About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, January 14, 2011

அமுதைப் பொழியும் நிலவே ! [ பகுதி 2 of 2 ]

திடீரென குப்பென்று வியர்த்தது எனக்கு. யாரோ என் தோள்பட்டையைத் தட்டுவது போல உணர்ந்தேன். கண் விழித்துப் பார்த்தேன். எதிரில் பேருந்து நடத்துனர்,

“துவாக்குடி வந்திடுச்சு, சீக்கரம் இறங்குங்க” என்றார்.


பக்கத்து இருக்கையில் பார்த்தேன். என் அமுதாவைக் காணோம்.
அப்போ நான் கண்டதெல்லாம் பகல் கனவா?

தொடர் பேருந்தில் ஏறி அமர்ந்ததும், நல்ல காற்று வீசியதில் சுகமாகத் தூங்கியுள்ளேன். அருமையான கனவில், அற்புதமான என் அமுதா என்னருகில் அமர்ந்து பயணம் செய்திருக்கிறாள்.


கண்களைக் கசக்கிக் கொண்டே, மீண்டும் துவாக்குடியிலிருந்து சுப்ரமணியபுரம் டீ.வி.எஸ். டோல்கேட்டுக்கு ஒரு பஸ் டிக்கெட் வாங்கிக்கொண்டு, என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

“அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது.

பெரும்பாலும் காலியான இருக்கைகளுடன் இருந்த அந்தத் தொடர்ப் பேருந்தில், அடுத்த இரண்டாவது ஸ்டாப்பிங்கான திருவெறும்பூரில் பலர் முண்டியடித்து ஏறினர்.


“கொஞ்சம் நகர்ந்து உட்காரய்யா ..... சாமி” எனச் சொல்லி ஒரு காய்கறி வியாபாரக் கிழவி, தன் கூடை மற்றும் மூட்டை முடிச்சுக்களுடன் என் அருகில் அமர்ந்து கொண்டாள்.

அந்தக்கிழவி என்னைக் கட்டி அணைக்காத குறையாக ஜன்னல் வழியே தன் தலையை நீட்டி, வாயில் குதப்பிய வெற்றிலை பாக்குச் சாறை, சாலையில் உமிழ்ந்து விட்டு, என்னையும் ஒரு லுக் விட்டுவிட்டு, தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.


“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.
oooooooo



[ இந்தச் சிறுகதை, சென்ற ஆண்டு “பொங்கல் திருநாள்” சமயம் 13.01.2010 தேதியிட்ட ”தேவி” வார இதழில் பிரசுரிக்கப்பட்டது ]

38 comments:

  1. ரொம்ப நல்லா இருந்தது சார். பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து காற்று வாங்கிய படியே பாடல் கேட்டுக் கொண்டே பயணம் செய்வது எனக்கும் மிகவும் பிடித்தமான விஷயம். இந்த முறை கூட திருச்சி போயிருந்த போது இந்த விஷயத்தை அனுபவித்து மீண்டும் ஒரு முறை சென்று வருகிறேன் நீங்கள் செல்லுங்கள் என்று என்னவரிடம் கூறினேன்.

    ReplyDelete
  2. ”அமுதைப் பொழியும் நிலவே….“ நன்றாக இருந்தது உங்கள் கதை. பல பௌர்ணமிகள் பார்த்த நிலவே வந்து பக்கத்தில் அமர்ந்ததே, சந்தோஷப்பட வேண்டியதுதானே :)))))) பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. கோவை2தில்லி அவர்களே, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ஆம், அதிகம் கும்பல் இல்லாத, பேருந்துகளில் ஜன்னல் ஓரமாக காற்று வாங்கியபடி அமர்ந்து கொண்டு, காதுக்கு இனிய பாடல்களையும் கேட்டுப் பயணம் செல்வது ஒரு சுகானுபவம் தான். ஒரு முறை திருச்சியிலிருந்து விடியற்காலம் புறப்பட்டு காரைக்குடி வரை பஸ்ஸில் போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட, மிகச்சிறந்த MGR படத்துப் பாடல்கள் ஒவ்வொன்றாக ஒலிபரப்ப பட்டன. இரண்டு மணி நேரத்திற்கு மேலான பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. காரைக்குடி வந்து பஸ்ஸிலிருந்த எனக்கு இறங்க மனமில்லை.
    தாங்கள் எழுதியதைப் படித்ததும் அந்த ஞாபகம் தான் வந்தது.

    ReplyDelete
  4. அன்புள்ள வெங்கட் அவர்களே !
    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ஆயிரம் பிறை கண்ட அந்த மூதாட்டி அருகில் அமர்ந்து பயணம் செய்வது உங்களுக்கும்,எனக்கும் பிடித்ததாக, சகித்துக் கொள்வதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதையில் வரும், இன்பக் கனா (அதுவும் பகல் கனவு) காணும் ஹீரோவுக்கு எரிச்சல் தந்துள்ளது போலும்.

    ReplyDelete
  5. மின்வெட்டு சமயம் இன்பக் கனவில் கழிந்ததே! கொடுத்து வைத்தவர்!! :)

    ReplyDelete
  6. அன்புள்ள ‘மிடில் க்ளாஸ் மாதவி’ க்கு, தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

    உங்கள் பெயரைப் படித்ததுமே, எனக்கு நெருங்கிய உறவினர் போல ஒரு வித பாசம் பொங்கியது என் மனதில்.

    இளமையில் வறுமையை அனுபவித்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு, இன்று நானும் மிடில் க்ளாஸோ அல்லது அப்பர் மிடில் க்ளாஸோ ஆகி இருப்பதாலோ என்னவோ!

    எதுவுமே நம் கையில் இல்லை; எல்லாம் அவன் செயல்; OK Bye now.

    ReplyDelete
  7. என்ன சார் இப்படி ஏமாத்திடிங்க.. :))

    ReplyDelete
  8. ஆஹா!கடைசில கதாநாயகன் கனவுல மண்ணு,தலைல கல்லு எல்லாத்தையும் தூக்கி இப்டி போட்டுட்டீங்களே அய்யா!
    போட்டுட்டீங்களே

    (இந்த கமென்ட்ட நம்ம சிவாஜி கணேசன் ஸ்டைல்லயாவது அல்லது சரோஜா தேவி ஸ்டைல்லயாவது படிக்கவும்)

    கூட்டமில்லாத பேருந்தில் ஜன்னலோர அமர்வும் இனிமையான பாடல்களும் மிகவும் சுகமானவை

    ReplyDelete
  9. புதிய வருகை தந்துள்ள TERROR-PANDIYAN(VAS) {பெயரைப் பார்த்தாலே எனக்கு மிகவும் terror ஆக உள்ளது} அவர்களுக்கு என் நன்றி.

    அன்புள்ள திருமதி ராஜி அவர்களுக்கு,
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. சிவாஜி & சரோஜாதேவி ஸ்டைலில் படித்துப் பார்த்தேன் ... மிகவும் பொருத்தமாகவே இருந்தது.

    ReplyDelete
  10. நல்ல கதை. பஸ்ஸில் "கனவின் மாயா லோகத்திலே" பாட்டு போடவில்லையா...!

    ReplyDelete
  11. “அமுதைப் பொழியும் நிலவே ”
    மிகவும் சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் இருந்தது ஐயா சிறுகதை, அந்த பேருந்து பயணம் ஒரு தனிசுகம்தான்....

    தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  12. முதன் முதலாக வருகை தந்து பாராடியுள்ள திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு என் நன்றிகள்.

    முதன் முதலாக வருகை தந்து பாராட்டியுள்ள ’மாணவன்’ அவர்களுக்கு என் நன்றிகள்.

    படத்தைப் பார்த்ததும், முன்னால் குடியரசுத் தலைவர் மேதகு திரு. அப்துல் கலாம் அவர்களே, என் படைப்புக்கு கருத்துக் கூறியுள்ளார்களோ என்று ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம், ஸ்தம்பித்துப் போய் விட்டேன்.

    ReplyDelete
  13. “அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.

    ReplyDelete
  14. “அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.//

    O,sorry,பின்னூட்டம் எழுதறதுக்குள்ளே பப்ளிஷ் க்ளிக் பண்ணி இருக்கேன் போல! :)))) நல்லா இருக்கு முடிவு, ஒரு மாதிரியா முன்னாடியே புரிஞ்சாலும்! :)))))))))

    ReplyDelete
  15. gr8 punch at the end .comments r adding value to ur story!!!
    தினமும் பிறரின் கமெண்ட் களைப் படிக்கவே வருகிறேன்...
    --

    ReplyDelete
  16. அன்புள்ள கீதா சாம்பசிவம் அவர்களுக்கு,
    தங்களின் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    அன்புள்ள கிரிஜாவுக்கு,
    பெரும்பாலான சிறுகதைகள் நீ ஏற்கனவே, என் சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து படித்திருப்பதால், பிறரின் கமெண்ட் களை மட்டும், படிக்கவும். அதுவே interesting ஆக இருக்கும்.

    இன்று ஒருவர் வலைப்பூவில் உள்ள மற்ற நண்பர்களுக்கு, வலைச்சரம் என்பதன் மூலமாக என்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    Please go to
    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_20.html
    to refer that. On seeing this only, some of the new people have visited my blog, today.

    ReplyDelete
  17. yes!! நானும் தங்களின் புதிய கதைகளுக்காகவே wait பண்ணுகிறேன்
    --

    ReplyDelete
  18. “அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது.

    பொருத்தமான பாடலதான்..

    ReplyDelete
  19. அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது ஒலித்தது

    கர்ண கடூரமாக அமுதைப்பொழிந்த கனவைக் கலைத்ததற்கு கடுமையான கண்டனங்கள்..

    ReplyDelete
  20. இந்தச் சிறுகதை, சென்ற ஆண்டு “பொங்கல் திருநாள்” சமயம் 13.01.2010 தேதியிட்ட ”தேவி” வார இதழில் பிரசுரிக்கப்பட்டது ]

    இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. இராஜராஜேஸ்வரி said...
    “அமுதைப் பொழியும் நிலவே ..... நீ அருகில் வராததேனோ....” என்ற பாடல், மிகவும் பொருத்தமாக இப்போது பேருந்தில் ஒலிக்க ஆரம்பித்தது.

    //பொருத்தமான பாடலதான்..//

    என்னவோ சொல்லுங்கள் ....
    தள்ளியே நில்லுங்கள் ........

    என்றொரு பாடல் ஞாபகம் வருகிறது.

    நீங்களும் அதுபோல என்னவோ [கருத்துச்] சொல்லுங்கள்.

    மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  22. இராஜராஜேஸ்வரி said...
    அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது ஒலித்தது

    //கர்ண கடூரமாக அமுதைப்பொழிந்த கனவைக் கலைத்ததற்கு கடுமையான கண்டனங்கள்..//

    சபாஷ்.

    எனக்கும் அழகான கனவுகள் வரும்போது அது டெலிபோன் ஒலியால் கலைக்கப்பட்டாலே மிகவும் கடுப்பு வரும்.

    இது ஒரு கிழவியின் கர்ண கடூரமான ஒலி ... தங்களின் கடுமையான கண்டனத்திற்கே என் ஆதரவுகள்.

    அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
  23. இராஜராஜேஸ்வரி said...
    இந்தச் சிறுகதை, சென்ற ஆண்டு “பொங்கல் திருநாள்” சமயம் 13.01.2010 தேதியிட்ட ”தேவி” வார இதழில் பிரசுரிக்கப்பட்டது ]

    //இனிய வாழ்த்துகள்//

    தேவியில் பிரசுரம் ஆனதற்கு என் பிரியமுள்ள வாக் தேவியின் வாழ்த்துகள் மிகப்பொருத்தமாக ;)))))

    மிகவும் சந்தோஷம், மேடம்.

    ReplyDelete
  24. கற்பனை, கனவுலக சஞ்சாரம் இனிமையானது. நிஜத்தில் கிடைக்காததெல்லாம் அங்கே அனுபவித்து அங்கேயே வாழ்தலிலும் கிடைக்கின்ற சுகம் அலாதியானதுதான். ஒவ்வருவருக்குள்ளும் இப்படியான நிழல் வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது.

    // ஜன்னல் ஓரமாக காற்று வாங்கியபடி அமர்ந்து கொண்டு, காதுக்கு இனிய பாடல்களையும் கேட்டுப் பயணம் செல்வது ஒரு சுகானுபவம் //
    ம்...எனக்கு இதுவரை இந்த அனுபவம் கிட்டியதில்லை. அங்குவந்துதான் அனுபவிக்க வேண்டும்;))
    பாராட்டுக்கள் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. என் அன்புச் சகோதரி இளமதி,

      வாருங்கள், உங்களுக்கு என் இனிய காலை வணக்கங்கள்.

      //கற்பனை, கனவுலக சஞ்சாரம் இனிமையானது. நிஜத்தில் கிடைக்காததெல்லாம் அங்கே அனுபவித்து அங்கேயே வாழ்தலிலும் கிடைக்கின்ற சுகம் அலாதியானதுதான்.//

      அற்புதமாகப் புரிந்து கொண்டு வெகு அழகாகவே சொல்லியுள்ளீர்கள். நிஜ வாழ்க்கை என்பது ஒரு கட்டத்தில் மிகவும் அலுப்பும் சலிப்பும் கொடுக்கக் கூடியவையே.

      கற்பனை + கனவுலக சஞ்சாரம் எப்போதுமே இனிமையானது தான். அந்த க்ஷண நேரம் சந்தோஷம் நம்மை நிச்சயமாக உற்சாகப்படுத்துகிறது. சோர்ந்து போன நம் மனதுக்கு சற்றே மகிழ்ச்சியளிக்கிறது.

      //ஒவ்வொருவருக்குள்ளும் இப்படியான நிழல் வாழ்க்கை இருக்கத்தான் செய்கிறது.//

      ஆமாம். நிச்சயமாக .... அதிலென்ன சந்தேகம்?

      ****ஜன்னல் ஓரமாக காற்று வாங்கியபடி அமர்ந்து கொண்டு, காதுக்கு இனிய பாடல்களையும் கேட்டுப் பயணம் செல்வது ஒரு சுகானுபவம்****

      ம்...எனக்கு இதுவரை இந்த அனுபவம் கிட்டியதில்லை. அங்குவந்துதான் அனுபவிக்க வேண்டும்;))

      நீங்கள் யாரோ? எந்த நாட்டில் உள்ளவர்களோ? எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதனால் பரவாயில்லை.

      ’இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று சொல்லுவார்கள்.

      ’தூரத்துப்பச்சையே கண்ணுக்குக் குளிர்ச்சி’ என்றும் சொல்லுவார்கள்.

      அதனால் இந்த ஒரு சிறிய அனுபவத்தினைப் பெற்று மகிழ மட்டுமே, இவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டு, கதையில் வரும் கதாநாயகன் போல கஷ்டப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

      பிற இடங்களுக்குச் சென்று பார்த்தால் தான் பிறர் அனுபவிக்கும் சில கசப்பான உண்மைகள் புலப்படும்.

      அதனால் அவரவர் இருக்குமிடமே அவரவர்களுக்கு சொர்க்கம்.
      ’சொர்க்கமே என்றாலும் ... நம் சொந்த ஊர் போல வருமா’
      என்று பாடல் ஒன்று கேட்டிருப்பீர்கள் தானே?

      தங்களின் அன்பான வருகையும், அழகான புரிதலும், அற்புதமான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்தன, சகோதரி. என் மனமார்ந்த நன்றிகள்.

      பிரியமுள்ள
      vgk

      Delete
  25. //வண்டி நகர்ந்த சிறிது நேரத்திலேயே வீசிய காற்று மிகவும் சுகமாக இருந்தது.//
    என்னதான் சொகுசாக காரில்பிரயாணம் செய்தாலும் இந்த பேரூந்து,ரயிலில் செய்யும் பயணமே அலாதிதான்.அதிலும் ஜன்னல் பக்கம் இருக்கை கிடைத்தால் சுகமான சுகானுபவமே.
    மிகவும் நன்றாக இருந்தது கதை.உங்க கற்பனை அபாரம்.
    எனக்கு கற்பனை செய்தென்றால் மிகபிடித்தமானதொன்று. நடக்காததை கற்பனை செய்துபார்ப்பதில் இருக்கும் சந்தோஷமே தனிதான்.

    //கற்பனை + கனவுலக சஞ்சாரம் எப்போதுமே இனிமையானது தான். அந்த க்ஷண நேரம் சந்தோஷம் நம்மை நிச்சயமாக உற்சாகப்படுத்துகிறது. சோர்ந்து போன நம் மனதுக்கு சற்றே மகிழ்ச்சியளிக்கிறது// 100% உண்மை அண்ணா.

    ReplyDelete
  26. //எனக்கு கற்பனை செய்வதென்றால் மிகப்பிடித்தமானதொன்று. நடக்காததை கற்பனை செய்துபார்ப்பதில் இருக்கும் சந்தோஷமே தனிதான்.//

    மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள். என்னைப்போலவே இருக்கிறீர்கள் என்பதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.

    ////கற்பனை + கனவுலக சஞ்சாரம் எப்போதுமே இனிமையானது தான். அந்த க்ஷண நேரம் சந்தோஷம் நம்மை நிச்சயமாக உற்சாகப்படுத்துகிறது. சோர்ந்து போன நம் மனதுக்கு சற்றே மகிழ்ச்சியளிக்கிறது// 100% உண்மை அண்ணா.

    மேற்கண்ட பத்தியும் [Paragraph] “க்ஷண நேரம்” என்ற வார்த்தையும் எனக்கு உங்களை யார் என்று காட்டிக்கொடுத்து விட்டது. ;)))))

    இருப்பினும் சஸ்பென்ஸ் தொடரட்டும். அதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் இருக்கும். நான் நினைத்த நபராக இருப்பின் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியே.

    பிரியமுள்ள
    VGK

    ReplyDelete
  27. என்ன இருந்தாலும் கனவு காண்பதில் உள்ள சுகம் நிஜத்தில் வருவதில்லை. அதனால்தான் கவிஞர்கள் கனவுலகத்திலேயே சஞ்சரிக்கிறார்க்ள்

    ReplyDelete
  28. அடடா வெறும் கனவுதானா?
    பகல் கனவு பலிச்சுதா?
    //“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.//

    ஹஹஹஹஹா, குமரிப் பெண்ணை நினைத்து கனவு கண்டுவிட்டு பக்கத்தில் பார்த்தால் கிழவிப் பெண். சூப்பர்


    ReplyDelete
  29. ஐயொ பாவ்ம் எல்லாம் கனவுதானா எந்த நிலவும அமுதைப்பொழிய வல்லையா.

    ReplyDelete
  30. அடடா... எல்லாமே கனவாகப் போய்விட்டதா? அமுதை பொழியும் நிலவு இப்போது பாக்குச்சாறு உமிழும் கிழவியாக மாறிவிட்டதே... கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட பயணம்.. அதை சுவாரசியமாகச் சொன்ன விதம்.. கடைசியில் யதார்த்தம்.. என ரசிக்கவைக்கும் கதை.. பாராட்டுகள் கோபு சார்.

    ReplyDelete
  31. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

    -=-=-=-=-=-=-

    'ஜொள்ளு' வடிய ஆரம்பித்து, அமுதாப் பாட்டியின் 'லொள்ளில்' முடிந்த கதை.

    ரசித்து படிக்க , சிரிக்க, சிந்திக்க வைத்த கதை.

    உங்கள் அக்மார்க் நிறைய பதித்திருக்கிறீர்கள்.

    -=-=-=-=-=-=-

    இப்படிக்கு,
    தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

    ReplyDelete
  32. ஹா ஹா அமுத பொளிஞ்சது அமுதாபாட்டியா? சூப்பனு.

    ReplyDelete
  33. பகல் கனவு கண்டதுக்கு கைமேல பலனா அமுதா பாட்டிம்மா கெடச்சாங்களா. சூப்பர்.

    ReplyDelete
  34. ஆஹா...கடைசியில பகல் கனவா...அடச் சே...புளிச்-னு வெத்தல துப்புற கிழவி பேரு அமுதா...அதுவும் அமுதைப் பொழியுற அமுதா..கனவுக்கு கான்ட்ராஸ்டா ஒரு டுவிஸ்ட்...'ஆன்டி' கிளைமாக்ஸ்...ஜொள்ளு விடுறவங்களுக்கெதிரா சரியான ளொள்ளு கிளைகாக்ஸ்...

    ReplyDelete
  35. //“அமுதாம்மா .... நீ அங்கன குந்திட்டியா... நான் இங்கன குந்தியிருக்கேன், எனக்கும் சேர்த்து நீயே டிக்கெட்டு எடுத்துடு” யாரோ வேறு ஒரு கிழவியின் குரல் எனக்கு கர்ண கடூரமாக ஒலித்தது.//
    கலைந்தது கனவு! கற்பனை அபாரம்!

    ReplyDelete
  36. தேவி வார இதழில் இந்தக் கதை பிரசுரமானதற்கு வாழ்த்துகள். விண்டோ ஸீட் கிடைத்தால் வெளியே வேடிக்கை பார்க்க எவ்வளவு காட்சிகள் கிடைக்கும் அதைவிட்டு தூங்கி பகல் கனவு கண்டால் அமுதா குமாரி வரமாட்டாங்க அமுதா கிழவிதான் வருவாங்க.
    மனசுக்கு கடிவாளம் போட நம்மாலமுடியாதே. நிஜத்தில் நடக்க்க முடியாதவைகளை கற்பனையிலாவது கண்டு சந்தோஷப்பட்டுக்கொள்ள முடிகிறதே.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 24, 2016 at 5:24 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தேவி வார இதழில் இந்தக் கதை பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      //விண்டோ ஸீட் கிடைத்தால் வெளியே வேடிக்கை பார்க்க எவ்வளவு காட்சிகள் கிடைக்கும் அதைவிட்டு தூங்கி பகல் கனவு கண்டால் அமுதா குமாரி வரமாட்டாங்க; அமுதா கிழவிதான் வருவாங்க.
      மனசுக்கு கடிவாளம் போட நம்மாலமுடியாதே. நிஜத்தில் நடக்க முடியாதவைகளை கற்பனையிலாவது கண்டு சந்தோஷப்பட்டுக்கொள்ள முடிகிறதே.//

      அதே .... அதே. :)

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், பொறுமையான அருமையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      Delete