About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, October 20, 2011

மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 1 of 4]









மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ பகுதி 1 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-



"என்னங்க என்னை இப்படி மாத்தி மாத்தி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க! சீக்கரம் எழுந்துருங்க” அனு முனகினாள்.

அவள் சொல்வது எதையும் மனோ காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

“ப்ளீஸ் அனு, நீ டெலிவெரிக்குப் புறப்பட்டுப் போய் விட்டால் எனக்கு எவ்வளவு போர் அடிக்கும் தெரியுமா; ஐ வில் மிஸ் யூ ய லாட்; இப்போ என்னைத் தடுக்காதே அனு”

“என்னங்க நீங்க! மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை ஆலிங்கனம் செய்து கொண்டது போல, புள்ளத்தாச்சியான என்னை இப்படிக்கட்டிக்கிட்டு விடமாட்டேன்கிறீங்க, எனக்கு ரொம்ப சிரமமா இருக்குதுங்க”

”கொஞ்சநேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அனு” மோப்பநாய் போல அவளின் மணிவயிற்றின் மேல் தன் முகத்தை வைத்து ஏதோ முகர்ந்தவாறு மெய்மறந்து அமர்ந்திருந்தான் மனோ.

அவளும் தன் அன்புக் கணவருடன் தனக்கு வரவிருக்கும் தற்காலிகப் பிரிவை எண்ணி, பொறுமையாக, அவருக்கு ஆறுதலாக தன் வலது கையால். அவர் தலையைக்கோதி விட்டுக் கொண்டிருந்தாள். தன் சரீர சிரமத்தால் தன் இடது கையைக் கட்டிலில் ஊன்றியபடி சற்றே சரிந்து அமர்ந்திருந்தாள்.

“சீக்கரமா எழுந்திருங்க, எனக்கு கொஞ்சம்  அப்படியே காலை நீட்டி படுத்துக்கணும் போல இருக்குதுங்க” என்றாள் அனு.

“அடடா, அப்படியா, சரி ... சரி, வா .... வா,  அப்போ நாம படுத்துக்கலாம்” என்றான்.

“சீ .. போங்க! உங்களுக்கு வேறு வேலையே இல்லை. எப்போப் பார்த்தாலும் நேரம் காலம் தெரியாம விளையாட்டுத்தான்” என்று சிணுங்கினாள்.

மனோ அவளை விட்டு நகருவதாகவே தெரியவில்லை. அன்பினால் அவன் அவளைக் கட்டிப்போட்டுள்ளான் அல்லவா!

”உள்ளே இந்தக்குழந்தை படுத்துது! வெளியே நீங்க இப்படி படுத்துறீங்க!! உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு, நான் தவியாத் தவிக்கிறேன், பாருங்க;


பேசாம நீங்க உங்க மனசை மாத்திக்கிட்டு கொஞ்சமாவது பக்தி செலுத்துங்க; கோயிலுக்குப் போயிட்டு வாங்க இங்கே பக்கத்திலே நிறைய பாகவதாள் எல்லாம் வந்து ஜேஜேன்னு திவ்ய நாம பஜனை நடக்குது. அங்கு போயிட்டு வாங்க;  பஜனை செய்வதைக் கண்ணால் பார்த்தாலும், பக்திப்பாடல்களைக் காதால் கேட்டாலும் புண்ணியம் உண்டுங்க; 


எனக்கு நல்லபடியா ’குட்டி மனோ’ பிறக்கணும்னு உம்மாச்சியை வேண்டிகிட்டு வாங்க” அன்புடன் ஆலோசனை சொன்னாள் அனு. 

“அதெல்லாம் முடியாது, எனக்கு குட்டிமனோ வேண்டாம்; ’அனுக்குட்டி’ தான் பிறக்கணும்;  மேலும் உன்னைவிட்டு ஒரு நிமிஷம் கூட என்னால் நகரவே முடியாது, அனு; 


அங்கேயெல்லாம் போய் பஜனை செய்தால் எனக்கு சரிப்பட்டு வராது; வேண்டுமானால் நாம் இருவரும் இங்கேயே ................ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தான்.


இதைக்கேட்டதும் அனு அவனைப் பார்த்து கோபமாக முறைக்க ஆரம்பித்தாள். 


”பூஜை ரூம் நிறைய பக்திப் பாடல், பஜனைப்பாடல் புத்தகங்களாகச் சேர்த்து வைத்திருக்கிறாய் அல்லவா, அதை ஏதாவது எடுத்து நீ பாடினால் நானும் உன்னுடன் கூடவே பாடுகிறேன் என்று சொல்லவந்தேன்” என்று சொல்லி சமாளித்தான்.


உள்ளூரிலேயே, அவர்கள் வாழும் அதே வீட்டிலேயே, கீழ் போர்ஷனில் அனுவின் அம்மா இருப்பதால், உதவி தேவைப்பட்டால் கடைசி நேரத்தில் அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் மனோ. 


அவர்கள் அனுவுக்கு ஒத்தாசையாக இருக்கிறேன் என்று சொல்லி இங்கு  முன்கூட்டியே வந்து உட்கார்ந்து விட்டால், இவர்களின் பிரைவஸிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமே என்ற பயம் மனோவுக்கு.


சற்று நேரத்தில் தன் வயிற்றை தன் இரண்டு கைகளாலும் தடவி விட்டுக்கொண்டு சற்றே நெளிய ஆரம்பித்தாள், அனு.

“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா! ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க” அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள். 




அனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ. 


சட்டெனத் துள்ளி எழுந்தான், மனோ.


தொடரும்


[ இந்தக் கதையின் அடுத்தடுத்த பகுதிகள் முறையே 22.10.2011 சனிக்கிழமை + 24.10.2011 திங்கட்கிழமை வெளியிடப்படும். இறுதி நிறைவுப்பகுதி 26.10.2011 புதன்கிழமை தீபாவளியன்று வெளியிடப்படும்.  ]


அனைவருக்கும் இனிய 
தீபாவளி நல் வாழ்த்துக்கள். 

என்றும் அன்புடன் தங்கள் 
வை. கோபாலகிருஷ்ணன்

39 comments:

  1. ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. படமும் பதிவும் அருமை
    தேதிவாரியாக அடுத்த பதிவை குறிப்பிட்டிருந்ததும்
    நான்கில் ஒன்று என குறிப்பிட்டிருப்பதும்
    எவ்வளவு திட்டமிட்டுச் செய்கிறீர்கள் என்பதை
    புரிந்து கொள்ள முடிகிறது
    தொடர்ந்து வருகிறோம்.வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  3. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

    ReplyDelete
  4. கோபுசாரின் ஒரு அக்மார்க் கதை தொடருகிறேன்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் இனிய
    தீபாவளி நல் வாழ்த்துக்கள்....

    "மனசுக்குள் மத்தாப்பூ-க்களுடன் தீபாவவளி பரிசாக அருமையான கதை.

    ReplyDelete
  6. [ இந்தக் கதையின் அடுத்தடுத்த பகுதிகள் முறையே 22.10.2011 சனிக்கிழமை + 24.10.2011 திங்கட்கிழமை வெளியிடப்படும். இறுதி நிறைவுப்பகுதி 26.10.2011 புதன்கிழமை தீபாவளியன்று வெளியிடப்படும். ]


    திட்டமிட்ட அருமையான தீபாவளிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. உள்ளூரிலேயே, அவர்கள் வாழும் அதே வீட்டிலேயே, கீழ் போர்ஷனில் அனுவின் அம்மா இருப்பதால், உதவி தேவைப்பட்டால் கடைசி நேரத்தில் அழைத்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான் மனோ.

    மிக சௌகரியம்....

    ReplyDelete
  8. கதை எழுதிய தாங்களே படமும் வரைந்தது சிறப்பாக இருக்கிறது.
    கைவண்ணத்திற்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. ரொமான்டிக்காக இருந்தது ஆனால் அடுத்தடுத்த பாகங்களில் என்ன நடக்குமோ என்று அச்சமாக இருக்கிறது...

    ReplyDelete
  10. எதிர்ப்பார்ப்பை அதிகரித்து உள்ளீர்கள்

    ReplyDelete
  11. ஹய்யோ!ரொமான்ஸ் பிச்சிகிட்டு போகுதே!.இது நிஜமா அல்லது யாராவது கனவு கானுறாங்களான்னு வேற சந்தேகமா இருக்கு சார்.

    ReplyDelete
  12. அடுத்து என்னன்னு எதிர்பார்க்க வச்சுட்டீங்க.

    ReplyDelete
  13. சுவாரஸ்யம் ஆவலுடன் அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

    ReplyDelete
  14. சுவாரசியமான ஆரம்பம்.நான்கு பகுதிகளையும் அழகாக திட்டமிட்டு தீபாவளி ரிலீஸ் செய்கிரீர்கள்.
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. கருத்திட்டு விட்டேன்!! :-))

    ReplyDelete
  16. ஆவலுடன் தொடர்கிறோம் அடுத்த பகுதிக்காய்

    ReplyDelete
  17. சற்று வித்தியாசமான வரிகளுடன் கதை.
    தொடர்கிறேன்.

    ReplyDelete
  18. சுவாரஸ்யம்.அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

    ReplyDelete
  19. நல்ல ஆரம்பம் மேலே வாசிக்க ஆவலுடன் காத்திருக்கோம்

    ReplyDelete
  20. நன்றாக இருக்கிறது இந்தத் தொடர்கதை. அடுத்த பகுதிகள் வரக் காத்திருக்கிறேன்.

    உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. ஆகா மிக அழகாக இரு பாசப் பறவைகளின் உணர்வுகளை
    அள்ளித் தெளித்து ஆரம்பித்த கதை அருமை !...ஆனாலும்
    தொடரும் என்று துண்டித்து விட்டீர்களே ...அவசியம் அடுத்த
    தொடரைக் காணக் கண்கள் காத்திருக்கும் .மனசுக்குள் பூத்த
    இந்த மத்தாப்பூவின் வாசனை குறையாமல் வருகின்ற தீபாவளிக்கு
    இன்றே என் வாழ்த்துக்களும் இங்கு அனைவருக்கும் உரித்தாகட்டும் .
    மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  22. ஆவலுடன் எதிர்ப் பார்க்க வைத்து விட்டீர்கள்.

    குட்டி அனுவா குட்டி மனோவா
    அல்லது இரண்டுமேவா?

    மனசுக்குள் மத்தாப்பூவை தீபாவளிக்கு ஊருக்கு போய் வந்து படிக்க வேண்டும்.

    தீபாவளி வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

    ReplyDelete
  23. இயல்பாக கதையை சொல்லிச்
    செல்வதிலேதான் தங்களின் கதைகளின்
    வெற்றி அடங்கி யுள்ளது வை கோ
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. அனுவிற்கு என்ன ஆனது? கதையினை தொடர்கிறேன். தலைப்பு நல்ல விசயத்தை பற்றிதான் இருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  25. இருபறவைகள் மலைமுழுவதும் இங்கே பறந்ததோ
    என்பதுபோல,
    பாசமலர்களின் உணர்வுகளை நகர்கிறது கதை...

    ReplyDelete
  26. தீபாவளிக்கு மத்தாப்பூ வழங்கி அசத்தரீங்க :))

    ReplyDelete
  27. அடுத்து என்ன? வழக்கம் போல சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்

    ReplyDelete
  28. சற்றே விறுவிறுப்பான என் இந்த சிறுகதைக்கு, அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி பாராட்டி என்னை மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைத்துத் தோழர்களுக்கும் மற்றும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்,
    vgk

    ReplyDelete
  29. படத்தில் ஓவியர் ஜெயராஜின் தாக்கம் தெரிகிறது
    fine

    ReplyDelete
    Replies
    1. Pattabi RamanDecember 22, 2012 11:39 PM

      வாருங்கள் திரு பட்டாபிராமன் சார், வணக்கம்.

      //படத்தில் ஓவியர் ஜெயராஜின் தாக்கம் தெரிகிறது //

      மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். எதைப்பார்த்து நான் இதை வரைந்தேனோ அது ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களால் வரையப்பட்டதாகத்தான் இருக்கும் என நானும் நினைத்தேன்.
      ஆனால் அதை என்னால் உறுதிசெய்ய முடியவில்லை.

      பிறகு வேறொரு பதிவர் எனக்கு தன் மெயில் மூலம் இதையே தெரிவித்திருந்தார்கள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      Delete
  30. படிட்கறவஙுக எல்லாருடைய மனதிலும் மத்தாப்பு வெளிச்சம். ஆரம்பமே உமர்க்களமா இருக்கு

    ReplyDelete
  31. //பூந்தளிர் May 19, 2015 at 10:21 AM

    வாங்கோ சிவகாமி, வணக்கம்.

    //படிக்கறவங்க எல்லாருடைய மனதிலும் மத்தாப்பு வெளிச்சம். ஆரம்பமே அமர்க்களமா இருக்கு//

    ஆரம்பம் எப்போதுமே எதிலுமே மிகவும் அமர்க்களமாகத்தான் இருக்கும் :)))))

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  32. வழக்கம் போல் யதார்த்த எழுத்து. அதுதானே உங்கள் வெற்றியும் கூட.

    ஆனால் இந்தக் கதையில் கொஞ்சம் குறும்பும் சேர்த்து கொடுத்திருக்கிறீர்கள். ம்ம்ம்ம்ம்ம் அருமை.

    ReplyDelete
  33. புள்ளதாச்சி காரவுகள இப்பூடில்லா தொல்ல படுத்தாங்காட்டியும். படம் நீங் வரஞ்சீங்களா நல்லாகீது.

    ReplyDelete
    Replies
    1. mru October 14, 2015 at 9:46 AM

      //புள்ளதாச்சி காரவுகள இப்பூடில்லா தொல்ல படுத்தாங்காட்டியும். படம் நீங் வரஞ்சீங்களா நல்லாகீது.//

      :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி ! :)

      Delete
  34. கணவன் மனைவி தனிமையில் அந்நியோன்யமாக அதுவும் இரவில் பேசும் பேச்சுக்களை எல்லாம் ஒட்டுக்கேட்டு இதை எழுதினீங்களா. அவங்க ப்ரைவஸி போயிடுமே.

    ReplyDelete
  35. a writer should feel more என்பார்கள்...but you feel more and more....அதனாலதான் இப்புடி எல்லாம் பின்றீங்க...

    ReplyDelete
  36. கதையின் துவக்கத்தைப் பார்த்தால் குறும்பு கொப்பளிக்கிறது! போகப்போக எப்படியோ? பொறுக்க முடியல சார்!

    ReplyDelete