என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? [ பகுதி 6 ]

ஓர் முக்கிய அறிவிப்பு

ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்தக்கதையின் பகுதி-5 மட்டும் எங்கோ மறைந்து காணாமல் போய் உள்ளதால், தயவுசெய்து கீழ்க்கண்ட மீள் பதிவுக்குச் சென்று பகுதி 5 முதல் 8 வரை, ஒரே பதிவினில்  படிக்கவும்.===============================================

பகுதி-6 இப்போது இங்கே தொடர்கிறது........

பஞ்சாமியை இருக்கையில் அமரச்செய்து, பல் செட் இரண்டையும் மேலும் கீழும் பொருத்தி, தன் கை விரல்களால் அழுத்தி இடைவெளியில்லாமல் மேல் ஓட்டிலும், கீழ்த்தாடையிலும் சரியாகப் பொருத்தி விட்டு, முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கையில் கொடுத்து, “பாருங்கள் - எப்படி உள்ளது” எனக் கேட்டார், அந்த டாக்டர்.

வாயைத்திறந்து பேச பயந்து, தலையை மட்டும் ஆட்டினார் பஞ்சாமி.

காற்றோட்டமாக செருப்புப் போட்டு பழகியவருக்கு திடீரென்று ஷூவும், சாக்ஸூம், அதுவும் டைட்டாகப் போட்டுவிட்டால் ஏதோ ஒரு முதலை, காலைக் கவ்விக் கொண்டிருப்பது போல உணர்வு ஏற்பட்டு கஷ்டப்படுத்தும். அது போல பஞ்சாமிக்கு வாய் முழுவதும் எதையோ வைத்து அடைத்து விட்டது போல ஒரு வித அவதி ஏற்பட்டது.

நாக்கால் தன் புது பல் செட்டைத் துலாவிப் பார்த்த அவருக்குப் பல் நுனிகள் ரம்பம் போல் கூர்மையாக இருப்பது போலத் தோன்றியது. அதெல்லாம் கரெக்ட் செய்து விடலாம் என வாக்களித்த டாக்டர், ஓரிரு முறை பல் செட்டை மெதுவாகத் தானே போட்டு, தானே கழட்டிப் பழகச் சொன்னார். புதியதாக இருந்ததால் கழட்டி மாட்டுவதற்குள் ப்ராணாவஸ்தையாகப் போய் விட்டது பஞ்சாமிக்கு.

புது செருப்பு காலைக் கடிப்பது போல புதுப்பல்செட் கீழ்த்தாடையிலும், மேல் தாடையிலும், ஆங்காங்கே நன்றாகப் பதம் பார்த்து விட்டது.

புண்ணான இடங்களைப் பற்றிய விபரம் அறிந்த டாக்டர் பல்செட்டைத் தனியே எடுத்து தக்ளி போன்ற மிகச்சிறிய சாணைக்கல்லில் ஆங்காங்கே சற்று ராவ ஆரம்பித்தார். உராய்வைக் குறைக்க கிரீஸ் போன்ற போன்ற ஏதோ ஒன்றைத் தடவி மீண்டும் பஞ்சாமியின் வாயில் பொருத்தி, பல்லின் நுனிப்பகுதிகளை சமப்படுத்த, அந்த மிகச்சிறிய சாணைக் கல்லை அவர் வாயருகில் கொண்டு சென்று மீண்டும் ஓடவிட்டு ஃபைனல் டச்-அப் செய்தார்.

சுழலும் சாணைக்கல், வாயில் பொருத்தப்பட்ட, பல் நுனியில் பட்டதும், உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை, பஞ்சாமிக்கு மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒரு வாரம் பழகினால் சரியாக சூட் ஆகி விடும் என்றும், பல்லைப் பத்திரமாகப் பராமரிப்பது எப்படி என்றும், இரவு நேரங்களில் தேவைப்பட்டால் போட்டுக் கொண்டே தூங்கலாம் என்றும், தேவையில்லாது போனால் கழட்டி, அதற்கென தனியாக ஒரு சம்புடத்தில் நீர் ஊற்றி அதில் மிதக்க விடலாம் என்றும், இரண்டு பக்கமும் சமமாக கடிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பலவித ஆலோசனைகள் கூறி அனுப்பி வைத்தார், டாக்டர்.

தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.

பஞ்சாமியைப் பொருத்தவரை, புதிய பல்செட் அணிந்துள்ளதால் முகம் ஏதோ பார்க்க பங்கரையாய் இல்லாமல் இருப்பதாக மட்டுமே உணர முடிந்தது. தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.

முதன் முதலாக நான்கு டைமன் கற்கண்டுகளை வாயில் போட்டுக் கொண்டு மிகவும் ஆசையுடனும், சற்று பயத்துடனும் கடித்துப் பார்த்தார். கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.

பிறகு தன் முயற்சியில் சற்றும் மனம் தளராதவராக, பெரு முயற்சி செய்து கொஞ்சம் காராபூந்தியை வாயில் போட்டு மென்று விழுங்கினார். அது ஆங்காங்கே பல்செட் முழுவதும் ஈஷிக்கொண்டு படாத பாடு படுத்தியது.

மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.


தொடரும் ....

26 கருத்துகள்:

 1. ஒவ்வொரு பாகத்தையும் அனுபவித்து ரஸிக்கிறேன் கோபு சார்.

  //தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல, அருவருப்பாகத் தோன்றியது.//

  //கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.//

  இப்படியே உங்கள் முழுப் பதிவையும் ஹைலைட் பண்ணலாம் போல அபாரமான எழுத்து.

  பதிலளிநீக்கு
 2. ”வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷிப் பட்டம்”
  கிடைத்தது போல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது திரு. சுந்தர்ஜி சார். நன்றி! நன்றி!! நன்றி!!!

  பதிலளிநீக்கு
 3. பஞ்சாமியின் பல்செட் பற்றிய உங்கள் பகிர்வின் ஒவ்வொரு பகுதியும் ரசிக்கும்படி இருக்கிறது சார். இயற்கைக்கு மாறாய் எந்த ஒரு பொருளையும் நமது உடல் ஏற்பதில்லை... முரண்டு பிடிக்கிறது.

  பல்செட் பற்றி நான் முன்பு ”அண்டங்காக்கையை வென்ற பல்லவன்” என்ற ஒரு பதிவு எழுதி இருந்தேன். நேரம் கிடைத்தால் படியுங்கள்.

  http://venkatnagaraj.blogspot.com/2010/05/blog-post.html

  பதிலளிநீக்கு
 4. டியர் வெங்கட்,

  வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

  05.05.2010 அன்று தாங்கள் வெளியிட்டுள்ள
  "அண்டங்காக்கையை வென்ற பல்லவன்"
  படித்து மகிழ்ந்தேன்.

  நல்ல நகைச் சுவையாகவே இருந்தது.

  அண்டங்காக்கைக் கொத்திச் சென்ற அந்தப் புது பல்செட் சேதாரம் ஏதும் இன்றி,[ பித்ருக்களின் ஆசியுடன் ] திரும்பக் கிடைத்தது அந்தப் பக்கத்து வீட்டு அம்மா செய்த பாக்கியம் தான்.

  நகைச்சுவைப் பிரியனான என்னைப் படிக்கச் சொல்லி தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. ஒவ்வொரு வரியையும் படித்த போது ஏதோ நானே பல் செட் அணிந்து பஞ்சாமி அவஸ்தை பட்டதை போல் அவஸ்தை படுவதாக உணர்ந்தேன் சார். அடுத்து என்ன பண்ணினார்?

  பதிலளிநீக்கு
 6. கோவை2தில்லி அவர்களே !
  தங்கள் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்கும், அவஸ்தையான உணர்வுக்கும்? நன்றி.

  //அடுத்து என்ன பண்ணினார்?//

  நாளை காலையில் தெரிந்துவிடும். அதுவரை பொருத்தருள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.

  கடுமையான அனுபவம்தான் !

  பதிலளிநீக்கு
 8. மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.

  கடுமையான அனுபவம்தான் !

  பதிலளிநீக்கு
 9. மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.

  கடுமையான அனுபவம்தான் !

  பதிலளிநீக்கு
 10. மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.

  கடுமையான அனுபவம்தான் !

  பதிலளிநீக்கு
 11. /கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.//

  நல்லவேளை பொரிவிளங்காய் உருண்டையின் பொருள் விளங்க முயற்சி செய்யாமல் இருந்தாரே !

  பதிலளிநீக்கு
 12. இராஜராஜேஸ்வரி said...
  மொத்தத்தில் ஒரிஜினல் ஒரிஜினல் தான், டூப்ளிகேட் டூப்ளிகேட் தான் என்பதை அனுபவ பூர்வமாக ஒவ்வொரு முறையும் பற்களால் அசை போடும் போது, தன் மனதாலும் அசை போட்டுப் பார்த்தார்.

  //கடுமையான அனுபவம்தான் !//

  ஆமாம். ஆமாம். இங்கு கூட உங்கள் பின்னூட்டங்களில் ஒன்று ஒரிஜினல் மீதி மூன்றும் அதன் டூப்ளிகேட் [Repeated] இருப்பினும் ஒன்றுக்கு நாலாக அதுவாகவே வந்துள்ளதில் நான்கு பங்கு மகிழ்ச்சி தான் ஏற்படுகிறது எனக்கும். ;))))

  நன்றி, நன்றி, நன்றி, நன்றி!

  பதிலளிநீக்கு
 13. இராஜராஜேஸ்வரி said...
  /கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.//

  //நல்லவேளை பொரிவிளங்காய் உருண்டையின் பொருள் விளங்க முயற்சி செய்யாமல் இருந்தாரே !//

  ஆஹா!

  ”பொரிவிளங்காய்
  உருண்டையின்
  பொருள் விளங்க”

  எவ்வளவு அழகான சொற்கள் !

  இங்கே தான் நிற்கிராங்க எங்காளு!!

  மனமகிழ்ச்சியுடன் vgk ;)))))

  பதிலளிநீக்கு
 14. ரெம்ப ரெம்ப நகைசுவை உணர்வு உள்ளவர் நீங்க என்பதை வரிக்கு வரி உணரமுடிகிறது. அதை எழுதி எங்களையும் சிரிக்கவைக்கிறீங்க. நன்றி அண்ணா.

  //தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.// இந்த உம்மாணாமூஞ்சியை கற்பனையில் பார்க்கத்தோன்றியது. பார்த்து ரசித்துசிரித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ரொம்ப ரொம்ப நகைச்சுவை உணர்வு உள்ளவர் நீங்க என்பதை வரிக்கு வரி உணரமுடிகிறது. அதை எழுதி எங்களையும் சிரிக்கவைக்கிறீங்க. நன்றி அண்ணா.//

   தாங்கள் மட்டும் என்னவாம்? மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் என்பதை அடுத்தடுத்து சுறுசுறுப்பாக வந்து கொண்டிருக்கும் பின்னூட்டங்கள் மூலம் அறிகிறேன்.

   தங்களின் சிரிப்பொலியை, இங்குள்ள நானும் கற்பனையில் உணர்கிறேன் / கேட்கிறேன் / மகிழ்கிறேன்.

   தாங்கள் தொடர்ந்து சிரித்த வண்ணம் இந்தத் தொடரைப் படித்ததால் நடுவே [ஒரே ஒரு பல் போன்ற] பகுதி-5 காணோமே என்பதை நீங்கள் உணரவில்லை என நினைக்கிறேன்.

   அது இதே கதையின் மீள் பதிவினில் கீழ்க்கண்ட இணைப்பினில் உள்ளது.

   http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html

   அங்கே போய் தயவுசெய்து படித்து மகிழ்ந்து பின்னூட்டமும் கொடுங்கோ .... ப்ளீஸ்.

   அன்புடன்
   VGK

   நீக்கு
 15. வயதானபின் வரும் உபத்திரவங்களில் முதன்மையானது பல பிரச்சினைதான். இந்த மாதிரி வயதான காலத்தில் பற்கள் இப்படி பிரச்சினை கொடுக்கும் என்று தெரிந்தாருந்தால் சிறுவயதில் இன்னும் கொஞ்சம் கவனமாக பற்களைப் பேணி இருப்போம்.

  பதிலளிநீக்கு
 16. இந்த மாதிரி வயதான காலத்தில் பற்கள் இப்படி பிரச்சினை கொடுக்கும் என்று தெரிந்தாருந்தால் சிறுவயதில் இன்னும் கொஞ்சம் கவனமாக பற்களைப் பேணி இருப்போம்.//

  கந்தசாமி சார் சொல்வது நூத்துக்கு நூறு உண்மை. நான் கூட இப்படி நினைப்பது உண்டு.

  கண்ணாடி போட்டுக்கறத கிண்டல் பண்ணாதவங்க பொய்ப்பல்ல மட்டும் ஏன் கிண்டல் பண்ணறாங்கன்னு எனக்கு புரியவே இல்லை.

  பதிலளிநீக்கு
 17. வாயிலிருந்து வரும் சொல் மிகவும் முக்கியம் போல் பல் மிகவும் முக்கியம்!

  பதிலளிநீக்கு
 18. பல்லு போனா சொல்லு போச்சுன்னு சொல்லுவாங்க பஞ்சாமிக்கு சொல் மட்டும் போகலை .இன்நேரம் வாழ்க்கையே வெறுத்திருக்கும்

  பதிலளிநீக்கு
 19. புது செருப்பு கால கடிக்கும அதுபோல புது பலசெட்டும் வாய கடிச்சுபோட்டுது.

  பதிலளிநீக்கு
 20. முதலில் கல்கண்டை
  போட்டுச் சோதித்த சாமர்த்தியம் பிடித்தது
  தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 21. புதுசா ஷூ போட்ட பல்லா. பல்ல கடிச்சுடத்தா புது பல் செட்டு. அது ஸெட் ஆகும் வரையிலும் கஷ்டம்தான்.

  பதிலளிநீக்கு
 22. //தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.// சொந்த செலவில் சூனியம்...ம் ம் ம் ...

  பதிலளிநீக்கு
 23. //காற்றோட்டமாக செருப்புப் போட்டு பழகியவருக்கு திடீரென்று ஷூவும், சாக்ஸூம், அதுவும் டைட்டாகப் போட்டுவிட்டால் ஏதோ ஒரு முதலை, காலைக் கவ்விக் கொண்டிருப்பது போல உணர்வு ஏற்பட்டு கஷ்டப்படுத்தும். அது போல பஞ்சாமிக்கு வாய் முழுவதும் எதையோ வைத்து அடைத்து விட்டது போல ஒரு வித அவதி ஏற்பட்டது.//
  மாற்றத்தை ஏற்பதில் ஏற்பட்ட சிரமத்தை அழகாகச் சொன்னீர்கள்!

  பதிலளிநீக்கு
 24. எப்படில்லாம் உதாரணங்கள் யோசிக்குறீங்க. காற்றோட்டமாக செருப்பு போட்டு பழகியவருக்கு ஷூவும் ஸாக்ஸும் டைட்டாகப்போட்டால முதலை காலை கவ்விபிடிப்பது போல பல் செட் வாயக்கவ்வி பிடித்ததா. புதுசு தானே பழக பழக தான் சரி ஆகும்போல. ட்ரையலுக்கு கல்கண்டு கட்டிதான் கிடைத்ததோ. ஸ்வீட்டோட ஆரம்பிக்க நினைத்திருப்பார். கர கர காராபூந்தி பல்லு பூரா ஈஷிக்கொண்டு பிறகு எப்படி க்ளீன் பண்ணினாரோ.அவஸ்தைகள் தொடருதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 17, 2016 at 10:02 AM

   வாங்கோ, வணக்கம்.

   //எப்படில்லாம் உதாரணங்கள் யோசிக்குறீங்க. காற்றோட்டமாக செருப்பு போட்டு பழகியவருக்கு ஷூவும் ஸாக்ஸும் டைட்டாகப்போட்டால முதலை காலை கவ்விபிடிப்பது போல பல் செட் வாயக்கவ்வி பிடித்ததா. புதுசு தானே பழக பழக தான் சரி ஆகும்போல. ட்ரையலுக்கு கல்கண்டு கட்டிதான் கிடைத்ததோ. ஸ்வீட்டோட ஆரம்பிக்க நினைத்திருப்பார்.//

   ஒவ்வொன்றையும் ரஸித்துப்படித்து எடுத்துச் சொல்லி மகிழ்ந்ததும் / மகிழ்விப்பதும் சந்தோஷமாக உள்ளது.

   //கர கர காராபூந்தி பல்லு பூரா ஈஷிக்கொண்டு பிறகு எப்படி க்ளீன் பண்ணினாரோ.அவஸ்தைகள் தொடருதே.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மகா அவஸ்தைகள்தான்.

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு