About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, December 26, 2013

101] இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும்

2
ஸ்ரீராமஜயம்




ஜனங்கள் கோயிலுக்கும், தர்ம உபதேசம் நடக்கும் இடங்களுக்கும் போய்ப்போய் சாந்தர்கள் ஆனார்கள்.

சட்டத்தை மீறாமல் ஸாத்வீகர்களாக, எல்லோருடனும் சமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த சமாதானத்தை ஏதோ அவரவர்களின் குல தர்மம் காப்பாற்றி வந்தது.

இக்காலத்தில் கோயிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து, ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது.

எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும் காணப்படுகின்றன. 

மான அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை.

பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன. 


oooooOooooo

[ 1 ]



"விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்"


ஐந்து வயதுக் குழந்தையுடன் வந்து பெரியவாளை 

நமஸ்காரம் செய்தனர் தம்பதியர்.




"விஜயதசமி அன்னிக்கு அக்ஷராப்யாசம் செய்யணும்... 

நவராத்திரியின்போது, வீட்டை விட்டு வர முடியாது...பெரியவா 

அனுக்ரஹம் செய்யணும். குழந்தைக்குப் படிப்புநன்றாக 

வரணும்..." என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள்.



தகப்பன் மிகவும் பவ்யமாக, "பெரியவா... ஏதாவது ஒரு வார்த்தை... குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கணும்" என்று குழைந்தார்.

பெரியவா குழந்தையைத் தன் அருகில் அழைத்தார்கள்." 

சொல்லு..


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது..... பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. 

இது ஔவையார் பாட்டி பாடினது, தெரியுமா? தினம் சொல்லு...


இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சில தமிழறிஞர்களும் இருந்தார்கள்.

பெரியவாள் வட மொழியின்பால் பெரும் பற்றுக் கொண்டவர்கள் என்ற கருத்து பரவியிருந்ததால் [மூஷிக வாஹன.. என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது "வாக்குண்டாம்..." என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். தமிழறிஞர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.


"இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி. இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள்
 .

நன்றி: அமிர்த வாஹினி 11.12.2013

oooooOooooo

[ 2 ]

ஸ்திரீ தர்மம் பற்றி
ஸ்ரீபெரியவா சொன்னது


சாஸ்திர-ஸம்ப்ரதாய வழிமுறைகளைக் சொல்கிற நாங்கள் ஸ்த்ரீ தர்மம் பற்றி என்ன சொல்கிறோம் ? ‘ஸ்த்ரீ தர்மம் என்பது, ஸ்த்ரீயானவள் தன்னுடைய ஸ்த்ரீத்வம் என்பதான இயற்கையாயமைந்த  பெண்மையை சுத்தமாக ரக்ஷித்துக் கொள்வதில்தான் இருக்கிறது. 
இதற்கு அவள் புருஷன் மாதிரி உத்யோகம், பதவி என்பது போன்ற வெளியுலக வியாபாரங்களில் போகாமல் அடக்கமாக இருந்துகொண்டு வீட்டு நிர்வாஹத்தை அப்பழுக்கில்லாமல் கவனித்துக் கொள்வதையே தன்னுடைய பிறவிப் பணியாகவும், பிறவிப் பிணிக்கு விமோசனம் தரும் ஸாதனா மார்க்கமாகவும்  வைத்துக் கொள்ள வேண்டும். 
இதனால்தான் ஒரு ஸ்த்ரீக்கு வாஸ்தவமான, நிலைத்து நிற்கிற உள்நிறைவும், ஒயாத பறப்பு இல்லாத சாந்தி-நிம்மதிகளும் ஏற்படும். 
அவள் ஒருத்தியின் நிறைவோடு  நிற்காமல் அவளுடைய சுத்தமான க்ருஹ நிர்வாகமே குடும்பத்தையும் ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். 
க்ருஹத்தைச் சேர்ந்த புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் ஆகிய எல்லா அங்கத்தினர்களும் ஸெளக்யமாக ஒன்றுபட்டு வாழ க்ருஹ லக்ஷ்மியின் பணியே வழிவகுக்கும். 
இப்படி தனி  மநுஷ்யர்கள் அடங்கிய குடும்பம் ஒரு ஒழுங்கு முறையில் இருந்தால், பல குடும்பங்கள் அடங்கிய நாட்டிலும் தன்னால் ஒழுங்கு ஏற்படும். 
தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு  இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன்  வெளி நிர்வாஹம்  – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து  கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம்.
அப்படிச் சொன்னால் இக்காலத்துப் புதுக் கொள்கைக்காரர்களாக இருக்கிற எல்லோருக்கும் கோபம் கோபமாக வருகிறது.  
‘இதெல்லாம் சாஸ்த்ரங்களை எழுதிய கொடுங்கோல்காரப் புருஷர்களின் வழியிலேயே போய், பெண்கள் புருஷர்களுக்கு ஸரிநிகர் ஸமானமாக எழும்பவிடாமல் அவர்களை அடக்கி,  ஒடுக்கி, நசுக்கி வைக்கிற உபாயமே. ஸ்த்ரீ தர்மம் – புருஷ தர்மம் என்று பேதமேதும் இல்லை. மநுஷ்ய  ஸமுதாயம் முழுதற்கும் ஸமமான ஒரே தர்மந்தான்’ என்று அவர்கள் எங்களைக் கண்டனம் செய்கிறார்கள். 
ஆனால் பதட்டப்படாமல் கொஞ்சம் ஆய்ந்து ஓய்ந்து ஆலோசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.
இங்கே ஸமத்துவப் போட்டி, போராட்டங்களுக்கு இடமே இல்லை. ஒரு தினுஸான கார்யம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்றும் இல்லை. வெளிக்கார்யம் பண்ணி ஸம்பாதிப்பது, ஸம்பாதித்ததைக் கொண்டு வீட்டுக் கார்யங்களைப் பண்ணுவது ஆகிய இரண்டுமே மனித வாழ்க்கைக்கு அத்யாவஸ்யமானவைதான். 
அப்படி இரண்டு தினுஸாகத்தான் பதி-பத்னிகளுக்கு தர்ம சாஸ்திரம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. மந்திரி இலாகா உதாரணம் சொன்னேனே, அதிலே ஒரு புது ஏற்பாடாக, Income Minister என்று வரவுக்கு மந்திரி ‘பதி’  என்றும்,  Expenditure Minister என்று செலவுக்கு மந்திரி ‘பத்னி’ என்றும் வைத்திருக்கிறது! பல பேருக்குத் தெரியாத விஷயம்:
ஸ்த்ரீகளுக்கே க்ருஹத்துக்கான ஸகலமும் வாங்கிப் போட்டுச் செலவு செய்வதற்காகத் திட்டம்  போடும் அதிகாரத்தை தர்ம சாஸ்த்ரம் ஸ்பஷ்டமாகத் கொடுத்திருக்கிறது. 
அவன் உழைத்து ஸம்பாதனம் பண்ண வேண்டியது; அவளே தக்க ஆலோசனையுடன் அதைக் கொண்டு  எல்லாச் செலவுகளுக்கும் திட்டம் போட்டு க்ருஹத்தை நிர்வஹிக்க வேண்டும் – இப்படி சாஸ்த்ரம் சொல்வதிலிருந்தே ஸ்த்ரீகள் தங்களுக்கென்று ஒரு ஸ்வதந்திரம், அதிகாரம் இல்லாமல் அடக்கி நசுக்கி வைக்கப்படவில்லை என்று புரியும்.
இப்படி இரண்டு  விதப் பணிகள் இருப்பதில் ஒன்றுதான் உசத்தி, மற்றது தாழ்த்தி என்ற மாதிரி அபிப்ராயங்கள் ஏன் எழும்ப வேண்டும் ? ஆனபடியால், வெளிலோக கார்யத்தில் ஈடுபட்டிருக்கும் புருஷனுக்குத்தான் உசந்த ஸ்தானம், அகத்துக் கார்யத்தோடு நின்றுவிடுகின்ற ஸ்த்ரீக்குத் தாழ்ந்த ஸ்தானம் என்று எண்ணவேண்டிய  அவசியமேயில்லை. 
(சிரித்து) அவனுக்கு வெளி உத்யோகமானால், அவளுக்கு உள் உத்யோகம்! அந்த  உள் உத்யோகத்தை, ‘அடுப்பங்கரைச் சாக்கிலி’ என்று மட்டமாக நினைக்காமல் Domestic Management Executive என்று நினைத்துவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும்; ஸரிநிகர் ஸமானமும் ஆகிவிடும். 
இன்னும் ஸம ஸ்தானத்துக்கு மேலேயேகூட இதை ஸ்த்ரீகள் ஒரு படி உசத்தியும் நினைக்கலாம். எப்படியென்றால், அவன் சம்பளத்துக்காக வெளியிலே ஆஃபீஸ் பண்ணுகிறானென்றால், இவளோ honorary – யாக அல்லவா உள் ஆஃபீஸ் நடத்துகிறாள்? 
கூலிக்கு வேலை செய்வதைவிட ‘ஆனரரி’யாகச் செய்வதில் ‘ஆனர்’ ஜாஸ்திதானே? அதாவது அதன் ஸ்தானம், கூலிக்குச் செய்வதை விட உசத்திதானே? அதுவும் ஆறு மணி, எட்டுமணி வேலை, வாராந்தர விடுமுறை என்ற ‘கண்டிஷன்’கள் இல்லாமல், தூங்குகிற நேரம் போக ஸதாகால கெளரவ உத்யோகம்! இப்படிப் பார்த்தால் ஸம ஸ்தானத்துக்கு ரொம்பவும் மேலேயே போய்விடுகிறதல்லவா? 
வேடிக்கைக்கு சொன்னேன். இங்கே ஸம-அஸமப் பேச்சுக்கே இடமில்லை. இரண்டு விதமான அவசியப் பணிகளை இரண்டு விதமான பேர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மத்துக்கு ஏற்றபடி செய்கிறார்கள். அவ்வளவுதான்! 
சுவாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது? 
அப்படித்தான் ஸ்த்ரீ-புருஷாள் தங்கள் தங்கள் இயற்கைக்கேற்ற ஸ்வதர்மப் பணியால் தாங்களும் நிஜ மனிதர்களாக உயிர்வாழ்ந்து, குடும்பம், நாடு ஆகியவற்றையும் வாழ வைப்பதும்.

[Thanks to Sage of Kanchi 20/12/2013]

oooooOooooo

[ 3 ]


தாத்தா, மாடு எனக்கு தருவியா?


KVK சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். 




அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் என் அக்காவின் கணவர். அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். 



அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், என் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். 




வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி அளித்தார். 




அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று. உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம்.

“கிருஷ்ணசுவாமி, எப்படி இருக்கே?” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா?” என்றார் பெரியவா.

நாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம். 



சிறுவன் போட்டனே ஒரு கேள்வி. பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தருவியா” என்றான்.

உடனே என் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா? தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார்.

“நீ இப்போ என்ன படிக்கற?” என்று வினவினார்.

“மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது.

பெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்துவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார்.

நாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக?” என்று கேட்டான்.

பெரியவா, “குழந்தாய் நான் சொன்னா சொன்ன வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார்.

இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். 



அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். 




வழக்கம்போல் குசலப் ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை.


திடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். 

பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா?” என்று கேட்டார்.

“ஆமாம்”

“அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தறேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான். 



நாங்கள் பயந்து விட்டோம்.

பெரியவா தொடர்ந்தார், மறுபடியும் ”நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா?”, பெரியவா கேட்டார்.

“எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே?”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். 



மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான்.

என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே?


[யாரோ எழுதியது .... 
எங்கோ எதிலோ நான் படித்தது]

oooooOooooo




ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.



இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.



என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

53 comments:

  1. அன்பின் வை.கோ

    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சஙகர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர் சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர்
    ஹர ஹர சங்கர் - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர் சங்கர - ஜெய ஜெய சங்கர

    ReplyDelete
  2. அன்பின் வை.கோ

    இடிந்த கனவுகளும் இடியாத கோர்ட்டுகளும் பதிவு நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. அன்பின் வை,கோ

    // மான அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். மான அவமானம் பார்க்க ஆரம்பித்து விட்டால் அது தொண்டே இல்லை.

    பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன. //

    நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள்- நட்புடன் சீனா

    ReplyDelete
  4. அன்பின் வை.கோ

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா குழந்தைக்கு வாக்குண்டாம் என்ற அருமையான - ஆனை முகனை வணங்கும் பாடலை குழந்தைக்கு ஆசிர்வாதமாக அளித்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அன்பின் வை,கோ

    ஸ்தீரி தர்மம் பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாப் பெரியவா கூறியது நன்று

    //இன்னும் ஸம ஸ்தானத்துக்கு மேலேயேகூட இதை ஸ்த்ரீகள் ஒரு படி உசத்தியும் நினைக்கலாம். எப்படியென்றால், அவன் சம்பளத்துக்காக வெளியிலே ஆஃபீஸ் பண்ணுகிறானென்றால், இவளோ honorary – யாக அல்லவா உள் ஆஃபீஸ் நடத்துகிறாள் //

    நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. அன்பின் வை.கோ - அப்படித்தான் ஸ்த்ரீ-புருஷாள் தங்கள் தங்கள் இயற்கைக்கேற்ற ஸ்வதர்மப் பணியால் தாங்களும் நிஜ மனிதர்களாக உயிர்வாழ்ந்து, குடும்பம், நாடு ஆகியவற்றையும் வாழ வைப்பதும். - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. அன்பின் வை.கோ

    தாத்தா நீ எனக்கு மாடு தருவியா - பதிவு நன்று

    மகாப் பெரியவாளின் தீர்க்க தரிசனம் அருமை

    4ம் கிளாஸில் இருந்து 6ம் கிளாஸ் டபுள் பிரமோஷன் வாங்கப் போகும் பையனை - பின்னால் நடக்கப் போவதை முன்னரே அறிந்த மகாப் பெரியவா மகாப் பெரியவாதான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  8. //சொல்லு..


    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது..... பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு.

    இது ஔவையார் பாட்டி பாடினது, தெரியுமா? தினம் சொல்லு...
    // உள்ளம் நெகிழச் செய்தது.

    அருமையான பதிவு வழமைபோல்.

    //என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே?//
    ஆம், இதிலென்ன ஐயம்?

    அன்புடன்
    பவள சங்கரி

    ReplyDelete
  9. பதியும் பத்னியும் நுரையிரலும் இதயமும் என்ற விளக்கம் அருமை. நல்லன எல்லாம் தேடித் தரும் தங்கள் நேயம் போற்றத்தக்கது.

    ReplyDelete
  10. //மான அவமானம் பார்க்காமல் நம்மால் முடிந்த தொண்டைச் செய்ய பாடுபட வேண்டும். //
    அருமை ஐயா நன்றி

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா

    சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  12. அமுத மொழிகளும், சம்பவங்களும் அருமை...

    கடைசி சம்பவத்தில் சிறிது மாற்றத்துடன் அதாவது பிள்ளையாரோ, சிவலிங்கமோ தருவதாக சொன்னதாக படித்த ஞாபகம்...
    தங்கள் பதிவில் தானோ?

    ReplyDelete
  13. பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன.//
    அருமையான அமுத மொழி.

    ReplyDelete
  14. இரண்டு விதமான அவசியப் பணிகளை இரண்டு விதமான பேர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மத்துக்கு ஏற்றபடி செய்கிறார்கள். அவ்வளவுதான்!..
    அருமை.

    ReplyDelete
  15. என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே/?//

    பெரியவர் தீர்க்கதர்சி தான் . ஞானகண் பெற்றவர் அல்லவா!

    ReplyDelete
  16. பரம்பொருளைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்பதுதான் ஞானம். ஸ்வாமி என்று நினைக்கும் போதே ஞானம், சாந்தம் என்ற இரண்டு பாவமும் நமது மனசிலும் வருகின்றன.

    அனுபவ மொழிகள்.... அருமை..!

    ReplyDelete
  17. வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி அளித்தார்.

    அழகான மனம் நிறைக்கும் காட்சி..!

    ReplyDelete
  18. Income Minister என்று வரவுக்கு மந்திரி ‘பதி’ என்றும், Expenditure Minister என்று செலவுக்கு மந்திரி ‘பத்னி’ என்றும் வைத்திருக்கிறது! பல பேருக்குத் தெரியாத விஷயம்:

    ஆழ்ந்த பொருளுடன் அருமையான வரிகள்..!

    ReplyDelete
  19. இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி. இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள் .

    ஔவையின் அழகான பாடல் பூரிப்புடன் முதல் பாடலாக குழ்ந்தைகளுக்குப் பாடமாவதில் மகிழ்ச்சி..!

    ReplyDelete
  20. க்ருஹத்தைச் சேர்ந்த புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் ஆகிய எல்லா அங்கத்தினர்களும் ஸெளக்யமாக ஒன்றுபட்டு வாழ க்ருஹ லக்ஷ்மியின் பணியே வழிவகுக்கும்.

    அனுக்ரஹ அமுதமொழிகள் அற்புதமானவை..!

    ReplyDelete
  21. மக்கள் தர்மத்தை அனுசரிக்காது விட்டதால்
    அதர்மத்தில் அவர்கள் விழுந்துவிட்டார்கள்.

    அதனால்தான் தங்களைப் படைத்த
    உமாபதியையும், வேங்கடாசலபதியையும்,
    சுரபூபதியையும் ,கணபதியையும்விட்டுவிட்டு
    சட்டம் படித்த நீதிபதிகளை நாட ஆரம்பித்துவிட்டார்கள்.

    அதனால்தான் கோயிலுக்கு போய்க்கொண்டிருந்த கூட்டம் நீதிமன்றங்களில் வழக்குரைஞர்களுடன் சேர்ந்துகொண்டு நீதி கேட்டு அலைந்து கொண்டிருக்கிறது.

    எந்த நீதிபதிகள் என்ன தீர்ப்பு சொன்னாலும் இறைவன் வழங்கும் தீர்ப்பே முடிவானது. சரியானது என்பதை இந்த மனித குலம் என்று உணரத் தலைப்ப கிறதோ தலைப்படுகின்றதோ அதுவரை இந்த கூட்டம் கோர்ட்டுக்களைதான் நாடும்

    ReplyDelete
  22. ஐயாவிற்கு வணக்கம்
    வழக்கம் போல் பக்திச்சுவையைச் சுவைக்க தந்து விட்டீர்கள். கோவிலுக்கு செல்லும் மனிதர்கள் பாரங்களைக் குறைத்துக் கொண்டு புனிதமாகிறார்கள் எனும் செய்தியில் இருந்து பெரியாவாளின் ஸ்திரி பற்றிய செற்பொழிவு, முன்கூட்டியே ஊகித்த அந்த குழந்தை ஐந்தாம் வகுப்பு படிக்காமல் ஆறாம் வகுப்பு போவான் எனும் ஞானம் அசர வைத்தது. அழகான ஆன்மீகப் பகிர்வுக்கு அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  23. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள் அக்குழந்தை தெய்வத்திடமே (பெரியாவா) வேண்டுதல் வைத்ததும் அதற்கு அவர் அன்போடு நிபந்தனை விதித்து பிரசாதம் வழங்கிய விதம் அற்புதம் ஐயா. பின்னர் மாடு வழங்க கேட்டதற்கு பெரியாவாளின் பதில் புத்திக்கூர்மை மற்றும் நடப்பதை முன்கூட்டியே அறியும் ஞானம் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    ReplyDelete
  24. ''..இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்"....
    மிக நன்று
    நல்ல பதிவு. ரசித்து உள் வாங்கினேன்.
    இறையாசி நிறையட்டும்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  25. இக்காலத்தில் கோயிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து, ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது.எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும் காணப்படுகின்றன. //உண்மைதான்!
    //“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். //
    அசந்துபோனேன்! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  26. பெரியவாளின் பொன் மொழிகளும் ஸ்திரி தர்மம் பற்றிய விளக்கமும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  27. இடிந்த கோவில்களும்,இடியாத கோர்ட்டுகளும், பதிவுமிக்க அறிய
    இடுகை. தமிழ்பாடல்,செய்யுள் என்று சொல்லுவோம். வாக்குண்டாம் சொல்லச் செய்தது.
    ஸ்திரி தர்மம் எவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிரார். எத்தனை முறை படித்தாலும் பின்னும் படிக்கத் தூண்டுகிரது.
    மாடு கொடுப்பியா விஷயம் எங்கள் உறவினர்களுடயது.
    நல்லபகிர்வு. நல்ல விஷயஙகள். அன்புடன்

    ReplyDelete
  28. சட்டத்தை மீறாமல் ஸாத்வீகர்களாக, எல்லோருடனும் சமாதானமாக வாழ்ந்தார்கள். இந்த சமாதானத்தை ஏதோ அவரவர்களின் குல தர்மம் காப்பாற்றி வந்தது.

    இக்காலத்தில் கோயிலுக்கும், தர்மம் தெரிந்து கொள்வதற்கும் போவது குறைந்து, ஜனங்கள் கோர்ட்டுக்குப் போவது அதிகமாயிருக்கிறது.

    - தெய்வத்தின் குரல். படிக்கப் படிக்க திகட்டாத அமுத விருந்து.
    சிறந்த பதிவுகளைத் தரும் தங்களின் அறப்பணி நீடூழி வாழ்க!..

    ReplyDelete
  29. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! அமிர்தவாஹிணி கட்டுரையோடு அனுபவம் ஒன்றினையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  30. இக்கட்டுரையில் சொன்ன அத்தனை விஷயங்களுமே அருமை.... ஒன்றுக்கு ஒன்று போட்டி போடும் விஷயங்கள்....

    நன்று.

    ReplyDelete
  31. வலைச்சர அறிமுகத்துக்கு
    வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  32. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.கோயில் இல்லாஊரில் குடியிருக்கவேண்டாம் நீதிமன்றங்களும் வழக்குகளும் அதிகமாயிருப்பது வருத்த்த்திற்குரிய்து.அக்‌ஷராப்பியாஸம் ஔவையின் தமிழ் பாட்டுகொண்டு அருமை.பெரியவாள் குழந்தைகளுடன் பேசி புரியவைத்த சம்பவம் எவ்வளவு அதிர்ஷ்டம் அந்த குழந்தைக்கு என நினைக்கவைத்தது.அருமை நன்றி

    ReplyDelete
  33. மிகவும் அற்புதம் ஐயா... நன்றிகள் பல...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  34. பெரியவர் தீர்க்கதர்சனம் அற்புதம்.

    ReplyDelete
  35. மகாப் பெரியவரின் தீர்க்க தரிசனம் கண்டு
    அகமகிழ்வு கொண்டோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  36. வாக்குண்டாம், சொல்லும் போதெல்லாம் இனிமேல் மகாபெரியவா நினைவு வரும்.
    அதேபோல் அவருடைய ஞானதிருஷ்டி பிரமிப்பாக இருக்கிறது..
    அந்த மாடு கதையைத் தான் சொல்கிறேன். பக்தி மனம் கமழும் பதிவு.

    ReplyDelete
  37. குழந்தைக்கு 'வாக்குண்டாம்' சொல்லிக் கொடுத்து அதற்கு நாவன்மையும் வளரும்படி செய்துவிட்டாரே, மஹா பெரியவா!
    இல்லத்தரசிக்கு பெரியவா கொடுத்த // Domestic Management Executive// பட்டம் பேஷ், பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு!

    ReplyDelete
  38. அக்ஷராப்யாசம் பற்றிய விஷயமும்,மாடு கேட்டதும் முற்றிலும் புதியது. மற்றபடி பகிர்வுக்கு நன்றி. பெண்களுக்கு ஆசாரியர் கொடுத்திருக்கும் அறிவுரை அருமை. இதைத் தனியாகவே புத்தகமாக வெளியிட்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  39. Achoo, before reading the full content, i just felt shocked. After reading fully, i surprised. How do PERIYAVA know the child will not study 5th class?
    wounder.

    ReplyDelete
  40. எல்லாவற்றையும் அறிந்தவர்தான் பெரியவா.

    ReplyDelete
  41. அமுத மொழிகளும் சம்பவங்களும் நல்லா இருக்கு

    ReplyDelete
  42. // எங்கும் இடிந்த கோயில்களும், இடியாத கோர்ட்டுக்களும் காணப்படுகின்றன. //

    என்ன ஒரு வரிகள்.
    வருங்கால சந்ததியினருக்குக் கோவில்களை நாம் காட்டிக் கொடுத்தால் கோர்ட் படி ஏற வாய்ப்பு இருக்காது.

    ReplyDelete
  43. // தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன் வெளி நிர்வாஹம் – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம்.//

    ம். இப்படியே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

    // "இது எங்களுக்கு ஓர் உபதேசம் மாதிரி. இனிமேல் எங்கள் வீடுகளில் வாக்குண்டாம்தான் முதல் பாடம்" என்று உள்ளார்ந்த பூரிப்புடன் பெரியவாளிடம் தெரிவித்துக் கொண்டார்கள்//

    இப்ப சத்யத்துக்கு விநாயகர் அகவல் முக்கால்வாசி சொல்லிக் கொடுத்துட்டேன்.

    // “நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். //

    அவர் முக்காலமும் உணர்ந்தவர்.

    ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர் சங்கர - ஜெய ஜெய சங்கர
    .

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 24, 2015 at 4:13 PM / 4.36 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  44. நல்லா இருக்குது.

    ReplyDelete
  45. பெரியவா அமுத மழையில் நனைய நனைய ஆனந்தம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சொல்லிச்செல்லும் விதம் நல்ஸா இருக்கு.

    ReplyDelete
  46. நல்ல பதிவு...ஆசி வழங்கும் பெரியவரின் படம் அழகு.

    ReplyDelete
  47. "சுவாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது?" - அருமையான concluding விளக்கம். எது பெரிது என்ற கேள்வி எழும்போதுதான் சிக்கல். அதை எழவிடாமல் அடக்கிவைக்கும் சரியான உதாரணம்.

    “நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” - தெய்வ வாக்கு அல்லவா? நாம்தான் சிறியவன், பெரியவன் என்று வேறு படுத்திப் பார்க்கிறோம். அவருக்கு எல்லோரும் ஜீவன் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. 'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 5:55 PM

      வாங்கோ, வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கும், ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete
  48. இதில் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்களால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று 14.08.2019 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ:

    https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=693311131171584

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  49. இதில் மேலும் ஒரு பகுதி நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்களால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று 23.08.2019 வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு இதோ:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/698817767287587/

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  50. https://www.facebook.com/groups/396189224217111/permalink/849886675514028/

    நமது பேரன்புக்குரிய ஆச்சி, மேற்படி இணைப்பின் மூலம் இந்தப் பதிவினை, இன்று 27.02.2020, FaceBook இல் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete