About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, May 20, 2011

யார் முட்டாள்?

யார் முட்டாள் ?

[நகைச்சுவைச் சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்
ரமேஷ், சுரேஷ் என்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள் இருவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டு தங்கள் வியாபார விஷயமாக தங்களுக்குள் மிகுந்த நட்புடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பேச்சு ஒரு கட்டத்தில் தங்கள் பணியாட்களின் [ப்யூன்ஸ்] அறிவற்ற முட்டாள் தனத்தைப்பற்றி திரும்பியது.

“தன்னுடைய ப்யூனைப் போன்ற ஒரு முட்டாளை இந்த உலகத்தில் வலை வீசித்தேடினாலும் எங்கும் கிடைக்கமாட்டான்”  என்று ரமேஷ் சொன்னார்.

இதை ஒத்துக்கொள்ளாத சுரேஷ் “என்னுடைய ப்யூனைப்போன்ற ஒரு வடிகட்டிய முட்டாள் யாருமே இருக்க முடியாது” என்றார்.

அவர்களுக்குள் அதை அப்போதே நிரூபித்துப் பார்க்க விரும்பினார்கள்.

ரமேஷ் காலிங் பெல்லை அழுத்தி தன் ப்யூனை ரூமுக்குள் அழைக்கலானார். 


”யெஸ் சார்” என்ற படி ரமேஷின் ப்யூன் ராசா உள்ளே ஓடி வந்தான்.

அவனிடம் ஒரு பத்து ரூபாய் சலவைத்தாளை எடுத்து நீட்டி “நீ போய் உடனடியாக புத்தம்புதிய மாருதி ஏ.ஸீ. கார் ஒன்று உனக்குப்பிடித்த ஏதாவது ஒரு கலரில் வாங்கிக்கொண்டு சீக்கரமாக வந்துடு” என்றார்.

அவனும் “எஸ். சார்.” என்று கூறி அவர் கொடுத்த பத்தே ரூபாயுடன் ரூமை விட்டு வெளியேறினான்.

இதைப்பார்த்து தனக்குள் லேசாகச் சிரித்துக்கொண்ட சுரேஷ் தன் காலிங் பெல்லை அழுத்தி தன் ப்யூனை ரூமுக்குள் அழைக்கலானார். 


”யெஸ் சார்” என்ற படி சுரேஷின் ப்யூன் மகாராசா உள்ளே ஓடி வந்தான்.

“மகாராசா, இப்போது மணி 10 ஆகப்போகிறது. நான் மிகச்சரியாகப் பத்து மணிக்கு தாஜ் ஹோட்டலில் ஒரு அவசர மீட்டிங்கில் இருக்க வேண்டும். நீ உடனே ஓடிப்போய் தாஜ் ஹோட்டல் மீட்டிங்கில் நான் இருக்கிறேனா என்று பார்த்து விட்டு வந்து என்னிடம் சொல்ல வேண்டும், இது மிகவும் அவசரமான விஷயம், தாமதிக்காமல் உடனே புறப்படு” என்றார்.

மகாராசாவும் “யெஸ் சார்” என்று சொல்லி விட்டு அந்த ரூமை விட்டு வெளியேறினான்.

வெளியே வந்த ராசாவும், மகாராசாவும் ஆற அமர ஒரு மரத்தடியில் நின்று தங்களுக்குள் தங்கள் முதலாளிகளைப்பற்றி பேச ஆரம்பித்தனர். 

“என் முதலாளியை மாதிரி ஒரு முட்டாள் இருக்க முடியாது.  புத்தம் புதிய மாருதி ஏ.ஸி. கார் உடனடியாக வாங்கிவரச் சொல்லியிருக்கிறார். கார் வாங்க 10 ரூபாய் பணத்தையும் கொடுத்து விட்டார். 


இன்று ஞாயிற்றுக்கிழமை, கார் விற்பனைக்கடைகள் எதுவும் திறந்திருக்காது என்று கூடத் தெரியாத முட்டாளாக இருக்கிறார்” என்றான் ராசா, மகாராசாவிடம்.

“உன் முதலாளியாவது பரவாயில்லை. இன்று இல்லாவிட்டாலும் நாளை கார் வாங்கிக்கொள்ளலாம். எங்க ஆளு 10 மணிக்கு தாஜ் ஹோட்டல் மீட்டிங்கில் இருக்கணுமாம். நான் தாஜ் ஹோட்டலுக்குப்போய் அவர் அங்கே இருக்கிறாரா என்று பார்த்து வந்து சொல்லணுமாம். 

சுத்த வடிகட்டின முட்டாளாக இருக்கிறார். தன் டேபிள் மீது டெலிபோன் வைத்திருக்கிறார். 


தாஜ் ஹோட்டலுக்கு டயல் செய்து அவர் அங்கு இருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதை விட்டுவிட்டு, என்னை இந்த வேகாத வெய்யிலில் அலையவிடுகிறார், பார்” என்றான்.

-o-o-o-o-o-o-o-


  


46 comments:

 1. கண்டிப்பா நான் இல்லை சாமி.

  படு ஜோர்.

  ReplyDelete
 2. மனம் சிலாகித்து
  வாய்விட்டு என்னை
  அறியாமல் சிரித்தேன் ஐயா
  எல்லோருக்குமே அவரவர் புத்திசாலிகள்தான்

  ReplyDelete
 3. தங்களை புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டிருக்கிற
  நான்கு முட்டாள்களின் கதை மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. எனக்கு என்னமோ பியூன்கள் தான் புத்திசாலிகளாய் படுகிறது ஏனென்டால் அவர்கள் தான் புளைக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் )))

  ReplyDelete
 5. என் அப்பாவின் நகைச்சுவை புத்தக தொகுப்பு ஒன்றில், இந்த கதை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நல்ல நகைச்சுவை கதை! பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 6. நல்ல நகைச்சுவைக் கதை.. இன்னும் சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

  ReplyDelete
 7. நல்ல சிரிக்க வெச்சீங்க சார்

  ReplyDelete
 8. பரமார்த்த குருவும் சீடர்களும் போல . அவர்களின் வாரிசுகளோ??

  ReplyDelete
 9. ஹா....ஹா... அருமை. இது போன்ற ஒரு காட்சி பழைய டி ஆர் ராமச்சந்திரன் நடித்த படமொன்றில் பார்த்த நினைவு. உடன் நடித்தவர் புளிமூட்டை ராமசாமி என்று ஞாபகம். நினைவு படுத்தி சிரிக்க வைத்தீர்கள்.

  ReplyDelete
 10. முன்னரே படித்த ஒன்று என்றாலும் நல்ல ஜோக்..

  ReplyDelete
 11. மறுபடி சிரிக்க வைத்ததுக்கு நன்றி!

  ReplyDelete
 12. அசத்திபுட்டீங்களே.....!!!!

  கோமாளி செல்வா இதை படிச்சாம்னா ரூம் போட்டு அழுவான்....ஹே ஹே ஹே ஹே ஹே....

  ReplyDelete
 13. அழகான கதை வை.கோ சார்! கலக்குங்க!

  ReplyDelete
 14. குட்டியூண்டு கதைக்குள் நல்ல நகைச்சுவை.. ரசித்து, சிரித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 15. ஹா...ஹா... நல்ல நகைச்சுவை பகிர்வு. இன்னும் சிரிப்பு நிக்கல

  ReplyDelete
 16. நல்ல நகைச்சுவைப் பதிவு.

  தான் அறிவாளி என எண்ணிக்கொள்ளும்போது ஒருவன் முட்டாளாகிப்போகிறான்.

  தான் ஒரு முட்டாள் என்பதை உணரும்போது ஒருவன் அறிவாளியாகிறான்.

  ReplyDelete
 17. நல்ல நகைச்சுவைக் கதை.இப்படியும் முட்டாள்கள் உண்மையில் இருக்காங்களா?

  ReplyDelete
 18. 1962-63 இல், நான் ஒரு சிறுவனாக எட்டாம் வகுப்பு படிக்கும்போது, என் வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர் இந்தக்கதையின் சாராம்சத்தை வேறு விதமாக நகைச்சுவையாக எனக்குக்கூறினார்.

  எனக்கு அந்த நிகழ்ச்சியை ஜோக்காகக்கூறியவர், அவரே கற்பனை செய்து சொன்னாரோ அல்லது வேறு ஏதாவது அந்தக்கால பழைய சினிமாவில் வந்த நகைச்சுவைக் காட்சியை தான் பார்த்து மகிழ்ந்து அதை அப்படியே எனக்குச் சொன்னாரோ, தெரியவில்லை.

  அந்த விஷயத்தை நான் கொஞ்சம் காது மூக்கு வைத்து, சிறுகதையாக மாற்றி, இந்த நிகழ்காலத்திற்கு தகுந்தாற்போல சற்றே மெருகூட்டி, யார் முட்டாள்? என்ற தலைப்புக்கொடுத்து ஒரு நகைச்சுவைக்காக பதிவிட்டு, தங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

  எது எப்படியோ, இந்தப்பதிவைப் படித்து, சிரித்து, மகிழ்ந்து, தங்களின் கருத்துக்களைக்கூறி, பாராட்டியுள்ள அனைத்து உடன்பிறப்புகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

  மீண்டும் அடுத்த பதிவினில் சந்திப்போம்.

  என்றும் உங்கள் அன்புள்ள vgk

  ReplyDelete
 19. நல்ல பதிவு..நல்ல கருத்தை உணர்த்தியிருக்கிறீர்கள்
  http://zenguna.blogspot.com

  ReplyDelete
 20. நான்கு முட்டாள்களின் கதை மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. குணசேகரன்... said...
  //நல்ல பதிவு..நல்ல கருத்தை உணர்த்தியிருக்கிறீர்கள்
  http://zenguna.blogspot.com//

  நன்றி நண்பரே!

  ==============================

  போளூர் தயாநிதி said...
  //நான்கு முட்டாள்களின் கதை மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்//

  நன்றி நண்பரே !

  ReplyDelete
 22. நகைச்சுவை கதை சூப்பராயிருந்தது சார்.

  ReplyDelete
 23. கோவை2தில்லி said...
  //நகைச்சுவை கதை சூப்பராயிருந்தது சார்.//

  தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி & சந்தோஷம், மேடம்.

  ReplyDelete
 24. மிகவும் ரசித்து சிரித்தேன்.

  ReplyDelete
 25. சிவகுமாரன் said...
  //மிகவும் ரசித்து சிரித்தேன்.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 26. நன்றாய்ச் சிரிக்க வைக்கிறீர்கள்!

  ReplyDelete
 27. சிரிக்க வைக்கும் உங்கள் நோக்கம் பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. மாதேவி said...
  :)))

  மிக்க நன்றி, மேடம்

  ==================================
  கே. பி. ஜனா... said...
  //நன்றாய்ச் சிரிக்க வைக்கிறீர்கள்!//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, சார்

  ===================================
  G.M Balasubramaniam said...
  //சிரிக்க வைக்கும் உங்கள் நோக்கம் பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.//

  தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.

  ======================================

  ReplyDelete
 29. இது போன்ற ப்யூன்கள் நம் ஆஃபீசில் ஒருவர் இருந்தால் போதும்..! நன்றாக பொழுது போகும்..! நல்ல கதை..!

  -
  DREAMER

  ReplyDelete
 30. DREAMER said...
  //இது போன்ற ப்யூன்கள் நம் ஆஃபீசில் ஒருவர் இருந்தால் போதும்..! நன்றாக பொழுது போகும்..! நல்ல கதை..!//

  தாங்கள் முதன்முதலாக என் வலைப்பூவுக்கு புதிய வருகை தந்து கருத்துக்கள் கூறி கதையைப் பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 31. அருமையான நகைச்சுவை . சிரிக்க வைப்பதுதான் மிகவும் கடினமான ஆனால் உன்னதமான வேலை . அந்த நோக்கத்தை நிறைவேற்றிய கதை கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ezhil November 25, 2012 2:07 AM
   //அருமையான நகைச்சுவை. சிரிக்க வைப்பதுதான் மிகவும் கடினமான ஆனால் உன்னதமான வேலை. அந்த நோக்கத்தை நிறைவேற்றிய கதை கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்.//

   தங்களின் அன்பான [முதல்?] வருகைக்கும் அழகான உன்னதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என்னுடைய பல்வேறு குட்டியூண்டு கதைகள் இதை விட இன்னும் நகைச்சுவையாகவே இருக்கும். அவற்றிற்கான பட்டியல் இதோ இந்த இணைப்பினில் உள்ளது.

   http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html

   விருப்பமும் நேர அவகாசமும் இருந்தால் ஒவ்வொன்றாகப் படித்து விட்டு, கருத்துக்கள் கூறவும்.

   அன்புடன்
   VGK

   Delete
 32. இப்போ எனக்கு யார் முட்டாள்னு தெரியணும்? பியூனா? முதலாளியா?

  ReplyDelete
 33. யாரு அடி முட்டாள் என்பதில் போட்டி வைத்து மெடல் கொடுத்து பாராட்டு விழா கூட நடத்துற அளவுக்கு இருக்காங்களே.

  ReplyDelete
 34. ரெண்டு, மூணு நாள் முன்னாடிதான் தொலைக்காட்சியில் ‘சபாபதி’ படம் பார்த்தேன். (நிறைய முறை பார்த்ததுதான்).

  டீயையும், காபியையும் கலந்து போட்டு,
  சோடா உடைத்து வா என்றால் சோடா பாட்டிலை உஐத்துத் தட்டில் வைத்து

  பழைய்ய்ய்ய்ய்ய படமாக இருந்தாலும் நல்ல நகைச்சுவை.

  முட்டாள் வேலைக்காரர்களாக இருந்தாலும் படித்துப் படித்து ரசித்து சிரித்தேன்.

  உங்களின் அக்மார்க் நகைச்சுவை சிறுகதைகளில் ஒன்று.

  சூப்பர் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya June 2, 2015 at 10:12 PM

   உங்களின் அக்மார்க் நகைச்சுவை சிறுகதைகளில் ஒன்று.
   சூப்பர் அண்ணா//

   தாங்க் யூ வெரி மச் ஜெயா ! :)

   Delete
 35. இதுல அவங்கள விட ரசிச்சு படிச்சுப்போட்டு சிரிப்பாணியா சிரிக்கொம்ல அவங்கதா அடி முட்டாளுக.

  ReplyDelete
 36. ஆபீசர்கள் பியூன்கள் எல்லாருமே போட்டி போடறாளே. பட்டத்தை யாருக்கு கொடுப்பதுன்னு ஒரே குழப்பமா இருக்கே.  ReplyDelete
 37. பியூனெல்லாம் ரொம்ப புத்திசாலியா இருந்தா மொதலாளி ஆகியிருப்பானே...நல்ல நகைச்சுவைக் கதைதான்...

  ReplyDelete
 38. எப்படி ஐயா இப்படியெல்லாம்? மிகவும் இரசித்தேன்!

  ReplyDelete
 39. இதுல அவங்க யாருமே முட்டாள் இல்லிங்க... உங்க திறமையான நகைச்சுவை கதைகளை ரசித்து படித்து வயிறு வலிக்க சிரிக்குற நாங்கதாங்க முட்டாளுங்க..

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரத்தா, ஸபுரி... August 9, 2016 at 10:50 AM

   //இதுல அவங்க யாருமே முட்டாள் இல்லிங்க... உங்க திறமையான நகைச்சுவை கதைகளை ரசித்து படித்து வயிறு வலிக்க சிரிக்குற நாங்கதாங்க முட்டாளுங்க..//

   வாங்கோ .... வணக்கம். அந்தக்கால நகைச்சுவை நடிகர் சந்திரபாபு ஒரு படத்தில் ஒரு பாட்டு பாடுவார்:

   ”நான் ஒரு முட்டாளுங்க ... நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க ... நான் ஒரு முட்டாளுங்க ...”

   ஏனோ அந்த ஞாபகம் எனக்கு இப்போது வந்தது. :)

   Delete