என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

VGK 03 / 03 / 03 ] THIRD PRIZE WINNER !’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 03 ] 


” சுடிதார் வாங்கப் போறேன் ”மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 


நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து
இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


   


மற்றவர்களுக்கு: 
    
மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் : திருமதி. தமிழ்முகில் பிரகாசம் 


அவர்கள்

___________


http://muhilneel.blogspot.com/

"muhilneel"

tamizhmuhil.blogspot.com

”முகிலின் பக்கங்கள்”
மூன்றாம் பரிசினை வென்றுள்ள 


திருமதி தமிழ்முகில் பிரகாசம்


 அவர்களின் விமர்சனம்:

சுடிதார் வாங்கப் போறேன் !  - சிறுகதைக்கான விமர்சனம் 

பொதுவாக, பெண் என்பவள் , புடவைக்கும் நகைக்கும் மிகுந்த ஆசை கொண்டவளாகவே  சித்தரிக்கப் படுவாள். 


ஆனால், இந்தக் கதையில் ஆசிரியர்  அதற்கு விதிவிலக்காக, தனது இல்லத்தரசி  பட்டு, பகட்டு எதற்கும்  ஆசைப் படாதவளாக சித்தரிக்கிறார்.


ஒவ்வொருவருக்கும்  வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும்,  அவர்களது  செயல்களுக்கும்  முயற்சிகளுக்கும் கிடைக்கும்  பாராட்டுதல்களும்  அங்கீகாரங்களுமே , அவர்களது  அடுத்த  கட்ட வளர்ச்சிக்கு  ஊக்க மருந்தாக அமையும்.  ஒவ்வொரு சிறு பாராட்டும் புன்னகையும்  அதனை  பெறுபவர்களால் பெரும் பரிசாக கொள்ளப் படுகிறது.  அது அவர்களின்  வளர்ச்சிக்கு மென்மேலும்  உதவுகிறது. 


சில வேளைகளில். நம்முடனேயே,  நமக்கு நெருக்கமாய்   இருப்பவர்களது  நல்லியல்புகளும், அற்புதத் திறன்களும் ஏனோ  நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. எங்கோ இருப்பவர்களது திறமையையும் வெற்றியையும் வானளாவ புகழ்ந்து கொண்டிருப்போம். ஆனால், நம்முடனேயே  இருப்பவர்கள் கொண்ட திறன், நமக்கு மிகவும் சாதாரண ஒன்றாய் தெரியும் . 

அவற்றை  மற்றவர்கள் அல்லது புதியவர்கள் கண்டு கொண்டு உயர்த்திப் பேசும் போது , அதுவும் வாழ்த்தப் படுபவர்கள், நமது மனதுக்கு மிகவும்  நெருக்கமானவர்களாய் இருந்து விட்டால், மனதில் தோன்றும்  "என்  உடைமை  - எனக்கு மட்டுமே சொந்தம்."  எனும் உரிமை உணர்வே மேலோங்கி  நிற்கும். 

அவர்களை பிறர்  பெருமையாக பாராட்டி பேசிவிட்டால், "இந்தளவிற்கு நம்மவரை  கூர்ந்து கவனித்து உள்ளார்களே ! ” என்று  மனதிலுள்ள  உரிமை பொறாமையாய்  (possessiveness ) எட்டிப் பார்க்கும். இதை அழகாய் ஆசிரியர் சித்தரித்து உள்ளார்.


ஜவுளிக் கடையின் பிரம்மாண்டத்தையும், ஆடம்பரத்தையும், வாடிக்கையாளர்களைக் கவர அவர்கள் கையாளும் வியாபார உத்திகளையும் அழகாக சொல்லிச் செல்கிறார். 


ஜவுளிக் கடைகளில் பணிபுரியும்  இளம் பெண்களின், வியாபார தந்திரங்களையும், நயமான பேச்சு நடையையும் , தான் முடிக்கும் வியாபாரத்திற்கு கிடைக்கும் கமிஷன் தொகைக்காக, முடிந்தவரை  அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, வியாபாரத்தை முடிப்பதிலேயே  குறியாக இருப்பதை  படம் பிடித்துக் காட்டுகிறார்.


இன்று விற்பனைக்கு வரும் சுடிதார்களைப்  பற்றியும் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில், ரெடிமேட் சுடிதார்  எடுத்தால், அதில்  மேற்கொண்டு ஏதும்  தையல் வேலை எதுவும் இருக்காது. இன்றோ, சுடிதார்கள் எல்லாம்  கையில்லாமலேயே  விற்பனைக்கு வருகிறது. கைகள் தனி இணைப்பாக கொடுக்கப் படுகின்றன. வேண்டும்  என்கிறவர்கள், வைத்து தைத்துக் கொள்கிறார்கள். சிலரோ, கையில்லாமல்  போடுவதை (Sleeveless ) பேஷன்  ஆக எண்ணி, கை வைத்து தைப்பதில்லை. இங்கு,  இளம் தலைமுறையினரின் மாறிவருகின்ற  ரசனைப்  போக்கினையும் சொல்கிறார் ஆசிரியர். தன்  மனைவியை சுடிதாரில் பார்க்க ஆசைப்படும் கணவன், அவருக்கும் புதிதாய் ஒரு சுடிதார்  எடுத்துக் கொடுத்திருந்தால், எப்போது வேண்டுமானாலும் அவரை போடச் செய்து  பார்த்து இரசித்துக் கொள்ளலாமே.தகவல் தொழில்நுட்பம்  அபார வளர்ச்சி அடைந்துள்ள இந்நாளில்,  நினைத்த நேரத்தில், உலகில் உள்ள எவருடனும்  தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளது.  தூது விடு முறை, தபால், தந்தி, தொலைபேசி  என்று படிப்படியாக வளர்ந்து வந்த தகவல் தொடர்பு வசதிகள், இன்று ஒருபடி மேலேறி, இணையத்தின் உதவியால், உலகையே  கைக்குள் அடக்கி வைத்துவிடும்படி  முன்னேறி உள்ளது. அன்றாட வாழ்வில், ஒருவர் மேற்கொள்ளும்  சிறு சிறு  நன்முயற்சிகட்கு கிடைக்கும் ஊக்கமும்  அங்கீகாரமும், அவர்களது  அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்குமென்பதை  ஆசிரியர்  அழகாய் சொல்லியுள்ளார்.


நல்லதொரு வாய்ப்பளித்த தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.


     
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.

    மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப்

பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்

வெளியிடப்பட உள்ளன.


காணத்தவறாதீர்கள் !

’போனஸ் பரிசு’ பற்றிய 
மகிழ்ச்சியானதோர் தகவல்’சுடிதார் வாங்கப் போறேன்’ என்ற
இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

முதன் முதலில் என்  டும்.. டும்.. டும்.. டும்.. போட்டி அறிவிப்பினில் http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html தெரிவிக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுக்கும், இந்த போனஸ் பரிசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. 

அது வேறு தனியாக ! இது வேறு போனஸாக !!

மகிழ்ச்சி தானே ! தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.    


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வார சிறுகதை விமர்சனப் 


போட்டிக்கான இணைப்பு: 

“காதல் வங்கி ”

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 13.02.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள் என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

34 கருத்துகள்:

 1. மிக அற்புதமான விமர்சனம்
  நான் விரும்பித் தொடரும் பதிவர்
  திருமதி .தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு
  என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் பாராட்டுதல்கட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. எனது விமர்சனத்திற்கு பரிசு வழங்கி சிறப்பித்த நடுவர்களுக்கு என் நன்றிகள். நல்லதோர் வாய்ப்பளித்த ஐயா வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Tamizhmuhil Prakasam February 8, 2014 at 3:36 AM

   வாங்கோ, வணக்கம்.

   //எனது விமர்சனத்திற்கு பரிசு வழங்கி சிறப்பித்த நடுவர்களுக்கு என் நன்றிகள். நல்லதோர் வாய்ப்பளித்த ஐயா வை. கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.//

   மிக்க நன்றி. தங்கள் எழுத்துக்கள் மேலும் மேலும் ஜொலித்து பல்வேறு வெற்றிகளைத் தாங்கள் அடைய இந்தத் தங்களின் வெற்றி, முதல்படியாக அமையட்டும்.

   இந்த மகிழ்ச்சியினை, சுடச்சுட தனிப்பதிவாகத் தங்கள் தளத்தில் வெளியிட்டு, எனக்கு மெயில் மூலம் தகவலும் அனுப்பியுள்ளதற்கு என் நன்றிகள்.

   http://muhilneel.blogspot.com/2014/02/blog-post.html

   ALL THE BEST !

   அன்புடன் VGK

   நீக்கு
 3. பரிசு பெற்றவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். புதிதாக போனஸ் பரிசு பற்றி அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளீர்கள் வை.கோ.சார். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

   நீக்கு
 4. திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  போனஸ் பரிசு மேலும் உற்சாகம்... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

   நீக்கு
 5. திரு VGK அவர்களின் சிறுகதை விமர்சனப் போட்டியில், மூன்றாம் பரிசினை வென்ற சகோதரி முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

   நீக்கு
 6. மூன்றாம் பரிசினை வென்றுள்ள :திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

   நீக்கு
 7. திருமதி .தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு
  என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

   நீக்கு
 8. திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் சுடிதார் கதையினை நன்கு, அலசி விமர்சனம் எழுதி மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்; சரியான தேர்வு.

  அப்புறம்... விமர்சனம் எழுதியவர்கள் அனைவருக்குமே போனஸ் பரிசு என்பது எதிர்பாரா ஆச்சரியம். மூன்று பரிசுகளில் நமக்கு எதுவும் கிடைக்கவில்லையே என நினைப்பவர்களுக்கு இது ஓர் உற்சாக டானிக்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது ஊக்கமூட்டும் கருத்துரைக்கு நன்றி சகோதரரே !!!

   நீக்கு
 9. திருமதி .தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு
  என் மனமார்ந்த நல்வாழ்த்து.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !

   நீக்கு
 10. பரிசு பெற்ற திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே !

   நீக்கு
 11. வாழ்த்துகள் உங்களுக்கு. பரிசுபெற்ற உங்களின் தமிழ்முகில் ப்ரகாசம் என்ற பெயர் மிகவும் அழகாகவும்,அர்த்தம் பொதிந்ததாகவும் உள்ளது. விமரிசனமும் அப்படியே.அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பு நிறைந்த வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரி.

   நீக்கு
 12. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://muhilneel.blogspot.com/2014/02/blog-post.html
  திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 13. தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 14. தமிழ்முகில்பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 15. திருமதி. தமிழ்முகில் (என்ன ஒரு அழகான, அருமையான தமிழ் பெயர்) பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) அழகான அருமையான பிரகாசமான ரசனை தங்களின் இந்தப் பின்னூட்டத்திலும் .... மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

   நீக்கு
 16. தமிழ்முகில பிரகாசமவங்களுக்கு வாழ்த்துகள் இவங்க பேரு நல்லாருக்கு.

  பதிலளிநீக்கு
 17. திருமதி தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள் கதாசிரியரின் வர்ணனைகள சிறப்பாக சொல்லி இருக்காங்க

  பதிலளிநீக்கு
 18. திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. பரிசுபெற்ற திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்குப்

  பாராட்டுகள்! மேலும் பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. மேற்படி என் சிறுகதையினை மிகவும் பாராட்டி, ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவரும் எனது ஆருயிர் நண்பருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஓர் தனிப்பதிவு எழுதி இன்று ’ஸ்ரீராமநவமி’ புண்ணிய தினத்தில் (25.03.2018) வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:
  https://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html

  இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு
  珞

  பதிலளிநீக்கு