என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

VGK 04 / 03 / 03 ] THIRD PRIZE WINNER ! “காதல் வங்கி”





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



" VGK 04 ] காதல் வங்கி  ”


இணைப்பு:



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 









நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து



















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 










   


மற்றவர்களுக்கு: 





    



மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் :



 திருமதி. 



இராஜராஜேஸ்வரி  


அவர்கள்







http://jaghamani.blogspot.com/

"மணிராஜ்”


http://rjaghamani.blogspot.in/

krishna










மூன்றாம் பரிசினை 


வென்றுள்ள 


திருமதி:


 இராஜராஜேஸ்வரி


 அவர்களின் விமர்சனம்:





காதல் வங்கி என்கிற தலைப்பில் வழங்கியுள்ள கதை மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் ஆனந்தமான கதைகளத்தைக் கொண்டுள்ளது..!

ஜானகி -ரகுராமன் என்கிற பெயர்ப்பொருத்தமும், இதயவானில் ரோஜா மலரும் மொட்டுமாக சிறகடிக்கும் இரு ஜோடிப்பறவைகளும், ஸ்ரீதேவியின் அழகான பொருத்தமான மடிசார் புடவையுடனான படமும் பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது..! 

ஜானகியைப்பற்றிய அருமையான வர்ணனைகள், விமான ஓடுதளங்களில் தடங்கல்களின்றி கம்பீரமாக கைதேர்ந்த விமானி செலுத்தும் விமானமாக  மன வானில் உயரக்கிளம்ப ஆரம்பிக்கிறது ..!

சுகமாகப்பயணிக்கும் கதையில் நமக்கும் இப்படி ஒரு மகளோ-மருமகளோ கிடைக்கவேண்டுமே என எண்ணவைப்பதில் ஆசிரியர் வெற்றிபெறுகிறார்..!

வங்கியின் காசாளரான ஜானகி பணத்தை மட்டுமா எண்ணி எண்ணி கணக்கிடுகிறாள்?

அனைவரின் எண்ணத்திலும் அல்லவா தன்னை கைராசியான தனலஷ்மியாக எண்ண வைத்துவிடுகிறாள்..!

திருமணத்திற்குப் பின்பான தன் வாழ்க்கையும் தாயைப்போலவே தாலிகட்டிய கணவனின் விருப்பு வெறுப்புகளை ஒட்டித்தான் அமையும் என்பதை மன முதிர்ச்சியுடன் வெளிப்படுத்துவது தந்தைக்குப் பிரணவ மந்திரத்தின் பொருள் உபதேசித்த முருகனைப்போல் தன் வாதத்திற்கு வலு சேர்க்கிறாள்..!

தன்  பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தது தான் இன்றைய வாழ்க்கையின்  சந்தோஷம் செளக்யம் ஆகியவற்றின் அடிப்படை என்பதை உணர்த்துகிறாள்..!

டைகட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றையோர்
கை கட்டி பின் செல்வோரே 
என்றெல்லாம் நவீன சிந்தனையில் மிடுக்கான உடையில் உலா வருபவர்களின் வருமானத்தைக் கேட்டுப்பார்த்தால் பெரும்பான்மையோருக்கு அது ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது..!

மிகுந்த பொருட்செலவில் பணம் கொட்டி எஞ்ஜினியரிங் கல்லூரியில் படித்துவிட்டு சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் பலரை பார்த்திருக்கிறோம் ..

ஆளைக்கண்டு மயங்காதே - அது ஊது காமாலையாகவும் இருக்கலாம் ..

உருவு கண்டு  எள்ளாமை வேண்டும் .. அதேபோல வெளித்தோற்றத்திற்கு மட்டும் மயங்கக்கூடாது.. உள்ளத்தின் மாட்சியையும் மதிக்கக்கற்றுக்கொள்ளவேண்டும் ..!

விசு ஒரு படத்தில் சொல்வார் - செலவு செய்து கஷ்டப்பட்டுப் படித்து அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு காலை முதல் இரவு வரை ஆபீஸில் வேலை செய்பவரை விட எதுவும் படிக்காமலே ஒரு டெல்லி எருமை அவரை விட அதிகமாக சம்பாதிக்கிறது என்று ..!

பொறுப்புள்ள பணியில் இருப்பவள் தன் வாழ்க்கையையும் கச்சிதமாக திட்டமிடுவதில் ஆச்சரியப்படுத்துகிறாள்..!

கண்டதும் காதல் மட்டுமல்ல காணாமலே காதல் கூட காதல் கோட்டையாய் வெற்றிநடை போட்டதே..!

ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோமானாக 

ஒருவருக்கொருவர் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன பொருத்தமான ஜோடியாக வர்ணணைகளால் வண்ணமயான கதையாக ஜாலம் காட்டுகிறது 

தாயறியாச் சூலும் உண்டோ ..! தன் மகளின் மனதில் மலர்ந்து முகிழ்த்த காதலின் சுகந்தத்தை கச்சிதமாக மோப்பம் பிடித்து தன் கேள்விகளால் தெளிவாக்குகிறாள்..!

ஒரு வகையில் இது வாழ்க்கைக்கல்வியாகவும் தன் மனதை தானே அறிந்து திட்டமிட்டுக்கொள்ளவும் ஜானகிக்கு அமைந்திருக்கக்கூடும்..!

சும்மா கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றில்லாமல் தன் வாழ்வின் தேவைகளை உணர்ந்து அரைக்கோடி ரூபாய் சேர்த்து எதிர்காலத்தையும் பாதுகாத்துக்கொண்டு நிகழ்காலத்திலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு ஒரேகல்லில் இரு மாங்காய் அடிக்கும் புத்திசாலித்தனம் வியப்படைய வைக்கிறது..!    

ஆச்சார அனுஷ்டானமில்லாமல், குடிப்பழக்கம், வியாதி போன்றவற்றால் சீரழியும் பலரையும் குறிப்பிடுவது சிந்திக்கத்தக்கது..!

லேட்டஸ்ட் பேஷன் படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையே - உண்மைதானே.!

ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தான்  இருப்பார் என்கிற நம்பிக்கையில்  துணைவரை தேடிப்பிடிக்கும் ஜானகியையைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை..

கணவன் ராமனாக இருந்தால்  ஜானகியைப் போல் மனைவி கிடைப்பாள் ..!

ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டியது அவள் அம்மா மட்டுமல்ல .. கதையில் கரைந்து போயிருக்கும் நாமும் தானே..!

தாயைப்போல் பிள்ளை - நூலைப்போல் சேலை

தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணைப் படிக்கட்டில் பார்க்கவேண்டியதில்லை என்பார்கள்.. 

பெண்ணை சரியாகவே வளர்த்துள்ள அன்னை தன் மகள் ஜானகியைச் சீண்டிப்பார்ப்பது மிகவும் ரசிக்கவைக்கிறது..! 

சொக்குப்பொடி தூவியதைப்போல் சொக்கியும் போகிறோம் ..!

அபூர்வ விஷயஞானம் மட்டும் ஒரே சொக்குப்பொடியாக ஏற்று தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற பொலிவுடனும், பூரிப்புடனும் இருக்கும் ஜானகியின் பருவ வயதின் பாதிப்பை உணர்ந்த தாயார் நம் மதிப்பையும் பெறுகிறார்..!

வேத சாஸ்திரம் படித்த ரகுராமனின் சொற்பொழிவுகளை கதையில் ஜானகியின் மூலம் சொல்லி அமிர்தத்தை தேன் சுவைப் பாலில் கலந்து பருக வைப்பதுபோல் ஆனந்தமாக ருசிக்கவைக்கிறார் கதை ஆசிரியர்..! 

ஜானகியின் அழகிலும் புத்திசாலித்தனத்திலும் லஷ்மிகரமான தோற்றத்திலும் சொக்கிப்போய் அவற்றை முழுமையாகப்படிக்கிறோம் நாம்..

அதுதானே கதையின் முக்கியக் கரு .. வேறு எந்த கதாபாத்திரம் சொல்லியிருந்தாலும் அலட்சியமாக கடந்துபோகும் அபாயமிருக்கிறதே..!

ஜானகியை முதலில் நமக்கு நெருக்கமாக்கி மனதில் இதமாக சிம்மாசனம் போட்டு அமரவைத்துவிட்டு இதோபதேசம் நடக்கிறது .. அம்மா கதை சொல்லி நிலவு காட்டி குழந்தைக்குச் சோறு ஊட்டுவதைப்போல..! 

தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன் வங்கியில் லஷ்மீகரமாக -சாட்சாத் தனலட்சுமியாக பணம் வழங்கும் ஜானகியின் திருமணத்திற்கு வாழ்த்து கூறுவோம்..

சீதா கல்யாண வைபோகமே
லஷ்மி கல்யாண வைபோகமே
ஜானகி கல்யாண வைபோகமே..
ஜானகி ரகுராம கல்யாண வைபோகமே..!

மாலை சூட்டினாள் ஜானகி மாலை சூட்டினாள்
மையலாள் தையலாள் ரகுராமனுக்கு சூட்டினாள்..!


மனம்போல் மாங்கல்யம் அமையப்பெற்று இனிய இல்லறத்தில் திளைக்கும் ஜானகி தன் அழகில் மெருகேறி மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொண்டு கோடி மின்னலாய் ஜொலிக்கிறாள்..!




 







மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.



     









    



மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.









 



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில்

வெளியிடப்பட உள்ளன.



காணத்தவறாதீர்கள் !










அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html


கதையின் தலைப்பு:



”உடம்பெல்லாம் உப்புச்சீடை !”





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 



27.02.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் 








என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

41 கருத்துகள்:

  1. எமது விமர்சனத்தை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததற்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. இராஜராஜேஸ்வரி February 21, 2014 at 10:31 PM

      வாங்கோ .... வாங்கோ ....
      வணக்கம்.

      //எமது விமர்சனத்தை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததற்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்..//

      முதற்கண், தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள். அன்பான நல்வாழ்த்துகள்.

      தொடர்ச்சியாக பல்வேறு வெற்றிகள் பெற்றிடப் பிரார்த்திக்கிறேன்.

      தங்களின் அழகான இந்த விமர்சனத்தினை பரிசுக்குத் தேர்ந்தெடுத்துள்ள நடுவர் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      எல்லாப்புகழும் படைப்பாளியான தங்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் மட்டுமே !

      அடியேன் இதில் ஓர் இடைத்தரகர் மட்டுமே !!

      ALL THE BEST !! ;)))))))))

      பிரியமுள்ள VGK

      நீக்கு
  2. /// தாயைத் தண்ணீர்த்துறையில் பார்த்தால் பெண்ணைப் படிக்கட்டில் பார்க்கவேண்டியதில்லை... ///

    விமர்சனம் அருமை...

    இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான விமர்சனம்
    பரிசு பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. சகோதரி திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  5. சகோதரி இராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. விமர்சனத்தைப் பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், மூன்றாம் பரிசினை வென்ற சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  9. தி.தமிழ் இளங்கோFebruary 22, 2014 at 10:33 AM
    திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், மூன்றாம் பரிசினை வென்ற சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துகளுக்கு நிறைந்த நன்றிகள் ஐயா..!

    பதிலளிநீக்கு
  10. Usha SrikumarFebruary 22, 2014 at 11:14 AM
    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் !//

    நல்வாழ்த்துகளுக்கு நிறைந்த நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  11. பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்கு என் மனம் நிறைந்த
    இனிய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். விமரிசனம் கதையை படிக்கத் தூண்டுகிறது.
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //விமரிசனம் கதையை படிக்கத் தூண்டுகிறது.//

      அப்போ ..... நீங்க இன்னும் இந்தக்கதையைப் படிக்கவே இல்லையா ? ;((((( போங்க, உங்களோடு நான் டூஊஊஊ.

      நீக்கு
    2. rajalakshmi paramasivamFebruary 22, 2014 at 1:41 PM
      பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்கு என் மனம் நிறைந்த
      இனிய வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். விமரிசனம் கதையை படிக்கத் தூண்டுகிறது.
      வாழ்த்துக்கள்...//

      வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் இனிய நன்றிகள்..!

      நீக்கு
  12. சகோதரி இராஜேஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. மூன்றாம் பரிசை வென்ற இராஜராஜேஸ்வரி மேடமுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் இனிய நன்றிகள்..!

      நீக்கு
  14. மூன்றாம் பரிசு பெற்ற, இராஜராஜேஸ்வரி அவர்களின் விமர்சனத்தைப் படிக்கும்போது, கதையை மறுபடியும் படிப்போமா என்கிற ஆசை தலைதூக்குகிறது. அவ்வளவு அருமையாக, மடை திறந்த வெள்ளம்போல் சரளமான நடையில் இருக்கிறது அவரது விமர்சனம். பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
  15. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  16. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த , பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  17. திருமதி இராஜ ராஜேஸ்வரி அருமையான விமரிசனம். பாராட்டுகள் உங்களுக்கு. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  19. சகோதரி இராஜேஸ்வரி அவர்களுக்கு இனிய வாழ்த்து.
    Vetha.Elanagthilakam.

    பதிலளிநீக்கு
  20. சிறப்பான விமர்சனம்.

    மூன்றாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. இந்த வெற்றியாளர் அவர்கள், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    http://jaghamani.blogspot.com/2014/02/blog-post_23.html
    திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள்

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  22. மூன்றாம் பரிசை வென்ற திருமதி இராஜராஜேஸ்வரிக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  23. பரிசு வென்ற பிரபல ஆன்மீக பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  24. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya September 27, 2015 at 7:13 PM

      //திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

      :) மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

      நீக்கு
  25. விமரிசனம் சூப்பராகீது. திருமதி இராஜராஜேஸ்வரி அம்மாவங்களுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  26. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள். விமரிசனம் சிறப்பாக இருக்கு. ஜானகியின் மனநிலையை விவரித்ததை சிறப்பா நினைக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  27. சுகமாகப்பயணிக்கும் கதையில் நமக்கும் இப்படி ஒரு மகளோ-மருமகளோ கிடைக்கவேண்டுமே என எண்ணவைப்பதில் ஆசிரியர் வெற்றிபெறுகிறார்..!// உண்மைதான். மூன்றாம் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் சகோதரி..

    பதிலளிநீக்கு
  28. அருமையான விமர்சனம் எழுதி பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு