என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 27 ஜனவரி, 2011

தை வெள்ளிக்கிழமை

ருக்குவுக்கு இடுப்புவலி எடுத்து விட்டது. ஸ்பெஷல் வார்டிலிருந்து தியேட்டருக்கு அழைத்துச் செல்கிறார்கள். பெற்ற தாய் போல பார்த்துக் கொள்ள டாக்டர் மரகதம் இருக்கிறார்கள். சுகப் பிரஸவமாகி சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை மட்டும் தான் ருக்குவுக்கு.

ஏற்கனவே நான்கு குழந்தைகளுக்கு தாயான ருக்கு, இந்த ஐந்தாவது குழந்தை தேவையில்லை என்று சொல்லி டாக்டர் மரகதத்திடம் வந்தவள் தான், ஒரு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு.

“ஏம்மா .... சற்று முன் ஜாக்கிரதையாக இருந்திருக்கக் கூடாதா? இப்போது தான் எவ்வளவோ தடுப்பு முறைகள் இருக்கே! கருக்கலைப்பு செய்து உடம்பைக் கெடுத்துக்கணுமா?” என்றாள் டாக்டர்.

ருக்கு கடந்த இரண்டு வருடங்களாக, டாக்டர் மரகதம் வீட்டில் சமையல் வேலை செய்து வருபவள். அவள் கணவன் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்ப்பவர். திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குள் இரண்டு பெண், இரண்டு பிள்ளையென நான்கு குழந்தைகள். இது ஐந்தாவது பிரஸவம்.

ஒரே ஒரு முறை ருக்குவின், தங்கவிக்ரஹம் போன்ற நான்கு குழந்தைகளையும் டாக்டர் மரகதம் பார்க்க நேர்ந்த போது, அவர்களின் அழகு, அடக்கம், அறிவு, ஆரோக்கியம் அனைத்தையும் கவனித்து தனக்குள் வியந்து போய் இருந்தார்கள்.

ஐந்தாவதாக இருப்பினும் நல்ல நிலையில் உருவாகியுள்ள இந்தக் குழந்தையை கருக்கலைப்பு செய்ய மனம் ஒப்பவில்லை, டாக்டர் மரகதத்திற்கு.

மேலும் டாக்டருக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்டு, டாக்டரிடம் ஏதாவது நல்ல குழந்தையாக ஏற்பாடு செய்யச் சொல்லிக் கூறியிருந்தனர், அந்த தம்பதியினர்.

ருக்குவிடம், டாக்டர் மரகதம் இந்த விஷயத்தைப் பக்குவமாக எடுத்துச் சொன்னார்கள்.

“உனக்கு வேண்டாத இந்தக் குழந்தையை, இப்போது எதுவும் செய்யாமல், நீ பெற்றெடுத்த பிறகு என்னிடம் கொடுத்து விடேன். பிரஸவம் நல்லபடியாக நடக்கும் வரை, நானே உன்னையும் உனக்குப் பிறக்கப்போகும் குழந்தையையும், போஷாக்காக கவனித்துக்கொள்கிறேன்.” என்று கூறி ஒருவாறு ருக்குவையும், அவள் மூலமே அவள் கணவனையும், சம்மதிக்க வைத்து விட்டார், அந்த டாகடர்.

மேற்கொண்டு குழந்தை பிறக்காமல் இருக்க பிரஸவத்திற்குப் பின், கருத்தடை ஆபரேஷன் செய்வதாகவும், பேசித் தீர்மானித்து வைத்தனர்.

அன்று ருக்கு வேண்டாமென்று தீர்மானித்த குழந்தை பிறக்கும் நேரம், இப்போது நெருங்கி விட்டது.

ருக்கு பிரஸவ வலியின் உச்சக்கட்டத்தில் துள்ளித் துடிக்கிறாள். மிகப்பெரிய அலறல் சப்தம் கேட்கிறது.

பட்டு ரோஜாக்குவியல் போல பெண் குழந்தை பிறந்து விட்டது. தாயும் சேயும் நலம். டாக்டர் மரகதம் மகிழ்ச்சியுடனும், பெருமிதத்துடனும் தன் கடமையைக் கச்சிதமாக முடித்ததும், கை கழுவச் செல்கிறார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் செல்கின்றனர். வாசலில் கவலையுடன் ருக்குவின் கணவர். டாக்டருக்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது.

“உங்கள் விருப்பப்படியே பெண் குழந்தை தான். யெஸ்...யெஸ், ஜோராயிருக்கு. ஷ்யூர், ஐ வில் டூ இட். இப்போதே கூட குழந்தையைப் பார்க்க வரலாம். வக்கீலுடன் பேசி லீகல் டாகுமெண்ட்ஸ் ரெடி செய்து வைச்சுடுங்கோ. நான் போன் செய்த பிறகு புறப்பட்டு வாங்கோ” என்றார் டாக்டர்.

ருக்குவை தியேட்டரிலிருந்து ஸ்பெஷல் ரூமுக்கு கூட்டி வந்து படுக்க வைத்து, அருகே தொட்டிலில் குழந்தையைப் போடுகிறார்கள்.

ருக்குவின் கணவரும் உள்ளே போகிறார். பெற்றோர்கள், பிறந்த குழந்தையுடன் கொஞ்ச நேரமாவது கொஞ்சட்டும். மனம் விட்டுப்பேசி, மனப்பூர்வமாக குழந்தையைத் தத்து கொடுக்கட்டும் என்று ஒரு மணி நேரம் வரை டாக்டர் அவகாசம் தந்திருந்தார்.

பிறகு டாக்டர் ருக்குவை நெருங்கி ஆறுதலாக அவள் தலையைக் கோதி விட்டார்.

“என்னம்மா, பரிபூரண சம்மதம் தானே. அவங்களை வரச் சொல்லவா? உன் வீட்டுக்காரர் என்ன சொல்கிறார்? உன் வீட்டுக்காரர் தனியே ஒரு ஹோட்டல் வைத்து, முதலாளி போல வாழவேண்டி, நியாயமாக எவ்வளவு தொகை கேட்கிறீர்களோ, அவர்கள் அதைத் தந்து விட நிச்சயம் சம்மதிப்பார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.

மேலும் உனக்குப் பிறந்த இந்தக் குழந்தையை மிகவும் நன்றாக, வசதியாக வளர்த்து, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்து விடுவார்கள்.

இன்றைக்கே இப்போதே உடனடியாக முடிவெடுத்து விட்டால் தான் உங்களுக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது ” என்றார் டாக்டர்.

கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.

“எங்களை தயவுசெய்து மன்னிச்சுடுங்க டாக்டர். நாங்க இந்தக் குழந்தையை மட்டும் கொடுக்க விரும்பலை” என்றனர்.

சிரித்துக்கொண்ட டாகடர், ”அதனால் பரவாயில்லை. ஏற்கனவே நீங்க இரண்டு பேரும் ஒத்துக்கொண்ட விஷயம் தானே என்று தான் கேட்டேன். திடீரென்று ஏன் இப்படி மனசு மாறினீங்க? அதை மட்டும் தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்” என்றார் டாக்டர்.

ருக்கு வெட்கத்துடன் மெளனமாகத் தலையைக் குனிந்து கொள்ள, அவள் கணவன் பேச ஆரம்பித்தான்.

“இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்.

இது போலவும் ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்த்த டாக்டர் தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே போனார், தன் குடும்ப நண்பருக்குப் போன் செய்து, அவர்களை புறப்பட்டு வராமல் தடுக்க.

32 கருத்துகள்:

 1. கஷ்டமான கருதான். (கதைக் கருவைச் சொல்கிறேன்)

  பதிலளிநீக்கு
 2. பெண் குழந்தையை எல்லாத் தரப்பும் விரும்பும் ஒரு பாஸிட்டிவான கதை!

  பதிலளிநீக்கு
 3. பாசிட்டிவான முடிவோட கதை நல்லாருக்கு

  பதிலளிநீக்கு
 4. அருமை. பெண் குழந்தை வேண்டாமெனச் சொல்லும் மாக்களுக்கு நடுவில் இப்படியும் மக்கள்! கதை சொல்லிய விதமும் கதையின் கருவும் அருமை.

  பதிலளிநீக்கு
 5. சரளமான நடைதான் உங்கள் பலம்.

  எந்த முடிவும் அது செயல்படுத்தப்படும் வரை மாறுதலுக்குட்பட்டது என்பது முதிர்ச்சி அடைந்தவர்கள் அறிந்ததே.

  அதுவும் இதுபோன்ற உணர்வுப் ப்ரவாகத்தையூட்டும் சம்பவங்கள் நம் மனதை மாற்றிவிடக்கூடியவையே.

  அருமை.

  பதிலளிநீக்கு
 6. திரு. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களே,
  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
  கஷ்டமான கருவானாலும்
  நஷ்டமான தாக்காமல்
  இஷ்டமான தாக ஏற்றுக்கொண்டதால்
  முடிவு வரவேற்கப்பட்டுள்ளது.

  திரு எல்.கே அவர்களே
  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
  நல்ல மூடில் எழுத உட்கார்ந்தால், அடுத்தடுத்து ப்ளோ, குற்றால அருவி போல கொட்டுவதுண்டு. பல நேரங்களில் நான் இதை அனுபவித்ததுண்டு. எல்லாம் அவன் செயலே!

  middleclassmadhavi
  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
  எனக்குப் பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் உண்டு. அதனாலேயே எல்லாத் தரப்பும் விரும்பும், பாஸிடிவ் கதையாக எழுத வந்திருக்குமோ என்னவோ!

  அன்புள்ள திருமதி ராஜி அவர்களுக்கு
  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
  இந்தக் கதையை இப்படி பாஸிடிவ் ஆகத்தானே முடித்தாக வேண்டும்! அழகாக அற்புதமாக எழுதிவரும் உங்களுக்குத் தெரியாததா என்ன?

  திரு. வெங்கட் அவர்களுக்கு,
  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
  மாக்களுக்கு நடுவில் இப்படியும் மக்கள் என்று அழகாக்ச் சொல்லியுள்ளீர்கள்.

  திரு. சுந்தர்ஜி அவர்களே,

  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

  எனது பலம் என்ன என்பதை தாங்கள் சுட்டிக் காட்டிய பிறகே எனக்கு புதிய பலம் வந்தது போல உணர முடிகிறது.

  முதிர்ச்சி அடைந்த தாங்கள் கூறியதால் ஒரு எழுச்சி ஏற்படுகிறது.

  இந்தத் தங்களின் பாராட்டும் உணர்வுப் ப்ரவாகத்தையூட்டும் சம்பவமாக உள்ளதால், என் இயல்பான நல்ல மனதை, அது மாற்றிவிடாமல் இருக்கணுமே என்ற விஜாரமும் ஏற்பட்டுள்ளது.

  அடிக்கடி வாருங்கள்; அறிவுரைகள் தாருங்கள் !!

  பதிலளிநீக்கு
 7. // அழகாக அற்புதமாக எழுதிவரும் உங்களுக்குத் தெரியாததா என்ன//
  தங்கள் பதிவில் எனக்கு பாராட்டா?

  இதுதான் பெருந்தன்மை

  நன்றி


  **************************
  எனது டாஷ் போர்டில் "ஆசை" என்ற பெயரில் தங்கள் பதிவு
  அப்டேட் ஆகியுள்ளது,ஆனால் தமிழ் ஃபான்ட் அன்று.
  ஒப்பன் ஆகவில்லை

  பதிலளிநீக்கு
 8. சரளமான நடை. எங்கும் தொய்வில்லை. ரத்த பாசம், மழலை பாக்கியத்திற்கு முன் எதுவுமே பெரிதில்லை என்பதை அழகாகக் கதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

  எனக்கும் பெண் குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இதுவரை பகவான் கொடுப்பினை இல்லை. ஒரு பொடியன் உண்டு. அவனுக்குப் பெண் பிள்ளை போல அவ்வப்போது சீவி சிங்காரிப்பது உண்டு. கொடுமை என்னவென்றால் எனக்குத் தங்கை அக்காவும் கிடையாது.அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டுமோ?

  உங்கள் மின்னஞ்சலை இப்போதுதான் பார்த்தேன். மிக்க நன்றி. உடன் பதில் எழுததாதற்கு வருந்துகிறேன்.

  அதுவும் நல்லதுதான். பதில் எழுதி இருந்தால் இந்தப் பதிவைப் பார்த்திருக்க மாட்டேன்:)

  பதிலளிநீக்கு
 9. அன்புள்ள திருமதி ராஜி அவர்களுக்கு
  தங்களின் மறு வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
  // எனது டாஷ் போர்டில் "ஆசை" என்ற பெயரில் தங்கள் பதிவு அப்டேட் ஆகியுள்ளது,ஆனால் தமிழ் ஃபான்ட் அன்று ஒப்பன் ஆகவில்லை //
  ”ஆசை” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை அடித்து, பிறகு வெளியிடலாம் என்று, சேமித்து வைத்துள்ளேன். அது எப்படி தங்களின் டாஷ் போர்டில், டாஷ் ஆனது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த கம்ப்யூட்டர்/ப்ளாக் போன்றவற்றில் நான் ஒரு LKG படிக்கும் குழந்தை போலத் தான். தயவுசெய்து தங்களுக்கு இதனால் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு வருந்துகிறேன். என்னைத் தவறாக ஏதும் நினைக்க வேண்டாம்.

  உண்மையாக மனதில் பட்டதை எழுதினேன். ”இது தான் பெருந்தன்மை” என்று தாங்கள் கூறியிருப்பது உங்களின் பெருந்தன்மையையும் வெளிப்படுதுகிறது. நன்றியுடன்,

  பதிலளிநீக்கு
 10. Dear Mr. Gopi Ramamoorthy,
  தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

  //அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டுமோ?//

  நிச்சயமாக நண்பரே !
  ஆனால் ஒன்று, நாம் நினைத்தது, நினைப்பது எல்லாம் கிடைக்காவிட்டாலும், கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைவோம். எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்வோம்.

  கடவுள் க்ருபையால் உங்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல், எது சுகமோ அது நிச்சயமாக கொடுக்கப்படும்.

  கதையைப் பற்றிய தங்கள் பாராட்டுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அடிக்கடி நேரம் கிடைக்கும் போதெல்லாம் வருகை தாருங்கள்.
  அன்புடன் .....

  பதிலளிநீக்கு
 11. சிரமம் எல்லாம் ஒன்றும் இல்லை சார்,
  வழக்கம் போல தங்களின் பதிவை ஆர்வமாக ஒப்பன் செய்ய முயன்று
  அது ஆகாதது குழப்பமாக இருந்தது.எனக்கு மட்டும்தான் ஒப்பன் ஆகவில்லையா
  என்று அறியவே தங்களிடம் தெரிவித்தேன்.மற்றபடி ஒன்றும் இல்லை சார்.
  பதிலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. கதை ரொம்ப அருமையா வந்திருக்கு சார். பெண் குழந்தைகள் வீட்டில் பிறக்கும் லக்ஷ்மி என்பார்கள். இதை எல்லோரும் ஒப்புக் கொள்ளவேண்டும்.

  பதிலளிநீக்கு
 13. கோவை2தில்லி அவர்களே !
  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நன்றிகள்.
  தங்கள் கருத்தும் லக்ஷ்மிகரமாக இருப்பதால் அனைவருமே ஒப்புக் கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 14. அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது.
  தை வெள்ளியில் பிறந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. இராஜராஜேஸ்வரி said...
  //அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது.
  தை வெள்ளியில் பிறந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்.//

  அன்புடன் வெகு அழகாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 16. ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க ஐயா.

  நீண்ட கதையாக இருந்தாலும் எதிர்பார்ப்புடனேயே அமைத்தமை அழகு.

  இப்படியொரு பழமொழி இருப்பதை இன்றுதான் அறிந்தேன் ஐயா..

  பதிலளிநீக்கு
 17. தங்கள் அன்பான வருகைக்கும், அரிய கருத்துக்களுக்கும், உற்சாகப்படுத்தும் பாராட்டுக்கும் மிக்க நன்றி, சார்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 18. நல்லதொரு சிறுகதை.உங்க வழக்கமான பாணியில் மிக நன்றாக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச்சகோதரி,

   தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் கூட வழக்கமான பாணியில் மிக நன்றாகவே இருக்குது. ;)))))

   அன்புடன்
   VGK

   நீக்கு
 19. இரண்டு குழந்தைகளுக்கு மேலே பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் வசதியும் இருக்கவேண்டும்.. முதலில் குழந்தையை தத்துக்கொடுக்க ஒப்புக்கொண்ட பெற்றோர் பின்னர் மாற்றிக்கொண்டதன் ரகசியம் தைவெள்ளி பெண்குழந்தை 5ஆவது குழந்தை கெஞ்சினாலும் கிடைக்காது.... நல்லதொரு கருத்தை தாங்கி வந்த கதை அண்ணா.....

  எந்த தாய்க்குமே தன் குழந்தையை தத்துக்கொடுக்க விருப்பம் இருக்காது அது ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி அல்லது 12 குழந்தைகளாக இருந்தாலும் சரி... தன் ரத்தம் தன் உடலில் ஒரு பாகமாக இருந்த குழந்தையை எத்தனை ஏழ்மையிலும் தத்துக்கொடுக்க தாய் விரும்பவே மாட்டாள்...

  நான் பயந்துக்கொண்டே படித்தேன்.. எங்கே குழந்தை தத்துப்போய்விடுமோ என்று....

  குழந்தை தத்துக்கொடுக்க விருப்பமில்லை என்ற ஒரு காரணம் சொல்லி பெற்றோர் நிறுத்தினாலும் மனம் குறுகுறுக்கத்தான் செய்கிறது பிறந்தது தைவெள்ளியில் இல்லாம வேறு தினமாக இருந்தால் குழந்தை தத்து போயிருக்குமோ :(

  தத்து கொடுத்துவிடு என்று டாக்டர் சொல்லி கருவை காப்பாற்ற டாக்டர் பொய் சொல்கிறார் என்று நினைத்தேன்...

  தத்து எடுக்க காத்திருந்த பெற்றோர் மனநிலை நினைத்து பார்க்கவும் கஷ்டமாக இருந்தது....

  பெண் குழந்தை வேண்டாம் என்று கருவிலேயே அழிக்க முனைவோருக்கும், பெண் குழந்தை பெற்றுவிட்டால் அதை கள்ளிப்பால் கொடுத்து கொல்ல துணிவோருக்கும் சரியான பாடம் புகட்டும் அருமையான கதை பகிர்வு அண்ணா....

  எழுத்து நடை மிக அபாரம்.... கணவன் மனைவியின் நிலை குழந்தை வயிற்றில் இருந்தபோது, குழந்தை பிறந்த பின் என்று இருவேறுபட்ட நிலையில் பெற்றோரின் மனம் மிக அருமையாக எழுத்தில் வடித்திருக்கீங்க....

  அன்பு வாழ்த்துகள் அண்ணா அருமையான கதை பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மஞ்சுபாஷிணி December 9, 2012 10:08 PM

   அன்புள்ள மஞ்சு, வாங்கோ, வணக்கம்.

   //எழுத்து நடை மிக அபாரம்.... கணவன் மனைவியின் நிலை குழந்தை வயிற்றில் இருந்தபோது, குழந்தை பிறந்த பின் என்று இருவேறுபட்ட நிலையில் பெற்றோரின் மனம் மிக அருமையாக எழுத்தில் வடித்திருக்கீங்க....

   அன்பு வாழ்த்துகள் அண்ணா அருமையான கதை பகிர்வுக்கு.//

   கதையை ரஸித்துப்படித்து, அணுஅணுவாக அலசி ஆராய்ந்து தங்களின் மனதினில் தோன்றியதை அப்படியே எழுத்தினில் வடித்து, மிகப்பெரிய அளவில் கருத்துக்களைக்கூறியிருப்பது
   மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ரொம்ப சந்தோஷம்மா! ;)))))

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 20. மனித மனம் சபலபுத்தி உடையது. நிலையான முடிவு எடுக்க விடாது. இதை இந்த நிகழ்வு மூலம் தெளிவாக அறிந்து கொள்கிறோம்.

  பதிலளிநீக்கு
 21. முதலிலேயே நினைத்து விட்டேன். அவர்கள் தத்து கொடுக்க மாட்டார்கள் என்று, கொடுக்கவும் கூடாது என்று. இந்தக்காலம் போல் ஒரு குழந்தைக்கு PRE KGக்கு ஒன்றரை லட்சம் கட்டும் காலம் இல்லையே அது. அழகாக வளர்த்திருப்பார்கள் அந்தக் காலத்தில்.

  நல்ல கருத்துள்ள, எழுத்துச் செறிவுள்ள அருமையான கதை.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. நல்ல கருத்து சொன்ன கதை. பெண் குழந்தைன்னா கள்ளிப்பால் கொடுக்கும் மக்கள் இன்றும் சில இடங்களில் இருப்பதாக பல புத்தகங்கள் மூலம் படிச்சிருக்கேன். அவங்களுக் கெல்லாம் சரெலென உறைக்கும் படி சொல்லி இருக்கூ நல்ல கதை

  பதிலளிநீக்கு
 23. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பார்கள். ஆனால் இங்கு வரும் லட்சுமி கடாட்சத்தையும் வேண்டாமென்று சொல்லி ஐந்தாவது குழந்தையை அதுவும் பெண்குழந்தையை அள்ளி அணைக்கும் பெற்றோர் உண்மையிலேயே செல்வம் என்றால் என்னவென்று அறிந்திருக்கிறார்கள். எத்தனைக் குழந்தைகள் பெற்றாலும் அத்தனையையும் தாய்மையோடு அரவணைப்பவள்தானே தாய்?

  நல்லவேளையாக இனியும் கருத்தரிக்கும் வாய்ப்பைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். இல்லையென்றால் குழந்தைகளின் எதிர்காலம் மிகவும் மோசமானதாகப் போயிருக்கும்.

  குழந்தையைத் தத்து கொடுத்திருந்தால் அதன் எதிர்காலத்தோடு மற்றக் குழந்தைகளின் எதிர்காலமும் நன்றாக இருந்திருக்குமே என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  தாய்மை போற்றும் அருமையானதொரு கதைக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 24. அது எப்புடி பெத்த கொளந்தய தூக்கி கொடுப்பாங்களா யாராச்சும்

  பதிலளிநீக்கு
 25. கதையை விட எழுத்து வர்ணனை சூப்பர் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் புகுந்து எப்படி யோசிப்பார்கள் என்று உணர்ந்து எழுதிய எழுத்துகள். அந்தக குழந்தை வேறு நாட்களில் பிறந்திருந்தாலும் தத்து கொடுக்க மனம் வந்திருக்காது. இது ஆண்டவனின் திருவிளையாடல்களில் ஒன்று இருப்பவருக்கே மறுபடி மறுபடி கொடுப்பதும் இல்லாதவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதும் .

  பதிலளிநீக்கு
 26. பொன்னகையைத் தோற்கடிக்கும் புன்னகை சிந்தினால் 5ஆவது என்ன 10ஆவது பெண் பிள்ளையையும் தர மனசுதான் வருமா???அம்மா.....அம்மாதான்...

  பதிலளிநீக்கு
 27. //“இன்று ‘தை வெள்ளிக்கிழமை’ டாக்டர். அம்பாள் போல அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ‘அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது’ ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க; தானாகவே வந்த அதிர்ஷ்ட தேவதையான எங்களது அஞ்சாம் பெண்ணை கொடுக்க மனசு வரலை, டாக்டர்” என்றார்.//
  நல்லதொரு மாற்றம்!

  பதிலளிநீக்கு
 28. தைவெள்ளியில் பிறந்ததால.தத்து.கொடுக்க மனம் வராம.இருந்தது.ஒரு.ஸென்டிமெண்ட் காரணமாக இருந்தாலும் வேறு எந்த நாளில் பிறந்திருந்தாலும். மனசு வராதுதான். நம்ம சந்தோஷத்துக்காகத்தான்.குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம். பத்துமாதம் சுமந்து உணுகட்டுபாடுகள் மசக்கை கஷ்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அந்த பிஞ்சு குழந்தையின் முதல் அழுகுரலிலேயே சந்தோஷப்படும் தாயுள்ளம் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னுடன் வைத்துக்கொள்ளவே விரும்பும் டாக்டர் கேட்டப்போ ஏதோ ஒரு பலவீன தருணத்தில் சரின்னு சொல்லி இருக்கலாம்.ஏழையோ பணக்காராளோ தத்து கொடுக்க மனசு வராதுதான். ஒவ்வொருவரின் மன ுணர்வுகளையும் தெளிவாக சொல்லி கதையை கொண்டு போன விதம் நெகிழ்ச்சி. ரொம்ப நல்லா இருக்கு.ன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... February 1, 2016 at 1:53 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தை வெள்ளியில் பிறந்ததால தத்துக் கொடுக்க மனம் வராம இருந்தது ஒரு ஸென்டிமெண்ட் காரணமாக இருந்தாலும் வேறு எந்த நாளில் பிறந்திருந்தாலும். மனசு வராதுதான்.//

   கரெக்டு.

   //நம்ம சந்தோஷத்துக்காகத்தான் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறோம். பத்துமாதம் சுமந்து உணவுக்கட்டுபாடுகள் மசக்கை கஷ்டங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அந்த பிஞ்சு குழந்தையின் முதல் அழுகுரலிலேயே சந்தோஷப்படும் தாயுள்ளம் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னுடன் வைத்துக்கொள்ளவே விரும்பும்.//

   மிகவும் சரியே !

   //டாக்டர் கேட்டப்போ ஏதோ ஒரு பலவீன தருணத்தில் சரின்னு சொல்லி இருக்கலாம்.//

   ரொம்பவும் சரியே.

   //ஏழையோ பணக்காராளோ தத்து கொடுக்க மனசு வராதுதான். ஒவ்வொருவரின் மன உணர்வுகளையும் தெளிவாக சொல்லி கதையை கொண்டு போன விதம் நெகிழ்ச்சி. ரொம்ப நல்லா இருக்கு.//

   தங்களின் தொடர் வருகைக்கும், முழு ஈடுபாட்டுடன் கூடிய ஆழ்ந்த வாசித்தலுக்கும், அழகான கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   நீக்கு