About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, February 1, 2014

VGK 02 / 03 / 03 ] THIRD PRIZE WINNER ”தை வெள்ளிக்கிழமை”
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 02 ] 


”தை வெள்ளிக்கிழமை”மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்து. 
 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் 

நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய 

நல்வாழ்த்துகள்.    


மற்றவர்களுக்கு:  


BETTER LUCK NEXT TIME !

    மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் : திரு. E.S. சேஷாத்ரி 


அவர்கள்

மூன்றாம் பரிசினை வென்றுள்ள 


திரு. சேஷாத்ரி அவர்களின் விமர்சனம்:REFERENCE NUMBER:  VGK 02

"தை வெள்ளிக்கிழமை" சிறுகதை விமர்சனம்,

இரண்டாம் தைவெள்ளியன்று வெளியிடப்பட்ட இரண்டாம் கதை “தை வெள்ளிக்கிழமை”. 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வெள்ளி என்றால் மங்கலம் என்று சொல்வார்கள். இந்த மங்க நிகழ்வும் புதியதோர் வழி பிறக்கின்ற செயலும் இந்தக் கதையில் இணைந்து பரிணமிப்பது உவகையளிக்கின்றது.

வேண்டாம் என்று ஒதுக்கப்படுகின்ற கல்லே கருவறையின் கடவுள் சிலையாக ஆவதுபோல, கருவைக் கலைக்க நினைத்த உள்ளம், பிறந்த பெண்குழந்தையை, தங்க விக்ரஹம், கெஞ்சினாலும் கிடைக்காது 5ஆம் பெண், தை வெள்ளியில் தோன்றிய மஹாலக்ஷ்மி, இவள் எங்களுக்கு வேண்டும்- எங்களுக்கே வேண்டும் என்ற மனமாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம்.

பிரசவமா? ஐந்தாவதா? பெண்ணா? என்று எண்ணும் சமுதாயத்தில் தைவெள்ளி- தங்க விக்ரஹம் கிடைக்காத ஒன்று என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனம் வேறு எதையும் விரும்பாதது மகிழ்வளித்தது.  அந்தக் குழந்தைக்கு ஈடாக எவ்வளவு தொகை கிடைத்தாலும் அல்லது வசதிகள் ஏற்பட்டாலும் இந்தக் குழந்தையை யாருக்கும் தரமாட்டோம் என்ற மன உறுதி தெய்வம் தந்த வரம் தான்.

அத்தகு பெற்றோர் அவனியில் பெருகுக என்று மனம் எக்களிக்கும் விதத்தில் படைத்துள்ள பாங்கு எண்ணி மகிழ்வது மட்டுமல்லாது அந்தப் பெற்றோரை பெரிதும் போற்றுவதுடன் மனிதாபிமானத்துடன் தாயின் ஆரோக்யத்தையும் குழந்தையின் நலத்தையும் பெற்றோர்களுடைய வளத்தையும் குழந்தையில்லா தம்பதியினருடைய வாட்டத்தையும் பல கோணங்களிலும் நன்கு சிந்தித்து தன்னுடைய மருத்துவத் தொண்டை பயனுள்ள சமுதாயத் தொண்டாக ஏற்று அனைத்துத் தரப்பினருக்கும் மிகுந்த மனநிறைவை கூட்டுகின்ற அந்த மருத்துவரை மருத்துவச் சமுதாயம் முன்மாதிரியாக ஏற்று அவரின் அடிச்சுவட்டில் தாமும் சேவை உணர்வோடு தொண்டாற்ற நல்லதோர் பக்குவத்தை பெற்றார்களானால் இந்தப் படைப்பினை ஆக்கியவர்களுக்கு ஒரு மனநிறைவு நிச்சயம் ஏற்படும் என்பதை அவர்களுடைய (வை.கோபாலகிருஷ்ணன்) நெஞ்சம் சொல்லாமல் சொல்லுகிறது.

சமயோசிதமான முடிவுகளையும், திருப்பங்களையும், வாக்குறுதிகளையும் செயல்படுத்த முடியாதபோது யாருக்கும் மனவருத்தம் ஏற்படாதபடி வெளிப்படுத்துகின்ற சாதுர்யமும் அந்த மருத்துவருடைய பெரும் பலமாக அமைந்திருக்கிறது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்றாலும் கிடைக்குமென்று நம்பியது வந்து சேரவில்லையென்றாலும் அதிலும் விட்டுக் கொடுக்கின்ற பரந்த உள்ளம் குழந்தையில்லா தம்பதியினரின் நீக்குபோக்குக்கு ஏற்ப மனதை சமநிலைப் படுத்திக்கொள்ளுகின்ற ஆற்றல் உண்மையிலேயே அரிதானது! அருமையானது! அபூர்வமானது!

மொத்தத்தில் கதைமாந்தர்கள் கால வெள்ளத்திற்கேற்ப மனப்பக்குவத்தை அமைத்துக் கொண்டிருப்பது கதாசிரியருடைய பரந்த மனப்பான்மையை அவர் எதிர்பார்க்கின்ற சமுதாயச் சூழலை, நெஞ்சத்திரையிலே ஓடவிட்டு சமுதாயத்தில் இடம் பொருள் காலம் இவற்றிற்கேற்ப தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்கின்ற பாங்கினை உணர்த்துகின்றது. இது ஒரு வாழ்க்கை நெறிமுறை விளக்கமாக அமைந்துள்ளது.
.
இந்தப் படைப்பு தாய்சேய் மருத்துவமனைகள் அனைத்திலும் கருத்து விளக்கமாக தக்க படங்களுடன் அமையுமானால் பேறுகாலப் பெண்டிரும் அவர்தம் கணவரும் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மனசாட்சியோடு செயலாற்ற மனமகிழ்வோடு மனையறம் நடத்த ஒரு விளக்கமாக அமையும் என்று கருதுகிறேன்.

இந்த ஏற்றமான மாற்றம்தான் மகிழ்வூட்டும் வெற்றியாகும். மனநிறைவுதரும். இத்தகு உள்ளங்கள் மேலும் பெருகும். எதிர்பார்ப்போம். இத்தகு சிந்தனைகள் எல்லோரிடத்தும் முகிழ்க்குமானால் எங்கும் மகிழ்வு! என்றும் மகிழ்வு! யாவர்க்கும் மகிழ்வே!

உங்கள் எழுதுகோலுக்கு என் வணக்கம்! உங்கள் மன உணர்வுகளுக்கு எனது பாராட்டுக்கள்!

காரஞ்சன்(சேஷ்)


     

    
 மனம் நிறைந்த 


பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
மிகக்கடினமான இந்த வேலையை


சிரத்தையுடன் பரிசீலனை செய்து


நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 


பற்றிய விபரங்கள்  தனித்தனிப்


பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்


வெளியிடப்பட உள்ளன.


காணத்தவறாதீர்கள் !
அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 


உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 


“சுடிதார் வாங்கப் போறேன்”விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 06.02.2014  இரவு 8 மணிக்குள் [I.S.T]என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

29 comments:

 1. திரு.சேஷாத்திரி கண்ணன் அவர்களுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திரு. E.S. சேஷாத்ரி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!

  ReplyDelete
 4. திரு.சேஷாத்திரி அவர்களுக்கு வாழ்த்துகள்!

  உங்கள் பதிவுகளை முக்கிய கடமைகள் இருந்தமையால் பலவாரங்களாக தொடரமுடியவில்லை மன்னியுங்கள். .விடுபட்டவற்றை முடிந்தபோது கண்டுகொள்கின்றேன். நன்றி.

  ReplyDelete
 5. திரு.சேஷாத்திரி அவர்களுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. நல்ல விமரிசனம். பரிசு பெற்ற திரு சேஷாத்திரிக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. திரு சேஷாத்திரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  இந்தப் படைப்பு தாய்சேய் மருத்துவமனைகள் அனைத்திலும் கருத்து விளக்கமாக தக்க படங்களுடன் அமையுமானால் பேறுகாலப் பெண்டிரும் அவர்தம் கணவரும் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மனசாட்சியோடு செயலாற்ற மனமகிழ்வோடு மனையறம் நடத்த ஒரு விளக்கமாக அமையும் என்று கருதுகிறேன்.//
  நல்ல ஆலோசனை.

  ReplyDelete
 8. திரு.சேஷாத்திரி அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. சிறப்பான விமர்சனம். வாழ்த்துக்கள் சேஷ்!

  "சிறுகதை விமர்சனப் போட்டி எண்: VGK03"
  ேற்றைய ிறுகதைக்கு நான் விமர்சனம் நேற்றே அனுப்பிவிட்டேன்.
  தங்களிடமிருந்து இன்னும் அப்ரூவல் வரவில்லை ஐயா!

  ReplyDelete
  Replies
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் February 1, 2014 at 10:23 PM

   //"சிறுகதை விமர்சனப் போட்டி எண்: VGK03"
   நேற்றைய சிறுகதைக்கு நான் விமர்சனம் நேற்றே அனுப்பிவிட்டேன்.

   தங்களிடமிருந்து இன்னும் அப்ரூவல் வரவில்லை ஐயா!//

   தாங்கள் எந்த மெயில் ஐ.டி.யிலிருந்து விமர்சனம் அனுப்பி இருந்தீர்களோ அதே மெயில் ஐ.டி.க்கு நான் என் STD. ACK. ஐ அனுப்பியுள்ளேன். தாங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட மெயில் ஐ.டி.க்கள் வைத்திருப்பதாகவும், அதனால் சரியாக கவனிக்கவில்லை என்றும், STD. ACKNOWLEDGEMENT தங்களின் மற்றொரு மெயில் ஐ.டி.யில் வந்திருப்பதை சற்று முன் பார்த்ததாகவும் எனக்கு ஓர் மெயில் இப்போது கொடுத்துள்ளீர்கள்.

   மிக்க மகிழ்ச்சி.

   இந்த என் விளக்கம் இங்கு வருகை தரக்கூடும் மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

   அன்புடன் VGK

   Delete
 10. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. சேஷாத்ரி சாருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்..

  முதல் பரிசு யாருக்கு சார்? அப்டேட்டும் ஆகாததால் அந்த பதிவுக்கு செல்ல முடியவில்லை...

  ReplyDelete
 12. திரு சேஷாத்ரி அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். ஐந்து பேர்னு சொல்லி இருக்கீங்க, சேஷாத்ரி மட்டும் தானே இதிலே இருக்கார்? மத்தவங்க?

  ReplyDelete
 13. ஓஹோ, மொத்தம் ஐந்து பேரா? நான் மூன்றாம் பரிசுக்கு ஐந்து பேர்னு தப்பா நினைச்சுட்டேன். :)) ஐவருக்கும் நன்றி. இணையத்திலேயே வேறு வேலைகள் இருப்பதால் உடனடியாக எந்தப் பதிவுக்கும் போக முடியலை. அதான் தாமதம். :))))

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் சார். நல்ல கருத்துப் பகிர்வு.

  ReplyDelete
 15. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், மூன்றாம் பரிசினை வென்ற சகோதரர் கவிஞர் E S சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள் அன்புடன்

  ReplyDelete
 17. பரிசு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  ReplyDelete
 18. திரு.சேஷாத்திரி கண்ணன் அவர்களுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள்.

  ReplyDelete
 19. திரு சேஷாத்ரி கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 20. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://esseshadri.blogspot.in/2014/02/blog-post.html
  திரு. சேஷாத்ரி E.S அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 21. சேஷாத்ரி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவர்களுடைய விமர்சனம் யதார்த்தமாக இருக்கிறது.

  ReplyDelete
 22. பரிசு வென்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. திரு சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 26, 2015 at 4:19 PM

   //திரு சேஷாத்ரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   Delete
 24. வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 25. திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள். விமரிசனமும் நல்லா எழுதி இருக்காங்க. ஐந்தாவதும் பெண் பிறந்தாலும் தத்து கொடுக்காத பெற்றோரை பாராட்டி விமரிசனம் எழுதி இருக்காங்க.

  ReplyDelete
 26. என்னுடைய விமர்சனம் தெரிவானதில் மகிழ்ச்சி! பாராட்டிய நல்லிதயங்களுக்கு மனமார்ந்த நன்றி!

  ReplyDelete