என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

VGK 02 / 02 / 03 ] SECOND PRIZE WINNERS “தை வெள்ளிக்கிழமை”




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 




VGK 02 ] 


”தை வெள்ளிக்கிழமை”



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 









நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள்  மொத்தம்: 

ஐந்து. 




 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் 

நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய 

நல்வாழ்த்துகள். 



   


மற்றவர்களுக்கு:  


BETTER LUCK NEXT TIME !





    



இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் 


இருவர் :-









1 ] திரு. பழனி கந்தசாமி 


ஐயா அவர்கள்



”மன அலைகள்”








இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. பழனி கந்தசாமி ஐயா


அவர்களின் விமர்சனம்:



தாய்மை என்பது ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் இயற்கை உணர்வு. ஐந்தறிவு மட்டும் இருக்கும் மிருகங்களில் கூட இந்த உணர்வை பல நேரங்களில் பார்க்கலாம். அந்தப் பாசப்பிணைப்புக்கு முன்னால் வேறு எந்த உணர்வும் இணையல்ல. இந்த உணர்வை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார் இந்தக் கதாசிரியர்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு சமயம் எடுக்கும் முடிவுகள் வேறொரு சமயத்தில் மாறி விடுகின்றன. இதுதான் இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் இந்த நிகழ்வு அரங்கேறுகிறது. இதை குற்றம் என்று சொல்ல முடியாது. பிரசவம் பார்த்த டாக்டர் இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அந்த கதா பாத்திரம் மனதில் நிலை பெறுகிறது.

சராசரி இந்தியக் குடும்பங்களில் நடைபெறும் பாசப் போராட்டங்கள் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்களை நாம் நம் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக சந்திக்க முடியும். சிறுகதையின் சிறப்பே அதுதான். நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கக் கூடிய மனிதர்களையும் சம்பவங்களையும் நம் முன்னால் நிறுத்துவதுதான் ஒரு கதாசிரியரின் வெற்றி.

அந்த வகையில் இந்தக் கதை நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறது.

அனுப்புதல்: பழனி.கந்தசாமி.




     





2] திரு. பொன் தனபாலன் அவர்கள்

வலைத்தளம்: 
“திண்டுக்கல் தனபாலன்”





இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. பொன். தனபாலன் 


அவர்களின் விமர்சனம்:




'தை வெள்ளிக்கிழமை'


"அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது" எனும் போது யாருக்குத் தான் கொடுக்க மனசு வரும்...

"வெள்ளிக்கிழமை" இங்கு உள்ள பல ஜவுளிக் கடைகளில் (Handloom Sarees Sales), கொடுக்க வேண்டிய யாருக்கும் பணம் பலரும் தருவதில்லை... ஆனால், எனக்கு தெரிந்து இருவர், எந்தக் கிழமையானாலும் / விசேசமானாலும், "இன்று வெள்ளிக்கிழமை பணம் தருகிறேன், சிறப்பாக அனைத்தும் நடக்கட்டும்" என்பார்கள்...

சரி பணத்தை விடுங்கள்... மறுமுனையை சிந்திக்கிறேன் :

ஆனாலும் குழந்தையை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் அந்த தம்பதியினருக்கு எவ்வளவு துயரம் இருந்திருக்கும்...? ஒரு மாதம் முன்பு இதே போல் உறவினர் ஒருவருக்கு நடந்தது... லீகல் டாகுமெண்ட்ஸ் உட்பட எல்லாம் நடந்து முடிந்த பிறகு, அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது... பல வருடங்களாக எதிர்ப்பார்த்து, எதிர்ப்பார்த்து ஏமாற்றம் தான்... இத்தனைக்கும் மிகவும் வசதியான குடும்பம் கிடையாது... இருக்கும் இடத்தை விற்று, கடன் பல வாங்கியும்.... அவர்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது... 

தாய்மை சிறப்பு - இந்த கதையின் மூலம் அனைவருக்கும் தெரியும்... அதே சமயம்  அந்த தாய்மை இல்லாத பெண்ணை பற்றி யோசித்து இருந்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்...

"அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது, இருந்தாலும், இந்தக் குழந்தையை அவர்களே எடுத்துக் கொள்ளட்டும்... அவர்களுக்கு விருப்பமானதை கொடுத்தால் போதும்" என்று முடிவு செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

இது போலவும் ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்த்த டாக்டருக்கு, "நான் போன் செய்த பிறகு புறப்பட்டு வாங்கோ" என்று சொன்ன டாக்டருக்கு நன்றிகள்... 

பெயர் : பொன்.தனபாலன்

வலைத்தளம் : http://dindiguldhanabalan.blogspot.com/



     




இருவருக்கும் மனம் நிறைந்த 


பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.


-oOo-







மிகக்கடினமான இந்த வேலையை


சிரத்தையுடன் பரிசீலனை செய்து


நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.









நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.






போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 

பற்றிய விபரங்கள்  தனித்தனிப் 
பதிவுகளாக 

ஏற்கனவே ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, 

இனியும் ஒன்று வெளியிடப்பட உள்ளது.


காணத்தவறாதீர்கள்







அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 


உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.







இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 


“சுடிதார் வாங்கப் போறேன்”



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 06.02.2014  



இரவு 8 மணிக்குள் [I.S.T]







என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

சனி, 1 பிப்ரவரி, 2014

VGK 02 / 03 / 03 ] THIRD PRIZE WINNER ”தை வெள்ளிக்கிழமை”




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 02 ] 


”தை வெள்ளிக்கிழமை”



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

கணிசமான எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 









நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  ஐந்து. 




 

 


இந்தப் பரிசுகளை வென்றுள்ள ஐவருக்கும் 

நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த இனிய 

நல்வாழ்த்துகள். 



   


மற்றவர்களுக்கு:  


BETTER LUCK NEXT TIME !





    



மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் :







 திரு. E.S. சேஷாத்ரி 


அவர்கள்









மூன்றாம் பரிசினை வென்றுள்ள 


திரு. சேஷாத்ரி அவர்களின் விமர்சனம்:



REFERENCE NUMBER:  VGK 02

"தை வெள்ளிக்கிழமை" சிறுகதை விமர்சனம்,

இரண்டாம் தைவெள்ளியன்று வெளியிடப்பட்ட இரண்டாம் கதை “தை வெள்ளிக்கிழமை”. 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வெள்ளி என்றால் மங்கலம் என்று சொல்வார்கள். இந்த மங்க நிகழ்வும் புதியதோர் வழி பிறக்கின்ற செயலும் இந்தக் கதையில் இணைந்து பரிணமிப்பது உவகையளிக்கின்றது.

வேண்டாம் என்று ஒதுக்கப்படுகின்ற கல்லே கருவறையின் கடவுள் சிலையாக ஆவதுபோல, கருவைக் கலைக்க நினைத்த உள்ளம், பிறந்த பெண்குழந்தையை, தங்க விக்ரஹம், கெஞ்சினாலும் கிடைக்காது 5ஆம் பெண், தை வெள்ளியில் தோன்றிய மஹாலக்ஷ்மி, இவள் எங்களுக்கு வேண்டும்- எங்களுக்கே வேண்டும் என்ற மனமாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம்.

பிரசவமா? ஐந்தாவதா? பெண்ணா? என்று எண்ணும் சமுதாயத்தில் தைவெள்ளி- தங்க விக்ரஹம் கிடைக்காத ஒன்று என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனம் வேறு எதையும் விரும்பாதது மகிழ்வளித்தது.  அந்தக் குழந்தைக்கு ஈடாக எவ்வளவு தொகை கிடைத்தாலும் அல்லது வசதிகள் ஏற்பட்டாலும் இந்தக் குழந்தையை யாருக்கும் தரமாட்டோம் என்ற மன உறுதி தெய்வம் தந்த வரம் தான்.

அத்தகு பெற்றோர் அவனியில் பெருகுக என்று மனம் எக்களிக்கும் விதத்தில் படைத்துள்ள பாங்கு எண்ணி மகிழ்வது மட்டுமல்லாது அந்தப் பெற்றோரை பெரிதும் போற்றுவதுடன் மனிதாபிமானத்துடன் தாயின் ஆரோக்யத்தையும் குழந்தையின் நலத்தையும் பெற்றோர்களுடைய வளத்தையும் குழந்தையில்லா தம்பதியினருடைய வாட்டத்தையும் பல கோணங்களிலும் நன்கு சிந்தித்து தன்னுடைய மருத்துவத் தொண்டை பயனுள்ள சமுதாயத் தொண்டாக ஏற்று அனைத்துத் தரப்பினருக்கும் மிகுந்த மனநிறைவை கூட்டுகின்ற அந்த மருத்துவரை மருத்துவச் சமுதாயம் முன்மாதிரியாக ஏற்று அவரின் அடிச்சுவட்டில் தாமும் சேவை உணர்வோடு தொண்டாற்ற நல்லதோர் பக்குவத்தை பெற்றார்களானால் இந்தப் படைப்பினை ஆக்கியவர்களுக்கு ஒரு மனநிறைவு நிச்சயம் ஏற்படும் என்பதை அவர்களுடைய (வை.கோபாலகிருஷ்ணன்) நெஞ்சம் சொல்லாமல் சொல்லுகிறது.

சமயோசிதமான முடிவுகளையும், திருப்பங்களையும், வாக்குறுதிகளையும் செயல்படுத்த முடியாதபோது யாருக்கும் மனவருத்தம் ஏற்படாதபடி வெளிப்படுத்துகின்ற சாதுர்யமும் அந்த மருத்துவருடைய பெரும் பலமாக அமைந்திருக்கிறது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்றாலும் கிடைக்குமென்று நம்பியது வந்து சேரவில்லையென்றாலும் அதிலும் விட்டுக் கொடுக்கின்ற பரந்த உள்ளம் குழந்தையில்லா தம்பதியினரின் நீக்குபோக்குக்கு ஏற்ப மனதை சமநிலைப் படுத்திக்கொள்ளுகின்ற ஆற்றல் உண்மையிலேயே அரிதானது! அருமையானது! அபூர்வமானது!

மொத்தத்தில் கதைமாந்தர்கள் கால வெள்ளத்திற்கேற்ப மனப்பக்குவத்தை அமைத்துக் கொண்டிருப்பது கதாசிரியருடைய பரந்த மனப்பான்மையை அவர் எதிர்பார்க்கின்ற சமுதாயச் சூழலை, நெஞ்சத்திரையிலே ஓடவிட்டு சமுதாயத்தில் இடம் பொருள் காலம் இவற்றிற்கேற்ப தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்கின்ற பாங்கினை உணர்த்துகின்றது. இது ஒரு வாழ்க்கை நெறிமுறை விளக்கமாக அமைந்துள்ளது.
.
இந்தப் படைப்பு தாய்சேய் மருத்துவமனைகள் அனைத்திலும் கருத்து விளக்கமாக தக்க படங்களுடன் அமையுமானால் பேறுகாலப் பெண்டிரும் அவர்தம் கணவரும் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மனசாட்சியோடு செயலாற்ற மனமகிழ்வோடு மனையறம் நடத்த ஒரு விளக்கமாக அமையும் என்று கருதுகிறேன்.

இந்த ஏற்றமான மாற்றம்தான் மகிழ்வூட்டும் வெற்றியாகும். மனநிறைவுதரும். இத்தகு உள்ளங்கள் மேலும் பெருகும். எதிர்பார்ப்போம். இத்தகு சிந்தனைகள் எல்லோரிடத்தும் முகிழ்க்குமானால் எங்கும் மகிழ்வு! என்றும் மகிழ்வு! யாவர்க்கும் மகிழ்வே!

உங்கள் எழுதுகோலுக்கு என் வணக்கம்! உங்கள் மன உணர்வுகளுக்கு எனது பாராட்டுக்கள்!

காரஞ்சன்(சேஷ்)


     

    




 மனம் நிறைந்த 


பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.








மிகக்கடினமான இந்த வேலையை


சிரத்தையுடன் பரிசீலனை செய்து


நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.












போட்டியில் பரிசு பெற்றுள்ள மற்றவர்கள் 


பற்றிய விபரங்கள்  தனித்தனிப்


பதிவுகளாக பல மணி நேர இடைவெளிகளில்


வெளியிடப்பட உள்ளன.


காணத்தவறாதீர்கள் !








அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 


உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.







இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான இணைப்பு: 


“சுடிதார் வாங்கப் போறேன்”



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:


வரும் வியாழக்கிழமை 06.02.2014  



இரவு 8 மணிக்குள் [I.S.T]







என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்