About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Tuesday, December 24, 2013

100 / 2 / 2 ] வெற்றித்திருமகன்ஓர் மகிழ்ச்சிப் பகிர்வு


மேலே உள்ள படத்தில் நடுநாயகமாகத் தோன்றிடும் 

'சிங்கக்குட்டி'தான் 
என் கைக்குழந்தை சிரஞ்சீவி: 

‘G. SRIDHAR’

நான் பணியாற்றி ஓய்வுபெற்ற அதே பொதுத்துறை ’மஹாரத்னா’ நிறுவனமாகிய BHEL இல், அதே நிதித்துறையில்,  இவரும் தற்சமயம், ஓர் சீனியர் அதிகாரியாக பொறுப்பேற்று, பணியாற்றி வருகிறார்.

பணி நிமித்தமாக திருச்சியிலிருந்து சென்னை வழியாக கல்கத்தாவுக்கு சென்ற வாரம் 19.12.2013 அன்று விமானத்தில் பறந்து சென்றார். 

அதேபோல இவருடன் கூடவே திருச்சியிலிருந்து கல்கத்தா சென்றடைந்த மற்ற STAFF நால்வருக்கும் இவரே ’குழுத்தலைவர்’ [TEAM LEADER] ஆக இருந்து செயல்பட்டுள்ளார். 

இவர் தலைமையேற்ற அந்த அணி, 
தர மேலாண்மையில்
[QUALITY MANAGEMENT + QUALITY CIRCLE] 

முதல் பரிசும் 
தேசிய விருதுமான 
தங்கக்கோப்பையினை 
வென்றுள்ளது 

என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் இங்கு 
உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றியின் தொடர்ச்சியாக, இவர்களுக்கு, அடுத்து வெளிநாட்டினில் நடைபெற உள்ள, ஓர் தர மேலாண்மைக் கருத்தரங்கினில், கலந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பும் கிடைத்துள்ளது என்பது, மேலும் மகிழ்ச்சி தரக்கூடியதோர் விஷயமாகும். 

My Heartiest Congratulations  
and Best Wishes 
to my Dear Beloved Son 


 

 
G. SRIDHAR 

and his Team Members 
for this Wonderful and 
Very Great Achievements.

 

With Love + Affection,
V. Gopalakrishnan

-oOo-

அந்த நாள் .... ஞாபகம் .... 
நெஞ்சிலே .... வந்ததே .... 
ஸ்ரீதரா .... ஸ்ரீதரா ;)

-oOo-


"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்னோற்றான் கொல் எனுஞ்சொல்” 

என்ற திருக்குறளையும் எழுதி, 
என்னை மிகவும் பாராட்டி கெளரவித்து, 
எனக்கு இது சம்பந்தமாக 
முதல் தகவல் அளித்துள்ள

 
Mr. T. ANANTHASAYANAM  Sir
ADDITIONAL GENERAL MANAGER / FINANCE, 
BHEL, TIRUCHI-14 

அவர்களுக்கு என் மனமார்ந்த 
இனிய அன்பு நன்றிகளைத் 
தெரிவித்துக்கொள்கிறேன்.

-oOo-

”இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்ற திருக்குறளுக்கு ஏற்ப 
இந்த பொறுப்புள்ளதோர் சவால்கள் நிரம்பிய பணிக்கு, 
நம் BHELக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வெற்றியையும்,  பெருமையையும் எதிர்பார்த்து,

என் அன்பு மகனின் தலைமையில் 
இந்தக்குழுவினரை வடிகட்டித் தேர்ந்தெடுத்து, 
அனுப்பியுள்ள BHEL திருச்சி நிர்வாகத்திற்கும், 

அவ்வாறு எடுத்த மிகச்சரியான முடிவினில் 
பெரும்பங்கு வகித்துள்ளவர்களாகிய 

Mr. A.V. Krishnan Sir 
Executive Director

Mr. T. Chokkalingam Sir 
General Manager/Finance

and

Mr. T. Ananthasayanam Sir 
Addl. General Manager/Finance 

ஆகியோருக்கும் 
என் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் 
நல்வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன் தங்கள்,

V.GOPALAKRISHNAN
Retd. ACCOUNTS OFFICER (CASH) 
BHEL - TIRUCHI-14


oooooOooooo

 


 

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி தொடர்ந்து 
100 பகுதிகள் எழுதி வெளியிட்டுள்ள வேளையில் 
இந்த இனிய செய்தி கிடைத்துள்ளதும் 
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம் 
என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  

103 comments:

 1. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் வை.கோ.சார்.ஸ்ரீ தர் அவர்கள் மற்றும் டீமிற்கு பாராட்டுக்கள் பல.வெற்றி மேல் வெற்றி வந்து குவியட்டும்.ரொம்ப சந்தோஷம்.உங்கள் மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக் கொண்டது.பகிர்வு வழக்கம் போல் அருமை.

  ReplyDelete
  Replies
  1. Asiya Omar December 24, 2013 at 12:38 AM

   வாங்கோ, வணக்கம். இந்த என் குறிப்பிட்ட பதிவுக்கு முதன் முதலாக வருகை தந்துள்ளீர்கள்.

   ஆசியா கண்டமே திரண்டு வந்தது போல ஓர் மகிழ்ச்சி ஏற்பட்டது, எனக்கு. முதலில் அதற்கான என் ஸ்பெஷல் நன்றிகள் உங்களுக்கு மட்டும்.

   //வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் வை.கோ.சார். ஸ்ரீதர் அவர்கள் மற்றும் டீமிற்கு பாராட்டுக்கள் பல. வெற்றி மேல் வெற்றி வந்து குவியட்டும்.ரொம்ப சந்தோஷம். உங்கள் மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக் கொண்டது. பகிர்வு வழக்கம் போல் அருமை.//

   தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான இனிய கருத்துக்களுக்கு, பாராட்டுக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், சந்தோஷம் தொற்றிக் கொண்டதாகச் சொல்லி அருமையான பதிவு என்று கூறியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 2. Replies
  1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
   December 24, 2013 at 4:28 AM

   வாங்கோ, வணக்கம்.

   //புலிக்குப்பிறந்தது?//

   பூனையாகுமா!ன்னு சொல்லுவார்கள் என்று ஞாபகம் !

   எதிலும் ’சூ ர ப் பு லி யா ன’ உமக்குத் தெரியாத
   பழமொழியா என்ன?

   அமெரிக்காவிலிருந்து அமரிக்கையாகக் கொடுத்துள்ள பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி. நன்றி.

   அன்புடன் வீ........ஜீ

   Delete
 3. மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி December 24, 2013 at 4:44 AM

   வாருங்கள், ஐயா. வணக்கம் ஐயா.

   //மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகள் + பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   Delete
 4. அதிக மகிழ்ச்சி கொண்டேன்
  புலிக்குப் பிறந்தது
  புலியாகத்தானே இருக்கும்
  இன்னும் பல உச்சங்களைத் தொட
  தங்கள் புதல்வருக்கு அருளுமாறு
  அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. Ramani S December 24, 2013 at 4:57 AM

   வாருங்கள் திரு ரமணி, சார், வணக்கம்.

   //அதிக மகிழ்ச்சி கொண்டேன். புலிக்குப் பிறந்தது புலியாகத்தானே இருக்கும். இன்னும் பல உச்சங்களைத் தொட தங்கள் புதல்வருக்கு அருளுமாறு அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறோம். மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடன்.... //

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும், அன்னை மதுரை மீனாட்சியிடம் வேண்டுவதற்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 5. தஙுகள் மகனுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா.

  மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
  என்நோற்றான் கொல்எனும் சொல்

  ReplyDelete
  Replies
  1. கரந்தை ஜெயக்குமார் December 24, 2013 at 5:21 AM

   வாருங்கள், வணக்கம்.

   //தங்கள் மகனுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் ஐயா.

   மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
   என்நோற்றான் கொல்எனும் சொல்//

   குறளுடன் கூடிய நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 6. எனது வாழ்த்துக்கள் :) தங்கள் மகன் மற்றும் அப்பா இருவருக்கும் .

  பிள்ளைகள் ஒவ்வோர் அடியெடுத்து வைக்கும்போதும் எத்தனை சந்தோஷம் !!
  தங்களது சந்தோசம் உற்சாகம் எங்களையும் உற்சாகமூட்டுகிறது :)

  ReplyDelete
  Replies
  1. Cherub Crafts December 24, 2013 at 5:45 AM

   வாங்கோ நிர்மலா, வணக்கம். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் முதலில் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   //எனது வாழ்த்துக்கள் :) தங்கள் மகன் மற்றும் அப்பா இருவருக்கும் ./

   மிக்க மகிழ்ச்சி நிர்மலா.

   //பிள்ளைகள் ஒவ்வோர் அடியெடுத்து வைக்கும்போதும் எத்தனை சந்தோஷம் !!//

   ஆம் .... அவை [அவ்வாறு அடியெடுத்து வைப்பவை நல்ல அடிகளாக இருப்பின்] அளவிடமுடியாத சந்தோஷங்கள் தான்.

   //தங்களது சந்தோசம் உற்சாகம் எங்களையும் உற்சாகமூட்டுகிறது :)//

   ;))))) தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான சந்தோஷங்களுடன் கூடிய உற்சாகக் கருத்துக்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நிர்மலா.

   அன்பான ஆசிகளுடன் கோபு அண்ணா.

   Delete
 7. மிகவும் மகிழ்ச்சியான விஷயம்... தங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.. மேலும் பல வெற்றிகள் அவர்களைத் தேடி வரட்டும்...

  பெரியவாளின் அருள் தங்கள் குடும்பத்துக்கு என்றும் கிடைக்கட்டும்..

  ReplyDelete
  Replies
  1. ADHI VENKAT December 24, 2013 at 6:19 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மிகவும் மகிழ்ச்சியான விஷயம்... தங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள்.. மேலும் பல வெற்றிகள் அவர்களைத் தேடி வரட்டும்...

   பெரியவாளின் அருள் தங்கள் குடும்பத்துக்கு என்றும் கிடைக்கட்டும்..//

   மிகவும் சந்தோஷம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகள் + கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 8. Really happy to read this message & Congrats to Mr. Sridhar & all team members..I wish to all to get more Awards in future.
  I do agree with , all credits goes to Periyava's Anugraham.

  ReplyDelete
  Replies
  1. sripriya vidhyashankar December 24, 2013 at 6:23 AM

   வாங்கோ, வணக்கம்.

   //Really happy to read this message & Congrats to Mr. Sridhar & all team members..I wish to all to get more Awards in future.
   I do agree with , all credits goes to Periyava's Anugraham.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான பாராட்டுக்கள், வாழ்த்துகள் + கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். Thanks a Lot Madam. அன்புடன் vgk

   Delete
 9. வாழ்த்துக்கள் ஐயா. என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் திரு. ஸ்ரீதர் மற்றும் அவர்களது குழுவிற்கும் தெரியப் படுத்துங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Chokkan Subramanian December 24, 2013 at 6:35 AM

   வாங்கோ, வணக்கம். என் பதிவுக்குத்தங்களின் முதல் வருகைக்கு முதற்கண் என் நன்றிகள்.

   //வாழ்த்துக்கள் ஐயா. என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் திரு. ஸ்ரீதர் மற்றும் அவர்களது குழுவிற்கும் தெரியப் படுத்துங்கள்.//

   நிச்சயமாகத் தெரியப்படுத்துவேன்.

   என் வலைத்தளத்தினில் தங்களின் அன்பான முதல் வருகைக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   இந்தத்தொடரின் பகுதி 105/2/2 என்பதில் தங்களின் பெயர் சிறப்பிடம் பெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   அன்புடன் VGK

   Delete
 10. அன்பின் வை.கோ

  வெற்றித் திருமகன் - பதிவு அருமை

  அருமை மகன் வெற்றிகள் பெறும் போது பெற்றவர்களின் மனம் மகிழும். திருமகன்களின் திறமைகள் வெளிப்படும் போது மகிழும் முதல் உள்ளங்கள் பெற்றவர்களுடையதாகத்தான் இருக்கும் - மிக்க மகிழ்ச்சி

  ஸ்ரீதருக்கும் தங்களுக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. cheena (சீனா) December 24, 2013 at 6:55 AM

   //அன்பின் வை.கோ //

   வாங்கோ அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம்.

   //வெற்றித் திருமகன் - பதிவு அருமை

   அருமை மகன் வெற்றிகள் பெறும் போது பெற்றவர்களின் மனம் மகிழும். திருமகன்களின் திறமைகள் வெளிப்படும் போது மகிழும் முதல் உள்ளங்கள் பெற்றவர்களுடையதாகத்தான் இருக்கும் - மிக்க மகிழ்ச்சி

   ஸ்ரீதருக்கும் தங்களுக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

   தாங்கள் கேட்டுக்கொண்டபடி மற்றொரு பின்னூட்டத்தை நான் வெளியிடவில்லை, ஐயா.

   ஆனால் அதை என் மண்டையில் ஏற்றிக்கொண்டு விட்டேன்.

   I am ON THE JOB now. I shall try my level best. This is just for your information, please.

   அன்புடன் VGK

   Delete
 11. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Avargal Unmaigal December 24, 2013 at 7:21 AM

   வாங்கோ தம்பி, வணக்கம்.

   //வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்//

   நன்றிகள், நன்றிகள். ;))

   Delete
 12. வணக்கம்
  ஐயா.
  அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ஐயா பதிவாக பகிர்ந்தமைக்கு தங்களுக்கு பாராட்டுக்கள். ..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 13. Replies
  1. middleclassmadhavi December 24, 2013 at 7:34 AM

   வாங்கோ, வணக்கம்.

   //Congrats!//

   Thanks a Lot, for your very very lengthy comments, Madam. ;)

   There is one more Part No. 100/1/2 is also released today. Unfortunately it is not at all appearing in Dash Board. This is just for your information, only.

   http://gopu1949.blogspot.in/2013/12/100-1-2-3-of-3.html

   Delete
 14. மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் மகனும், அவர் குடும்பமும் இதே சந்தோஷத்தோடும் மன நிறைவோடும் வாழ்ந்து உங்களையும், உங்கள் மனைவியையும் எந்நாளும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைக்கப் பிரார்த்தனைகள். எந்நாளும் ஈசன் துணையிருப்பான். உங்கள் மகனுக்கு எங்கள் இருவரின் வாழ்த்துகள்/ஆசிகள்.

  ReplyDelete
  Replies
  1. Geetha Sambasivam December 24, 2013 at 8:59 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மனம் நிறைந்த வாழ்த்துகள். உங்கள் மகனும், அவர் குடும்பமும் இதே சந்தோஷத்தோடும் மன நிறைவோடும் வாழ்ந்து உங்களையும், உங்கள் மனைவியையும் எந்நாளும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைக்கப் பிரார்த்தனைகள்.//


   சந்தோஷம்.

   //எந்நாளும் ஈசன் துணையிருப்பான். //

   மிக்க மகிழ்ச்சி.

   //உங்கள் மகனுக்கு எங்கள் இருவரின் வாழ்த்துகள்/ஆசிகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் என் மகனுக்கான தங்கள் இருவரின் வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 15. My hearty congratulations to you and your beloved son Mr. G.Sridhar.

  ReplyDelete
  Replies
  1. Nagarajan Narayanan December 24, 2013 at 9:19 AM

   Dear Sir, வாங்கோ, வணக்கம்.

   //My hearty congratulations to you and your beloved son Mr. G.Sridhar.//

   Thank you very much, Sir. Please convey this sweet news and my kind wishes / greetings ..... to your Mrs. also.

   அன்புடன் கோபு மாமா

   Delete
 16. தர மேலாண்மையில்
  [QUALITY MANAGEMENT + QUALITY CIRCLE]

  முதல் பரிசும்
  தேசிய விருதுமான
  தங்கக்கோப்பையினை
  வென்றுள்ளதற்கு பாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 24, 2013 at 9:35 AM

   வாங்கோ, வாங்கோ, வணக்கம்.

   //தர மேலாண்மையில்
   [QUALITY MANAGEMENT + QUALITY CIRCLE]

   முதல் பரிசும்
   தேசிய விருதுமான
   தங்கக்கோப்பையினை
   வென்றுள்ளதற்கு பாராட்டுக்கள்.. இனிய வாழ்த்துகள்..//

   மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்களுக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 17. அனைவர்க்கும் வாழ்த்துக்கள்....தக்க சமயத்தில் பாராட்டி மகிழ்விக்கும் வை.கோ சாருக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உஷா அன்பரசு December 24, 2013 at 10:12 AM

   வாங்கோ டீச்சர், வணக்கம் டீச்சர்.

   //அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.... தக்க சமயத்தில் பாராட்டி மகிழ்விக்கும் வை.கோ சாருக்கு நன்றி!//

   என் மீது பாசமுள்ள டீச்சரின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   Delete
 18. வாழ்த்துக்கள் கோபு சார்.

  ReplyDelete
  Replies
  1. G.M Balasubramaniam December 24, 2013 at 11:08 AM

   வாங்கோ ஐயா, வணக்கம் ஐயா.

   //வாழ்த்துக்கள் கோபு சார்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ஐயா.

   அன்புடன் கோபு.

   Delete
 19. அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! உங்கள் அன்புமகன் G ஸ்ரீதர் ( Senior Officer, BHEL) அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ December 24, 2013 at 11:50 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! ஒரு நல்ல மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! உங்கள் அன்புமகன் G ஸ்ரீதர் ( Senior Officer, BHEL) அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்! //

   தங்களின் அன்பான வருகைக்கும், எங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   அன்புடன் VGK

   Delete
 20. // ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி தொடர்ந்து 100 பகுதிகள் எழுதி வெளியிட்டுள்ள வேளையில் இந்த இனிய செய்தி கிடைத்துள்ளதும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம்
  என்றே நினைக்கத் தோன்றுகிறது. //

  உங்கள் நம்பிக்கையும் நல்லெண்ணமும் என்றும் வெல்லட்டும்! மீண்டும் எனது வாழ்த்துக்கள்!  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோ December 24, 2013 at 11:53 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கின்றன ஐயா.

   ***** ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி தொடர்ந்து 100 பகுதிகள் எழுதி வெளியிட்டுள்ள வேளையில் இந்த இனிய செய்தி கிடைத்துள்ளதும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம்
   என்றே நினைக்கத் தோன்றுகிறது. *****

   //உங்கள் நம்பிக்கையும் நல்லெண்ணமும் என்றும் வெல்லட்டும்! மீண்டும் எனது வாழ்த்துக்கள்!//

   ஆஹா, அழகாகச் சொல்லியுள்ளீர்கள், ஐயா.

   நல்லெண்ணத்துடன் கூடிய நம்பிக்கை மட்டும் தானே நம்மை தினமும் வழி நடத்திச்செல்கிறது!

   அது வெல்லட்டும் என தாங்கள் சொல்வது, அச்சு வெல்லத்தை வாயில் அடக்கிக்கொண்டது போல இனிக்கிறது ஐயா. ;) மிக்க மகிழ்ச்சியும், நன்றிகளும்.

   அன்புடன் VGK

   Delete
 21. வெற்றித்திருமகனுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி தொடர்ந்து
  100 பகுதிகள் எழுதி வெளியிட்டுள்ள வேளையில்
  இந்த இனிய செய்தி கிடைத்துள்ளதும்
  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம்
  என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  நூறாவது பதிவாக வெற்றிச்செய்தி..!
  பல நூறு வெற்றிகள் பெற்றுச் சிறப்பதற்கான வெற்றி அறிவிப்பு ..!

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி December 24, 2013 at 12:12 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது. ;)

   //வெற்றித்திருமகனுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..//

   ரொம்ப சந்தோஷம்.

   **ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி தொடர்ந்து
   100 பகுதிகள் எழுதி வெளியிட்டுள்ள வேளையில்
   இந்த இனிய செய்தி கிடைத்துள்ளதும்
   ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம்
   என்றே நினைக்கத் தோன்றுகிறது.**

   //நூறாவது பதிவாக வெற்றிச்செய்தி..! பல நூறு வெற்றிகள் பெற்றுச் சிறப்பதற்கான வெற்றி அறிவிப்பு ..!//

   ஆஹா, வெற்றித்திருமகளே நேரில் வந்து வாழ்த்தியுள்ளதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், வரப்போகும் பெறப்போகும் வெற்றிகளுக்கு முரசு கொட்டி அசரீரி போல அறிவித்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ;)

   அன்புடன் VGK

   Delete
 22. உங்கள் வெற்றித் திருமகனாம் ஸ்ரீதரனுக்கு என் வாழ்துக்களையும் சொல்லிவிடுங்கள். அவர் மென்மேலும் உயர ஆசிகள் பல.

  //தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
  முந்தி இருப்பச் செயல்.// என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ற
  தந்தைக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. rajalakshmi paramasivam December 24, 2013 at 12:23 PM

   வாங்கோ, வணக்கம்.

   ////உங்கள் வெற்றித் திருமகனாம் ஸ்ரீதரனுக்கு என் வாழ்த்துகளையும் சொல்லிவிடுங்கள். அவர் மென்மேலும் உயர ஆசிகள் பல.////

   ஆகட்டும் நாளைக்கே சொல்லி விடுகிறேன். He is now on the way from Calcutta to Chennai - Flying. ;)

   //தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.// என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ற தந்தைக்கும் வாழ்த்துக்கள். ////

   மிகவும் சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK

   Delete
 23. //"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
  என்னோற்றான் கொல் எனுஞ்சொல்” //

  என் பங்கிற்கு ஒரு குறள்...

  ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
  சான்றோன் எனக் கேட்ட தாய்.

  புத்தாண்டிற்கு 'டபுள் ஸ்வீட்' சாப்பிட்ட மாதிரி இருக்கு.
  தங்கள் கைக்குழந்தையின் வெற்றிக்காக தாயும் தந்தையும் சேர்ந்து தந்தது..

  வாழ்த்தும் வரிசையில் நானும்...

  ReplyDelete
  Replies
  1. ஜீவி December 24, 2013 at 2:00 PM

   வாருங்கள் ஐயா, வணங்களும் நமஸ்காரங்களும் ஐயா.

   **"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
   என்னோற்றான் கொல் எனுஞ்சொல்” **

   இது அந்த உயர் அதிகாரி எனக்கு எழுதி அனுப்பியிருந்த குறள் ஐயா.

   //என் பங்கிற்கு ஒரு குறள்...

   ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
   சான்றோன் எனக் கேட்ட தாய்.//

   ஆம் ஐயா, தாங்கள் சொல்லியுள்ள குறள் இந்த இடத்தில் அவசியமான மிகவும் பொருத்தமான குறள்தான் ஐயா.

   //புத்தாண்டிற்கு 'டபுள் ஸ்வீட்' சாப்பிட்ட மாதிரி இருக்கு.
   தங்கள் கைக்குழந்தையின் வெற்றிக்காக தாயும் தந்தையும் சேர்ந்து தந்தது..//

   இதைத் தங்களைப் போன்ற சான்றோர் வாயால் கேட்க எனக்கும் ..... எங்களுக்கும் ..... இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது ஐயா.

   // வாழ்த்தும் வரிசையில் நானும்...//

   தங்களின் வாழ்த்தும் இன்று இங்கு கிடைத்திட நாங்கள் என்ன தவம் செய்தோமோ !

   மிக்க மகிழ்ச்சி. ;)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தித்திக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   Delete
 24. "சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்..... "

  - வை.கோ.

  உங்களைப் போலவே!

  ReplyDelete
  Replies
  1. ஜீவி December 24, 2013 at 2:04 PM

   வாங்கோ, வணக்கம். மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

   *****"சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்..... "

   - வை.கோபாலகிருஷ்ணன் *****

   //உங்களைப் போலவே!//

   ;))))) சந்தோஷம். பொதுவாக இன்றைய இளம் தலைமுறையினர் பிறக்கும்போதே அதி புத்திசாலிகளாக இருக்கின்றனர். நம்மையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள் போலிருக்கிறது. ;)))))

   எல்லாம் பகவான் செயல்.

   மிக்க நன்றி.

   Delete

 25. ​சிங்கக்குட்டி என்பது எவ்வளவு பொருத்தம் .சிங்கத்தின் மகனல்லவா .
  மகனுக்குரிய சொந்தத் திறமையுடன் ,அவனை சரியான விதத்தில் சிறு வயது முதற்கொண்டே ஊக்குவித்த பெருமை தங்களையே சாரும்.
  மேல் மேலும் நிறைய சாதனைகளை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் December 24, 2013 at 3:43 PM

   வாப்பா கணேஷ், செளக்யமா? அங்கு செளதியில் நம் அஹத்தில் அனைவரும் செளக்யம் தானே?

   //சிங்கக்குட்டி என்பது எவ்வளவு பொருத்தம். சிங்கத்தின் மகனல்லவா .//

   அடடா ! உன் வாயால் இதைக்கேட்க என் பிடறியெல்லாம் சிலிர்த்துப்போகிறதே ! ;)

   //மகனுக்குரிய சொந்தத் திறமையுடன், அவனை சரியான விதத்தில் சிறு வயது முதற்கொண்டே ஊக்குவித்த பெருமை தங்களையே சாரும்.//

   உன் புரிதலுக்கு மிக்க நன்றி, கணேஷ். உண்மையிலேயே அவனின் அடர்ந்த முடிபூராவும் மூளையாக உள்ளது கணேஷ்.

   அவன் பிள்ளை அநிருத் அதற்கு மேல் இருக்கிறான்.

   அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும், சமயத்தில் பயமாகவும் உள்ளது.

   நீ மட்டும் என்னவாம் ! குழந்தையிலிருந்து இன்றுவரை உன் மூளையும் அபார மூளை தான். எனக்கு அனைத்தும் நினைவில் உள்ளன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்

   //மேல் மேலும் நிறைய சாதனைகளை படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். //

   உன் அன்பான வருகைக்கும் அழகான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், கணேஷ்.

   அன்புடன் கோபு மாமா

   Delete
  2. My Dear Ganesh,

   இன்று 01.10.2016 சற்று முன் கிடைத்துள்ளதோர் மகிழ்ச்சியான செய்தியை உன்னிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

   சிங்கக்குட்டி ஸ்ரீதரின் மூத்த பிள்ளை, ஐந்து வயதே ஆன அநிருத் ஓர் அபாரமான சாதனை செய்துள்ளான்.

   ’அநிருத்’ பிறவியிலேயே, அபாரமான கற்பனைகள் அதிகம் வாய்ந்துள்ள ஓர் ஓவியன் என்பது உனக்குத் தெரிந்திருக்கலாம்.

   சமீபத்தில் நம் தமிழக அரசாங்கத்தின் காட்டு இலாகாவினரால், மிகச் சிறிய குழந்தைகளுக்கான ஓர் ஓவியப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.

   அதில் இவனும் கலந்துகொண்டு, நடுவர்கள் முன்னிலையில் ஓர் ஓவியம் வரைந்து, வண்ணங்கள் கொடுத்துவிட்டு, வந்திருந்தான்.

   அதன் முடிவு என்ன ஆனது? என இன்று நம் கிரிஜாஸ்ரீதர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, திருச்சி மாவட்ட அளவில் நம் அநிருத் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அளவில் முதலிடம் பெறவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று சொல்லியுள்ளார்கள்.

   இதனைக் கேட்டு பூரித்துப் போய் உள்ளேன், நான்.

   அன்புடன் கோபு மாமா

   Delete
 26. வெற்றித்திருமகனுக்கு வாழ்த்துகள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. வேல் December 24, 2013 at 3:46 PM

   //வெற்றித்திருமகனுக்கு வாழ்த்துகள் ஐயா//

   வாருங்கள், வணக்கம். வேலும் மயிலும் துணை. மிக்க நன்றி.

   Delete
 27. வெற்றி திருமகனின் வாழ்வில் மென்மேலும் வெற்றிகளை தொடர்ந்து குவிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. Pattabi Raman December 24, 2013 at 4:52 PM

   வாங்கோ அண்ணா, நமஸ்காரங்கள் அண்ணா.

   //வெற்றி திருமகனின் வாழ்வில் மென்மேலும் வெற்றிகளை தொடர்ந்து குவிக்க வாழ்த்துக்கள்//

   ராம் ராம் ! தங்களின் ஆசிகளுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், அண்ணா.

   அன்புடன் கோபு

   Delete
 28. அன்புள்ள மாமா அவர்களுக்கு இந்த சந்தோஷத்தை நானும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன் .பலரும் திருக்குறள் மூலம் கூறி விட்டார்கள்.அனைத்துக்கும் மஹாபெரியவாளின் கருணையே காரணம் கிரிஜாவும் இது பற்றி நிறையவிஷயங்கள் சொன்னாள் விடாமுயற்சி தன்னம்பிக்கை உடையவர்கள் வாழ்வில் முன்னேறுவார்கள்.பெங்களூருக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பு திருச்சிக்கு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி தாஙகள் சூட்டோடு சூடாக இதை பிரமாதப்படுத்திவிட்டிர்கள்.இந்த விஷயத்தில் உங்களை மிஞ்ஜ வேறு யாரும் இல்லை .இத்துடன் நானும் ஒரு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.நமது குருப்ரஸாத் probation period முடித்து ஆணை கிடைத்ததாக இப்போதுதான் தெரிவித்தான். கடவுள் அருளால் இனி வருங்காலங்களிலும் மேலும் மேலும் முன்னேற பிரார்த்தனைசெய்கிறேன் நன்றி

  ReplyDelete
 29. Sundaresan Gangadharan December 24, 2013 at 4:55 PM

  அன்புள்ள சுந்தர் ..... வாப்பா, வணக்கம். அன்பான ஆசிகள்.

  //நமது குருப்ரஸாத் probation period முடித்து ஆணை கிடைத்ததாக இப்போதுதான் தெரிவித்தான்.//

  ஆஹா, இது மேலும் மகிழ்ச்சியளிக்கும் வெரி வெரி ஸ்வீட் நியூஸ்தான். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நானும் அவனுடன் இப்போது JUST NOW பேசினேன். வாழ்த்தினேன்.

  //தாங்கள் சூட்டோடு சூடாக இதை பிரமாதப்படுத்திவிட்டிர்கள். இந்த விஷயத்தில் உங்களை மிஞ்ஜ வேறு யாரும் இல்லை//

  ’கிரிஜா மணாளன்’ ஆன [உன் மாப்பிள்ளை] நம் ஸ்ரீதர் கல்கத்தாவிலிருந்து இன்று புறப்பட்டு நாளை திருச்சிக்கு வரும்முன் இதை பிரமாதப்படுத்தி விட வேண்டும் என்றுதான் நான் இவ்வளவு அவசரம் காட்டினேன்.

  //அனைத்துக்கும் மஹாபெரியவாளின் கருணையே காரணம்//

  மிகச்சரியாகச் சொல்லியுள்ளாய். அதே ..... அதே !!

  மேலும் நம் பேரன் அநிருத் + பிறக்கப்போகும் நம் பேத்தி ? செள. இராஜராஜேஸ்வரியின், அதிர்ஷ்டங்களும் இதில் சேர்ந்துள்ளன என நான் நினைக்கிறேன். ;)))))

  எல்லாம் நல்லபடியாக நடக்கணும்.

  குருவருளும் திருவருளும் பெரியோர்கள் ஆசீர்வாதங்களும் எப்போதும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போம்.

  அன்புடன் கோபு மாமா.

  ReplyDelete
 30. மிகவும் மகிழ்ச்சியான செய்தி . உங்கள் மகன் ஸ்ரீதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் குழுவை சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றி தொடர்ந்து
  100 பகுதிகள் எழுதி வெளியிட்டுள்ள வேளையில்
  இந்த இனிய செய்தி கிடைத்துள்ளதும்
  ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹம்
  என்றே நினைக்கத் தோன்றுகிறது.//
  குருவருள் எப்போதும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு உண்டு.
  நீங்கள் நினைப்பது உண்மைதான்.
  குருவருள் இருந்தால் திருவருள் வந்துவிடும்.
  மகிழ்வான செய்தி பிறக்க போகிற பேத்தி எல்லா வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.

  //குருவருளும் திருவருளும் பெரியோர்கள் ஆசீர்வாதங்களும் எப்போதும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போம். //

  நானும் பிரார்த்திக்கிறேன்.
  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு December 24, 2013 at 8:13 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மிகவும் மகிழ்ச்சியான செய்தி . உங்கள் மகன் ஸ்ரீதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் குழுவை சேர்ந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

   மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

   //மகிழ்வான செய்தி பிறக்க போகிற பேத்தி எல்லா வளங்களையும், நலங்களையும் கொண்டு வந்தது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.//

   எல்லாம் நல்லபடியாக சுபமாக நடந்து முடிய வேண்டும்.

   **குருவருளும் திருவருளும் பெரியோர்கள் ஆசீர்வாதங்களும் எப்போதும் நமக்கும் நம் குழந்தைகளுக்கும் கிடைக்கப் பிரார்த்திப்போம்.**

   //நானும் பிரார்த்திக்கிறேன்.//

   தங்களின் ஆத்மார்த்தமான சொல்லுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி, மேடம்.

   //வாழ்க வளமுடன்.//

   வருகைக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   Delete
 31. செள. இராஜராஜேஸ்வரியின், அதிர்ஷ்டங்களும் இதில் சேர்ந்துள்ளன//

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு December 24, 2013 at 8:16 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது.

   //செள. இராஜராஜேஸ்வரியின், அதிர்ஷ்டங்களும் இதில் சேர்ந்துள்ளன//

   பிரஸவம் நல்லபடியாக ஆகி தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும். பிறக்கப்போவது பேத்தியாக இருக்க வேண்டும் என்று எனக்கோர் சின்ன ஆசை. அவ்வாறு பேத்தியாகவே பிறந்தால் ’இராஜராஜேஸ்வரி’ என கம்பீரமாக பெயர் சூட்ட வேண்டும் என்று எனக்கோர் பெரிய ஆசை.

   குருவருளும் திருவருளும் சேர்ந்து எல்லாம் நல்லபடியாக நம் விருப்பம்போல நடக்க வேண்டும். எல்லாம் அவன் செயல். நடப்பதெல்லாம் நாராயணன் செயல். எது நடக்குமோ, எது பிராப்தமோ அது நல்லதாக நல்லபடியாக சிரமமில்லாமல் நடந்தால் சரியே / சம்மதமே.

   //வாழ்த்துக்கள்.//

   மீண்டும் நன்றிகள்.

   Delete
 32. முதல் பரிசும்
  தேசிய விருதுமான
  தங்கக்கோப்பையினை
  வென்றுள்ளது

  என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் இங்கு
  உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.//
  நீங்கள் வேலை பார்த்த போது பெற்ற வெற்றிகளை போலவே உங்கள் மகன் அவர்களும் பரிசுகள் பெற்று இருக்கிறார். பெரும் மகிழ்ச்சிதான்.
  எங்கள் ஆசீர்வாதங்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு December 24, 2013 at 8:21 PM

   வாங்கோ, வணக்கம். தங்களின் மீண்டும் மீண்டும் வருகை மீண்டும் மீண்டும் மகிழ்வளிக்கிறது.

   //நீங்கள் வேலை பார்த்த போது பெற்ற வெற்றிகளை போலவே உங்கள் மகன் அவர்களும் பரிசுகள் பெற்று இருக்கிறார். பெரும் மகிழ்ச்சிதான்.

   எங்கள் ஆசீர்வாதங்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதங்களே எங்களுக்கும் தேவை.

   அன்புடன் VGK

   Delete
 33. வாழ்த்துகள் .இந்த வெற்றியை பிரமாண்டமாக பகிர்ந்துள்ளீர்கள்.எதற்கும் திருஷ்டி வைத்திடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. thirumathi bs sridhar December 24, 2013 at 9:05 PM

   வாங்கோ ஆச்சி, வணக்கம் ஆச்சி, நலம் தானே ?

   //வாழ்த்துகள்.//

   சந்தோஷம். நன்றிகள்.

   //இந்த வெற்றியை பிரமாண்டமாக பகிர்ந்துள்ளீர்கள். எதற்கும் திருஷ்டி வைத்திடுங்கள்.//

   http://gopu1949.blogspot.in/2013/02/2.html

   ஏற்கனவே இந்த மேற்படிப் பதிவின் பின்னூட்டத்தில் தங்களை ஒரு டன் பூசணிக்காய்களை ஹரியானாவில் வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டுவந்து உங்கள் ராசியான கைகளாலேயே உடைக்கச்சொன்னேன். அந்த லாரியே இன்னும் இங்கு வந்துசேரவில்லை. ;)))))

   தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், என் மீதுள்ள ஆத்மார்த்தமான அக்கறைக்கும் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஆச்சி.

   அன்புடன் கோபு

   Delete
 34. அன்புடையீர்..
  தங்களது அன்பு மகன் ஸ்ரீதர் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  மேலும் பல வெற்றிகள் குவியட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜூ December 25, 2013 at 10:24 AM

   வாருங்கள், வணக்கம்.

   //அன்புடையீர்..
   தங்களது அன்பு மகன் ஸ்ரீதர் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் நல்வாழ்த்துக்கள்.

   மேலும் பல வெற்றிகள் குவியட்டும்!..//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 35. தர மேலாண்மையில்
  [QUALITY MANAGEMENT + QUALITY CIRCLE]

  முதல் பரிசும் தேசிய விருதுமான தங்கக்கோப்பையினை
  வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேரட்டும்! இதை விட மகிழ்வான தருணம் வேறு ஏதுமில்லை! எல்லாம் மஹாபெரியவாளின் பரிபூர்ணமானஆசிகளால் என்பதில் ஐயமில்லை! நன்றி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. Seshadri e.s. December 25, 2013 at 11:08 AM

   வாங்கோ, வணக்கம்.

   //தர மேலாண்மையில்
   [QUALITY MANAGEMENT + QUALITY CIRCLE]

   முதல் பரிசும் தேசிய விருதுமான தங்கக்கோப்பையினை
   வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேரட்டும்! இதை விட மகிழ்வான தருணம் வேறு ஏதுமில்லை! எல்லாம் மஹாபெரியவாளின் பரிபூர்ணமானஆசிகளால் என்பதில் ஐயமில்லை! நன்றி ஐயா!//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்வான வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். அன்புடன் VGK

   Delete
 36. பழம் நழுவிப்பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்து என்றுச் சொல்வார்களே, அம்மாதிரிஉங்கள் அன்பு மகனுக்கு ,முதல் பரிசும், தங்கக் கோப்பையை வென்றதற்கும், நான் மிகவும் ஸந்தோஷமடைகிறேன். எல்லாம் உங்களின் குருவின்
  மஹத்தான ஆசியும்,க்ருபா கடாக்ஷமும்தான்.
  ஸ்ரீதருக்கு என் பாராட்டுதல்களும்,அன்பார்ந்த ஆசிகளும். எல்லாம் வல்ல பசுபதீசுவரர் கிருபையால், உங்கள் குடும்பத்தினர் அனைவரும்,வாழ்க்கையின் எல்லாநலங்களும் பெற்று, பேரும்,புகழுடன் வாழ,ப்ரார்த்திக்கிறேன். அன்புடன்


  ReplyDelete
  Replies
  1. Kamatchi December 25, 2013 at 4:09 PM

   வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

   //பழம் நழுவிப்பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்து என்றுச் சொல்வார்களே, அம்மாதிரிஉங்கள் அன்பு மகனுக்கு, முதல் பரிசும், தங்கக் கோப்பையை வென்றதற்கும், நான் மிகவும் ஸந்தோஷமடைகிறேன். எல்லாம் உங்களின் குருவின் மஹத்தான ஆசியும்,க்ருபா கடாக்ஷமும்தான். ஸ்ரீதருக்கு என் பாராட்டுதல்களும், அன்பார்ந்த ஆசிகளும். எல்லாம் வல்ல பசுபதீசுவரர் கிருபையால், உங்கள் குடும்பத்தினர் அனைவரும், வாழ்க்கையின் எல்லாநலங்களும் பெற்று, பேரும், புகழுடன் வாழ, ப்ரார்த்திக்கிறேன். அன்புடன்//

   ரொம்ப ரொம்ப சந்தோஷம் மாமி.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்வான வாழ்த்துகளுக்கும், நேபாள பசுபதிநாதரின் க்ருபைகளை வேண்டி கொடுத்துள்ள ஆத்மார்த்தமான ஆசீர்வாதங்களுக்கும், என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   என்றும் அன்புடன் தங்கள் VGK

   Delete
 37. மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. kovaikkavi December 26, 2013 at 1:25 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
   Vetha.Elangathilakam.//

   தங்கள் அன்பான வருகை + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ஆகியவற்றிற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 38. அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
  நான் இன்று ( 26.12.2013 ) அதிகாலையிலேயே திருக்கடையூர் சென்று விட்டு, இப்பொழுதுதான் வீடு திரும்பினேன். இன்றைய
  ( 26.12.2013 ) வலைச்சரத்தில் எனது வலைப்பதிவை இந்தவார வலைச்சர ஆசிரியை சகோதரி கோமதி அரசு அறிமுகப்படுத்திய தகவலை, எனக்கு செல்போன் மூலம் முதன் முதல் தெரியப்படுத்திய மூத்த வலைப்பதிவராகிய தங்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தி.தமிழ் இளங்கோDecember 26, 2013 at 10:33 PM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! நான் இன்று
   ( 26.12.2013 ) அதிகாலையிலேயே திருக்கடையூர் சென்று விட்டு, இப்பொழுதுதான் வீடு திரும்பினேன்.//

   மிகவும் சந்தோஷம் ஐயா.

   // இன்றைய ( 26.12.2013 ) வலைச்சரத்தில் எனது வலைப்பதிவை இந்தவார வலைச்சர ஆசிரியை சகோதரி கோமதி அரசு அறிமுகப்படுத்திய தகவலை, எனக்கு செல்போன் மூலம் முதன் முதல் தெரியப்படுத்திய மூத்த வலைப்பதிவராகிய தங்களுக்கு நன்றி!//

   ஆஹா, அது அகஸ்மாத்தாக என் கண்களில் பட்டது ஐயா.

   தாங்கள் எனக்குத்தெரிந்த நெருங்கிய நண்பர் என்பதாலும், இது விஷயம் தங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ என்பதாலும், தங்கள் கைபேசி எண் என்னிடம் ரெடியாக இருந்ததாலும், உடனே தங்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்க விரும்பினேன். தெரிவித்தேன்.

   தங்களுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள், ஐயா.

   அன்புடன் VGK


   Delete
 39. மனம் நிறைந்த பாராட்டுகள்......

  மேலும் பல சிறப்புகள் உங்கள் மகனை வந்தடைய எனது வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வெங்கட் நாகராஜ் December 27, 2013 at 7:42 AM

   வாங்கோ, வெங்கட்ஜி, வணக்கம்.

   //மனம் நிறைந்த பாராட்டுகள்...... மேலும் பல சிறப்புகள் உங்கள் மகனை வந்தடைய எனது வாழ்த்துகள்.//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 40. மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 41. திருக்குறளோடு பகிர்ந்த விதம் மிகவும் சிறப்பு ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் December 27, 2013 at 9:23 AM

   வாங்கோ, திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே, வணக்கம்.

   //மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

   திருக்குறளோடு பகிர்ந்த விதம் மிகவும் சிறப்பு ஐயா...

   வாழ்த்துக்கள்...//

   சந்தோஷம். தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும், ’நன்றி மறப்பது நன்றன்று’ என்ற குறளுக்கேற்ப என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   Delete
 42. தங்கள் மகனுக்கு இனிய நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மாதேவி December 28, 2013 at 6:06 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //தங்கள் மகனுக்கு இனிய நல் வாழ்த்துகள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், என் மகனுக்கு அளித்துள்ள அழகான இனிய நல் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   தாங்கள் இந்த என் தொடரில் நான் இதுவரை வெளியிட்டுள்ள அனைத்து 102 பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்துக்கள் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   Delete
 43. உங்கள் கைக்குழந்தை சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கு எங்கள் அன்ப்பான ஆசிகளைச் சொல்லுங்கள். வரும் வருடம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், கோபு ஸார்!

  ReplyDelete
  Replies
  1. Ranjani Narayanan December 30, 2013 at 3:10 PM

   //உங்கள் கைக்குழந்தை சிரஞ்சீவி ஸ்ரீதரனுக்கு எங்கள் அன்பான ஆசிகளைச் சொல்லுங்கள். வரும் வருடம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், கோபு ஸார்!//

   வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

   Delete
 44. Aha,
  சந்தோசம்
  ரொம்ப ரொம்ப சந்தோசம்.
  முதல் பரிசும் தேசிய விருதுமான தங்கக்கோப்பையினை
  வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள்.
  வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேரட்டும்
  எல்லாம் மஹாபெரியவாளின் அனுக்ரகம்
  மஹாபெரியவாளின் அனுக்ரகம் உங்க புள்ளைக்கு நிறைய உண்டு சந்தேகமே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. viji January 14, 2014 at 1:01 PM

   //Aha, சந்தோசம். ரொம்ப ரொம்ப சந்தோசம். முதல் பரிசும் தேசிய விருதுமான தங்கக்கோப்பையினை வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். வெற்றி மீது வெற்றி வந்து அவரைச் சேரட்டும். எல்லாம் மஹாபெரியவாளின் அனுக்ரகம். மஹாபெரியவாளின் அனுக்ரகம் உங்க புள்ளைக்கு நிறைய உண்டு சந்தேகமே இல்லை.//

   வாங்கோ விஜி, வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   பிரியமுள்ள வீ......ஜீ

   Delete
 45. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete
  Replies
  1. பழனி. கந்தசாமி May 19, 2015 at 8:45 AM

   வாங்கோ சார், வணக்கம்.

   //பாராட்டுகளும் வாழ்த்துகளும்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, சார்.

   Delete
 46. ஸ்ரீதர் அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் August 24, 2015 at 3:00 PM

   வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

   //ஸ்ரீதர் அவர்களுக்கும் குழுவினருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)))))

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 47. குருஜி நீங்க8-- அடி பாஞசா உங்க அருமை மகனார் 16-- அடி பாயுரவங்களா இருக்காகளே. சந்யோசமுங்க.

  ReplyDelete
  Replies
  1. mru September 19, 2015 at 8:33 AM

   வாங்கோ முறுக்கு / முருகு / mru , வணக்கம்மா.

   //குருஜி நீங்க8-- அடி பாஞ்சா உங்க அருமை மகனார் 16-- அடி பாயுரவங்களா இருக்காகளே. சந்யோசமுங்க.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. 16 அடியென்ன .... அதற்கும் மேலேயே பாயுவானுங்க, அவரும் அவரின் இரு குட்டிப் பயலுகளும் :)))))

   Delete
  2. mru September 19, 2015 at 8:33 AM

   வாங்கோ முறுக்கு / முருகு / mru , வணக்கம்மா.

   //குருஜி நீங்க8-- அடி பாஞ்சா உங்க அருமை மகனார் 16-- அடி பாயுரவங்களா இருக்காகளே. சந்யோசமுங்க.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி. 16 அடியென்ன .... அதற்கும் மேலேயே பாயுவானுங்க, அவரும் அவரின் இரு குட்டிப் பயலுகளும் :)))))

   Delete
 48. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

  இதெல்லாம் அதிசயமே இல்லை போங்கோ.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 24, 2015 at 4:11 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
   இதெல்லாம் அதிசயமே இல்லை போங்கோ.//

   :) சரி, போறேன். :)

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 49. அல்ரெடி வந்துட்டு போயிட்டனே

  ReplyDelete
  Replies
  1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

   Delete
  2. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றிம்மா :)

   Delete
 50. திரு ஸ்ரீதர்& டீமுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
  ஈன்றபோதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்.( தகப்பன்)
  சந்தோஷமா இருக்கு.

  ReplyDelete
 51. புலிக்குப் பிறந்த பதினாறடி பாயும் திரு ஸ்ரீதர் மற்றும் டீமுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!!

  ReplyDelete
 52. Mail message received to me on 30.04.2017 at 9.48 AM

  அன்பின் கோபு ஸார் ,

  வெற்றித் திருமகன் ஸ்ரீதரன்....அவர்களின் சாதனைகள் புகைப்படங்கள் கண்டேன். ஒரு தந்தையென தங்களின் பெருமிதம் ஒவ்வொரு எழுத்திலும் மின்னக் கண்டேன்.

  வாழ்வில் உன்னதமான சமயங்களின் நிஜங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். தன்னை விட தனது குழந்தைகளின் சாதனையில் தான் உள்ளம் பூரிக்கும் அல்லவா.?

  வெற்றித்திருமகன் வாழ்வில் வெற்றிவாகை சூடி வலம் வந்து வளம் பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  இப்படிக்குத் தங்கள்
  எழுத்துக்களின் பரம ரஸிகை

  ReplyDelete
 53. அருமை கோபாலா மகிழ்ச்சி ஆசிகள் வாழ்க வளமுடன்......குரு

  ReplyDelete
 54. வாழ்த்துக்கள்.திரு.ஸ்ரீதர் அவர்கள் மேலும் பல வெற்றிகளை பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete