About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, February 2, 2014

VGK 02 / 02 / 03 ] SECOND PRIZE WINNERS “தை வெள்ளிக்கிழமை”
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 
VGK 02 ] 


”தை வெள்ளிக்கிழமை”மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள்  மொத்தம்: 

ஐந்து. 
 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் 

நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய 

நல்வாழ்த்துகள்.    


மற்றவர்களுக்கு:  


BETTER LUCK NEXT TIME !

    இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் 


இருவர் :-

1 ] திரு. பழனி கந்தசாமி 


ஐயா அவர்கள்”மன அலைகள்”
இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. பழனி கந்தசாமி ஐயா


அவர்களின் விமர்சனம்:தாய்மை என்பது ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் இயற்கை உணர்வு. ஐந்தறிவு மட்டும் இருக்கும் மிருகங்களில் கூட இந்த உணர்வை பல நேரங்களில் பார்க்கலாம். அந்தப் பாசப்பிணைப்புக்கு முன்னால் வேறு எந்த உணர்வும் இணையல்ல. இந்த உணர்வை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இந்தக் கதாசிரியர்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு சமயம் எடுக்கும் முடிவுகள் வேறொரு சமயத்தில் மாறி விடுகின்றன. இதுதான் இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதை குற்றம் என்று சொல்ல முடியாது. பிரசவம் பார்த்த டாக்டர் இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அந்த கதா பாத்திரம் மனதில் நிலை பெறுகிறது.

சராசரி இந்தியக் குடும்பங்களில் நடைபெறும் பாசப் போராட்டங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களை நாம் நம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியும். சிறுகதையின் சிறப்பே அதுதான். நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக் கூடிய மனிதர்களையும் சம்பவங்களையும் நம் முன்னால் நிறுத்துவதுதான் ஒரு கதாசிரியரின் வெற்றி.

அந்த வகையில் இந்தக் கதை நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறது.

அனுப்புதல்: பழனி.கந்தசாமி.
     

2] திரு. பொன் தனபாலன் அவர்கள்

வலைத்தளம்: 
“திண்டுக்கல் தனபாலன்”

இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. பொன். தனபாலன் 


அவர்களின் விமர்சனம்:
'தை வெள்ளிக்கிழமை'


"அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது" எனும் போது யாருக்குத் தான் கொடுக்க மனசு வரும்...

"வெள்ளிக்கிழமை" இங்கு உள்ள பல ஜவுளிக் கடைகளில் (Handloom Sarees Sales), கொடுக்க வேண்டிய யாருக்கும் பணம் பலரும் தருவதில்லை... ஆனால், எனக்கு தெரிந்து இருவர், எந்தக் கிழமையானாலும் / விசேசமானாலும், "இன்று வெள்ளிக்கிழமை பணம் தருகிறேன், சிறப்பாக அனைத்தும் நடக்கட்டும்" என்பார்கள்...

சரி பணத்தை விடுங்கள்... மறுமுனையை சிந்திக்கிறேன் :

ஆனாலும் குழந்தையை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் அந்த தம்பதியினருக்கு எவ்வளவு துயரம் இருந்திருக்கும்...? ஒரு மாதம் முன்பு இதே போல் உறவினர் ஒருவருக்கு நடந்தது... லீகல் டாகுமெண்ட்ஸ் உட்பட எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது... பல வருடங்களாக எதிர்ப்பார்த்து, எதிர்ப்பார்த்து ஏமாற்றம் தான்... இத்தனைக்கும் மிகவும் வசதியான குடும்பம் கிடையாது... இருக்கும் இடத்தை விற்று, கடன் பல வாங்கியும்.... அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது... 

தாய்மை சிறப்பு - இந்த கதையின் மூலம் அனைவருக்கும் தெரியும்... அதே சமயம்  அந்த தாய்மை இல்லாத பெண்ணை பற்றி யோசித்து இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்...

"அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது, இருந்தாலும், இந்தக் குழந்தையை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்... அவர்களுக்கு விருப்பமானதை கொடுத்தால் போதும்" என்று முடிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

இது போலவும் ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்த்த டாக்டருக்கு, "நான் போன் செய்த பிறகு புறப்பட்டு வாங்கோ" என்று சொன்ன டாக்டருக்கு நன்றிகள்... 

பெயர் : பொன்.தனபாலன்

வலைத்தளம் : http://dindiguldhanabalan.blogspot.com/     
இருவருக்கும் மனம் நிறைந்த 


பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.


-oOo-மிகக்கடினமான இந்த வேலையை


சிரத்தையுடன் பரிசீலனை செய்து


நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.


போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப் 
பதிவுகளாக 

ஏற்கனவே ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, 

இனியும் ஒன்று வெளியிடப்பட உள்ளது.


காணத்தவறாதீர்கள்அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 


உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 


“சுடிதார் வாங்கப் போறேன்”விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 06.02.2014  இரவு 8 மணிக்குள் [I.S.T]என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

28 comments:

 1. திரு. பழனிச்சாமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  எனது விமர்சனத்தையும் தேர்ந்தெடுத்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா... நன்றிகள் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. சார் நானும் விமர்சனம் அனுப்பினேன். ஆனால் எனக்கு அக்னோலட்க்மென்ட் வரவே இல்லை. ஆர்வம் இருந்தும் பங்கேற்க முடியவில்லை. மீண்டும் முயல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Mythily kasthuri rengan February 2, 2014 at 6:58 AM

   //சார் நானும் விமர்சனம் அனுப்பினேன். ஆனால் எனக்கு அக்னோலட்க்மென்ட் வரவே இல்லை. ஆர்வம் இருந்தும் பங்கேற்க முடியவில்லை. மீண்டும் முயல்கிறேன்.//

   அன்புடையீர், வணக்கம்.

   தாங்கள் அனுப்பியதாகச் சொல்லும் விமர்சனம் எனக்கு இதுவரை வந்து சேரவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   விமர்சனம் அனுப்பும் ஒவ்வொருவருக்கும், உடனடியாகவோ அல்லது அடுத்த 24 மணி நேரங்களுக்குள்ளாகவோ நான் STANDARD ACKNOWLEDGEMENT அனுப்பி விடுவது என் வழக்கம் என்பதை அறியவும்.

   என்னிடமிருந்து STD. ACK. கிடைத்துள்ளதா என்பதைத் தாங்கள் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

   தாங்கள் சரியான E-mail ID க்குத்தான் அனுப்பியுள்ளீர்களா என சரி பார்த்துக்கொள்ளவும்.

   ACKNOWLEDGEMENT வராவிட்டால் தாங்கள் என்னை மெயில் மூலம் தொடர்புகொண்டு கேட்டிருக்கலாமே !

   ஏன் நீங்கள் அவ்வாறு செய்யாமல் போனீர்கள் ? ;(

   என் e-mail ID : valambal@gmail.com

   [ V A L A M B A L @ G M A I L . C O M ]

   இந்த வாரப்போட்டியிலிருந்து தொடர்ந்து கலந்து கொள்ளவும்.

   http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html இதற்கு உடனே விமர்சனம் எழுதி புதன் கிழமைக்குள் அனுப்புங்கோ. STD. ACK. வராது போனால் உடனடியாக மெயில் மூலம் என்னைத் தொடர்புகொண்டு கேளுங்கோ. போட்டிக்கான இறுதி நாளான வியாழன்வரை [11th hour வரை] காத்திருந்து RISK எடுத்து DISAPPOINT ஆக வேண்டாம்.

   இன்னும் 38 வாய்ப்புகள் தங்களுக்கு உள்ளது.

   அட்வான்ஸ் வாழ்த்துக்ள்.

   அன்புடன் VGK

   Delete
 3. திரு, பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும், திரு. தனபாலன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 4. இரண்டாம் பரி பெற்ற
  திரு, பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும்,
  திரு. தனபாலன் அவர்களுக்கும்
  இனிய பாராட்டுக்கள்.. அன்பான வாழ்த்துகள்..!

  ReplyDelete
 5. விமரிசனம் எழுதிப் பரிசு பெற்ற டாக்டர் கந்தசாமிக்கும் திண்டுக்கல் தனபாலனுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கும், தனபாலன் சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. சிறந்த கருத்துக்கள் வழங்கி 2-ஆம் பரிசு பெரும் கந்தசாமி ஐயா அவர்களுக்கும் தனபாலன் சாருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இரண்டாம் பரிசைப் பெற்ற டிடிக்கும், திரு பழனி கந்தசாமி அவர்களுக்கும் வாழ்த்துகள். இருவருமே அடுத்தடுத்துப் பரிசுகள் பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. இரண்டாம் பரிசைப்பெற்ற பழனி கந்தசாமி சாருக்கும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் இருவர் விமர்சனமும் மிக அருமையாக இருந்தது.

  ReplyDelete
 10. பழனி கந்தசாமி அய்யாவுக்கும் பொன் தனபாலன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 11. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், இரண்டாம் பரிசினை வென்ற அய்யா திரு பழனி கந்தசாமி அவர்களுக்கும் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், இரண்டாம் பரிசினை வென்ற அய்யா திரு பழனி கந்தசாமி அவர்களுக்கும் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. இரண்டாம் பரிசினை வென்ற திரு பழனி கந்தஸாமி அவர்களுக்கும்,திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
 14. இரண்டாம் பரி பெற்ற
  திரு, பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும்,
  திரு. தனபாலன் அவர்களுக்கும்
  இனிய பாராட்டுக்கள்..

  ReplyDelete
 15. இரண்டாம் பரிசினை பெற்ற திரு பழனி கந்தசாமி அவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.....

  தொடரட்டும் பரிசு மழை.

  ReplyDelete
 16. இரண்டாம் பரிசு பெற்ற திரு பழனி கந்தசாமிக்கும், திரு தனபாலன் (எப்படி சார் time manage செய்கிறீர்கள்?!) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. திரு பழனி கந்தசாமி அவர்களுக்கும் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. http://swamysmusings.blogspot.com/2014/09/blog-post_8.html
  முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்.

  இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் இன்று [08.09.2014] தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 19. ஆஹா, எனக்கும் ஒரு பரிசு.
  பரிசு கொடுத்தவருக்கும், என்னைத் தேர்வு செய்த நடுவருக்கும், என்னைப் பாராட்டிய அன்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி May 29, 2015 at 8:12 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆஹா, எனக்கும் ஒரு பரிசு. பரிசு கொடுத்தவருக்கும், என்னைத் தேர்வு செய்த நடுவருக்கும், என்னைப் பாராட்டிய அன்பர்களுக்கும் நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், மிக்க நன்றி. பரிசினை வென்றுள்ளதற்கு மீண்டும் என் வாழ்த்துகள், ஐயா.

   Delete
 20. பரிசு வென்ற திருபழனி கந்தசாமி ஐயா. திண்டுக்கலதனபாலன் சார் அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 21. திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  தாய்மையை உயர்த்திய கோபு அண்ணாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 27, 2015 at 6:55 PM

   //திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களுக்கும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

   தாய்மையை உயர்த்திய கோபு அண்ணாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   அன்புடன் கோபு அண்ணா

   Delete
 22. வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 23. திரு பழனி கந்தசாமி ஸார் திரு திண்டுக்கல் தனபாலன் ஸாருக்கு வாழ்த்துகள் நம் நடுத்தர வர்க்கத்து பாசப் போராட்டத்தை சிலாகித்து சொல்லி இருக்காங்க பழனி ஸார். குழந்தை இல்லாத தம்பதியின் மன நிஸையை தனபாலன் ஸார் யோசிக்கறாங்க.

  ReplyDelete
 24. பரிசுபெற்றவர்களுக்கு பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

  ReplyDelete