’ஜீவி’ என்று நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் ’பூ வனம்’ http://jeeveesblog.blogspot. in/ வலைப்பதிவர் திரு. G. வெங்கடராமன் அவர்களின் நூலினை சமீபத்தில் சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இவரின் படைப்பினில் நான்கு சிறுகதை தொகுப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தமிழில் வெளிவரும் உயரிய படைப்புகளை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வாசித்துவரும் 73 வயதான இவர் சென்னையில் வசித்து வருகிறார்.
தன் வாசிப்பு அனுபவம் மூலம் கண்டடைந்த 37 தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் அவருக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே இந்த நூல் வெளியிட காரணமாக அமைந்துள்ளது. உன்னதமான தனது உணர்வெழுச்சிகளையும் விமர்சனங்களையும் எவ்வித ஆர்பாட்டமுமின்றி ஓர் எளிய நடையில் தன் சக வாசகர்களுடன் ஜீவி பகிர்ந்துகொள்கிறார்.
நூல் தலைப்பு:
ந. பிச்சமூர்த்தியிலிருந்து
எஸ்.ரா. வரை
மறக்க முடியாத தமிழ் எழுத்துலகம்
By ஜீவி
முதற்பதிப்பு: 2016
வெளியீடு:
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ
அசோக் நகர், சென்னை-600 083
தொலைபேசி: 044-24896979
அட்டைகள் நீங்கலாக 264 பக்கங்கள்
விலை: ரூபாய் 225
ஒவ்வொரு பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் அவரின் பிறந்த ஊர், அவர்களின் சமகால எழுத்தாள நண்பர்கள், செய்துவந்த தொழில், உத்யோகம், எழுத்து நடை, எழுத்துலகில் அவரின் தனித்தன்மைகள், எந்தெந்த பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்தார், எந்தெந்த பத்திரிகை அலுவலகங்களில் ஊழியராகவோ அல்லது ஆசிரியராக பணியாற்றி வந்தார் போன்ற பல்வேறு செய்திகளுடன், அந்த எழுத்தாளர் எழுதியுள்ள பிரபல ஆக்கங்கள், அவற்றில் இவர் மிகவும் லயித்துப்போன பகுதிகள், அவர்கள் பெற்றுள்ள பரிசுகள் + விருதுகள், பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவைகள் என மிகவும் விஸ்தாரமாக ஒவ்வொன்றையும் பற்றி தான் அறிந்த வகையில் எடுத்துச் சொல்லியுள்ளார் ஜீவி.
இந்த நூல் அறிமுகத்தில் நாம் தொடர்ந்து இவர் சிலாகித்துச்சொல்லும் 37 எழுத்தாளர்களையும் பற்றி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பார்ப்போம்.
21) தனியாகத் தெரியும்
அசோகமித்ரன்
[பக்கம் 122 முதல் 130 வரை]
ஐம்பதுகளில் எழுத ஆரம்பித்த அசோகமித்திரன் ஏழெட்டு நாவல்கள், குறுநாவல்கள், நிறைய சிறுகதைகள், கட்டுரைகள், ஆங்கிலத்தில் கட்டுரைகள் என்று நிரம்பவே எழுதியிருக்கிறார். அவரது முதல் படைப்பு: ’அன்பின் பரிசு’ என்ற ரேடியோ நாடகம். முதல் கதை ’ஒரு நாடகத்தின் முடிவு’ என்ற பெயரில் கலைமகளில் பிரசுரமானது. இவரின் ‘தண்ணீர்’ நாவல் கணையாழியில் தொடராக வந்தது என்றெல்லாம் அசோகமித்திரனின் படைப்புகளை விவரமாகக் கடை பரப்புகிறார் ஜீவி.
’சுருண்டோடும் வாழ்க்கை நதியின் சித்திரத்தை அசோகமித்திரனின் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. நதியின் பிரும்மாண்டத்தை அடக்கிக் காட்டுவதில் எப்போதும் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார். அவரால் விரிவின் முழுமையைச் சித்தரிக்க முடியாது. விரிவை நுண்மைக்குள் அடக்கித்தான் தர முடியும்’ என்று இலக்கியத்திலும் இலக்கிய விமர்சங்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட ஜெயமோகன் சொல்லியிருப்பதாகச் சொல்லி அவர் சொன்ன விரிவை நுண்மைக்குள் அடக்கும் பாணியை விமரிசிக்கிறார் ஜீவி.
அசோகமித்திரனின் ’அப்பாவின் சினேகிதர்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாதமி 1996 ஆம் ஆண்டு விருது வழங்கியிருக்கிறது. இதுவரை நான்கு தொகுப்புகளாக அவரது சிறுகதைகள் வெளி வந்திருக்கின்றன.
அசோகமித்திரன் ஜெமினி ஸ்டூடியோவில் பணியாற்றியவராம். திரைப்படத் தொழிலாளர்கள் வாழ்க்கையை படம் பிடித்து இவர் எழுதிய 'கரைந்த நிழல்கள்' என்ற நாவலையும், 'ஒற்றன்' என்ற பயண இலக்கிய படைப்பு பற்றியும், ’புலிக்கலைஞன்’ என்ற சிறுகதையைப் பற்றியும் மேலும் இவரின் பல்வேறு படைப்புகள் பலவற்றையும் ஜீவி குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
இவரது 'எலி' என்ற சிறுகதையைப் பற்றி ஸ்பெஷலாகக் குறிப்பிட்டு பிரமாதமாக எழுதியிருக்கிறார், ஜீவி.

22) புளிய மரத்தின் கதை சொன்ன
சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி
[பக்கம் 131 முதல் 135 வரை]
இவர் பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் வேறு எழுதுவாராம். ஆரம்பத்திலேயே எழுத்தாளர்கள் பற்றிய அவரது கவிதை ஒன்றை ஜீவி எடுத்துப் போட்டிருக்கிறார்.
சு.ரா.வின் 'ஜே. ஜே. சில குறிப்புகள்' நாவல் பற்றி ஜீவி எழுதியிருக்கிறார். இவரது 'புளிய மரத்தின் கதை' பற்றி ஜீவி ரசனையுடன் எழுதியிருக்கிறார். கதையைப் பற்றி படித்ததும் என்ன பிரமாதமான கதை என்று நினைத்துக் கொண்டேன். ஜரிகைச்சரடு மாதிரி நீளும் சு.ரா. அவர்களின் நகைச்சுவை இத்தனைக்கும் நடுவே இந்தப் புதினத்திற்கு பெருமை சேர்க்கிறது என்கிறார் ஜீவி. 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' கதையை ஜீவி நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
மேலே குறிப்பிட்டுள்ள மூன்றே மூன்று நாவல்களுடன், ’மரியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’ என்ற சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். ’அழைப்பு’, ’போதை’, ’பல்லக்குத் தூக்கிகள்’ போன்ற முப்பதுக்கும் உள்ளிட்ட சிறுகதைகளையும், நிறைய கட்டுரைகளையும், மொழியாக்கக் கவிதைகளையும் சுந்தர ராமசாமி தந்திருந்தாலும், பசுவய்யா என்னும் பெயரில் கவிதைகள் எழுதி பெரும் கவனம் பெற்றதை குறிப்பிட வேண்டும் என்கிறார், ஜீவி.
சில வருடங்களுக்கு முன் ‘தினமணி’ தீபாவளி மலர் ஒன்றில் சு.ரா.வின் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’ என்ற சிறுகதையைப் படித்தது பற்றி சிலாகித்துச்சொல்லியுள்ளார் ஜீவி.
இன்றைய வளரும் எழுத்தாளர்களும், பதிவர்களும் அவசியமாக இந்த நூலினை வாங்கிப்படித்துத் தங்களிடம் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து வர வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமாகும்.
என்றும் அன்புடன் தங்கள்,
(வை. கோபாலகிருஷ்ணன்)
தொடரும்
இதன் அடுத்த பகுதியில்
இடம்பெறப்போகும்