About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, January 8, 2011

சொன்னதைச் சொல்லுமாம்...



நவராத்திரி முதல் நாள், என்
ஒன்றரை வயது அருமைப்
பேத்தியிடம் சொன்னேன்:
“கொலு பொம்மைகளைத்
தொடாமல் பார்க்கணும்” என்று!

அவள் அடுத்த பத்து நாட்களும்
அதையே திரும்பத் திரும்பச் சொன்னாள்
கொலு பார்க்க வந்த
பெரியவர்கள் அனைவரிடமும்.

45 comments:

  1. குழந்தைகளிடம் ஒன்று சொன்னால் போதும். அவர்கள் பச்சக் என்று பிடித்துக் கொள்வார்கள்..

    ReplyDelete
  2. அழகுக் கவிதை.. குழந்தைகள் போல..

    ReplyDelete
  3. குழந்தைகள் பல சமயங்களில் நமக்கு ஆசானாகி விடுகிறார்கள்.
    கவிதை அருமை.

    ReplyDelete
  4. excellent kavithai and excellent comment from Mr. Rishaban.

    ReplyDelete
  5. வருகை தந்த திருவாளர்கள் இராமமூர்த்தி, ரிஷபன், சிவகுமாரன், கணெஷ் மற்றும் திருமதி: மாதங்கி அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  6. குழந்தைகளின் ஒவ்வொரு பேச்சுமே நமக்கு பாடம்தான். கவிதை மூலம் அழகாய் சொல்லி இருக்கீங்க சார்.

    Word verification-ஐ எடுத்து விடுங்களேன். தொல்லை தருகிறது.

    ReplyDelete
  7. அன்புள்ள திரு. வெங்கட் நாகராஜ் க்கு,
    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. நான் ப்ளாக்கு புதியவன். தங்களுக்கு தொல்லை தரும் word verification என்பது எங்குள்ளது? அதை எப்படி நான் நீக்க வேண்டும்?. தயவுசெய்து விளக்கிப் புரிய வைத்தால் உடனே செய்து விடுகிறேன்.

    ReplyDelete
  8. உங்களுக்கு இது குறித்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன். உதவும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  9. gotcha. you have done it. now it is not asking for word verification.

    great

    ReplyDelete
  10. நாம் நினைப்பதை விட குழந்தைகள் புத்திசாலிகள்.

    ReplyDelete
  11. டியர் வெங்கட் நாகராஜ், சார், தங்களுக்கு தொல்லை தந்த word verification ஐ நான் நீக்கிவிட, எனக்கு தாங்கள் உதவி செய்ததற்கு மிக்க நன்றி.

    டியர் எல். கே சார்,
    முதல் வருகைக்கும், தங்கள் கருத்தும் நன்றி. ஆம், தற்கால குழந்தகள் பிறக்கும் போதே அதி புத்திசாலிகளாகத் தான் உள்ளன.

    ReplyDelete
  12. குழந்தைகள் எதையும் எளிதில் கற்று கடைப்பிடிப்பவர்கள்

    ReplyDelete
  13. கள்ளங்கபடில்லாமல் இப்படி பேசுவதால்தான் குழந்தையை ‘ தெய்வம்’ என்கிறார்கள்!!

    ReplyDelete
  14. அன்புடன் முதன் முதலாக வருகை தந்துள்ள திருமதி ராஜி அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புள்ள திருமதி மனோ சாமிநாதன் அவர்களுக்கு, பல்வேறு Busy Schedule களுக்கு இடையே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  15. //புதுகைத் தென்றல் said...
    அருமை //

    என் வலைப்பூவினில் இன்று முதன் முறையாக ”அருமை” யாக வீசியுள்ள புதுகைத் தென்றலுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து தென்றல் வீசட்டும்.

    ReplyDelete
  16. குழந்தைகள் ”சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை” போல் நமக்கே திருப்பிச் சொல்லி கொடுப்பார்கள். மிக அழகாக இருந்தது சார்.

    ReplyDelete
  17. //கோவை2தில்லி said...
    குழந்தைகள் ”சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை” போல் நமக்கே திருப்பிச் சொல்லி கொடுப்பார்கள். மிக அழகாக இருந்தது சார்.//

    தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும், நெஞ்சார்ந்த நன்றி.

    {தங்களின் ”சப்பாத்தி ஒழிக” கட்சி தான் நானும்}

    ReplyDelete
  18. சார் எல்லாம் வேண்டாம். நான் உங்கள் மகன் போன்றவன்தான். பேரை சொல்லியக் கூப்பிடலாம்

    ReplyDelete
  19. OK எல்.கே சார் !
    ஸாரி ..... பழக்க தோஷம்
    ஓ.கே..........எல்.கே

    ReplyDelete
  20. மிக அழகாக இருந்தது சார். கவிதை அலெர்ஜி உள்ள என்னால் கூட மிகவும் ரசிக்க முடிந்தது!

    ReplyDelete
  21. //bandhu said...
    மிக அழகாக இருந்தது சார். கவிதை அலெர்ஜி உள்ள என்னால் கூட மிகவும் ரசிக்க முடிந்தது!//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நானும் உங்களைப்போல்வே தான். இது கவிதை தானா என்று எனக்கும் தெரியாது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவம். ஏதோ நடந்த சம்பவத்தைப் பதிவு செய்தேன். பலரும் ரஸித்துப் பாராட்டுவதால் மகிழ்கிறேன். அவ்வளவு தான். மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  22. sonnathai sollumam!!தலைப்பு அருமை !!!கவிதை புத்தகமும் வெளி இடலாமே

    ReplyDelete
  23. உன் புதிய வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி, திருமதி கிரிஜா ஸ்ரீதர்.

    அடுத்தடுத்து மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டு, இப்போது தான் கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைக்கிறது.

    முதலில் ஒரு நூறு கவிதைகளாவது எழுதி முடிப்போம். பிறகு கவிதைத் தொகுப்பு வெளியிடுவதைப் பற்றி சிந்திப்போம்.

    ReplyDelete
  24. கொலு பொம்மைகளைத்
    தொடாமல் பார்க்கணும்/

    கிள்ளையின் கிளிப்பேச்சு திரும்பத்திரும்ப ரசிக்கவைத்தது..

    ReplyDelete
  25. கொலு பொம்மைகளைத்
    தொடாமல் பார்க்கணும்/

    கிள்ளையின் கிளிப்பேச்சு திரும்பத்திரும்ப ரசிக்கவைத்தது..

    ReplyDelete
  26. இராஜராஜேஸ்வரி said...
    கொலு பொம்மைகளைத்
    தொடாமல் பார்க்கணும்/

    கிள்ளையின் கிளிப்பேச்சு திரும்பத்திரும்ப ரசிக்கவைத்தது..//

    அந்த ஆண்டாளின் தோளிலும்,
    மதுரை மீனாக்ஷி அம்பாளின் தோளிலும் இருக்கும் இரு கிளிகளே நேரில் என்னிடம் வந்து பேசியது போன்ற அழகான [கிளிபோன்ற கிளிப்பேச்சு போன்ற] இரண்டு பின்னூட்டஙகள் + 2 தாமரை மலர்கள்.

    நன்றி நன்றி ;)))))

    ReplyDelete
  27. நிஜம் ஆன கவிதை.
    மழலையின் பேச்சில் மயங்கியிருப்பார்கள் வந்தவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ammulu
      September 25, 2012 1:34 AM

      //நிஜம் ஆன கவிதை.
      மழலையின் பேச்சில் மயங்கியிருப்பார்கள் வந்தவர்கள்.//

      ஆமாம் சகோதரி, இது என் வீட்டில் நிஜமாலும் நடந்தது.

      அன்பான தங்களின் வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

      Delete
  28. குழந்தைகள் சொன்னதை கப்புனு பிடித்துக்கொள்ளும் கற்பூர அறிவுக்கொண்ட அருமையான பூச்செண்டுகள்.. தானும் தொடாமல் மற்றவர்களையும் தொடவிடாம பார்த்துக்கொண்ட சமர்த்துக்குழந்தை...

    இப்படில்லவா இருக்கணும்...

    ரசித்து எழுதிய வரிகள் அற்புதம் அண்ணா...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

    ReplyDelete
    Replies
    1. மஞ்சுபாஷிணி December 4, 2012 10:19 PM
      //குழந்தைகள் சொன்னதை கப்புனு பிடித்துக்கொள்ளும் கற்பூர அறிவுக்கொண்ட அருமையான பூச்செண்டுகள்.. தானும் தொடாமல் மற்றவர்களையும் தொடவிடாம பார்த்துக்கொண்ட சமர்த்துக்குழந்தை...

      இப்படில்லவா இருக்கணும்...

      ரசித்து எழுதிய வரிகள் அற்புதம் அண்ணா...

      அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...//

      வாங்கோ மஞ்சு. வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பூச்செண்டு போன்ற மணமுள்ள கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மஞ்சு.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  29. குழந்தைகளின் லாஜிக் மிகவும் எளிமையானது. உலக விவகாரங்களில் உள்ள சூது வாதுகளைத் தெரியாத வயது.இது ஒரு அழகுதான்.

    ReplyDelete
  30. குட்டிக்கரடி பொம்மையை மடியில் போட்டுக் கொண்டு அவளை நாங்கள் என்னவெல்லாம் சொல்கிறோமோ அத்தனையும் கரடியிடம் சொல்கிறாள்.

    உங்கள் ரசனையான எழுத்துக்கு ஒரு பாராட்டு.

    ReplyDelete
  31. குழந்தைகளின் கிளிப்பேச்சு அதுதான் மொழிப் பேச்சு!!!

    ReplyDelete
  32. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே நாம தான் நல்ல விதமா சொல்லிக்கொடுக்கணும்

    ReplyDelete
  33. குறும்புகள் ஊறும்குழந்தைப் பருவத்தில் சொல்பேச்சு கேட்பது அரிது. ஆனால் தங்கள் பேத்தியோ சொன்ன சொல்லை தானும் ஏற்றுக்கொண்டு மற்றவர்களையும் வழிநடத்தும் பாங்கு பாராட்டுக்குரியது. குழந்தைக்கு அன்பும் ஆசிகளும்.

    ReplyDelete
  34. கொளந்தகளுக்கு பெரியவங்கதான் நல்ல விசயங்க சொல்லி கொடுக்கோணம்

    ReplyDelete

  35. நல்லவைகளைச் சொல்லிக் கொடுத்தாலும்
    அது அல்லாதவைகளைச் சொல்லிக் கொடுத்தாலும்
    குழந்தைகள் மனதில் அது விதை போலத்தான்
    செயல்படும்
    மிகச் சிறிய பதிவாயினும்
    மிகப் பெரிய விஷயத்தைச் சொல்லிப் போகும் பதிவு

    ReplyDelete
  36. கொலு பொம்மையைத் தொடாம பார்க்கணும்ஃ சொன்னத சொல்லுமாம் கிளிப்பிள்ளை.

    ReplyDelete
  37. குழந்தைகளிடம் சொல்வது க்ம்ப்யூட்டர் 'ஹார்ட்' டிஸ்க்ல ஏத்துற மாதிரி...கரெக்டா பதிவு பண்ணிக்கும்...

    ReplyDelete
  38. அழுக்கற்ற மனம்! அப்படியே ஏற்பது குழந்தைகளின் குணம்!

    ReplyDelete
  39. நீங்க நல்லா கற்பனை வளமுள்ள எழுத்தாளராக இருப்பதால் வீட்டில் நடக்கும் சின்ன விஷயங்களைக்கூட உன்னிப்பாக கவனித்து ரசிக்கும்படி பதிவாகவும் போடுறீங்க. இல்ல இப்படி சொல்லலாமா கண்ணையும் கருத்தையும் எப்பவும் ஷார்ப்பா வச்சுக்கறதால தான் இப்படிலாம் சிறப்பாக எழுத வருது. எப்படியோ படிப்புல ஆர்வம் உள்ளவங்களுக்கு நல்ல (தீனி) விஷயங்கள் கிடைக்குது. குழந்தைகள் என்றுமே வேறு கோணத்தில்தான் யோசிக்கிறார்கள். நாமதான் நல்ல விஷயங்கள கத்துக் கொடுக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... January 16, 2016 at 1:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நீங்க நல்லா கற்பனை வளமுள்ள எழுத்தாளராக இருப்பதால் வீட்டில் நடக்கும் சின்ன விஷயங்களைக்கூட உன்னிப்பாக கவனித்து ரசிக்கும்படி பதிவாகவும் போடுறீங்க. இல்ல இப்படி சொல்லலாமா கண்ணையும் கருத்தையும் எப்பவும் ஷார்ப்பா வச்சுக்கறதால தான் இப்படிலாம் சிறப்பாக எழுத வருது.//

      :) தாங்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். மிக்க மகிழ்ச்சியே.

      சின்னக்குழந்தைகளின் ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு செயலிலும் நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. நான் இவற்றையெல்லாம் உன்னிப்பாக கவனித்து ரஸிப்பது உண்டுதான்.

      இப்போது சமீபத்தில் ஐந்து ஆண்டுகளுக்குள் பிறந்துள்ள என் இரண்டு பேரன்களிடம் தினமும் பலவற்றை நான் கண்டு/கற்று வியந்து மகிழ்ந்து போகிறேன்.

      மழலைகள் பற்றியே மேலும் நூற்றுக்கணக்கான பதிவுகள் தர சரக்குகள் என்னிடம்
      சே ர் ந் து போய் விட்டன. நான்தான் மிகவும்
      சோ ர் ந் து போய் உள்ளேன். :)

      //எப்படியோ படிப்புல ஆர்வம் உள்ளவங்களுக்கு நல்ல (தீனி) விஷயங்கள் கிடைக்குது.//

      அதுபோதும். அதுதானே என் எதிர்பார்ப்பும்கூட. :)

      //குழந்தைகள் என்றுமே வேறு கோணத்தில்தான் யோசிக்கிறார்கள். நாமதான் நல்ல விஷயங்கள கத்துக் கொடுக்கணும்.//

      மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

      தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK

      Delete