About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 23, 2011

சுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 2 of 3]



முன்பகுதி முடிந்த இடம்:

கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம்.  பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.

=============================

தொடர்ச்சி........................பகுதி-2

நான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக்கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.  

முழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே உள்ள ஒரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு.  வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!

எங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம்.  அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள்.

வாங்க ஸார்! என்ன வேணும்” நுழைவாயிலில் மட்டும் நின்ற ஒரே ஒரு ஆண் மகனின் கேள்வி.

“சுடிதார் வேண்டும்”   நான்.

”நேரே உள்ளே போய் இடது பக்கம் திரும்புங்கள்”

நேரே உள்ளே போனேன்.  இடது பக்கம் திரும்பினேன்.  திரும்பிய இடமெல்லாம் ஒரே சுடிதார் மயம்.  ஆயிரக்கணக்கான சுடிதார்கள். எங்களை வாங்குபவர் வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.

எதைப் பார்ப்பது, எதை வாங்குவது, ஓராயிரம் குழப்பங்கள் எனக்கு. ஒரு சில விற்பனைப் பெண்கள் என்னை நெருங்கினர்.  

யாருக்கு சுடிதார்? ....  எவ்வளவு வயது? ..... உயரமா?  குள்ளமா? நிதானமா?  ...... குண்டா இருப்பங்களா?, ஒல்லியா இருப்பாங்களா? மீடியமா இருப்பாங்களா? ....... ஃபுல் ஸ்லீவ்ஸா, முக்கால் சைஸா? ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள்? வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து, என்னை பிரமிக்கச் செய்தனர்.  முன்னப்பின்னே நான் சுடிதார் வாங்கியிருந்தால் தானே, எனக்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்ற விபரம் புரியும்!

தொங்க விட்டுள்ளவற்றில் ஒரு சிலவற்றை சற்றே இழுத்துப் பார்த்தேன். தடவிப் பார்த்தேன்.  யாரோ ஒரு வயதுப்பெண்ணைத் தொட்டுவிட்டது போல எனக்கு மிகவும் கூச்சமாக வேறு இருந்தது.  

இவ்வாறு ஒருவித சங்கடத்துடன் இருந்த என்னை நெருங்கிய அந்தப்பெண் விற்பனை யாளர் “இங்குள்ளதெல்லாம் விலை நானூறு முதல் எழுநூறு வரை, சார்” என்றாள். எதுவும் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும், ஸ்பெஷலாகவும் தெரியவில்லை எனக்கு. 

“இவைகளை விட விலை அதிகமாக ஏதும் உள்ளனவா?” இக்கட்டான சூழலிலிருந்து விலக எண்ணி கேள்வி எழுப்பினேன்.  விலை ஜாஸ்தியான சுடிதார்கள் அடுக்கப்பட்டுள்ள பிரிவுக்கு என்னைப் பிரியாவிடை கொடுத்தனுப்பினர்.  

ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.

இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன. 

அவையாவும் பளபளப்பான கண்ணாடிக்கவர்களில் அடுக்கி மடித்து அழகிய டிசைன்கள் மற்றும் கலர்களில் வைக்கப்பட்டிருந்தன.  அங்கிருந்த இளம் விற்பனைப் பெண்களின் அடுக்கடுக்கான வழக்கமான கேள்விகள் ஆரம்பமாகி விட்டன.

ஏதோ ஒரு சுடிதாரை கையில் எடுத்துப் பார்த்தேன். விலை ஆயிரத்து நானூறு என்று போடப்பட்டிருந்தது.

எவ்வளவு வயது பெண்ணுக்கு சுடிதார் பார்க்கிறீர்கள்?” என்றாள் ஒருத்தி. 

“22 வயது” என்றேன்.

”நல்ல உயரமானவங்களா சார் ?” என்றாள்.

“ஓரளவு உயரம் தான்;  உங்கள் உயரம் இருக்கும்” என்றேன்.

“எல்லாமே ஃப்ரீ சைஸ் தான்;  யாரு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்” என்றாள்.

“நல்ல கலரா இருப்பாங்களா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் 

“சிவப்பாக நல்ல கலராகவே இருப்பாள்” என்றேன்.

உயரம், உடல்வாகு, வயது முதலியன சொல்லிவிட அவ்விடம் மாதிரிக்கு விற்பனைப் பெண்கள் பலர் இருந்தனர்.  நிறத்தையோ அழகையோ வர்ணிக்கவும், ஒப்பிடவும் அங்கு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

அது போல நல்ல நிறமாகவும், ஓரளவு நல்ல அழகாகவும் இருந்தால் அவர்கள் அவ்விடம் விற்பனையாளராகவே இன்னும் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன!  அல்லது அதுபோன்றவர்களை நிம்மதியாக வேலை செய்யத்தான் நம்ம ஆட்கள் விட்டு விடுவார்களா என்ன!  என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

ஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ;  என்றும் நினைத்துக்கொண்டேன்.  

நூற்றுக்கணக்கான சுடிதார்கள், பல வண்ணங்களில். பல டிசைன்களில் காட்டியும் எனக்கு முழுத் திருப்தியாகவில்லை.  நான் விரும்பும் கலர் மற்றும் நான் எதிர்பார்க்கும் டிசைன், என் டேஸ்ட் முதலியவை பிரத்யேகமானது.   மிகவும் வித்யாசமான ரஸனை உள்ளவன் அல்லவோ நான்.

“2000 ரூபாய்க்கு மேல், நல்ல அருமையான கரும் பச்சைக்கலரில், நல்ல வேலைப்பாடுகளுடன் இருந்தால் காட்டுங்களேன்” என்றேன் முடிவாக. .

பட்டு ரோஜாக் கலரில் ஒன்று காட்டப்பட்டது.  கையில் வாங்கித் தொட்டுப் பார்த்த எனக்கு ஓரளவு மனதுக்குப் பிடித்த டிசைனாக இருப்பினும், வரப் போகிற மருமகளுக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுப்பது, சிவப்பு (டேஞ்சர்) நிறமாக இருக்க வேண்டுமா என்ற சிறிய குழப்பம் என்னுள் ஓடியது. 

“அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்” போட்டுப் பார்த்தால் சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு” என்றாள். 

ஏற்கனவே நான் தொட்டுப் பார்த்த லைட் சந்தனக்கலர் சுடிதாருக்கும் இதே போலத் தான் சொன்னாள், இவள்.   அவளுக்கென்ன! ஏதோ ஒன்றை விற்பனை செய்து, பில் போட்டு பணம் கட்ட என்னை அனுப்பி வைக்கணும் சீக்கிரமாக.

டேபிள் டாப் மீது வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடிதார்களை, கிளி ஜோஸ்யம் பார்ப்பவரிடம் இருக்கும் கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து நகர்த்துவது போல நகர்த்திக்கொண்டிருந்தேனே தவிர, எதிலும் மனம் லயிக்காமல், அங்கிருந்த ராக்குகளில் அடுக்கப்பட்டிருந்த பல சுடிதார்களையும் வரிசையாக நோட்டமிடலானேன்.  

திடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.

நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்;  வெல்வெட் போன்ற நல்ல பளபளப்பும் வழுவழுப்பும். முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்;  தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.

இருந்தும் எனக்கொரு பெரிய குறை.  இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது! என்ற வருத்தம் ஏற்பட்டது.   



தொடரும் 





[ இந்தக்கதையின் இறுதிப்பகுதி 27-04-2011 புதன்கிழமை வெளியிடப்படும் ]




43 comments:

  1. என்ன திருப்பம் இருக்கும் என
    சுத்தமாக அனுமானிக்க இயலவில்லை
    மண்டை குழம்பியதுதான் மிச்சம்
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  2. தனியா ஸ்லீவ்ஸ் கூடவே பின் பண்ணி இருக்குமே. வேணுமுன்னா அதை உடனே வச்சுத் தைச்சுக் கொடுப்பாங்க.

    ReplyDelete
  3. "ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.

    இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன."

    நகைச்சுவை இழையோட ஒப்பிடுதல் அருமை!!

    ReplyDelete
  4. //அது போல நல்ல நிறமாகவும், ஓரளவு நல்ல அழகாகவும் இருந்தால் அவர்கள் அவ்விடம் விற்பனையாளராகவே இன்னும் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன! அல்லது அதுபோன்றவர்களை நிம்மதியாக வேலை செய்யத்தான் நம்ம ஆட்கள் விட்டு விடுவார்களா என்ன! என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.//

    இதுபோன்ற வரிகளைத் தவிர்த்துவிடுங்களேன் கோபு சார். படிக்கும் சிலருக்கு வேதனையளிக்கலாம்.

    //தனியா ஸ்லீவ்ஸ் கூடவே பின் பண்ணி இருக்குமே. வேணுமுன்னா அதை உடனே வச்சுத் தைச்சுக் கொடுப்பாங்க.//

    கூட இதுக்குத்தான் அனுபவஸ்தங்களைக் கூட்டிக்கிட்டுப் போகணும்ங்றது.

    அடுத்த பதிவுக்குப் பந்தியில் காத்திருக்கிறோம்.சமையலாகட்டும் சீக்கிரம் கோபு சார்.

    ReplyDelete
  5. நான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்; வெல்வெட் போன்ற நல்ல பளபளப்பும் வழுவழுப்பும். முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்; தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன./
    நினைத்த கலரில் பிடித்த மாதிரி எண்ணிச் சென்றமாதிரியே சுடிதார் கையில் கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வரப் போகிற மருமகளுக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுப்பது, சிவப்பு (டேஞ்சர்) நிறமாக இருக்க வேண்டுமா என்ற சிறிய குழப்பம் என்னுள் ஓடியது. //
    சிவப்பு மங்களகரம் தானே! முகூர்த்தப்ப்ட்டு சிவப்பு நிறத்தில் எடுப்பது பழக்கம் தானே.

    ReplyDelete
  7. அட கடைசியில இப்படி ஆச்சா? உங்க கூடவே கடைக்கு வந்த மாதிரி இருக்கு.. தொடரட்டும் சுடிதார் வேட்டை...

    ReplyDelete
  8. தொடருங்க தொடருங்க.......

    ReplyDelete
  9. ஸ்லீவ்ஸும் கூடவேதான் இருக்கும். விரும்பினா, இணைச்சு தைச்சுக்கொடுப்பாங்க, ஸ்லீவ்லெஸ் விரும்பிகளுக்காக இந்த ஏற்பாட்டை செஞ்சுருக்காங்க..

    ReplyDelete
  10. கோபு சார்
    சில நாட்களாகத் தான் உங்கள் பதிவை வாசிக்கின்றேன். நகைச்சுவை இழையோட அருமையான நடை. உங்களின் சாப்பாடு பற்றிய பதிவு தான் நான் முதலில் வாசித்தது. நல்ல ரசனை உடையவர் நீங்கள். இதே மகிழ்ச்சியுடன் நீங்கள், இல்லாள் மற்றும் குடும்பத்தினருடன் என்றும் வாழ வேண்டும்.

    ReplyDelete
  11. nalla varnanaigalthaan

    unga varuththam theerumbadiyaa andha virpanai
    penn ulla pin panni irukkum sleevs pathi solli
    iruppaangale? sollalayaa?

    ReplyDelete
  12. மிகவும் சுவாரசியமாய் எழுதறீங்க கோபு சார் . உங்க மனைவி மட்டுமில்லை , மருமகளும் கொடுத்து வச்சவங்க தான்

    ReplyDelete
  13. தொடர்கிறேன்..

    ReplyDelete
  14. மிகவும் நல்ல ரசனையான எழுத்துக்கள் படிப்பவரையும் கட்டிப்போடுகிரது. அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பு

    ReplyDelete
  15. நீங்கள் சென்ற இடம் ”சாரதாஸ்” தானே சார். கரும் பச்சை ரொம்ப அழகா இருக்குமே! வாங்கினீங்களா? தெரிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. எல்லாரும் தான் ஜவுளிக்கடைக்குப் போறோம்; துணியெடுக்கிறோம். அதை இவ்வளவு கோர்வையா, சுவாரசியமாக சொல்ல உங்களை மாதிரி சிலரால் மட்டும் தான் முடியுது. ஹாட்ஸ் ஆஃப்! உங்க கிட்டே ஒரு கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் சேரலாமுன்னு உத்தேசம்! :-))

    ReplyDelete
  17. ///தொங்க விட்டுள்ளவற்றில் ஒரு சிலவற்றை சற்றே இழுத்துப் பார்த்தேன். தடவிப் பார்த்தேன். யாரோ ஒரு வயதுப்பெண்ணைத் தொட்டுவிட்டது போல எனக்கு மிகவும் கூச்சமாக வேறு இருந்தது. /// ))))

    ReplyDelete
  18. நல்ல நகைச்சுவை உணர்வோடு எழுதுகிறீர்கள், நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
  19. வை.கோ சார் உங்கள் மருமகளும் கொடுத்து வைச்சவங்க,மனமார்ந்த வாழ்த்துக்கள்.நிச்சயம் விரும்பியபடி அமைந்திருக்கும்,அடுத்த பதிவு எப்போது?

    ReplyDelete
  20. கலக்கிட்டேங்க.....

    ReplyDelete
  21. ஐயா வணக்கம் நலம் தானே உங்களின் சிறுகதை இல்லை தொடர்கதை படித்தேன் உளம் கனிந்த பாராட்டுகள் இப்படி ஒரு நல்ல குடும்ப பங்கான கதை படித்ததது இல்லை பாராட்டுகள் ... அடுத்த பகுதி எப்பவரும் அதே ஆவலாய் ....

    ReplyDelete
  22. வை.கோ சார் உங்கள் மருமகளும் கொடுத்து வைச்சவங்க,மனமார்ந்த வாழ்த்துக்கள்.நிச்சயம் விரும்பியபடி அமைந்திருக்கும்,அடுத்த பதிவு எப்போது?

    ReplyDelete
  23. சுடிதாரில் இத்தனை ரகங்களா என்ற உங்கள் பிரமிப்பு புரிகிறது...இடையே இழையோடும் நகைச்சுவையுணர்வு தனிச்சிறப்பு..

    ReplyDelete
  24. இந்தப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, தங்களின் மேலான கருத்துக்களைக்கூறி, வெகுவாகப் பாராட்டி, என்னை உற்சாகப்படுத்தியுள்ள அனைத்து உடன்பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    புதிதாக வருகை தந்துள்ளவர்களை வருக, வருக, வருக என இருகரம் கூப்பி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  25. இந்த இடுகையை உங்க மருமகள் படித்தார்களா ? சுடிதார் கொடுத்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பன்மடங்கு களிப்பைக் கொடுத்திருக்கும் இந்தப் பதிவு.
    - எல்லாவாற்றையும் ரசனையோடு எழுதும் தங்களின் பேச்சையும் ரசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.

    ReplyDelete
  26. சிவகுமாரன் said...
    //இந்த இடுகையை உங்க மருமகள் படித்தார்களா ? சுடிதார் கொடுத்த மகிழ்ச்சியைக் காட்டிலும் பன்மடங்கு களிப்பைக் கொடுத்திருக்கும் இந்தப் பதிவு.//

    பலமுறை படித்துவிட்டாள். [அவளுக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பே இந்தக்கதை பத்திரிகையில் வெளிவந்ததால் அதிலும் படித்துவிட்டாள்] இதன் முதல் பகுதிக்கு பின்னூட்டம் கூட கொடுத்திருக்கிறாள்.

    இரண்டாவது பகுதி வெளியான 23.04.2011 அன்று அவளின் முதல் பிரஸவத்திற்காக அவள் ஆஸ்பத்தரியில் சேர்க்கப்பட்டதால் அவளால் பின்னூட்டம் இட முடியவில்லை.

    மறுநாள் 24.04.2011 ஞாயிறு மதியம் 11.51 க்கு அழகிய ஆண் குழந்தை (எனக்குப் பேரன்)பிறந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை 06/05/2011 புண்யாஹாவாசனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    //எல்லாவாற்றையும் ரசனையோடு எழுதும் தங்களின் பேச்சையும் ரசிக்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது.//

    எழுத்தளவுக்கு எனக்கு மேடைப்பேச்சு வராது. மிகவும் ஆத்மார்த்தமாகப்பழகும் மிகவும் நெருக்கமான ஒருசில நண்பர்களிடம் மட்டும், ஜாலியாகவும், சரளமாகவும் பேசி அவர்களை மகிழ்விப்பதுண்டு.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  27. சிரிச்சு சிரிச்சே இமா 2ம் பகுதியும் படிச்சுட்டாங்க. ;)

    அண்ணா... ரொம்ப காலம் கழிச்சு வந்து படிக்கிறேன்ல, மேல மு.க.சுருக்கத்துக்குப் பதில் லிங்க் கொடுத்திருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனா நீங்க அப்பிடிப் போடலைன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

    ReplyDelete
  28. இமா said...
    //சிரிச்சு சிரிச்சே இமா 2ம் பகுதியும் படிச்சுட்டாங்க. ;)

    அண்ணா... ரொம்ப காலம் கழிச்சு வந்து படிக்கிறேன்ல, மேல மு.க.சுருக்கத்துக்குப் பதில் லிங்க் கொடுத்திருக்கலாமோன்னு தோணிச்சு. ஆனா நீங்க அப்பிடிப் போடலைன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும்.//

    என் இமாவின் சிரிப்பொலியை நானும் கற்பனை செய்து பார்த்தேன். மிகவும் சந்தோஷமாக இருந்தது. மிக்க நன்றி, இமா.

    இன்னும் அதில் ஒரே ஒரு பகுதி மட்டும் தானே உள்ளது. உடனே படித்து விடுங்கள். அதற்கான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    தங்களின் vgk

    ReplyDelete
  29. நேர்ல பார்த்த மாதிரி கதைய கொண்டு போறீங்க..கதையின் வரிகளில் உங்கள் பேச்சு,மூச்சு,சிந்தனை அனைத்திலும் நகைசுவை தெரிகிறது அண்ணா.

    ReplyDelete
  30. //ராதா ராணி October 5, 2012 4:27 PM
    நேர்ல பார்த்த மாதிரி கதைய கொண்டு போறீங்க..கதையின் வரிகளில் உங்கள் பேச்சு,மூச்சு,சிந்தனை அனைத்திலும் நகைசுவை தெரிகிறது அண்ணா.//

    அப்படியா தங்கச்சி. இதைக்கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  31. நாங்களும் சுடிதார் கடைக்குள் நுழைந்த மாதிரி உணர்ந்தோம்.

    ReplyDelete
  32. பொண்ணுகளே சூடி வாங்கப் போனா எதைஎடுப்பதுன்னு குழம்பி போவாங்க. பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க.

    ReplyDelete
  33. வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!//

    என்ன ஒரு கற்பனை.

    //இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன. //

    ம் ஜோரோ ஜோர்.

    அது சரி. இந்தக் கதையை வாலாம்பா மன்னியும், 3 மருமகள்களும் படிச்சாளான்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya May 18, 2015 at 12:18 PM

      **வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ!**

      //என்ன ஒரு கற்பனை.//

      :)

      **இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன.**

      //ம் ஜோரோ ஜோர்.//

      மிகவும் சந்தோஷம் ஜெயா.

      //அது சரி. இந்தக் கதையை வாலாம்பா மன்னியும், 3 மருமகள்களும் படிச்சாளான்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.//

      இந்த என் கதை நான் எழுதி அனுப்பிய 15ம் நாளே வார இதழில் வெளியாகிவிட்டது. சம்பந்தப்பட்ட மூன்றாவது மருமகளுக்கு மட்டும், அவள் திருமணத்திற்கு முன்பே, நான் போன் செய்து, ”கடைக்குப்போய் அந்த இதழை உடனே வாங்கி, இத்தனாம் பக்கத்தில் உள்ள கதையை உடனே படி” என சொல்லி விட்டேன். அவளும் அதுபோலவே செய்து, மிகவும் மகிழ்ந்து போனாள்.

      இதன் மீள் பதிவு பகுதிகள் சிலவற்றில் அவளே கமெண்ட்ஸ் கூட கொடுத்திருக்கிறாள். அதன் இணைப்புகளை பிறகு மெயில் மூலம் தெரிவிக்கிறேன்.

      என் ஆத்திலும் பிற சொந்தக்காரர்கள் பலருமாக எல்லோருமே அந்த இதழில் வெளியானதைப் படித்துள்ளார்கள். வேறு பலர் என் சிறுகதைத் தொகுப்பு நூல் மூலம் இந்தக்கதையை வாசித்துள்ளார்கள். சிலர் மட்டும் வலைத்தளத்தினில் வெளியானதைப் படித்துள்ளார்கள்.

      Delete
  34. ரயில பொட்டிகள சூடி யோட கோத்து ரகள பண்ணிபோட்டீகளே. ஸ்லீவ்லெஸ்தா இப்பத்த ஃபேஷன்.

    ReplyDelete
  35. நினைத்த கலரில் சூடி கிடைத்ததா. சிகப்பு கலர் கூட நல்லாதானே இருக்கும். ஓ.. ஸெண்டிமெண்டா. கடய நல்லா சுத்தி பார்த்து பிடித்த விதத்தில் ஸெலக்ட் செய்வது எப்படின்னு க்ளாஸ் எடுக்கலாம்

    ReplyDelete
  36. செலக்‌ஷன் யாருக்கு...வருங்கால மருமகளுக்குதானா...என்ன டுவிஸ்ட் இருக்குதோ...அயாம் வெயிட்டிங்...

    ReplyDelete
  37. //
    ஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ; என்றும் நினைத்துக்கொண்டேன். //
    குறும்பு கொப்பளிக்கும் வரிகள்! கதை அருமை!



    ReplyDelete
  38. ஜவுளிக்கடைல போனா எதை ஸெலக்ட் பண்றதுன்னே புரியாது.. வீட்லேந்து போகும் போதே இந்த கலரில் இந்த டிஸைனில் தான் வாங்கணும்னு நினைச்சிதான் போவோம் ஆனா அங்க இருக்கும் துணி வகைகளோ நம்மை ஒரு வழி பண்ணிபோடும் நாம எடுத்ததை விட இன்னோரு டிரஸ் நல்லா இருப்பது போல குழப்பமாகும் இதுல ஸ்லீவ் லெஸ் வகைகள் நம்மை குழப்பி அடிக்கும்.. நிறய பேரு டிப்ஸ் கொடுத்திருக்காங்கதான்..நாம எதிர் பார்த்து போனமாதிரியே அமைஞ்சா சந்தோஷமா இருக்கும்... இந்த கலரு டிஸைன் அந்த பெண்ணுக்கு பிடிக்கணுமேன்னு குழப்பமாயிடும் இதையெல்லாம் தாண்டி டிரஸ் ஸெலக்ட் பண்றதுல தான் நம்ம திறமையே இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரத்தா, ஸபுரி... July 12, 2016 at 9:01 AM

      //ஜவுளிக்கடைல போனா ............................. நம்ம திறமையே இருக்கு//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      Delete
  39. மேற்படி என் சிறுகதையினை மிகவும் பாராட்டி, ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவரும் எனது ஆருயிர் நண்பருமான திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் ஓர் தனிப்பதிவு எழுதி இன்று ’ஸ்ரீராமநவமி’ புண்ணிய தினத்தில் (25.03.2018) வெளியிட்டுள்ளார்கள்.

    அதற்கான இணைப்பு:
    https://tthamizhelango.blogspot.com/2018/03/vgk-03.html

    இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு
    珞

    ReplyDelete