது. பாவம் பஞ்சாமி… //

   அடாடா, கற்பனைப்பார்த்திரமான பஞ்சாமி மேல் எவ்வளவு இரக்கம் தங்களுக்கு.

   ’மஞ்சு’வின் மனம் ’பஞ்சு’ போல் [பஞ்சு மிட்டாய் போல] மென்மையானது ... மேன்மையாது என்பது புரிந்தது. ;)

   //அட கதையாசிரியரின் ரசனையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.. சினிமாவில் ஆண் பெண் ஏன் ஆடு மாடு கூட பேசுவது போல பாடுவது போல காமிச்சாச்சு. கதையாசிரியர் புதுவிதமா பல்செட் பாடுவது போல பாடல் வரிகள் அமைத்தது ஹைலைட்டுப்பா…//

   ஆஹா, பஞ்சாமி பக்கம் காட்டிய பஞ்சுமிட்டாயின் குச்சியை மட்டுமாவது என் பக்கமும் சற்றே திருப்பியுள்ளீர்களே, அது ’ஹைலைட்டுப்பா’ சந்தோஷம்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 46. ஆஹா என்ன ஒரு உவமை…. ஹவாய் செருப்பு போட்டு ஹாய்யாக நடப்பவனை இழுத்து நிற்கவைத்து ஹாங்காங் ஷூ போட்டு இறுக்க கட்டினால் பாவம் என்னத்தான் செய்வான். அந்த நிலைதான் நம்ம ஹீரோக்கு. கதையாசிரியர் பஞ்சாமியை வெச்சு பல்லாங்குழி ஆடிட்டார் போங்கோ…

  ஸ்கூல்ல காலேஜ்ல புதுசுங்க எண்ட்ரி கொடுக்கும்போது சீனியர் ராக்கிங் செய்யுமே அது போல இங்க நடக்க சான்சே இல்லப்பா… புதிதாய் எண்ட்ரி ஆன பல்செட் எப்போதும் டெப்பாசிட் இழக்காத பர்மனெண்ட் கவர்மெண்ட் ஸ்டாஃபை தன் கூர் பல்லால் ரம்பத்தால் பதம் பார்த்தது போல் அதோட சீட்டையே அசைத்து பாத்துடுத்தே…நாக்கு பாவம்.. நாக்கோட ஓனர் பஞ்சாமி ரொம்ப ரொம்ப பாவம்.

  பல் செட்டாகலைன்னதுமே கத்தி சாணைப்பிடிப்பது போல சாணைக்கல்லால் பஞ்சாமியின் பல்லை பதம் பார்க்க பாவம் பஞ்சாம் உடல் முழுக்க டிஸ்கோ டான்ஸ் ஆடின தேள்கடி டான்ஸ் போல உதறி போட்டுடுத்தே…

  பல்செட்டு பஞ்சாமியோட ஒரிஜினல் கெட்டப்பையே மாத்திடுத்தே… பஞ்சாமி பாவமா? இல்லை பஞ்சாமியை இப்படி டாக்டர் கிட்ட போ போன்னு பாடா படுத்திய பஞ்சாமியின் மனைவி பாவமா?? பஞ்சாமிக்கு ஒரிஜினல் பல் இருந்தா அவரே தேச்சுப்பார். இனி அவர் மனைவிக்கு எக்ஸ்ட்ரா வேலை பல்செட்டும் சமையல் பாத்திரங்கள் தேய்க்கும்போது தேச்சு வைக்கனும்…

  ஐயோ பாவம் இவ்ளோ படாத பாடு பட்டு உருண்டு புரண்டு ஒருவழியா பல்செட் வாய்க்கு செட்டாக்கி என்ன இருந்தாலும் ஒரிஜினல் போலாகாது தான்… எதையும் சாப்பிடவும் முடியாம சாப்பிட்ட உணர்வும் தெரியாம விதியேன்னு அவர் வாழ்க்கை விதி மாற அதுக்கப்புறமும் விதி விளையாடிடுத்தே… பல்செட் கழண்டு பர்மிஷன் இல்லாம டாய்லெட்ல விழுந்து உடைந்து விட திரும்ப ஓடு டாக்டர் கிட்ட… எனக்கென்னவோ பஞ்சாமிக்கு வைத்தியம் பார்த்தே டாக்டர் மாடி வீடே கட்டி கிரஹப்ரவேசம் செய்திருப்பார்னு தோணுது… முதல் மாடி கட்டி முடிச்சாச்சு.. இரண்டாவது மாடி கட்டறதுக்கு தான் பஞ்சாமிக்கு கொடுத்த ஐடியாவா இருக்கும். முக்கால் லட்சம் கேட்டது தான்.. வேறென்ன… டூப்ளிகேட் பல்செட் பொருத்திய டூப்ளிகேட் டாக்டர் இவ்ளோ விலை சொன்னால் பல்ஸ் வீக்காகி மயக்கம் போட்டு விழாம என்ன செய்வார் பாவம் ( டைமிங் சொல்லாடல் பல் என்ற இந்த இரு எழுத்து வைத்து நீங்க ஆடின ஜலதரங்கம் (கிண்ணத்தில் நீர் வைத்து அளவுகள் மட்டும் வித்தியாசப்படும் ஆனால் கிண்ணம் நீர் தான் பிரதானம்) செம்ம அசத்தல் அண்ணா) ரசித்து ரசித்து வாசித்தேன் கடைசி பத்தி திரும்ப திரும்ப…. பல் பல் பல்…. கடைசில நம்ம ஹீரோ எவ்ளோ அநியாயமா பாதிக்கப்பட்டிருக்கார். அதையும் செம்மையா ஒரு பத்தி முழுக்க அர்த்தம் மாறிவிடாமல் அதே சமையம் சுவாரஸ்யம் குறைந்துவிடாமல் அசத்தல் அண்ணா…. ஃபினிஷிங் டச் அருமை அனைத்திலும் எக்செலெண்ட்…. போலி டாக்டரிடம் போய் இப்படி போஷாக்கு தரும் பற்களை இழந்துடாதேங்கோ.. பணம் இன்று வரும் நாளை எப்படி வரும்னு ஒரு ஷொட்டு கொடுத்திருப்பது சூப்பர்…. ஆகமொத்தம் கதை செம்ம ஜனரஞ்சகமாக இருந்தது அண்ணா..

  அருமையான கதை பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா…

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK to மஞ்சு

   //கதையாசிரியர் பஞ்சாமியை வெச்சு பல்லாங்குழி ஆடிட்டார் போங்கோ… //

   பல்லாங்குழியையும் அதில் விளையாடப் பயன்படும் சோழிகளையும் கதையாசிரியருக்கு மிகவும் பிடிக்கும்.

   சோழிகள் ஒவ்வொன்றின் மேற்புறமும் [முதுகுப்புறம்]எவ்ளோ கலர்கலராக பளபளப்பாக வழுவழுப்பாக அழகாக இருக்கும்!

   அதை அப்படியே திருப்பிப்பார்த்தால் .... ஹைய்யோ! ஏதேதோ கற்பனைகள் எனக்குத் தோன்றுமே .... ;)))))

   சோழிகளைக் குலுக்கிச் சுழட்டிப்போட்டால் அவை கலகலப்பாகச் சிரிக்கும் தெரியுமோ?

   ’சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கைத் தத்துவத்தைச் சொல்பவை அவை.அதற்கான கதைகள் இணைப்பு இதோ:

   வாய் விட்டுச்சிரித்தால்
   http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_6123.html

   சிரிக்கலாம் வாங்க [உலக்கை அடி]
   http://gopu1949.blogspot.in/2011/02/blog-post_13.html

   தொடரும்..... VGK

   நீக்கு
  2. VGK to மஞ்சு....

   //பல் செட் ஆகலைன்னதுமே கத்தி சாணைப்பிடிப்பது போல சாணைக்கல்லால் பஞ்சாமியின் பல்லை பதம் பார்க்க பாவம் பஞ்சாம் உடல் முழுக்க டிஸ்கோ டான்ஸ் ஆடின தேள்கடி டான்ஸ் போல உதறி போட்டுடுத்தே…//

   மஞ்சுவின் இந்த டிஸ்கோ டான்ஸ் ... தேள்கடி டான்ஸ் எனக்கு மிகவும் பிடித்துப்போய் கற்பனை செய்து பார்த்தேன். அடடா, சுவையான ஆட்டம் தான். பிச்சு உதறி விட்டீர்கள்.

   தொடரும்.... vgk

   நீக்கு
  3. VGK to மஞ்சு ...

   //பஞ்சாமிக்கு ஒரிஜினல் பல் இருந்தா அவரே தேச்சுப்பார். இனி அவர் மனைவிக்கு எக்ஸ்ட்ரா வேலை பல்செட்டும் சமையல் பாத்திரங்கள் தேய்க்கும்போது தேச்சு வைக்கணும்…//

   நல்ல கற்பனை உங்களுக்கு. ஆனால் சமையல் பாத்திரங்களையே அவர் தான் தினமும் தேய்க்கிறாரோ என்னவோ? யாரு கண்டா?

   பற்களே சுத்தமாக இல்லாவிட்டால் ஒருசில காரியங்களுக்கு
   ரொம்ப செளகர்யம் தெரியுமோ?

   தொடரும்... vgk

   நீக்கு
  4. VGK to மஞ்சு ....

   //எனக்கென்னவோ பஞ்சாமிக்கு வைத்தியம் பார்த்தே டாக்டர் மாடி வீடே கட்டி கிரஹப்ரவேசம் செய்திருப்பார்னு தோணுது… முதல் மாடி கட்டி முடிச்சாச்சு.. இரண்டாவது மாடி கட்டறதுக்கு தான் பஞ்சாமிக்கு கொடுத்த ஐடியாவா இருக்கும். முக்கால் லட்சம் கேட்டது தான்.. வேறென்ன…//

   ஆஹா, இருக்கலாம் இருக்கலாம் ... மஞ்சு சொல்வது போலவும் இருக்கலாம். சபாஷ்!

   இங்கு பற்கள் இடிக்கப்படுது. அங்கு வீடு கட்டப்படுது.;)

   //டூப்ளிகேட் பல்செட் பொருத்திய டூப்ளிகேட் டாக்டர் இவ்ளோ விலை சொன்னால் பல்ஸ் வீக்காகி மயக்கம் போட்டு விழாம என்ன செய்வார் பாவம் ( டைமிங் சொல்லாடல். பல் என்ற இந்த இரு எழுத்து வைத்து நீங்க ஆடின ஜலதரங்கம் (கிண்ணத்தில் நீர் வைத்து அளவுகள் மட்டும் வித்தியாசப்படும் ஆனால் கிண்ணம் நீர் தான் பிரதானம்)//

   ஜலதரங்கம் ஆடியது நான். OK. நீர் தானே பிரதானம்?
   அந்த நீர், பின்னூட்டமிட்ட நீர் [YOU] தான்.

   //செம்ம அசத்தல் அண்ணா. ரசித்து ரசித்து வாசித்தேன்//

   அது தெரிகிறது, அசத்தலான தங்களின் பின்னூட்டத்தில்.;)

   தொடரும் .... vgk

   நீக்கு
  5. VGK to மஞ்சு....

   //பல் பல் பல்…. கடைசில நம்ம ஹீரோ எவ்ளோ அநியாயமா பாதிக்கப்பட்டிருக்கார். அதையும் செம்மையா ஒரு பத்தி முழுக்க அர்த்தம் மாறிவிடாமல் அதே சமையம் சுவாரஸ்யம் குறைந்துவிடாமல் அசத்தல் அண்ணா…. //

   ரொம்ப சந்தோஷம்.

   //ஃபினிஷிங் டச் அருமை அனைத்திலும் எக்செலெண்ட்….//

   நீங்க சொன்னாச் சரி. ;)))))

   //போலி டாக்டரிடம் போய் இப்படி போஷாக்கு தரும் பற்களை இழந்துடாதேங்கோ..

   ”பணம் இன்று போகும் நாளை வரும்” எப்படி வரும்னு ஒரு ஷொட்டு கொடுத்திருப்பது சூப்பர்….//

   அதானே, பணம் ’இன்று போகும்’ ... சரி
   ’நாளை வரும்’ என்றால் அது எப்படி வரும்?
   எங்கிருந்து வரும்?

   வாய் புளித்ததா? மாங்காய் புளித்த்தா? என்பது போன்ற ஒரு வாதம் இது ... எல்லோருமே சொல்கிறார்கள்.

   //ஆகமொத்தம் கதை செம்ம ஜனரஞ்சகமாக இருந்தது அண்ணா..

   அருமையான கதை பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள் அண்ணா…//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகையும், அழகான பற்பல கருத்துக்களும், என்னை என் பல்லைக் காட்டி சிரிக்க வைத்தன. ரொம்ப ரொம்ப சந்தோஷம். வாழ்க!

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 47. சார், இனி பல் டாக்டர் என்றாலே பஞ்சாமி தான் நினைவிற்கு வருவார்.எப்படி இப்படி? !

  பதிலளிநீக்கு
 48. Asiya Omar October 2, 2012 11:31 AM
  //சார், இனி பல் டாக்டர் என்றாலே பஞ்சாமி தான் நினைவிற்கு வருவார்.எப்படி இப்படி? !//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  பதிலளிநீக்கு
 49. நானும் ஒரு பல் மருத்துவரிடம் இப்படி சிக்கி பல்லைப் பிடுங்கி அவஸ்தைப்பட்ட கதையை ஒரு முறை பதிவாக்கினேன். ஆனால் உங்களின் சரளமான எழுத்து நடைக்கு உரை போடக் காணாது அது. எக்ஸலண்ட்டாக முடித்திருக்கிறீர்கள் ஸார். மிகமிகமிக ரசித்தேன் நான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பால கணேஷ் October 2, 2012 10:26 PM
   நானும் ஒரு பல் மருத்துவரிடம் இப்படி சிக்கி பல்லைப் பிடுங்கி அவஸ்தைப்பட்ட கதையை ஒரு முறை பதிவாக்கினேன்.//

   அடப்பாவமே! பல் பிடுங்கிய அவஸ்தையுடன் அதைப் பதிவாக்கிய அவஸ்தையும் சேர்ந்து விட்டதா? ;)

   //ஆனால் உங்களின் சரளமான எழுத்து நடைக்கு உரை போடக் காணாது அது.//

   நான் என்ன தங்களின் எழுத்துக்களைப் படிக்காதவனா? ரஸிக்காதவனா? சும்மா மொறுமொறுவென்று எனக்குப் பிடித்த காராபூந்தி போலல்லவா இருக்கும்.

   தங்களின் தன்னடக்கத்தையே இது காட்டுகிறது. தங்களின் தன்னடக்கத்திற்கு நான் இங்கு தலை வணங்குகிறேன்.

   //எக்ஸலண்ட்டாக முடித்திருக்கிறீர்கள் ஸார். மிகமிகமிக ரசித்தேன் நான்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், நல்லதொரு நகைச்சுவை ரசிப்புத் தன்மைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள், சார்.

   அன்புடன்,
   VGK

   நீக்கு
 50. சூப்பர் அண்ணா..பஞ்சாமி பல்லை பற்றி நகைசுவையாக தாங்கள் எழுதியது படித்து எங்கள் குடும்பமே சிரித்து அனுபவித்தது. கதை முழுவதும் படித்து சிரித்து சிரித்து மனம் மிக உற்சாகமாகி போனது.மிக்க மகிழ்ச்சி அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராதா ராணி October 5, 2012 2:14 AM

   //சூப்பர் அண்ணா.. பஞ்சாமி பல்லை பற்றி நகைசுவையாக தாங்கள் எழுதியது படித்து எங்கள் குடும்பமே சிரித்து அனுபவித்தது. கதை முழுவதும் படித்து சிரித்து சிரித்து மனம் மிக உற்சாகமாகி போனது. மிக்க மகிழ்ச்சி அண்ணா.//

   அன்புத்தங்கச்சி,

   வாங்க, வணக்கம்.

   தங்களின் அன்பான வ்ருகையும், அழகான கருத்துக்களும், ”எங்கள் குடும்பமே சிரித்து அனுபவிததது - எல்லோர் மனமும் உற்சாகம் ஆனது” என்ற சொற்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

   இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக நினைத்து நானும் உற்சாகம் கொள்கிறேன்.

   நன்றியோ நன்றிகளம்மா ....

   பிரியமுள்ள தங்களின்
   கோபு அண்ணா

   நீக்கு
 51. ஹா ஹா :)) இனி mrs பஞ்சாமி மிக்சில கூட பல்சில் அரைக்க மாட்டார் :))
  பல் போனா சொல் போச்சு ஆனா பஞ்சாமிக்கு happy soul போச்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. angelin October 5, 2012 3:51 AM
   //ஹா ஹா :)) இனி mrs பஞ்சாமி மிக்சில கூட பல்சில் அரைக்க மாட்டார் :))

   Mrs. பஞ்சாமிக்கு, எல்லா கரமுரா தீனி ஐட்டம்களையும் மிக்ஸியில் பட்டுப்போல அரைத்துத்தரும் [பொடிப்பொடியாக்கித்தரும்] வேலைகள் அதிகரித்து விடுமோ என்னவோ? ... பாவம் அவள்.

   பல் போனா சொல் போச்சு ஆனா பஞ்சாமிக்கு happy soul போச்சு//

   சொல் + Happy Soul நல்ல சொல்லாடல் தான், ரஸித்தேன்.

   அன்பின் நிர்மலா,

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான சிரிப்புக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பல் இல்லாததும் பல காரியங்களுக்கு வசதியாக இருக்குமோன்னு நினைக்கத் தோணுது... எனக்கு. ;)))))

   பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 52. உண்மைதான் அண்ணா ..பற்களை கவனமுடன் பராமரிக்கணும் ..போலிகளை கண்டு ஏமாறவும் கூடாது
  பஞ்சாமியின் உருவத்தை நீங்களே வரைந்திருந்தா ..ப மு/ .ப பி அதாவது பல் போகுமுன் /பல்போன பின் (வ வ ஸ்ரீ படம் இன்னமும் மனதில் நிற்குது ) இன்னும் மிக அருமையாக பல்..லீரென்று பல்சுவையாக இருந்திருக்கும் ..:))
  நீங்க பல்லாண்டு பல்களையாண்டு வாழ்க :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. VGK to Angelin நிர்மலா

   //உண்மைதான் அண்ணா .. பற்களை கவனமுடன் பராமரிக்கணும்..போலிகளை கண்டு ஏமாறவும் கூடாது //

   ஆமாம் நிர்மலா. அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

   //பஞ்சாமியின் உருவத்தை நீங்களே வரைந்திருந்தா ..
   ப மு/ ப பி அதாவது பல் போகுமுன் /பல்போன பின்
   [வ வ ஸ்ரீ படம் இன்னமும் மனதில் நிற்குது ] இன்னும் மிக அருமையாக பல்..லீரென்று பல்சுவையாக இருந்திருக்கும் ..:))//

   என் ஓவியத்தில் பஞ்சாமியின் உருவத்தினைப் பார்க்க, உங்களுக்குத்தான் எவ்வளவு ஆசை, நிர்மலா. ;)

   வ.வ.ஸ்ரீ. யின் அந்தப்படம் நான் வரைந்ததை தாங்கள் இன்னும் நினைவு வைத்துக்கொண்டு சொல்வது, எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

   //நீங்க ’பல்’லாண்டு ’பல்’கலையாண்டு வாழ்க :))

   தங்களின் அன்பு வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நிர்மலா.

   அன்புடன்
   கோபு அண்ணா

   நீக்கு
 53. ராதா ராணி October 5, 2012 2:14 AM

  //சூப்பர் அண்ணா.. பஞ்சாமி பல்லை பற்றி நகைசுவையாக தாங்கள் எழுதியது படித்து எங்கள் குடும்பமே சிரித்து அனுபவித்தது. கதை முழுவதும் படித்து சிரித்து சிரித்து மனம் மிக உற்சாகமாகி போனது. மிக்க மகிழ்ச்சி அண்ணா.//

  அன்புத்தங்கச்சி,

  வாங்க, வணக்கம்.

  தங்களின் அன்பான வ்ருகையும், அழகான கருத்துக்களும், ”எங்கள் குடும்பமே சிரித்து அனுபவிததது - எல்லோர் மனமும் உற்சாகம் ஆனது” என்ற சொற்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

  இது என் எழுத்துக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக நினைத்து நானும் உற்சாகம் கொள்கிறேன்.

  நன்றியோ நன்றிகளம்மா ....

  பிரியமுள்ள தங்களின்
  கோபு அண்ணா

  பதிலளிநீக்கு
 54. பல் செத்தால் படும் கஷ்டங்களி பிட்டு பிட்டு வைத்திருக்கிறீர்கள்.
  என் அம்மா இந்த மாதிரி நிறைய கஷ்டங்கள் பட்டு வருகிறார். ஆனால் பஞ்சாமி பிறகு என்ன தான் செய்தார்.எப்படி சமாளித்தார்?

  பதிலளிநீக்கு
 55. rajalakshmi paramasivam October 31, 2013 at 8:07 AM

  வாங்கோ, வணக்கம்.

  //பல் செட்டால் படும் கஷ்டங்களை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்.//

  மிக்க மகிழ்ச்சி.

  //என் அம்மா இந்த மாதிரி நிறைய கஷ்டங்கள் பட்டு வருகிறார். //

  சிலருக்கு செயற்கை பல்செட் செட் ஆகவே ஆகாது. கஷ்டம் தான்.

  //ஆனால் பஞ்சாமி பிறகு என்ன தான் செய்தார்? எப்படி சமாளித்தார்?//

  அவர் என் கதையில் வரும் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் தானே! ;)

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 56. போலி டாக்டர்கள் நிஜ டாக்டர்களை விட திறமைசாலிகளாக இருக்கவேண்டும். இல்லாவிடில் ஜனங்கள் அவரை எவ்வாறு நம்பி வைத்தியத்திற்கு வருவார்கள்?

  பதிலளிநீக்கு
 57. கோபு அண்ணா பொய்ப் பல்லைப் பற்றி நான் எழுதிய இரண்டு வரி கவிதையை இங்கு பகிர்கிறேன்.

  “சொந்தப் பல் சொத்தைப் பல்லாக
  பொய்ப் பல் கட்டி
  பொக்கிஷமாய் பாதுகாத்தான்.”

  பஞ்சாமிக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லை. பொய்ப்பல்லும் பொடிப்பல்லாயிடுத்து.

  அரசாங்கத்தின் அவசர சட்டம்: பல் டாக்டரைப் பார்க்கப் போகும் முன் அனைவரும் திரு வை கோபால கிருஷ்ணன் அவர்களின் “பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” என்ற சிறுகதையைப் படித்துவிட்டு செல்லவும்.

  பதிலளிநீக்கு
 58. ஆஹா, புதுப்பெயரில் பின்னூட்டம் வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 59. அடடா கடைசியில் போலி டாக்டரிடமா போயி மாட்டிகிட்டார்.

  பதிலளிநீக்கு
 60. உபகரணங்களுக்கான விளக்கம் அனைத்தும் பிரமாதம். நேரிலே பார்க்கும் வாய்ப்பற்றவர்களுக்கு அத்தனையையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது எழுத்து.

  பஞ்சாமி படும் பாட்டைப் பார்த்து செயற்கை பல்செட்டுகள் கூட பரிகாசமாக சிரிப்பதாக எழுதியிருப்பது ரசனையின் உச்சம்.

  பல்செட்டை காலணிக்கு உவமைப்படுத்தி அதனால் உண்டாகும் பிரச்சனைகளைப் பட்டியலிட்டிருப்பது சிறப்பு. கல்கண்டு கூட கலவரப்படுத்தும் பஞ்சாமியை நினைத்தால் பாவமாகத்தான் உள்ளது.

  ஒரிஜினல் ஒரிஜினல்தான். டூப்ளிகேட் டூப்ளிகேட்தான் என்பதைக் காலம் கடந்து உணர்ந்துகொண்ட பஞ்சாமிக்கு ஆறுதல் சொல்வதைத் தவிர வாசகர்களாகிய எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் ஒரு நகைச்சுவைக் கதை மூலம் விழிப்புணர்வு கூட்டிய அற்புதமான விஷயத்துக்காக உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும். மனமார்ந்த பாராட்டுகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 61. இனிமேக்கொண்டுகிட்டு பல்லு வலிக்கு டாகுடரு கிட்டல்லா போகப்பிடாது
  .

  பதிலளிநீக்கு
 62. பல் வலிக்காக டாக்டரிடம் போறவங்க டாக்டரின் பெயர் பல்லவராயன் இல்லதானேன்னு கன்ஃபார்ம் பண்ணிக்கணும் அப்புறம் இந்தக் கதையை முழுசா படிக்கணும். பல்வலியெல்லாம் மறந்து போயி சிரிக்க ஆரம்பிச்சுடுவா. வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்தானே.

  பதிலளிநீக்கு
 63. ஆணியே புடுங்கவேணாம்...வடிவேலு மாதிரிதான் சொல்லணும்போல....

  பதிலளிநீக்கு
 64. பல்லெல்லாம் பிடுங்கிய பல்லவராயன் ப்ல்வேறு துன்பங்களுக்கு ஆளாகக் கடவது!

  பதிலளிநீக்கு
 65. முழுக்கதையும் அருமை. அதைவிட ரொம்ப அருமை, இறுதியில் சொன்னது.

  "பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன்." - செம சிரிப்பு.

  பல் கட்டுனது சொந்த அனுபவமா சாருக்கு. தத்ரூபமா எழுதியிருக்கீங்களே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் October 3, 2016 at 8:15 PM

   //முழுக்கதையும் அருமை. அதைவிட ரொம்ப அருமை, இறுதியில் சொன்னது.

   "பணம் இன்று போகும் சரி; நாளை எங்கிருந்து வரும்? என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது. அப்படித்தான் எல்லோரும் ரொம்ப வருஷமாகச் சொல்லித் திரிகிறார்கள், அதனால் தான் நானும் சொன்னேன்." - செம சிரிப்பு.//

   //பல் கட்டுனது சொந்த அனுபவமா சாருக்கு. தத்ரூபமா எழுதியிருக்கீங்களே..//

   :))))) சொந்த அனுபவம் மட்டுமல்ல ... சொந்தக்காரர்கள் பலரின் அனுபவமும் சேர்ந்துள்ளன. :)))))

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 66. டி.வி. சேனல் நியூஸ் அமர்க்களம். இந்த கதை படித்த பல்வலி காரங்க யாருமே பல் டாக்டரைப்பற்றி நினைக்க கூட மாட்டாங்க.

  பதிலளிநீக்கு