About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, March 1, 2019

பேரனுக்கு உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் 22.02.2019

^01.08.2013 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்^

24.04.2011 அன்று பிறந்த எங்கள் பேரன் ‘அநிருத்’ என்ற ’நாராயணன்’ பற்றி ஏற்கனவே ஒருசில பதிவுகளில் படங்களுடன் வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். 

   ஆர்டிஸ்ட் அநிருத் ..... வயது ஐந்து !

   சந்தித்த வேளையில் ..... பகுதி 1 of 6

3) http://gopu1949.blogspot.com/2015/02/3.html
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் (பகுதி-3)

   மலரும் நினைவுகள் .. பகுதி-1  [நல்லதொரு குடும்பம்] 

தற்சமயம் ஏழு வயது பூர்த்தியாகி எட்டாம் வயது நடக்கும் எங்கள் பேரன் ’அநிருத்’ என்கிற ’நாராயண’னுக்கு சமீபத்தில் உபநயன ப்ரஹ்மோபதேச சுபமுஹூர்த்தம் [22nd, 23rd, 24th and 25th February 2019] நான்கு நாட்களுக்கு இனிதே  நடைபெற்றது. விழாவில் அவரவர்கள் தங்களின்  மொபைலில் எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள் மட்டும் கீழே காட்சிப்படுத்தியுள்ளேன். 






  

^முதல்நாள் 21.02.2019 எங்கள் இல்லத்தில் நடந்த ஸ்ரீ வேங்கடாசலபதி தீப சமாராதனை பூஜைகள்.^












^22.02.2019 வெள்ளிக்கிழமையன்று^



25.02.2019 திங்கட்கிழமை 
உபநயன ப்ரஹ்மோபதேச 
சுப முஹூர்த்த நிறைவு விழா + 
நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்தல்





பாலிகை கரைத்தல்




01.04.2010 அன்று பெரிய பேரன் ‘ஷிவா’ என்கிற 
சந்த்ரசேகரனுக்கு உபநயனம் நிகழ்ந்தபோது





அடுத்த இரண்டாண்டுகளில் வரக்கூடிய 
தனது பூணல் கல்யாணத்திற்காக
இப்போதே ரிகர்சல் பார்த்துள்ள, 
5 வயதே முடிந்துள்ள, எங்களின்  மூன்றாவது பேரன் 
‘ஆதர்ஷ்’ என்னும் ’கோபாலகிருஷ்ணன்’





^22.03.2019 அன்று வீட்டில் கேஷுவலாக எடுக்கப்பட்ட வீடியோ^
[அநிருத் பெரிய வாத்யார் போல ஆகி 
ஆதர்ஷுக்கு சந்தியாவந்தனம் சொல்லிக்கொடுத்தல்]



அன்புள்ள ஆச்சி 
அனுப்பி அசத்தியுள்ள அன்பளிப்பு  

நமது வலையுலக நட்புத் தோழி, அன்புள்ளம் கொண்ட ஆச்சி அவர்களை தங்களில் பலருக்கும்  தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்காக இதோ படங்களுடன் கூடிய சில இணைப்புகள்:

அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது !

அன்பு நிரம்பி வழியும் காலிக்கோப்பை [துபாய்-20]

சந்தித்த வேளையில் ....... பகுதி 5 of 6

'ஆங்கரை பெரியவா’ You-Tube Audio by GOPU

அன்புக்குரிய ஆச்சி அவர்கள், தான் வசிக்கும் ஹரியானாவிலிருந்து சமீபத்தில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அவதார ஸ்தலமான விழுப்புரத்திற்கு வருகை தந்து, ஸ்வாமிகளின் அவதார ஸ்தல இல்லத்துக்குச் சென்று, விபூதி + குங்குமப் பிரஸாதங்கள் எனக்காகவும் கூடுதலாக வாங்கிக்கொண்டு ஹரியானா திரும்பியுள்ளார்கள். 26.02.2019 மாசி செவ்வாய்க்கிழமை அனுஷ நக்ஷத்திரத்தன்று என் கைகளுக்கு பிரஸாதங்கள் கிடைக்குமாறு கொரியர் தபாலில் அனுப்பி வைத்துள்ளார்கள். 

இந்த திவ்ய பிரஸாதங்களுடன் எனக்கான அன்பளிப்பாக மிகவும் விலை ஜாஸ்தியான மற்றொரு பொருளையும் அனுப்பி அசத்தியுள்ளார்கள் இந்த ஆச்சி. அந்தப் பொருள் சுமார் ஏழடி நீளமும், சுமார் 5 அடி அகலமும், கச்சிதமாக மடித்தால் சுமார் ஒரு முக்கால் கிலோ எடையும் கொண்டதாக உள்ளது.  அது என்ன பொருள் என தயவுசெய்து, யாரிடமும் விளம்பரப்படுத்த வேண்டாம் என்றும், அதனைப் பொக்கிஷமாகப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து, தினமும் போத்திப் போத்தி மகிழும்படியும் என்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.  

மான் குட்டி போலவும், முசல்குட்டி போலவும், அணில் குட்டி போலவும் மிகவும் ஸாப்ட் ஆகவும், மிருதுவாகவும், வழவழப்பாகவும், வேறு எதையோ தொடுவதுபோல ஒருவித வெட்கத்தையும், கூச்சத்தையும், குதூகலத்தையும், ‘கிக்’கையும் ஏற்படுத்தி வரும் அதனை நான் அடிக்கடி , தொட்டுத்தொட்டுத் தடவித் தடவிப் பார்த்து மகிழ்ந்து வருகிறேன்.  :)

ஆச்சியின் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கு மீண்டும் கூறிக் கொள்கிறேன். 


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]

42 comments:

  1. அருமை... அநிருத்தின் உபநயன நிகழ்ச்சி படங்கள்.

    ஆமாம்... மொபைல்ல எடுத்த படங்களை வெளியிட ஏன் ஒரு வாரம் எடுத்துக்கொண்டீர்கள்? நிகழ்ச்சிக்காக அநிருத்தையும் அவன் தம்பியையும் தோளில் தூக்கிக்கொண்டதால் டயர்ட் ஆகிவிட்டீர்களா கோபு சார்?

    ReplyDelete
    Replies
    1. நோஓஓஓஓஓஓஓஓஓஓஓ இது கொஞ்சம்கூட நல்லாயில்லே.. நெல்லைத்தமிழன் பிஸிபோலத்தானே இருந்தார்ர்.. இப்போ எப்பூடி 1ஸ்ட்டா வந்தார் கர்ர்ர்ர்:)).. சரி விடுங்கோ கோபு அண்ணன்:) இது ஒண்டும் எனக்குப் புதிசில்லை:).

      Delete
  2. ஆச்சி அவர்கள் அனுப்பினது, பரமாச்சார்யா அவதாரஸ்தலத்தில் அவரது படத்துக்குப் போர்த்தின பொன்னாடையா?

    ReplyDelete
  3. இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருவதனால், யார் யார் என்பது சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

    அநிருத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தாத்தாக்களின் சந்தோஷமே தனி தான்! தோளில் சவாரி ஏற்கும் பொழுது எவ்வளவு சந்தோஷம் பாருங்க!..

    சிரஞ்ஜீவி அநிருத்துக்கு ஆசிகள்.

    ReplyDelete
  5. அன்பு பேரன் அநிருத்துக்கு வாழ்த்துகள் ! வாழ்க வளமுடன்.
    வீட்டுக்கு உறவினர்கள் வந்து இருக்கிறார்கள்.
    காணொளிகளை அப்புறம் பார்த்து மகிழ்கிறேன்.
    படங்கள் எல்லாம் உங்களின் மகிழ்ச்சியை சொல்கிறது
    அருமை.

    ReplyDelete
  6. அவ்ளோ குட்டியாக இருந்த பேரன் இப்போ இவ்ளோ வளர்ந்திட்டார்ர்...

    குழந்தையாக இருக்கும்போதே பூனூல் போட்டுத்தானே தூக்கி வச்சிருக்கிறீங்க?

    ReplyDelete
  7. மிக அழகிய படங்கள்.. பேரனுக்கும் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். திருஷ்டி சுத்திப் போடுங்கோ.

    அதென்ன வீடியோவில், ஒரு கையால மாலையை எடுத்துக் குடுத்து மந்திரம் சொல்லிக்கொண்டே ஃபோனில் கதைக்கிறார் ஐயர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ReplyDelete
    Replies
    1. அதிரா.... செல்ஃபோன் வந்தாலும் வந்தது... எந்த வேலைக்கு யார் வந்தாலும் அவங்களை வேலை செய்ய விடாம ஏகப்பட்ட போன் கால்கள். நமக்குத்தான் கொஞ்சம் எரிச்சலா இருக்கும்.

      அதுதவிர நாம தானே மந்திரத்தை சின்சியரா சொல்லணும். அவல்களுக்கு அது ரொடீன் வேலைதானே

      Delete
    2. அது தப்புத்தானே, தொழில் என வந்திட்டால் ஃபோனை எடுக்கக்கூடாது யாரும். எந்தத் தொழிலிலும் அப்படித்தானே.. ஆனா முக்கியமாக இவர்கள் மந்திரம் சொல்லும்போது பயபக்தியோடெல்லோ சொல்லவேணும்.

      Delete
    3. அப்படி இல்லை அதிரா... சொல்பவர்களுக்குத்தான் பயபக்தி. டாக்டர் மாத்திரை தரும்போது, நோயாளிகள்தாம் கடவுளைக் கும்பிட்டு, நினைத்துக்கொண்டு மாத்திரை விழுங்குவார்கள். டாக்டருக்கு அது இன்னொரு பொருள்தானே.

      Delete
    4. உங்கள் வியூவும் சரிதான், ஆனா பார்க்கும்போது கொஞ்சம் மனதுக்கு திருப்தியாக நடந்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.. பணம் செலவழிச்சுக் கூப்பிட்டதுக்கு...

      Delete
  8. நிகழ்ச்சி மிக இனிதே நடந்து முடிந்திருக்கிறது, மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

    அஞ்சூஊஊஊஊஉ ஓடிக்கமோன்ன்ன் கோபு அண்ணனுக்குப் பல்லைக் காணம்:)).. ஹா ஹா ஹா மீ எஸ்கேப்பூஊஊ:).

    ReplyDelete
    Replies
    1. அதிரா... கோபு சார் என்ன உங்களையும் என்னையும் (எப்பூடீ) மாதிரி 16 வயசா?

      Delete
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நெல்லைத்தமிழன், சந்தடி சாக்கில 16 க்கு வரப் பார்க்கிறீங்க:).. ஆனா நான் மறக்க மாட்டேன்ன் எத்தனையாம் ஆண்டில் 7ம் வகுப்பில் இருந்தீங்க என்பதனை ஹா ஹா ஹா:))

      Delete
    3. அதிரா-இதுக்கெல்லாம் காரணம் உங்க செக் தான். அவங்கதான் 'வல்லாரை' ஜூஸ் என்று ஆரம்பித்து வல்லாரையில் நீங்களும் ஏகப்பட்ட ரெசிப்பி செஞ்சு சாப்பிட்டதுனால எல்லாம் ஞாபகத்துக்கு வரும் போலிருக்கு (except உங்க வயசு). ஆமாம்... அந்த 7ம் வகுப்பு சமாச்சாரம் ஏன் என் போன ஜென்மத்தில் இருக்கக்கூடாது?

      Delete
    4. என் செக் இப்போதான் வல்லாரை ஆரம்பிச்சிருக்கிறா சில வருடமா:).. மீ ஆறு வயசிலிருந்தே வல்லாரை சாப்பிட்டு வளர்ந்தேனாக்கும் ஹா ஹா ஹா:))..

      எங்கள் வீட்டில் எந்தப் பொருளையும் காணவில்லை எனில், அப்பா என்னைத்தான் கூப்பிட்டுக் கேட்பார், யோசிச்சுச் சொல், எங்காவது பார்த்தாயா என, கரெக்ட்டா நினைவுபடுத்திச் சொல்லி நல்லபெயர் எடுத்த சந்தர்ப்பங்கள் பல..பல.. ஹா ஹா ஹா:).

      Delete
  9. அருமையான பதிவு அழகான போட்டோக்கள்

    ReplyDelete
  10. அன்பு பேரனுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. தங்களின் அன்புப் பெயரன் அனிருத்துக்கு ஆசிகள்! அருமையான படங்களை வெளியீட்டு தங்களின் அகத்திற்கே அழைத்து சென்றுவிட்டீர்கள். தங்களின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  12. அனிருத்துக்கு வாழ்த்துக்கள் அன்ட் பிளெஸ்ஸிங்ஸ் ..
    அனைத்து படங்களும் அழகா வந்திருக்கு .தாத்தாவின் தோளில் பேரப்பிள்ளைகள் மிக அழகான படம் .
    ஆச்சி அநேகமா பட்டு அங்கவஸ்திரம் தான் கொடுத்திருப்பார் :)

    ReplyDelete
  13. அநிருத்துக்கு வாழ்த்துகள்.

    முதல் படம் சோ ஸ்வீட்

    ReplyDelete
  14. பேரனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ஸ்ஸ்ப்பா வடிவேலு காமெடி போல அடிச்சு கேட்டாலும் சொல்லாதிங்கனு ஆச்சி அன்பளிப்புனு இம்புட்டு எழுதி ஆதி அந்தம் லின்க்குகளையும் பப்ளிகுட்டி வச்சிருக்காரே என்னை பார்த்து யாருமே பயப்டமாட்றாங்களே....
    பட்டு இல்லிங்க சாதா கம்பளிதான்.

    சும்மா என்னைப் பற்றி பதிவிட்டு இளங்கோவன் சார் போல ஆக்கிடாதிங்கனு சொன்னதை மறந்துட்டார்.கடவுளே என்னைஎன்னை நிறைய ஆண்டு வாழ வைப்பா...

    ReplyDelete
  16. பேரர்கள் மூவரும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
  17. இந்தப் பதிவின் இறுதியில் இன்று (23.03.2019) ஒரு புதிய வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.

    இது அனைவரின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete
  18. அதிசயம் .... ஆச்சர்யம் .... ஆனாலும் உண்மை.
    =====================================================

    அடியேன் வலையுலகுக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வெற்றிகரமாக 880 பதிவுகள் வெளியிட்டும், அவை எதிலும் வீடியோக்கள் என்னால் இணைக்கப்படவில்லை.

    இந்த 881-வது பதிவினில் மட்டுமே வீடியோ இணைக்கக் கற்றுக்கொண்டுள்ளேன்.

    இதைப்பற்றி யாரும் இதுவரை கண்டுகொண்டு சிலாகிக்காததால், இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதியில் :), இதனை நானே எடுத்துச் சொல்லியுள்ளேன். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    https://www.youtube.com/watch?v=ej-3DVyqwu0

    ReplyDelete
    Replies
    1. ஓ...இது எனக்குத் தோன்றவே இல்லை. எத்தனையோ தளங்களைப் பார்க்கிறேன்...காணொளியோடு.... அதனால் எனக்கு வித்தியாசமாகத் தோன்றவே இல்லை.

      பாராட்டுகிறேன் தங்கள் முயற்சிக்கு.

      Delete
  19. https://www.youtube.com/watch?v=ej-3DVyqwu0

    படம்: சகோதரி
    வெளிவந்த ஆண்டு: 1959
    இசை: ஆர்.சுதர்சனம்
    பாடியவர்: நகைச்சுவை நடிகர் சந்திரபாபு
    பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

    -=-=-=-=-=-

    நான் ஒரு முட்டாளுங்க
    ரொம்ப நல்லா படிச்சவங்க
    நாலு பேரு சொன்னாங்க
    நான் ஒரு முட்டாளுங்க

    ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
    எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
    நான் ஒரு முட்டாளுங்க

    கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க
    ஏ..ஏ...ஏ.. கயிதே ...டேய்..

    கண் நிறைஞ்ச பொண்டாட்டிய கயிதேன்னு சொன்னாங்க
    முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேலே அடிச்சாங்க

    பேசாதயின்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
    பீஸ் பீஸா கியிச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க..

    நான் ஒரு முட்டாளுங்க

    கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
    பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது

    மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது
    ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது

    நான் ஒரு முட்டாளுங்க

    நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
    நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க

    ஆன வரை சொன்னேங்க .. அடிக்க தானே வந்தாங்க
    அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன்னாங்க.

    நான் ஒரு முட்டாளுங்க .....

    ReplyDelete
    Replies
    1. நடிகர் சந்திரபாபு எங்க ஊரைச் சேர்ந்தவர்னு தெரியுமா? (நாகர்கோவில்னு நினைக்கிறேன்).

      நல்ல பாடல். இன்னொரு அருமையான பாடல், 'புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை... வெற்றி பெற்ற மனிதர் எல்லாம்'

      Delete
    2. நெல்லைத் தமிழன் April 1, 2019 at 8:34 PM

      //நடிகர் சந்திரபாபு எங்க ஊரைச் சேர்ந்தவர்னு தெரியுமா? (நாகர்கோவில்னு நினைக்கிறேன்).//

      உங்கள் ஊரும் இல்லை. நாகர்கோவிலும் இல்லை. அவர் பிறந்த நாள்: 05.08.1927 பிறந்த ஊர்: தூத்துக்குடி. இயற்பெயர்: ஜோஸப் பிச்சை. கத்தோலிக கிறிஸ்தவர். செல்லமாக அழைக்கப்பட்ட பெயர்: பாபு. சந்திரகுலத்தைச் சேர்ந்தவன் எனச் சொல்லி ‘சந்திரபாபு’ எனத் தன் பெயரை தானே மாற்றிக்கொண்டார். இவரின் தந்தை சுதந்திரப்போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானபின் குடும்பத்தோடு இலங்கைக்குச் சென்றார். இவர் கல்லூரிவரை படித்ததெல்லாம் கொழும்பில் மட்டுமே. 1943-இல் சென்னைக்குத் திரும்பி திருவல்லிக்கேணியில் வாழ்ந்தவர். அவர் நடித்த கடைசிபடம்: பிள்ளை செல்வம்.

      Delete
    3. 1947 ’தன அமராவதி’ என்ற படத்தில் அறிமுகமானவர். 1950 முதல் 1965 வரை திரையுலகில், மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும், பின்னணிப் பாடகராகவும், நடன நடிகராகவும் கொடிகட்டிப் பறந்தவர்.

      தொடரும் .....

      Delete
  20. J.P.சந்திரபாபு அவர்கள் 08.03.1974 இல் சென்னையில் காலமானார். பிறரை சிரிக்க வைத்த இவர் வாழ்க்கை மிகவும் சோகமானதாகும்.

    1958-இல் ஷீலா என்ற பெண்ணை மணந்து கொண்டார். இருப்பினும் தன் மனைவி வேறொருவரை உயிருக்கு உயிராக காதலித்தவர்/காதலிப்பவர் என அறிந்ததும், உடனடியாக அதே ஆண்டில், அந்த நபருடன் தானே சேர்த்து வைத்தவர். இவரின் இல்வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்ட படம்தான், எனக்கு மிகவும் பிடித்தமான, பாக்யராஜ் அவர்களின் ’அந்த ஏழு நாட்கள்’ என்ற மிகச்சிறந்த வெற்றிப்படமாகும்.

    >>>>>

    ReplyDelete
  21. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இந்தியக் குடியரசு தலைவராக இருக்கையில் அவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்த் திரைக் கலைஞர்கள் குழுவில் பங்கேற்றிருந்த சந்திரபாபு "பிறக்கும்போதும் அழுகின்றான்" என்ற தமது பாடலைப் பாடிக் காட்டினார்.

    அதை வெகுவாகப் பாராட்டிய குடியரசுத் தலைவரின் மடிமீது பாய்ந்து அமர்ந்து, அவரது கன்னத்தை வருடி "நீ ரசிகன்" என்றார் சந்திரபாபு!

    சுற்றியிருந்தவர்கள் பதறினும், குடியரசுத் தலைவர் கோபிக்காது சிரித்தார்.

    >>>>>

    ReplyDelete
  22. நெல்லைத் தமிழன் April 1, 2019 at 8:34 PM

    //நல்ல பாடல். இன்னொரு அருமையான பாடல், 'புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை... வெற்றி பெற்ற மனிதர் எல்லாம்'//

    கீழ்க்கண்ட ஏராளமான திரைப்படப் பாடல்களை தானே பாடியும் நடித்தும் உள்ளார்:

    ஜாலி லைப் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல்)

    விளையாடு ராஜா (நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல்)

    கண்மணிப் பாப்பா (தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல்)

    தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல்)

    ஆளு கனம் (கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல்)

    கோவா மாம்பழமே (மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல்)

    புத்தியுள்ள மனிதன் (அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல்)

    ராக் ராக் அண்ட் ரோல் (பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய பாடல்)

    பம்பரக் கண்ணாலே (மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல்)

    ஐயோ மச்சான் மன்னா (ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல்)

    ஒற்றைக் கண்ணு (வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல்)

    எப்போ வச்சிக்கலாம் (பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல்)

    என்னைத் தெரியலையா (யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல்)

    சிரிப்பு வருது (ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல்)

    தனியா தவிக்கிற வயசு (பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல்)

    கவலையில்லாத மனிதன் (கவலையில்லாத மனிதன் 1960 கண்ணதாசன் இயற்றிய பாடல்)

    பிறக்கும் போதும் அழுகின்றாய் (கவலையில்லாத மனிதன் 1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )

    என்னைப் பார்த்த கண்ணு (குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல்)

    ஒன்னுமே புரியல (குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல்)

    ஹலோ மை டியர் (புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய பாடல்)

    குங்குமப்பூவே (மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல்)

    தடுக்காதே என்னை (நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல்)

    தில்லானா பாட்டு (புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல்)

    சரியான ஜோடி தந்தானே (காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல்)

    நான் ஒரு முட்டாளுங்க (சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல்)

    சந்தோஷம் வேணுமென்றால் (சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல்)

    அச்சு நிமிர்ந்த வண்டி (குலேபகாவலி 1955)

    சொல்லுறதை சொல்லிப்புட்டேன் (பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றிய பாடல்)

    நீ ஆடினால் (பாண்டித்தேவன் 1959)

    மனதிற்குகந்த மயிலே (பெற்றமனம் 1960)

    பாடிப் பாடிப் (பெற்றமனம் 1960 பாரதிதாசன்)

    >>>>>

    ReplyDelete
  23. சந்திரபாபு மேற்கத்திய பாணிப் பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்து விளங்கினார். அவரது பாடல்கள் பலவற்றிற்கு அவரே ஓரளவு இசையமைத்ததாகவும் கூறுவர். சுமார் அரை நூற்றாண்டு கழிந்த பின்னரும் இன்றளவும் ஒலிக்கும் அவரது சில பாடல்கள்:

    பிறக்கும்போதும் அழுகின்றான் (குமாரராஜா)

    ஒண்ணுமே புரியலே உலகத்திலே (கவலை இல்லாத மனிதன்)

    நான் ஒரு முட்டாளுங்க (சகோதரி)

    புத்தியுள்ள மனிதரெல்லாம் (அன்னை)

    பொறந்தாலும் ஆம்பிளயா (போலீஸ்காரன் மகள்)

    சீமையெல்லாம் தேடிப்பாத்து (காத்தவராயன்)

    கல்யாணம் வேணும் வாழ்வில் (பெண்)

    கோவா மாம்பழமே (மாமன் மகள்)

    உனக்காக எல்லாம் உனக்காக (புதையல்)

    பம்பரக் கண்ணாலே காதல்

    >>>>>

    ReplyDelete
  24. நெல்லைத் தமிழன் அவர்களின் நேயர் விருப்பமாக .....
    https://www.youtube.com/watch?v=8eCsdalRMW8


    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
    மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை

    பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
    பணம் இல்லாத மனிதருக்கு சொந்தமெல்லாம் துன்பம்

    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
    காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை

    மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
    சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
    அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு

    அவன் கனவில் அவள் வருவாள், அவனை பார்த்து சிரிப்பாள்
    அவள் கனவில் யார் வருவார்? யாரை பார்த்து அணைப்பாள்?

    புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை

    -=-=-=-

    படம் : அன்னை (1962)
    பாடியவர் : சந்திரபாபு
    பாடல் வரிகள் : கண்ணதாசன்

    ReplyDelete
  25. Replies
    1. ashok April 19, 2019 at 9:06 PM

      //Vazthukkal Sir//

      WELCOME. Thank you, Sir.

      Delete
  26. வாழ்த்துகள்.....மிக சந்தோஷம். ஜமாயுங்கள்

    ReplyDelete
    Replies
    1. Shakthiprabha June 9, 2019 at 2:58 PM

      வாங்கோ ஷக்தி. வணக்கம்.

      //வாழ்த்துகள்.....மிக சந்தோஷம். ஜமாயுங்கள்//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி

      Delete
  27. ஐயா உங்கள் பேரக் குழந்தைகளும் உங்களைப்போலவே நல்ல பொலிவோடு தேஜஸ் பொருந்தி இருக்கிறார்கள்... வளர்ந்தபின் தங்களைப்போலவே சகல ஞானங்களையும் பெற்று சிறப்புபெற வாழ்த்துகிறேன்....''அநிருத்'' செல்லத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...!!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete