என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 29 ஜனவரி, 2011

உடம்பெல்லாம் உப்புச்சீடை [ பகுதி 2 / 8 ]

முன்கதை......................... பகுதி - 1

மாலை மணி 5.35 ; கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் சென்னையை விட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பட்டாபி தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், பல்வேறு மூட்டை முடிச்சுக்களுடன், மூச்சு வாங்க ரயிலின் வால் பகுதியிலிருந்து தலைப்பகுதி வரை தட்டுத்தடுமாறி ஓடி, தேடி முன்பதிவு செய்த தங்கள் இருக்கைகள் கொண்ட ரயில் பெட்டியை கண்டுபிடித்து ஏறவும், வண்டி மெதுவாக நகரத் தொடங்கவும் மிகச் சரியாக இருந்தது.

தன்னுடைய சூட்கேஸ் மற்றும் இதர சாமான்கள் மொத்தம் பன்னிரண்டு உருப்படிகள் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை எண்ணிப் பார்த்துவிட்டு, இருக்கையின் கீழ்புறம் குனிந்து அவற்றைக் காலில் இடறாதவாறு ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார், பட்டாபி.


“அஸ்திக்கலசம் உள்ள அட்டைப் பெட்டி ஜாக்கிரதை. அதை உடையாமல் ஒரு ஓரமாக உள்ளடங்கி வைச்சுடுங்கோ. ஊர் போய்ச் சேரும் வரை அதை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. சாப்பாடுக்கூடை; தயிர் சாத தூக்கு; டவரா, தம்ளர், வாட்டர் கேன், பிளாஸ்க் வைத்திருக்கும் ஒயர் கூடை; நொறுக்குத்தீனி வைத்துள்ள பிக் ஷாப்பர் பை முதலியன அடிக்கடி எடுக்கும் படியாக இருக்கும். அதையெல்லாம் டக்டக்குனு எடுக்க வசதியா முன்னாடி வைச்சிருங்கோ. பணப்பை ஜாக்கிரதையாக இருக்கட்டும். ரயில் டிக்கெட்களை சைடு ஜிப்பிலே வைச்சுடுங்கோ” மனைவி பங்கஜம் தொடர்ச்சியாக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த வண்ணம் இருந்தாள்.


பொடிப்பயல் நாலு வயது ரவியும், சின்னவள் ஆறு வயது கமலாவும் ஜன்னல் பக்கத்து சீட்டைப் பிடிக்க தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.


எதிர்புற லோயர் பெர்த் ஜன்னல் ஓரமாக யாரோ தன் பொருட்களை வைத்து விட்டு எங்கோ சென்றிருப்பார் போலும்.


வண்டியில் ஏறியதும் அவசரமாக கழிவறைக்குப் போன விமலாவை இன்னும் காணோமே என்று விசாரப் பட்டாள் பங்கஜம்.


குனிந்து நிமிர்ந்து பொருட்களை அடுக்கியதில் வியர்த்துக் கொட்டிய முகத்தை, டர்க்கி டவலால் அழுத்தித் துடைத்து, ஃபேன் ஸ்விட்ச்களைத் தட்டி விட்டார் பட்டாபி.


“ஒரு ஜன்னல் தான் நமக்கு. நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி உட்காரணும். சண்டை போடக் கூடாது. சமத்தாய் இருக்கணும்” என்று ரவியையும் கமலாவையும் சமாதானப் படுத்தினாள் பங்கஜம்.

கழிவறையிலிருந்து கலவரத்துடன் ஓட்டமாக ஓடி வந்த விமலா, பயத்தில் தன் தாயாரை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

”என்னடி ஆச்சு ..... வயதுக்கு வந்த பெண், இப்படிப் பதறி அடித்து ஓடி வரலாமா? நான் சொல்லிக் கொடுத்ததெல்லாம் மறந்துட்டாயா? என்று பதறினாள் பங்கஜம்.


தான் கழிவறையிலிருந்து வெளிவரும் போது எதிர்புற கழிவறையிலிருந்து அந்தப் பயங்கரமான உருவம் வெளிப் பட்டதையும், தன்னை முறைத்துப் பார்த்ததையும், அதைப் பார்த்த தான் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டதையும், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எடுத்துரைத்தாள், விமலா.


புதிதாக வயதுக்கு வந்த [13 வயது] தன் பெண் எதையோ பார்த்து பயந்து போய் இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு, “இனிமேல் கழிவறைக்குத் தனியாகப் போகாதே; நானும் உன்னுடன் துணைக்கு வந்து கதவருகில் நிற்கிறேன்” என்று சமாதானப் படுத்தி, அவளை அமரச் செய்து ஃபிளாஸ்கிலிருந்து சூடாகக் காஃபியை ஊற்றி தம்ளரை நீட்டினாள், பங்கஜம்.

ஒரு வாய் காஃபியை ருசிப்பதற்குள், அந்த உருவம் இவர்கள் பக்கமே நடந்து வந்து, தாண்டிக் குதித்து, ஜன்னல் ஓரம் இருந்த தன் சாமான்களை சற்று ஒதுக்கி கீழே வைத்து விட்டு, தானும் அங்கு அமர்ந்தது.

விமலா மீண்டும் பயம் வந்தவளாக தன் தாயின் புடவைத் தலைப்பில் புகுந்து கொண்டாள்.


“என்ன நீங்களெல்லாம் காசிக்குப் போறேளா! கங்கா ஸ்நானமா! பித்ரு கார்யமா! பில்டர் காஃபியா ... கும்முனு வாசனை மூக்கைத் துளைக்குதே” என்று கேட்டது அந்த உருவம்.

எல்லாவற்றிற்கும் மொத்தமாகத் தலையை ஆட்டி வைத்தாள் பங்கஜம்.

“நானும் காசிக்குத்தான் போறேன்” என்றது அது, யாரும் கேட்காமலேயே.

“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது” என்பது சரியாகத்தான் உள்ளது என மனதிற்குள் நினைத்துக் கொண்டனர், பங்கஜமும் பட்டாபியும்.


தொடர்ச்சி [ பகுதி 2 ] இப்போது ..........................

25 கருத்துகள்:

 1. தலைப்பு புரிபடுகிறது..சீக்கிரமாக அடுத்த பகுதியையும் போடுங்கள்!

  பதிலளிநீக்கு
 2. ம்… இரண்டாவது பகுதியும் படித்தாயிற்று – இளங்கன்று பயமறியாது என்பது அழகாய் புரிகிறது. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. //குழந்தை தானே, அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ அவனாவது என்னிடம் பிரியமாகப் பழகுகிறான். அவனையும் என்னிடமிருந்து விலக்கிடாதீங்கோ”//

  வலியுடன் கூடிய வார்த்தைகள்

  விறு விறுப்பு குறையாமல் கொண்டு செல்கிறீர்கள் சார்

  பதிலளிநீக்கு
 4. //அவனையும் என்னிடமிருந்து விலக்கிடாதீங்கோ”//

  avarin ullam terigirathu

  பதிலளிநீக்கு
 5. சின்ன குழந்தைகளுக்கு பயம் தெரியாது. பெரியவர்களான நாம் தாம் அசிங்கம், அசூயை என்று சொல்வோம். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன் சார்.

  பதிலளிநீக்கு
 6. அன்புள்ள
  திருமதி middleclassmadhavi
  திரு. வெங்கட்
  திருமதி ராஜி
  திரு எல்.கே
  திருமதி கோவை2தில்லி

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி!

  அடுத்த பகுதியை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாலும், வரும் 4.2.2011 அன்று என் 3வது மருமகளுக்கு வளைகாப்பு வைபவ விழா வைத்திருப்பதாலும், அன்று வெளியிடுவதாகச் சொல்லியிருந்த 3வது பகுதியை, சற்று முன்னதாகவே 2.2.2011 தை அமாவாசையன்று வெளியிடுகிறேன்.

  கடவுள் க்ருபையும், தங்களைப் போன்றவர்கள் தரும் உற்சாகமும் தான், கதையை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்ல பேருதவி செய்து வருகிறது.

  நன்றியுடன்,

  பதிலளிநீக்கு
 7. /, வரும் 4.2.2011 அன்று என் 3வது மருமகளுக்கு வளைகாப்பு வைபவ விழா வைத்திருப்பதாலும், //
  விழா நன்கு நடக்க வாழ்த்துக்கள். சுகப் பிரசவம் நடக்கப் பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 8. தங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி, திரு எல்.கே

  04.02.2011 அன்று வளைகாப்பு விழா மட்டும் அவளின் பிறந்த வீட்டில் (திருவானைக்கோவில் No. 11 / 11, C K V I Apartments இல்)நடைபெற உள்ளது.

  20.02.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று, திருச்சி டவுன், (சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 நிமிட நடை தூரத்தில்) No.1, பட்டர்வொர்த் ரோடு “அன்ன தான ஸமாஜம் கல்யாண மண்டபத்தில்” காலை 8.15 மணி முதல் 9.30 மணிக்குள், பும்ஸூவன ஸீமந்த சுபமுஹூர்த்தம், நடைபெற உள்ளது. 19.02.2011 இரவு முதல் 20.02.2011 மாலை வரை வேளா வேளைக்கு நல்ல பல விருந்து உணவுகள் உண்டு. இதையே நான் நேரில் வந்து அழைத்ததாக ஏற்று நம் எழுத்தாள நண்பர்கள் அனைவரும் விழாவிற்கு வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

  20.02.2011 அன்று நடைபெற உள்ள விழாவிற்கு வருகை தர இசைந்துள்ள பிரபல எழுத்தாளர்கள் (1) திருமதி மனோ சுவாமிநாதன் (ஷார்ஜா)அவர்கள் (2) திரு. ரிஷபன் (ஸ்ரீரங்கம்) அவர்கள் (3) திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி (திருவானைக் கோவில்)அவர்கள் ஆகியோர்களையும், நேரில் சந்தித்து உரையாடி மகிழ இது ஓர் நல்ல சந்தர்ப்பம். நழுவ விட வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 9. “குழந்தை தானே, அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ அவனாவது என்னிடம் பிரியமாகப் பழகுகிறான். அவனையும் என்னிடமிருந்து விலக்கிடாதீங்கோ” என்றார் அந்தப் பெரியவர்.

  கனக்கும் உண்ர்வுகள்
  கொப்பளிக்கும் வார்த்தைகள் !

  பதிலளிநீக்கு
 10. கனிந்த கொய்யாப்பழத்தைப் பிளந்தது போல, செக்கச் சிவந்த எகிறுகளுடன், அவர் வாய் பிளந்து பெரியதாகச் சிரித்தது, எல்லோருக்குமே பயங்கரமான திகில் உணர்வை ஏற்படுத்தியது.

  திகில் பயணம் தான் !

  பதிலளிநீக்கு
 11. இராஜராஜேஸ்வரி said...
  “குழந்தை தானே, அவனுக்கு என்ன தெரியும்? ஏதோ அவனாவது என்னிடம் பிரியமாகப் பழகுகிறான். அவனையும் என்னிடமிருந்து விலக்கிடாதீங்கோ” என்றார் அந்தப் பெரியவர்.

  கனக்கும் உண்ர்வுகள்
  கொப்பளிக்கும் வார்த்தைகள் !//

  அன்பான வருகைக்கும் கனக்கும் உணர்வுகளுடன் கொப்பளித்த கருத்துக்களுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. இராஜராஜேஸ்வரி said...
  கனிந்த கொய்யாப்பழத்தைப் பிளந்தது போல, செக்கச் சிவந்த எகிறுகளுடன், அவர் வாய் பிளந்து பெரியதாகச் சிரித்தது, எல்லோருக்குமே பயங்கரமான திகில் உணர்வை ஏற்படுத்தியது.

  திகில் பயணம் தான் !//

  ஆஹா, அழகாகச்சொல்லியுள்ளீர்கள்.
  அவர்களுக்கு அந்த க்ஷணத்தில் அது திகிலானதொரு பயணம் தான்.

  பதிலளிநீக்கு
 13. எல்லோருமே அழகாக பிறக்கும்போதே இருந்துவிட்டால் அப்புறம் போர் அடித்துவிடாதோ? அதான் பகவான் இப்படி செய்துடறார் போலும்.. பங்கஜமும் பட்டாபியும் உருவத்தைப்பார்த்து எடைபோடுகிறார்கள்.. அதான் அந்த கரிய மனிதரின் வெள்ளை உள்ளம் கண்ணுக்கு தெரியாம போயிடுத்து... ஆனா ரவி குழந்தை. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.. அதான் குழந்தைக்கு தெரியல பேதம் பார்க்க. அதுமட்டுமில்லாம பிரச்சனை, சண்டை இல்லாம ஜன்னல் சீட் வேற கிடைக்கிறதே...

  கதைக்கான தலைப்பை பார்த்து கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் ஏதோ பற்றி எழுதி இருக்கார் அண்ணா என்று நினைத்தேன். இப்பத்தான் புரியறது... வித்தியாசமான சிந்தனை அண்ணா....

  அந்த மனிதரைப்பற்றிய வர்ணனை மிக இயல்பாக அழகாக உப்புச்சீடைக்கு ஒப்பிட்டு எழுதி இருப்பது அருமை....

  கண்முன்னால் காட்சி விரிகிறது கதை அப்படியே...

  பங்கஜமும் பட்டாபியும் கண்ணால் மிரட்டியும் உருட்டியும் ரவி மசியலையே...

  எனக்கென்னவோ ரவி அந்த மனிதருடன் ஃப்ரெண்ட் ஆகிடுவான்னு நினைக்கிறேன்...

  அந்த உப்புசீடை மனிதருக்குள்ளும் சொல்ல இயலா வேதனைகள் இருக்கலாம்... இனி அடுத்தடுத்து வரும் பாகத்தில் அது வெளியும் வரலாம்னு தோணுது...

  பங்கஜத்தின் போக்கு மாறவே இல்லை. டிபிகல் அம்மாவா இருக்காளே...

  குழந்தையை இப்படியா திட்றது??

  பார்ப்போம் இனி என்ன ஆகிறதுன்னு....

  அருமையா எழுதுகிறீர்கள் அண்ணா.... இயல்பான தெளிவான நடை.... கதைக்கரு வித்தியாசம்.... கதாபாத்திரங்கள் மிக அருமையாக இருக்கிறது....

  பதிலளிநீக்கு
 14. //அருமையா எழுதுகிறீர்கள் அண்ணா.... இயல்பான தெளிவான நடை.... கதைக்கரு வித்தியாசம்.... கதாபாத்திரங்கள் மிக அருமையாக இருக்கிறது....//

  ரொம்பவும் சந்தோஷம் மஞ்சு.

  Comment Box இல் கருத்து எழுதி அதை வெளியிடும் முன்பு, கீழேயுள்ள Subscribe என்ற பட்டனை அமுக்கி விட்டு பிறகு அனுப்புங்கோ. அப்போது தான் என் பதில்கள், உங்கள் மெயில் இன் - பாக்ஸில் உடனுக்குடன் தெரியவரும்.

  மறக்காமல் அது போல செய்யப்பழகிக்கொள்ளுங்கள், மஞ்சு.

  பிரியமுள்ள,
  கோபு அண்ணா

  பதிலளிநீக்கு
 15. ஆஹா எதிர்பார்த்தேன். இப்படித்தான் ஏதாவது TWIST வெப்பாருன்னு.

  கோபு அண்ணா, நீங்க எழுதின மாதிரி அச்சு அசலா அப்படியே இருந்தார் அந்தப் பெரியவர்.

  எனக்கும் ரவி மாதிரி பயமெல்லாம் இல்லை. இந்த மாதிரி இரண்டொருத்தரை, ஏன் ஒரு பெண்மணியையும் பார்த்திருக்கிறேன். என்ன செய்வது. எல்லாம் இறைவனின் திருவிளையாடல். கடைசியில் போன ஜென்மத்து வினை என்று முடித்து விடுவோம்.

  //“சரியான அடம் பிடித்தது; ஊர் வரட்டும்; கங்கையிலே ஒரே அமுக்கா அமுக்கிப் புடறேன்” கறுவிக் கொண்டாள் பங்கஜம்.//

  பங்கஜம் மாமி அப்படி எல்லாம் சொல்லப்படாது. சரி போகப் போக எங்க கதாசிரியர் எழுத எழுத புரிஞ்சுப்பேள். ஒரு யூகத்துல நான் புரிஞ்சுண்டுட்டேன். பார்க்கலாம் என் யூகம் சரியா இருக்கான்னு.

  அடுத்த பகுதிக்குப் போறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANIFebruary 4, 2013 at 12:05 AM
   //ஆஹா எதிர்பார்த்தேன். இப்படித்தான் ஏதாவது TWIST வெப்பாருன்னு.//

   ஆஹா, நீங்க என்ன சாதரணமானவரா என்னைப்போல?

   IN and OUT CHENNAI யில் கலக்கிக்கொண்டிருக்கும் அருமையான எழுத்தாளர் அல்லவோ! ;)

   ***”சரியான அடம் பிடித்தது; ஊர் வரட்டும்; கங்கையிலே ஒரே அமுக்கா அமுக்கிப் புடறேன்” கறுவிக் கொண்டாள் பங்கஜம்.***

   //பங்கஜம் மாமி அப்படி எல்லாம் சொல்லப்படாது. சரி போகப் போக எங்க கதாசிரியர் எழுத எழுத புரிஞ்சுப்பேள். ஒரு யூகத்துல நான் புரிஞ்சுண்டுட்டேன். பார்க்கலாம் என் யூகம் சரியா இருக்கான்னு.//

   மிகவும் யூகமான பெண்மணி தான் நீங்களும்ன்னு நேக்குத் தெரியதா என்ன .... ;))))

   //அடுத்த பகுதிக்குப் போறேன்.//

   “போறேன்”ன்னு சொல்லாதீங்கோ.

   அழகா சமத்தா “போய்ட்டு வரேன்”ன்னு சொல்லுங்கோ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

   நீக்கு
 16. இளம் வயது கள்ளம் கபடமற்ற வயது. பெரியவர்களாகும் போதுதான் இவைகளைக் கற்றுக்கொள்கிறோம் என்பது வேதனைக்குரியதுதான்.

  பதிலளிநீக்கு
 17. பெரியவங்களுக்குத்தான் அவர் உருவம் அருவெறுப்பா இருந்திருக்கு. கள்ளம் கபடம் அறியாத குழந்தை மனசு அவரை சகஜமாகவே ஏற்று கொண்டு விட்டது.

  பதிலளிநீக்கு
 18. இளங்கன்று பயமறியாதது மட்டுமல்ல... கள்ளமும் அறியாதது என்றுதான் எண்ணத்தோன்றுகிறது ரவியின் குழந்தைத்தனத்தையும் அருவறுப்பற்று பாசத்துடன் பழகும் தன்மையையும் பார்க்கும்போது.. குழந்தையாவது என்னுடன் பிரியமாகப் பழகுகிறான். அவனையும் என்னிடமிருந்து விலக்கிவிடாதீங்கோ என்று அந்தப் பெரியவர் சொல்லும் வார்த்தைகளிலிருந்து அவரது மனம் புரிகிறது. அருமையான கதையோட்டம். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. இப்பதா இந்த கதக்கு கமண்டு போட்டாப்ல மருக்கா எப்பூடி வந்திச்சு.

  பதிலளிநீக்கு
 20. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலேன்னு சொல்லுவது சரிதான் போல இருக்கு. அந்த பெரியவர் ஜன்னலோர இருக்கை கொடுத்ததும் குஷி ஆயிடுத்தே.

  பதிலளிநீக்கு
 21. பெரியவரின் உருவம் இப்படி சித்தரிக்கப் படுவதே பின்னால ஒரு பெரிய டுவிஸ்ட் இருக்குன்னு சொல்லாமல் சொல்லுதே...பிள்ளைகளுக்கு ...இல்லை தள்ளுபடி...

  பதிலளிநீக்கு
 22. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!

  பதிலளிநீக்கு
 23. ஒழுங்கா சோப்பு போட்டு குளிக்க மாட்டீங்களா?? ஹா ஹா குழந்தைத் தனமான கேள்விதான் கேக்கத்தோன்றியதே தவிர அவரைப்பார்த்து பயமோ அறுவெருப்போ அந்தக்குழந்தைக்கு காட்டத்தெரியல. அந்த அப்பா அம்மாவுக்குதான் கோவமும் எரிச்சலும் வருது. ரவி அவரிடம் போயி ஜன்னல் ஸீட்டில் உட்கார்ந்ததே அந்தப் பெரியவருக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொட்த்திருக்கு. பாவம் அவரை எவ்வளவு பேரு அவரின் உருவத்தைக்கண்டு உதாசீன படுத்தி இருப்பாங்க. அந்த வலி அவர் மனதில் இருக்கும்தானே. அவன் இங்கயே இருக்கட்டும் என்று பெற்றவர்களிடம் சொல்லியும் அவர்களுக்கு இந்த ஆள் பக்கத்தில் தன் மகன் உட்காருவதை அவர்கள் விரும்ப வில்லை என்பது புரிகிறது. அந்த இடத்தில் எந்த பெற்றோராக இருந்தாலும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள். யதார்த்தமான சம்பவங்கள். காசி போயி சேரும் முன் அந்த பெரியவர் இவர்களிடம் எப்படில்லாம் அவமானப் படப்போகிறாரோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... February 2, 2016 at 12:35 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒழுங்கா சோப்பு போட்டு குளிக்க மாட்டீங்களா?? ஹா ஹா//

   இதுவரை இந்த என் கதை 3 அல்லது 4 முறை வெவ்வேறு காரணங்களுக்காக, என் வலைத்தளத்தினில் மீள் பதிவாகக் கொடுக்கப் பட்டிருந்தும், இந்த இடத்தை தங்களைப்போல யாருமோ ரஸித்து எடுத்துச் சொல்லவில்லை. தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

   //குழந்தைத் தனமான கேள்விதான் கேக்கத்தோன்றியதே தவிர அவரைப்பார்த்து பயமோ அறுவெருப்போ அந்தக்குழந்தைக்கு காட்டத்தெரியல.//

   சிறு குழந்தைகள் எப்போதும் குழந்தைகளே. அவர்கள் உள்ளம் ஸ்படிகம் போன்றது. கள்ளம் கபடமில்லாதது. இளம் கன்று பயமறியாது என்றும் சொல்வார்கள்.

   //அந்த அப்பா அம்மாவுக்குதான் கோவமும் எரிச்சலும் வருது.//

   ஆமாம். இருப்பினும் அவர்கள் நிலைமையில் இது மிகவும் இயல்பான ஒன்றே.

   //ரவி அவரிடம் போயி ஜன்னல் ஸீட்டில் உட்கார்ந்ததே அந்தப் பெரியவருக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு.//

   அவருக்கும் சந்தோஷம். ரவிக்கும் ஜன்னல் ஸீட் கிடைத்ததில் அதைவிட சந்தோஷம் அல்லவா.

   //பாவம் அவரை எவ்வளவு பேரு அவரின் உருவத்தைக்கண்டு உதாசீன படுத்தி இருப்பாங்க. அந்த வலி அவர் மனதில் இருக்கும்தானே.//

   நிச்சயமாக இருக்கக்கூடும்தான்.

   //அவன் இங்கேயே இருக்கட்டும் என்று பெற்றவர்களிடம் சொல்லியும் அவர்களுக்கு இந்த ஆள் பக்கத்தில் தன் மகன் உட்காருவதை அவர்கள் விரும்ப வில்லை என்பது புரிகிறது. அந்த இடத்தில் எந்த பெற்றோராக இருந்தாலும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள். யதார்த்தமான சம்பவங்கள்.//

   ஆம். நாமே அந்தப் பெற்றோராக இருப்பினும் அப்படித்தானே நினைத்திருப்போம். இது மிகவும் யதார்த்தமான சம்பவம் மட்டுமேயாகும்.

   //காசி போயி சேரும் முன் அந்த பெரியவர் இவர்களிடம் எப்படில்லாம் அவமானப் படப்போகிறாரோ.//

   அதானே ..... காசிப்பயணம் முடிவதற்குள் கதையின் போக்கு எப்படி எப்படியெல்லாம் போகப்போகிறதோ :)

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், கதையை நன்கு மனதில் உள்வாங்கிப் படித்து அளித்துவரும், மிக ஆச்சர்யமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு