About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, July 11, 2013

23] சிக்கனத் திருமணம்.


2
ஸ்ரீராமஜயம்




பணம் கொழித்தவர்களும் கூட, தடபுடல் பண்ணாமல் சிக்கனமாகவே திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது. 

ஆகையால் கச்சேரி விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்தப் பணத்தைக்கொண்டு, வசதியில்லாத ஏழைப்பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும்.

நல்லது, நல்லது என்றால் எது நல்லது? அன்பு தான் மிகவும் நல்லது. “அன்பே சிவம்” என்கிறோம். சிவம் என்றாலும் ஒன்றுதான் ‘சுபம்’ என்றால் ஒன்றுதான். சுபம் என்றால் நன்மை. நல்லவைகளில் உயர்ந்த நன்மை எது? அன்பு தானே? 

கட்டுப்பாடு பண்ணுவதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதிலும் ஒரு லிமிட் வேண்டும். ரொம்பவும் கட்டுப்படுத்தினாலே, ரொம்பவும் அடித்துக்கொண்டு ஓடத் தோன்றும்.



oooooOooooo


அற்புத நிகழ்வுகள் 

வில்வ இலைகளை 
வைத்து விட்டுப்போனது யார்?


மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.

[   பகுதி-1 படிக்க:  http://gopu1949.blogspot.in/2013/07/21.html                                    

[  பகுதி-2  படிக்க:   http://gopu1949.blogspot.in/2013/07/22.html  ]                           




பகுதி 3  of  9

திடீரென வாசல்புறத்திலிருந்து, கையில் ஒரு பெரிய குடலையை [நீண்ட கூடை] தலையில் சுமந்து வந்தான் ஸ்ரீ மடத்தைச் சேர்ந்த பக்தன் ஒருவன்.




அவன் முகத்தில் ஏக சந்தோஷம். குடலையைக் கூடத்தில் இறக்கினான். என்ன ஆச்சர்யம் .... அந்தக்குடலை நிறைய வில்வ பத்திரம்!    அதைப்பார்த்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி. அதே நேரம், கொல்லைப்புறத்தில் தியானம் கலைந்து கீழே இறங்கினார் ஸ்வாமிகள்.

காரியஸ்தரைப் பார்த்து ஸ்வாமிகள் கேட்ட முதல் கேள்வி: “சந்திரமெளலீஸ்வர பூஜைக்கு வில்வம் வந்து சேந்துடுத்தோல்லியோ? பேஷ் ... உள்ளே போவோம்!”

கூடையிலிருந்த வில்வ தளங்கள் சிலவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தார் ஸ்வாமிகள். பச்சைப் பசேலென்று மின்னின அவைகள். 

ஆச்சார்யாள் காரியஸ்தரிடம், “துளிக்கூட இதழ்கள் பின்னமாகாம சிரத்தையா இப்டி யார் பறிச்சுண்டு வந்தா? - ’இந்தப் பிராந்தியத்லயே வில்வ மரம் கிடையாது’ன்னு  சொன்னாளே .... இத எங்கே பறிச்சதுனு கேட்டுத்தெரிஞ்சுண்டேளா?” என்று கேட்டார். 

காரியஸ்தர் வில்வம் கொண்டு அந்த இளைஞரைத் திரும்பிப் பார்த்தார். ஸ்வாமிகளிடம் அந்த இளைஞன் “பெரியவா, நா யதேச்சையா வாசல் பக்கம் போனேன். கீழண்ட கோடியில பந்தக்கால் கிட்ட இந்தக்கூடை இருந்தது. போய்ப் பார்த்தா முழுக்க முழுக்க வில்வ தளம் பெரியவா!” என்றான். 

உடனே பெரியவா, “அது சரி. அங்கே யார் கொண்டு வந்து வெச்சானு கேட்டயா நீ?” என்று வினவினார். 

“கேட்டேன் பெரியவா. அங்கிருந்த அத்தன பேரும் எங்களுக்குத் தெரியலைனுட்டா..... ”

“அப்டீன்னா யார்தான் கொண்டு வந்து வெச்சிருப்பா?” என்று சிரித்தபடி வினவினார் ஆச்சார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. 

பூஜை பண்ண வேண்டிய இடத்தை நோக்கி நகர்ந்த ஆச்சார்யாள் புன்னகையோடு திரும்பி, “ஒருவேளை நம்ம சந்திரமெளலீஸ்வரரே கொண்டு வந்து வெச்சிருப்பாரோ?” என்று கூறி பூஜைக்கு ஆயத்தமானார். 

பசுமையான அந்த வில்வ தளங்களால் ஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரருக்கு அர்ச்சனை செய்த காட்சி, அனைவரையும் பரவசப்படுத்தியது.  பூஜை முடிந்ததும் பிரஸாதம் வழங்கப்பட்டது. 

மாலை நேரத்தில் தெலுங்கில் ஸ்ரீமத் ராமாயண உபந்யாஸம் நிகழ்த்தினார் ஆச்சார்யாள். அந்தக் கிராமமே கேட்டு மகிழ்ந்தது. 

அடுத்த நாள் காலையில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பஜனை கோஷ்டி ஒன்று சத்திர வாசலில் பக்திப் பரவசத்துடன் ஆடிப்பாடி பஜனை நிகழ்த்தியது. ஊரே கல்யாணக்கோலம் பூண்டிருந்தது. ஆச்சார்யாள், மடத்தைச் சேர்ந்த சிலருடன் ஸ்நானத்திற்கு புஷ்கரணிக்குச் சென்றார். 

கொல்லைப்புறத்தில் ஏதோ வேலையில் இருந்த காரியஸ்தர், முந்தின தினம் வில்வக்கூடையைச் சுமந்து வந்த ஸ்ரீமடத்து இளைஞனிடம் கேட்டார்: “ஏண்டாப்பா, இன்னிக்கும் நெறய வில்வம் வேணுமே! நீ கைராசிக்காரனா இருக்கே! இன்னிக்கும் பந்தக்கால் கிட்ட யாராவது வில்வம் கொண்டு வந்து வெச்சுருக்காளானு பாரேன்” என்றார்.

உடனே வாசலுக்கு ஓடினான் இளைஞன். என்ன ஆச்சரியம்! முந்தைய நாள் போலவே ஒரு பெரிய ஓலைக்கூடை நிறைய வில்வ தளம்! இளைஞனுக்கு சந்தோஷம்.  கூடையுடன் கூடத்துக்கு வந்தான். 

அதை இறக்கி வைத்துவிட்டு ஸ்ரீகார்யத்திடம் [மேலாளர் போன்றவர்] ,  “இன்னிக்கும் அதே எடத்ல கூடை நிறைய வில்வம்! யாரு, எப்போ வெச்சுட்டுப் போனானு தெரியலே!”

ஸ்ரீகார்யத்துக்கு வியப்பு. ‘ஏன் இப்டி ஒத்தருக்கும் தெரியாம ரகஸ்யமா வந்து வெச்சுட்டுப் போறா’ என எண்ணிக் குழம்பினார். ஆச்சர்யாள் ஸ்நானம் முடிந்து திரும்பினார். 

கூடத்தில் பூஜைக்குத் தயாராக வில்வம். அவற்றை நோட்டம் விட்ட ஸ்வாமிகள், பின்புறம் திரும்பி அர்த்தபுஷ்டியுடன் ஸ்ரீகார்யத்தைப் பார்த்தார்.

“ஆமாம் பெரியவா ... இன்னிக்கும் வாசல்ல அதே எடத்ல வில்வக்கூடை வெச்சிருந்தது! ஒருத்தருமே ‘தெரியாதுங்கறா!” என்று கூறி ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தார். 

சந்திரமெளலீஸ்வர பூஜையைப் பூர்த்தி செய்தார், ஸ்வாமிகள். பிக்ஷையை முடித்துக்கொண்டு ஏகாந்தமாக அமர்ந்திருந்தபோது, ஸ்ரீகார்யத்தை அழைத்தார். 

அவரிடம், “நாளைக்கி கார்த்தால சுருக்க ஏந்திருந்து நீ ஒரு கார்யம் பண்ணனும். கூட இன்னும் யாரையாவது அழச்சுண்டு வாசப்பக்கம் போ.  ஒத்தருக்கும் தெரியாம நின்னு கவனி. யாரு வில்வகூடய வெச்சுட்டுப் போறானு கண்டுபிடி. எங்கிட்ட அழச்சுண்டு வந்துடு. நீ ஒண்ணும் கேக்க வாண்டாம்.  என்ன புரிஞ்சுதா?” என்று சிரித்தபடி கூறினார். 

ஸ்ரீகார்யம், நமஸ்கரித்து விட்டு நகர்ந்தார்.

தொடரும்....









ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்

இதன் தொடர்ச்சி 13.07.2013 
சனிக்கிழமை வெளியாகும்]



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

41 comments:

  1. //அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது.//

    அப்படித்தானே நடக்கிறது. பிறரைப் பார்த்து நம் வீட்டுக்கும் அதுபோல் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்து விடுகிறதே.

    வில்வ பத்திரத்தை வைத்தது யாராக இருக்கும். எதிர்பார்ப்பு கூடுகிறதே :-)

    ReplyDelete
  2. பெரியவா சொல்வது போல அந்த சந்திரமௌலீச்வரரே கொண்டு வந்து வைக்கிறாரோ?

    ReplyDelete
  3. ஆடம்பர திருமணம் அவசியமற்றது என்று அழகாய் கூறியுள்ளார் பெரியவா! வில்வ பத்திரத்தை கொண்டுவந்தவரை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. சிக்கனக் கல்யாணம், பெண் வீட்டாரிடமிருந்து எதுவும் வேண்டாமென்ற, மேள தாள மில்லாத, வைதீக முறைப்படி, பிள்ளை வீட்டிலே நடந்த, கலியாணங்கள் வேண்டுமா? எங்கள் வீட்டு கல்யாணங்கள். எல்லாம் ஒரு வேளைதான். இந்தக் கொள்கையில் தீவிரவாதிகள் எங்கள்ப் பிள்ளைகள்தான்.
    பெருமைக்குச் சொல்லவில்லை. மேளதாளங்கள் கிடையாது.
    எல்லா செலவும் செய்து வைதீக முறைப்படி கல்யாணங்கள்.
    ஆடம்பர விருந்து கிடையாது. நல்ல முறைக் கல்யாணங்கள்.
    இது போகட்டும்.
    தெய்வம் மானிஷ ரூபேண, வில்வ தளங்கள் எல்லாம் கடவுள்தான் கொண்டு வைத்திருப்பார்.
    மிகவும் பக்திப் பரவசமாகப் போய்க்கொண்டுள்ளது விஷயங்கள்.
    எல்லோரும் பரவசமாகப் படிக்கிறோம். அன்புடன்

    ReplyDelete
  5. mmmmmmmmmmmmm...................
    appuram????????????



    நல்லது, நல்லது என்றால் எது நல்லது? அன்பு தான் மிகவும் நல்லது. “அன்பே சிவம்” என்கிறோம். சிவம் என்றாலும் ஒன்றுதான் ‘சுபம்’ என்றால் ஒன்றுதான். சுபம் என்றால் நன்மை. நல்லவைகளில் உயர்ந்த நன்மை எது? அன்பு தானே
    very well said.

    ReplyDelete
  6. கட்டுப்பாடு பண்ணுவதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதிலும் ஒரு லிமிட் வேண்டும். ரொம்பவும் கட்டுப்படுத்தினாலே, ரொம்பவும் அடித்துக்கொண்டு ஓடத் தோன்றும்.

    கொஞ்சம் லிமிடெட் ஆகவே அணுக வேண்டியது கட்டுப்பாடு..!

    ReplyDelete
  7. ஒத்தருக்கும் தெரியாம நின்னு கவனி. யாரு வில்வகூடய வெச்சுட்டுப் போறானு கண்டுபிடி. எங்கிட்ட அழச்சுண்டு வந்துடு. நீ ஒண்ணும் கேக்க வாண்டாம்.//

    சாத்வீகமான அணுகுமுறை ..!

    ReplyDelete

  8. பசுமையான அந்த வில்வ தளங்களால் ஸ்வாமிகள் ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரருக்கு அர்ச்சனை செய்த காட்சி, அனைவரையும் பரவசப்படுத்தியது.

    பசுமையான மனம் நிறைக்கும் அற்புதக்காட்சி ..!

    ReplyDelete
  9. பெரியவா சொல்வது போல அந்த சந்திரமௌலீச்வரரே கொண்டு வந்து வைக்கிறாரோ?//

    திருமதி.ரஞ்சினி நாராயணன் அவர்களின்
    கருத்துத்தான் என் கருத்தும்....
    அடுத்த பதிவை எதிர் நோக்கி ஆவலுடன்...

    ReplyDelete
  10. இன்னிக்கும் பந்தக்கால் கிட்ட யாராவது வில்வம் கொண்டு வந்து வெச்சுருக்காளானு பாரேன்” என்றார்.

    என்ன ஒரு நம்பிக்கை ..!

    ReplyDelete

  11. பலரும் பெரியவாள் அருளோடு நடக்கும் திருமணம் என்று சொல்வார்கள்.பெரியவர் திருமணத்துக்குப் பட்டு உடுத்தல் கூடாது என்பார். எத்தனை பேர் அதைக் கடைப்பிடிக்கிறார்கள்.இப்போதெல்லாம் திருமணங்கள் வெகு விமரிசையாக் படாடோபத்தோடும் டாம்பீகத்தோடும்தான் நடை பெறுகின்றன.

    ReplyDelete
  12. மேலும் மேலும் ஆவல் கூடுகிறது... அடுத்த பகிர்வை எதிர்நோக்கி....

    ReplyDelete
  13. //
    பணம் கொழித்தவர்களும் கூட, தடபுடல் பண்ணாமல் சிக்கனமாகவே திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது. //சரியாக சொன்னீர்கள் ஆனா இப்போ எல்லோரும் ஆடம்பரத்தைதானே விரும்புறாங்க..

    அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...

    ReplyDelete
  14. பணம் கொழித்தவர்களும் கூட, தடபுடல் பண்ணாமல் சிக்கனமாகவே திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது.

    ஆகையால் கச்சேரி விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்தப் பணத்தைக்கொண்டு, வசதியில்லாத ஏழைப்பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும்.//அருமையான கருத்து! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  15. இன்றைய திருமணங்கள்
    மனங்கள் ஒன்றுபடும் நிகழ்சிகள் அல்ல

    பணங்கள் தங்களை விளம்பரபடுத்தும்
    கண்காட்சிகள்.

    அன்று இல்லறம் என்பது ஒரு
    தர்மம்.

    தர்மத்தை கடைபிடித்ததால் அவள்
    தர்ம பத்தினி என்று அழைக்கப்பட்டாள்
    மதிக்கப்பட்டாள்


    இல்லறம் என்பது ஒரு நல்லறம்.

    ஆனால் இன்று ஆணும் பெண்ணும்
    திருமணம் நடந்த அடுத்த கணம் என்ன
    செய்வார்கள் என்று யாருக்கும்
    தெரியாது

    நாள்தோறும் ஊடகங்களில் வரும்
    செய்திகள் வயிற்ரை கலக்குகிறது.
    இறைவன்தான் நம்மை காப்பாற்றவேண்டும்.

    ReplyDelete
  16. முதலில் கொடுத்திருக்கும் அமுத மொழிகளும், வில்வ பத்திரம் தினம் தினம் வரும் கதையும் படித்து ரசித்தேன்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  17. மகாபெரியவரின் அற்புதம்தான் வில்வம் . அருள்மழையில் களிக்கின்றோம்.

    ReplyDelete
  18. // “நாளைக்கி கார்த்தால சுருக்க ஏந்திருந்து நீ ஒரு கார்யம் பண்ணனும். … … … //
    சஸ்பென்ஸ் பண்ணும் அந்த ஆளை நாங்களும் பார்க்க ஆவலாய் இருக்கிறோம்.

    ReplyDelete
  19. வில்வ பத்திரம் பற்றிய ரகசியம் அறிய ஆவல்...

    ReplyDelete
  20. வில்வ இலை ஆவலைத் தூண்டுகிறது..
    நன்று. வாசிப்பு மனநிறைவு தருகிறது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. சந்திரமெளலீஸ்வரரே கொண்டு வந்து தான் வைத்திருப்பார்....

    தொடர்கிறேன்..

    ReplyDelete
  22. அருமை...
    வில்வம் வைத்தது யாரு... சந்திரமொலீஸ்வரரா... ஆட்களா... நாங்களும் ஆவலாய் உள்ளோம்...

    ReplyDelete
  23. கச்சேரி விருந்து என்று தாங்கள் செலவிடக்கூடிய இந்தப் பணத்தைக்கொண்டு, வசதியில்லாத ஏழைப்பெண்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும்.உண்மை அய்யா.
    வில்வம் வைத்தது யாரு... அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்

    ReplyDelete
  24. very interesting, who kept the vilvam??? simple marriages are always better...
    Thanks sir for sharing...

    ReplyDelete
  25. sikkana thirumanam mikka nallathu. Save aagum panaththai nijamaagave save seiyyalaam!

    ReplyDelete
  26. \\"என்ன புரிஞ்சுதா?” என்று சிரித்தபடி கூறினார். \\

    இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றோ?

    திருமணங்களில் ஆடம்பரத்துக்காகவும், பெருமைக்காகவும் வீணே பணத்தை இறைப்பதை விடவும் எளியமுறையில் செய்து அப்பணத்தில் ஏழைகளுக்குத் திருமணம் செய்வித்தல் எவ்வளவு அற்புதமான விஷயம். மனந்தொடும் தொடர் பதிவுகளுக்கு நன்றி வை.கோ.சார்.

    ReplyDelete
  27. //பணம் கொழித்தவர்களும் கூட, தடபுடல் பண்ணாமல் சிக்கனமாகவே திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது. //

    ஆமாம், இதை நூறு தரம் சொன்னாலும் போதாது. சொல்றவங்க தான் வாங்கிக் கட்டிக்கணும். பட்டு வேண்டாம் தான். ஆனால் அஹிம்சா பட்டுக் கட்டிக்கலாம். அஹிம்சா பட்டு காதியில் மட்டுமே கிடைக்குதுனு நினைக்கிறேன். விலையும் அதிகம். :)))))ஆனால் தூய பட்டு அது தான்.

    ReplyDelete
  28. பணம் கொழித்தவர்களும் கூட, தடபுடல் பண்ணாமல் சிக்கனமாகவே திருமணம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் பண்ணுகிற டாம்பீகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட முன்மாதிரி ஆகி விடுகிறது.//

    ஆம், உண்மை.
    இருப்பவர் செய்வதால் இல்லாதவர்களும் கடன் வாங்கி அது போல் செய்ய ஆசை படுகிறார்கள்.

    “ஒருவேளை நம்ம சந்திரமெளலீஸ்வரரே கொண்டு வந்து வெச்சிருப்பாரோ?//
    அவர் நினைத்தால் முடியாத காரியமும் உண்டா!

    ReplyDelete
  29. உண்மைதான். நம் திருமணங்களில் ஆடம்பரமும், டாம்பீகமும் அதிகமாகத்தான் இருக்கிறது. என் மைத்துனர் மகள் திருமணத்தில் இரண்டு வட இந்திய இளைஞர்கள் ஐஸ்கிரீம் வழங்கிக் கொண்டிருந்தனர். எனக்கு ஹிந்தி தெரியும் என்பதால் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள், “எங்களுக்கு தென்னிந்தியத் திருமணங்கள் பிடிக்கவில்லை. நீங்கள் இங்கு அதிகம் உணவு வகைகளைப் பரிமாறி வீணடிக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். இது ஒரு மறுக்க முடியாத உண்மை.

    எனக்குக் கூட ஆசை தான். என் மகளின் திருமணத்தை எளிமையாக நடத்த. அதற்கேற்றார் போல் மாப்பிள்ளை வீடு அமைந்தால் மகிழ்ச்சிதான்.

    சரி. குடலை நிறைய வில்வ இலையை யார் வைத்து விட்டுச் சென்றது. எல்லாம் அந்த முக்கண்ணனின் திருவிளையாடலாகத்தான் இருக்கும். சரிதானே.

    ReplyDelete
  30. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவுவதா?அதெல்லாம் பலருக்கும் தோன்றதில்ல சார்.

    தொடர்ந்து பதிவுகளின் தலைப்புகளும்,முதலில் வரும் நற்கருத்துக்களும் சிறப்பாக உள்ளது.

    சில தமிழ் சொற்கள் பதிதாக இருக்கே,அது செந்தமிழா/சம்ஸ்கிருத தமிழா?

    யார் வைத்தது அந்த வில்வ இலைகளை?thodarkiren

    ReplyDelete
  31. அன்பின் வை.கோ - சிக்கனத் திருமணம் விளக்கம் நன்று

    சந்திர மொளீஸ்வரர் பூசைக்கு வில்வம் கிடைக்க வில்லை - அவ்வூரிலேயே வில்வமரமே இல்லையாம் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவாளோ தியானத்தில் அமர்ந்து விட்டார். திடிரென வாசலில் கூடையில் இருந்ததென ஒரு கூடை முழுவதும் வில்வம் - ஒரு இளைஞன் கொண்டு வத்தான் - பெரியவாளும் சந்திர மௌளீஸ்வரருக்குப் பூசை செய்ய வில்வப் பத்திரத்தினை அவரே கொண்டு வந்து விட்டார் போலும் எனச் சொல்லி விட்டுப் பூசை செய்யச் சென்று விட்டார்.

    மறு நாளும் அதெ போல நடந்தது - மூன்றாம் நாள் காரியக் காரரை அழைத்து பெரியவா - வாசலுக்குச் சென்று யார் கொண்டு வந்து தினந்தினம் வைக்கிறார்கள் எனக் கண்டு வர்க் கூறினார்.

    தொடர் நன்கு செல்கிறது - பதிவுகள் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  32. குடலை = கூடை.. இப்போதான் அறிகிறேன்.

    அதுசரி வில்வம் இலை கொண்டுவந்து வைப்பவரை கண்டு பிடித்தார்களோ... பொறுத்திருப்போம்ம் அடுத்ததுக்காக..

    ReplyDelete
  33. வில்வ பத்ரத்தை யாருக்கும் தெரியாமல் கொண்டு வைத்து இன்னும் ஒரு திருவிளையாடலை நடத்திக்காட்ட எண்ணி விட்டாரா அந்த ஆண்டவர்

    ReplyDelete
  34. ஓ.... மேலாக படத்துல இருக்குதே அதானா வில்வ பத்ரம் மூனு மூனு எலயா இருந்துகிடுமே அதா. ஆரு கொண்டிட்டு வந்தாக

    ReplyDelete
  35. எல்லாருமே வில்வ பத்ர கூடையை கொண்டு வைத்தது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கோம்.

    ReplyDelete
  36. கட்டுப்பாடு பண்ணுவதற்கும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். எதிலும் ஒரு லிமிட் வேண்டும். ரொம்பவும் கட்டுப்படுத்தினாலே, ரொம்பவும் அடித்துக்கொண்டு ஓடத் தோன்றும்./// ஆஹா அற்புத வரிகள். ஓவராக டைட் வைத்தால் மறை - கழன்றுவிடும்...

    ReplyDelete
  37. யாரு விலவ பத்திரத்தை கூடை நிறய யாருக்குமே தெரியாம வச்சுட்டு போறான்னு பெரியவாளுக்கா தெரியாது.....ஏதோ திருவிளையாடல் பண்ண நெனச்சுட்டா...

    ReplyDelete
    Replies
    1. happy November 2, 2016 at 12:18 PM

      வாம்மா .... ஹாப்பி, வணக்கம்.

      //யாரு வில்வ பத்திரத்தை கூடை நிறய யாருக்குமே தெரியாம வச்சுட்டு போறான்னு பெரியவாளுக்கா தெரியாது.....ஏதோ திருவிளையாடல் பண்ண நெனச்சுட்டா...//

      நீ சொல்லுவதுபோல அப்படித்தான் இருக்கும் என நானும் நினைக்கிறேன். நீ சமத்தோ சமத்தூஊஊஊ. :)

      Delete
  38. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (01.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=406677919834908

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete