என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

தங்கமே தங்கம் !
தங்கமே தங்கம் !

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில்,  ரோட்டு ஓரமாக செருப்புத் தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம்.  ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப் பணம் சேர்ந்து விட்டால் போதும்.  யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து  எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டான்.

தங்கம் விலை நாளுக்குநாள் ஏறி வருவதோடு மட்டுமின்றி, இவன் தொழிலுக்குப் போட்டியாக ரோட்டின் எதிர்புறம் ஒரு கிழவர் தொழில் தொடங்கியதிலிருந்து அவனின் அன்றாட வருமானமும் குறைய ஆரம்பித்தது.

கிழவருக்கு அன்று பெய்த மழையிலும், குளிரிலும், கபம் கட்டி, இருமல் ஜாஸ்தியாகி, கடுமையான ஜுரமும் கண்டது.  இறந்து போன தன் தந்தை போலத் தோன்றும் கிழவர் மேல் இரக்கம் கொண்டு, அவரை அரசாங்க ஆஸ்பத்தரிக்கு அழைத்துப்போய், மருந்து வாங்கிக்கொடுத்து, அவரது குடிசையில் கொண்டு போய் விட்டான், சங்கலியாண்டி.  

நன்றி கூறிய கிழவரும்,  “தம்பி உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா” என்று கேட்டார்.

”என் மனைவியாக வரப் போகிறவளுக்குப் போட ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு புதுச் சேலையும் வாங்க பணம் சேர வேண்டும்.  அதற்காகத் தான் காத்திருக்கிறேன்” என்றான்.

”உனக்கு அந்தக் கவலையே வேண்டாம், நான் தருகிறேன்” என்றார் கிழவர்.

அதே சமயம், சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலை பார்க்கும் கிழவரின் மகள் தன் குடிசைவீட்டுக்குத் திரும்பினாள்.  அவள் சங்கிலியாண்டியை நோக்க, சங்கிலியாண்டியும் அவளை நோக்கினான்.  கண்கள் கலந்தன.  இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த சக்தியை உணர்ந்தனர்.

இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்த அந்தக் கிழவர், இருவரையும் கை கோர்த்து விட்டு வாழ்த்தினார். 

“அரைப் பவுன் தங்கம் சேர்க்க அல்லல் படுகிறாயே; இந்த என் மகள் பெயரும் “தங்கம்” தான்.  ஐம்பது  கிலோ தங்கம்.  சுத்தத்தங்கம்” என்றார் கிழவர்.

இதைக்கேட்ட தங்கமும், சங்கிலியாண்டியும் சேர்ந்து வெட்கத்துடன் சிரித்தனர்.  தங்கம் போல ஜொலித்தனர். 

அதே நேரம் ” ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் .... எனக்கே எனக்காக ” என்ற சினிமாப் படப்பாடல் எங்கோ பக்கத்துக் குடிசையின் டி..வி. யில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

-o-o-o-o-o-o-o-o-o-

68 கருத்துகள்:

 1. இரண்டாவது குட்டியூண்டு கதையும் அருமை
  ஒரு நல்ல கவிதையைப் படித்த திருப்தி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், ரோட்டு ஓரமாக செருப்புத் தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப் பணம் சேர்ந்து விட்டால் போதும். யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டான்.//

  ஆஹா! தொடக்கமே இனிமையா இருக்கு!

  பதிலளிநீக்கு
 3. நகைச்சுவை கலந்த குட்டிக்கதை! ஒரு அருமையான நீதியும் இதுல இருக்கு! - நாம அடுத்தவங்களுக்கு சின்னதா உதவி செஞ்சா கூட அது நமக்கு பெரிய பலனை தந்துடுது!!

  பதிலளிநீக்கு
 4. தங்கமான மனதிலிருந்து உருவான குந்துமணி தங்கம் போன்ற குட்டியூண்டு கதை - அழகாவும் சுவையாகவும் இருக்கு சார். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. குட்டிக்கதை அருமை.. தனக்குப் போட்டியாக வந்தாலும் மனித நேயத்துடன் செயல்பட்ட சங்கிலியாண்டிக்கு சரியான பரிசு “ஃபிஃப்டி கேஜி தங்கம்”

  பதிலளிநீக்கு
 6. பிஃப்டி கேஜி தாஜ்மஹலில் சங்கிலியாண்டியைக் குடியமர்த்திய கோபு சாருக்கு முறுகலா ஒரு நூறு பவுன்ல தங்கம் பார்சல்.

  பதிலளிநீக்கு
 7. ஐம்பது கிலோ தங்கம் பெற்ற ச்ங்கிலியாண்டியின் தங்க மனதிற்கு வாழ்த்துக்கள்.
  மனதில் நிற்கும் கதையைத் தந்த தங்கள் தங்கக் கைக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. காலத்தினால் செய்த உதவி ஞாலத்தின் பெரிது. கிழவருக்கு உதவப் போக மனையாள் கிடைத்த கதை ரசிக்கும்படி இருந்தது. கோபு சார், உங்கள் பதிவைப் படிக்க தமிழ்மணம் மூலம்தான் வரமுடிகிறது.

  பதிலளிநீக்கு
 9. குட்டியானகதையானாலும் நல்ல கருத்துள்ளகதைதான்.
  நல்லாஇருக்கு. கோபால் சார் என்னோட ஒருப்ளாக் படிச்சு கருத்துக்கள் சொல்லி என்னை உற்சாகப்படுத்துகிரீர்கள் இன்னொரு ப்ளாக்(குறை ஒன்றும் இல்லை) க்கும் வந்து கருத்துக்கள்கூறவும்.

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா12 மே, 2011 அன்று PM 2:05

  ///“அரைப் பவுன் தங்கம் சேர்க்க அல்லல் படுகிறாயே; இந்த என் மகள் பெயரும் “தங்கம்” தான். ஐம்பது கிலோ தங்கம். சுத்தத்தங்கம்” என்றார் கிழவர்.////நல்ல முடிவு .

  பதிலளிநீக்கு
 11. நறுக்குன்னு ஒரு
  நல்ல பதிவு
  இது போல்
  நிறைய
  நிரம்ப வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 12. கதை நல்லாயிருக்கு. ஏழைக்கு தெய்வமே வழி காட்டும்.

  பதிலளிநீக்கு
 13. அம்புலிமாமா கதை மாதிரி சூப்பரா இருக்கு....

  பதிலளிநீக்கு
 14. சிம்பிள், டச்சிங் கதை நல்லாயிருக்கு...

  பதிலளிநீக்கு
 15. உங்க மனசு போல தங்கம்.. கதை முடிவும்.

  பதிலளிநீக்கு
 16. தங்கம் விற்கிற விலையில், தங்கம் என்பது வெறும் பொன்னாலான நகையில் இல்லை, ஒரு அருமையான பெண்ணின் மனதில் உள்ளது என்று அழகாகக் கதையை முடித்திருக்கிறீர்கள்!! அன்பான பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
 17. சிறுகதை சொக்கத்தங்கம் கோபால் சார்..:)

  பதிலளிநீக்கு
 18. thangamum sangiliyum thangach changiliyaaka inaindu pallandu vazhga!

  பதிலளிநீக்கு
 19. அர்த்தமுள்ள குட்டிக் கதை. வாழ்த்துக்கள் வைகோ சார். மஞ்சள் உலோகத்தை விட உயர்ந்தது மனசுதான். ஒவ்வொருவரும் இதைப் புரிந்து கொண்டு விட்டால் திருமணங்களில் தங்க பேரங்கள் இருக்காது.

  பதிலளிநீக்கு
 20. ஒரு துக்கினியூண்டு கதேல இன்னாமா ஊடு கட்டுறே சாரு?!

  பதிலளிநீக்கு
 21. இந்தக் கதைக்கு நான் ஏற்கனவே அளித்த பின்னூட்டம் என்னவாயிற்று?

  பதிலளிநீக்கு
 22. அன்புள்ள வித்யா சுப்ரமணியம் மேடம்,
  வணக்கம் பல.

  தங்களைப்போன்ற பலர் (மொத்தம் 25 பேர்கள் என்று ஞாபகம்) கொடுத்த பின்னூட்டங்கள் முழுவதும் காணாமல் போய் விட்டன. என் துரதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

  ப்ளாக்கரில் ஏதோ கோளாறு ஆகியுள்ளது. பதிவர்கள் எல்லோருக்குமே இந்த பிரச்சனை உள்ளது.

  நடுவில் என் இந்தப் பதிவே ”தங்கமே தங்கம்” கூட கடத்தப்பட்டு காணாமல் போய் விட்டது. பிறகு இன்று தான் வந்தது. பின்னூட்டங்கள் வரவில்லை. என்ன காரணம் என்றும் புரியவில்லை.


  எல்லோருக்குமே உள்ள பொதுப்பிரச்சனை என்று சொல்லுகிறார்கள்.

  தயவுசெய்து தாங்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம். தொடர்ந்து தங்கள் ஆதரவு எனக்கு என்றும் தேவை, மேடம்.

  அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 23. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
  //இந்தக் கதைக்கு நான் ஏற்கனவே அளித்த பின்னூட்டம் என்னவாயிற்று?//

  தங்கள் மேல் நான் பெரும் மதிப்பு வைத்துள்ளதால், தங்களின் மிகவும் மதிப்பு வாய்ந்த பின்னூட்டத்தை என் மனதில் ஏற்றிக்கொண்டு விட்டேன். அதை இங்கு கீழே எழுதியுள்ளேன். அது சரியா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.
  ==============================================
  Comments given by Respectable Mrs. Vidhya Subramaniam Madam:

  ”மஞ்சள் உலோகத்தைவிட மதிப்பு வாய்ந்தது திருமண ஜோடிகளின் மனது மட்டுமே என்று எல்லோரும் உணர்ந்து கொண்டால், கல்யாண பேரங்களில் தங்கம் ஒரு தடங்கலாக இருக்காது என்பதை உணர்த்தும் நல்லதொரு சிறுகதை.”
  ==============================================

  என் ஞாபகசக்தி ஓரளவுக்காவது சரிதானா என்று நீங்கள் எழுதினால் மகிழ்ச்சியடைவேன்.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 24. தங்கமே தங்கம் அழகான குட்டியூண்டு கதையாக விறுவிறுப்பாக சென்றது. பாராட்டுக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 25. கோவை2தில்லி said...
  //தங்கமே தங்கம் அழகான குட்டியூண்டு கதையாக விறுவிறுப்பாக சென்றது. பாராட்டுக்கள் சார்.//

  மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 26. 12.05.2011 வியாழன் & 13.05.2011 வெள்ளி இரண்டு நாட்களும் பிளாக்கரில் ஏற்பட்ட கோளாறுகளினால், இந்த சிறுகதைப்பதிவும் அதற்கு வந்திருந்த 27 பின்னூட்டங்களும் திடீரென மறைந்து விட்டன.

  பிறகு இந்தப்பதிவு மட்டும் நல்ல வேளையாக இன்று 14.05.2011 சனிக்கிழமை திரும்பக்கிடைத்து விட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக பின்னூட்டங்கள் எல்லாம் மறைந்துவிட்டன.

  எனினும் யார் யார் பின்னூட்டமிட்டிருந்தனர், என்ன எழுதியிருந்தார்கள் என்பது எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன.

  இந்தக்குட்டிக்கதைக்கு வருகை தந்து, உற்சாகமூட்டும் விதமாக பின்னூட்டம் அளித்து சிறப்பித்த

  திருவாளர்கள்:
  1) நாஞ்சில் மனோ சார்(2 தடவைகள்)
  2) ஓ.வ.நாராயணன் சார் (2 தடவைகள்)
  3) சுந்தர்ஜி சார்
  4) ரமணி சார்
  5) வெங்கட் நாகராஜ்
  6) எல். கே
  7) ரிஷபன் சார்
  8) ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி சார்
  9) கே.பி.ஜனா சார்
  10) மோஹன்ஜி சார்
  11) கே.ஆர்.பி.செந்தில் சார்
  12) ஏ.ஆர்.ராஜகோபால் சார்
  13) கலா நேசன் சார்
  14) கந்தசாமி சார்
  15) மதுரை சரவணன் சார்
  16) ஜி.எம்.பாலசுப்ரமணியன் சார்(2Times)

  திருமதிகள்:
  01) வித்யா சுப்ரமணியன் அவர்கள்
  02) தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள்
  03) மனோ சுவாமிநாதன் அவர்கள்
  04) இராஜராஜேஸ்வரி அவர்கள்
  05) திருமதி bs ஸ்ரீதர் அவர்கள்
  06) மிடில் க்ளாஸ் மாதவி அவர்கள்
  07) சித்ரா அவர்கள்
  08) மாதேவி அவர்கள்

  ஆகிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  இன்ட்லி & தமிழ்மணத்தில் வோட்டுப்போட்ட அனைவருக்கும் என் அன்பான கூடுதல் நன்றிகள்.

  “நம் உரத்த சிந்தனை” (தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ்) நடத்திய போட்டியொன்றில், என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ”எங்கெங்கும்..எப்போதும்..என்னோடு” 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூல் என, முதல் பரிசுக்குத்தேர்வாகி, ஆடிட்டர் என்.ஆர்.கே விருது 2010 வழங்கும் விழாவுக்கு, இன்று இரவு புறப்பட்டு சென்னைக்கு செல்ல இருக்கிறேன். விழா நடைபெறும் இடம்: கன்னிமாரா நூலக அரங்கம் (A/C), எழும்பூர், சென்னை-8.
  ஞாயிறு 15.05.2011 காலை 10 மணிக்கு.

  மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 27. உங்கள் சிறுகதை மிகவும் அருமை...வயதானாலும் உங்கள் மனசு இளமையோடு தான் இருகிறது..

  சாட்சி:"இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த
  சக்தியை உணர்ந்தனர்."
  "ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் ..."

  பதிலளிநீக்கு
 28. இதற்கு முன் நான் பதித்த comments-ஐ தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..

  http://zenguna.blogspot.com

  பதிலளிநீக்கு
 29. குணசேகரன்... said...
  //உங்கள் சிறுகதை மிகவும் அருமை...வயதானாலும் உங்கள் மனசு இளமையோடு தான் இருகிறது..

  சாட்சி:"இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த
  சக்தியை உணர்ந்தனர்."
  "ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் ..."//

  தங்களின் முதல் வருகைக்கும், என் வலைப்பூவுக்கு இன்று புதிய பின்தொடர்பவராக வந்திருப்பதற்கும், மேலான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  குணசேகரன்... said...
  //இதற்கு முன் நான் பதித்த comments-ஐ தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்..//

  இதில் தவறாக நினைக்க ஏதும் இல்லை.
  மனதளவில் நான் என்றும் இளைஞன் தான்.

  மேலும் படைப்பாளி நான் எனினும் படிப்பவர்கள் தங்களைப்போன்ற இளைஞர்கள் அல்லவா!

  இவ்வாறு கொஞ்சமாவது ‘கிக்’ கொடுத்தால் தானே படிப்பவர்களுக்கு ஒரு உற்சாகம் ஏற்படும்.

  முடிந்தால் என் பழைய இடுகைகளை எல்லாம் படித்துப்பார்க்கவும். குறிப்பாக “ஐம்பதாவது பிரஸவம்” at the following Link:

  http://gopu1949.blogspot.com/2011/03/blog-post.html

  பதிலளிநீக்கு
 30. .கதை டச்சிங் காகவும் அதே சமயம் ஜாலியாகவும் இருந்தது. அருமை

  பதிலளிநீக்கு
 31. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
  நேரம் இருந்தால் பார்க்கவும்..


  என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

  பதிலளிநீக்கு
 32. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  //உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
  நேரம் இருந்தால் பார்க்கவும்..

  என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2//

  தாங்கள் இன்று வலைச்சரத்தில் ”என்னை அதிசயப்படவைத்த பதிவர்கள்-2” என்ற தலைப்பின் கீழ் என் பெயரை குறிப்பிட்டுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  இந்த நிகழ்வு என்னையும் அதிசயப்பட வைத்துள்ளது.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 33. சிவகுமாரன் said...
  //கதை டச்சிங் காகவும் அதே சமயம் ஜாலியாகவும் இருந்தது. அருமை//

  மிக்க நன்றி. தங்கள் பதிவுகள் சிலவற்றை இன்னும் படிக்க நேரமில்லாமல் ஒருசில குடும்ப வேலைகளில் பயணம் செல்ல நேர்ந்து விட்டது. எப்படியும் படித்துவிட்டு கூடிய சீக்கரம் பின்னூட்டம் அளித்து விடுவேன்.

  பதிலளிநீக்கு
 34. ஸ்ரீராம். said...
  //எளிமையான இனிமையான கதை.//

  மிக்க நன்றி ”ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்”

  பதிலளிநீக்கு
 35. .சிறுகதை முதல்பரிசு பெற்ற மைக்கு என்
  மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
  அந்த நிகழ்ச்சி குறித்த படங்களுடன் கூடிய பதிவை
  அடுத்த பதிவாக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  பதிலளிநீக்கு
 36. Ramani said...
  //சிறுகதை தொகுப்பு நூல் முதல்பரிசு பெற்றமைக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். அந்த நிகழ்ச்சி குறித்த படங்களுடன் கூடிய பதிவை
  அடுத்த பதிவாக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//

  தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் ஐயா. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட மேலும் சில புகைப்படங்களை மட்டும் ஓரிரு நாட்கள் கழித்து தங்களுக்கு ஈ.மெயில் மூலம் அனுப்பி வைக்கிறேன்.
  அதையே ஒரு பதிவாகப்போடலாம் என்ற தங்கள் ஆலோசனையும் நன்றாகத்தான் உள்ளது. படங்களுடன் பதிவுகள் செய்து எனக்கு இதுவரை பழக்கமில்லை. முயற்சிக்கிறேன். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 37. உங்கள் சிறுகதை மிகவும் அருமை...சிறுகதை முதல்பரிசு பெற்ற மைக்கு என்
  மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 38. போளூர் தயாநிதி said...
  //உங்கள் சிறுகதை மிகவும் அருமை...சிறுகதை முதல்பரிசு பெற்ற மைக்கு என்
  மனப்பூர்வமான வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி, நண்பரே!

  பதிலளிநீக்கு
 39. வாழ்த்துக்கள் கோபால் சார்.. அந்த நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது.. ஆனால் போக இயலவில்லை.. வந்தி்ருந்தால் உங்களை வாழ்த்தி இருக்கலாம்..:)

  பதிலளிநீக்கு
 40. கதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்களுக்கே உரிய டச் சில் முடிச்சிருகீங்க.முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 41. அடுத்த பதிவு எப்போ தங்கமே?

  பதிலளிநீக்கு
 42. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //வாழ்த்துக்கள் கோபால் சார்.. அந்த நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு வந்திருந்தது.. ஆனால் போக இயலவில்லை.. வந்தி்ருந்தால் உங்களை வாழ்த்தி இருக்கலாம்..:)//

  ஆஹா! நீங்கள் வந்திருக்கலாமே மேடம். உங்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டிய நல்லதொரு வாய்ப்பு நழுவிவிட்டதே என்று எனக்கும் இப்போது இதைப்படித்ததும் வருத்தமாக உள்ளது மேடம்.
  OK OK Past is Past - What to do now?

  தங்களுக்கு அழைப்பு வந்தது என்ற தகவலாவது சொன்னீர்களே; அடுத்த முறை இதுபோல ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்போம். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 43. ஜிஜி said...
  //கதை அருமையா இருக்குதுங்க.முடிவு உங்களுக்கே உரிய டச் சில் முடிச்சிருகீங்க.முதல் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 44. மோகன்ஜி said...
  //அடுத்த பதிவு எப்போ தங்கமே?//

  தங்கம் விலை ஸ்டெடியாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருப்பதுபோல, இந்த மாதம் பல்வேறு சொந்த வேலைகள், குடும்பப்பொறுப்புகள், அப்பா & அம்மா ஸ்ரார்த்தங்கள், நடுவில் பேரன் பிறந்த மகிழ்ச்சிகள், பேரனுக்குப் புண்ணியாஹாவாசனம், மற்ற சில வேலைகளால் இங்கும் அங்கும் அலைச்சல்கள், விருது பெற சென்னைப்பயணம் என்று இதுவரை நேரமில்லாமலேயே இருந்து விட்டது.

  ஓரிரு நாட்களில் அடுத்த பதிவை அள்ளித்தெளிக்க வேண்டியது தான்.

  நினைவூட்டியதற்கு நன்றிகள், மோஹன்ஜி சார்.

  பதிலளிநீக்கு
 45. OLD`s GOLD. (I mean the OLDMAN`s 50Kgs weighed daughter is like Gold.)

  பதிலளிநீக்கு
 46. சிவகுமாரன் said...
  //என்ன விருது வைகோ சார் ?//

  ”நம் உரத்த சிந்தனை” என்ற பெயரில் தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் ஒன்று சென்னையிலிருந்து வெளியாகிறது.

  அதில் நான் வாசக எழுத்தாளர் சங்க உறுப்பினராக உள்ளேன். அவர்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படும் கட்டுரை நூல்கள்/கவிதை நூல்கள்/சிறுகதை நூல்கள் ஆகிய மூன்று பிரிவுகளிலும் வெளியான நூல்களை, ஒரு குழு அமைத்து ஆராய்ந்து மிகச்சிறந்த நூல்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும், நினைவுப்பரிசும் அளித்து கெளரவிக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு என்னால் வெளியிடப்பட்டுள்ள “எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு” என்ற தலைப்பிலான 15 சிறுகதைகள் அடங்கியத் தொகுப்பு நூலை முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

  விருதின் பெயர் “ஆடிட்டர் கவிஞர் என்.ஆர்.கே. விருது 2010”

  இது நான் எழுதிய மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு நூல்.

  முதல் நூல் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச்சங்கத்தால் 2009 ஆம் ஆண்டுக்கான மிகச்சிறந்த நூலாக முதல் பரிசுக்குத் தேர்வாகி விருது பெற்றுத்தந்தது.

  அதுபோலவே இரண்டாவது நூல் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்ட கலை பண்பாட்டு மையத்தால் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாகத்தேர்வாகி இரண்டாம் பரிசுடன் “சிந்தனைப்பேரொளி” என்ற பட்டமும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த திரு. தா.சவுண்டையா [தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டர்] அவர்களால் அளிக்கப்பட்டது.

  முதல் நூல்:
  தலைப்பு “தாயுமானவள்”
  வானதி பதிப்பக வெளியீடு [2009]

  இரண்டாம் நூல்:
  தலைப்பு: “வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்”
  திருவரசு புத்தக நிலைய வெளியீடு [2009]

  மூன்றாவது நூல்:
  தலைப்பு: எங்கெங்கும் எப்போதும் என்னோடு
  மணிமேகலைப்பிரசுர வெளியீடு [2010]

  Just for your information only.
  எல்லாம் இறைவன் அருளால் மட்டுமே!

  பதிலளிநீக்கு
 47. vasan said...
  //OLD`s GOLD. (I mean the OLDMAN`s 50Kgs weighed daughter is like Gold.)//

  Yes Sir. Thank you for your comments. Anbudan vgk

  பதிலளிநீக்கு
 48. Lakshmi said...
  //குட்டியானகதையானாலும் நல்ல கருத்துள்ளகதைதான். நல்லாஇருக்கு.//

  மிகவும் சந்தோஷம், நன்றிகள், மேடம்.

  //கோபால் சார் என்னோட ஒருப்ளாக் படிச்சு கருத்துக்கள் சொல்லி என்னை உற்சாகப்படுத்துகிறீர்கள் இன்னொரு ப்ளாக்(குறை ஒன்றும் இல்லை) க்கும் வந்து கருத்துக்கள்கூறவும்.//

  அந்த தங்களின் இன்னொரு ப்ளாக்குக்கும், தங்களுக்கு குறையொன்றும் இல்லாமல், நான் FOLLOWER ஆகிவிட்டேன், மேடம். இனி அவ்வப்போது தாங்கள் பதிவுகள் இட்டதும் தானாகவே என் டேஷ்போர்டில் தெரியவரும். கட்டாயம் படித்துவிட்டு கருத்துக்கள் கூறுகிறேன்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 49. சாகம்பரி said...
  //கதை நல்லாயிருக்கு.//

  மிக்க நன்றிகள் மேடம்.

  //ஏழைக்கு தெய்வமே வழி காட்டும்.//

  மிகவும் அழகாகச் சொல்லி விட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 50. ராமலக்ஷ்மி said...
  //நல்ல கதை.//

  மிக்க நன்றி, மேடம்.

  பதிலளிநீக்கு
 51. 12.05.2011 & 13.05.2011 ஆகிய இரு நாட்களில் காணாமல் போய்விட்ட பலரின் பின்னூட்டங்கள், இன்று அவைகளாகவே திரும்பக் கிடைத்து விட்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

  தீவிர ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,
  திரு. எல்.கே சார்,
  திரு ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி சார்,
  திரு. கலாநேசன் சார்,
  திரு. மதுரை சரவணன் சார் &
  திருமதி மாதேவி
  ஆகிய ஐவரும் பின்னூட்டம் கொடுக்காதபோதும், மறைந்துபோன பின்னூட்டங்களில் அவர்களுடையதும் இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் நன்றி தெரிவித்துள்ளேன் என்பது தெரிய வந்ததுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அந்த இரண்டு நாட்களும் இதுபோல அனைத்துப் பதிவர்களுக்கும் ஒரே குழப்பம் தான் ஏற்பட்டுள்ளது.

  பதிலளிநீக்கு
 52. குட்டியூண்டு கதையில் எத்தனை நெகிழ்வு. மிகவும் அருமையான கரு. தங்முன்னா சும்மாவா அதுவும் சொக்கத்தங்கம் பெண் தங்கம்.. மனநிறைவான கதை. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 53. தங்கமே தங்கம் கதை அருமை.

  இப்படி ஒவ்வொருவரும் வரும் மனைவியை தங்கமாய் நினைத்தால்
  தங்கம் விலையால் அவதிபடும் ஏழைகள் வாழ்வு வளம் பெறும்.

  பதிலளிநீக்கு
 54. அன்புடையீர்,

  மே மாதம் 11 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்தப்பதிவான [தங்கமே தங்கம்] ஏதோ என் கம்ப்யூட்டரில் நான் செய்த ஒரு சில தவறுகளினால், மீண்டும்
  இன்றைய தேதியில் புதிய வெளியீடு போல வெளியாகி விட்டது.

  [தங்கம் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக ஏறிவருவதால் கூட இதுபோல ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்]

  இது தங்கள் தகவலுக்காக.

  எனினும் என் தவறுக்கு நான் வருந்துகிறேன்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 55. கருத்து அருமை.எல்லோருக்கும் இப்படி சுலபமாக வழி கிடைத்துவிட்டால் பரவாயில்லை. தங்கத்தின் விலையும் ஏறாது.

  பதிலளிநீக்கு
 56. சிறிய சிறுகதை ஆனாலும் மனதிற்கு நிறைவாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
 57. மனதை தொட்ட கதை. ஒவ்வொருவரும் மனைவியை தங்கமா நினைச்சா நல்லா இருக்குமு

  பதிலளிநீக்கு
 58. குட்டிக்கதை
  ஆனால்
  சுட்டிக்கதை

  மனதை தொட்ட கதை

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 59. இந்த கத நல்லாருக்குது.ஆமா இட்டளின்னுரது போல இன்னாமோ இண்டலி தமிள்மணம்னுலா சொல்லினிங்க இன்னாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru October 12, 2015 at 9:49 AM

   //இந்த கத நல்லாருக்குது.ஆமா இட்டளின்னுரது போல இன்னாமோ இண்டலி தமிள்மணம்னுலா சொல்லினிங்க இன்னாது.//

   இண்ட்லி, தமிழ்மணம் ஆகியவை நாம் வெளியிடும் பதிவுகளை விளம்பரப்படுத்தி, நிறைய நபர்களை வாசிக்க வைக்கும் திரட்டிகள். நாம் நம் பதிவுகளை வெளியிட்டபிறகு இவற்றில் இணைக்க வேண்டும். என் அன்புக்குரிய ஒருசில வாசகர்களின் வற்புருத்தலால் + அன்புக் கட்டளைகளால் மட்டுமே நான் என் பதிவுகளை 2011 மார்ச் முதல் 2011 டிஸம்பர் வரை - ஒரு ஒன்பது மாதங்களுக்கு மட்டும் இவற்றில் இணைக்க நேர்ந்தது.

   2012 ஜனவரி முதல் இன்றுவரை நான் எதிலும் [எந்த ஒரு திரட்டிகளிலும்] என் பதிவுகளை இணைப்பதே இல்லை. என் பதிவுகளுக்கு நான் விளம்பரம் தேடுவதும் இல்லை.

   வாசகர்கள் அவர்களாகவே விரும்பி என் பதிவுகள் பக்கம் உங்களைப்போலவே தேடி ஓடி வந்து விடுவார்களாக்கும். :)

   நல்ல சரக்குகள் விளம்பரம் இல்லாமலேயே விலை போகும் அல்லவா ! அதுபோலத்தான் இதுவும் என்ற கர்வமும் எனக்கு உண்டு.

   அன்புடன் குருஜி.

   நீக்கு
 60. அரைப்பவுன் தங்கமாவது போட்டுவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவனுக்கு ஃபிப்டி கே. ஜி. தாஜ்மஹாலே கிடைச்சுடுத்தே. ஷார்ட& ஸ்வீட் ஸ்டோரி. நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 61. தங்கம் தேடினால் பொற்சிலையே அல்லவா கிடைத்து விட்டது..காத்து வாங்கப் போய் கவிதையே கிடைத்துவிட்டது...லக்கி ஃபெலொ...

  பதிலளிநீக்கு