About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, August 21, 2011

வ ர ம்





வரம்

[சிறுகதை]

By வை. கோபாலகிருஷ்ணன்

-ooOoo-


அவர்கள் இருவரும் அறுபது வயதைத் தாண்டிய, ஆனால் ஆரோக்கியமான தம்பதி. அந்த ஜோடி தங்களது நாற்பதாவது திருமண நாளை, ஒரு சிறிய தேனீர் விடுதியில், மிகுந்த அன்புடனும், எளிமையாகவும், சிறப்பாகவும் கொண்டாடியது.

அவர்களின் பாசத்தையும், நேசத்தையும், பிரியத்தையும், காதலையும் உணர்ந்த தேவதை ஒன்று, அவர்கள் முன்பு தோன்றி, திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி, ஆளுக்கு ஒரு வரம் வீதம் கேட்டால் அளிப்பதாகச் சொன்னது.

இதைக் கேட்டு மனம் மகிழ்ந்த மனைவி, “ஆஹா, நான் என் பிரியமுள்ள கணவருடன் இந்த உலகைச் சுற்றி வர விரும்புகிறேன்” என்றாள்.

உடனே அதற்கான பெரிய பயணத்திட்டம், விமானப் பயண முன் பதிவுக்கான சீட்டுகள், மற்றும் ஆங்காங்கே தங்குவதற்கான ஹோட்டல் முன் பதிவுகள், உணவு வசதிகள், வெவ்வேறு நாட்டு பணக்கட்டுகள், ஒவ்வொரு இடத்திலும் உள்ளூரைச் சுற்றிப் பார்க்க வாடகைக்காருக்கான முன் பதிவுகள், தொலைபேசி எண்கள், புத்தாடைகள் மற்றும் பயணத்திற்கான அனைத்துப் பொருட்களும் அவள் முன், தேவதையால் அளிக்கப் பட்டன. இதைப் பார்த்து வியந்து போனார்கள், அவர்கள் இருவரும். 


இதைக் கண்ட கணவர் ஒரு நொடி சிந்தித்தார் . நல்லதொரு அரிய வாய்ப்பு இது. இதைத் தவற விட்டால் மீண்டும் கிடைக்கக் கூடியது அல்ல, என்று எண்ணினார்.

மனைவியைப் பார்த்து, “நான் கேட்கப் போகும் இந்த வரத்திற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்” என்று கூறி விட்டு, தேவதையிடம் ஒரு விசித்திரமான வரம் கேட்கலானார்.

”என் மனைவி, என்னை விட 30 வயது சிறியவளாக இருக்க விரும்புகிறேன். இது தான் எனக்குத் தேவையான வரம்” என்றார்.

இதைக்கேட்டதும், அவர் மனைவி மட்டுமல்லாமல், அந்த தேவதையும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தது.

ஓரளவு வயதாகியும், ஆண்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இது போன்ற சபல புத்தியை எண்ணி வியந்தனர், அவர் மனைவியும் அந்த தேவதையும்.

இருப்பினும், தேவதை தான் ஏற்கனவே வாக்குக் கொடுத்தபடி, உடனே அவரின் வரத்தையும் நிறைவேற்றிக் கொடுத்து விட்டு, மறைந்து விட்டது.
.....
...........
..................
.........................
................................
.......................................


நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது.
...

......

.........
....................

பாவம் ...... அவர், இப்போது 94 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார். 








39 comments:

  1. very nice story. may be guys thinks about women like that way. End of the story is little funny.

    ReplyDelete
  2. பேராசை பெரு நஷ்டம் மட்டுமல்ல
    விபரீதமாகவும் அல்லவா போய்விட்டது
    பதிவும் அதற்கான படமும் மிக மிக அருமை

    ReplyDelete
  3. ஐயோ பேராசை இப்படியாகிவிட்டதே,,
    அருமையான கதை ஐயா...
    அன்புடன் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. தேவதை மாத்தி யோசிச்சிட்டாங்க போல....! வித்தியாசமான சிந்தனை.

    ReplyDelete
  5. அட கடவுளே!
    நான் என்ன நினைச்சேன்னா.. அந்தப் பெரியவர் வயசு குறைச்சு கேட்டதுக்கு காரணம்.. அந்தம்மா இப்ப இருக்கற உடல் பிரச்னை எதுவும் இல்லாமல், நல்ல ஆரோக்கியத்தோட, அந்த வயசுல இருந்த நிலைமைல இருக்கட்டும்னு நினைச்சுத்தான்னு..
    ம்ம்..

    ReplyDelete
  6. ஆஹா....
    இதுதான் சொல்லுறது ரெம்ப ஆசைப்படாதே என்று :(

    ReplyDelete
  7. பேராசை பெரு நஷ்டம் ..அருமையான கதை...

    ReplyDelete
  8. I have read this story before. However, even as a positive reinforcement, let's be clear about our objectives in life.

    ReplyDelete
  9. நல்ல கதையா போச்சு....

    தாத்தா பாவம்... வேற என்ன சொல்ல...

    நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. பேராசை பெருநஷ்டம்.நல்ல கதை.

    ReplyDelete
  11. கும்பகர்ணன் நாவில் சரஸ்வதி.

    ReplyDelete
  12. அருமையான கதை மட்டுமல்ல
    அருமையான முடிவும் கூட!
    ஐயா!வை கோ நீங்க
    நல்ல கதைக் கோ!

    மேலும் மேலும் வரட்டும்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வரங்களே சில நேரங்களில் சாபமாக!
    சாபங்களும் சில நேரம் வரமாக!

    ReplyDelete
  14. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வாசித்த ஞாபகம். தமிழில் , உங்கள் கைவண்ணத்தில் நல்ல காமெடி ஆக வந்து இருக்கிறது.

    ReplyDelete
  15. ஓரளவு வயதாகியும், ஆண்களுக்கு தொடர்ந்து ஏற்படும் இது போன்ற சபல புத்தியை எண்ணி வியந்தனர், அவர் மனைவியும் அந்த தேவதையும்.//

    தவிர்க்கமுடியாத சபலம்.

    ReplyDelete
  16. பாவம் ...... அவர், இப்போது 94 வயதுக் குடுகுடுக் கிழவராக தேவதையால் மாற்றப்பட்டிருந்தார். //

    சபலக்காரனுக்கும் புத்தி மட்டோ!!

    ReplyDelete
  17. முதலிலேயே மனைவியை கலந்து ஆலோசித்து வரம் கேட்காத சபலத்திற்கு சாபம் வரமாக.

    ReplyDelete
  18. நன்றி கெட்ட, முட்டாள் தனமான, பேராசை பிடித்த இந்த மனிதருக்கு கிடைத்தது உண்மையிலேயே “வரம்” தானா? என்று அவருக்கே இப்போது புரியாமல் குழப்பம் ஏற்பட்டது....//

    சுயநலத்திற்கு அதுதானே கிடைக்கும்!

    ReplyDelete
  19. அன்புடன் வருகை தந்து அரிய கருத்துக்களை ’வரம்’ ஆக வாரி வழங்கியுள்ள அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
  20. நல்ல நகைச்சுவையான கதை ஐயா! அத்துடன் உலக மக்கள் மன நிலையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நன்றி.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளித்தன. மிக்க நன்றி, மேடம்.

      Delete
  21. பேராசை பெரு நஷ்டம் என்று பெரியவர்கள் தெரியாமாலா சொல்லி வைத்தார்கள்?
    வித்யாசமான கதை.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்வளித்தன.

      மிக்க நன்றி, Mrs. RAMVI Madam.

      Delete
  22. நல்ல கதை வரம்... பேராசை பெருனஷ்டம்.... படிக்க அருமையாக இருந்தது...
    ஆனால் ( ஐயா நான் இக்கதையை படிக்கும் பொழுது கணவன் மனைவியைப் பார்த்து நான் கேட்டுக்கும் வரத்திற்கு “நான் கேட்கப் போகும் இந்த வரத்திற்காக என்னை நீ மன்னிக்க வேண்டும்” என்று கூறிய உடன் நான் என்ன நினைத்தேன் தெரியுமா ஐயா.

    இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இவள் என்னுடன் இருக்க வேண்டுமென்று கேட்க போகிறார் என்று நினைத்து பெருமைப் பட்டு ஆர்வத்துடன் அது என்ன வரம் என்று படித்தேன் .... ஆனால் பின் படித்தவுடன்தான் தெரிந்தது இவ்வளவு மோசமான வரம் என்று .) ...
    மிக்க நன்றி ஐயா எனக்கு கதையை அனுப்பி வைத்ததற்கு...

    ReplyDelete
  23. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. ஆம் பேராசை பெருநஷ்டமாகி விட்டது அவருக்கு.

    [ஸ்ரீ இராமாயணத்தில் வரும் ஸ்ரீ ஸீதா தேவியும், ஸ்ரீ இராமரும் போல உத்தம தம்பதிகள் எனத் தாங்கள் [ஜானகி போல] பாஸிடிவ் ஆக நினைத்ததில் தவறேதும் இல்லை தான்.

    இதை ஒரு விறுவிறுப்பான நகைச்சுவைக் கதையாக மட்டுமே நாம் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதைத்தானே [TWIST] என் வாசகர்கள் அனைவரும் என் கதைகளில் எதிர்பார்க்கிறார்கள் / ரசிக்கிறார்கள்! ]

    மீண்டும் நன்றி, அன்புடன் vgk

    ReplyDelete
  24. அன்புள்ள VGk சார்,
    'வரம்' என்பது நமது பேராசையினால் 'சாபம்' ஆகும் என்பதை கணவன் பாத்திரம் மூலம்
    மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.
    எதிர்பாராத கிளைமாக்ஸ். நல்ல கதை! எத்தனை பேருக்கு பாடமாக அமைந்ததோ தெரியவில்லை.
    பாராட்டுக்கள்.
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருமதி ரஞ்சனிநாராயணன் மேடம்!

      தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்துள்ளன. உற்சாகப் படுத்தியுள்ளன.

      என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

      அன்புடன்
      vgk

      Delete
  25. ஆங்கிலத்தில் படித்ததை விட தமிழில் படிப்பது சுவையாக இருந்தது.

    ReplyDelete
  26. Ms. PATTU Madam,

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

    [ஆமாம். ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் இந்தக்கதையை நான் முதலில் படிக்கும்போது எனக்கும், இந்தக்கதையின் கரு மட்டும் ஏதோ கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதாக மட்டுமே தோன்றியது.

    கருவை மட்டுமே ஆங்கிலத்திலிருந்து எடுத்துக்கொண்டு, சற்றே கடுகு, உளுத்தம்பருப்பு முதலியன போட்டு தாளித்து, சுவையான உப்புமாவாகத் தமிழில் கொண்டுவந்து சூடாகப் பரிமாறி விட்டேன் vgk]

    ReplyDelete
  27. விபரீத ஆசை விநாசத்தில் முடிந்தது.

    ReplyDelete
  28. எது வரமூம் இல்ல சாபமும் இல்ல பேராசை பெரு நஷ்டம் தான்

    ReplyDelete
  29. முதல் பத்தியைப் படித்ததும் அட நமக்குக் கூட கடவுள் நேரில் வந்து இது போல் வரம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

    படித்து முடித்ததும் வரமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். இருப்பதே போதும் என்று தோன்றி விட்டது.

    ReplyDelete
  30. இந்த பெரிசுக்கு வயசான காலத்து புத்தி இப்புடியா போவும். கோராமதா.

    ReplyDelete
  31. நமக்கும் சடன்னா இப்படி ஒரு தேவதை எதிரில் வந்து ஏதாவது வரம் கேளுன்னா என்ன கேக்கறதுன்னு புரியாம பதட்டத்தில எதையாவது எடக்கு மடக்காதான் கேக்க தோணும் அந்த பெரியவரும் அதைத்தான் செய்திருக்கார்.

    ReplyDelete
  32. படம் சூப்பர்னா டுவிஸ்ட் அதையும் தாண்டி....மாப்புக்கு செம ஆப்பு...

    ReplyDelete