About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, January 12, 2011

பொங்கல் வாழ்த்து




செங்கரும்புச் சாறெடுத்து
இதழினிலே தேக்கி,

சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,

மதமதத்த கைகளிலே வளையல் வீசி,

மங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் !

பொங்கியெழும் புத்தின்ப உணர்ச்சி தருவாள் !!

25 comments:

  1. இதழ்சாறு பருகிடவே
    ஏக்கமுடன் நாங்கள்.
    தருவாளா உங்கள்
    தைப்பெண்ணாள் எமக்கு.

    ReplyDelete
  2. அருமை.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கவிதையாய் ஒரு பொங்கல் வாழ்த்து.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அய்யா!

    ReplyDelete
  4. வாழ்த்து மிகவும் நன்றாக இருக்கு சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அட...அமர்க்களம் பண்ணிட்டீங்க, ஸார்! கவிதை சூப்பர். பஞ்சாமியின் பல் மாதிரி ஆயிடுத்து நம்ம பல்லும்! கரும்பை அப்படியே சாப்பிட முடியாது.ஆனா, கரும்பு மாதிரி இனிக்கிற உங்க கவிதையை அப்படியே சாப்பிடலாம், கண்ணாலே!!

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.இராமமூர்த்தி அவர்களே.

    ஆளையே காணுமேன்னு ஒரே விசாரமாகி விட்டது எனக்கு.

    பல் பழுதானாலும், கண்ணால் சாப்பிடும் தங்கள் தனித்திறமை, அடிக்கரும்பாய் இனிக்கிறது.

    ReplyDelete
  7. //சிவகுமாரன் said...இதழ்சாறு பருகிடவே
    ஏக்கமுடன் நாங்கள்.தருவாளா உங்கள்
    தைப்பெண்ணாள் எமக்கு.//
    கட்டாயமாக .. தை பிறந்தால் வழி பிறக்கும்.

    திருமதிகள்: ராஜி,கோவை2தில்லி&திரு.வெங்கட்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  8. azhagaa irukku, sir- unga pongal vaazhththu! :D

    ungalukkum happy-Happy Pongal! :)

    ReplyDelete
  9. சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,வரும் பொங்கல் வாழ்த்து"

    ReplyDelete
  10. மங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் !

    அத் தை மகளுக்கு வாழ்த்துகள் !

    ReplyDelete
  11. இராஜராஜேஸ்வரி said...
    //சிந்துகின்ற புன்னகையால் துன்பம் நீக்கி,வரும் பொங்கல் வாழ்த்து"//

    தாங்கள் அன்புடன் வருகை தந்து, புன்னகைசிந்தும் கருத்துக்களைக் கூறிய பிறகே, எனக்கு பொங்கல் மிகுந்த ருசியாக உள்ளது.

    மிக்க நன்றிங்க, மேடம்.

    ReplyDelete
  12. இராஜராஜேஸ்வரி said...
    மங்கலமாம் ”தை” என்னும் மங்கை வருவாள் !

    //அத் தை மகளுக்கு வாழ்த்துகள் !//

    அந்தத் “தை” மகள்
    என்னும் பலாச்சுளையை,

    தமிழ் என்னும் தேனில் தோய்த்து,

    “அத் தை மகள்”

    எனப்பிரித்துக் குறிப்பிட்டுக் கூறியுள்ள தங்களின் தமிழ்ப்புலமைக்குத் த்லை வணங்கி மகிழ்கிறேன்.

    அத் ’தை’ மகளா?
    ’அத்தை’ மகளா?
    அத்தையின் மகளின் மகளா?

    மூன்றாவதே முதிர்ந்து வந்த முத்தாகிப்போனது. ;)

    ReplyDelete
  13. நல்ல கருத்துச் செறிவுள்ள கவிதை. மனதில் அசைபோட்டு அனுபவிக்க வேண்டிய கவிதை. சிறியதாயிருந்தாலும் இன்பம் பொங்கும் கவிதை.

    ReplyDelete
  14. சித்திரைப் பெண் இன்று வந்து விட்டாள்.

    அத் ‘தை’ மகள் வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.

    வருடா வருடம் வந்தாலும்

    வரவேற்கக் காத்திருப்போம்.

    ReplyDelete
  15. சித்திரைப் பெண் தரும் இன்பத்தை நுகர்ந்தோம்! உடம்பே சர்க்கரை ஆலை! எனவே கரும்பைத்தான் கடிக்க முடியவில்லை! தடா!!!

    ReplyDelete
  16. தை மங்கை அமர்க்களமாக ஆனந்தமாக வந்து விட்டாள் அழகான கவிதை வழியாக

    ReplyDelete
  17. துன்பமும் சோர்வும் நீக்க இதழ் சிந்தும் புன்னகையொன்றே போதும். இந்த தைமகளோ செங்கரும்புச்சாற்றை இதழிலே தேக்கி புன்னகை சிந்துகிறாள். இனிமைக்கும் இதம் தரும் மகிழ்வுக்கும் சொல்லவா வேண்டும்?

    தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உள்ளமெல்லாம் புத்தின்ப உணர்ச்சி பொங்கச்செய்கின்றன அழகு வரிகள்.

    உற்றார் உறவுகளோடு பிறந்த மண்ணில் பொங்கல் திருநாளைக் கொண்டாடிய அந்நாட்கள் நினைவுக்கு வந்து மகிழ்வு கூட்டுகின்றன. நன்றியும் பாராட்டும் கோபு சார்.

    ReplyDelete
  18. இதுதா பொங்கல் வாள்த்து கவிதயா? அந்த பஞ்சாமி ஐயரு எப்படி கரும்பெல்லா சாப்பிடுவாரு?

    ReplyDelete
  19. புத்தாண்டுச் சிறப்புக் கவிதை
    வெகு வெகு சிறப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. தை மகள் இதழ்களில புன்னகையுடன் வந்து விட்டாளா. தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்

    ReplyDelete
  21. கரும்புச்சாறு...அருந்த ஆசைதான். அங்க பஞ்சாமியோட பல்ல புடுங்கிட்டு இங்க ஜூஸா..சரியான குசும்புதான்...

    ReplyDelete
  22. //புத்துணர்வு ஊட்டும் வரிகள்!

    ReplyDelete
  23. பொங்கல் கவிதை படிக்கும் நேரம் மேலும் பல தைமகள் வந்து போயாச்சு. ஆனாலும் கவிதை இப்ப படிக்கும்போது கூட ஃப்ரெஷா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 19, 2016 at 10:13 AM

      வாங்கோ, வணக்கம்.

      //பொங்கல் கவிதை படிக்கும் நேரம் மேலும் பல தைமகள் வந்து போயாச்சு. ஆனாலும் கவிதை இப்ப படிக்கும்போது கூட ஃப்ரெஷா இருக்கு.//

      ஆஹா, தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், ஃப்ரெஷ்ஷான கருத்துக்களுக்கும் என் இனிய நன்றிகள்.

      Delete