About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, September 9, 2011

உண்மை சற்றே வெண்மை ! [சிறுகதை - நிறைவுப்பகுதி 2 of 2]









உண்மை சற்றே வெண்மை

[சிறுகதை - பகுதி 2 of 2]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.


===============================


ஏதோ சிகிச்சைக்காக மாட்டு வைத்தியரிடம் கூட்டிச்செல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சிகிச்சை முடிந்து வந்த அது பரம ஸாதுவாகி விட்டது. அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும் குடிகொண்டிருந்தது. இப்போதெல்லாம் அது இரவில் கத்துவதே இல்லை. 

மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். அந்தப் பசுமாட்டைப் பார்த்த எனக்கு, ஏதோ புரிந்தும் புரியாததுமாகவே இருந்து வந்தது.

சென்ற வாரம் என் அப்பாவைத்தேடி ஆறுமுகக்கோனார் என்பவர் வந்திருந்தார். அவருடன் ஒரு பெரிய பசுமாடும், கன்றுக்குட்டியும் வந்திருந்தன. “காராம் பசு” என்று பேசிக்கொண்டனர். உடம்பு பூராவும் ஆங்காங்கே நல்ல கருப்பு கலராகவும், இடைஇடையே திட்டுத்திட்டாக வெள்ளைக்கலராகவும், பார்க்கவே வெகு அழகாக, அவைகள் இரண்டும் தோற்றமளித்தன.










அவைகளைப்பார்த்த என் அப்பாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டன. அம்மாவிடம் போய் ஏதோ ஆலோசனை செய்தார். நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்தக்காராம்பசுவும் கன்றுக்குட்டியும் அப்பாவுக்கு சொந்தமாகி விடுமாம்.


“நாற்பதாயிரம் ரூபாயா?” மிகவும் விலை ஜாஸ்தியாக உள்ளதே, என்று என் அம்மா வியந்து போனாள்.

“ஒரு வேளைக்கு பத்து லிட்டருக்குக் குறையாமல் பால் கறக்குமாம்; நாலு அல்லது ஐந்து மாதங்களில் போட்ட பணத்தை எடுத்து விடலாம்; காராம் பசு என்றால் சும்மாவா? அதன் உடம்பில் உள்ள இரட்டைக்கலருக்கே மதிப்பு அதிகம் தான்” என்று அப்பா அம்மாவிடம் சொல்வது, என் காதிலும் விழுந்து தொலைத்தது.

இப்போது இந்த மாட்டை ஆசைப்பட்டு, இவ்வளவு பணம் போட்டு வாங்கிவிட்டால், திடீரென என் கல்யாணம் குதிர்ந்து வந்தால், பணத்திற்கு என்ன செய்வது என்றும் யோசித்தனர் என் பெற்றோர்கள். கல்யாணச் செலவுகளைத்தவிர, நகைநட்டு, பாத்திரம் பண்டமெல்லாம் எப்பவோ சேகரித்து வைத்து விட்டாள், மிகவும் கெட்டிக்காரியான என் தாய்.

என்னைப்போலவே தளதளவென்று இருக்கும் இந்தக் காராம்பசுவுக்கு உடம்பிலும், மடியிலும் வெவ்வேறு இரண்டு கலர்கள் இருப்பதால் மார்க்கெட்டில் மெளசு ஜாஸ்தியாக உள்ளது. 


ஆனால் அதே போல எனக்கும், என் உடம்பின் அதே பகுதியில், சற்றே ஒரு ரூபாய் நாணயமளவுக்கு, வெண்மையாக உள்ளது. அதுவே எனக்கு சுத்தமாக மார்க்கெட்டே இல்லாமல் செய்து, என் திருமணத்திற்கு இடையூறாக இருந்து வருகிறது.


இந்தக் காராம்பசு, தன் இயற்கை நிறத்தை ஆடை ஏதும் போட்டு மறைத்துக் கொள்ளாமல், உண்மையை உண்மையாக வெளிப்படுத்தும் பாக்யம் பெற்றுள்ளதால், அதற்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உள்ளது. 


நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து என் உடலையும், அந்தக்குறையையும் நான் மறைக்க வேண்டியுள்ளது. என்னுடைய பொதுவான, மேலெழுந்தவாரியான, உருவ அழகைப்பார்த்து, மிகுந்த ஆர்வமுடன் பெண் கேட்டு வந்து போகும், பிள்ளையைப்பெற்ற மகராசிகளிடம், மிகுந்த கூச்சத்துடன் இந்த ஒரு சிறிய விஷயத்தை உள்ளது உள்ளபடி உண்மையாக கூற வேண்டியுள்ள, சங்கடமான துர்பாக்கிய நிலையில் இன்று நாங்கள் உள்ளோம். 


உண்மையை இப்போது மறைத்துவிட்டு, பிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால், என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்.


”ஆனால் ஒன்று; என்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் இனி பிறந்து வரப்போவதில்லை;   ஏற்கனவே எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும்; அவனை நமக்கு அந்த பகவான் தான் சீக்கரமாக அடையாளம் காட்ட வேண்டும்”, என்று என் அம்மா தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, தானும் ஆறுதல் அடைந்து, என்னையும் ஆறுதல் படுத்துவதாக நினைத்து வருகிறாள். 


அந்தக்காளை இந்தக் காராம்பசுவை விரும்பி ஏற்றுக்கொள்ள பிராப்தம் வருவதற்குள், பட்டதாரியான எனக்கு, “முதிர்க்கன்னி” என்ற முதுகலைப் பட்டமளிப்பு விழா நடந்தாலும் நடந்து விடலாம்.


நான் என்ன செய்வது? காராம்பசுவாகப் பிறக்காமல், கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே!




-o-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும் 
-o-o-o-o-o-o-o-o-o-o-




குறையில்லாதவர் என்று இந்த உலகில் எவருமே இல்லை! 


இன்று நம்மிடையே காண இயலாத, சில குறைகள், 
நாளை திருமணத்திற்குப் பிறகு கூட திடீரென்று 
ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஏற்படலாம் அல்லவா!

எனவே ஒருவரின் கவர்ச்சியான வெளித் தோற்றத்தைவிட 
அவரின் அழகிய அன்பான மனதை நேசிப்போம்!!

-oOo-

52 comments:

  1. திருவோணத் திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆனால் ஒன்று; என்னைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் இனி பிறந்து வரப்போவதில்லை; ஏற்கனவே எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும்; அவனை நமக்கு அந்த பகவான் தான் சீக்கரமாக அடையாளம் காட்ட வேண்டும்//

    சீக்கிரம் காட்ட பிரார்த்திப்போம்!

    ReplyDelete
  3. உண்மையை இப்போது மறைத்துவிட்டு, பிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால், என் இல்வாழ்க்கை கருமையாகி விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்.


    காலம் மாறும் கவலையும் ஒருநாள் தீரும் நாள் வரட்டும்1

    ReplyDelete
  4. உண்மை சற்றே வெண்மை/

    வெள்ளை உள்ளம் கொண்ட தலைப்புக்கேற்ற அருமையான கதைக்கு பாராட்டுகள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அந்தப்பெண்ணுக்கேற்ற மணாளன் வாய்க்கவேணூம். கதைதான் ஆனாலும் நேரில் நடப்பதுபோல நிகழ்ச்சி கள் வர்ணித்த விதம் அழகு.

    ReplyDelete
  6. பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.

    ReplyDelete
  7. நல்ல கதை. சரியான முடிவு..
    பாராட்டுகள்,,

    ReplyDelete
  8. //நான் என்ன செய்வது? காராம்பசுவாகப் பிறக்காமல், கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே!//

    மனதை நெகிழ செய்து விட்டது.
    அந்த பெண்ணின் புற அழகை பார்க்காமல் மன அழகை பார்த்து சீக்கிரம் மாப்பிள்ளை வர வேண்டும் .

    நல்ல கதை..

    ReplyDelete
  9. Your story took me decades back to my village in Tanjore District. We had something like 18 heads of cattle, and my elder sister named the newly born calf as "Gundamma" - it was a bit stout. Also, I heard my father occasionally saying, "the one who is going to marry is not going to be born now, already born and living somewhere; the time will come when he would show up". Wish I could go back to those days, when our needs were little, but we had a lot of happiness!

    ReplyDelete
  10. குறைகளை மட்டுமே பார்த்துப் பழகி விட்ட மனித மனங்களுக்கு இந்தக் கன்னிக் காராம்பசுவின் நிறை தெரியாமல் போய் விட்டது.
    மனம் வெண்மையாக இருக்கக் கூடிய மணாளன் வருவான்.நெகிழ வைக்கும் கதை

    ReplyDelete
  11. அழகாக முடித்து படிப்பவர்களை ஃபீலிங்கில் ஆழ்த்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  12. நெகிழ்ச்சியான மனதை கனக்க வைத்த முடிவு .கதையாய் இருந்தாலும் நிஜத்தில் இன்னும் சில இடங்களில் நடக்கும் விஷயம் தான் .

    ReplyDelete
  13. நிச்சயம் அந்த பெண்ணுக்கு ஏற்ற மணவாளன் ஒருநாள் வருவான்.
    நல்ல கதை.

    மனதை புரிந்து கொண்டவர்கள் என்றும் சந்தோஷமாக இருப்பர்.

    ReplyDelete
  14. கதையைப் போல் இல்லாமல்
    நிஜமான ஒரு பெண்ணின் உணர்வினைச்
    சொல்லிச் செல்வதுபோல இருந்தது
    நீங்கள் சொல்லிச் செல்வதுபோல ஜாடி செய்கின்ற அன்றே
    மூடியோடுதான் இந்த மாயக் குயவன் செய்திருப்பான்
    என்ன ஜாடியையும் மூடியையும் பிரித்து எங்கெங்கோ
    போட்டுவிட்டு நம்மை தேடி அலையவிடுகிறான்
    அதில் அவனுக்கு ஒரு சந்தோஷம்
    தரமான படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அன்பின் வைகோ - இப்பகுதியில் மணமுடித்து மகிழ்வுடன் கதையை முடிப்பீர்கள் என நினைத்தேன். ம்ம்ம்ம்ம்ம் - விரைவினில் நேரம் கூடி வர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. அருமையான கதை.
    மனசு நெகிழ்கிறது.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  17. உணர்வுகளின் அழுத்தமான பதிவு

    ReplyDelete
  18. //நான் என்ன செய்வது? காராம்பசுவாகப் பிறக்காமல், கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே!//

    உணர்வு பூர்வமாய் சொல்லப்பட்ட வார்த்தைகள்....

    மிக நல்ல விஷயத்தினை சொல்லும் சிறுகதை....

    ReplyDelete
  19. எப்படியோ தொடங்கி எதிர்பாராத முடிவைக் கொடுத்திருக்கிறீர்கள்.
    சங்கடப்படுத்திய கதை. எத்தனை குறைகளைக் கிண்டல் செய்திருக்கிறோம் என்று நினைக்க வைத்த கதை.

    ReplyDelete
  20. இப்படி எத்தனையோ பேரிடம் எத்தனையோ கதைகள்...காலம்தான் கண் திறக்கவேண்டும்.

    மனதைத் தொட்டது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. கதையின் முடிவு மனதை தொட்டது,

    ReplyDelete
  22. வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    //கதையின் முடிவு மனதை தொட்டது,//

    மிகப்பிரபல எழுத்தாளராகிய தங்களின் அன்பான, அபூர்வ வருகையும், அருமையான கருத்தும், எனக்கும் மனதைத்தொட்டு, உற்சாகம் அளிப்பதாகவே உள்ளது, மேடம். மனமார்ந்த நன்றிகள்.vgk

    ReplyDelete
  23. இந்த சிறுகதையின் நிறைவுப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறியுள்ள என் அருமை நண்பர்களான

    திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள்
    திருமதி.லக்ஷ்மி அவர்கள்
    திருமதி.RAMVI அவர்கள்
    திருமதி.ராஜி அவர்கள்
    திருமதி.tirumathi bs sridhar அவர்கள்
    திருமதி.Angelin அவர்கள்
    திருமதி.கோவை2தில்லி அவ்ர்கள்

    திரு.Dr.P.Kandaswamy Phd அவர்கள்
    திரு.வேடந்தாங்கல்-கருன் அவர்கள்
    திரு.என் இராஜபாட்டை ராஜா அவர்கள்
    திரு. தமிழ்வாசி-பிரகாஷ் அவர்கள்
    திரு. சந்திரமெளலி சார் அவர்கள்
    திரு. ரமணி சார் அவர்கள்
    திரு. சீனா ஐயா அவர்கள்
    திரு. ரத்னவேல் ஐயா அவர்கள்
    திரு. ரிஷபன் சார் அவர்கள்
    திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்
    திரு. அப்பாத்துரை சார் அவர்கள்
    திரு. வெ.பேச்சு அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  24. முதல் முறை வருகிறேன். மகிழ்கிறேன்.
    நெகிழ்ச்சியான மனதை கனக்க வைத்த கதை. நிஜத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றும் நிகழும் நிகழ்வே இது. தரமான படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. சில சமயம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது. ஆயினும் நிச்சயம் ஒருநாள் வழி பிறக்கும் என்று நம்புவோம்

    ReplyDelete
  26. நெஞ்சி் ஏதோ உறுத்தல்
    கதையின் முடிவால் இருந்து
    கொண்டே உள்ளது ஐயா!
    எனக்குத் தெரிந்தே சிலபேர்...
    கதைதானே என்று
    எண்ணத் தோன்றவில்லை
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. ஆதிரா said...
    //முதல் முறை வருகிறேன். மகிழ்கிறேன்.

    நெகிழ்ச்சியான மனதை கனக்க வைத்த கதை. நிஜத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றும் நிகழும் நிகழ்வே இது. தரமான படைப்பு வாழ்த்துக்கள்//

    WELCOME TO YOU, MADAM!

    தங்களின் முதல் வருகையும்,
    முத்தான கருத்துக்களும்,
    அன்பான பாராட்டுக்களும்
    என்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக உணர்கிறேன்.

    கதைகள் வாசிக்க ஆர்வமும், நேர அவகாசமுமிருந்தால் அடிக்கடி வருகை தாருங்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  28. ஸ்ரீராம். said...
    //சில சமயம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்துகிறது. ஆயினும் நிச்சயம் ஒருநாள் வழி பிறக்கும் என்று நம்புவோம்//

    மிக்க நன்றி,
    ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்!
    vgk

    ReplyDelete
  29. நல்ல விழிப்புணர்வுச் சிறுகதை.. அருமை சார்..:)

    ReplyDelete
  30. புலவர் சா இராமாநுசம் said...
    //நெஞ்சி்ல் ஏதோ உறுத்தல்
    கதையின் முடிவால் இருந்து
    கொண்டே உள்ளது ஐயா!
    எனக்குத் தெரிந்தே சிலபேர்...
    கதைதானே என்று எண்ணத் தோன்றவில்லை. நன்றி!

    புலவர் சா இராமாநுசம்//

    ஆம் ஐயா! இந்தக் கதை என் மனதில் உருவாகக் காரணமே 2006 ஆம் ஆண்டு இந்தக்கதைக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத, முற்றிலும் வேறுபட்டதொரு சம்பவத்தால் எனக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய அனுபவக் கதை தான்! வருந்துவதைத் தவிர நாம் எதுவும் செய்ய முடிவதில்லையே!

    வருகைக்கு மிக்க நன்றி! vgk

    ReplyDelete
  31. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    //நல்ல விழிப்புணர்வுச் சிறுகதை.. அருமை சார்..:)//

    பிரபல எழுத்தாளராகிய தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.
    vgk

    ReplyDelete
  32. அழகிய அன்பான மனதை நேசிப்போம்!!// உண்மைதான் மனம்தான் எப்போதும் மாறாத தன்மையுடன் இருக்கும். கதையின் உட்கருத்து நல்ல விசயம்.

    ReplyDelete
  33. சாகம்பரி said...
    //அழகிய அன்பான மனதை நேசிப்போம்!!// உண்மைதான் மனம்தான் எப்போதும் மாறாத தன்மையுடன் இருக்கும். கதையின் உட்கருத்து நல்ல விசயம்.//

    மனநலம் காத்திட, மனித நேயம் மலந்திட, குடும்ப உறவுகளில் மகிழ்ச்சிகள் பொங்கிட வெகு அருமையான கட்டுரைகள் எழுதிவரும் மிகப்பிரபலமான எழுத்தாளராகிய தங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்துள்ளது.

    மிக்க நன்றி, மேடம். vgk

    ReplyDelete
  34. இந்தக் கதையை நான் வாசிக்கவில்லை. முன்னைய தொடர் சிறு கதைக்கு நிறைய தரம் கருத்துகள் இட்டேன் முன்பு. ....வாழ்த்துகள் ஐயா!
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  35. மிகச்சரியே
    உண்மை சற்றே வெண்மை

    ReplyDelete
  36. kavithai said...
    //இந்தக் கதையை நான் வாசிக்கவில்லை. முன்னைய தொடர் சிறு கதைக்கு நிறைய தரம் கருத்துகள் இட்டேன் முன்பு. ....வாழ்த்துகள் ஐயா!
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com//

    மிக்க நன்றி, கவிதை - வேதா. இலங்காதிலகம் அவர்களே!

    தங்களின் பின்னூட்டங்களை நானும் பலமுறை படித்து மகிழ்ந்துள்ளேன்.

    விருப்பமும், நேர அவகாசமும் இருந்தால் தொடர்ந்து அடிக்கடி வாருங்கள். WELCOME !

    ReplyDelete
  37. Jaleela Kamal said...
    //மிகச்சரியே
    உண்மை சற்றே வெண்மை//

    தங்களின் அன்பான வருகைக்கும், ’மிகச்சரி’யான கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  38. சார்..அந்த பெண்ணிற்கு சீக்கிரம் கல்யாணம் செய்து விடுங்கள்..அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது..சாரி..உங்கள் கீ போர்டில் இருக்கிறது...



    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  39. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
    //சார்..அந்த பெண்ணிற்கு சீக்கிரம் கல்யாணம் செய்து விடுங்கள்..அது உங்கள் கைகளில் தான் இருக்கிறது..சாரி..உங்கள் கீ போர்டில் இருக்கிறது...

    அன்புடன், ஆர்.ஆர்.ஆர்.//

    எனக்கும் அந்த ஆசை தான். நல்ல பயலுவலாகக் கிடைக்க மாட்டேன்கிறாங்க, சார்.

    பார்த்து முடித்து விடுவோம்.

    அதற்கு முன்பு திருமண அழைப்பிதழ் அடித்து எல்லோரையும் அழைக்கணும் இல்லையா!

    அது பற்றி ”அழைப்பு” என்ற தலைப்பில் அடுத்த கதையொன்று வெளியிட உள்ளேன்.

    காணத்தவறாதீர்கள்!

    கண்டாலும் படிக்கத்தவறாதீர்கள்!

    படித்தாலும் பின்னூட்டமிடத் தவறாதீர்கள்!

    வோட் அளிப்பது மட்டும் உங்கள் இஷ்டத்திற்கே விட்டு விடுகிறேன்.

    வோட்டுக்கிடத்தால் என்ன MLA, MP பதவிகளா உடனே கிடைத்துவிடப் போகிறது! என்ற சவடால் தான்.

    மூன்றாம் பிறைச் சந்திரன் போன்ற அபூர்வ வருகைக்கும், அழகான Positive ஆன கருத்துக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள். vgk

    ReplyDelete
  40. அன்பு வணக்கங்கள் சார்...

    உங்க தளம் பார்த்தேன்...

    அருமையான கதை உண்மை சற்றே வெண்மை...

    அது சொன்ன கருத்து நச்....

    பசு என்றால் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என ஆசைப்படுவது போல....

    கன்னிப்பெண்ணும் கல்யாணத்துக்கு தகுதியாக மாப்பிள்ளை வீட்டார் விரும்புவது அழகும் அடக்கமும்....

    அழகு புறத்தில் மட்டும் இருந்தால் போதுமா?

    பார்த்ததும் தெரிவது புற அழகு... ஆனால் பாசத்துடன் வெளிபடுவது அக அழகு...

    என்னவோ துர்ப்பாக்கியம் இதை எல்லாருமே மிஸ் பண்ணிடறாங்க....

    கன்னிப்பெண்ணின் மனதில் என்னென்ன வேதனைகள் ஏற்படும் ஏக்கங்கள் ஏற்படும் என்பதை நாசுக்காக மிக அருமையாக பசுவின் நிலை உரைத்து சொன்னவிதம் மிக மிக அருமை சார்....

    எல்லா பெண்களுமே இந்த கட்டம் தாண்டி வருவதால் அந்த தாக்கம் கண்டிப்பாக படிக்கும்போதே உணரமுடிகிறது....

    பெண்கள் இப்படி வேணும் அப்படி வேணும்னு மாப்பிள்ளை வீட்டார் ஆசைப்படுவது போல பெண் வீட்டாருக்கும் இப்படிப்பட்ட விருப்பங்கள் இருக்குமா? அப்படி இருந்து மாப்பிள்ளை அதே போல் கிடைக்க எத்தனை தட்சணை கொடுக்க வேண்டுமோ?

    ஹூம் ஒரு வெண்மை புள்ளி வாழ்க்கையை நிர்ணயிக்கிறதுன்னா அப்ப மாப்பிள்ளைக்கு அப்படி இருந்து மறைத்துவிட்டால்? பெண் பொறுத்து போகிறாளே... அது?

    நேர்மையுடன் உண்மை சொல்வதால் தான் இன்னமும் கல்யாணம் ஆகாமல் முதிர்கன்னி ஆகிவிடும் நிலையில் இருப்பதுன்னு அழகா முடிச்சிருக்கீங்க சார் கதையை...

    இந்த கதையில் மிக அருமையான மெசெஜ் கொடுத்திருக்கீங்க...

    ரசித்து படித்தேன்.. நல்ல கருத்து சொல்லும் கதைகள் படிக்க தந்தமைக்கு அன்பு நன்றிகள் சார்...

    ReplyDelete
  41. மஞ்சுபாஷிணி said...
    //அன்பு வணக்கங்கள் சார்...//

    தங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். WELCOME Madam.

    //உங்க தளம் பார்த்தேன்...

    அருமையான கதை உண்மை சற்றே வெண்மை...

    அது சொன்ன கருத்து நச்....

    பசு என்றால் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும் என ஆசைப்படுவது போல....

    கன்னிப்பெண்ணும் கல்யாணத்துக்கு தகுதியாக மாப்பிள்ளை வீட்டார் விரும்புவது அழகும் அடக்கமும்....

    அழகு புறத்தில் மட்டும் இருந்தால் போதுமா?

    பார்த்ததும் தெரிவது புற அழகு... ஆனால் பாசத்துடன் வெளிபடுவது அக அழகு...

    என்னவோ துர்ப்பாக்கியம் இதை எல்லாருமே மிஸ் பண்ணிடறாங்க....//

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்!

    //கன்னிப்பெண்ணின் மனதில் என்னென்ன வேதனைகள் ஏற்படும் ஏக்கங்கள் ஏற்படும் என்பதை நாசுக்காக மிக அருமையாக பசுவின் நிலை உரைத்து சொன்னவிதம் மிக மிக அருமை சார்....

    எல்லா பெண்களுமே இந்த கட்டம் தாண்டி வருவதால் அந்த தாக்கம் கண்டிப்பாக படிக்கும்போதே உணரமுடிகிறது....//

    மிக்க நன்றி, மேடம்.

    //பெண்கள் இப்படி வேணும் அப்படி வேணும்னு மாப்பிள்ளை வீட்டார் ஆசைப்படுவது போல பெண் வீட்டாருக்கும் இப்படிப்பட்ட விருப்பங்கள் இருக்குமா?//

    கண்டிப்பாக இருக்கும். இப்போது காலம் மிகவும் மாறி வருகிறது. திருமணத்திற்கு பெண் கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது.

    பெண்களும் நிறைய படிக்கிறார்கள். நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் போட ஆரம்பித்து விட்டர்கள். ஆனால் இதில் எந்தத்தவறும் இல்லை. வரவேற்க வேண்டியது தான். ஆணுக்கொரு காலம் போல பெண்ணுக்கு ஒரு காலம் இப்போது மலர்ந்துள்ளது.

    //அப்படி இருந்து மாப்பிள்ளை அதே போல் கிடைக்க எத்தனை தட்சணை கொடுக்க வேண்டுமோ?//

    ஒருசிலர் தான் மாறாமல் அடம் பிடிக்கிறார்கள். பெரும்பாலும் மாறி வருகிறார்கள். பெண் கிடைத்தால் போதும், அதுவும் சம்பாதிக்கும் பெண் கிடைத்தால் போதும், வேறு எதுவும் எதிர்பார்க்கவில்லை என்பது போல கூறிவருவதாகவே தெரிகிறது.

    மணமகள்/மணமகன் தேவை விளம்பரங்களை கவனித்தாலே தங்களுக்கு இந்த மன் மாற்றம் நன்றாகத் தெரியும்.

    ’மணமகள் தேவை’ என்ற விளம்பரங்களே ‘மங்கையர் மலர்’ போன்ற புத்தகங்களில் பக்கம் பக்கமாக வருகின்றன.

    ’மணமகன் தேவை’ என்ற விளம்பரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. மேலே உள்ளவை 100 என்றால் இவை இப்போது வெறும் 20 மட்டுமே.

    அந்த அளவுக்கு மணமகளுக்கு Demand அதிகமாகி விட்டது. இது ஒரு நல்ல சூழ்நிலை. பெண்ணைப் பெற்றவர்கள் புராண காலம் போல, பிள்ளையைப் பெற்றவர்களிடம், வரதக்ஷணை கேட்கும் சூழ்நிலை வெகு விரைவில் வந்துவிடும் என்று எனக்குத் தோன்றுகிறது.

    //ஹூம் ஒரு வெண்மை புள்ளி வாழ்க்கையை நிர்ணயிக்கிறதுன்னா அப்ப மாப்பிள்ளைக்கு அப்படி இருந்து மறைத்துவிட்டால்? பெண் பொறுத்து போகிறாளே... அது?//

    பெண் = பொறுமை, என்பதாலோ!

    //நேர்மையுடன் உண்மை சொல்வதால் தான் இன்னமும் கல்யாணம் ஆகாமல் முதிர்கன்னி ஆகிவிடும் நிலையில் இருப்பதுன்னு அழகா முடிச்சிருக்கீங்க சார் கதையை...

    இந்த கதையில் மிக அருமையான மெசெஜ் கொடுத்திருக்கீங்க...

    ரசித்து படித்தேன்.. நல்ல கருத்து சொல்லும் கதைகள் படிக்க தந்தமைக்கு அன்பு நன்றிகள் சார்...//

    ஒரு பெண்ணான, தங்களின் விரிவான பின்னூட்டமே என் இந்தச் சிறுகதைக்கு மாபெரும் வரவேற்பையும், வெற்றியையும் அளித்துள்ளதாக எண்ணி மகிழ்கிறேன்.

    அன்புடன் vgk

    [என் மனதில் இந்தக்கதை உருவாவதற்கு, பின்னனியாக வேறொரு முற்றிலும் வித்யாசமான சம்பவம், ஒரு பெண்மணி மூலம் எனக்கு உணர்த்தப்பட்டது.ஆனால் இந்த என் கற்பனைக் கதைக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த நேரடி சம்பந்தமும் கிடையாது. அது ஒரு பெரிய தனிக்கதை]

    ReplyDelete
  42. நெகிழவைக்கிறது.

    ReplyDelete
  43. பாவமுதான் முதிர் கன்னிகளின் நிலை

    ReplyDelete
  44. தானே தன் தலையில் மண்ணைப் போட்டுக் கொள்ளும் பெண்களும் உண்டு.

    இந்தக் கதையின் கதாநாயகி போல் பாவப்பட்ட பெண்களும் உண்டு.

    முதிர் கன்னிகளின் நிலைமையை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  45. ஓ ஓ நிக்காஹ் கட்டாத கொமரு கதயா வெளங்கிகிட்டன்

    ReplyDelete
  46. காராம் பசுவுக்கு உடம்பிலும் மடியிலும் வேறு வேறு நிறம் இருப்பதால் நல்ல விலைக்கு போகும். எனக்கு அதே நிறத்தால் தான் பிரச்சினையே. என்ன ஒரு உருக்கமான வரிகள்.

    ReplyDelete
  47. அருமை வாத்யாரே....இந்தக் கதையை என்னால் என்றும் மறக்க முடியுமா???? உன்னதக் கதை அனுபவத்தையும் அதைவிட உன்னதமான மனிதரையும் எனக்கு அறிமுகம் செய்தது இந்தக் கதைதானே...

    ReplyDelete
  48. படங்களும் கதையும் மிக அழகு! பாராட்டுகள்!

    ReplyDelete