என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா? [இறுதிப் பகுதி 8]

பாத் ரூமில் சோப்புப் போட்டுக் குளித்துக்கொண்டிருந்த பஞ்சாமி, சோப்பு நுரை வாயில் சற்று பட்டு விட்டதால், துப்பி விட்டு, தன் பல் செட்டைக் கழட்டி, பல்லையும் துலக்கி விடலாம் என அவசரமாக கழட்டும் போது, அதில் ஒன்று கை நழுவி கீழே விழுந்து இரண்டாக உடைந்து போனது. அது மட்டுமா ! அந்தப் பதட்ட வேளையில் மற்றொன்று கழிவறைப் பாதையில் சோப்பு நுரையுடன் வழுக்கிச் சென்று மறைந்தே போனது. பஞ்சாமி நொந்து நூலாகிப் போனார்.

பல் டாக்டரை நோக்கிய பஞ்சாமியின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. ஏற்கனவே பல் விஷயமாக பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து விட்ட பஞ்சாமியிடம், டாக்டர் ஆறுதலாகக் கூறியது:

“நவீன பல் சிகிச்சை முறையில், தனித்தனியாக பற்களை எகுறுக் குழிகளில் பதித்து ஸ்க்ரூ செய்துவிடும் மேல் நாட்டு முறை புதியதாக வந்திருப்பதாகவும், அவ்வாறுசெய்து கொண்டு விட்டால், தற்போது ஏற்பட்டது போன்ற விபத்து ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்றும், பணம் தான் ஒரு அரை லட்சம் மட்டும் செலவாகும்” என்றார்.

இதைக்கேட்டதும் தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.

முற்றும்

பின் குறிப்பு:

பஞ்சாமி மயங்கி மூர்ச்சையாய் விழுந்த அதே நாள் இரவு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து டீ.வி. சேனல்களிலும் கீழ்க்கண்ட ஒரு பரபரப்புச் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது:
”சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்தவரும், பல்லவராயன் என்ற பெயரில் பல்லாண்டுகளாக பல் டாக்டர் ஆக பணியாற்றி வருபவருமான ஒருவர், போலி டாக்டர் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாலும், அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், அவர் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளதாலும், பல்லவன் பஸ்ஸில், பல்பொருள் அங்காடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பயணம் செய்யும் போது, போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.”

நம் பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்தவர் இதே பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயன் தான் என்று நான் சொல்லவும் வேண்டுமா என்ன? நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் தானே !

-ooooooo-
மீண்டும் சந்திப்போம்.
அதுவரைத் தங்களிடமிருந்து
அன்புடன் விடைபெறும்,
வை.கோபாலகிருஷ்ணன்

21 கருத்துகள்:

 1. பஞ்சாமியின் இத்தனை பிரச்சனைக்கும் ஒரு போலி பல் டாக்டர் தான் காரணமா? பாவம் அவர்... பேசாம பல் இல்லாமலே இருந்திருக்கலாம்.

  நகைச்சுவை ததும்ப ஒரு தொடர்கதை எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. இந்த கதை நகைச்சுவை ததும்பும் படியும், போலி டாக்டர்களிடமிருந்து உஷாராக இருக்கும் படியும் இருந்தது. ”பாவம் பஞ்சாமி”.

  பதிலளிநீக்கு
 3. வெங்கட் அவர்களே!
  கோவை2தில்லி அவர்களே!

  தொடர்கதையை முழுவதுமாகப் படித்து ரஸித்து அவ்வப்போதும், முடிவிலும் கருத்துக்கள் கூறி உற்சாகப்படுத்தியதற்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. மதுரை சரவணன் said...
  //சூப்பர்..... வாழ்த்துக்கள்
  February 21, 2011 10:58 AM//

  நன்றி...நண்பரே !

  பதிலளிநீக்கு
 5. தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.

  சுண்டைக்காய் கால் பணம் ..
  சுமைக்கூலி முக்கால் பணம் என்பது போல் பல்லால் பல்வேறு பல்ஸ் பிரச்சினை !

  பதிலளிநீக்கு
 6. பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்த பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயனின் பல்லைத்தட்டி பல்லாவரம் காராக்கிருஹத்தில்
  பல்லாண்டு பலமாய் கவனிக்கப்படட்டும்

  பதிலளிநீக்கு
 7. இராஜராஜேஸ்வரி said...
  தன் ’பல்’ஸ் பிரச்சனை இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் ’பல்ஸ்’ வீக்காகி பஞ்சாமி மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார்.

  சுண்டைக்காய் கால் பணம் ..
  சுமைக்கூலி முக்கால் பணம் என்பது போல் பல்லால் பல்வேறு பல்ஸ் பிரச்சினை !//

  சுண்டைக்காய்+சுமைகூலி என்று கூலாக குளுமையாக நாகரீகமாக பழமொழி சொல்வது மிகவும் பிடித்துள்ளது. பல்லில் ஐஸ்க்ரீம் பட்டது போல ஜில்லிட்டது.

  நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 8. இராஜராஜேஸ்வரி said...
  பஞ்சாமிக்கு பல் வைத்தியம் செய்த பல்லாவரத்தைச் சேர்ந்த பல் டாக்டர் பல்லவராயனின் பல்லைத்தட்டி பல்லாவரம் காராக்கிருஹத்தில்
  பல்லாண்டு பலமாய் கவனிக்கப்படட்டும்//

  நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள், கனம் நீதிபதி அவர்களே!

  அனைத்துப்பகுதிகளுக்கும் அன்புடன் வருகை தந்து, அழகான கருத்துக்கள் கூறி பதிவினை சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  அன்புடன்,
  vgk
  [பாதிக்கப்பட்ட
  பஞ்சாமிக்காக]

  பதிலளிநீக்கு
 9. பஞ்சாமி பல்லால் பட்டபாடு பெரும்பாடு. மிகவும் அருமையான நகைச்சுவைத்தொடராகவும்,விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்தது அண்ணா.நன்றிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ammulu September 25, 2012 2:03 AM
   //பஞ்சாமி பல்லால் பட்டபாடு பெரும்பாடு. மிகவும் அருமையான நகைச்சுவைத்தொடராகவும்,விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்தது அண்ணா. நன்றிகள்//

   அன்புச்சகோதரி, தாங்கள் யாரோ என்னவோ எனக்குத் தெரியவில்லை. தங்களின் வலைத்தளத்தின் மூலமும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

   இருப்பினும் தாங்கள் என்னுடைய முதல் பதிவிலிருந்து ஒவ்வொன்றாக இன்று படிக்க ஆரம்பித்து, வரிசையாக தங்களின் கருத்துக்களை பின்னூட்டமாக அளித்து வருகிறீர்கள். ;)))))

   எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகம் அளிப்பதாகவும் உள்ளது.

   நகைச்சுவை விரும்பியாக உள்ள உங்களுக்கு என் தளத்தில் நிறைய இது போன்ற விருந்துகள் காத்துள்ளன.

   இது போல பல பகுதிகளாக இல்லாமல் மிகச்சிறிய குட்டியூண்டு கதைகளும் உள்ளன.

   அவைகளிலும் தங்களுக்கு, குபீரென்ற சிரிப்போ அல்லது புன்னகையோ வரும் என்பதில் ஐயமில்லை.

   ஒவ்வொன்றாக பொறுமையாகப் படித்து அவ்வப்போது கருத்துக்களைக்கூறி வாருங்கள். நானும் தங்களுக்கு ஒவ்வொரு பின்னூட்டத்திற்கு பதில் அளிப்பேன். சில சமயங்களில் [மின் தடை போன்றவற்றால்] என் பதில் கிடைக்க சற்றே தாமதமாகும்.

   நகைச்சுவை விரும்பியான தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன்,
   VGK

   valambal@gmail.com

   நீக்கு
 10. வயதான ஒவ்வொருவரும் அனுபவிக்கும் அல்லது அனுபவிக்கப்போகும் துன்பங்களை தத்ரூபமாக விளக்கி விட்டீர்கள். இது சும்மா ஒரு சேம்பிள்தான். நிஜத்தில் நாம் அனுபவிக்கப் போகிறது எவ்வளவு என்று நம்மால் சொல்ல முடியாது.

  பதிலளிநீக்கு
 11. பல்லவராயான் வில்லவராயானராகிவிட்டாரே! பஞ்சாமியை பஞ்சமாக்கிவிட்டாரே இப்படி!

  பதிலளிநீக்கு
 12. அட பாவமே போயும் போயும் அந்த பல்லவராயன் கிட்டயா மாட்டிண்டார நம் பஞ்சாமி. டி.வி. செய்தி நச்........

  பதிலளிநீக்கு
 13. வயசாளிங்க சோப்பு போடும்போ கவனமா இருந்துகிடணும்ல. ரூவாக்கு ரூவாவும் செலவாச்சுது. பல்லு ப்ராபளமும் சரிஆகல இன்னா கெரகம்.

  பதிலளிநீக்கு
 14. யூகித்தது சரியாகப் போனாலும்
  பாவம் பஞ்சாமி எனத் தான் பட்டது
  பல் செட் செட்டாகி சுபமாக முடியும்
  என் நினைத்திருந்தேன்

  இறுதி எச்சரிக்கைதான்
  கதையின் உயிர்
  எத்தனைபேர் புரிந்து கொண்டிருப்பார்கள் ?

  பதிலளிநீக்கு
 15. அட பாவமே ஆக பஞ்சாமியின் பல் பிரச்சினை ஒரு தொடர்கதை ஆயிட்டுதா?? போலி பல்லவராயன்கிட்ட மாட்டிக்காம ஒரு நல்ல பல் டாகடரை ரெகமண்ட் பண்ணுங்க சார்..

  பதிலளிநீக்கு
 16. ஸ்ட்ராங் டீத் ஆண்டவன் கொடுக்கும் வரம்...அழகுக்கு ஆசைப்பட்டு...உள்ளதும் போச்சே...ஸ்மெல்ல சரி பண்ண நெனச்சவருக்கு போலிய ஸ்மெல் பண்ண தெரியாம போனது பரிதாபம்தான்...

  பதிலளிநீக்கு
 17. //சென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்தவரும், பல்லவராயன் என்ற பெயரில் பல்லாண்டுகளாக பல் டாக்டர் ஆக பணியாற்றி வருபவருமான ஒருவர், போலி டாக்டர் என்ற சந்தேகம் வலுத்துள்ளதாலும், அதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாலும், அவர் மேல் நிறைய புகார்கள் வந்துள்ளதாலும், பல்லவன் பஸ்ஸில், பல்பொருள் அங்காடிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே பயணம் செய்யும் போது, போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, இன்று கைது செய்யப்பட்டார்.”//
  போறாத நேரம்!

  பதிலளிநீக்கு
 18. ஆஹா கதை இப்படி போயி முடியதா. இன்னும் அரை லட்சம்தான் செலவாகுமா சூப்பர் இதைக்கேட்ட பஞ்சாமி மட்டுமா மயங்கி வழுந்தார். படிக்கிற எல்லாருக்குமே மயக்கம் வந்திருக்குமே. கடைசில போலி பல்லவராயன் கிட்டயா மாட்டிகிட்டார். அவருக்கு நேரம் சரியில்ல போல. பல்லாவரத்தை சேர்ந்த பல்லவராயன் பல்லவன் பேரூந்தில் கைது . இதுலயே எவ்வளவு பல்ஸு.:)))). பல் க்ளின் பண்ண இனி யாராச்சும் நினைப்பாங்களா??????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... January 18, 2016 at 5:42 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆஹா கதை இப்படி போயி முடியதா. இன்னும் அரை லட்சம்தான் செலவாகுமா சூப்பர் இதைக்கேட்ட பஞ்சாமி மட்டுமா மயங்கி வழுந்தார். படிக்கிற எல்லாருக்குமே மயக்கம் வந்திருக்குமே. கடைசில போலி பல்லவராயன் கிட்டயா மாட்டிகிட்டார். அவருக்கு நேரம் சரியில்ல போல. பல்லாவரத்தை சேர்ந்த பல்லவராயன் பல்லவன் பேரூந்தில் கைது . இதுலயே எவ்வளவு பல்ஸு.:)))). பல் க்ளின் பண்ண இனி யாராச்சும் நினைப்பாங்களா??????//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! கதையை நன்கு ரஸித்துப் படித்து பின்னூட்டங்கள் தந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தினசரி வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு