About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, August 2, 2013

34] நிஜமான சீர்திருத்தம்

2
ஸ்ரீராமஜயம்


வரதட்சணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை. 

இது குடும்பத்திற்கு, மதத்திற்கு, சமூகத்திற்கு, பெண் குலத்திற்கு எல்லாவற்றிற்கும் செய்கிற தொண்டு,

இப்படியாக இளைஞர்கள் எல்லோரும் சபதம் செய்து, அதை நிறைவேற்ற வேண்டும்.

கல்யாணத்திற்கு தங்கத்தினால் திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் போதும். மற்ற நகைகள், வைரத்தோடு முதலியன வேண்டாம். பட்டுத்துணிகளும் வேண்டாம். 

நூல் கூறைப்புடவை வாங்கினால் போதும். எல்லாவற்றையும் விட வரதட்சிணை தொலைய வேண்டும். 

ஊர்கூட்டி சாப்பாடு, பாட்டு, நாட்டியம், பந்தல் என்று விரயம் பண்ணுவதும் போக வேண்டும். 

நிஜமான சீர்திருத்தம், வரதட்சிணை ஒழிப்புதான். oooooOooooo


ஓர் சம்பவம்


1956 - நவம்பர் நுங்கம்பாக்கத்தில் பெரியவா முகாமிட்டிருந்தா. ஒரு நாள் ராத்திரி 10 மணிக்கு மவுண்ட் ரோட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா நடந்து சென்று கொண்டிருந்தார். 

நாங்கள் ஒரு 15 பேர் கூடச்சென்று கொண்டிருந்தோம். இந்து பத்திரிகை ஆபீஸுக்கு விஜயம்.

LIC கட்டிடம் அருகே வந்த போது கண்ணன பெரியவாளிடம், "இது தான் புதுசா வந்திருக்கிற LIC அடுக்குமாடி கட்டிடம்" என்று  கூறினார். 

சற்று நின்ற பெரியவா என்னிடம் திரும்பி ”இதுலே மொத்தம் எததனை மாடிகள் இருக்கு ?” என்றார்.நான் தவறாக சொல்லி விட கூடாதென்று, "சரியாக தெரியாது... " என்றேன். 

"போய் எண்ணி பார்த்துவிட்டு வா .." என்று என்னிடம் கூறிவிட்டு, விறு விறு என்று நடக்க ஆரம்பித்தார். நான் இரண்டு மூன்று முறை எண்ணிப்பார்த்தேன். பாதி எண்ணும் போதே கணக்கு விட்டு போய் மீண்டும் எண்ணும் படி ஆயிற்று.ஒருமுறை 12ம், மறுமுறை 13ம் வந்தது. அதற்குள் பெரியவா வெலிங்டன் டாக்கிஸ் வரை சென்று விட்டிருநதார். நான் ஓடி சென்று மூச்சிறைக்க நின்றேன். 

"எண்ணிப் பார்த்தாயா ? எத்தனை மாடிகள் ? " என்று பெரியவா கேட்டா. ”கீழிருந்து 13. டெரேஸைச் சேர்த்தா 14. ஆனா மாடிகள் 12 தான் வருகிறது” என்றேன். 

பெரியவா சிரித்து கொண்டார்."12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங்லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ ...?” என்று கேட்டார். எனக்குத்தூக்கி வாரி போட்டது. "நான் எண்ணி பார்க்கலே.." என்றேன். 

"அப்புறமாப் போய்ப் பாரு ..." என்று நடந்தபடி கூறினார். கண்ணன் என்னை பார்த்து சிரித்தார் .

நான் சற்று பின் தங்கினேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 

ஒரு பத்திரிக்கையைப் புரட்டுவதிலும் அதில் வரும் செய்திகளைப் படிப்பதிலும், படங்களை பார்ப்பதிலும் சாதாரண வாசகருக்கும் பெரியவாளுக்கும் எத்தனை வேற்றுமை இருக்கிறது என்று எண்ணி வியந்தேன். 

மேலட்டையில் பிரசுரமாயிருநத அந்த நகைச்சுவையைப் படித்தவர்கள் சிரிப்பு வந்திருந்தால் சிரித்துவிட்டுப் பத்திரிகையை புரட்டி இருப்பார்கள். 

சிரிப்பு வராதவர்கள் சிரிக்காமலேயே புரட்டி இருப்பார்கள். 

எத்தனை பேர் " அந்த கட்டிடத்தில் எத்தனை மாடிகள் வரைய பட்டிருக்கின்றன" என்று பொறுமையாக எண்ணி பார்த்திருக்க போகிறார்கள்.. ? 

பிறரை சொல்வானேன்? நானே பார்க்கவில்லையே! 

(அந்த ஜோக் என்னுடையதுதான். படம் ஓவியர் கோபுலு வரைநதது )

எதையும் ஆராய்ந்து நோக்கும் பெரியவாளின் அபூர்வ சக்தி அதிசயிகக்தக்கது என்றால், அவரது நகைச்சுவையுணர்வு மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

[ நன்றி: அமிர்தவாஹிணி ]


oooooOooooo

இன்று ஆடி வெள்ளிக்கிழமை


 


அதற்காக இதோ
ஓர் மகிழ்ச்சிப் பகிர்வுநல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

இந்த வூட்டுப்பதிவர் அம்மாவுக்கு

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

இந்தச்செவத்த அம்மா வூட்டுல
கண்ணாலம் ஒண்ணு உடனே வரப்போகுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

ஒரு கண்ணாலம் மட்டுமா!

அடுத்தடுத்துப் பல 
கண்ணாலங்கள் நடக்கப்போகுது!!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

இந்த நடுத்தர வயசு செவத்தம்மாவின்

அறிவுக்கும், அழகுக்கும்,
ஆசைக்கும், குணத்துக்கும்,
துடிப்புக்கும், துள்ளலுக்கும்

அந்த செவத்த அம்மணிக்கே மீண்டும் 
கண்ணாலம் நடக்கப்போவுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

பொன்னு [பொண்ணு] கெடச்சாலும்
புதன் கெடைக்காதுன்னு சொல்லுவாங்கோ!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

இந்த செவத்த அம்மாதான்
மனையிலே குந்த,
இப்போ கண்ணாலப் 
பொண்ணாக் கெடச்சுருக்கு!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

அடுத்து  புதன்தானே, கெடைக்கணும்?

ஒரு புதன்கிழமையாகவே 
அதுவும் கெடைக்கப்போகுது!!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

  28th ஆகஸ்டு  புதன்கிழமை 
’டும் டும் டும் டும்’ ன்னு ஒரே
மேளச்சத்தமாக் கேட்கப்போகுதுநல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

அம்மாவுக்கும் ஐயாவுக்கும்
மீண்டும் ஜோராக் கண்ணாலம்
நடக்கத்தான் போகுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !! 

செவத்தம்மா கழுத்துல மீண்டும்
 புதுத்தாலி ஏறத்தான் போகுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

’அறுபதிலும் ஆசை வரும்’ன்னு
இந்த செவத்தம்மா, ஐயாவோட 
டூயட் ஆடத்தான் போறாங்கோ!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

அழகாகக் கட்டிக்கிட்டு இருக்கிற
வூடு முடிஞ்சு செவத்தம்மா கையிலே
வீட்டுச்சாவி கெடைக்கப்போவுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

வூடு மாத்தி கிரஹப்பிரவேசக்
கண்ணாலமும் இந்த செவத்தம்மா
நடத்தத்தான் போகுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

அடுத்த மாசமே இந்த செவத்த
அம்மாவோட பேத்திக்குக்
காது குத்துக் கண்ணாலமும்
நடக்கப்போகுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

இந்த வூட்டு ராணியம்மாவோடப் 
பொண்ணு ... இளவரசியம்மாவுக்கு 
நல்ல வரன் ஒண்ணு 
குதிர்ந்து வரப்போகுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

ஓயாம ஒழியாம ஓடிஓடி
பட்டாம்பூச்சிபோல ஒழைக்கற  
செவத்தம்மாவுக்குப்
பணி ஓய்வுக் கண்ணாலமும் 
இந்த வருஷமே நடக்கப்போகுது!

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!

இந்த செவத்தம்மா
தொட்டதெல்லாம் 
தொலங்கப்போகுது!

பதிவில் எழுதாம 

விட்டெதெல்லாம் 
எழுதப்போகுது!!நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!


யார் அந்த செவத்தம்மா?
அதுவும் யார் அந்தப் பதிவர் அம்மா?
என்கிறீர்களா?

நல்ல காலம் பொறக்குது !
நல்ல சேதி கெடைக்குது !!


என்ன நல்ல சேதி அது?
எப்போ கெடைக்கப் போகுது அது?
என்கிறீர்களா?

ஆயிரம் வாசல் இதயம் .... அதில்
ஆயிரம் எண்ணங்கள் உதயம்!

யோசியுங்கள் .... காத்திருங்கள் 
ஒரிரு வாரங்கள் மட்டுமே!

உங்களுக்கும்

நல்ல காலம் பொறக்கும் !
அந்த நல்ல சேதி
என் மூலமே கெடைக்கும் !!


 


பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் 
தெருவில் வந்தான்டி !

பூம்..பூம்..பூம் மேளம் கொட்டி 
சேதி சொன்னான்டி !!
  


தங்கள் சிந்தனைக்கு

பொதுவாக அஷ்டமி நவமி ஆகிய நாட்களில் கல்யாணம் போன்ற எந்தவொரு சுபகார்யங்களும் செய்ய பலரும் சற்றே தயங்குவார்கள். கேட்டால் ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீராமனும் அவதாரம் செய்த [பிறந்த] திதிகள் இவை என்றும் ஸ்ரீகிருஷ்ணனும் ஸ்ரீராமனும் போல நாமும் நம் வாழ்க்கையில் கஷ்டப்படக்கூடாது என்றும் விளக்கம் கூறுவார்கள்.  

ஆனால் இந்த மேலே சொல்லியுள்ள பதிவர் [அதாங்க .... நம்ம செவத்தம்மா] 28.08.2013 புதன்கிழமை, 60 நாழிகைகள் முழுவதும் நிறைந்துள்ள அஷ்டமியில், அதுவும் சாதா அஷ்டமியல்ல .... ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த ”கோகுலாஷ்டமி” திருநாளில் மீண்டும் மங்களகரமாகத் தாலி கட்டிக்கொள்ளப் போகிறார்கள். 

இன்றைய நெருங்கிய சொந்தமான கோபாலகிருஷ்ணனே அவர்களுக்கு பக்கபலமாகவும், நலம் விரும்பியாகவும் இருக்கும்போது அவர்கள் அஷ்டமி .... கோகுலாஷ்டமி பற்றியெல்லாம் எதற்கு வீண் கவலை கொள்ள வேண்டும்? ;)))))

என் [ஆங்கிலப்] பிறந்த தேதி எட்டு. என் பிறந்த நக்ஷத்திரம் ஸ்ரீ ராமரின் பிறந்த நக்ஷத்திரமான புனர்பூசம். எனக்கு எப்போதுமே எட்டாம் நம்பர் ராசியானது. அஷ்டமி, நவமியெல்லாம் கண்டால் எனக்கு பயமே கிடையாது. IN FACT அவற்றில் துவங்கும் காரியங்கள், என்னைப்பொறுத்தவரை, வெற்றிகளையே இதுவரை எனக்கு அளித்துள்ளன.  

அந்த செவத்தம்மாப் பதிவர் யார்? என்பதுடன், இந்த அஷ்டமி+நவமி பற்றியும் சற்றே யோசியுங்கள்.

மீண்டும் இதுபற்றி ஒரு நாள் நாம் பேசுவோம். 


அன்புடன் 
கோபு

 

oooooOooooo

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


இதன் தொடர்ச்சி 
நாளை மறுநாள் வெளியாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

[02.08.2013 வெள்ளிக்கிழமை]

51 comments:

 1. வற்றாத அமுத மழை!

  பூம் பூம் மாட்டுக்காரன் படம் அருமை.

  வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்.. தங்கள் அறுபதாம் கல்யாணத்துக்கு.

  செவத்த அம்மா தான் யாரென்று புரியவில்லை:)

  ஹை ..! நானும் அஷ்டமி திதி, பூசம்.

  ReplyDelete
 2. நகைச்சுவை உணர்வை ரசித்தேன்...

  பதிவர் அம்மா யார்? என்பதை அறிய ஆவல்...

  ReplyDelete
 3. ஆகஸ்ட் 28 தங்களுக்குத்தானா ஐயா. வணங்குகிறேன்

  ReplyDelete
 4. அந்தப் பதிவர் அம்மா யார்? ஒன்றும் புரியவில்லை. யாராகினும் என் வாழ்த்துக்கள்.
  மஹா பெரியவரின் பதில் பிரமிக்க வைத்தது.(பதினெட்டு மாடி என்று சொல்வதைத்தான் சொல்கிறேன்)
  நன்றி பகிர்விற்கு,

  ReplyDelete
 5. குருவின் வாக்கை மீறுவது
  குருத்ரோகம்

  ReplyDelete
 6. ஒரு பத்திரிக்கையைப் புரட்டுவதிலும் அதில் வரும் செய்திகளைப் படிப்பதிலும், படங்களை பார்ப்பதிலும் சாதாரண வாசகருக்கும் பெரியவாளுக்கும் எத்தனை வேற்றுமை இருக்கிறது என்று எண்ணி வியந்தேன். //
  படிக்கும் போது வியப்புதான் ஏற்படுகிறது.

  செவத்தம்மா தெரிந்தபதிவர் தான்.
  காத்து இருக்கிறேன். விடையை தெரிந்து கொள்ள.
  இப்போதே என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 7. நிஜமான சீர்திருத்தம், வரதட்சிணை ஒழிப்புதான்.

  சீர்திருத்தம் சிறக்கட்டும் ..!

  ReplyDelete
 8. எதையும் ஆராய்ந்து நோக்கும் பெரியவாளின் அபூர்வ சக்தி அதிசயிகக்தக்கது என்றால், அவரது நகைச்சுவையுணர்வு மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.

  ரசிக்கத்தக்க பகிர்வுகள்..!

  ReplyDelete
 9. யார் அந்த செவத்தம்மா?
  அதுவும் யார் அந்தப் பதிவர் அம்மா?
  என்கிறீர்களா?

  தெரிஞ்சாச்சு ..!

  ReplyDelete
 10. இந்த வூட்டு ராணியம்மாவோடப்
  பொண்ணு ... இளவரசியம்மாவுக்கு
  நல்ல வரன் ஒண்ணு
  குதிர்ந்து வரப்போகுது!

  இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 11. நம்ம செவத்தம்மா] 28.08.2013 புதன்கிழமை, 60 நாழிகைகள் முழுவதும் நிறைந்துள்ள அஷ்டமியில், அதுவும் சாதா அஷ்டமியல்ல .... ஸ்ரீகிருஷ்ணன் அவதரித்த ”கோகுலாஷ்டமி” திருநாளில் மீண்டும் மங்களகரமாகத் தாலி கட்டிக்கொள்ளப் போகிறார்கள்.

  ஜெயமுடன் ரமணீயமாக பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ..!

  ReplyDelete
 12. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம் வர்ஷிக்கும் அழகான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 13. பிறரை சொல்வானேன்? நானே பார்க்கவில்லையே!

  (அந்த ஜோக் என்னுடையதுதான். படம் ஓவியர் கோபுலு வரைநதது )

  மஹா பெரியவரின் பதில் பிரமிக்க வைத்தது !

  ReplyDelete
 14. செவத்த அம்மா தான் யாரென்று புரியவில்லை ????

  ReplyDelete
 15. ஜெயமுடன் ரமணீயமாக பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ..! ??

  ReplyDelete
 16. வரதட்சணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை. //

  வரதட்சணை கேட்காமல் இருப்பது பிள்ளையைப் பெற்றவர்களின் கடமை.

  என் மகன் திருமணத்திற்கு ஒரு பைசா கூட வரதட்சணை வாங்கவில்லை. நகைகளும் அதைப் போடு, இதைப் போடு என்று கேட்கவில்லை. ஒரு எவர்சில்வர் ஸ்பூன் கூட தேவையில்லை என்று சொல்லி விட்டோம். (வீட்டில் ஏற்கனவே பரணில் அம்மா கொடுத்த பாத்திரங்கள் குறட்டை விட்டு தூங்கிண்டு இருக்கும் போது அதுக்கு துணைக்கு இது வேற எதற்கு என்று).

  ReplyDelete
 17. என் [ஆங்கிலப்] பிறந்த தேதி எட்டு. என் பிறந்த நக்ஷத்திரம் ஸ்ரீ ராமரின் பிறந்த நக்ஷத்திரமான புனர்பூசம். எனக்கு எப்போதுமே எட்டாம் நம்பர் ராசியானது.//

  எங்களுக்கும் எட்டாம் நம்பர் ராசிதான்.

  ReplyDelete
 18. ஓஹோ, திருமதி ஜெயந்தி ரமணிக்கு சஷ்டி அப்த பூர்த்தி விழாவா? அவர் கணவருக்கா? யாருக்கா இருந்தாலும் வாழ்த்துகள். ராஜராஜேஸ்வரி கொடுத்த க்ளூவின் காரணத்தால் கண்டு பிடிக்க முடிந்தது. பதிவு நன்றாக இருக்கிறது. :))))) குடுகுடுப்பைப் பாடல் பிரமாதம். நல்ல கற்பனை!

  ReplyDelete
 19. நிஜமான சீர்திருத்தம் வரதக்ஷிணை,வாங்காததும்,கொடுக்காததும் கூட.
  எங்கள் வீட்டில் அது முக்கியமாக கடைபிடித்து நிறைவேற்றப் பட்டது. அதிகம் சொன்னால் சுயபுராணம் ஆகிவிடும். பிள்ளை கலியாணமென்றால்
  தன் வீட்டு தெய்வத்தை ஆராதிப்பதற்கான சிலவுகள் கூட சேர்த்து, பெண் வீட்டில் ,வரதக்ஷிணையாக வாங்குகிரார்கள் என்று வம்பாகச்
  பேசுவதுண்டு.
  வேலைக்குப்போகும் பெண்களைக் கலியாணம் செய்து கொள்வதால்
  இந்த வகை வரதக்ஷிணை குறைந்துள்ளது.

  ஆனாலும், கொள்கை அவசியமானது.
  டும்டும் ஸமாசாரம், ஜெயந்திரமணி தம்பதிகளுக்கா? பரம ஸந்தோஷம்.
  முன் கூட்டிய வாழ்த்துகள் அவர்களுக்கு.
  அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
  புரும்புரும் மாடு,குடுகுடுப்பைக்காரன்,என்று நாங்கள் சொல்லுவோம்.
  ஜக்கம்மா சொல்லுது. ஸந்தோஷம். அன்புடன்

  ReplyDelete
 20. பெரியவாளின் கூர்ந்து நோக்கும் திறன் வியக்கவைத்தது! உங்கள் குடும்ப விசேசத்திற்கு வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 21. சிறப்பான அமுத மொழிகள்.....

  பூம்பூம் மாடு.... :)

  பதிவருக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 22. Arubadaam Kalyanaththukku vaazhththukkal!

  Yengalukku sevvaaikkizhamaithaan nallathu nadakkirathu!

  Periyavaaloda kathai romba nandraaga irundathu!

  Avaroda padam romba azhagaaga irukkirathu!

  ReplyDelete
 23. ஆன்மீக குருவிற்கு லௌகீகமும் எத்தனை நன்றாகத் தெரிந்திருக்கிறது! ஆச்சரியம் தான்!
  அந்த செவத்தம்மா பதிவர் யாராக இருந்தாலும் தொங்கத் தொங்கத் தாலி கட்டுகொண்டு இனிமையான இல்லறம் நடத்தி பல்லாண்டு வாழ ஆசிகள்.

  ReplyDelete
 24. திருமணத்தில் பணவிரயம் செய்யாமல், வரதட்சணை வாங்காமல் செய்யும் திருமணமே சீர்திருத்த திருமணம். உண்மையான சிந்தனை.

  எதையும் கூர்ந்துநோக்கும் பெரியவரின் திறமும் நகைச்சுவையுணர்வும் வியப்பூட்டுகின்றன.

  குடுகுடுப்பைப் பாடல் ரசிக்கவைத்தது. அந்த சிறப்புப் பதிவருக்கு இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. achooooo
  wait panna mudiyalai
  seekarama suspensa udaiyungal pl.
  viji

  ReplyDelete

 26. பெரியவரின் ஆசியோடு என்று திருமணப் பத்திரிக்கை அடிக்கும் பல pseoudo பக்தர்கள், அவரது பொன்மொழியகளைப் பின் பற்றுவதே கிடையாது. பல வீடுகளில்பார்த்திருக்கிறேன். இந்தப் பதிவு ஒரு வண்ணக் கலவை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. பெண்ணைப் பெற்றவர்கள் படும்பாட்டை எண்ணி பெரியவர் சொன்ன சீர்திருத்தம். எல்லோரும் இதனைப் பற்றி யோசிக்க வேண்டும்.

  ” வாராயோ என் தோழி! வாராயோ! “ என்று பாடாத குறைதான். ஒரு நல்ல சேதியை குடுகுடுப்பைக்காரன் போன்றே குறிப்பாக சொல்லி இருக்கிறீர்கள். அந்த தம்பதியினரின் ஆசீர்வாதம்! வணங்குகிறேன்!

  ReplyDelete
 28. வரதட்சனை கேட்கவில்லை என்றால் மாப்பிள்ளைக்கு ஏதோ குறை என்று நினைத்துக்கொள்கிற காலம் இது ஐயா..
  பாடல் வரிகள் சிறப்பு. அருமையான பகிர்வு தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

  ஐயா தங்களை தொடர் பதிவெழுத அழைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 29. தொடர்பதிவு :

  அழைப்பு :http://veesuthendral.blogspot.in/2013/08/blog-post_3.html

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 30. சஷ்டி அப்த பூர்த்தி விழா நாயகிக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 31. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் கூர்ந்து நோக்கும் திறன் வியக்கவைத்தது!குடுகுடுப்பைப் பாடல் ரசிக்கவைத்தது.தங்களுக்கு நிகர் தாங்களே! நன்றியுடன்

  ReplyDelete
 32. enjoyed the post Gopu Sir.

  I too never purchased a silk saree for me except the artificial one for our wedding. My husband also like minded and he wore a cotton dhoti for our wedding. We never liked the killing of silk worm.

  Though I read your earlier posts (not yet completed the series) could not respond as I was eagerly jumping to the next post (continution) h.aha..... I appreciate your patience & care in giving out those nice thoughtful posts Gopu Sir.

  Eagerly waiting for you to break the suspense!

  ReplyDelete
 33. பெரியவாளின் நகைச்சுவை உணர்வும் அருமை....

  பூம் பூம் மாடு...:))

  அந்த பதிவருக்கு வணக்கங்கள்.

  ReplyDelete
 34. நகைச்சுவை ரசித்தேன்...

  ReplyDelete
 35. //வரதட்சணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை.

  இது குடும்பத்திற்கு, மதத்திற்கு, சமூகத்திற்கு, பெண் குலத்திற்கு எல்லாவற்றிற்கும் செய்கிற தொண்டு,

  இப்படியாக இளைஞர்கள் எல்லோரும் சபதம் செய்து, அதை நிறைவேற்ற வேண்டும்.

  கல்யாணத்திற்கு தங்கத்தினால் திருமாங்கல்யம் மட்டும் பண்ணினால் போதும். மற்ற நகைகள், வைரத்தோடு முதலியன வேண்டாம். பட்டுத்துணிகளும் வேண்டாம்.

  நூல் கூறைப்புடவை வாங்கினால் போதும். எல்லாவற்றையும் விட வரதட்சிணை தொலைய வேண்டும்.

  ஊர்கூட்டி சாப்பாடு, பாட்டு, நாட்டியம், பந்தல் என்று விரயம் பண்ணுவதும் போக வேண்டும்.

  நிஜமான சீர்திருத்தம், வரதட்சிணை ஒழிப்புதான்.
  //
  இவை எல்லாம் எப்போ நிஜமாகும்??

  ReplyDelete
 36. நகைச்சுவை உணர்வை ரசித்தேன்..

  குடுகுடுப்பைக்காரன் ரசித்தேன்...செவத்தம்மா யர்ன்னு தெரியலையே??

  ReplyDelete
 37. //ஒரு பத்திரிக்கையைப் புரட்டுவதிலும் அதில் வரும் செய்திகளைப் படிப்பதிலும், படங்களை பார்ப்பதிலும் சாதாரண வாசகருக்கும் பெரியவாளுக்கும் எத்தனை வேற்றுமை இருக்கிறது என்று எண்ணி வியந்தேன். // ஆச்சரியம்.

  60 காணும் பெரியவருக்கு நமஸ்காரங்கள்

  ReplyDelete
 38. Dowry should totally banned, but it is possible only by the mappilai and manamagal. Though some people are realizing the mistake and refusing to take dowry. All 90% of them are still greedy, they consider its their right and a prestige issue to take dowry. Very important and a interesting issue to be told strongly.
  Nalla kaalam pirakanaum for everybody very very beautiful.

  boom boom maattukaaran super, romba naal aachu paarthu...

  Usually I dont see Astami and Navami, but what happens is something goes wrong and becomes so delated and a very big failures. so ultimately we turn towards the calendar to see or our parents and in laws say it was ashtami and navami...

  Even another interesting day I am coming across is chandrashtami... I think sir you can give us some explanation about chandrashtami. my special request...

  Very very interesting post, sorry sir I some how missed this post.
  Thank you very much for sharing it with us...

  ReplyDelete
 39. அன்பின் வை.கோ - நிகழ்வு விளக்கம் அருமை - நன்று.

  நிஜமான சீர்திருத்தம் வரதட்சனை ஒழிப்புதான். ஐயமே இல்லை.

  //ஒரு பத்திரிக்கையைப் புரட்டுவதிலும் அதில் வரும் செய்திகளைப் படிப்பதிலும், படங்களை பார்ப்பதிலும் சாதாரண வாசகருக்கும் பெரியவாளுக்கும் எத்தனை வேற்றுமை இருக்கிறது என்று எண்ணி வியந்தேன். // - நிதர்சனமான செயல்.

  பதிவு நன்று நன்று - நல்வாழ்த்துகள் வை.கோ - நட்புடன் சீனா

  ReplyDelete
 40. அன்பின் வை.கோ

  ஜெயமுடன் ரமணீயமாக பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ..! ( உபயம் : இராஜ இராஜேஸ்வரி.

  நல்வாழ்த்துகள் நால்வருக்கும் - நட்புடன் சீனா

  ReplyDelete
 41. அன்பின் வை,கோ - ஒரு மகிழ்ச்சிப் பகிர்வும் நன்று - ஏற்கனவே ஒரு பதிவில் பகிர்ந்த நிக்ழ்வுதான். இருப்பினும் மறுபடி பகிர்வது தவறில்லை.

  ஒரு பதிவர் வீட்டில் ஒரு கல்யாணம் நடக்கப் போகிறது - தொடர்ந்து பல நற்செயல்கள் நடக்கப் போகின்றன. கொடுத்து வைத்தவர். 28 ஆகஸ்ட் புதன் - மறுபடியும் பதிவர் மனையில் அமர்கிறார். அய்யா மங்கல நாண் சூட்டப் போகிறார்.

  அழகாகக் கட்டிக்கிட்டு இருக்கிற வீடு வேலைகள் முடிந்து செவத்தம்மா கையிலே வீட்டுச்சாவி கெடைக்கப்போவுது! புது மனை புகு விழா சிறப்பாக நடை பெறப் போகிறது.

  அடுத்த மாதமே பேத்திக்கு காது குத்துக் கல்யாணம் நடக்கப் போகிறது.

  மனையில் பெற்றோர் அமரும் நல்லதொரு நிகழ்வினால் - அவர்களது மகளுக்கு நல்லதொரு வரன் பொருந்தி வருகிறது.

  மனையில் அமரும் நேரம் - கதாநாயகி இவ்வாண்டே பணி நிறைவு செய்யப் போகிறார்.

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 42. வரதட்சணை கேட்டால் கல்யாணத்திற்கு கண்டிப்பாக மறுத்து விட வேண்டியது பிள்ளையின் கடமை. ///

  ஹா...ஹா..ஹா... மாப்பிள்ளை எங்கே கேட்கிறார் வரதட்சணை?:) அதெல்லாம் மாமியார்தான்:))...

  ஓ இன்றுதானே ஜேமாமியின் டும் டும் டும்... மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 44. "கூர்ந்து கவனித்தல்" எனும் பழக்கம் இரத்தத்தில் ஊறியிருக்கவேண்டும்.

  ReplyDelete
 45. நாமல்லாம் ஒரு பத்திரிகையை மேலோட்டமாகத்தான் படிக்கிறோம் போல இருக்கு. திருமணங்கள் பற்றி எல்லாருமே நல்ல விஷயங்களை கடைப்பிடிக்கணும்

  ReplyDelete
 46. நெறய வெசயங்க சொல்லினீங்கோ ஓரளவுக்கு வெளங்கிகிட்டன்

  ReplyDelete
 47. நாம் ஒரு பத்திரிகையை படிப்பதற்கும் பெரியவா கூர்ந்து படிப்பதிலும் எவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கு. பெரியவா பெரியவாதான்.

  ReplyDelete
 48. அமுதத் துளிகள் சிந்திக்க வைக்கின்றன...பூம்பூம் மாட்டுக்காரன் படம் அழகு..

  ReplyDelete
 49. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (11.06.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/411810572654976/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete