என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 22 பிப்ரவரி, 2014

VGK 04 / 02 / 03 ] SECOND PRIZE WINNERS ! “காதல் வங்கி”

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 04 ]  ” காதல் வங்கி  ”


இணைப்பு:மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 
   


மற்றவர்களுக்கு: 

    இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள்


மொத்தம் இருவர்: 
திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்வலைத்தளம்: “அரட்டை”


rajalakshmiparamasivam.blogspot.com


மற்றும்திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்வலைத்தளம் : ” கீதமஞ்சரி ”


geethamanjari.blogspot.in

இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் 


 அவர்களின் விமர்சனம்:காதல்  என்பதே ஒரு மேஜிக் தானே!   மனிதர்களுக்குள் எத்தனை, எத்தனை ஜாலங்கள் செய்யக் கூடியது இந்த உணர்வு. அதைக் கருவாய் எடுத்துக் கொண்டு  அற்புதமாய் கதை சொல்லியிருக்கிறார் கோபு சார். இளம் வயதினர் அனைவரும் படிக்க வேண்டிய காதல் கதை தான் இது. 

கண்டதும் காதல் என்று சொல்லிக் கொண்டு, புறத் தோற்றத்தையும்,  நுனி நாக்கு ஆங்கிலத்தையும், வங்கி கணக்கையும்  பார்த்து வருவதல்ல காதல் என்பதையே 'வங்கிக் காதல் ' விளக்குகிறது... அது எங்கு எப்பொழுது வரும் என்றே தெரியாது என்பது ஜானகி, ரகுராமன் காதல் சொல்கிறது.  முதலில், இது என்ன பொருந்தாக் காதல் போல் தெரிகிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது. படிக்க படிக்க ரகுராமனின் உயர்ந்த குணங்கள் மட்டுமல்ல, அதைவிட உயர்ந்த குணங்கள் உடைய  ஜானகியே அவருக்கு உற்ற துணையாக வர வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. 


ஜானகியின் நடை, உடை, பாவனைகளை ஆசிரியர் விவரிக்கும் போதே, ஜானகியுடன், நம் வீட்டுப் பெண்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மனித இயல்பு தானே. அத்தனை உயர்ந்த, அழகுள்ள, கை நிறைய சம்பாதிக்கும்,  கலக்கலவெனப் பழகும்   ஜானகியை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். ரகுராமன் ஜானகியிடம் தன உள்ளத்தைப் பறி கொடுத்ததில் ஆச்சர்யமென்ன! 

ரகுராமனும், ஜானகியின் குணநலன்களுக்கு, சற்றும் குறைந்தவரில்லை.  ஆனாலும் அவர்  படிப்பு  சற்றே நம்மை யோசிக்க வைக்கிறது. 

ஜானகிக்கு   வேண்டுமானால் அவர் மேல் காதல் என்று சொல்லலாம். அவள் தாய் , தன மகள்  படிப்பிற்கு ஏற்ற, நல்ல படித்த  கை நிறைய சம்பாதிக்கும்  மாப்பிள்ளை வேண்டும் என்று நினைத்திருந்தால்  அது சகஜமே.  

இதையெல்லாம் தாண்டி ஜானகியின் தாய், கலாசாரத்திற்கும், ஆன்மீகத்திற்கும், கொடுக்கும் மரியாதை, தாய், மகள் உரையாடலில் நன்கு விளங்குகிறது. இப்படிப்பட்ட  ஒரு நல்ல தோழியே தாயாய் அமைந்த விதத்தில், ஜானகி  கொடுத்து வைத்தவள் தான். 

கண்டதும் காதல்,  உடனே ரெஜிஸ்தர்  திருமணம் என்று பதை பதைக்காமல், நன்கு யோசித்து, தங்கள் பொருளாதார நிலைமை சீராக்கிக் கொண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிகள், பல காதலர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்  என்று சொன்னால் மிகையாகாது என்றே நினைக்கிறேன். 

திருமணம்  முடிந்ததும், இருவரும் தங்கள், தங்கள் தொழிலை,  ஆர்வமாய் கவனிப்பது அவர்களுடைய முதிர்ச்சியைக் காட்டுகிறது.

 வில்லன் யாரும் வங்கிக் காதலுக்கு குறுக்கே வந்து நம்  இதயத்தை  படபடக்க வைத்து, பிபியை எகிற வைத்து ,  விடுவார்களோ என்ற பயம்  பாதிவரை இருந்தது. ஜானகியின் தாயின் உணர்வுகளை  ஆசிரியர் வில்லனாக்கி விடுவாரோ என்ற அச்சமிருந்தது உண்மை தான், ஆனால்  அந்தத் தடையும் சட சட வென்று  முறித்த காதாசிரியருக்கு நன்றி.  பின் பாதியில், இந்தத்  தம்பதிகள் திருமணம்  தடையில்லாமல் நடக்க வேண்டுமே என்ற வேண்டுதல்  மட்டுமே மிச்சம்  இருந்தது என்று சொல்ல, வேண்டும். 

திருமணத்தை  நடத்தி வைத்த கோபு சாருக்கு பாராட்டுக்கள்.  ஜானகி-ரகுராமன் தம்பதிக்கு வாழ்த்துக்களும், ஆசிகளும்.

ஒரு காதல் கதையை, எங்கும் முகம் சுளிக்கும்படியாக இல்லாமல், மிகவும் நாசுக்காக, அதே சமயத்தில், காதலின் சாரம்  முழுவதும்  இருக்கும் படியான கதையை சொல்லியிருப்பதற்கு,  நன்றிகள்  ஆசிரியருக்கு.

பாராட்டுக்கள் கோபு சார்.


 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.


    


இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி. கீதா மதிவாணன் 


 அவர்களின் விமர்சனம்:காதல் வங்கி’ என்னும் இச்சிறுகதை உருவான விதத்தை என் கற்பனையில் கொண்டுவந்து பார்க்க விழைகிறேன்உருவான சூழல் வங்கி என்பதை தலைப்பு யூகிக்கவைக்கிறதுஆனால் எப்போதுஎப்படிஇப்படியொரு சிந்தனையை வாசகர் உள்ளத்தில் கிளப்பியதற்காகவே கதாசிரியரைப் பாராட்டலாம்.

நாம் வங்கிக்குச் செல்கிறோம்அங்கே பணிபுரியும் ஒரு பெண் மடிசாரில் இருக்கிறாள்மடிசார் மட்டுமா

மடிசார் புடவையுடன்இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்ககாதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்னகாலில் மெட்டிகள் அணிந்துகைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டுதன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டுஉள்ளங்கைகளிலும்விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்கமுகத்திற்கு பசு மஞ்சள் பூசிநெற்றியிலும்நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டுதலை நிறைய புஷ்பங்கள் சூடிவாயில் தாம்பூலம் தரித்துகழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்ககோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போலக்காட்சியளிக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம்.

முதலில் கொஞ்சம் திடுக்கிடலாய்த்தான் இருக்கும் நமக்குஏனெனில் அட்ரா மாடர்ன் உடைகளை இளைஞர்கள் அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் விரும்பி அணிகிற இந்தக் காலத்தில்… நான்கு சுவருக்குள் பணிபுரியக்கூடிய ஏதேனும் அலுவலகம் என்றாலும் பரவாயில்லை, இப்படி பொதுமக்கள் புழங்கக்கூடிய ஒரு வங்கிக்கு இளம்வயதிலேயே பழம்பஞ்சாங்கம் போல் வருவதை யார்தான் விரும்புவார்கள்ஆனாலும் ஒருத்தி வந்திருக்கிறாள்அவளைப் பார்த்தவுடன் நமக்கு என்ன தோன்றும்

வீட்டில் ஏதோ விசேஷம் போலிருக்கிறதுஅதில் கலந்துகொண்டுவிட்டு பணிக்கு நேரமாகிவிட்டதால் அப்படியே வங்கிக்கு வந்துவிட்டிருப்பாள்வங்கி வந்ததும் மாற்றிக்கொள்ள கையில் வேறு புடவை எடுத்துவந்திருப்பாள்ஆனால் மாற்றிக்கொள்ள வசதிப் படாததால் அப்படியே வேலை செய்கிறாள் என்று நமக்குள் நாமே முடிவு செய்துகொள்வோம்ஆனால் கதாசிரியருக்கு கற்பனை வேறுவிதமாய் ஓடியிருக்கவேண்டும்அதையே ஒரு கதையாகவும் பரிணமிக்கச் செய்திருக்கவேண்டும் எனில் அவருடைய கற்பனாசக்திக்கான சான்று இது.

இப்படியும் யோசிக்கிறேன்வழக்கமாய் அவர் வங்கிக்குச் செல்லும்போதெல்லாம் அங்கு பணிபுரியும் ஜானகி போன்ற உற்சாகமானசுறுசுறுப்பானபுன்னகை மாறா முகத்துடன்வாஞ்சையுடன் வரவேற்று உபசரித்து உதவும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இந்தப் பதிவிரதைக்கேற்ற பர்த்தாவாக ஒரு நல்ல ஆம்படையான் கிடைத்தால் எவ்வளவு ஜோராக இருக்கும் என்ற ஆத்மார்த்த ஆசியும் விருப்பமும் இணைந்ததாகவும் இருக்கலாம்மொத்தத்தில் காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த வாரத்தில் மனத்துக்கு இதமானதொரு காதல் கதை

//அன்றேஅப்போதேஅங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது. //

இந்த வரிகளில் தொணிக்கும் யுக்தியைக் கண்டு வியக்கிறேன். காதல் வங்கிக் கணக்காகாசு வங்கிக் கணக்கா என்று யூகிக்க இடம் தரும் இடம் இது.

ஜானகியின் குணாதிசயம் எவ்வளவு நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறதோ… அதைவிடவும் பன்மடங்கு மேலாக ரகுராமனின் அம்சங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனவேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்குலோக விஷயங்களில் அதிக ஆர்வமோ ருசியோ இல்லாதவரை, தன் வங்கியிலும் அரைக்கோடி சேர்க்கவைத்துதன் மனத்திலும் காதல் டெபாசிட் செய்யவைத்தது ஜானகியின் சாதனைதான்..

இக்கதையின் சிறப்பாக தாய்க்கும் மகளுக்குமான சம்பாஷணைகள் வெகு அற்புதம் என்பேன்ஒரு தாய்க்கு இருக்கவேண்டிய எல்லா கவலைகளும் ஜானகியின் தாய்க்கு உள்ளதுமகள் எடுத்திருக்கும் முடிவு சரியானதுதான் என்று உள்மனம் ஆரவாரித்தாலும்இந்த முடிவில் அவள் உறுதியை அவள் வாயாலேயே அறிந்துகொள்ளச் செய்யும் தந்திரம் ரசிக்கவைக்கிறது.

தாயைப் பார்த்தே வளர்ந்திருக்கும் ஜானகிக்கு தாய் தந்தையின் புரிதலான வாழ்க்கையும்முறையான வளர்ப்பும் பாசமும்சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கும் தெளிவைத் தருகிறது. ஜானகியின் தாய்க்கு மகள் மேல் மாறாத நம்பிக்கையைக் கைக்கொள்ளச்செய்கிறதுகாதல் வேகத்தில் முடிவெடுத்துவிட்டு பின்னாளில் மனம் மாறி மகள் மனத்தளவிலும் வேதனைப்படக்கூடாதே என்ற ஒரு சராசரி தாயின் பரிதவிப்பும் அவள் வார்த்தைகளில் வெளிப்படுகிறதுமகள் யோசித்திராத கோணங்களிலும் யோசித்து கேள்விகள் மூலம் மகளின் மனத்திடத்தை சோதித்து தாய் ஏற்றுக்கொள்வது மிகச் சிறப்புகாதல் என்றதுமே என்ன ஏது யார் என்று கேட்காமல் தாம் தூம் என்று குதித்து எடுத்தவுடனேயே எதிர்ப்பைக் காட்டும் பெற்றோர்மனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் இது.

எல்லாச் சிறுகதைகளும் இறுதியில் ஒரு திருப்பத்தை நோக்கியே நம்மை செலுத்திப் பழக்கிவிட்டனஅப்பழக்கதோஷத்தாலோ என்னவோ இந்தக் கதையிலும் இறுதியில் ஒரு எதிர்பாரா திருப்பத்தை எதிர்பார்த்தே நகர்கிறது சராசரி வாசக மனம்ஜானகி மடிசார் கட்டி வங்கிப்பணிக்குச் செல்வது ஒரு திருப்பம் என்று சொல்லமுடியாதபடி ஜானகியின் அபூர்வ குணாதிசயம் நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது.

எல்லாமே திட்டமிட்டபடி செல்கிறதுசிறுகதைக்கான எந்தத் திருப்பத்தையும் கதாசிரியர் காட்டவில்லையேஏன்ஏன்இங்குதான் கதாசிரியரின் தேர்ந்த திறம் வெளிப்படுகிறதுதிட்டமிட்ட சீரானநேரான வாழ்க்கையில் அதிர்ச்சியூட்டும் எந்தத் திருப்பங்களையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதையே இக்கதையை சுமுகமாக முடித்திருப்பதன் மூலம் கதாசிரியர் வாசகர்க்கு உணர்த்துவதாக நான் கண்டுகொள்கிறேன்சபாஷ்! ‘

காதல் வங்கி’ என ஈர்க்கும் தலைப்புக்கு இன்னொரு சபாஷ்!

 

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.

     

மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 


சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது. 

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள


மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்


தனித்தனிப் பதிவுகளாக, 


பல மணி நேர  இடைவெளிகளில்


வெளியிடப்பட்டு வருகின்றன.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html


கதையின் தலைப்பு:”உடம்பெல்லாம் உப்புச்சீடை !”

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 27.02.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் 
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

46 கருத்துகள்:

 1. இரண்டாம் பரிசினைப்பகிர்ந்துகொண்ட இருவருக்கும்
  இனிய வாழ்த்துகள்.....பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 2. பரிசும் பாராட்டும் பெறுதற்குரிய
  அருமையான அற்புதமான விமர்சனங்கள்
  பரிசு பெற்ற திருமதி ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுக்கும்
  திருமதி.கீதா மதிவாணன் அவர்களுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் காதல் ஓர் மேஜிக் விமர்சனமும், திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் கற்பனாசக்தியான விமர்சனமும் ரசிக்க வைத்தது...

  இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி தனபாலன் சார் உங்கள் வாழ்த்துக்களுக்கு

   நீக்கு
 4. இரண்டாம் பரிசினை வென்ற சகோதரிகள் இராஜலஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. இரண்டாம் பரிசினை வென்ற இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. என் விமரிசனத்தைத் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவருக்கும், பரிசு வாங்க ஒரு வாய்ப்பளித்த கோபு சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ;))))) சந்தோஷம்.

   மேலும் மேலும் தொடர்ச்சியாக இதே போட்டிகளில் பல பரிசுகள் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   நடுவர் யார் என்ற மர்மம் நீடிக்க வேண்டியிருப்பதால், நடுவர் அவர்கள் சார்பிலும், நானே என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + மகிழ்ச்சிகள் ஆகியவற்றை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 7. பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் சபாஷ், சபாஷ்!!

  பதிலளிநீக்கு
 9. வித்தியாசமானதொரு போட்டியின் மூலம் பலருடைய திறமைகளை வெளிக்கொணரும் தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி வை.கோ சார். இரண்டாவது பரிக்குரியதாய் என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். எங்களை வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி February 23, 2014 at 6:01 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வித்தியாசமானதொரு போட்டியின் மூலம் பலருடைய திறமைகளை வெளிக்கொணரும் தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி வை.கோ சார். //

   ;))))) சந்தோஷம்.

   மேலும் மேலும் தொடர்ச்சியாக இதே போட்டிகளில் பல பரிசுகள் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.


   //இரண்டாவது பரிக்குரியதாய் என் விமர்சனத்தைத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.//

   நடுவர் யார் என்ற மர்மம் நீடிக்க வேண்டியிருப்பதால், நடுவர் அவர்கள் சார்பிலும், நானே என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + மகிழ்ச்சிகள் ஆகியவற்றை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 10. திரு VGK அவர்களின் சிறுகதை VGK விமர்சனப் போட்டியில், இரண்டாம் பரிசினை வென்ற சகோதரிகள் ராஜலஷ்மி பரமசிவம் மற்றும் கீத மஞ்சரி இருவருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

  வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான தகவலுக்கு மிக்க நன்றி Mr. DD Sir.

   நானும் இந்த இணைப்பினை தங்கள் தகவலுக்கு முன்பே இன்று அகஸ்மாத்தாகப் பார்த்து விட்டேன்.

   எனினும் தங்களின் தகவலுக்கு மிக்க மகிழ்ச்சியே.

   அன்புடன் VGK

   நீக்கு
 12. சிறப்பான விமர்சனத்தை எழுதி வெற்றி பெற்ற இருவருக்கும் என்
  மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .உடம்பெல்லாம்
  உப்பு சீடை என்ற கதையைப் படித்தேன் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ஆனாலும் சொல்லத் தான் போகிறேன் என் கருத்தும் தயார் நிலையில் உள்ளதையா .தங்களின் அருமையான படைப்பாற்றலுக்குத் தலை
  வணங்குகிறேன் ஐயா !! பகிர்வுக்கு மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்களுக்கு நன்றி அம்பாளடியாள்

   நீக்கு
  2. அம்பாளடியாள் வலைத்தளம் February 23, 2014 at 12:47 PM

   வாங்கோ, கவிதாயினி அவர்களே ! வணக்கம். நலமா? தங்களைப்பார்த்துப் பேசி ரொம்ப நாட்கள் ஆச்சு ! ;( எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும் என நம்புகிறேன்.

   //உடம்பெல்லாம் உப்பு சீடை என்ற கதையைப் படித்தேன் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ... ஆனாலும் சொல்லத் தான் போகிறேன் ... என் கருத்தும் தயார் நிலையில் உள்ளதையா.//

   நான் இதை நம்ப மாட்டேன். இன்னும் இரண்டு நாட்கள்கூட இல்லை. சுமார் 45 மணி நேரங்கள் மட்டுமே உள்ளன. விமர்சனம் எனக்குக் கிடைத்து நான் தங்களுக்கு என் STD. ACK. அனுப்பி வைக்கணும். அதுபோல நடந்தால் மட்டுமே நம்புவேனாக்கும்.

   உடனடியாக அனுப்புங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

   //தங்களின் அருமையான படைப்பாற்றலுக்குத் தலை
   வணங்குகிறேன் ஐயா !! பகிர்வுக்கு மிக்க நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த மேங்கோ ஜூஸுடன் கூடிய இனிய அன்பு நன்றிகள்.

   தங்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ..... பிரியமுள்ள கோபு [ VGK ]

   நீக்கு
 13. விமர்சனத்தைச் சிறப்பான முறையில் எழுதி இரண்டாம் பரிசு பெற்றுள்ள கீதா & ராஜலஷ்மிக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 14. திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் மற்றும் திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு
 15. அழகான விமரிசனங்கள் எழுதிய,பரிசு பெற்ற ,திருமதி கீதா மதிவாணன்,திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் இருவருக்கும் நல் வாழ்த்துகள். அன்புடன்

  பதிலளிநீக்கு
 16. அற்புதமான விமர்சனங்கள் தந்த திருமதி. கீதா மதிவாணனுக்கும் திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 17. பரிசு பெற்ற திருமதி ராஜலெட்சுமி பரமசிவம் அவர்களுக்கும்
  திருமதி.கீதா மதிவாணன் அவர்களுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
  Vetha.Elangathilakam

  பதிலளிநீக்கு
 18. இராஜலஷ்மி பரமசிவம் . கீதா மதிவாணன் இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. இந்த வெற்றியாளர் அவர்கள், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://rajalakshmiparamasivam.blogspot.in/2014/02/blog-post_22.html
  திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு

 20. திருமதி கீதா மதிவாணன் அவர்கள் [கீதமஞ்சரி]

  இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  இணைப்பு: http://geethamanjari.blogspot.in/2014/04/blog-post.html

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 21. இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  இணைப்பு:
  http://www.geethamanjari.blogspot.com.au/2014/04/blog-post.html

  தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 22. இரண்டாம் பரிசுகளை வென்ற ராஜலக்ஷ்மிக்கும் கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 23. பரிசு வென்ற திருமதிகள் கீதமஞ்சரிக்கும் ராஜலஷ்மி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. திருமதி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 27, 2015 at 7:15 PM

   //திருமதி ராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   நீக்கு
 25. பரிசு கெலிச்சவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. திருமதி ராஜலட்சுமி பரமசிவம் கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். தாய்மகள் பேச்சு நம் கலாசாரம் ஆன்மீக விஷயங்களை ரசிக்கறாங்க

  பதிலளிநீக்கு
 27. ஒரு காதல் கதையை, எங்கும் முகம் சுளிக்கும்படியாக இல்லாமல், மிகவும் நாசுக்காக, அதே சமயத்தில், காதலின் சாரம் முழுவதும் இருக்கும் படியான கதையை சொல்லியிருப்பதற்கு, நன்றிகள் ஆசிரியருக்கு./// ரசித்தேன்.
  திட்டமிட்ட சீரான, நேரான வாழ்க்கையில் அதிர்ச்சியூட்டும் எந்தத் திருப்பங்களையும் எதிர்கொள்ளவேண்டிய அவசியமில்லை என்பதையே இக்கதையை சுமுகமாக முடித்திருப்பதன் மூலம் கதாசிரியர் வாசகர்க்கு உணர்த்துவதாக நான் கண்டுகொள்கிறேன். சபாஷ்!// ரசித்தேன்.
  சகோதரியர் இருவர்க்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் மற்றும் திருமதி. கீதா மதிவாணன் இருவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்..!

  பதிலளிநீக்கு