என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 8 பிப்ரவரி, 2014

VGK 03 / 02 / 03 ] SECOND PRIZE WINNERS !’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 03 ] 


” சுடிதார் வாங்கப் போறேன் ”மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 


நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்து
இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 

நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 

இனிய  நல்வாழ்த்துகள். 


   


மற்றவர்களுக்கு: 
    இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர் :


[இந்தப்புகைப்படம், நவராத்திரி சமயம் 

06.10.2013 அன்று  என்னாலேயே 

மிகவும் CASUAL ஆக எடுக்கப்பட்டது. 

அவர்களின்  விருப்பம் + அனுமதியுடன் மட்டுமே இன்று 

இங்கு என்னால் வெளியிடப்பட்டுள்ளது  - vgk][1] 


திருமதி 


கீதா சாம்பசிவம்அவர்கள்

sivamgss.blogspot.in


" எண்ணங்கள் “


இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திருமதி கீதா சாம்பசிவம் 


அவர்களின் விமர்சனம்:

சுடிதார் வாங்கப் போறேன் கதையில் பாராட்டுக்கு ஏங்கும் மனித மனம்!      பாராட்டுக்கு ஏங்குவது கணவன்.   கடைத்தெருவுக்கே வராமல் இருக்கும்  மனைவியோ வாய் விட்டு எதுவும் சொல்வதில்லை     அவருக்குப் பிடித்ததா, பிடிக்கிறதா என்பதை விட மற்றவர்க்குப் பிடிக்கிறதா என்று பார்க்கிறார்.  அது தான் ஒத்த வயதுடைய சம்பந்தி அம்மாவின் ரசனையை அவர்கள் கேட்டு அறிவதிலிருந்து புரிகிறது.

திருப்தி அடையாத பெண்மனம்!   பெண்கள் உடைகளில் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.  என்ன தான் நிறையப் பணம் போட்டுக் கடைகடையாய் ஏறி இறங்கி அலசி ஆராய்ந்து வாங்கினாலும் ஏதோ ஒரு குறை இருக்கத் தான் செய்யும்.  அது மனதின் ஓர் ஓரத்தில் ஒளிந்தும் இருக்கும்.  அதே துணியை மற்றவர் பார்த்துப் பாராட்டினால் அந்தத் தேர்வு அவங்க சொந்தத் தேர்வாக இருந்தால் பெருமிதம் கட்டாயம் உண்டாகும்.  கணவன் வாங்கியதை மற்றவர் பாராட்டுகையில் அந்த உண்மையைச் சொல்ல விடாமல் சுய கெளரவம் தடுக்கிறது!   திரு வைகோ அவர்கள் மனைவியின் சுயநலம், கணவன் தனக்கே உரியவன்,   மற்றவர் பாராட்டுக் கூடாது என்னும் எண்ணம் இருப்பதாகச் சொல்கிறார்.  இருக்கலாம்.  தன் கணவனின் தேர்வைத் தான் பாராட்டாத போது இந்த இளம்பெண் பாராட்டுகிறாளே என்ற குற்ற உணர்வாகவும் இருக்கலாம்.  வெளிப்படையாக உணர்வுகளைப் பகிராதவரால் அதை வெளிக்காட்ட முடியவில்லை.

 கடைகளுக்குச் சென்று பேரம் பேசிப் பொருட்களை வாங்கும் பெண்கள் மத்தியில் இவர் அதிசயமானவரே!    அந்தக் கணவன் கொடுத்து வைத்தவர் என்று சொல்ல முடியுமா என்றால் கணவன்  கோணத்திலிருந்து பாராட்டு எதுவும் மனைவியிடமிருந்து வராததால் மன உளைச்சலில் இருக்கிறார்.!  ஒரு தரமாவது மனைவி தான் செய்வதைப் பாராட்ட மாட்டாளா? என ஏக்கம்.  கடைசியில் எதிர்பாரா இடத்திலிருந்து வருகிறது அந்தப் பாராட்டு.

வரப் போகும் மருமகளின் பிறந்த நாளுக்கு எனத் துணி எடுக்கும் அந்த மாமனார் அதற்கும் அலைகிறார்.  உண்மையில் அவருக்குக் குழப்பமே.  இப்படி இந்த உடையைப் போடுவாங்களா? கை இப்படி இருக்கலாமா? எல்லாம் ஒரே நிறத்தில் அமைய வேண்டாமா என்றெல்லாம் குழம்பிக் குழம்பிக் கடைக்காரப் பெண்ணின் சொல்லை நம்பி வாங்கிச் செல்கிறார்.   ஆனால் அதைப் பார்த்ததுமே புன்னகைக்கும் மனைவியின் முகம் அது நல்ல தேர்வு என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது.   மனைவியை அணிந்து பார்க்கச் சொல்லியும்  மனைவி மறுக்கிறார். இந்த வயதிலும் மனைவியிடம் இவர் வைத்திருக்கும் பாசமும், அன்பும், காதலும் இங்கே போட்டி போட்டுக் கொண்டு வெளி வருகிறது.  ஆனால் மனைவியோ அதைப் புரிந்தும் புரியாதவளாகத் தன் வேலையே கண்ணாக இருக்கிறாள். மனைவி அலக்ஷியம் செய்வதாக எண்ணாமல் கணவனின் அன்பு தனக்கு என்றென்றும் மாறாமல் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட மனம் என்று புரிந்து கொண்டேன். 

மருமகளிடம் போய்ச் சேர்ந்த அந்த உடை அவளுக்கும் மிகவும் பிடித்துவிட்டதோடு இல்லாமல் தன் வருங்காலக் கணவனுக்கு அதைப் போட்டு ஃபோட்டோ பிடித்து அனுப்பி அவன் மகிழ்ந்ததையும் கண்டு தானும் மகிழ்கிறாள்.  அதே மகிழ்ச்சியோடு தன் வருங்கால மாமனார் வீட்டுக்கும் வந்து உடை மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறாள்.  எதிர்பாராமல் அவரின் மகனும் தொலைபேசியில் தன் வருங்கால மனைவிக்குத் தந்தை வாங்கித் தந்திருக்கும்  உடை மிகப் பொருத்தமாக அமைந்திருப்பதைச் சொல்லிப் பாராட்டவே அவருக்குத் திகைப்பு!  பின்னர்  தன் வருங்கால மருமகள் தன் மகனுக்குப் படம் எடுத்து அனுப்பி இருப்பதைத் தெரிந்து கொண்டு மகன், மருமகள் இருவரின் பாராட்டும் ஒருசேரக் கிடைத்த மகிழ்ச்சியில் மனம் திளைக்கிறார்.  இப்போது தான் அவருக்குத் தன் தேர்வில் ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.  உள்ளரீதியாகத் தன் தேர்வெல்லாம் சரியில்லையோ என மனம் வருந்தியவருக்கு இளைஞர்களான மகன், வருங்கால மருமகள் மூலம் நம்பிக்கை என்னும் கீற்று ஒளி வீசிப் பிரகாசிக்க ஆரம்பித்துள்ளது. 

இந்தக் கதை சாமானிய மனிதமனத்தில் தோன்றும் ஆசைகளின் வெளிப்பாடுதான் என்றாலும் கடைசியில் பரமாசாரியாரின் அருள் வாக்கோடு முடிக்க எண்ணுகிறேன்.

"யாரையும் அவரவர்  நற்செயல்களுக்காகவோ, நற்குணங்களுக்காகவோ அதிகம் பாராட்டாதீர்கள்.  அவர்கள் நற்குணங்களையும், நற்செயல்களையும் மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புவார்கள் தான்.  ஆனாலும் பாராட்டு என்பது ஒரு போதை!ஈஸ்வரனும், குருவும் மட்டுமே நேரிடையாகப் பாராட்டத் தக்கவர்கள். நண்பர்கள், உறவினர்களை  முகத்துக்கு நேரே பாராட்டக் கூடாது.  மற்றவரிடம் அவர்களைக் குறித்து நல்லவிதமாகச் சொல்லலாம்.  நம் வீட்டில் வேலை செய்யும் ஊழியனைக் கூட அவன் நல்லவிதமாக வேலையை முடித்துத் தந்ததும் அதற்காகப் பாராட்டலாம். அதே சமயம் உங்கள் சொந்த மகனைப் பாராட்டாதீர்கள்!"

இது பரமாசாரியாரின் அருள் வாக்கின் உட்கருத்து மட்டுமே. ஒருவேளை இந்தக் கதையில் வரும் அந்த மனைவி இதைப் படித்தவராய் இருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட்டதையும் தவிர்க்க முடியவில்லை. :))))


     இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்


திரு. E.S. சேஷாத்ரி 

காரஞ்சன் [சேஷ்] அவர்கள்

esseshadri.blogspot.com
இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. E.S. சேஷத்ரி 


அவர்களின் விமர்சனம்:


“சுடிதார் வாங்கப் போறேன்” மனதில் துளிர்க்கும் எண்ணமா? வெளியே செல்லும்போது வீட்டவர்க்கோ, வெளியில் கேட்பவர்க்கோ சொல்லுகின்ற சேதியா? ஜவுளிக்கடைக்குள் நுழைந்தவுடன் கடைக்காரர் என்ன வேண்டும் என்று கேட்பதற்குச் சொல்லும் பதிலா? இப்படி தலைப்பே பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றது.

தான் வாங்கி வருகின்ற சேலை குறித்து தன் மனையாள் எதுவும் கருத்துரைப்பதில்லை என்றும் மகிழ்வை வெளிப்படுத்துவதில்லை என்றும் தான் தெரிந்தெடுத்த நேர்த்தியைப் பாராட்டவில்லையென்றும் அதை மகிழ்வொடு பெற்று அணிந்துகொள்வதில்லையென்றும் மனவாட்டம் பெறுகின்ற அந்த மணாளர் அவளின் காபி டீயையாவது, சிற்றுண்டியையாவது, உடையையாவது, அணிகளையாவது என்றேனும் பாராட்டியது உண்டா? பாராட்டுபவராக இருந்திருந்தால் இந்த எதிர்பார்ப்பு ஏற்புடையது.

எந்த மகளிரும் மாதராரும் துணிக்கடையில் விளம்பரப் பதுமைக்கு கட்டியுள்ள உடுப்புகளைப் பெரிதும் விரும்புவார்கள். மற்றவர்கள் உடுத்தி அல்லது பூண்டு வருவதை ஏற்றமுடையதாகக் கருதுவார்கள். அவர்களிடம் இருப்பதை விட தன்னிடம் இருப்பது நேர்த்தியுடையது, அழகுடையது அலங்காரமானது, விலைமதிப்புடையது என்றாலும் மற்றவர்களின் மேனியில் திகழ்வதையே பெரிதும் அவாவுவார்கள். அவர்களே போய் எடுத்தால் இதைவிட தரக்குறைவாகவே, சிக்கனமாகவே எடுப்பார்கள். இன்னும் சிலர் மற்றவர்களிடம் இருப்பதைவிட தனக்கு வருவது மிக விலையுடையதாக மிக்க தரமுடையதாக அமையவேண்டும் என்று அவாவுவார்கள். எப்போதும் மற்றவர்கள் பார்த்து ,போற்றிப் பாராட்டினால், நயங்களை விவரித்துச் சொன்னால் அப்போதுதான் தன்னவர் வாங்கிவந்தது தனக்கு உகந்ததாக ஏற்றுக்கொள்வார்கள்.

உள்ளுரிலுள்ள சமவயதுள்ள தன் மூத்த சம்பந்தி அம்மாள் நன்றாயிருப்பதாகப் பரிந்துரை செய்யும் புடவைகளை மட்டும் இவரின் மனைவி அணிந்துகொள்ளும் வழக்கம் கொண்டிருந்ததும், அந்த சம்பந்தியம்மாளும் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரும் பாராட்டும் வகையில் இவர் ஒரு புடவையை சமீபத்தில் வாங்கி வந்ததும் உடைகளைத் தெரிவு செய்து வாங்குவதில் அவர் தனித்திறமை வாய்ந்தவர் என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மகன் வெளியூரில் இருப்பதாலும், மனைவி எப்போதுமே துணிக்கடைக்கு வருவதில் நாட்டமில்லாதவர் என்பதாலும் தன் வருங்கால மருமகளுக்கு, பிறந்தநாள் பரிசாக சுடிதார் ஒன்றை வாங்கித்தர அவர் மட்டுமே சென்றது ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் அமைகிறது. கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளவயதுப் பெண் என்பதால் சுடிதார் வாங்கிக் கொடுக்க நினைப்பது ஒரு சரியான முடிவு. அதன் மூலம் காலமாற்றத்திற்கேற்ப புதுமையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வாய்ந்தவர் என்பது புலப்படுகிறது.

பலமுறை புடவைகள் வாங்கிய அனுபவம் இருந்தாலும், முதன்முதலாக ஒரு சுடிதார் வாங்கச் சென்ற அனுபவத்தை மிக மிக நகைச்சுவையாகவும், யதார்த்தமாகவும் விளக்கியவிதம் பாராட்டுக்குரியது. சுடிதார் வாங்கச் செல்லுமுன் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்களை விற்பனைப் பிரதிநிதியின் உரையாடல் மூலம் விளங்கவைத்தது அருமை!  “ஆள்பாதி ஆடைபாதி “ என்பார்கள். முதன்முதலாக பிறந்தநாள் பரிசாக ஒரு நல்ல உடையை, வரப்போகும் மருமகளுக்குப் பரிசாக அளிப்பதன் மூலம்  தன்னைப் பற்றி  ஒரு நல்லுணர்வு ஏற்படும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது!

ஒரு சுடிதாரைத் தெரிவு செய்ய பல பிரிவுகளுக்கும் சென்று விலை ஒரு பொருட்டல்ல தரமும் நேர்த்தியும் மிக முக்கியம் என்பதில் கவனம் செலுத்தி  தெரிவு செய்ததில் இருந்தே அவரின் ரசனை தனித்தன்மை வாய்ந்தது என்பது புலனாகிறது. சுடிதார்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்த விதத்தை “ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன. இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன” என்று விவரிப்பதன் மூலம் நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.

வாங்கித்தந்ததைப் பெற்றுக்கொண்டாலும் உடுத்திக்கொள்வதற்கு முன்பாக தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணாளருக்கு அதை டிஜிடல் கேமரா மூலம் போட்டோ எடுத்துஇண்டெர்நெட் மூலம் அனுப்பி அவரது பாராட்டைப் பெற்ற பிறகே அதனை உடுத்திவந்து தன் பிறந்த நாளுக்கான ஆசீர்வாதத்தை தனக்கு ஏற்படவுள்ள புக்ககத்து மாமன் மாமியிடம் பெற்றது மாமனாரைவிட மருமகள் சமயோசிதமான ஆற்றலுடையவள் என்பதை மெய்ப்பிக்கின்றது.

வாங்கிய சுடிதார் இன்றைய நவ நாகரீகப் பெண்கள்  உபயோகிக்கக் கூடிய ஃபேஷன் தானா, என்ற சஞ்சலமும், சந்தேகமும் மனதினில் இருக்க அதை நிவர்த்தி செய்து கொள்ள ஒருமணிநேரம் செலவு செய்து வழியில் கண்ட இளம்பெண்களைப் பார்த்து சுடிதார் குறித்த கருத்துக் கணிப்பை நடத்தியதும், அதன் பாதிப்பால் வீட்டிற்கு வந்ததும் தன் மனைவியை சுடிதாரில் பார்க்க ஆசைப்பட்டு அது ஈடேறாமல் போனதும் நல்ல நகைச்சுவை.

தன்னுடைய தேர்வுக்குக்கூட ஒரு அங்கீகாரம் இருக்கிறதே என்ற பூரிப்பு மனைவி இடத்தைவிட வரப்போகின்ற மருமகளிடம் கிடைத்தது கதையில் களிகூறத்தக்கது! இந்த நிகழ்வுக்குப்பின் தன் மணாளருடைய தெரிவு செய்யும் திறனை மனைவியும் தக்கதாக ஏற்றிருப்பாள் எனக் கருத இடமுள்ளது. குடும்பத்தில் ஒற்றுமையும் சுமூகமும் நிலவ ஒரு திருமகள் வருகிறாள் என்பது இந்தக்கதையில் உணரப்படுகின்ற சேதியாக இருக்கின்றது. குடும்பத்தின் குதூகலத்திற்கு வித்திடுகின்ற கதை இது. இத்தகைய விருட்சங்கள் உலகமெலாம் மிகுந்து சாந்தமும் சமாதானமும் நிலவுமாக!

-காரஞ்சன்(சேஷ்)

     இவர்கள் இருவருக்கும் 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.

    மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.

போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்

வெளியிடப்பட்டு வருகின்றன.


காணத்தவறாதீர்கள் !’போனஸ் பரிசு’ பற்றிய 
மகிழ்ச்சியானதோர் தகவல்’சுடிதார் வாங்கப் போறேன்’ என்ற
இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி அனுப்பியுள்ள ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

முதன் முதலில் என்  டும்.. டும்.. டும்.. டும்.. போட்டி அறிவிப்பினில் http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html தெரிவிக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுக்கும், இந்த போனஸ் பரிசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. 

அது வேறு தனியாக ! இது வேறு போனஸாக !!

மகிழ்ச்சி தானே ! தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.  
  


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 

“காதல் வங்கி ”

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 13.02.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

26 கருத்துகள்:

 1. இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
  Vetha.Elangathilakam

  பதிலளிநீக்கு
 3. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், இரண்டாம் பரிசினை வென்ற சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு சகோதரர் E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. மீண்டும் பரிசு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்வடைந்தேன்! என் உளமார்ந்த நன்றி! பரிசு பெற்ற பரிசு பெறப்போகும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. பரிசு கிடைத்திருப்பது சற்றும் எதிர்பாரா ஒன்று. திரு சேஷாத்ரி அவர்களுக்கும் மற்றும் பரிசு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். முதல் பரிசு பெற்றவர்கள் யார்னு இன்னும் வெளியிடலை போலிருக்கே?

  பதிலளிநீக்கு
 6. நான் எந்தப் போட்டியிலும் கலந்து கொண்டதே இல்லை. திரு வைகோ அவர்களின் தொடர்ந்த ஊக்கத்தினால் இதிலே முதல் முறையாகக் கலந்து கொண்டேன். பரிசு கிடைத்திருப்பதற்கு நன்றியும் அனைவருக்கும் வணக்கமும்.

  பதிலளிநீக்கு
 7. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு E.S. சேஷாத்ரி அவர்களுக்கும்
  இனிய வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 8. ///ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். //

  சந்தோஷப்பகிர்வுகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 9. பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திரு. காரஞ்சன் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திரு. சேஷாத்ரி இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் மற்றும் திரு. சேஷாத்ரி இருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள். திருமதி கீதா சாம்பசிவம் அவர்களது விமர்சனத்தில் பரமாச்சாரியாரின் அருள்வாக்கோடு முடித்திருக்கும் விதமும், சேஷ் அவர்கள் கதாசிரியர் தன் மனைவியை எதற்காகவாவது பாராட்டியிருக்கிறாரா என்று கேள்வியை முன்வைத்திருப்பதும் சிந்திக்கவைக்கும் சிறப்பான அம்சங்கள். இருவருக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 13. இரண்டு விமரிசனங்களும் யோசிக்க வைத்தது. திருமதி கீதா சாம்பசிவத்தற்கும், திரு சேஷாத்ரி அர்களுக்கும் அன்பார்ந்த பாராட்டுகள். எவ்வெப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது? அன்புடன்

  பதிலளிநீக்கு
 14. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு சகோதரர் E.S. சேஷாத்ரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 15. இத்தளத்தின் மூலம் வாழ்த்திய அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 16. இருவருக்கும் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. இந்த இரு வெற்றியாளர்களும், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://sivamgss.blogspot.in/2014/02/blog-post_26.html
  திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள்

  http://esseshadri.blogspot.in/2014/02/blog-post_8.html
  திரு. E.S. சேஷாத்ரி அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 18. இரண்டாம் பரிசு வாங்கிய திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு சேஷாத்திரி அவர்களுக்கும் என் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 19. பரிசு வென்ற திருமதி கீதாசாம்பசிவம் திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் திரு சேஷாத்ரி அவர்களுக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. திருமதி கீதா சாம்பசிவம்மேடம் திரு சேஷாத்திரி சாரவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. திருமதி கீதாசாம்பசிவம்மேடம் திரு சேஷாத்ரி ஸார் அவர்களுக்கு வாழ்த்துகள். கீதாமேடம் கதாசிரியர் பெண்களின் திருப்தி தராத மனநிலையை எழுதியிருப்பதை ரசித்து சொலறாங்க. சேஷாத்ரி ஸார் சூடிதார் வாங்கபோகும் ஆண்களின் மனநிலை எழுத்தை ரசித்து சொல்றாங்க.

  பதிலளிநீக்கு
 23. திருமதி கீதா சாம்பசிவம் மற்றும் நண்பர் திரு சேஷாத்திரி இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. மீண்டும் பரிசு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்வடைந்தேன்! என் உளமார்ந்த நன்றி! பரிசு பெற்ற பரிசு பெறப்போகும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 25. மேற்படி என் சிறுகதையினை மிகவும் பாராட்டி, ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவரும் எனது ஆருயிர் நண்பருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஓர் தனிப்பதிவு எழுதி இன்று ’ஸ்ரீராமநவமி’ புண்ணிய தினத்தில் (25.03.2018) வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:
  https://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html

  இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு
  珞

  பதிலளிநீக்கு