என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி !

பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் 
தெருவில் வந்தான்டி !
பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி 
சேதி சொன்னான்டி !!


நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!


அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

நான் என்னுடைய அறுபதிலும் ஆசை வரும் என்ற கீழ்க்கண்ட பதிவினில் பூம்..பூம்.. பூம்..பூம் மாட்டுக்காரர் + குடுகுடுப்பைக்காரர் ஆகியோர் மூலம் பல நல்ல செய்திகளை அறிவித்திருந்தேன்.


அந்த வெற்றிகரமான பதிவுக்கான பின்னூட்டங்களின் எண்ணிக்கை மட்டும் 211 எனக் காட்டுகிறது. 

அதில் நான் சொல்லியுள்ள ஒவ்வொரு சுப காரியங்களும் என் அன்புச் சகோதரி திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களின் இல்லத்தில் அடுத்தடுத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன என்பது என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாக உள்ளன.
என் அன்புச்சகோதரி 

திருமதி: ஜெயந்தி ரமணி அவர்கள்
மணம் [மனம்] வீசும்

oooooOooooo

தொடர்புடைய பதிவுகள்:

http://gopu1949.blogspot.in/2013/08/34.html

http://gopu1949.blogspot.in/2013/09/45-3-6.html

குடுகுடுப்பைக்காரர் சொன்ன
ஒவ்வொரு நல்ல செய்திகளும் 
அடுத்தடுத்து தவறாமல் நடக்குது ! ;)


நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!


அம்மாவுக்கும் ஐயாவுக்கும்

மீண்டும் ஜோராக் கண்ணாலம்

நடக்கத்தான் போகுது!நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!செவத்தம்மா கழுத்துல மீண்டும்

 புதுத்தாலி ஏறத்தான் போகுது!


நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!

’அறுபதிலும் ஆசை வரும்’ன்னு


இந்த செவத்தம்மா, ஐயாவோடடூயட் ஆடத்தான் போறாங்கோ!

நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!அழகாகக் கட்டிக்கிட்டு இருக்கிற

வூடு முடிஞ்சு செவத்தம்மா கையிலே

வீட்டுச்சாவி கெடைக்கப்போவுது!

நல்ல காலம் பொறக்குது !

நல்ல சேதி கெடைக்குது !!


வூடு மாத்தி கிரஹப்பிரவேசக்

கண்ணாலமும் இந்த செவத்தம்மா


நடத்தத்தான் போகுது!

நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!


அடுத்த மாசமே இந்த செவத்த

அம்மாவோட பேத்திக்குக்


காது குத்துக் கண்ணாலமும்நடக்கப்போகுது!நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !!இந்த வூட்டு ராணியம்மாவோடப்

பொண்ணு ... இளவரசியம்மாவுக்கு 

நல்ல வரன் ஒண்ணு 

குதிர்ந்து வரப்போகுது!


நல்ல காலம் பொறக்குது !


நல்ல சேதி கெடைக்குது !! 

என் அன்புச் சகோதரி 

திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் 

ஒரே அன்பு மகள் 


செளபாக்யவதி: 


சந்தியா ரமணி 


அவர்களுக்கும்சிரஞ்சீவி:


ஆனந்த் ஆதிநாராயணன் 


அவர்களுக்கும்
நாளை 21.02.2014 வெள்ளிக்கிழமையன்று

சென்னையில் மிகச்சிறப்பாக  திருமணம் 

நடைபெற உள்ளது.மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்று

சந்தோஷமாக நீடூழி வாழ பிரார்த்திப்போம்.
புதுமண தம்பதியினருக்கு  நம் 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


மருமகள் வந்து ஏற்கனவே 

மாமியார் ஆகி இருப்பினும்

மாப்பிள்ளை வருகையால் இப்போது

மீண்டும் மாமியார் பிரமோஷன் கிடைத்துள்ள

திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்கும்

நம் இனிய நல்வாழ்த்துகள்.

பிரியமுள்ள 

கோபு அண்ணா + மன்னி

26 கருத்துகள்:

 1. தாய் தந்தையை வணங்குகிறேன் .புதுசாய் மணம் முடிக்கவிருக்கும் இந்த இழந்
  தம்பதியினரை சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துகின்றேன் .அன்பின் நிமிர்த்தம் மிகச் சிறப்பாக மனம் மகிழும் வண்ணம் பதிவிட்டு வாழ்த்திய தங்களின் கள்ளம் கபடம் அற்ற வெள்ளை மனதைப் போற்றுகின்றேன் ஐயா .உடல்
  நலன் எப்படி உள்ளது ?அறியும் ஆவலுடன் .....

  பதிலளிநீக்கு
 2. அற்புதம் அண்ணா..

  எந்த ஒரு விஷயத்தையும் சிரத்தையோடும் அழகோடும் ஈடுப்பாட்ட்டோடும் சுவாரஸ்யம் குன்றாமல் தரும் உங்கள் பாணியே தனி தான்.

  ஜெயந்தி மேடம் அவர்களின் மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்.

  இருவரும் இல்லறத்தில் அடி எடுத்து வைத்து அன்புடன் இணைந்து சௌக்கியமாக வாழ்வாங்கு வாழ இறைவனிடம் அன்பு பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின்
  திருமகள் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்..!

  மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்றுசந்தோஷமாக நீடூழி வாழ பிரார்த்திப்போம். புதுமண தம்பதியினருக்கு நம்
  அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்றுசந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 5. ஜெயந்தி ரமணி அவர்களின் இல்லத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள்.

  மணமக்களுக்கு இனிய வாழ்த்துகள்.  பதிலளிநீக்கு
 6. மணமக்கள் சகல செளபாக்யங்களும் பெற்று சந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. ஜெயந்தி ரமணி தம்பதியர் குடும்பத்திற்கும்,மணமக்களுக்கும் அன்பு ஆசிகளும்,வாழத்துகளும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 8. மணமக்கள் அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று வாழ இனிய நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 9. மணமக்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. இளம் தம்பதியினருக்கு என்வாழ்த்தும் ஆசியும்.

  பதிலளிநீக்கு
 11. இளம் தம்பதி எல்லா வளமும் பெற்று இன்புற்று நீடூழி வாழட்டும்!

  பதிலளிநீக்கு
 12. மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு
 13. இளம் தம்பதிகளும் இனிய தம்பதிகளுக்கும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. புதுமண தம்பதியினருக்கு அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. புதுமணத் தம்பதிகளுக்கு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. புதுமணத் தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. தொடர்புடைய பதிவுகள்:

  http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
  நேரிடையான எங்கள் சந்திப்பு பற்றி

  http://gopu1949.blogspot.in/2014/02/blog-post.html
  ஜெயந்தி ரமணி அவர்களின் பெண் குழந்தையின் திருமணம் பற்றி

  http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
  ஜெயந்தி ரமணி அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் பற்றி

  http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
  ஜெயந்தியின் புதிய வலைத்தளத்தினில் எங்களின் அருமையான நேரடி சந்திப்பு பற்றி

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 18. நாலு நல்லவைகள் நடக்க அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. திருமதி ஜெயந்தி மேடம் வீட்டு திருமண தம்பதியருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. சொல்ல வெட்கமாகுதே!

  நேரத்துக்கு வந்து இங்கு பதிவு போடாததற்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம்.

  எனக்குத் தாங்கள் வழங்கிய இந்த கௌரவத்திற்கு சிரம் தாழ்ந்த, மனமார்ந்த, உளம் கனிந்த நன்றி, நன்றி, நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 27, 2015 at 7:10 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //சொல்ல வெட்கமாகுதே!//

   ஏன் என்னாச்சு ஜெ ? ஒருவேளை மாப்பிள்ளைக்கு மாமியாரானதினால் வந்த வெட்கமாக இருக்குமோ? :)))))

   //நேரத்துக்கு வந்து இங்கு பின்னூட்டம் போடாததற்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம். //

   அதனால் என்ன? மங்களகரமான கல்யாண கார்யங்களில் மிகவும் பிஸியாக இருந்திருப்பீர்கள் என்றுதான் எனக்கும் தெரியுமே. அநேக ஆசீர்வாதங்கள்.

   //எனக்குத் தாங்கள் வழங்கிய இந்த கௌரவத்திற்கு சிரம் தாழ்ந்த, மனமார்ந்த, உளம் கனிந்த நன்றி, நன்றி, நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 21. நிக்கா பண்ணிகிட்டவங்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 22. திருமதி ஜெயந்திரமணி வீட்டு கல்யாண தம்பதிகளுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 23. இரண்டு திருமணத் தம்பதியருக்கும் என் வாழ்த்துகள். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..BSNL குடும்பம் என்ற ப்ளஸ் வேற இருக்கே..வாத்யாரே முன்னால நின்னு கல்யாணம் பண்ணிவச்சமாதிரி படமெல்லாம் பட்டய கெளப்புதே..சூப்பர்..

  பதிலளிநீக்கு
 24. திருமணத்தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு