என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 7 ஜூன், 2017

’பொன் வீதி’ - நூல் மதிப்புரை - பகுதி-4 of 8

இந்தத்தொடரின் பகுதி-1 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-2 க்கான இணைப்பு:

இந்தத்தொடரின் பகுதி-3 க்கான இணைப்பு:

 

நூலாசிரியர் மோகன்ஜி அவர்கள்



7) வெளையாட்டு

இந்தக்கதையின் தலைப்புதான் வெளையாட்டு. சற்றே யோசித்தால் மிகவும் சீரியஸ் ஆன கதைதான். சீரியஸான ஒரு மேட்டரை வெளையாட்டாகச் சொல்லிப்போனதில்தான் கதாசிரியரின் வெற்றியே அடங்கியுள்ளது. 

இதில் சேகர், முத்து என இரண்டு சிறுவயது ஏழை உழைப்பாளிகள், இவர்களுக்கு இலவசமாகத் தங்கிக்கொள்ள பெங்களூரில் இடம் கொடுத்துள்ள ’தருமு அண்ணன்’ என்ற முரட்டு மனிதர். இவர்கள் மூவரைச் சுற்றியே கதை நகர்கிறது. 

தாய் தந்தை உடன்பிறப்புகள் என அன்பு செலுத்த யாருமே இல்லாமல் ஏனோ தானோ என முரட்டுத்தனமாக வளர்ந்துவிட்ட தருமுவுடன் ஏதோ ஒரு இரண்டு ஆண்டுகள் மட்டுமே இல்லறம் நடத்திய விலைமாதுவான பிலோமினா என்பவள், வெளியூரில் இருக்கும் முத்துவின் தாய் + முத்துவின் இரு தம்பிகள் ஆகியோர் கெளர வேடத்தில் .... ப்ளாஷ்-பேக் ஆக இந்தக் கதையினில் வந்து போகும் சில கதாபாத்திரங்கள்.

இந்தக்கதையில் வரும் ’பிலோமினா’ ஒரு தேவதையாகவும் உத்தமியாகவும் எனக்குத் தெரிகிறாள். நகை நட்டு, பட்டுப்புடவைகள், பணம்-காசு என வேறு எதற்குமே ஆசைப்படாமல், எல்லாவற்றையும் ஓர் இடத்தில் சப்ஜாடாகக் கழட்டி வைத்துவிட்டு, *ஒரு உருக்கமான லெட்டர்* எழுதி வைத்துவிட்டு, தருமு கட்டிய அரைப்பவுன் தாலியுடன் மட்டும், அவள் எங்குதான் போனாள்? ஏன் திடீரென்று இவரை விட்டுப் பிரிந்து போனாள்? என்கிற வெளங்காத வெளையாட்டினை கதையைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கோ. ஒருவேளை உங்களுக்குப் புரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

கதையில் என்னைக் கவர்ந்த அந்தக் கடித வரிகள்:  

 *என் சாமிக்கு பிலோமினா எழுதியது .....      நிறைவா ரெண்டு வருஷம் 

மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, 

நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை 

தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு நான் போக மாட்டேன். 

கடவுள் இருந்தால் உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் 

உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்…. சாவுற வரைக்கும்.  *


8) கூளம்

தன் அலுவக வாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும், தன்னிடம் உள்ள ஒரு சிறு காகிதத்தைக்கூட அப்புறப்படுத்தி தூக்கி எறிந்து விடாமல், மிகவும் பத்திரமாக, பொக்கிஷமாக சேகரித்து வைத்து வந்துள்ள என்னைப்போன்ற ஒரு ஓய்வு பெற்ற மனிதரைப் பற்றிய கதை இது.

இவர் பொக்கிஷமாக நினைத்துள்ளவைகளான இவற்றையெல்லாம், வெறும் வெட்டி அடசல்களும், குப்பைக்கூளங்களும் எனச் சொல்லி, அவற்றை எல்லாம் அதிரடியாக வெளியேற்ற வேண்டும் என உத்தரவிடுகிறாள் மனைவி. 

மூன்று-நான்கு நாட்கள் மனைவி தன் பிறந்தகம் சென்ற போது, தான் இதுவரை பொக்கிஷமாக நினைத்த இவற்றையெல்லாம் திடீரென்று கஷ்டப்பட்டுக் கிழிக்க ஆரம்பிக்கிறார் அந்த மனிதர். ஒவ்வொரு அட்டைப்பெட்டிகளிலிருந்தும் ‘ராம பாண’ப் பாச்சைகள் வெளியேறி ஓடுகின்றன. அதன் வடிவத்தைப் பார்த்து, அப்படியொரு பேரை அதற்கு வைத்தவன் ஒரு நல்ல ரசிகன் என எண்ணிக்கொள்கிறார். 

சம்பளப்பட்டியல்கள், தான் வாங்கிய மெமோ-சார்ஜ் ஷீட், பழைய போட்டோக்கள், குழந்தைகளின் ப்ராக்ரெஸ் ரிப்போர்ட்கள், டைரிகள், பழைய பஞ்சாங்கங்கள், வரவு செலவு குறிப்பேடுகள் என எதற்கும் பஞ்சமில்லாமல் எடுக்க எடுக்க ஏதேதோ கிடைக்கின்றன.  

இவர் கிழிக்க நினைக்கும் ஒவ்வொரு தாளும் ஒவ்வொரு நினைவலைகளை அவருக்குக் கிளறுவதாக எழுதியுள்ளது கதாசிரியரின் தனித் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  

[இந்தக்கதை ‘பேப்பர் ரோஸ்ட்’ என்ற தலைப்பில் முதலில் தன்னால் எழுதப்பட்டதாகவும், பிறகு இதனை ‘அமுத சுரபி’ இதழில் அச்சிட்டு வெளியிடும்போது அதன் தலைப்பு ‘கூளம்’ என பிரபல எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமான திரு. விக்ரமன் அவர்களால் மாற்றப்பட்டதாகும் பக்கம் எண்: 68 இல் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.]

இந்தக் கதையினில் வரும் ஓரிடத்தை அவரின் எழுத்துக்களிலேயே கீழே கொடுத்துள்ளேன்:

அடுத்த கள்ளிப் பெட்டியை தரையில் சாய்த்தார். அந்த மெலிந்திருந்த மஞ்சள் நிற ஃபைலைக் கண்டவுடன், சபேசனுக்கு சட்டென்று முதுகில் சொடுக்கி விட்டாற்போல் இருந்தது….. மெல்ல ஃபைலைத் திறந்தார்.

முதல் காகிதமே, ஏன் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்ற அலுவலக மெமோ.

நிறுவனத்தின் சார்பில், சபேசன் இட்ட ஒரு ஒப்புதல் கையெழுத்தால் ஏற்பட்ட, பத்தாயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு, ஒழுங்கு நடவடிக்கை. தன்மேல் விசாரணை  நடந்த ஆறு மாத காலம், தன் மனதில் பாறாங்கல்லாய் விழுந்த மரண வேதனை. சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல்… எல்லோரும் தன்னைப் பார்த்து, கைக் கொட்டி சிரிப்பது போல் குமைந்து, தலை கவிழ்ந்து ஊர்ந்த நாட்கள்.

மெமோவை மீண்டும் கையிலெடுத்தார். இரண்டாய் கிழித்தார், நாலாய், பதினாறாய், நூறாய் உருத் தெரியாமல் அது நுணுங்கியது. வாயருகில் அந்தக் குப்பலைக் கொண்டு வந்து, வாய் குவித்து, வேகமாய் ஊதினார். ஆனாலும் பலம் குன்றிய அந்த ஊதலில், அத்துணுக்குகள் பரவலாய் சிதறாமல், சபேசன் மடியிலேயே விழுந்தன. அவற்றை உதறித் தள்ளினார். படபடவென்று வந்தது. சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

எழுந்து போய், பனியன் நனைய, மடமடவென்று தண்ணீரை வாயில், சரித்துக் கொண்டு, மீண்டும் காகித அடுக்கல்கள் மத்தியில் அமர்ந்தார்.

இந்தக் காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பதுபோல், 
நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


9) வாக்கிங்

தலைமுறை இடைவெளிகளைச் சொல்லும் கதை. பிடித்தவர்களுக்குப் பிடிக்கலாம். எனக்குப் பிடித்துள்ளது. முடிவுப்பகுதி கொஞ்சம் கண்கலங்கவும் வைக்கிறது. கிழவர் தன் தாத்தா மட்டும் தன்னிடம் அன்பாக இருந்த நாட்களை நினைத்துக் கண் கலங்குகிறார். அவருக்கு இவரே இன்று நீர்க்கடன் செலுத்தியும் வருகிறார். 

இவரை நினைத்து, பிற்காலத்தில் இவருக்கு நீர்க்கடன் செலுத்த ஓர் பேரன் பிறக்காததில் குறையுள்ளது அவருக்கு. தன் தாத்தா காட்டிய அதே அன்பை தன் செல்லப் பேத்தியிடம் காட்டி ஆறுதல் அடைகிறார். 

அவளுக்காவது கைகால்களைப் பிடித்து விடும் கணவனும், ஆண் வாரிசுகளும் ஏற்படட்டும் என மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறார்.  

முதியோர்களின் வழக்கமான + நியாயமான புலம்பல்கள் கதைக்கு நன்கு வலுவூட்டியுள்ளன.

கதையில் வரும் ஒரு சின்ன உரையாடல் பகுதி:

“அம்மா! காலைக்காட்டிண்டு புடவையைத் தூக்கி சொருகிக்காதேயேன்... எனக்குப் பிடிக்கலம்மா....”

அதுதான் அம்மாவுக்கு வேலை செய்யத்தோதுன்னு எனக்கென்ன தெரியும்?

“இதப்பாருடீ! உன் புருஷனுக்கு உன் பாதத்துக்குமேல அவன் கண்ணுக்குப் படாம பாத்துக்கோ. எட்டு வயசுலேயே சொருகின புடவையை இழுத்து இழுத்து விட்டுடுவான்”.... புது மருமகளுக்கு அம்மோபதேசம். 

ஒற்றைத் தலையணியில் புதுவாசனையோடு அவளிடம் கிசுகிசுத்ததோ... “அப்டில்லாம் உனக்கு தடையில்லை. வேணும்னா பாதத்தை மட்ட்டும்ம் மூடிக்கோ”ன்னு நான் சொன்னதும் ....

“ச்சீய்ய்ய்ய்....” 

 

இவ்வாறான ’சீச்சீக்கள்’ சிதறியபடி சிலகாலம்.... கொசு வர்த்தியாய்ப் பழைய நினைவலைகள் அவருக்கு ..... ஆனால் வயதான இன்றைய அவரின் நிலையோ .... ?

எவ்வளவு வயதானால்தான் என்ன?
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே
வரத்தானே செய்யும் ! 





நூலாசிரியர் மோகன்ஜி  வசனம் எழுதிய 
நாடக அரங்கேற்றத்தின் போது 
தலைமை ஏற்ற  நாகேஷுடன் 
1983-ல் எடுத்த படம் 

தொடரும்

இந்தத்தொடரின் 
பகுதி-3 இல் பின்னூட்டமிடுவதில் 
முதலிடம் பெற்றுள்ள 
‘சித்ரா’வுக்கு 
கோபு மாமாவின் அன்புப் பரிசுகள் இதோ:

  

   




இந்தத்தொடரின் 
பகுதி-3 இல் பின்னூட்டமிடுவதில் 
இனிப்பான இரண்டாமிடம் பெற்றுள்ள 
அன்பு அஞ்சுவுக்கு 
கோபு அண்ணாவின் அன்புப் பரிசு இதோ:

   

  



வைரம் பதித்த நான்கு கைக்கெடிகாரங்கள்




இந்தத்தொடரின் 
பகுதி-3 இல் பின்னூட்டமிடுவதில் 
முத்தான மூன்றாமிடம்  பெற்றுள்ள 
 அன்பு ‘அதிரா’வுக்கு 
கோபு அண்ணனின் அன்புப் பரிசுகள் இதோ:

 

 

காதுகளில் அணியும் ஜிமிக்கிகளும், 
வைரத்தோடுகளும்,
  முத்துத் தோடுகளுமாக
நான்கு செட்டுகள்
  
^ மூவருக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள். ^

  


//நேக்கு தேவை நீதி நேர்மை எருமை// -- அதிரா சொன்னது.

கோபு அண்ணா ப்ளீஸ் அந்த எமன் தி கிங் :) அவரோட வெஹிக்கிளை அதிராவுக்கு பரிசா கொடுங்க ... அந்த நெக்லஸை திரும்பி வாங்குங்க. -- ஏஞ்ஜலின் சொன்னது.



ஒரு நேயரின் விருப்பமாக .... காட்டு எருமையொன்று
பூனையைத் துரத்துவது போல இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

 

அஞ்சுவை நினைத்து அஞ்சி நடுங்கி
குளிரெடுத்து குதியாட்டம் போடும் பூனையார்



(கை கால் வால் எல்லாம் சும்மாத் தந்தியடிக்குது பாருங்கோ!)



@athiraav // தோடு?/// yes yes :)
பாம்படம் தான் இன்னும் பாக்கியாம் :))

அஞ்சுவின் மேற்படி, அன்பு ஆலோசனைக்கு இணங்க, அந்தக்குறையுமில்லாமல், மேற்படி தோடுகளுடன், உபரியாக பாம்படமும் அளித்து சிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹைய்யோ .... பாம்படம் அணிந்த 
காது நல்ல அழகோ அழகு!


ஹாஹாஆ :) தண்டட்டினும் சொல்வாங்க


தண்டட்டி அணிந்துள்ள அழகி !



என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


112 கருத்துகள்:

  1. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா கோபு அண்ணன் நித்திரை போல மின்னி முழக்கிட்டு ஓடிட வேண்டியதுதேன்ன்ன்:)..

    முதல் கதையில் வரும் பிலோமினாவின் கடித வரிகளைப் படிச்சதோடயே என் உற்சாகம்.. துள்ளல்... அத்தனையும் அடங்கி விட்டது கோபு அண்ணன்.. மனம் ஓஃப் ஆனது போலாச்சு:(... கனக்கும் வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா ! உங்களை 'ஆதிரா'ன்னு தப்பா கூப்பிட்டுகிட்டு இருந்ததுக்கு , கோபுசார் என் காதைப்பிடிச்சு திருகிட்டாரு!அதிரா!

      நீக்கு
    2. asha bhosle athira June 7, 2017 at 2:23 AM

      வாங்கோ அதிரா, வணக்கம். நான் முன்கூட்டியே தங்களிடம் சொன்னபடி இந்தப் பதிவினை நான் வெளியிட்டுள்ள நேரம் நள்ளிரவு 12.03 (I.S.T.) தாங்கள் வருகை தந்துள்ளதோ 2.23 AM (I.S.T).

      140 நிமிடங்கள் தாமதம். எனக்குக் கோபம் பொய்ய்யிங்கிப் பொய்ய்யிங்கி வந்ததாக்கும்.

      முதல் பின்னூட்டம் எங்கட அதிராவோடதாக இருக்கணும் ..... தொடர்ந்து பரிசுகள் வாங்கணும் .... என எங்கள் ஊரு உச்சிப்பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டேன்.

      நல்லவேளையாக உச்சிப்பிள்ளையார் அருளால் 140 நிமிட தாமதத்திற்குப் பிறகும் நீங்களே ஃபர்ஸ்ஸ்ஸ்டூ வந்துள்ளீர்கள் என்பதால் அடுத்த பதிவினில் உங்களுக்கு மட்டும் குறையேதும் இல்லாமல் நிறைய ஜொலிக்கும் பரிசுகளை வாரி வழங்கிட உள்ளேன்.

      இதை வேறு யாரிடமும் சொல்லிடாதீங்கோ. படித்ததும் கிழித்துப் போட்டுடுங்கோ, ப்ளீஸ்ஸ்.

      //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா கோபு அண்ணன் நித்திரை போல மின்னி முழக்கிட்டு ஓடிட வேண்டியதுதேன்ன்ன்:).. //

      வந்ததே லேட்டு. இதில் வந்த காலோடு உடனே ஓடினால் எப்பூடீஈஈஈஈஈ. கர்ர்ர்ர்ர்ர்ர்ர். :(

      //முதல் கதையில் வரும் பிலோமினாவின் கடித வரிகளைப் படிச்சதோடயே என் உற்சாகம்.. துள்ளல்... அத்தனையும் அடங்கி விட்டது கோபு அண்ணன்.. மனம் ஓஃப் ஆனது போலாச்சு:(... கனக்கும் வரிகள்.//

      எனக்கும் அதே போலத்தான் இருந்தது, அதிரா. எப்படி எப்படியோ இருந்தவள், எங்கிருந்தோ வந்தாள் .... இரண்டாண்டுகள் மட்டும் இவருக்கும் சந்தோஷம் கொடுத்து, தானும் சந்தோஷமாகவே இருந்திருக்கிறாள். திடீரென்று ஏன் ஓடினாள்? எங்கு ஓடினாள்? என்று நானும் மிகவும் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.

      ஏற்கனவே இரவு படுத்தால் எனக்குத் தூக்கம் வருவதே இல்லை. இப்போது இந்தப் பிலோமினாவின் புதிய கவலை வேறு எனக்குச் சேர்ந்துவிட்டது. அவளைக் கண்டுபிடிக்காமல், அவள் ஓடிப்போனதற்கான காரணம் அறியாமல், இனி நான் சுத்தமாகத் தூங்கவே மாட்டேனாக்கும். :)))))

      நீக்கு
    3. //முதல் பின்னூட்டம் எங்கட அதிராவோடதாக இருக்கணும் ..... தொடர்ந்து பரிசுகள் வாங்கணும் .... என எங்கள் ஊரு உச்சிப்பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டேன். //

      மீயும் மீயும் அதேதான் வேண்டிக்கொண்டேன்ன்ன் என்னா ஒரு டெலிபதி பாருங்கோ:).. ஆனா என்ன .. என் வெண்டுதலில் ஒரு சிறு மாற்றம்.. நான் இங்கு முதல் பின்னூட்டம் போட்டால்ல்ல்... கோபு அண்ணன் மிதியடி போட்டு உச்சிப்பிள்ளையார் கோயில் வெளிவீதி சுற்றுவார் என வேண்டினேன்.. பிள்ளையார் வரம் த்ந்திட்டார்ர்... கொடுத்த வாக்கைக் காப்பாற்றுங்கோ கோபு அண்ணன்.

      மோகன் ஜி மிக்க நன்றி. நான் அவதானிச்சேன்ன்.. சரி அதனாலென்ன என விட்டு விட்டேன்:).

      நீக்கு
  2. கூளம், வாக்கிங் இரண்டுமே சோகமானவையே.. எதுக்கு இம்முறை எல்லாமே சோகமாக அமைந்து விட்டதே... ஆனா படித்ததும் மனம் கனக்கும் அளவுக்கு கதை எழுதிய மோகன் ஜி ஐப் பாராட்டியே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் நன்றி அதிரா!

      நீக்கு
    2. @ அதிரா

      //மனம் கனக்கும் அளவுக்கு கதை எழுதிய மோகன் ஜி ஐப் பாராட்டியே ஆகவேண்டும்.//

      வெரி குட் ! நன்றி.

      நீக்கு
  3. நோஓஓஓஓஓ நான் ஒத்துக்க மாட்டேன்ன்ன்.. அஞ்சுவுக்கு கொடுத்திருப்பதில்தான் பளாச் பளாச் என வைரங்கள் ஜொலிக்குது:).. என்னுடைய தோட்டில் இருப்பவை எல்லாம் டூப்பிளிகேட் கல்லுகள்...:)).. விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:).. விடுங்கோ என் கையை விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ:) இதனால மோகன் ஜி யின் கதையை ஒழுங்காப் படிச்சுக் கொமெண்ட் போடும் ஒரு அன்பான, பண்பான, அழகான, அறிவான சுவீட் 16 பிள்ளையை இழக்கப்போறீங்க:)..

    ரொம்ப அவசரப்படிட்டமோ.. ஆளம் அதிகமாக இருக்கும் போலிருக்கே முருகாஆஆஆ:)
    https://thumb7.shutterstock.com/display_pic_with_logo/351280/492031555/stock-photo-cat-sits-on-pile-of-ground-on-banks-of-river-and-stares-into-distance-492031555.jpg

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 7, 2017 at 2:33 AM

      //நோஓஓஓஓஓ நான் ஒத்துக்க மாட்டேன்ன்ன்.. அஞ்சுவுக்கு கொடுத்திருப்பதில்தான் பளாச் பளாச் என வைரங்கள் ஜொலிக்குது:).. என்னுடைய தோட்டில் இருப்பவை எல்லாம் டூப்பிளிகேட் கல்லுகள்...:)).. விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்:).. விடுங்கோ என் கையை விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ:)//

      இதில் ஏதோ கொயப்பமாகி விட்டது போலிருக்குது. கவலைப்படாதீங்கோ. நாளைக்கு நள்ளிரவில் அடுத்த பதிவு வெளியிடும்போது, புதிதாக மூக்குத்திகள் பரிசளிக்கும் போது, பளபளத்து ஜொலிக்கும் காதுத்தோடுகளும் நல்ல வைரமாகப் பார்த்து 3-4 செட் அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன். அதுவரை தேம்ஸ் பக்கமே போகாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)

      //இதனால மோகன் ஜி யின் கதையை ஒழுங்காப் படிச்சுக் கொமெண்ட் போடும் ஒரு அன்பான, பண்பான, அழகான, அறிவான சுவீட் 16 பிள்ளையை இழக்கப்போறீங்க:)..//

      நோ..... நோ..... எதை இழந்தாலும், ஒரு அன்பான, பண்பான, அழகான, அறிவான ஸ்வீட் 16 ஆன இந்தப் பிள்ளையை மட்டும் இழக்கவே மாட்டேன். :)

      //ரொம்ப அவசரப்படிட்டமோ.. ஆளம் அதிகமாக இருக்கும் போலிருக்கே முருகாஆஆஆ:)

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      https://thumb7.shutterstock.com/display_pic_with_logo/351280/492031555/stock-photo-cat-sits-on-pile-of-ground-on-banks-of-river-and-stares-into-distance-492031555.jpg //

      நதிக்கரையில் அமர்ந்திருக்கும் பூனை சமத்தூஊஊஊ.

      ’நீ .... ஒரு நாள் .... வரும் வரையில் .... நான் இருப்பேன் நதிக்கரையில் ....’ என்ற பாடல் வரிகள் அந்தப் பூனை பாடுவதுபோல நினைத்துக்கொண்டேன்.

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மியாவுக்கும் என் நன்றிகள்.

      நீக்கு
    2. /// புதிதாக மூக்குத்திகள் பரிசளிக்கும் போது, பளபளத்து ஜொலிக்கும் காதுத்தோடுகளும் நல்ல வைரமாகப் பார்த்து 3-4 செட் அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன். அதுவரை தேம்ஸ் பக்கமே போகாதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ். :)///

      இதைப் படிச்சதும் நான் தேம்ஸ்ல குதிக்கும் என் முடிவை மாத்திட்டேன்ன்:) ஹா ஹா ஹா.. ஏனெண்டால்ல்ல்.. நான் குதிச்சிட்டால்ல் நீங்க வாங்கிய இவற்றை டமார் என அஞ்சுக்கு தூக்கிக் கொடுத்திடுவீங்க.. அவவும் ஏதோ அதிராவை நினைச்சு அழுவதுபோல மூக்கை ஹங்கியால துடைச்சுச் துடைச்சு.. அனைத்தையும் கொண்டுபோய் லொக்கரில் வைப்பா:) இதைப்பார்க்கும் என் ஆத்மா சாந்தியடையும் என்றா நினைக்கிறீங்க:)..

      அதனாலயே என் முடிவை மாத்திட்டேன்ன் ஹா ஹா ஹா:).

      நீக்கு
    3. asha bhosle athira June 7, 2017 at 5:34 PM

      //அவவும் ஏதோ அதிராவை நினைச்சு அழுவதுபோல மூக்கை ஹங்கியால துடைச்சுச் துடைச்சு.. அனைத்தையும் கொண்டுபோய் லொக்கரில் வைப்பா:) இதைப்பார்க்கும் என் ஆத்மா சாந்தியடையும் என்றா நினைக்கிறீங்க:)..

      அதனாலயே என் முடிவை மாத்திட்டேன்ன் ஹா ஹா ஹா:).//

      அருமை. அருமையோ அருமை. விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தேன். (நல்லவேளையாக அடி எதுவும் படவில்லை ... இன்னும் சிரித்துக்கொண்டே இதனை டைப்புகிறேன்.)

      நீக்கு
    4. //அதனாலயே என் முடிவை மாத்திட்டேன்ன் ஹா ஹா ஹா:).//

      jealous cat

      நீக்கு
  4. ஒரு அப்பாவிப் பூஸைப் பிடிக்க:) இந்தாப்பெரீய காட்டெருமையோ?:) இது உங்களுக்கே ஞாயமாப் படுதாஆஆஆஆஆ?:)...

    ///அஞ்சுவை நினைத்து அஞ்சி நடுங்கி
    குளிரெடுத்து குதியாட்டம் போடும் பூனையார்
    //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது பூஸார்...எப்படிக் குத்துவது கரெக்ட்டா கழுத்தில என, பிறக்டீஸ் பண்றார்.. உங்களுக்கு ஒண்ணும் தெரியாது கோபு அண்ணன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. asha bhosle athira June 7, 2017 at 2:35 AM

      //ஒரு அப்பாவிப் பூஸைப் பிடிக்க:) இந்தாப்பெரீய காட்டெருமையோ?:) இது உங்களுக்கே ஞாயமாப் படுதாஆஆஆஆஆ?:)...//

      இது கொஞ்சம்கூட நியாயமே இல்லைதான். நேயர் விருப்பமாக ஒருத்தங்க கேட்டிருந்தாங்கோ. அதுவும் அவங்க உங்களுக்கு டியரெஸ்ட் ஃப்ரெண்ட் வேறு. அதனால் மட்டுமே வெளியிடும்படியானது. கோச்சுக்காதீங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

      அப்படியும் அந்தக் காட்டெருமையால் அந்த அப்பாவி பூஸைப் பிடிக்கவே முடியலை பாருங்கோ. கடைசியில் அது என்னைப்போல டயர்ட் ஆகிவிடும். குட்டியூண்டு பூனை தப்பித்து ஓடிவிடும்.

      **அஞ்சுவை நினைத்து அஞ்சி நடுங்கி
      குளிரெடுத்து குதியாட்டம் போடும் பூனையார்**

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அது பூஸார்... எப்படிக் குத்துவது கரெக்ட்டா கழுத்தில என, பிராக்டீஸ் பண்றார்..//

      கரெக்டூஊஊஊ இதை.. இதை.. இதைத்தான் நானும் உங்களின் பதிலாக எதிர்பார்த்தேன்.

      //உங்களுக்கு ஒண்ணும் தெரியாது கோபு அண்ணன்:).//

      இதுவும் கரெக்டூஊஊஊ :)

      நீக்கு
    2. //////உங்களுக்கு ஒண்ணும் தெரியாது கோபு அண்ணன்:).//

      இதுவும் கரெக்டூஊஊஊ :)///

      ஹா ஹா ஹா இது டூப்பரூஊஊஊஊஊ:)

      நீக்கு
  5. ///ஹைய்யோ .... பாம்படம் அணிந்த
    காது நல்ல அழகோ அழகு!
    //

    ஹா ஹா ஹா பாம்படம் என்றால் இதுவா?:) ஹாஆஆஆஅ ஹாஆஅ.. அன்று நான் சத்தியமா நினைச்சது.. அஞ்சு ஏதோ பாம்புப்படம் என்பதை எழுத்துப் பிழைவிட்டு எழுதிட்டா என, அன்று ரொம்ப நேரமானதால விளக்கம் கேட்கவில்லை அப்படியே விட்டிட்டேன்ன்ன்... ஓ மை கடவுளே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஆ :) தண்டட்டினும் சொல்வாங்க உங்க வயசுக்காரங்க போடுவாங்க அதான் உங்களுக்கு கொடுத்திருக்கார் :))

      நீக்கு
    2. asha bhosle athira June 7, 2017 at 2:36 AM

      **ஹைய்யோ .... பாம்படம் அணிந்த காது நல்ல அழகோ அழகு!**

      //ஹா ஹா ஹா பாம்படம் என்றால் இதுவா?:) //

      இதைப்பற்றி எங்க வீட்டிலும் பெண்கள் யாருக்கும் தெரியவே இல்லை. பிறகு நானே கூகுளில் தேடிப்பிடித்துக் கண்டு பிடித்துத் தெரிந்துகொண்டேன்.

      இப்போ ஏதோ ’தண்டட்டி’ எனச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான ’தண்டட்டி கருப்பாயீ’ என்ற சூப்பரான படத்தையும் கூகுளில் போட்டு தேடிக் கண்டு பிடித்து ஸேவ் செய்து வைத்துள்ளேன். கொஞ்ச நேரத்தில் பதிவில் போட்டுக் காட்டுகிறேன். அதைப்போட்டிருக்கும் கிழவிக்கு ஒரு
      116 (16+100) வயதாவது இருக்கும். முகம் முழுவதும் ஒரே சுருக்கங்கள். இன்னும் மிகப்பெரிய காது ஓட்டையாக நெஞ்சுவரை நூல் போலத் தொங்கிக்கொண்டு உள்ளது. பார்க்கவே மிகவும் சிரிப்பாக உள்ளது. :)

      //ஹாஆஆஆஅ ஹாஆஅ.. அன்று நான் சத்தியமா நினைச்சது.. அஞ்சு ஏதோ பாம்புப்படம் என்பதை எழுத்துப் பிழைவிட்டு எழுதிட்டா என, அன்று ரொம்ப நேரமானதால விளக்கம் கேட்கவில்லை அப்படியே விட்டிட்டேன்ன்ன்... ஓ மை கடவுளே:).//

      பாம்படம் ....... பாம்புப்படம் ! ஆஹா, தங்களின் இந்தச் சொல்லாடல் மிகவும் பொருத்தமாகத்தான் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள், அதிரா. உண்மையிலேயே இது மிகவும் நல்ல சமாளிப்பாகவும் உள்ளது. :)

      நீக்கு
    3. @ அதிரா & அஞ்சு

      ’தண்டட்டி அணிந்துள்ள அழகி !’ படம் இப்போது இந்தப்பதிவின் இறுதியில் புதிதாக இணைக்கப் பட்டுள்ளது. காணத்தவறாதீர்கள் ! :)))))))))

      நீக்கு
    4. ///AngelinJune 7, 2017 at 3:52 AM
      ஹாஹாஆ :) தண்டட்டினும் சொல்வாங்க உங்க வயசுக்காரங்க போடுவாங்க அதான் உங்களுக்கு கொடுத்திருக்கார் :))///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நாங்கள் இதைக் கடுக்கன் எனச் சொல்வதாக நினைவு... முந்தைய காலத்தில் ஆண்களும் கடுக்கன் போடுவார்களாம்.

      நீக்கு
    5. //பாம்படம் ....... பாம்புப்படம் ! ஆஹா, தங்களின் இந்தச் சொல்லாடல் மிகவும் பொருத்தமாகத்தான் உள்ளது. மனம் நிறைந்த பாராட்டுகள், அதிரா. உண்மையிலேயே இது மிகவும் நல்ல சமாளிப்பாகவும் உள்ளது. :)///

      ஹா ஹா ஹா அஞ்சுவை இப்பூடிச் சொல்லித்தான் அப்பப்ப மிரட்டுவேன்ன்.. ஓவரா துள்ளினால்ல் பாஆஆஆஆஆ......ப்படம் அனுபிடுவேன் என..:)

      நீக்கு
    6. ///116 (16+100) வயதாவது இருக்கும். முகம் முழுவதும் ஒரே சுருக்கங்கள்.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மாத்தி யோசிக்கப் பழகோணும் கோபு அண்ணன்.. அதிராவைப்போல:)

      அந்த வயசிலும் பாஆஆஆஆ.... படம் போட்டுக்கொண்டு எவ்ளோ அயகாச் சிரிக்கிறா பாருங்கோ:) உங்களால முடியுமோ?:)

      நீக்கு
    7. asha bhosle athira June 7, 2017 at 5:42 PM

      //அந்த வயசிலும் பாஆஆஆஆ.... படம் போட்டுக்கொண்டு எவ்ளோ அயகாச் சிரிக்கிறா பாருங்கோ:) உங்களால முடியுமோ?:)//

      என்னால் இப்போது அயகாச் சிரிக்க முடிகிறது.

      இருப்பினும் என் 116-வது வயதில் என்னால் இதுபோலச் சிரிக்க முடியுமான்னு, அப்போது நான் இருந்தால் மட்டுமே சிரித்துப் பார்த்து என்னால் சொல்ல முடியும்.

      அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் உள்ளதே. நானும் நீங்களும் எப்போதுமே ஸ்வீட் சிக்ஸ்டீன்கள் மட்டும் அல்லவோ ! :)

      நீக்கு
  6. மோகன் ஜீ பற்றி அறியாத காட்சிப்படத்துடன் மிகவும் அருமையான நூல் விமர்சனப்பகிர்வு . வாழ்த்துக்கள் மோகன் ஜீக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தனிமரம் ஜி! இப்படி படங்கள் சேகரித்து, பொருத்தமான இடங்களில் இட்டு, ரசனையுடன் விமரிசித்து... கருத்துகளுக்கு பொறுமையாக விரிவான பதில்களும் இடும். கோபுசாரைப் பார்த்து வியக்கிறேன். உங்கள் அர்ப்பணிப்புணர்வில் பத்து சதவிகிதம் எனக்குத் தாருங்களேன் ஜி!

      நீக்கு
    2. தனிமரம் June 7, 2017 at 3:17 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மோகன் ஜீ பற்றி அறியாத காட்சிப்படத்துடன் மிகவும் அருமையான நூல் விமர்சனப்பகிர்வு. வாழ்த்துக்கள் மோகன் ஜீக்கு!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  7. அருமை காட்டெருமை துரத்தும் தொழில்நுட்ப வித்தை)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பேரன் அதை ரசித்துக் கொண்டேயிருக்கிறான்.

      நீக்கு
    2. தனிமரம் June 7, 2017 at 3:17 AM

      //அருமை காட்டெருமை துரத்தும் தொழில்நுட்ப வித்தை)))//

      அது, ஒரு நேயர் விருப்பத்திற்காக கஷ்டப்பட்டுத் தேடி வெளியிடப்பட்டுள்ளது, ஸார்.

      நீக்கு
    3. மோகன் ஜி உங்களுக்கு வயதாகிவிட்டதா?!!!!! பேரன்?!! உங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே..சரி சரி வாலிப தாத்தா!!! என்று சொல்லிக் கொள்ளலாமோ!!!! 20 வயதுப் பையன்களை சில சமயம் டேய் கிழவா என்று சொல்லுவதில்லையா என்ன???!!!!

      கீதா

      நீக்கு
    4. கீதா மேடம்! 20 வயதில் வள்ளலார், ராமகிருஷ்ணர், வேதப்பயிற்சி, ஆன்மீகம் என்று இருந்தேன். அறுபதைத் தொட்டபொழுது, விட்டதைப் பிடிக்க, பின்னோக்கி பாய்கிறேனோ என்னவோ?
      மஅனஅசஉ தானே எதற்கும் காரணம்?

      நீக்கு
  8. மகளுக்கு நாளைக்கு ஜெர்மன் எக்ஸாம் அதான் படிச்சிட்டிருந்தேன் அவளோட .அதான் தாமதம்
    பேரன் பேத்தி எடுத்த அந்த அ வில் ஆரம்பிச்சு ராவில் முடியும் பேருடையவர் வந்திட்டு போய்ட்டாரா :)

    பதிலளிநீக்கு
  9. எனக்கு அன்பு பரிசாக கொடுத்த swarovski கிரிஸ்டல் பிளாட்டினம் வாட்ச் நகைகளுக்கு நன்றி அண்ணா ..
    தேம்ஸ் கரையில் புகையா வருதாம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 346789233:)..

      அதை எல்லாம் கள்ளன் கொண்டு போக:) ஹா ஹா ஹா:).

      நீக்கு
  10. வாக்கிங்கும் மனம் கனக்கும் கதை போலிருக்கு .மன உணர்வுகளை ஒவ்வொரு கதையிலும் அழகாக சொல்லிய விதம் அருமை மோகன்ஜிக்கும் அதை சுவாரஸ்யமுடன் விமர்சனம் செய்த கோபு அண்ணாவுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக க நன்றி ஏஞ்சலின்... உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளுக்கு பாராட்டுகள்.

      நீக்கு
    2. Angelin June 7, 2017 at 3:47 AM

      வாங்கோ, வணக்கம்.

      //மகளுக்கு நாளைக்கு ஜெர்மன் எக்ஸாம் அதான் படிச்சிட்டிருந்தேன் அவளோட. அதான் தாமதம்.//

      நீங்கள் தாமதமாக வந்ததும் ஒருவிதத்தில் நல்லாப் போச்சு. அந்த ஜெர்மன் எக்ஸாம் வாழ்க!

      //பேரன் பேத்தி எடுத்த அந்த அ வில் ஆரம்பிச்சு ராவில் முடியும் பேருடையவர் வந்திட்டு போய்ட்டாரா :)//

      அது யாரு பேரன் பேத்தி எடுத்த மகராஜின்னு எனக்கு சரியாத் தெரியலையே. ஏற்கனவே இங்கு வந்துள்ள சிலர் ஒரே கோபத்தில் இருப்பதுபோலத் தெரிகிறதூஊ. அவர்களின் கோபத்தை நாம் மேலும் மேலும் பொய்ய்ய்ங்கிட செய்ய வேண்டாம் என நினைத்து நானே கம்ம்ம்முன்னு இருக்கிறேனாக்கும்.

      நீக்கு
    3. Angelin June 7, 2017 at 3:50 AM

      //எனக்கு அன்பு பரிசாக கொடுத்த swarovski கிரிஸ்டல் பிளாட்டினம் வாட்ச் நகைகளுக்கு நன்றி அண்ணா ..//

      எப்படியும் நம்ம அதிராவுக்கு ஒவ்வொரு பதிவிலும் ஏதேனும் சில பரிசுகள் நான் கொடுத்தே ஆகணும்.

      போன பதிவில் நீங்க அவங்களை முந்திக்கொண்டு இரண்டாம் இடம் பிடித்திருந்தீங்கோ.

      அதனால் உங்களுக்கும், முதலிடம் பிடித்திருந்த நம் சித்ராவுக்கும் சேர்த்து மூவருக்குமாகக் கொடுத்துவிட்டேன்.

      நாம் செய்யும் எந்த செயலிலும் ஏதேனும் ஒரு நியாயம், தர்மம், ஒழுங்குமுறை இருக்கணுமோள்யோ. :) யாரேனும் குறுக்குக் கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கணுமே.

      //தேம்ஸ் கரையில் புகையா வருதாம் :)//

      பெரும் புகையோ?

      பகை இல்லாமல் இருந்தால் சரிதான். :)

      நீக்கு
    4. Angelin June 7, 2017 at 4:01 AM

      வாக்கிங்கும் மனம் கனக்கும் கதை போலிருக்கு. மன உணர்வுகளை ஒவ்வொரு கதையிலும் அழகாக சொல்லிய விதம் அருமை. மோகன்ஜிக்கும் அதை சுவாரஸ்யமுடன் விமர்சனம் செய்த கோபு அண்ணாவுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//

      அனைத்துக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
    5. ///மோகன்ஜிJune 7, 2017 at 10:07 AM
      மிக க நன்றி ஏஞ்சலின்... உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளுக்கு பாராட்டுகள்.///

      பார்த்தீங்களோ பார்த்தீங்களோ.... அஞ்சுவினுடையதுதான்ன்ன் உண்மையான டயமண்ட் என மோகன் ஜீ க்கு தெரிஞ்சமையாலயே அஞ்சுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்ர்.. என்னுடையது டூப்பிளிகேட் என்றதனால காக்கா போயிட்டார்ர்ர்...:(

      டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. பிங் கலரிலதான் வேணும்:).

      நீக்கு
    6. ஹாஹ்ஹா :) நான் இப்போதான் மிளகா தூள் துடைச்சிட்டு வச்சேன் அதை தரட்டா :) இல்லை பிங்க் கலரில் தான வேணும்னா
      ஜூவில் (Pantherophis guttatus பாஆபூ அதோட பிங்க் டிஸ்யூ சட்டையை கழட்டி போட்டிருக்கு அதை கொண்டாந்து தரேன் போதுமா :)

      நீக்கு
  11. பிலோமினா எதோ பெரும் மன வருத்தத்தில் சென்று விட்டாரோ ,பாவம்
    கூளம் எங்கள் பிளாக்கில் படித்து சிலாகித்து இருந்தேன் ..ஏனென்றால் நான் நிறைய கூளங்களை சேர்த்து வைத்திருக்கேன் .
    மகள் கிறுக்கி வைத்தாள் என்ற காரணத்துக்காக ஒரு மர அலமாரியை ஜெர்மனிலருந்து தூக்கிட்டு வந்தோம் ferry யில் .
    பள்ளிக்கூட நோட்ஸ் அவள் சாண்டாக்கு எழுதின கடிதம் ,வரைந்த கண் காது மூக்கு .பல வருஷமும் பெற்றோர் அனுப்பிய கடிதம் அப்பா அனுப்பிய பார்சல் கவர் எல்லாம் இருக்கு இன்னும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காகிதமோ... பொருளோ... நம் நினைவுகளை ஏந்தியிருப்பவையானால் சுலபத்தில் ஒதுக்கிவிட மாட்டோம். கல்லூரி நாட்களில் ஒரு பட்டிமன்றத்தில் சுமாராகப் பேசினேன். கிவாஜ அவர்கள், அந்த விழாவின் அழைப்பிதழிலேயே 'சிறப்பான பேச்சு. பாராட்டும் ஆசியும்' என எழுதித் தந்தார். பலகாலம் பத்திரமாக இருந்த அந்தக் காகிதம், பிறகு எப்படியோ தொலைந்து விட்டது. தேடிக் கொண்டாயிருக்கிறேன் ஏஞ்சலின்.

      நீக்கு
    2. Angelin June 7, 2017 at 4:03 AM

      //பிலோமினா எதோ பெரும் மன வருத்தத்தில் சென்று விட்டாரோ, பாவம் //

      எனக்கு இங்குள்ள கவலைகள் போதாதென, பிலோமினா என்ற அவளின் அதே கவலையில் நானும் இப்போது .... தூக்கமே வராமல் துக்கத்துடன் உள்ளேன். :)

      //கூளம் எங்கள் பிளாக்கில் படித்து சிலாகித்து இருந்தேன் .. ஏனென்றால் நான் நிறைய கூளங்களை சேர்த்து வைத்திருக்கேன். மகள் கிறுக்கி வைத்தாள் என்ற காரணத்துக்காக ஒரு மர அலமாரியை ஜெர்மனிலருந்து தூக்கிட்டு வந்தோம் ferry யில். பள்ளிக்கூட நோட்ஸ் அவள் சாண்டாக்கு எழுதின கடிதம், வரைந்த கண் காது மூக்கு .பல வருஷமும் பெற்றோர் அனுப்பிய கடிதம் அப்பா அனுப்பிய பார்சல் கவர் எல்லாம் இருக்கு இன்னும் //

      என்னிடம் உள்ள இதுபோன்ற அடசல்கள் ஒரு லாரியில் ஏற்றும் அளவுக்கு உள்ளன. :(

      தொடர்பதிவுக்கான தங்களின் http://kaagidhapookal.blogspot.in/2013/02/blog-post.html அழைப்பினை ஏற்று நான் ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பில் 12 பகுதிகள் கொண்ட ஒரு தொடரே எழுதியுள்ளேனே!

      அதன் பகுதி-1 க்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/03/1.html

      நீக்கு
  12. கூளம் என்பது நினைவுகள் சிலருக்கு குப்பையா தோணலாம் ஆனா அதை பார்த்தா எத்தனை நிகழ்வுகள் மறக்கமுடியா சம்பவங்கள் மனதை ஆக்கிரமிக்கும் .அதுவும் எனக்கெல்லாம் ஒரு துரும்பு கிடைச்சாலும் அதை சுற்றிய நினைவுகள் பல தொடரும் .சில கனக்கும் நினைவுகளை விட்டு சந்தோஷத்தை மட்டும் வச்சுக்கணும் ..இதுவரைக்கும் எதையும் தூக்கிபோடலை வரும்காலத்தில் எனது கூளங்கள் என்னாகுமோன்னு தெரில ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் நம் பொக்கிஷம் நம் பிள்ளைகளுக்குக் கூட கூளமாய்த் தோன்றலாம்!

      நீக்கு
    2. Angelin June 7, 2017 at 4:19 AM

      //கூளம் என்பது நினைவுகள் சிலருக்கு குப்பையா தோணலாம். ஆனா அதை பார்த்தா எத்தனை நிகழ்வுகள் மறக்கமுடியா சம்பவங்கள் மனதை ஆக்கிரமிக்கும். அதுவும் எனக்கெல்லாம் ஒரு துரும்பு கிடைச்சாலும் அதை சுற்றிய நினைவுகள் பல தொடரும். சில கனக்கும் நினைவுகளை விட்டு சந்தோஷத்தை மட்டும் வச்சுக்கணும் .. இதுவரைக்கும் எதையும் தூக்கிபோடலை வரும்காலத்தில் எனது கூளங்கள் என்னாகுமோன்னு தெரில ..//

      தங்களின் இதே ஆதங்கங்களைத்தான் நான் என் தொடரின் முதல் பகுதியில் ஓர் விரிவான முன்னுரையாகவே எழுதிவிட்டு, அதன் பிறகே தொடர் பதிவுகளை 12 பகுதிகளாகப் பிரித்துத் தந்துள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2013/03/1.html

      அதில் உள்ள தங்களின் இரு பின்னூட்டங்கள் இதோ:

      angelin March 15, 2013 at 7:18 PM

      எங்களது அழைப்பை ஏற்று தொடர்வதற்கு முதலில் மிக்க நன்றி அண்ணா .

      பொக்கிஷத்துக்கு .. முன்னுரை ,விளக்கவுரை அனைத்தும் FANTABULOUS !!!!!

      angelin March 15, 2013 at 7:24 PM

      **உதாரணமாக நமது அன்புக்குரியவர், ஓர் ’ரவாலாடு’ போன்ற தின்பண்டம் நமக்குத் தருகிறார். நம் அன்புக்கு உரியவரான அவர் நமக்குக் கொடுக்கும் அது, நம்மைப்பொறுத்தவரை ஒரு பொக்கிஷம் தான்.** - கோபு

      இதில் எனது சொந்த அனுபவம் ஒன்று இருக்கு .. படித்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது .. கண்டிப்பாக விரைவில் கூறுகிறேன் :))

      என்னை பொறுத்தவரை இந்த பதிவே எனக்கு மிகசிறந்த பொக்கிஷமாக தோன்றுகிறது ... அருமையான அறிவுரைகளுடன்.

      நீக்கு
    3. haahaa :) அந்த மார்ஸ் சாக்லட்டை மறக்கலியே நீங்க

      நீக்கு
    4. Angelin June 7, 2017 at 7:00 PM

      //haahaa :) அந்த மார்ஸ் சாக்லட்டை மறக்கலியே நீங்க//

      மிகவும் பிரியத்துடன், நீங்காத நினைவாக ஓர் அன்புக்குரியவர், Costly Sweet Chocolates உங்களுக்கு வாங்கிக்கொடுக்க, அதை எப்படிப்பிரிப்பது, என்ன செய்வது என்றே தெரியாத பருவத்தில், அவரின் நினைவலைகளுடன் பத்திரப்படுத்தப்போய் .... அப்போதே உங்களுக்கு அனைத்து மிகச் சிறிய பிராணிகளிடமும் ஜீவகாருண்யம் இருந்துள்ளது .... அதை எப்படி என்னால் மறக்க முடியும்? :)

      Very Sweet Memories !!!!! அல்(ல)வா :)

      நீக்கு
  13. கதைக் களங்கள் அனைத்தும்
    தங்கச் சுரங்கங்கள் போல
    எனக்குப் படுகிறது

    அதை அருமையாகத் தோண்டி
    எடுத்துமோகன் ஜீ அற்புதமான
    சிற்பம் ஆக்கி இருக்கிறார் எனபதை
    தங்கள் விமர்சனம் படிக்கப் புரிகிறது

    அனைத்துக் கதைகளும்
    அவருடைய தளத்தில் இருப்பதாகத்
    தங்கள் பதிலில் சொன்னது
    பயனுள்ள தகவல்

    தங்கள் விமர்சனப் பதிவு
    முடிந்ததும் முழுவதையும்
    படித்து முடிக்க எண்ணியுள்ளேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்க நன்றி ரமணி சார்! என் மின்னஞ்சல் முகவரிக்கு (mohanji.ab@gmail. Com) முகவரியை அனுப்புங்கள். புத்தகம் கிடைக்கும்.

      நீக்கு
    2. Ramani S June 7, 2017 at 5:08 AM

      வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம்.

      //கதைக் களங்கள் அனைத்தும் தங்கச் சுரங்கங்கள் போல எனக்குப் படுகிறது. அதை அருமையாகத் தோண்டி எடுத்து மோகன் ஜீ அற்புதமான சிற்பம் ஆக்கி இருக்கிறார் எனபதை தங்கள் விமர்சனம் படிக்கப் புரிகிறது.//

      தங்கச் சிலை/சிற்பம் போன்ற தங்களின் இந்தக் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //அனைத்துக் கதைகளும் அவருடைய தளத்தில் இருப்பதாகத் தங்கள் பதிலில் சொன்னது
      பயனுள்ள தகவல். தங்கள் விமர்சனப் பதிவு முடிந்ததும் முழுவதையும் படித்து முடிக்க எண்ணியுள்ளேன்.//

      ஆமாம் ஸார். கடந்த எட்டு ஆண்டுகளில் (2010-2017) அவர் வலைத்தளத்தில் 180 பதிவுகள் மட்டுமே கொடுத்துள்ளார். அதுவும் 2010-11 க்குப்பிறகு ஆடிக்கொருநாள் அமாவாசைக்கொருநாள் என்றுதான் அவையும் அங்கு உள்ளன. தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் சுலபம் மட்டுமே.

      //பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்//

      தங்களின் தொடர் வருகைக்கும், அழகான, ஆரோக்யமான உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

      நீக்கு
  14. இவருடைய சிறுகதை ஒன்றில் கூட மோகன்ஜி இல்லை!
    அந்தந்த கதாபாத்திரங்களை நம்முடன் உரையாட விட்டு,சட்டென்று நகர்ந்து விடுகிறார்..(உ.ம்) தர்மு அண்ணன்,முத்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூவார் முத்தே ! தன்யனானேன்!
      அவ்வப்போது நம் பொன்னான வலைநாட்களை நினைத்துக் கொள்வேன். பதிவுகளும். கருத்துப் பரிமாற்றங்களும் எவ்வளவு சுகமாக இருந்தது.?முகநூலில் இவை யாவும் இல்லை . விட்டில் பூச்சி ஸ்டேட்டஸ்கள்!!

      நீக்கு
    2. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
      June 7, 2017 at 5:56 AM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

      //இவருடைய சிறுகதை ஒன்றில் கூட மோகன்ஜி இல்லை!//

      கரெக்ட்டூஊஊஊஊஊ.

      //அந்தந்த கதாபாத்திரங்களை நம்முடன் உரையாட விட்டு, சட்டென்று நகர்ந்து விடுகிறார்..(உ.ம்) தர்மு அண்ணன், முத்து!//

      ஆம். அதுவும் அந்த ’தர்மு அண்ணன்’ ..... தன் நவத்துவாரங்களாலும் முத்துவுடன் உரையாடுகிறார் என்பது கூடுதல் சிறப்பு அல்லவா? :)

      நீக்கு
  15. கதை என்றெல்லாம் சொல்வதற்கு இல்லை.. பொன்வீதியில் உயிர்ப்புடன் உலவுகின்றனர்..

    தங்கள் பதிவில் அழகுக்கு அழகாக அணிவகுக்கின்றார்கள்..

    கனியின் சாறெடுத்து வழங்கும் தங்கள் பணி வாழ்க.. வளர்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சார்!
      //கனியின் சாறெடுத்து வழங்கும் தங்கள் பணி வாழ்க.. வளர்க//
      கோபுசாரின் சீரிய பணிக்கு சிறப்பான பாராட்டு! நன்றி ஜி!

      நீக்கு
    2. துரை செல்வராஜூ June 7, 2017 at 6:35 AM

      வாங்கோ பிரதர், வணக்கம்.

      //கதை என்றெல்லாம் சொல்வதற்கு இல்லை.. பொன்வீதியில் உயிர்ப்புடன் உலவுகின்றனர்.. தங்கள் பதிவில் அழகுக்கு அழகாக அணிவகுக்கின்றார்கள்.. கனியின் சாறெடுத்து வழங்கும் தங்கள் பணி வாழ்க.. வளர்க..//

      தங்களின் தொடர் வருகைக்கும், முக்கனி சாறு போல
      பிழிந்து அளித்துவரும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, பிரதர்.

      நீக்கு
  16. மோகன் ஜியின் அழகான படங்கள் போனஸ்..
    படைப்பாளியின் சந்தோஷம்.. வாசகனின் தேர்ந்த ரசனை யில்..
    மோகன் ஜி கொடுத்து வைத்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன்ஜி !
      //மோகன் ஜியின் அழகான படங்கள் போனஸ்..//
      கிண்டல் தானே?! கோபு சாரும் எப்படியெல்லாமோ என் படத்தைப் போட்டுப் பார்க்கிறார்... இதுவரை ஒரு வரன் கூட தகையவில்லை!!

      நீக்கு
    2. ரிஷபன் June 7, 2017 at 7:43 AM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //மோகன் ஜியின் அழகான படங்கள் போனஸ்..//

      20% மட்டுமே, ஒரு மாத சம்பளம் மட்டுமே என்ற சட்ட விதிமுறைக் கட்டுப்பாடுகளோ, உச்சவரம்போ ஏதுமின்றி, எனக்கு இவர் நிறையவே போனஸ் கொடுத்து மகிழ்வித்துள்ளார். :)

      வித்யாசமான கவர்ச்சிப் படங்களில்லா பதிவுகளை யார் விரும்பிப் பார்ப்பார்கள்? படிப்பார்கள்?

      அதற்காகவே நான் மேலும் சில கவர்ச்சிப்படங்களை, முதல் பின்னூட்டமிடும் சுமங்கலிப் பெண்களுக்கு மட்டுமான பரிசுப் பொருள் என்ற பெயரில் தேடித்தேடி இணைத்தும் வருகிறேன். :)

      //படைப்பாளியின் சந்தோஷம்.. வாசகனின் தேர்ந்த ரசனை யில்.. மோகன் ஜி கொடுத்து வைத்தவர்.//

      ஆம் ..... மோகன்ஜி (இந்தத் தன் நூலை எனக்கே எனக்கு அன்பளிப்பாகக்) கொடுத்து வைத்தவர் மட்டுமே. :)

      பிரியத்துடன்
      வீ.....ஜீ

      நீக்கு
  17. கூளம் என் மனதை சட்டென அப்பிக்கொண்டது காரணம் நானும் அப்படிப்பட்டவனே... இன்றுவரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி! கூளம் சேர்க்காதவர்யார்?? அதனால் தானோ என்னவோ பலருக்கும் கதை பிடித்திருக்கிறது

      நீக்கு
    2. KILLERGEE Devakottai June 7, 2017 at 8:24 AM

      //கூளம் என் மனதை சட்டென அப்பிக்கொண்டது காரணம் நானும் அப்படிப்பட்டவனே... இன்றுவரை.//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      நீக்கு
  18. பலகாலம் சேமித்திருந்த கூளத்தைக் கொஞ்சம் குறைத்தால் கழித்த ஒன்று , அடுத்த சில நாள்களில் , அவசியமாகத் தேவைப்படும் . நல்ல கதைகள் .

    பதிலளிநீக்கு
  19. நன்றாகச் சொன்னீர்கள் ஐயா! எனக்கும் அந்த அனுபவம் உண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொ.ஞானசம்பந்தன் June 7, 2017 at 11:56 AM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      //பலகாலம் சேமித்திருந்த கூளத்தைக் கொஞ்சம் குறைத்தால் கழித்த ஒன்று, அடுத்த சில நாள்களில், அவசியமாகத் தேவைப்படும். நல்ல கதைகள்.//

      ஆமாம். தங்களின் பழுத்த அனுபவத்தில் இதனை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். நானும் இதனை அப்படியே அனுபவித்துள்ளேன்.

      குப்பையும் கூளமாக இருப்பினும் நாம் எப்படியோ அதில் தேடிக் கண்டு பிடித்து விடமுடியும். ஒழித்து சுத்தப்படுத்தி குறைத்துவிட்டால் போச்சு ..... எதையும் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டமாகிவிடும் எனக்கு.

      தங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      நீக்கு
  20. கூளம் எனக்கு மிகவும் பிடித்த கதை.
    நிறைய சேர்ந்து விட்டது என்று கடிதங்களை கிழித்து போட்டு விட்டு அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட்டு இருக்கிறேன்.

    இப்போது கடிதம் எழுதுவதே இல்லை யாரும். கடிதங்கள் காலத்தின் குறிப்புகள் போல !
    இன்னும் இருக்கிறது நிறைய கடிதங்கள். நிறைய சேமிப்புகள் இருக்கிறது
    அடுத்த தலைமுறைகள் கூளங்களை சேர்த்து வைத்து இருக்கிறார்கள் என்று அவற்றை தூக்கி போட்டு விடலாம்.

    விமர்சனம், படங்கள், எல்லாம் அழகு.
    தொடர்கிறேன்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு June 7, 2017 at 3:46 PM

      வாங்கோ, வணக்கம்.

      //கூளம் எனக்கு மிகவும் பிடித்த கதை.//

      அப்படியா? சந்தோஷம்.

      //நிறைய சேர்ந்து விட்டது என்று கடிதங்களை கிழித்து போட்டு விட்டு அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட்டு இருக்கிறேன். இப்போது கடிதம் எழுதுவதே இல்லை யாரும். கடிதங்கள் காலத்தின் குறிப்புகள் போல ! இன்னும் இருக்கிறது நிறைய கடிதங்கள். நிறைய சேமிப்புகள் இருக்கிறது. அடுத்த தலைமுறைகள் கூளங்களை சேர்த்து வைத்து இருக்கிறார்கள் என்று அவற்றை தூக்கி போட்டு விடலாம்.//

      ஆம். தாங்கள் சொல்லும் இவையெல்லாமே சரிதான்.

      //விமர்சனம், படங்கள், எல்லாம் அழகு. தொடர்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துப் பகிர்வுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்!
      //கூளம் எனக்கு மிகவும் பிடித்த கதை//
      ஆமாம் மேடம். எனக்கு தினைவிருக்கிறது. எங்கள் பிளாகிலும், வானவில் மனிதனிலும் உங்கள் நெகிழ்ச்சி தரும் கருத்துகள் வெளியிட்டிருந்தீர்கள்.
      மிக்க நன்றி!

      நீக்கு
  21. வழக்கம்போல வை.கோ அவர்களின் அழகிய விமர்சனம் அன்பு சகோதரர் மோகன்ஜிக்கு அளித்த வைர மகுடமாய் ஜொலிக்கிறது! கூடவே அருமையான நகாசு வேலைகள்! கிரீடத்தின் அழகிற்கு கேட்கவா வேண்டும்?

    ' கூளம்' முன்பேயே படித்து ரசித்திருக்கிறேன். பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். மனதை பாதித்த கதை அது! சகோதரரின் புத்தகம் எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் June 7, 2017 at 4:24 PM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //வழக்கம்போல வை.கோ அவர்களின் அழகிய விமர்சனம் அன்பு சகோதரர் மோகன்ஜிக்கு அளித்த வைர மகுடமாய் ஜொலிக்கிறது! கூடவே அருமையான நகாசு வேலைகள்! கிரீடத்தின் அழகிற்கு கேட்கவா வேண்டும்? //

      ஆஹா, தங்களின் இந்தப் பின்னூட்டமே வைர மகுடமாய் ஜொலிக்கத்தான் செய்கிறது ... எனக்கு.

      நாகாசு வேலைகளை மட்டும் நான் செய்யாது போனால் இங்கு இப்போது வருகை தந்து கொண்டிருக்கும் சுமார் 25 பேர்களில் இன்னும் 10-15 பேர்கள் காணாமல் போய் இருந்திருப்பார்கள்.

      ஒரு காலத்தில் திருப்பதி / சபரிமலை / பழநி / குருவாயூர் கோயில்கள் போல எத்தனை பக்தர்கள் வந்து போன இடம் இது. 100-150-200-250-300 என சர்வ சாதாரணமாகப் பின்னூட்ட எண்ணிக்கைகள் எகிறிய அதெல்லாம் ஒரு பொற்காலம்.

      //'கூளம்' முன்பேயே படித்து ரசித்திருக்கிறேன். பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். மனதை பாதித்த கதை அது!//

      ஆம். தெரியும். ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்கள் ‘கேட்டு வாங்கிப் போடும்’ கதையாக இதை ஒரு முறை வெளியிட்டிருந்தார். அங்கு தாங்கள் மிகப்பெரிய பின்னூட்டமாகக் கொடுத்திருந்தீர்கள். அது வானவில் மோகன்ஜி அவர்களின் பதிவிலும் கீழ்க்கண்ட இணைப்பினில் உள்ளது.

      http://vanavilmanithan.blogspot.in/2016/03/blog.html

      //சகோதரரின் புத்தகம் எங்கு கிடைக்கும்?//

      mohanji.ab@gmail.com என்ற மெயில் முகவரியில் மோகன்ஜி இருக்கிறார். அவரிடம் கேளுங்கோ. சரியாகச் சொல்லுவார்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  22. மிக்க நன்றி மேடம்! நகாசு வேலைகளே மகுடத்திற்கு அழகல்லவா! என் மின்னஞ்சலுக்கு
    mohanji.ab@gmail.com முகவரி அனுப்புங்கள். புத்தகம் அனுப்புகிறேன். சென்னை அந்நகரின் 59c, நார்த் உஸ்மான் ரோடு நியூ புக் லேண்ட்ஸிலும் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
  23. அன்பு சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு!

    நகாசு வேலைகள் இல்லையென்றால் 10, 15 பேர் வராமலிருந்திருப்பார்கள் என்ற உங்கள் கருத்தை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஒத்துக்கொண்டால் உங்கள் எழுத்தின் தரமும் சுறுசுறுப்பாக பின்னூட்டங்கள் இடும் அழகும் சினேகமான அணுகு முறையும் குறைந்து விட்டதாக அர்த்தம். அவை குறையவேயில்லையே? மாறாக கூடிக்கொண்டே அல்லவா போகின்றது?

    ஒரே ஒரு காரணம் உங்களுக்கு நீங்களே போட்டுக்கொண்ட வேலி தான்! அதனால் ஏற்பட்ட இடைவெளியில் மற்றவர்களின் தொடர்பிலும் இடைவெளி ஏற்படுவது நியாயம்தானே?

    வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். திறனாய்வு மட்டும் உங்கள் திறமையல்ல! இன்னும் எத்தனையோ பேர்களை ரசிக்க வைக்கும் திறமையான எழுத்து உங்களிடம் மிச்சமிருக்கிற்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் June 7, 2017 at 8:59 PM

      //அன்பு சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு!

      நகாசு வேலைகள் இல்லையென்றால் 10, 15 பேர் வராமலிருந்திருப்பார்கள் என்ற உங்கள் கருத்தை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.//

      2010-இறுதிக் காலாண்டில் நாம் முதன்முதலாக மெயில்கள் மூலம் நண்பர்களானோம். அப்போதே தங்களின் பதிவுகளைப் படித்து, தட்டுத்தடுமாறி நான் தமிழில் தட்டச்சு செய்து பின்னூட்டங்கள் அளித்து வந்தேன்.

      2011-முதல் நான் எனக்கென்று ஒரு தனி வலைப்பூ துவங்கி எழுத ஆரம்பித்ததற்குக் காரணமாக இருந்துள்ள ஒரு சிலரில் தங்களுக்கும் ஓர் மிக முக்கியமான இடம் உண்டு.

      தாங்கள் இப்போது ஓர் நடுநிலைமையாளராக இருந்து, இங்கு என்னிடம் சொல்ல வேண்டிய கருத்துக்களை, ஆணித்தரமாகவும், அழகாகவும், நியாயமாகவும் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். அதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு உள்ளது.

      இதனை இப்போது தங்கள் வாயிலாகக் கேட்க எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி மட்டுமே.

      >>>>>

      நீக்கு
    2. VGK >>>>> மனோ மேடம் (2)

      //ஒத்துக்கொண்டால் உங்கள் எழுத்தின் தரமும் சுறுசுறுப்பாக பின்னூட்டங்கள் இடும் அழகும் சினேகமான அணுகு முறையும் குறைந்து விட்டதாக அர்த்தம். அவை குறையவேயில்லையே? மாறாக கூடிக்கொண்டே அல்லவா போகின்றது? //

      1) எழுத்தின் தரம் .....

      இது ஓரளவுக்கு இறைவன் எனக்குக் கொடுத்த தனி வரம் என்றே நான் எப்போதும் நினைப்பவன்.

      2) சினேகமான அணுகுமுறை .....

      இன்றைக்கும் கூட என்னிடம் மிகவும் பிரியமாகவும், சினேகமாகவும், பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களையெல்லாம் தாண்டி, தங்களின் சொந்தப் பிரச்சனைகளைச் சொல்லி, என்னிடம் பல்வேறு ஆலோசனைகள் பெற்று, ஆறுதல் அடையும் நபர்களாகப் பலரும் இருந்து வருகிறார்கள். அவர்களில் பலரும் பல்வேறு காரணங்களால் இப்போது என் பதிவுகள் பக்கமே எட்டிப்பார்ப்பதுகூட இல்லை. இருப்பினும் தினமும் என்னுடன் ஏதாவது ஒரு தொடர்புகளில் உள்ளவர்கள் மட்டுமே. இவர்களில் பலரையும் நான் இன்னும் நேரில் சந்தித்ததுகூட இல்லை. இருப்பினும் என் சொந்தக்காரர்களைவிட இவர்கள் என்னிடம் கூடுதலாக சினேகத்துடன் பழகி அதிக பாசத்துடன் இருந்து வருகிறார்கள்.

      இதுவே வலையுலகில் நான் சம்பாதித்துள்ள மிகப்பெரிய சொத்தாக நினைத்து மகிழ்கிறேன். :)

      3) சுறுசுறுப்பான பின்னூட்டங்கள் .....

      இது இயற்கையாகவே என்னிடம் உள்ள ஒரு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் என பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஒரு பதிவினைப் படித்தவுடன், எனக்கு அது ஓரளவுக்குப் பிடித்திருந்தால், அப்போது எனக்கு என் மனதில் என்ன உதிக்கிறதோ, அதை உடனே, சற்றே வித்யாசமான முறையில், தட்டச்சு செய்து அனுப்பி, பதிவு வெளியிட்டுள்ளவருக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுமாறு செய்துவிட வேண்டும் எனத் துடிப்பவன் நான்.

      நல்ல எழுத்துக்களையும், நல்ல எழுத்தாளர்களையும் அவர்களிடமிருந்து எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் ஆதரிக்க நினைப்பவன் நான்.

      நான் முன்புபோல புதிய பதிவுகள் என் தளத்தில் தராதுபோனாலும், அவர்கள் என் பக்கமே வராமல் இருப்பினும்கூட, குறிப்பிட்ட சிலரின் வலைப்பக்கம் என் பின்னூட்டங்கள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும்.

      அதுபோலவே என் பக்கம் தொடர்ச்சியாகவோ அல்லது அவ்வப்போதோ வந்துகொண்டிருக்கும் அனைவரின் பதிவுகளுக்கும் நான் சென்று பின்னூட்டங்கள் தருவதும் இல்லை.

      அதிலும் சிலரின் பக்கம் நான் இதுவரை ஒருமுறைகூட போனதும் இல்லை.

      நான் என்னுடைய வாசிப்பு வட்டத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    3. VGK >>>>> மனோ மேடம் (3)

      //ஒரே ஒரு காரணம் உங்களுக்கு நீங்களே போட்டுக்கொண்ட வேலி தான்! அதனால் ஏற்பட்ட இடைவெளியில் மற்றவர்களின் தொடர்பிலும் இடைவெளி ஏற்படுவது நியாயம்தானே?//

      தாங்கள் சொல்லியுள்ள இது எனக்கும் நன்றாகவே புரிகிறது.

      நான் எனக்கே போட்டுக்கொண்டுள்ள வேலிக்கான காரணங்கள் நிறையவே உள்ளன.

      அவற்றில் ஒருசிலவற்றை மட்டும் பாலிஷ்டாக தங்களை நேரில் சந்தித்தபோதே சொல்லியிருந்தேன் என எனக்கு ஞாபகம் உள்ளது.

      முக்கியமாக என் உடல்நிலை, வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலைகள் + இங்குள்ள சில பிரத்யேக குடும்பச் சூழ்நிலைகள் போன்றவைகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

      2011-2012 ஆகிய ஆண்டுகளில் வலையுலகில் இருந்துவந்த பிரபலங்கள் பலரும் 2013-2014 இல் குறைந்து விட்டார்கள். எங்கோ காணாமல் போய் விட்டார்கள்.

      அதன்பின் 2013-2014 ஆண்டுகளில் வேறுசிலர் புதிதாகத் தோன்ற ஆரம்பித்தார்கள்.

      2015 வரை ஓரளவு சுறுசுறுப்பாக இயங்கிவந்த வலையுலகம் அதன்பின் ஏனோ அடியோடு மாறிப்போய் விட்டதாகவும், ஒரு மந்த நிலைமை ஏற்பட்டு விட்டதாகவும் எனக்குத் தோன்றுகிறது.

      குறிப்பாகச் சொல்லப் போனால், ஒருவரின் பதிவினை ஊன்றிப்படித்து, வித்யாசமாக கருத்திடும் நபர்களை இன்று நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

      >>>>>

      நீக்கு
    4. VGK >>>>> மனோ மேடம் (4)

      //வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். திறனாய்வு மட்டும் உங்கள் திறமையல்ல!//

      இதனை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல, வெகு அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

      2011 to 2015 வரை முதல் 5 ஆண்டுகளில் நான் கொடுத்துள்ள பதிவுகளின் எண்ணிக்கை: 806 ஆகும். அதாவது சராசரியாக ஆண்டுக்கு 161 பதிவுகள் வீதம் கொடுத்துள்ளேன்.

      ஆனால் 2016-2017 ஆண்டுகளில் நான் இதுவரை (கடந்த 18 மாதங்களில்) கொடுத்துள்ள பதிவுகளின் எண்ணிக்கையே வெறும் 53 மட்டுமே.

      அதிலும் 85% நூல் அறிமுகங்களும் மீதி 15% பதிவர் சந்திப்புக்களும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

      இவற்றிலெல்லாம் சம்பந்தப்பட்டுள்ள ஒருசிலரைத் தவிர, மற்றவர்களுக்கு வருகை தரவோ கருத்தளிக்கவோ விருப்பம் இல்லாமல் இருக்கலாம் என எனக்கும் தெரியும். நான் யாரையும் என் பக்கம் வரச்சொல்லி இப்போதெல்லாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதும் இல்லை. அதெல்லாம் அவரவர்கள் இஷ்டம் மட்டுமே என விட்டுவிடுகிறேன்.

      எல்லோருக்கும் எல்லாவற்றிலும் ஆர்வமோ, விருப்பமோ, நேர அவகாசங்களோ இருக்கும் என நாமும் நினைக்க முடியாதுதானே.

      இப்படியாக 01.01.2016 முதல், நூல் அறிமுகங்கள் + பதிவர் சந்திப்புகள் தவிர, என் சொந்தச் சரக்காக, புதுப்பதிவுகள் ஏதும் என்னால், என் வலைத்தளத்தினில் தரப்படவில்லை.

      //இன்னும் எத்தனையோ பேர்களை ரசிக்க வைக்கும் திறமையான எழுத்து உங்களிடம் மிச்சமிருக்கிற்து!//

      தங்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்குத் தலை வணங்கி மகிழ்கிறேன். மிக்க நன்றி.

      பார்ப்போம் ..... மேடம்.

      அன்புடன்
      வை. கோபாலகிருஷ்ணன்

      நீக்கு
    5. மனோ மேடம் ! உங்கள் அன்பையும் ஆதங்கத்தையும் இங்கிதமாக நீங்கள் கோபு சாருக்கு சொல்லியதும் அவருடைய விரிவான விளக்கங்களும் முற்றிலும் ஏற்கக் கூடியவை. கிட்டத் தட்ட அதே காலத்தில் தான் நானும் வலைக்கு வந்தேன். என் பதிவுகளுக்கு நடக்கும் விவாதங்களும் ரசிக்கப் பெற்றன. கோபு சார் சொல்வதுபோல் அந்தப் பதிவர்கள் பலரும் முகநூலுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.(அதற்கும் காரணம் அதிகம் பேர் தளத்துக்கு முன்போல் வருவதில்லை எனக்காரனமும் சிலர் சொன்னார்கள்). லைக் போட அங்கு படிக்க வேண்டியதில்லை அல்லவா?
      நம் எண்ணங்களை பதிவு செய்வது நம் கடமை. நல்ல எழுத்து காலம் கடந்து நிற்கும். அதைக் கொண்டாட நவயுகம் பிறந்து வரும்!

      நீக்கு
  24. மீண்டும் கூளம் சிறுகதைக்கான என் பின்னூட்டத்தை ஒரு முறை படிக்கச் செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் June 7, 2017 at 9:00 PM

      //மீண்டும் கூளம் சிறுகதைக்கான என் பின்னூட்டத்தை ஒரு முறை படிக்கச் செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!//

      ஆமாம்..... மேடம். அதனை நான் இன்று தேடிக் கண்டு பிடித்து, நான் ஒருமுறை மீண்டும் படித்து மகிழ்ந்து விட்டு, அதன்பிறகே உங்களுக்கு அதன் இணைப்பினைக் கொடுத்திருந்தேன். சூப்பராக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள், மேடம்.

      நீக்கு
    2. கோபுசார் தான் நட்புக்கு எத்தனை மெனக் கெடுகிறார்? நன்றி மனோ மேடம்.

      நீக்கு
    3. எப்போதும் வாருங்கள். உங்களுக்கு பரிசாக 'பொன்வீதி' காத்திருக்கிறது.

      நீக்கு
  25. அன்புச் சகோதரர் மோகன் ஜி அவர்களுக்கு!

    தங்களது ஈமெயில் முகவரியை குறித்துக்கொண்டேன். நான் தற்போது வெளிநாட்டிலிருப்பதால் நான் மீண்டும் தஞ்சை வந்ததும் தங்களை புத்தகத்திற்காக தொடர்பு கொள்ளுகிறேன்!

    பதிலளிநீக்கு
  26. வாழ்த்துக்கள். தொடர்ந்து தரமான புத்தகங்களை பரிந்துரை செய்யும் உங்களுக்கு நன்றி பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Shakthiprabha June 8, 2017 at 12:06 PM

      வாங்கோ ஷக்தி, வணக்கம்.

      //வாழ்த்துக்கள். தொடர்ந்து தரமான புத்தகங்களை பரிந்துரை செய்யும் உங்களுக்கு நன்றி பல.//

      தங்களின் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      இந்தப்பின்னூட்டம் எனோ எனக்கு நேரிடையாக மெயில் இன்-பாக்ஸ் மூலம் என் கவனத்திற்கே வராமல் SPAM இல் மாட்டிக் கொண்டு இருந்தது. தற்செயலாக இன்று இப்போது அதனைப் பார்க்க நேர்ந்தது. அதனால் தாமதமாக வெளியிட்டு பதில் அளித்துள்ளேன். Sorry.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. உங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் ஷக்திபிரபா!

      நீக்கு
  27. மற்ற இரண்டு கதைச் சுருக்கங்களைவிட, கூளம் என்னைக் கவர்ந்தது. ஒரு காலத்தில் பொக்கிஷமாக இருந்தது, ஒருவருக்கு பொக்கிஷமாக இருப்பது, இன்னொருவருக்கு கூளம்தானே. பொருத்தமான தலைப்பு.

    எப்போதும்போல் நல்லா மதிப்புரை எழுதியிருக்கீங்க.

    ஒரு மந்த நிலைமை ஏற்பட்டு விட்டதாகவும் எனக்குத் தோன்றுகிறது.

    "குறிப்பாகச் சொல்லப் போனால், ஒருவரின் பதிவினை ஊன்றிப்படித்து, வித்யாசமாக கருத்திடும் நபர்களை " - கோபு சார்.. அப்படி இல்லை. நல்லா எழுதப்பட்ட எதையும் முழுமையாக பெரும்பாலும் எல்லோரும் படிப்பார்கள். பதிவுகளின், பின்னூட்டமிடுதலின் நோக்கம் - நல்லதைத் தெரிஞ்சிக்கிறது, சுவாரசியமாகப் படிக்கமுடிவது, அப்புறம் நம் கருத்து, நட்பை வளர்ப்பது. நீங்கள் எழுதியது எது எனக்குப் பிடித்ததோ, அதுக்கு பின்னூட்டம் இட்டிருப்பேன். எல்லோரும் இப்படித்தான் என்று நினைக்கிறேன். இப்போல்லாம் நீங்கள் நிறையப் படித்து பின்னூட்டம் இடுவதால் (நகைச்சுவையோடு) புதிய இடுகை எழுத எனர்ஜி குறைந்துவிடுகிறது என நினைக்கிறேன் (நேரம் கிடைக்கணும் இல்லையா?) நிறைய எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் June 8, 2017 at 1:01 PM

      வாங்கோ ஸ்வாமீ, வணக்கம். தங்கள் பயணமெல்லாம் இனிதே முடிந்ததா?

      //மற்ற இரண்டு கதைச் சுருக்கங்களைவிட, கூளம் என்னைக் கவர்ந்தது. ஒரு காலத்தில் பொக்கிஷமாக இருந்தது, ஒருவருக்கு பொக்கிஷமாக இருப்பது, இன்னொருவருக்கு கூளம்தானே. பொருத்தமான தலைப்பு.//

      ஆமாம். மிகச் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். இதைப்பற்றிய என் அனுபவத்தை அப்படியே ‘பொக்கிஷம்’ என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள தொடரின் ஆரம்ப முன்னுரையிலேயே விரிவாக எழுதியுள்ளேன். http://gopu1949.blogspot.in/2013/03/1.html

      //எப்போதும்போல் நல்லா மதிப்புரை எழுதியிருக்கீங்க.//

      மிகவும் சந்தோஷம்.

      **ஒரு மந்த நிலைமை ஏற்பட்டு விட்டதாகவும் எனக்குத் தோன்றுகிறது. **

      //"குறிப்பாகச் சொல்லப் போனால், ஒருவரின் பதிவினை ஊன்றிப்படித்து, வித்யாசமாக கருத்திடும் நபர்களை " - கோபு சார்.. அப்படி இல்லை.//

      என்ன ........... ‘கோபு சார் .. அப்படி இல்லை’ எனச் சொல்லிவிட்டீர்கள்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். இதில் ஏதோ பொருட்குற்றம் உள்ளதுபோலத் தெரிகிறது, ஸ்வாமீ.

      ஒருவரின் பதிவினை ஊன்றிப்படித்து, வித்யாசமாக கருத்திடும் நபர்களில் நான்தான் NUMBER-ONE என்ற கர்வமே எனக்கு உண்டு. இதில் நீர் தான் NUMBER-TWO என்பதும் எனக்குத் தெரியும். :)

      //நல்லா எழுதப்பட்ட எதையும் முழுமையாக பெரும்பாலும் எல்லோரும் படிப்பார்கள். பதிவுகளின், பின்னூட்டமிடுதலின் நோக்கம் - நல்லதைத் தெரிஞ்சிக்கிறது, சுவாரசியமாகப் படிக்கமுடிவது, அப்புறம் நம் கருத்து, நட்பை வளர்ப்பது. நீங்கள் எழுதியது எது எனக்குப் பிடித்ததோ, அதுக்கு பின்னூட்டம் இட்டிருப்பேன்.//

      உம்மை எதுவும் நான் குறையாகவே சொல்ல மாட்டேன். நீர் கிட்டத்தட்ட என்னைப் போலவே + சமயத்தில் எனக்கும் மேலேயே மட்டுமே. :)

      //எல்லோரும் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.//

      இல்லை. இல்லவே இல்லை. தாங்கள் நினைப்பது மிகவும் தவறு. பதிவினைப்படிக்காமலேயே STANDARD ஆக டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் கொடுப்பவர்கள் மட்டுமே 90% உள்ளார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.

      பிறர் கொடுத்துள்ள கமெண்ட்ஸ்களை COPY & PASTE போடுபவர்களும் முன்பெல்லாம் இருந்தார்கள். அவர்களில் சிலரைக் கூப்பிட்டு, நான் கண்டித்து, என் பக்கமே அவர்கள் வருகை தரவேண்டாம் + கருத்துச் சொல்ல வேண்டாம் எனவும் நான் சொல்லி, அவர்களின் வருகையையே முற்றிலுமாக நிறுத்தியும் உள்ளேன்.

      //இப்போல்லாம் நீங்கள் நிறையப் படித்து பின்னூட்டம் இடுவதால் (நகைச்சுவையோடு) புதிய இடுகை எழுத எனர்ஜி குறைந்துவிடுகிறது என நினைக்கிறேன் (நேரம் கிடைக்கணும் இல்லையா?) நிறைய எழுதுங்கள்.//

      தாங்கள் சொல்வது மிகவும் உண்மைதான். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. எனக்கு எனர்ஜி இருக்கும்போது நிறையப் படித்து, நிறைய பின்னூட்டங்கள் எழுத மட்டும் இனி நான் முயற்சிப்பேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  28. "கோபு சார் .. அப்படி இல்லை" - பொருட் குற்றம்தான். SORRY. நான் சொல்ல வந்தது, 'நீங்க இப்படிச் சொல்றீங்களே சார்.. அப்படி இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை' என்று. ஆனால், அது தவறான பொருளைக் கொடுத்துவிட்டது.

    ஒருத்தர் பின்னூட்டம் இட்டால், அதை ACKNOWLEDGE செய்து அதற்கு ரசமான பதிலும் நீங்கள் இடுகிறீர்கள். அதனால் உங்கள் இடுகை, அதற்குப் பின்னூட்டம், அதற்கு உங்கள் RESPONSE என்று உங்கள் இடுகைகள் எந்தக் காலத்தில் படித்தாலும் தொடர்போடு இருக்கிறது. இதுபோலவே நிறைய பேர் (சிலர் என்று சொல்ல மனம் வந்தாலும்) செய்கிறார்கள்.

    நீங்கள் சொல்வதுபோல், டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் சுவாரசியமானவை அல்ல. அதே சமயம், நிறைவான பின்னூட்டம் இடவேண்டுமானால், ஒருவருக்கு நிறைய நேரமும் பொறுமையும் இருக்கவேண்டும். எனக்கே, சில இடுகைகளைத்தான் ஒரு நாளில் படிக்க இயலுகிறது. இன்டெரெஸ்ட் (ரசமானதாக) இருந்தால்தான் நல்ல பின்னூட்டமும் இட முனைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் June 8, 2017 at 3:18 PM

      வாங்கோ ஸ்வாமீ ..... தங்களின் மீண்டும் வருகை மீண்டும் மகிழ்ச்சியளிக்கிறது.

      //"கோபு சார் .. அப்படி இல்லை" - பொருட் குற்றம்தான். SORRY. நான் சொல்ல வந்தது, 'நீங்க இப்படிச் சொல்றீங்களே சார்.. அப்படி இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை' என்று. ஆனால், அது தவறான பொருளைக் கொடுத்துவிட்டது.//

      உம்மைப்பற்றியும், உம் கருத்துக்கள் பற்றியும், தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது பற்றியும், அனைத்தும் யாம் நன்கு அறிவோம். :)))))

      இருப்பினும், பதிவுகளுடன், பின்னூட்டக் கருத்துக்களையும் மிகுந்த ஆவலுடன் ஊன்றிப்படித்துவரும் ’நம் அதிரடி அதிரா’ போன்றவர்களில் யாரேனும் இதனைப் படித்து விட்டு, அர்த்தத்தை அனர்த்தமாக்கிக்கொண்டு, அது சம்பந்தமாக நம் இருவரையும் சிண்டு முடிந்துவிட்டு சிற்றின்பம் காண நேரலாம் என்பதால் மட்டுமே, மிகவும் உஷாராக அதனை உங்களுக்கு இங்கு சுட்டிக்காட்டினேன். தாங்களும் தகுந்த விளக்கம் அளித்து விட்டீர்கள்.

      [நான் இங்கு நம் அதிராவை ஏதும் குற்றமே சொல்லவே இல்லை .... அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க. :)]

      பயணக்களைப்பினாலும், அவசரமாக டைப் அடிக்கும்போதும், இதுபோல சிலசமயம் ‘சொற்குற்றம் அல்லது பொருட்குற்றம்’ ஏற்படுவது வெகு சகஜமே. ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டுள்ள நமக்குள் SORRY எல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டாம், ஸ்வாமீ.

      //ஒருத்தர் பின்னூட்டம் இட்டால், அதை ACKNOWLEDGE செய்து அதற்கு ரசமான பதிலும் நீங்கள் இடுகிறீர்கள். அதனால் உங்கள் இடுகை, அதற்குப் பின்னூட்டம், அதற்கு உங்கள் RESPONSE என்று உங்கள் இடுகைகள் எந்தக் காலத்தில் படித்தாலும் தொடர்போடு இருக்கிறது.//

      இதைக் கேட்க எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :)

      //இதுபோலவே நிறைய பேர் (சிலர் என்று சொல்ல மனம் வந்தாலும்) செய்கிறார்கள். //

      இதை நானும் அப்படியே நம்புகிறேன். சகட்டு மேனிக்கு ’நன்றி’ ‘நன்றி’ எனப் போட்டுக்கொண்டே போவார்கள். நானும் பார்த்திருக்கிறேன்.


      //நீங்கள் சொல்வதுபோல், டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் சுவாரசியமானவை அல்ல. அதே சமயம், நிறைவான பின்னூட்டம் இடவேண்டுமானால், ஒருவருக்கு நிறைய நேரமும் பொறுமையும் இருக்கவேண்டும். எனக்கே, சில இடுகைகளைத்தான் ஒரு நாளில் படிக்க இயலுகிறது.//

      ஆமாம். இதனை நானும் அப்படியே ஒப்புக்கொள்கிறேன். கொஞ்சமாகவே படித்தாலும், மனதை ஒருமுகப்படுத்தி, எழுத்துக்களை மனதில் வாங்கிக்கொண்டு படிக்க விரும்புவதால் ஒரே நாளில் பலரின் இடுகைகளைப் படிக்க முடிவது இல்லை என்பதும் வாஸ்தவம்தான். அதுபோல நிறைவான பின்னூட்டமிட நிறைய நேரமும், பொறுமையும் வேண்டித்தான் உள்ளது. அதனாலேயே நானும் வலைப்பதிவர்களில் பலரின் பக்கம் செல்வதையே சுத்தமாக நிறுத்திக்கொண்டும் விட்டேன். இதனால் சில பதிவர்களுக்கு என் மீது கோபமும் உள்ளது என்பதை நான் அறிவேன்.

      //இன்டெரெஸ்ட் (ரசமானதாக) இருந்தால்தான் நல்ல பின்னூட்டமும் இட முனைகிறேன்.//

      அதுதான் மிகவும் நல்லது. எப்போதும் அப்படியே செய்யுங்கோ.

      கார-சாரம், உப்பு-உரைப்பு-புளிப்புடன், பெருங்காய மணத்துடன், நன்கு தெளிவாகவும், கேட்டு வாங்கி நிறைய பருகும் விதமாகவும் .... ரஸம் நல்ல ரஸமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். :)

      மீண்டும் தங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

      நீக்கு
    2. நெல்லைத் தமிழன் சார் கருத்துக்களும், உங்கள் பதில்களும் பல எண்ணங்களை எழுப்புகின்றன. பதிவுகள் யாவையும் ஊன்றிப் படிக்க நேரம் ஒரு தடை என்பதும், அதற்கு கருத்தாக அலசல் பின்னூட்டமிட மேலும் நேரம் வேண்டுமென்பதும் உண்மை. இந்த காரணத்தினால் தான் திறமையான பலரும் கூட, கருத்துகளை பதியாமல் போவதும் டெம்ப்ளேட் பின்னூடங்கள் இடுவதுமாய் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
      கருத்துப் பெட்டி என்ற ஒன்று இல்லாவிடில் இன்னமும் பல படைப்புகள் பதியப்படலாம். சொல்ல கருத்துகள் உள்ளவர்கள் மின்னஞ்சலில் கூட சொல்லலாம். என்றும் தோன்றுகிறது.

      நீக்கு
  29. உணர்வு பூர்வமிக்க கதைகள்! உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் அவரது வரிகளை வாசித்த போது கூளம் மற்றும் தலைமுறை இடைவெளியை சொல்லும் வாக்கிங்க் கதைகளில் வரும் வரிகள்....காகிதத்தைக் கிழித்தெறிவது போல் நினைவுகளை எறிந்து விட முடியுமா...என்பதும்...
    //“அம்மா! காலைக்காட்டிண்டு புடவையைத் தூக்கி சொருகிக்காதேயேன்... எனக்குப் பிடிக்கலம்மா....”//

    \\ஒற்றைத் தலையணியில் புதுவாசனையோடு அவளிடம் கிசுகிசுத்ததோ... “அப்டில்லாம் உனக்கு தடையில்லை. வேணும்னா பாதத்தை மட்ட்டும்ம் மூடிக்கோ”ன்னு நான் சொன்னதும் ....// க்ளாசிக்!!!

    ---துளசி, கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thulasidharan V ThillaiakathuJune (துளசி, கீதா)

      வாங்கோ .. இருவருக்கும் என் வணக்கங்கள்.

      //உணர்வு பூர்வமிக்க கதைகள்! உதாரணத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் அவரது வரிகளை வாசித்த போது கூளம் மற்றும் தலைமுறை இடைவெளியை சொல்லும் வாக்கிங்க் கதைகளில் வரும் வரிகள்....காகிதத்தைக் கிழித்தெறிவது போல் நினைவுகளை எறிந்து விட முடியுமா...என்பதும்...

      //“அம்மா! காலைக்காட்டிண்டு புடவையைத் தூக்கி சொருகிக்காதேயேன்... எனக்குப் பிடிக்கலம்மா....”//

      \\ஒற்றைத் தலையணியில் புதுவாசனையோடு அவளிடம் கிசுகிசுத்ததோ... “அப்டில்லாம் உனக்கு தடையில்லை. வேணும்னா பாதத்தை மட்ட்டும்ம் மூடிக்கோ”ன்னு நான் சொன்னதும் ....//

      க்ளாசிக்!!!

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
    2. மிக்க நன்றி துளசி,கீதா அவர்களே!

      நீக்கு
  30. வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். திறனாய்வு மட்டும் உங்கள் திறமையல்ல! இன்னும் எத்தனையோ பேர்களை ரசிக்க வைக்கும் திறமையான எழுத்து உங்களிடம் மிச்சமிருக்கிற்து//

    மனோசாமிநாதன் அவர்கள் சொன்னதை நானும் சொல்கிறேன்.
    புத்தக விமர்சனம் செய்யுங்கள் அதனுடன் புதிதாக பதிவுகள், கதைகள் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு June 9, 2017 at 12:42 PM

      வாங்கோ மேடம். வணக்கம். தங்களின் மீண்டும் வருகைக்கு மீண்டும் என் நன்றிகள்.

      **வேலியை உடைத்துக்கொண்டு வெளியே வாருங்கள். திறனாய்வு மட்டும் உங்கள் திறமையல்ல! இன்னும் எத்தனையோ பேர்களை ரசிக்க வைக்கும் திறமையான எழுத்து உங்களிடம் மிச்சமிருக்கிறது - மனோ மேடம்**

      //மனோசாமிநாதன் அவர்கள் சொன்னதை நானும் சொல்கிறேன். புத்தக விமர்சனம் செய்யுங்கள் அதனுடன் புதிதாக பதிவுகள், கதைகள் எழுதுங்கள்.//

      தங்களின் இந்த அன்புக்கும், எதிர்பார்ப்புக்கும்,
      ஆதரவான ஆலோசனைகளுக்கு என் நன்றிகள், மேடம். பார்ப்போம். எனக்கு ஆசைதான். ஏதேதோ முட்டுக் கட்டைகள் உள்ளன. இருப்பினும் முயற்சிக்கிறேன்.

      நீக்கு
    2. கோபு சார், மனோ மேடம், கோமதி அரசு மேடம் இருவருடனும் உடன்படுகிறேன். உங்கள் தனித்துவம் வாய்ந்த எழுத்தை எழற்காகவும் ஏன் ஒதுக்க வேண்டும். நிறைய எழுதுங்கள். விசிலடிக்கக் காத்திருக்கிறோம்....

      நீக்கு
  31. திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலில் உள்ள இந்த கதைகளின் தலைப்புகளே கதைகளைப் படிக்க ஈர்க்கின்றனஎன்பது எனது கருத்து.

    ‘வெளையாட்டு’ என்ற கதையில் தலைப்பைப் பார்த்தவுடன் நானும் இது ஒரு ஜாலியான கதை என நினைத்தேன். ஆனால் தங்களின் மதிப்புரையைப் பார்த்ததும் தான் இது ஒரு கருத்தார்ந்த கதை என அறிந்துகொண்டேன்.

    பிலோமினாவின் கடிதத்தில் உள்ள வரிகள் விலைமாதர்களிலும் உத்தமிகள் உண்டு என்பதை கதாசிரியர் சொல்லியிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.

    நீங்கள் சொல்லியுள்ளதுபோல் பிலோமினாவின் அந்த ‘வெளங்காத வெளையாட்டினை’ புரிந்துகொள்ள கதையைத்தான் படிக்கவேண்டும்.

    ‘கூளம்’ கதை எல்லோருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நம்மில் பலர் சிறு காகிதத்தைக்கூட கிழித்தெறியாமல், பத்திரப்படுத்தி வைத்து பின்னர் அவைகள் மலை போல் குவிந்ததும், அவைகளை கஷ்டப்பட்டு கிழிக்க ஆரம்பிக்கும்போது, அப்போது ஒவ்வொரு தாளும் பழைய நினைவுகளை அசைபோட வைப்பது நிஜம்.

    ‘இந்த காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பதுபோல் நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்ற திரு மோகன்ஜி அவர்களின் சொல்லாடலைத் தந்து கதாசிரியர் சொல்ல நினைத்ததை உணர வைத்துவிட்டீர்கள்.

    ‘வாக்கிங்’ கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் என்னைப்போன்றவர்களுக்கும் பிடிக்குமே. பழையதை எண்ணி மகிழ்ந்து. தற்போதைய நிலையை ஒப்பிட்டு புலம்பும் அந்த முதியவருக்கு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறது என்று சொல்லிவிட்டீர்கள். அவசியம் படிப்பேன் இந்த கதையை.

    தங்களின் சுருக்கமான மதிப்புரைக்கு பாராட்டுகள்! திரு மோகன்ஜி அவரக்ளுக்கு வாழ்த்துகள்!

    திரு மோகன்ஜி அவர்கள் உரையாடல் எழுதி அரங்கேற்றமான நாடகத்திற்கு திரு நாகேஷ் அவர்கள் தலைமை ஏற்றார் என்பதை அறிந்து மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வே.நடனசபாபதி June 9, 2017 at 5:55 PM

      வாங்கோ ஸார், வணக்கம் ஸார்.

      //திரு மோகன்ஜி அவர்களின் ‘பொன் வீதி’ நூலில் உள்ள இந்த கதைகளின் தலைப்புகளே கதைகளைப் படிக்க ஈர்க்கின்றனஎன்பது எனது கருத்து. //

      மிக்க மகிழ்ச்சி, ஸார்.

      //‘வெளையாட்டு’ என்ற கதையில் தலைப்பைப் பார்த்தவுடன் நானும் இது ஒரு ஜாலியான கதை என நினைத்தேன். ஆனால் தங்களின் மதிப்புரையைப் பார்த்ததும் தான் இது ஒரு கருத்தார்ந்த கதை என அறிந்துகொண்டேன்.

      நீங்கள் சொல்லியுள்ளதுபோல் பிலோமினாவின் அந்த ‘வெளங்காத வெளையாட்டினை’ புரிந்துகொள்ள கதையைத்தான் படிக்கவேண்டும்.

      பிலோமினாவின் கடிதத்தில் உள்ள வரிகள் விலைமாதர்களிலும் உத்தமிகள் உண்டு என்பதை கதாசிரியர் சொல்லியிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. //

      பெண்கள் யாருமே பருவ வயதில், தான் ஒரு விலைமாதர் ஆக வேண்டும் என ஒருபோதும் விரும்புவது இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள், கண்ணை மறைத்திடும் காதல், உரிய பருவத்தில் கல்யாணம் ஆகாத ஏக்கம், கல்யாணம் ஆகியும் நல்ல குணங்கள் உள்ள கணவர் அமையாமை, வறுமை, பசியின் கொடுமை, இயலாமை, அறியாமை, இதிலுள்ள ஆபத்துக்கள் தெரியாமை, எதிர்த்து போராட முடியாமல் அடங்கிப்போக வேண்டிய நிலைமை, வலுக்கட்டாயமாகவோ, ஏமாந்துபோயோ, மயக்க நிலையிலோ சீரழிக்கப்படுதல், உண்மையை பிறரிடம் ஓபனாகச் சொல்லுவதில் உள்ள வெட்கம், அவமானம், அச்சம், சமூக அவமரியாதைகளுக்கு அஞ்சுதல், வயிற்றுப்பிழைப்புக்கு வேறு வழியே இல்லாத சூழல், வேண்டியோ வேண்டாமலோ பிறந்துவிட்ட குழந்தையை காப்பாற்றவும் அதன் பசியைப்போக்கவும் .... என பல்வேறு காரணிகளால் ஒரு பெண் இதுபோன்ற சகதியில் விழ நேரிடுகிறது. சகதியில் ஒருமுறை விழுந்துவிட்டவளால் அதிலிருந்து அவ்வளவு எளிதில் மீண்டும் வர முடியாமலும் போய் விடுகிறது என்பதே உண்மையாகும்.

      அவர்களிடமும் அன்பு காட்டி திருந்த வாய்ப்பளித்தால் நிச்சயமாக திருந்தி வாழ மட்டுமே விரும்புவார்கள்.

      //‘கூளம்’ கதை எல்லோருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நம்மில் பலர் சிறு காகிதத்தைக்கூட கிழித்தெறியாமல், பத்திரப்படுத்தி வைத்து பின்னர் அவைகள் மலை போல் குவிந்ததும், அவைகளை கஷ்டப்பட்டு கிழிக்க ஆரம்பிக்கும்போது, அப்போது ஒவ்வொரு தாளும் பழைய நினைவுகளை அசைபோட வைப்பது நிஜம்.

      ‘இந்த காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பதுபோல் நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்ற திரு மோகன்ஜி அவர்களின் சொல்லாடலைத் தந்து கதாசிரியர் சொல்ல நினைத்ததை உணர வைத்துவிட்டீர்கள். //

      மொத்தத்தில் எல்லாமே குப்பைகள்தான். ஆனாலும் எல்லாமே அடிக்கடி தேவைப்படக்கூடியவைகளும்தான். அவற்றை அழிப்பது எளிது. ஆக்குவது கஷ்டம். சோம்பேறித்தனத்தாலும், தேவையோ தேவையில்லையோ இதுபோன்ற குப்பை கூளங்களை சேகரித்துக்கொண்டே செல்கிறோம்.

      என் மேலதிகாரி ஒருவர் இருந்தார். மூன்று மாதங்கள் வரை அனைத்துப் பேப்பர்களையும் தன் மேஜை டிராயரில் போட்டு வைத்திருப்பார். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அது என்ன ஏது என்றே பிரிக்காமல் படிக்காமல் அப்படியே கிழித்துப்போட்டு, மேஜை டிராயர்களை சுத்தப்படுத்தி விடுவார். நான் அவரிடம் ஒருமுறை கேட்டபோது அவர் சொன்னார் “ஒவ்வொன்றையும் பிரித்துப் படித்துக் கொண்டிருந்தால் எல்லாமே தேவைப்படக்கூடியன போலவே தெரியும் ஸார். பிறகு எதையும் நாம் கிழிக்க முடியாது, ஸார்” என்பார். :)

      //‘வாக்கிங்’ கதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதென்றால் என்னைப்போன்றவர்களுக்கும் பிடிக்குமே. பழையதை எண்ணி மகிழ்ந்து. தற்போதைய நிலையை ஒப்பிட்டு புலம்பும் அந்த முதியவருக்கு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருகிறது என்று சொல்லிவிட்டீர்கள். அவசியம் படிப்பேன் இந்த கதையை. //

      ஆமாம் ஸார். நம்மைப் போன்ற சீனியர் சிடிஸன்ஸ்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்தான்.

      //தங்களின் சுருக்கமான மதிப்புரைக்கு பாராட்டுகள்! திரு மோகன்ஜி அவரக்ளுக்கு வாழ்த்துகள்! //

      தங்களின் பாராட்டுகள் + வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி ஸார்

      //திரு மோகன்ஜி அவர்கள் உரையாடல் எழுதி அரங்கேற்றமான நாடகத்திற்கு திரு நாகேஷ் அவர்கள் தலைமை ஏற்றார் என்பதை அறிந்து மகிழ்ச்சி! //

      எனக்கும் அது மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. யாரும் சொல்லாத ஒரு கருத்தினைத் தாங்கள் மட்டும் இங்கு சொல்லியுள்ளது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நன்றிகள், ஸார்.

      நீக்கு
    2. நடன சபாபதி சார்!வெளையாட்டு,கூளம்,வாக்கிங் மூன்றுமே உங்களுடைய ரசனைக்கு ஏற்ற கதைகளாகவே இருக்கும். மூன்றும் ஒன்றுக்கொன்று அதிக கால இடைவெளியில் எழுதியது. எழுத்து நடையில் இந்த வித்தியாசம் புரியும். நீங்கள் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என விரும்புகிறேன். விரிவான அலசலுக்கு என் நன்றி சார் !

      நீக்கு
    3. வை. கோ சார்! வெளயாட்டு கதையின் பிலோமினா போன்றவர்கள் பற்றிய உங்கள் கருத்தாழமிக்க பதில் சிந்திக்கத் தூண்டுகிறது.
      சமுதாயத்தின் அழுக்குகள் படிந்து போன அவர்கள் வாழ்க்கை அனுதாபத்துக்குரியது தான்.

      கூளம் கதைக்கான கருத்தில் உங்கள் மேலதிகாரியின் வார்த்தைகள் யதார்த்தமானது !!

      நீக்கு
  32. சோமு, முத்து இருவரும் தருமு அண்ணன், பிலோமினாவின் இரட்டைக் குழந்தைகளோ? இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

    எங்காத்துல தலைகீழ், நான் தான் சேர்த்து வைத்திருக்கிறேன். புத்தகங்கள், பழைய மாத இதழ்கள், பழைய டைரிக்கள். சம்பள பட்டியல், சமீபத்தில் தான் பார்த்தேன். 25 வருடங்களுக்கு நான் வாங்கிய சம்பளத்தை. எனக்குப் பின் இவையெல்லாம் தானாகவே குப்பைத் தொட்டிக்கு போய் விடும் என்று நினைக்கிறேன்.

    ஓஹோ! நாகேஷின் நாடகத்துக்கு வசனம் எழுதியவரா? அவர் கதையை என்னால் ரசிக்கத்தான் முடியும். விமர்சிக்க முடியாது. அதற்கு தனி தகுதி வேண்டாமா?

    வாழ்த்துக்கள் மோகன் ஜி.

    மிக்க நன்றி கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya June 13, 2017 at 3:28 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்.

      //சோமு, முத்து இருவரும் தருமு அண்ணன், பிலோமினாவின் இரட்டைக் குழந்தைகளோ? இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.//

      அது அவ்வாறு நன்றாக இருந்தால், கதையைப் படிக்க ஒரு விறுவிறுப்போ சுறுசுறுப்போ இருக்காது. :)

      //சமீபத்தில் தான் பார்த்தேன். 25 வருடங்களுக்கு நான் வாங்கிய சம்பளத்தை.//

      அப்போ அதில் ஒரு ரூபாய்கூட செலவழிக்கவே இல்லையா? :) ஏழை எளிய அந்தணனும், உன் அன்புக்குரிய அண்ணாவும் ஆன என்னிடமாவது கொடுக்கலாமே ஜெயா. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

      நீக்கு
    2. சம்பளத்தை இல்லை கோபு அண்ணா. சம்பள பட்டியலைத்தான் பார்த்தேன்.

      நீக்கு
    3. Jayanthi Jaya June 15, 2017 at 7:55 PM

      //சம்பளத்தை இல்லை கோபு அண்ணா. சம்பள பட்டியலைத்தான் பார்த்தேன்.//

      அதானே பார்த்தேன். அதிலெல்லாம் விஷயாதி ஆச்சே எங்கட ஜெயா. :)

      நீக்கு
  33. ஜெயா மேடம்!
    உங்கள் கண்ணோட்டம் புதியதாய் இருக்கிறது. ரசித்தேன்.

    நான் வசனம் எழுதிய நாடகத்திற்கு தலைமை தாங்க வந்தார் நாகேஷ். அவருடைய நாடகத்துக்கு நான் எழுதவில்லை. வாழ்த்துக்கு நன்றி மேடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் வசனம் எழுதிய நாடகத்திற்கு தலைமை தாங்க வந்தார் நாகேஷ். அவருடைய நாடகத்துக்கு நான் எழுதவில்லை. வாழ்த்துக்கு நன்றி மேடம்!//

      SO WHAT.

      THAT IS ONE MORE FEATHER TO YOUR CAP

      நீக்கு
    2. நன்றி ஜெயந்தி மேடம்! அஅவருடன் கழித்த அந்த நாளைப் பற்றி ஒரு பதிவு 'வானவில் மனிதன்' வலைப்பூவில் விரிவாய் எழுதியிருக்கிறன்.

      நீக்கு
  34. பதிவை வாசிக்க ஆகும் நேரத்தை விடவும் பின்னூட்டங்களை வாசித்து ரசிக்கத்தான் அதிகநேரம் ஆகிவிடுகிறது. :)) சுவையான பின்னூட்டங்கள் சிலசமயம் பதிவில் என்ன வாசித்தோம் என்பதையே மறக்கடித்துவிடுகின்றன. மீண்டும் பதிவை வாசித்துதான் பின்னூட்டமிட முடிகிறது. :)))

    கண்ணுக்குத் தெரியும் குப்பை கூளங்களை கிழித்துக் கடாசிவிடமுடியும். கண்ணுக்குத் தெரியாமல் மனம் நிறைத்துக்கிடக்கும் குப்பை கூளங்களை என்ன செய்வது? சரியான கேள்விதான். விடைதான் யாரும் அறிய இயலவில்லை..

    அருமை மோகன்ஜி..

    வழக்கம்போலவே சுருக்கமான செறிவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி July 3, 2017 at 6:09 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //பதிவை வாசிக்க ஆகும் நேரத்தை விடவும் பின்னூட்டங்களை வாசித்து ரசிக்கத்தான் அதிகநேரம் ஆகிவிடுகிறது. :)) //

      மிகச் சரியாக நன்கு அனுபவித்து இதனை இங்கு சொல்லியுள்ளீர்கள், மேடம். :)))))

      //சுவையான பின்னூட்டங்கள் சிலசமயம் பதிவில் என்ன வாசித்தோம் என்பதையே மறக்கடித்துவிடுகின்றன. மீண்டும் பதிவை வாசித்துதான் பின்னூட்டமிட முடிகிறது. :))) //

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! இதுவும் வாஸ்தவம்தான். :)))))

      //வழக்கம்போலவே சுருக்கமான செறிவான கதையறிமுகங்கள். நன்றி கோபு சார்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், பதிவின் தலைப்பு முதல் பின்னூட்டங்களின் அடிவரை, அனைத்தையும் நன்கு ரஸித்துப் படித்து, ஆழமாக சிந்தித்து, ஆத்மார்த்தமாகவும், உண்மையாகவும் சொல்லியுள்ள அனைத்துக்கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  35. கீதா! உங்கள் கேள்வி சரியானது. அதற்கு விடை தேடும் முயற்சியில் தான் கூளம் எழுதினேன்.

    பதிலளிநீக்கு