என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

சிந்தனைக்கு சில துளிகள் [ பகுதி 4 ]மேலும் ஒரு மிகச்சுலபமான சுவாரஸ்யமான மேஜிக் கணக்கு
[நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் விளையாட!]
முதலில் குழந்தைகள் செய்ய வேண்டியது:


என் அன்புச்செல்லங்களே!
1) ஒரு வேஸ்ட் பேப்பரில் ஒரு சிறிய சதுரக்கட்டம் போடுங்க


2) அந்த சதுரக்கட்டத்திற்குள் ஒரு நம்பர் எழுதுங்க 
     (Any Number;  Any Digit Number)


3) கட்டத்தின் மேல் கோட்டுக்கு மேல் ஒரு நம்பர் எழுதுங்க


4) கட்டத்தின் கீழ்க் கோட்டுக்கு கீழே ஒரு நம்பர் எழுதுங்க


5) கட்டத்தின் இடது பக்கக்கோட்டின் வெளியே ஒரு நம்பர் எழுதுங்க


6) கட்டத்தின் வலது பக்கக்கோட்டின் வெளியே ஒரு நம்பர் எழுதுங்க_ 


7) மேலிருந்து கீழாக உள்ள 3 நம்பர்களையும் தப்பில்லாமல் கூட்டுங்க


8) இடது புறமிருந்து வலது புறம் உள்ள 3 நம்பர்களையும் 
    தப்பில்லாமல்கூட்டுங்க


9) நடு எண்ணை விட்டுவிட்டு மீதி 4 நம்பர்களையும் 
    தப்பில்லாமல் கூட்டுங்க


அவ்வளவுதாங்க உங்கள் வேலை!

உதாரணமாக:


70

-------

90         108        100

-------

40தங்கங்களே!

நீங்கள் இதை உங்கள் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாக வேறு ஒரு அறைக்குள் போய், ஒரு கட்டம் போட்டு கட்டத்திற்குள்ளும் வெளியேயும் நம்பர்கள் எழுதி, அதன் நேர் கூட்டல் தொகை, படுக்கைக் கூட்டல் தொகை, சுற்றியுள்ள நம்பர்களின் கூட்டல் தொகை மட்டும் அம்மாவிடமோ அப்பாவிடமோ சொல்ல வேண்டும்.  நீங்கள் கட்டத்திற்குள் போட்ட மேஜிக் நம்பர் என்னவென்று, அவர்கள் கண்டு பிடித்துக்கூறுவார்கள். 

உதாரணமாக மேற்படி கட்டத்திற்கு 

நேர் கூட்டல் தொகை:                     218         [70+108+40]
படுக்கைக்கூட்டல் தொகை:         298         [90+108+100]
சுற்றுக்கூட்டல் தொகை:                300         [90+70+100+40]

218; 298, 300 என்று இந்த மூன்று கூட்டுத்தொகைகளைச் சொன்னால் போதும் நடுஎண் அதாவது மேஜிக் எண்: 108 என்று கண்டு பிடித்துச் சொல்லி விடுவார்கள்!
=================================================================

பெற்றோர்களுக்கு:


இந்த நடுஎண் (மேஜிக்) கண்டுபிடிப்பது எப்படி? என்ற மிகச்சுலபமான வழிமுறைகளை இப்போது உங்களுக்கு விளக்குகிறேன். புரிந்து கொள்ளுங்கள்.  பிறகு உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் மிகச்சுலபமாக விளையாடலாம் தானே!


மேற்படி உதாரணத்தில் உங்கள் குழந்தை உங்களிடம் 3 கூட்டுத்தொகைகள் தருகிறதா!  அதாவது 218; 298; 300 என்று 3 கூட்டுத்தொகைகள்.


அவற்றை நீங்கள் தனியாக ஒரு பேப்பரில் எழுதி அவர்களுக்குத்தெரியாமல் கூட்டுங்கள். கூட்டியாச்சா?   218+298+300 = 816 


பிறகு கூட்டி வந்த தொகையை 2 ஆல் வகுத்து விடவும். வகுத்தாச்சா? 
816 divided by 2 = 408


வகுத்து வந்த தொகையிலிருந்து, குழந்தை கடைசியாகச்சொன்ன சுற்றுக்கூட்டல் தொகையைக் கழித்து விடுங்கள். கழிச்சாச்சா? 
408 minus 300 = 108


இப்போ என்ன வருகிறதோ [108] அது தாங்க உங்கள் குழந்தை கட்டத்திற்குள் போட்டுள்ள மேஜிக் எண்.


புரிந்து கொண்டீர்களா?  கவலைப்படாமல் ஜாலியா விளையாடுங்களேன்!


[ ஒரு முக்கியமான விஷயம் கூட்டும் போது குழந்தை தவறு செய்தாலோ, நேர் கூட்டல், படுக்கைக்கூட்டல், சுற்றுக்கூட்டல் என்ற ஆர்டரை மாற்றிச் சொன்னாலோ, போச்சு. நீங்கள் கண்டுபிடிக்கும் மாஜிக் நம்பர் தப்பாகி விடும்.  


அது போல நீங்கள் குழந்தை சொன்ன கூட்டுத்தொகைகளைக்கூட்டும் போதோ, அதை 2 ஆல் வகுக்கும் போதோ, வகுத்து வந்த நம்பரிலிருந்து சுற்றுக்கூட்டல் தொகையைக் கழிக்கும் போதோ ஏதாவது தவறு செய்தாலும் போச்சு. உங்கள் மாஜிக் நம்பர் தப்பாகி விடும்]


========================================


இந்த மேஜிக்குக்குப்பின் உள்ள லாஜிக்:


Assume:

Top Number 70 =            A
Middle Number 108 =      B
Bottom Number 40 =       C
Left side Number 90 =      D
Right side Number 100 =  E


Top+Middle+Bottom Total 218 = A+B+C
Left+Middle+Right Total    298 = D+B+E
Round Total of 4 Nos.         300 = D+A+E+C


GRAND TOTAL:    816 = 2A+2B+2C+2D+2E
So, A+B+C+D+E =  816 DIVIDED BY 2 = 408
NOW WE HAVE TO FIND OUT "B" THE MIDDLE NUMBER'S VALUE


A+B+C+D+E = 408
A+C+D+E      = 300
So  "B" = 408 minus 300 = 108


========================================


ஒரு சிலருக்காவது புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன். புரிந்தவர்களும், தங்கள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தவர்களும், அதனை சுவையாக பின்னூட்டத்தில் எழுதுங்களேன்.
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்

31 கருத்துகள்:

 1. சூப்பர் அய்யா
  தேங்க்ஸ் பகிர்ந்தமைக்கு

  பதிலளிநீக்கு
 2. விடுமுறைகளில் பொழுது போக்க நல்ல விளையாட்டு.

  பதிலளிநீக்கு
 3. மூளைப் பயிற்சி. அறிவுக்கு வேலை.

  பதிலளிநீக்கு
 4. சிந்தனைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. குழந்தைகளுக்கு விளையாட்டோடு
  அறிவும வளரச் செய்யும் நல்ல
  பதிவு நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வு. இது போன்ற நிறைய கணக்குகள் சொல்லிக் கொடுங்கள் எல்லோருக்கும்....

  பதிலளிநீக்கு
 7. மிக அருமை.. நல்ல விளையாட்டு:)

  பதிலளிநீக்கு
 8. அருமையான ப்கிர்வு அய்யா, மூளைக்கும் வெலை ஆச்சு, யென் மகளின் முன் கணித மேதை பட்டமும் கிடைச்சாச்சு, நன்றி.

  பதிலளிநீக்கு
 9. சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

  பதிலளிநீக்கு
 10. இந்த்ப் பதிவு என் டாஷ் போர்டில் வந்தது. கணக்கு விளையாட்டு ஜோர்,!

  பதிலளிநீக்கு
 11. இந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, ஆதரவாக பல கருத்துக்கள் கூறி,என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 12. குழநுதைகளுக்கு மட்டும் இல்ல பெரியவங்களுகுகுமே பயனுள்ள பகிர்வு

  பதிலளிநீக்கு
 13. அட, பிள்ளைகளையும் உங்க பக்கம் இழுத்துட்டீங்களே. அப்படியே இந்த கணக்கையெல்லாம் என் வலைத் தளத்தில் காப்பி அடிக்க அனுமதி கொடுங்கள்.

  பதிலளிநீக்கு
 14. கணக்கு பாடம்னா ரொம்பவே இஸ்டம்தா நீங்க போட்டிருக்குதுக்கு நெரம்ப யோசிக்கோணும் அப்பாலிக்கா வந்துபோடறன்.

  பதிலளிநீக்கு
 15. நான் ரொம்பவே லேட் எண்ட்ரி கொடுத்திருக்கேன். ஸோ.. மத்தவங்களுக்கு வாழ்த்துகளை மட்டும் தெரிவிச்சுக்கறேன்.

  பதிலளிநீக்கு
 16. அதுக்குள்ளாற இன்னும் ஒண்ணா...இப்பதிக்கு - பாபாஸ்ஸ்ஸ்...

  பதிலளிநீக்கு
 17. இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமே வெளியிடலாம் தாங்கள்!

  பதிலளிநீக்கு
 18. இந்தக்கால குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரில் உக்ஙாந்த இடத்திலேயே விளையாடும் வீடியோகேம்தான் தெரியுது. இதுபோல பதிவின்மூலம் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளுக்கும் பழக்கினால் மூளையை துருப்பிடிக்க விடாமல் சுறுசுறுப்பா வச்சுகிடலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... March 8, 2017 at 1:56 PM

   //இந்தக்கால குழந்தைகளுக்கு கம்ப்யூட்டரில் உக்ஙாந்த இடத்திலேயே விளையாடும் வீடியோகேம்தான் தெரியுது. இதுபோல பதிவின்மூலம் மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளுக்கும் பழக்கினால் மூளையை துருப்பிடிக்க விடாமல் சுறுசுறுப்பா வச்சுகிடலாம்..//

   வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு