About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, May 10, 2011

திருமண மலைகளும் ....... மாலைகளும் !


"நித்யா, நாம் வழக்கமாக சந்திக்கும் பார்க்குக்கு இன்று ஈவினிங் வழக்கமான நேரத்திற்கு வந்துடு.   

நம்ம கல்யாணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால்,  நாம் நிறைய வேலைகள் பார்க்க வேண்டி இருக்கும்.

கல்யாணத்திற்கு முன்பு, இதுவே நமது கடைசி சந்திப்பாக வைத்துக் கொள்வோம். 

இருவருக்கும் கல்யாணம் என்று முடிவான பிறகு, பார்க் பீச் என்று தனிமையில் நாம் சந்திப்பது தேவையில்லாதது மட்டுமல்ல, யார் கண்ணிலாவது பட்டால், அவர்கள் வம்பு பேசவும் இடமளித்து விடும்” என்றான் செல்போனில் பேசிய ரமேஷ்.  

ரமேஷின் பேச்சு நித்யாவுக்கு நியாயமாகப் பட்டதால் ”மாலையில் கட்டாயம் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்போம்” என்றாள்.

அவரவர்கள் வீட்டில் வெவ்வேறு டிசைனில் தனித்தனியே பிரிண்ட் செய்திருந்த திருமண அழைப்பிதழ்களை பரஸ்பரம் ஒருவொருக் கொருவர் கொடுத்துக் கொண்டனர், வாழ்த்திக் கொண்டனர்.
....................
....................
....................
....................
....................
....................

நேரில் கலந்து கொள்ள இயலாமைக்கு இருவருமே ஒருவருக்கொருவர் வருத்தமும் தெரிவித்துக் கொண்டனர்.

....................
....................
....................
....................             
....................
                                                

அவர்களும் தான் என்ன செய்வார்கள் .... பாவம் !   

நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில்,  அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.


-o-o-o-o-o-o-o-

47 comments:

  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ....

    ReplyDelete
  2. ஆஹா..... கடைசியில் ஒருத்தர் ஒருத்தர் கிட்ட இருந்து தப்பிச்சிட்டாங்களா???? :-))))))

    ReplyDelete
  3. சீரியஸ் பதிவு எழுதுறீங்கன்னு பார்த்தா இப்பிடி கவுத்துட்டீங்களே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  4. இப்போ காத‌லும், க‌ல்யாணமும் கூட‌, அரசிய‌ல் கூட்டணி மாதிரி ஆயிடுத்து!
    ச‌ரிதானா வைகோ சார்? நான் உங்க‌ளைத் தான் mean ப‌ண்ணேன். தவ‌றுத‌லா அவ‌ரோன்னு நினைச்சுடாதிங்கோ.

    ReplyDelete
  5. இப்ப உள்ள காலத்துக்கு பொருத்தமான குட்டிக்கதை,,

    ReplyDelete
  6. அய்யா ... உண்மைக்கதை அல்லது உண்மை சம்பவம் என சப் டைட்டில் கொடுத்திருக்கலாம்.. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஹஹாஹா காதல் தோல்வியாள பையன் சோகத்தில தாடிவளர்த்துக்கொண்டும் பொண்ணு வாழ்க்கையே வெறுத்தது போலவும் இருக்காமல், இந்த முடிவு நல்லது தான்.

    ReplyDelete
  8. வாழ்க்கையின் எதார்த்தத்தை எதிர்பாராத திருப்பத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்
    நல்ல பதிவு ஐயா

    ReplyDelete
  9. அருமை அருமை
    சுருக்கமாகச் சொல்லப்பட்ட
    இன்றைய யதார்த்தம்
    தொடர வாழ்த்துக்கள்
    (தங்கள் படைப்பைச் சொல்கிறேன்)

    ReplyDelete
  10. நித்யாவுக்கு கோவிந்தா
    ரமேஷுக்கு அரோகரா

    ReplyDelete
  11. ரொம்ப நல்ல இருக்கு ஐயா ...

    ReplyDelete
  12. ஹஹ்ஹா நல்லா சிரிக்க வெச்சீங்க

    ReplyDelete
  13. இந்த ஜோக் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும்
    மீண்டும் ரசித்தேன்.

    ReplyDelete
  14. ஹைய்யோ...ஹைய்யோ...

    ReplyDelete
  15. இந்தக் கதையை 2011ல் இருப்பதால் யூகிக்க முடிந்தது. ஆனாலும் நீங்களும் இப்படி யோசித்தது எனக்குப் பிடித்திருந்தது கோபு சார்.

    ReplyDelete
  16. நல்லா இருக்கு சார் இது! மாறுதலாய் ஒரு சிந்தனை.

    ReplyDelete
  17. நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில், அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.///

    அய்யய்யோ நான் என்னமோ நினைச்சு ஏமாந்துட்டனே!!

    ReplyDelete
  18. எதிபார்க்காத முடிவு... இக்காலத்துக்கேற்ற முடிவு தான்.. அசத்தலான கதை..

    ReplyDelete
  19. கேள்விப்பட்ட ஜோக்கையே, கதையாக மாற்றி, ஒரு சிறு பதிவாகவும் வெளியிட்டது, உங்கள்க்ரியேட்டிவ் அணுகலைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள். இந்த பதிவை தமிழ்மணம் மூலம் படித்தேன்

    ReplyDelete
  20. இந்தக்குட்டியூண்டு சிறுகதையையும் பெரிதாக நினைத்து, மிகப்பெரிய வரவேற்வு அளித்து, வருகை தந்து சிறப்பித்து, தங்கள் மேலான கருத்துக்களைக் கூறி பின்னூடம் அளித்து, பாராட்டுக்கள் தெரிவித்து, என்னை உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு உடன்பிறப்புக்கள் அனைவருக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    இன்ட்லியிலும் தமிழ்மணத்திலும் வோட்டு அளித்துள்ள அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள் vgk

    ReplyDelete
  21. அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல இதுல்லாம் சகஜமப்பா!

    ReplyDelete
  22. அடடா.. இப்படி ஏமாத்திபிட்டீங்களே..ம்ம்

    ReplyDelete
  23. திரு மோகன்ஜி சார் &
    திரு ரிஷபன் சார்,

    இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  24. மோகன்ஜி said...
    //அப்படிபோடுங்க வை.கோ சார்! காதல்ல இதுல்லாம் சகஜமப்பா!//

    அப்படியா! அனுபவிச்சு சொல்வது போல உள்ளது.OK

    ReplyDelete
  25. சத்தியமா எதிர்பார்க்கலை சார்.

    ReplyDelete
  26. கோவை2தில்லி said...
    //சத்தியமா எதிர்பார்க்கலை சார்.//

    நன்றி மேடம்.
    விருந்தினர் வருகையால் மிகவும் பிஸியாகிவிட்ட தாங்கள் வருகை தந்து பின்னூட்டம் தருவீர்கள் என்று நானும் ‘சத்தியமா எதிர்பார்க்கலை’ மேடம்.

    ReplyDelete
  27. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.

    அதுபோலவே, உங்களது கதை மிகச்சிறிதாக இருந்தாலும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.

    ReplyDelete
  28. அய்யா உங்களுடைய கதை சிறியது .ஆனால் அதி உள்ள கருத்து பெரியது ... மிகவும் அற்புதம் ...
    சுவாரசியமானது இந்த கதை நன்றி அய்யா.

    ReplyDelete
  29. nunmadhi said...
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள்.

    அதுபோலவே, உங்களது கதை மிகச்சிறிதாக இருந்தாலும் ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.//

    அன்புள்ள கெளரி லக்ஷ்மி,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    அன்புடன் vgk

    ReplyDelete
  30. VijiParthiban said...
    அய்யா உங்களுடைய கதை சிறியது .ஆனால் அதி உள்ள கருத்து பெரியது ... மிகவும் அற்புதம் ...
    சுவாரசியமானது இந்த கதை நன்றி அய்யா.//

    தங்கள் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  31. நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில்,

    அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.

    தற்போதைய நிதர்சன நித்யாக்கள் !!???

    ReplyDelete
  32. "திருமண மலைகளும் ....... மாலைகளும் !"

    திருப்பதி மலை
    ஸ்வாமி மலை என்று மலகளும் வேறு !

    கல்யாணமாலைகளும் வேறு !

    அழகான தலைப்பு !

    ReplyDelete
  33. இராஜராஜேஸ்வரி said...
    நித்யாவின் திருமணம் திருப்பதி மலையில்,

    அதே தேதியில் ரமேஷின் திருமணம் ஸ்வாமி மலையில்.

    //தற்போதைய நிதர்சன நித்யாக்கள் !!???//

    வாங்கோ வாங்கோ

    தற்போதைய உலகின் நிதர்சன சமாச்சாரங்களை உணர்ந்து கொடுத்துள்ள பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  34. இராஜராஜேஸ்வரி said...
    "திருமண மலைகளும் ....... மாலைகளும் !"

    திருப்பதி மலை
    ஸ்வாமி மலை என்று மலகளும் வேறு !

    கல்யாணமாலைகளும் வேறு !

    //அழகான தலைப்பு !//

    தலைப்’பூ’ போலவா மேடம்?

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  35. என்ன ஒரு சஸ்பென்ஸ்? என்ன ஒரு கிளைமேக்ஸ்? பத்தே வரிகளில் சிறந்த சிறுகதை.

    ReplyDelete
  36. ஹா ஹா நல்ல ட்விஸ்ட் வச்சுட்டிங்க.

    ReplyDelete
  37. கதையில திடீர் திருப்பம், எதிர்பாரத திருப்பம், பஞ்ச் டயலாக் இதெல்லாம் உங்களுக்குக் கை வந்த கலை.

    ஆனா இந்த குட்டியூண்டு கதையில இப்படி ஒரு திருப்பமா?
    சான்சே இல்லை.


    என்னை விட சின்னவரா இருந்திருந்தால், ‘அடப்பாவி, எப்படிடா இப்படியெல்லாம் எழுதற’ன்னு சொல்லி முதுகுல ஒரு ஷொட்டு வெச்சிருப்பேன். என்ன பண்ண அண்ணாவாயிட்டேளே,

    அதனால ஆன்னு வாயப்பொளந்துண்டு நிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya June 2, 2015 at 10:04 PM

      //என்னை விட சின்னவரா இருந்திருந்தால், ‘அடப்பாவி, எப்படிடா இப்படியெல்லாம் எழுதற’ன்னு சொல்லி முதுகுல ஒரு ஷொட்டு வெச்சிருப்பேன்.//

      அடடா, ஜெயா கையால் முதுகுல ஒரு ஷொட்டு வாங்கும் அந்த சான்ஸ் இல்லாம இப்படி அநியாயமாப் போச்சே ! (

      Delete
  38. ஓ ஓ.... வேர வேர ஆளுக கூட நிக்கா பண்ணிப்போட்டாங்களா. மொதக் படிக்கேயிலே வேர மாதிரி நெனச்சுப்பிட்டேனே.

    ReplyDelete
  39. ரியலி நல்லகதை. பாதி படிக்கும் வரையிலும் திருமண ஜோடிகளாக அவர்கள் இருவரையும்தான் நினைக்க தோன்றியது. கடேசில வச்சுட்டீங்களே ட்விஸ்டு

    ReplyDelete
  40. தலைப்பயே கொஞ்சம் விரிவு செய்தால்...கதை...இப்படியெல்லாம் எழுத எப்புடி முடியுது?

    ReplyDelete
  41. வித்யாசமான சிறுகதை! மாற்றி யோசி என்பது இதுதானோ?

    ReplyDelete
  42. ஹா ஹா... என்னா ட்விஸ்ட்... முதலில் அவங்க இருவருக்கும் தான் திருமணமோன்னு நினைக்க வைத்து கடைசியில் வேறு வேறு நபருடன் திருமணம் என்று படிக்கும்போது சிரிப்புதான் வந்தது....

    ReplyDelete
    Replies
    1. @ ஸ்ரத்தா, ஸபுரி

      வாங்கோ, வணக்கம். ரஸித்து, சிரித்து, பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி.

      Delete