About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, August 30, 2013

44] அரசியலில் மாணவர்கள்

2
ஸ்ரீராமஜயம்



  


உங்கள் வீடு ஒரு குடும்பம். இத்ற்கு அப்பாவும் அம்மாவும் தலைவர்கள்.

இப்படியே இந்த உலகம் முழுவதும் ஒரு பெரிய குடும்பம்.

இதற்கு இறைவனும் இறைவியும் அப்பாவும் அம்மாவுமாக இருக்கிறார்கள்.

கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பது மட்டும்தான்.

அதற்கு இடையூறாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது தனக்கும் தேச நட்புக்கும் இடையூறுதான் செய்யும்.

நம் தேசத்தை நல்லவழியில் நடத்துவதற்கு, முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று நிலைப்படுத்திக்கொண்டால்தான், அதை வளர்த்துக்கொள்ள முடியும்.

தெய்வ கார்யம், சமூக கார்யம் இரண்டிலும், ஒன்றையும் விடாமல் பண்ண வேண்டும். தெய்வ கார்யங்களுக்கு பக்தி வேண்டும்.

oooooOooooo

”பூக்காரி .... காமாட்சி”

காஞ்சி மடத்தருகில், காமாட்சி என்று ஒரு பூக்காரி இருந்தாள். அவள் பெரியவாளை "அப்பா" என்றுதான் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளை அர்ச்சிப்பாள்.

பெரியவா "ஏன் இப்படி பூவை வீணாக்கறே? இதை வித்தா உனக்கு காசு கிடைக்குமே!" என்பார். 

"காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" என்பாள். பூக்காரி. 

மடத்தில் ஒரு நியதி உண்டு. பெரியவா படுத்துக்கப் போய்விட்டால் யாரும் எழுப்பக்கூடாது. ஆனால், இந்தக் காமாட்சிக்கு மட்டும் விதிவிலக்கு. எத்தனை நேரமானாலும் வரலாம். 

ஏனெனில், பெரியவாளே அவளிடம், " நீ உன் வியாபாரத்தை முடித்துக்கொண்ட பிறகுதான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக்கூடாது!" என்று கட்டளை இட்டிருந்தார். 

அவளது பிழைப்பை தனக்காக விடுவதற்கு அந்தக் கருணாமூர்த்தி சம்மதிப்பாரா?

ஒரு நாள் பெரியவா, நாகராஜன் என்பவரை 9 மணி நியூஸ் கேட்டுச் சொல்லச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தார். வேதாந்த தத்துவங்கள் ஒரு புறம் இருந்தாலும், உலக நடப்பையும் தெரிந்து கொள்ளாமல் விடமாட்டார். அந்தச் செய்திகளை அலசி ஆராய்ந்த பிறகு படுக்கப் போக நாழி ஆகிவிடும். 

அன்று, புதுக்கோட்டையிலிருந்து "ஜானா" என்ற ஒரு பெண் பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டு வந்திருந்தாள். 

அந்தப் பாதுகைகளை அன்று காலை முதல் தன் காலை விட்டு பெரியவா கழற்றவேயில்லை. படுக்கைக்குப் போகும்முன் கொட்டகை சென்று, தேகசுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார். 

அப்போது நியூஸ் படிக்கும் நாகராஜன், "இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான்தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை!" என்று கழட்டுவதற்காகக் காத்திருந்தார். 

ஆனால், பெரியவா பாதுகையைக் கழட்டாமலேயே உட்கார்ந்திருந்தார். 

பூக்காரியும் நானும் அங்கு போய் நமஸ்காரம் பண்ணினோம். 

பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம், "இது உனக்குத்தான், எடுத்துக்கோ!" என்றார்.

"நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கிறது!" என்று நாகராஜன் குறையோடு திரும்பினார். 

அப்படிப்பட்ட அன்புக்கு அந்த ஏழைப்பூக்காரி பாத்திரமாயிருந்தாள். 

எத்தனையோ பேர்கள்,  அவளிடம் ”லட்ச ரூபாய் பணம் தருகிறோம், இந்தப் பாதுகையை எங்களுக்குக் கொடுத்துவிடு” என்றனர். அவள் அசையவேயில்லை. 

பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச்செய்தார். அவள் வீட்டுத் திருமணங்களுக்கு வண்டி, வண்டியாக கல்யாண சாமான்கள் அனுப்பினார்.

பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சி விடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியன போட்டுத்தான் அனுப்புவார்.

அவர் மறைவுக்குப்பின் வெறுங்கூடையைப் பார்க்கவே வருத்தமாக இருந்தது. 

"அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!" என்று ஒருநாள் புலம்பினாள்.

கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு செம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.

சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து, போயிடுத்து"ன்னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

இதுபோலவே பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

நம்பினோர் கெடுவதில்லை..... இது நான்கு மறை தீர்ப்பு.



[’கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்’ என்ற புத்தகத்தில் படித்தது]






ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.


ஓர் முக்கிய அறிவிப்பு


இந்தத்தொடரின் அடுத்த பகுதியான 
பகுதி: 45 சற்றே நீள, அகல, ஆழம் நிறைந்ததாக 
அமைந்துள்ளதால், அதை சேமித்து ஒரே பகுதியாக 
வெளியிடுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

அதனால் பகுதி-45 மட்டும் 
பகுதி-45/1/6, 45/2/6, 45/3/6, 45/4/6, 45/5/6 + 45/6/6 என
ஆறு சிறு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன.

01/09/2013 ஞாயிறுக்கும் 02/09/2013 திங்களுக்கும் 
இடைப்பட்ட இந்திய நேரம் 
நள்ளிரவு சுமார் 11 மணிக்கு ஆரம்பித்து 
அவைகள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியிடப்படும்.

ஒவ்வொரு பகுதியும் மிகவும் அபூர்வமான படங்களையும்
ஆச்சர்யமான தகவல்களையும் தாங்கி வருகின்றன

அனைத்து ஆறு ’சிறுபகுதி’களையும்
காணத்தவறாதீர்கள்.




-oOo-





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

30 / 31.08.2013 

51 comments:

  1. Valid thought about politics for students.As usual a divine read about the Kanji periyava

    ReplyDelete
  2. பூக்காரி காமாட்சி..... இருப்பது காஞ்சி ஆயிற்றே....

    அமுத மொழிகள் இன்று இன்னும் ருசியாக....

    தொடரட்டும்.

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு நன்றி... ஆறு சிறு பகுதிகளையும் பதிவர் திருவிழா முடிந்த பின் வெளியிடுவது செய்வதற்கும் நன்றி ஐயா...

    ReplyDelete

  4. பெரியவர் பற்றின செய்திகள் அனைத்துமே ஆச்சரியமளிக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. காஞ்சியில் அவள் பெயர் காமாட்சி. பூக்காரியின் பெயரும் காமாட்சி. பூக்காரியின் வடிவில் பூக்களால் அர்ச்சனை.

    ReplyDelete
  6. இப்படியே இந்த உலகம் முழுவதும் ஒரு பெரிய குடும்பம்.

    இதற்கு இறைவனும் இறைவியும் அப்பாவும் அம்மாவுமாக இருக்கிறார்கள்.

    உலகமே வாசுதேவ குடும்பம் அல்லவா..!

    ReplyDelete
  7. கணேச சர்மா அவர்களின், பெரியவா உரையில் மேலும் காமாட்சி பற்றி விரிவாக உள்ளது. கேளுங்கள்.

    ReplyDelete
  8. நம் தேசத்தை நல்லவழியில் நடத்துவதற்கு, முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று நிலைப்படுத்திக்கொண்டால்தான், அதை வளர்த்துக்கொள்ள முடியும்.

    தெய்வ கார்யம், சமூக கார்யம் இரண்டிலும், ஒன்றையும் விடாமல் பண்ண வேண்டும். தெய்வ கார்யங்களுக்கு பக்தி வேண்டும்.

    தேசத்தை சிறப்பாக வழி நடத்த
    தேகபலமும் ஆத்மபலமும் சிறக்க
    தெய்வம் அருள்புரியட்டும் ..!

    ReplyDelete
  9. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து, போயிடுத்து"ன்னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

    இதுபோலவே பல நிகழ்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்.

    நம்பினோர் கெடுவதில்லை..... இது நான்கு மறை தீர்ப்பு.

    கருணை தெய்வத்தின்
    கடாட்சம் குறைவின்றி அளித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. நம் தேசத்தை நல்லவழியில் நடத்துவதற்கு, முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று நிலைப்படுத்திக்கொண்டால்தான், அதை வளர்த்துக்கொள்ள முடியும்
    very very well said..........
    நம்பினோர் கெடுவதில்லை..... இது நான்கு மறை தீர்ப்பு.
    Swami theeruppukka kathirukken.....
    viji

    ReplyDelete
  11. நம் தேசத்தை நல்லவழியில் நடத்துவதற்கு, முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று நிலைப்படுத்திக்கொண்டால்தான், அதை வளர்த்துக்கொள்ள முடியும்.

    பூக்கார அம்மாவின் நம்பிக்கை பொய்க்கவில்லை.

    நம்பினோர் கெடுவதில்லை..... இது நான்கு மறை தீர்ப்பு.
    என்பது உண்மைதான் என்பதை பூக்கார அம்மாவின் கதை சொல்கிறது.

    ReplyDelete
  12. அற்புதமான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  13. அன்பின் வை.கோ - அரசியலில் மாணவர்கள் - பதிவு அருமை - குடும்பத்திற்கு பெற்றோர் தலைவனும் தலைவியும். அதே போல் உல்கத்திற்கு இறைவனும் இறைவியும் தலைவன் தலைவி. அருமையான சிந்தனை- நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  14. அன்பின் வை.கோ - காமாட்சியின் நம்பிக்கை பொய்க்கவில்லை

    //"அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவாயா!" என்று ஒருநாள் புலம்பினாள்.

    கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு செம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.//

    சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து, போயிடுத்து"ன்னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

    காமாட்சியைப் பொறுத்த வரை மகாப் பெரியவா மறையவில்லை.

    பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  15. //கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பது மட்டும்தான்//
    கல்வியே அழியா செல்வம்
    அனைத்து பகுதிகளையும் காண ஆவலோடு...

    ReplyDelete
  16. உண்மைதான்... கடவுளை நம்பினோர் கைவிடப்படார்ர்...

    ReplyDelete
  17. தொட்டணைத் தூரும் மணற்கேணி மாந்தர்க்கு
    தொட்டணைத்தூறும் அறிவு

    கல்வியே அழிவிலா செல்வம்
    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்
    அருமை ஐயா நன்றி

    ReplyDelete
  18. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து, போயிடுத்து"ன்னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.//

    ஆத்மார்த்தமான பக்தி!!

    ReplyDelete
  19. பெரியவர் மீது கொண்ட பக்தியாலும் பற்றுதலாலும் பூக்காரி காமாட்சி தன் பிழைப்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருக்க பெரியவர் வைத்த அன்புக்கட்டளை வியப்பளித்தது. அந்த ஏழையின் வேண்டுதலை, தான் சித்தியான பின்பும் கூட நிறைவேற்றியமை கண்டு மனம் நெகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  20. சமாதிக்கு நேரே முறையிட்டால்கூட பதில் சொல்லக்கூடிய சாமியை, "போயிடுத்து, போயிடுத்து"ன்னு யாரும் சொல்லக்கூடாது என்று அவள் எல்லோரிடமும் சொல்லுவாள்.

    என்ன ஒரு ஆழமான பக்தி.. சிலிர்க்கிறது !

    ReplyDelete
  21. "பிரத்தியட்சமாக அவர் அருளைத் தந்து கொண்டுதான் வருகிறார்." மகான்களால்தான் முடியும்.

    அமுதமழையில் நனைந்தோம்.

    ReplyDelete
  22. Comment received from Mr Pattabi Raman Sir, which I am unable to Publish straight.

    Mail message:

    //Pattabi Raman 16:25 (28 minutes ago) to me
    Pattabi Raman has left a new comment on your post "44] அரசியலில் மாணவர்கள்":

    அறிவுரைகள் அறவுரைகள்போல் நன்றாகத்தான் இருக்கிறது.

    ஆனால் எளிதில் உணர்ச்சி வசப்படும் மாணவ சமுதாயம், சுயநல அரசியல்வாதிகள் விரிக்கும் வலையில் விழுந்து தானும் அழிந்து தங்களை சார்ந்தோரையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றனர்.

    எல்லாம் காலத்தின் கோலம்.

    சுயநலமில்லா மகான்கள்தான் இந்த சமுதாயத்தை நல்ல வழியில் வழி நடத்த முடியும்.

    Publish
    Delete
    Mark as spam //

    தங்களின் வருகை + கருத்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா. vgk

    ReplyDelete
  23. பூக்காரி காமாட்சிக்கு பெரியவரின் கருணை....

    ஆறு பிரிவுகளாக அடுத்த பதிவா... கலக்குங்க ஐயா.

    ReplyDelete
  24. Lovely story and a very interesting post...

    ReplyDelete
  25. காஞ்சிபுரம் காமாட்சிக்கு பூவழியாகவே அருள் புரிந்திருக்கிறாரே!
    உங்கள் பதிவுகளைப் படித்தபிறகு எனக்கு காஞ்சிபுரம் சென்று அவர் சமாதியை தரிசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  26. முற்றிலும் கேட்டறியாத ஒரு நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  27. நம்பினோர் கைவிடப்படுவதில்லை..மெய்சிலிர்த்த பகிர்வு!!

    ReplyDelete
  28. ஸ்ரீ கிருஷ்ணரிடம் நாவல்பழத்திற்கு, பரமபதம் கேட்ட நாவல் பழக்காரியும், இந்தக் காமாட்சியும் ஒன்று தான்!

    ReplyDelete
  29. காமாட்சிக்கு கிடைத்த பேறு பெருமை மிகுந்தது...

    ReplyDelete
  30. பூக்காரிக்கு பூவினாலேயே அருள்காட்டி இருக்கிரார். உண்மையான பக்திக்கு ஒரு சான்று. நம்பிக்கைக்குக் கிடைத்த ஒரு உன்னதஎடுத்துக்காட்டு பூ.க்கார காமாட்சி. அன்புடன்

    ReplyDelete
  31. கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பது மட்டும்தான்.


    அதற்கு இடையூறாக அரசியலில் ஈடுபாடு காட்டுவது தனக்கும் தேச நட்புக்கும் இடையூறுதான் செய்யும்.


    நம் தேசத்தை நல்லவழியில் நடத்துவதற்கு, முதலில் நல்லபுத்தியும், தர்மபலமும், தெய்வபலமும் பெற்று நிலைப்படுத்திக்கொண்டால்தான், அதை வளர்த்துக்கொள்ள முடியும்.
    // அற்புதமான, பின்பற்ற வேண்டிய அமுத மொழி! நன்றி ஐயா!

    ReplyDelete
  32. தெய்வ பக்தியும் தேச பக்தியும் இரண்டும் தேவை பாரதியார் விவேகானந்தர் பசும்பொன்முத்துராமலிஙத்தேவர் போன்றோர் முன்மாதிரி.பூக்காரி காமாக்ஷி முன் வினை பயன் பெரியவாளின் கருணை கிடைத்திருக்கிறது நல்ல பகிர்வு நன்றி

    ReplyDelete
  33. //கல்வி கற்கிற காலத்தில் ஆற்றவேண்டிய கடமை கல்வி கற்பது மட்டும்தான்.//

    அதை ஒழுங்கா கத்துக்கிட்டா மத்ததெல்லாம் தானே வந்துடுமே.

    "காசு பெரிசா சாமி! உன் தலையில் அர்ச்சித்தால் அதற்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" என்பாள். பூக்காரி. //

    ஒரு பூக்காரிக்கு என்ன ஒரு நம்பிக்கை.

    //கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு செம்பரத்தைப் பூ யாரோ வீசி எறிந்தது போல் வந்து அவள் கூடையில் விழுந்தது.//

    படிக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.

    12.01.2014 அன்று காஞ்சி மடத்திற்கு சென்றிருந்தோம். கல்யாணப் பத்திரிகையை மகா பெரியவாளின் அதிஷ்டானத்தில் வைப்பதற்காக. மன நிறைவுடன் திரும்பினோம். அங்கு கண்மூடி நின்ற போது ஒவ்வொரு நிகழ்ச்சியாக (நீங்கள் எழுதியுள்ளது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திரு சுவாமிநாதன் அவர்கள் விவரிப்பது) என் மனதில் தோன்றியது.

    அங்கு இருந்த பாதுகையைப் பார்த்தவுடன் ,’கோபு அண்ணா எவ்வளவு அதிர்ஷ்டசாலி, மகா பெரியவாள் கையால் பாதுகை ஒன்று பெற்றாரே’ என்று நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  34. பூக்காரி கொடுத்து வைத்தவள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2013 ஆகஸ்டு வரையிலான 32 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      Delete
  35. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை முதல் 32 மாதங்களில் உள்ள என் அனைத்துப் பதிவுகளிலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    ReplyDelete
  36. பூக்காரிக்கு பகவானின் பரிபூர்ண ஆசிகள் கிடைச்சிருக்கு அவ மிகவும் கொடுத்து வைத்தவள்

    ReplyDelete
    Replies
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2013 ஆகஸ்டு வரை முதல் 32 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      Delete
  37. பூக்காரிக்கு குருசாமி பாதுக கொடுத்தாங்களா யாருக்கு எதக்கொடுக்கணும்னு அவுகளுக்குதான தெரியும்

    ReplyDelete
  38. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை, முதல் 32 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    ReplyDelete
  39. உண்மைதான்... கடவுளை நம்பினோர் கைவிடப்படார்ர்...
    அந்த பூக்காரி அதிர்ஷ்ட சாலி பெரியவா கடைக்கண் பார்வை அவ மீது விழுந்துவிட்டது.

    ReplyDelete
  40. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் முடிய, என்னால் முதல் 32 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  41. ஆசைப்பட்டால் கிடைக்காது...அமைதி-காத்தால் கிடைக்கும்..

    ReplyDelete
  42. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    385 out of 750 (51.33%) within
    11 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை, என்னால் முதல் 32 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  43. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    385 out of 750 (51.33%) that too within
    Three Days from 17th December, 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
    திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2013 ஆகஸ்டு மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 32 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    ReplyDelete
  44. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ நேற்று (20.06.2018) பகிரப்பட்டுள்ளது.

    அதற்கான இணைப்பு:

    https://www.facebook.com/groups/396189224217111/permalink/418580355311331/

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete