About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, December 12, 2013

94 ] மதங்களுக்குள் மதம் பிடிக்கும் மாயை ஏன்?

2
ஸ்ரீராமஜயம்ஒரு ஊருக்குச்செல்ல பலவித மார்க்கங்களும், பலவித வாகன வசதிகளும் இருப்பதுபோலவே, ஒரே பரமாத்மாவை அடையத்தான்  பல மதங்களும் இருக்கின்றன என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். 

ஹிந்துவாகப் பிறந்துள்ள ஒவ்வொருவனும், இந்த நம் முன்னோர்களின்  விசால மனப்பான்மையைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும். 

எந்த மதத்தையும் விட மிக அதிகமான சடங்குகளைச் சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு பிற மதத்தவரை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக்காணோம். இதுவே நாம், மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.

நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது.  அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்த வளைவே பெரிதாகவும்,  மற்றவை சின்னதாகவும் தெரியும். 

இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். 

யாரும் தாங்கள் பிறந்த  மதத்தைவிட்டு விலக வேண்டியதில்லை.

oooooOooooo

[ 1 ]

குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை

ஒரு தீபாவளி தினம். ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைத்து கொண்டு நின்றான். 

“என்ன” என்று ஜாடையால் கேட்டார்கள், பெரியவா.

”வேட்டி” என்று இழுத்தான் வண்டிக்காரன்.

பெரியவாள், தன் பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், “அவனுக்கு ஒரு வேஷ்டியும் துண்டும் வாங்கிக்கொடு” என்றார்கள்.

சிஷ்யர் வேஷ்டி + துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னரும் வண்டிக்காரன் நகரவே இல்லை.

” சம்சாரத்துக்குப் பொடவை...... ”

அந்த நேரத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை.

ஆனால், பெரியவாளோ, “அவனுக்கு ஒரு புடவை கொண்டுவந்து கொடு” என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள். 

சிஷ்யர்பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது.

பெரியவாள் தரிஸனத்திற்காகப் பலபேர் வந்திருந்தார்கள். 

அவர்களில் ஒரு அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். 

உடனே, சற்றுத் தொலைவில், ஒரு மறைவான இடத்திற்குச்சென்று, தான் கட்டிக்கொண்டிருந்த புதுப்புடவையைக் களைந்து விட்டு, ஒரு பழைய புடவையைக்கட்டிக்கொண்டு வந்தார். 

அந்தப்புதுப் புடவையையும் ஒரு சீட்டி ரவிக்கைத்துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.

பெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும். 

இந்தப்புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது.

சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிஸனத்திற்கு வந்தார்கள்.

”பெண்ணுக்குக் கல்யாணம் !  பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்”
:
”கல்யாணப்புடவைகள், காஞ்சீபுரம் கடைத்தெருவிலே வாங்கினேளா?”

 ”ஆமாம் .... கூறைப்புடவை, சம்பந்திக்குப் புடவை, இதர பந்துக்களுக்குப் புடவைன்னு .... ஏகப்பட்ட புடவைகள்.....”

பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடவையிலே ஒரு புடவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ?”

தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது.

பெரியவாளே கேட்கிறாளே.....

உயர்ந்த புடவையொன்றை எடுத்து ஸ்ரீ மஹாபெரியவா முன்னிலையில் திருவடிகளில் சமர்பித்தார்கள்.

தொண்டரைக்கூப்பிட்டு, “அதோ நிற்கிறாளே.... ஒரு ... மாமி. அவாகிட்டே இந்தப் புடவையைக்கொடு ... தீபாவளிப் புதுப் புடவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு, பழசைக் கட்டிண்டு நிற்கரா .....” என்றார்கள், பெரியவா.  

“தனியா, பரம ரகசியமா நடந்த அந்தச்சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?” என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், அந்த சிஷ்யர். 

ஆமாம், அந்த அம்மையாருக்கும் இதே ஆச்சர்யம் தான்.

oooooOooooo

[ 2 ]

கல்யாணம் மற்றும் பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை "பந்தி” என்கிறார்கள். 

இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? 

சமஸ்கிருதத்தில் "பங்க்தி என்பது தமிழில் "பந்தி ஆனது. 

"பங்க்தி என்றால் "சேர்ந்து உண்ணுதல். 

மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம் சுத்தமாகி விடும் என்பது ஐதீகம். 

அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர்” என்பர். 

நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும். 

எனவே, நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது.


oooooOooooo

[ 3 ]

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின்
பள்ளிநாட்களில் நிகழ்ந்ததோர்  நிகழ்ச்சி


ஒரு தடவை... பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் ஒருவர்  வந்தார். வழக்கமாகப் பள்ளிக் குழந்தைகளின் படிப்பறிவைச் சோதிக்கக் கேள்விகள் கேட்பது வழக்கமல்லவா?

ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக்டர், அந்த வகுப்புப் பையன் ஒருவனிடம் கேள்வி கேட்டார். 

அந்தக் கேள்விக்கு அந்தப் பையனால் பதில் சொல்ல முடியவில்லை.

பக்கத்து வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மஹான் எழுந்து வந்து, "சார்.. இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லட்டுமா?"  என்று கேட்க.... அவரும் உத்தரவு கொடுத்தார்.

மஹான்...'கட கட' வென அந்தப் பாடத்தின் பகுதியைச் சொன்னார்.

எல்லோருக்கும் மிகவும் வியப்பு. 'பெரிய வகுப்புக் கேள்விக்கு   


சின்ன வகுப்பில் படிக்கும்  
 பையன் பதில் சொல்கிறானே!' 


என்று பாராட்டி மகிழ்ந்தார்கள்.

பிற்காலத்தில் ஒரு தடவை ரா.கணபதியிடம் இந்த நிகழ்ச்சியைப் 
பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்தான் இதைப்பற்றிப் பின்னால் 
எல்லோருக்கும் தெரியச் செய்தவர். 

பெரியவா அந்த நிகழ்ச்சியைப் பற்றிச் சொன்னவுடன் கணபதி, 

"மகா பெரியவாளுக்குச் சகலமும் தெரியும். 


வேதங்களையும் சாஸ்திரங்களையும் அறிந்தவருக்குப்  


பள்ளிக்கூடப் பாடத்துக்குப் பதில் சொல்வதா கடினம்?" என்று பாராட்டினார்.

அவரைக் கையமர்த்திய மஹான்....

"அவசரப்பட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எதை எதையோ.... எதற்கும் முடிச்சுப் போடாதே... என் அண்ணா அந்த மேல்வகுப்பிலே அப்ப படிச்சுண்டு இருந்தான். அவன் உரக்கவே பள்ளிப் பாடங்களைப் படிப்பான். அது என் காதிலும் விழும். அதனால்தான் இன்ஸ்பெக்டரின் கேள்விக்கு நான் பதில் சொன்னேன்..." என்றார் அடக்கமாக.

தான் காண்பித்த அந்த அபூர்வமான விஷயத்தை மிகவும் சாதாரண  விஷயமாக ஒதுக்கித் தள்ளிவிட்டார் மஹான்.

ஒன்றுமில்லாத விஷயங்களைப் பற்றிப் பெருமை கொள்வது  நமது குணம். ஆனால், உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய  விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மஹான்களின் குணம்.

oooooOooooo


[ 4 ]

திரு. சுந்தர்ராஜன்  அவர்களுக்கு
ஏற்பட்ட மேலும் சில ஆச்சர்யமான அனுபவங்கள்.

எமர்ஜென்ஸி காலத்தில், இவர் பார்லிமெண்டில் ஒரு கேள்விக்கான
பதிலை இவரைச் சார்ந்த அரசாங்கத் துறைக்காக எழுத
வேண்டியிருந்தது.

அந்த பதிலை எழுதி நிதி அமைச்சக செயலாளரிடம் இவர் சமர்ப்பிக்க,

அந்த செகரட்ரி அறையில்அதைப் பற்றி விவாதிக்க
இவரை அழைத்தார்.
ஒரு ..எஸ். அதிகாரியான செக்ரட்ரி அந்த பதிலில் சில

மாற்றங்களை செய்தாக வேண்டுமென வலியுறுத்தினார்.

கீழ் அதிகாரியான இவரோ அந்த மாற்றங்களில் தனக்கு

ஒப்புதல் இல்லைஎன்றும், அதை மாற்றக்கூடாதென்றும்

தன் கருத்தைக் கூறினார்.
மன்னிக்க வேண்டும், அப்படி பதிலை மாற்றி அமைப்பது சரியான
உண்மையை மறைப்பதாக ஆகும். அப்படியே மாற்றினால்

அதற்கு முழுப்பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும்

என்று மிக அழுத்தமாக இவர் கூறியபோது,

தன் கீழ்வேலை செய்யும் ஒருவர் தன் கட்டளையை
கீழ்ப்படியாததில் அதிகாரிக்குக்கோபம்.
மிகவும் பதட்டமடைந்த அதிகாரி உடனே போன் செய்து ரிசர்வ் பாங்க்
டெபுடி கவர்னரை டில்லிக்கு விமானத்தில் அடுத்தநாளே வந்தாக
வேண்டுமென்று இவர் முன்னாலேயே உத்தரவிட்டார்.
சூழ்நிலை மிகவும் பாதகமாக இருந்தது.
சரிநீங்க போகலாம்ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர்

நாளைக்கு இது

சம்பந்தமான ரெகார்டுகளுடன் வரச் சொல்லியிருக்கேன்.

நீங்க எழுதி வெச்சுருக்கிற இந்த பதிலுக்கும் அவர் கொண்டு

வரப்போற விபரங்களுக்கும் தாருமாறா ஏதாவது இருந்தால்

உங்க மீது உடனே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்’.
இப்படி மிரட்டலும், பயமுறுத்தலுமாக அதிகாரி இவரை

அறையிலிருந்து போகச் சொன்ன போது இவருக்குப் பயத்தில்

வியர்த்துக் கொட்டியது.

தன்மேல் எப்படியாவது நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்து

விட்டதால் தான் செகரட்ரி கோபமாக இத்தனை தடாலடி

விவகாரம் செய்கிறார் என்பது சுந்தர்ராஜனுக்குப் புரிந்தது.
தான் எழுதி வைத்த பதில் நேர்மையாகவும், சத்தியமாகவும்

இருந்தாலும் அதிகாரி தன் கோபத்தைக் காட்ட எந்த

வகையிலும் முயற்சிக்கலாமென்பதும் இவருக்கு

அச்சத்தை ஏற்படுத்தியது.


அன்று இரவு அடுத்த நாள் தன் நிலைமை என்னவாகுமோ

என்ற நடுக்கமும் கவலையுமாக தூக்கம் வராமல்,

ஸ்ரீபெரியவாளையே நினைத்து வேண்டிக் கொண்டிருந்தார்.


அதிகாலையில் ஓர் அதிசயம்.


இர்வின் ரோட்டில்கணேஷ் மந்திர்என்ற கோயிலின் அர்ச்சகர்

இவர் வீட்டுக் கதவைத் தட்ட இவர் திறந்தார்.

அந்த அர்ச்சகர் கையில் பிரசாதத்துடன் நின்றார்.


ஸ்ரீபெரியவாளை நேத்து தரிசனம் செய்யப் போனேன்.

அவா இந்தப் பிரசாதத்தை உங்க கிட்டே

இன்னிக்கு விடியற்காலையிலேயே கட்டாயம்

சேர்த்துடனும்னு கொடுத்து அனுப்பினாஎன்றார்!


இவருக்கு இன்ப அதிர்ச்சி.

இங்கே ஒரு பக்தன் இரவு முழுவதும் வேதனைப்பட்டு

வேண்டிக் கொண்டதை எங்கிருந்தோ எப்படியோ

தெரிந்து அனுக்ரஹிக்கும் ஸ்ரீபெரியவா கருணையை

எண்ணியபடி கண்ணீர் மல்க பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டார்.


இனி எது வந்தாலும் கவலை இல்லை என்ற தெம்பு வந்துவிட்டது.

அன்று மதியம் பதினொரு மணியளவில் நிலைமை

தலைகீழானது. அப்போது நடந்த அதிகாரிகளின் கூட்டத்தில்,

அந்த ரிசர்வ் பாங்க் டெபுடி கவர்னர் ,சுந்தர்ராஜன் எழுதியிருந்த

பதில் முற்றிலும் பொருத்தமானதென்றும் அவை யாவும்

சரியான தகவலை உடையதென்றும் அதில் சிறிதும்

மாற்றம் செய்யக் கூடாதென்றும் கூற, மீட்டிங்கில்

கூடியிருந்த மற்ற மூத்த அதிகாரிகளும் இதையே வழி மொழிந்தனர்.


செக்ரட்ரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

தர்மசங்கடமான நிலையில் சுந்தர்ராஜனிடம் நேற்று கடுமையாக

தான் நடந்து கொண்டதற்கு வருந்துவதாகவும்,

அதற்குப் பிராயச்சித்தமாக தன் அறையிலேயே இவரையும்

மதிய உணவு அருந்துமாறு கேட்டுக் கொண்டு அழைத்தார்.


ஒரு அரசாங்கத் துறையில் இப்படி ஒரு கீழ் அதிகாரியை

மேல் அதிகாரி உபசரித்து கூப்பிடுவது எப்போதும் நடப்பதல்ல.

ஆனால் உலகாளும் மேலதிகாரியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ

மஹாபெரியவாளின் அனுக்ரஹத்திற்கு முன்

இவையெல்லாம் எம்மாத்திரம் என்று சுந்தரராஜனுக்கு

அப்போது தோன்றியிருக்கலாம்.

-=-=-=-

.நா. சபையின் ஒரு முக்கிய பதவிக்கான தேர்வு நடந்தபோது

இவர் தன்னுடைய விவரங்கள் அடங்கிய மெடிகல்

ரிபோர்ட்டை தேர்வுக்காக டெல்லியில் கொடுக்கச் சென்றார்.

1976-ஆம் வருடம் பிப்ரவரி 4ஆம் தேதியன்று இவர் அப்படி

.நா சபையின் டில்லி அலுவலகத்தில் கொடுத்தபோது

ஸ்ரீபெரியவாளின் திருக்கரங்கள் அனுக்ரஹிப்பதாகக்

காட்சி தெரிந்தது. ஸ்ரீபெரியவாளின் மேல் கொண்டிருந்த

மிகுந்த நம்பிக்கையோடு தான் நிச்சயம் தேர்வாகிவிடுவோம்

என்று உறுதியாக நினைத்து அப்படி அயல்நாடு போவதற்கு முன்

தன் பத்து வயது மகனுக்குத் திருப்பதியில் உபநயனம் செய்து

வைக்க ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டார்.


ஸ்ரீபெரியவாளிடம் மஹாசிவராத்திரி அன்று தரிசித்துத் தான்

அயல்நாடு செல்ல நேர்ந்ததால், வயதான பெற்றோர்களை

விட்டுவிட்டு செல்லும் நிலைமை ஏற்படுமென்றும்,

அதனால் ஸ்ரீ பெரியவாளே எது சரியானதோ அதை

அனுக்ரஹிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.


அடுத்த நாள் டெல்லியில் அலுவலகத்தில் விடுப்பு முடிந்து

சேர்ந்தபோது .நா சபையிலிருந்து இவரைத் தேர்வு செய்து

தந்தி மூலம் உத்தரவு வந்தது.

பின் ஜூன் மாதம் இவர் ஸ்பெயினில் .நா சபையில் அந்தப்

பதவியை ஏற்றுக் கொண்டார்.

பதவி ஏற்றபின் இவர் தேர்வான விபரங்கள் அடங்கிய

கோப்பு இவரிடம் கொடுக்கப்பட்டது.


அந்தக் கோப்பில் ஒரு அதிசயம் காத்திருந்தது.


அந்தப் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்த ஏழு நாடுகளின்

நபர்களில் அந்த நாட்டின் ஃபைனான்ஸ் செகரட்டரி பிளாக்கிலிருந்து

ஒரு நபரைத் தேர்வு செய்து அதை பிரதமமந்திரிக்கு

அனுப்பியிருந்தது தெரியவந்தது.

ஆனால் டிரினிடாட் டுபாகோவின் பிரதமமந்திரியான

டாக்டர் எரிக் வில்லியம்ஸ் அதை ஏற்காமல் அந்த ஏழு

பெயரில் இவர் பெயரைத் தேர்வு செய்து

உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.


இதில் அதிசயம் என்ன?

அந்த அயல்நாட்டு பிரதமமந்திரி கையெழுத்திட்ட அந்த

அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின்

மஹாசிவராத்திரியன்று சுந்தர்ராஜன் உலகெலாம் உரைந்து

ஓதற்கரியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீபரமேஸ்வரரான பெரியவாளைத்

தரிசித்து இதற்கான அனுக்ரஹம் வேண்டிய அதே நேரம்.


பக்தருக்கு மெய் சிலிர்த்தது.

-=-=-=-

1987-ஆம் வருஷம் நவம்பர் மாதம் சுந்தர்ராஜனுக்கு

ஒரு கடுமையான சவாலான பணி

கொடுக்கப்பட்டது.

யுகோஸ்லாவியாவில் ஒரு அகிலநாடுகளின் வர்த்தக

சபையின் பிரதிநிதிக்கான தேர்தலில் நம் நாட்டின்

உறுப்பினருக்கு பிரசாரம் செய்ய இவரை இந்திய

அரசாங்கம் நியமித்தது.


அப்போது இந்திய நாட்டில் வறட்சி காரணமாக இதற்கான

செலவுகளை தாராளமாகச் செய்ய முடியாத நிலையில்

இவருக்குப் பக்கபலமாக ஆட்களையோ,

தேர்தல் பிரசாரத்தில் செலவழிக்க பணமோ கிடைக்கவில்லை.


ஆனால் இந்திய உறுப்பினரும், பாகிஸ்தான் உறுப்பினரும்

நேருக்கு நேர் போட்டியிடும் நிலைமை வந்தது.

மற்ற 27 நாடுகள் கலந்து கொள்ளவில்லை.

பாகிஸ்தான் வேட்பாளருக்கு பக்க பலமாக ஆறு உயர்

அதிகாரிகளுடன் மற்ற நாடுகளின் அங்கத்தினரை

மகிழ்விக்க கேளிக்கைகளுக்காக நிறையப் பணமும்

அந்த நாடு கொடுத்திருந்தது.


பெல்கிரேட் சென்று நம் நாட்டு தூதரை சுந்தர்ராஜன் சந்தித்தபோது

அவர், “நீங்க எப்படி பிரசாரம் செஞ்சாலும்,

பாகிஸ்தான்காரன் மத்தவங்களுக்கு பணத்தைக்

கொட்டி சந்தோஷப்படுத்தி நம்மை தோக்க வைக்கத்தான்

போறான்என்பதாக நம்பிக்கையில்லாமல் கூறினார்.

சுந்தர்ராஜனுக்கும் அதுதான் யதார்த்தமான உண்மை

என்று தோன்றியது.


இருந்தாலும் நாடு தனக்கு இட்டிருந்த பணியை இந்த இக்கட்டில்

எப்படி நிறைவேற்றுவதென்று மன உளைச்சலோடு தூக்கம்

வராமல் இரவு சென்றது.


அதிகாலை ஒரு அதிசயக் கனவு.


ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா இவர் முன் தோன்றுகிறார்.

தன் இருகரங்களை விரித்து அபயகரமாக காட்டுகிறார்.

நடுநாயகமாக நடராஜ மூர்த்தியான ஸ்ரீபெரியவா தரிசனம் நல்க

வலது திருக்கரத்தில் வெங்கடாசலபதியும்

இடது திருக்கரத்தில் பத்மாவதித் தாயாரும் தோன்ற அருள்கின்றனர்.


இந்த சொப்பனம் கண்டவுடன் மெய்சிலிர்க்க இவர்

உடனே எழுந்து, அப்போது எத்தனை மணி என்றும் பார்க்காமல்

நம் நாட்டுத் தூதரை போன் மூலம் தொடர்பு கொண்டு

தான் கண்ட கனவைக் கூறினார்.

ஸ்ரீபெரியவாளைக் கனவில் காண்பது அத்தனை சுலபமல்ல.

அப்படிக் கனவில் மஹான் வந்து ஆசீர்வதித்தால் எப்படியும்

நம்நாடுதான் ஜெயிக்கப் போகிறதென்று இவர் உணர்ச்சி

பொங்கப் பேசினார்.

அந்த அகாலத்திலும் இவர் சொல்வதை அவமதிக்காமல்

கேட்டுக் கொண்டார்.


அடுத்த நாளில் 27 நாடுகளின் வாக்காளர்களிடம் சுந்தர்ராஜன்,

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப்

பேசினார். ஸ்ரீபெரியவாளின் மாபெரும் கருணையினால்

அந்த 27 நாடுகளிலிருந்து 20 நாடுகளின் வோட்டு இந்தியாவிற்கும்

மற்ற 7 வோட்டு பாகிஸ்தானுக்கும் கிடைக்க இந்தியப் பிரதிநிதி

அமோக வெற்றியடைந்தார்.

-=-=-=-

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்ரஹ மேன்மை

இப்படியெல்லாம் அதிசயங்கள் காட்டக் காத்திருக்க,

அந்த மஹானைச் சரணமடைந்து வாழ்வில்

எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு,

ஆரோக்யமாக ஆனந்தமான சர்வமங்களத்துடன்

சௌபாக்யத்துடன் நாம் வாழ்வோமாக !


பரிபூர்ண யோகநிலையிலும், பரிசுத்த தவமேன்மையிலும்

பிரம்மரிஷி சுகமுனிவரின் உயர்வோடு சாக்ஷாத்

பரமேஸ்வரரே திருஅவதாரம் கொண்டு நம்மிடையே

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளாய் மிக எளிமையோடு நம்மை

ஆட்கொண்டு அனுக்ரஹிப்பதை நம் பூர்வஜன்ம

பலனாக நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.


Thanks to Mr. M J Raman [Manakkal]
now at Mumbai for sharing this on 05.12.2013


oooooOooooo[ 5 ]ஏதோவொரு காட்டுப்பகுதியில் ஸ்ரீ மஹாபெரியவா முகாமிட்டுத் தங்கியிருந்தார்கள்.

சிறுமலை எஸ்டேட்டிலிருந்து ஒரு மிகப்பெரிய பணக்காரர் ஸ்ரீ பெரியவா தரிஸனத்திற்கு வந்திருந்தார். 

அவரது கைகளில் ஒரு மிகப்பெரிய தாம்பாளம் நிறைய சிறுமலையில் அவரின் எஸ்டேட்டில் விளைந்த மிக ருசியான சிறுமலை வாழைப்பழங்கள் இருந்தன.

[வாழைப்பழங்களில் மலை வாழைப்பழம் என்பது மிகவும் ஒஸத்தி. ருசி அதிகம். அதிலும் சிறுமலைப் பழம் என்றால் சின்னச்சின்னதாக உள்ள மழை வாழைப்பழங்கள் அவை தனி ருசிதான். 

உள்ளே உள்ள வாழைப்பழத்தை விட வெளியேயுள்ள வாழைப்பழத்தோலி வெயிட் ஜாஸ்தியாக இருக்கும். தோலியை உரித்து பழத்தை அப்படியே முழுசாக வாயில் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும். 

இரவில் இரண்டு டஜன் சிறுமலை வாழைப்பழங்களும், சுண்டக்காய்ச்சிய பசும்பாலும் சாப்பிட்டுப் படுத்தால் சுகமாகத் தூக்கம் வரும். ] 

இந்த பக்தர் ஸ்ரீ பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு, ”வாசலில் ஒரு பெரிய லாரி நிறைய இதே போன்ற சிறுமலை வாழைப்பழங்களை ஸ்ரீமடத்துக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்திருக்கிறேன்; அவற்றை நான் எங்கே இறக்கச் சொல்லட்டும்?” என மிகப்பணிவோடு கேட்கிறார். ஸ்ரீபெரியவா, “அவை அப்படியே லாரியிலேயே இருக்கட்டும். நாளைக்குச் சொல்கிறேன். அதன் பிறகு இறக்கினால் போதும்” என்று சொல்லிவிடுகிறார்.  

ஸ்ரீபெரியவா தான் கொண்டுவந்த பழங்களை ஏற்றுக்கொள்வதாகச் சொன்னதில் பக்தருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரும் அன்று அங்கேயே எங்கோ தங்கி விடுகிறார்.

அதுசமயம் ஸ்ரீமடத்துக்குச் சொந்தமான யானையொன்று, எங்கோ மேய்ந்துவர காட்டுப்பகுதிக்குச் சென்ற போது, தன் உடம்பு பூராவும் முள்ளைக்குத்திக்கொண்டு, வலி தாங்காமல் ஓரிடத்தில் கீழே படுத்து விட்டதாகவும், கண்ணீர் விட்டு அழுவதாக ஸ்ரீ பெரியவாளிடம் சிலர் ஓடி வந்து தகவல் அளித்தனர். 

சுமார் 5 அல்லது 6 பெரிய டின்கள் நிறைய நல்லெண்ணெயை அதன் உடம்பு பூராவும் அபிஷேகம் செய்யச்சொல்லியும், அதன் பிறகு பாகனைவிட்டு அதை மெதுவாக எழுப்பி குளத்தில் குளிக்கக் கூட்டிச்செல்லுமாறு, ஸ்ரீ மஹாபெரியவா உத்தரவு இட்டார்கள். 

நல்லெண்ணெயால் அபிஷேகம் செய்யப்பட்டதால், யானைக்கு முட்கள் குத்திய வலி கொஞ்சம் குறைந்திருக்கும் போலத்தெரிகிறது. 

அதன் பின், பாகன் குளத்தில் அதை இறக்கியதும், உடம்பில் தைத்த முட்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி கீழேவிழத் தொடங்கின.

 

 நீண்ட நேரம் ஜலக்கிரீடை செய்த அந்த யானையை ஒரு வழியாக ஓட்டிவந்து, ஸ்ரீ மஹாபெரியவாளிடம் கூட்டி வந்து நிறுத்தி விட்டார்கள். 

ஸ்ரீ மஹாபெரியவா யானையைத்தொட்டுத் தடவிக் கொடுத்து விட்டு, தன் முன் இருந்த சிறுமலைப்பழங்களில் ஒரு சீப்பினை எடுத்து அதற்கு ஊட்டியதுடன், அந்த லாரியில் இருந்த பழங்களுடன், அப்படியே லாரியை யானைக்கு அருகே ஓட்டி வரச் சொன்னார்கள்.

லாரியில் இருந்த பழங்கள் அத்தனையையும் அந்த யானை ஆர்வத்துடன் சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தது. லாரியும் காலியானது. யானைக்கும்  பசியடங்கியது.

[எப்பவோ நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை, ஸ்ரீமடத்திற்கு அடியேன் பெரியவா தரிஸனம் செய்யப்போனபோது, அங்கு மடத்தில் கைங்கர்யம் செய்துவந்த ஒரு வயதானவர் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தேன்.   vgk ]
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 
 ’அமுத மழை ’
தொடர்ந்து பொழியும்.இதன் தொடர்ச்சி
நாளை மறுநாள் வெளியாகும்.என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

50 comments:

 1. இனிய வணக்கம் ஐயா..'
  செல்கின்ற பாதை எதுவாகினும்
  இலக்கான முற்றுப்புள்ளி அடையும் இடம் ஒன்றே
  என உரைக்கும் மாதங்கள்... கால் சென்ற பாதையில்
  செல்ல எத்தனிக்காது இதுதான் இவைதான்
  இப்படித்தான் இங்கனம் தான் என்று நமக்கான
  வழிமுறைகளை நெறிமுறைகளை வகுத்து
  வாகாக தருகிறது. எல்லா மதங்களும் இப்படித் தருகையில்
  மதமாற்றம் என்பது அவசியமில்லாதது என்று உரைக்கும்
  அழகான பதிவு ஐயா..
  கடைபிடித்தல் நலம்.

  ReplyDelete
 2. அன்பின் வை.கோ

  மதங்களுக்குள் மதம் பிடிக்கும் மாயை - அருமை அருமை -

  ஒரு ஊருக்குச் செல்ல பல வழிகளும் பல்வேறு முறைகளும் இருப்பது போல - இறைவனை அடைய பல்வேறு மார்க்கங்கள் இருகின்றன. அம்மார்க்கங்கள் தான் பல்வேறு மதங்களாக இருக்கின்றன.

  இந்து மத சாஸ்திரங்களைப் பார்க்கும் பொழுது பிற மதத்தவரை இம்மதத்திற்கு மாற்றும் முறைகள் எதுவும் இல்லை. இதில் இருந்தே இந்துக்கள் மத மாற்றம் விரும்புவர்கள் அல்ல எனத் தெரியும்.

  யாரும் மதத்தை விட்டு விலக வேண்டியதில்லை என்பதை அருமையாக விளக்கும் பதிவு நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. ஆச்சர்யப்படம் சம்பவம், பந்தி விளக்கம், பள்ளிநாட்களில் நடந்த நிகழ்ச்சி என அனைத்தும் அருமை ஐயா... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. ஹிந்துவாகப் பிறந்துள்ள ஒவ்வொருவனும், இந்த நம் முன்னோர்களின் விசால மனப்பான்மையைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

  சிந்தித்துப்பார்த்தால் பெருமை மிகும் ..
  அத்தனை உயர்வான மதம் ..!

  ReplyDelete
 5. லாரியில் இருந்த பழங்கள் அத்தனையையும் அந்த யானை ஆர்வத்துடன் சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தது. லாரியும் காலியானது. யானைக்கும் பசியடங்கியது./

  யானைப்பசிக்கு வாழைப்பழங்கள்..!
  கருணைமிக்க உயர்ந்த உபசாரம் ..!

  ReplyDelete
 6. ஸ்ரீஸ்ரீஸ்ரீமஹாபெரியவாளின் அனுக்ரஹ மேன்மையை
  அமுதமழையாக வர்ஷித்த அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்..!

  ReplyDelete
 7. உலகாளும் மேலதிகாரியான ஸ்ரீஸ்ரீஸ்ரீ
  மஹாபெரியவாளின்அனுக்ரஹத்திற்கு முன்
  மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்று நிரூபண்மாகிவிட்டதே..!

  ReplyDelete
 8. உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மஹான்களின் குணம்.

  ReplyDelete
 9. "பங்க்தி பாவனர்” என்பர்.

  நம்மோடு சேர்ந்து சாப்பிடுபவர்களின் குணம், பக்கத்தில் அமர்ந்திருக்கும் எல்லார் உணவின் மீதும் பரவும்.

  எனவே, நற்குணத்தை வளர்த்துக் கொண்டால், நம் எல்லாருக்குமே நல்லது.
  பந்தியின் உயர்வை அருமையாக விளக்கிய சிறப்பான பகிர்வுகள்..!

  ReplyDelete
 10. “தனியா, பரம ரகசியமா நடந்த அந்தச்சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?” என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், அந்த சிஷ்யர்.

  ஆச்சரியமான அனுபவம் ..!

  ReplyDelete
 11. யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலக வேண்டியதில்லை.

  ஆழ்ந்த பொருளுள்ள வார்த்தைகள்..!

  ReplyDelete
 12. யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலக வேண்டியதில்லை.
  நன்றாக அழுத்தி அடிகோடுஇட்டு சொல்லவேண்டிய விஷயம்.


  தன் புது புடவையை தாரளமான மனசோடு கொடுத்த மாமிக்கு
  செரியான பரிசு, அதுவும் பெரியவளிடமேர்ருந்து

  அயோ யானைக்கு அடித்த அதிர்ஷ்டத பாருமேன்.
  பெரியவா கதைகள் ஒவென்றும் ஒரு மலர்ந்த பூவாகும்

  ReplyDelete
 13. ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆச்சரியப் படுத்துகிறது. இதையெல்லாம் படிக்கிரதாலே நமக்கும் பல விஷயங்களை கிரஹிக்க முடிகிறது. நம்ம மதத்தில் இல்லாதது எதுவுமே இல்லை. திருப்பி பலமுறை படிக்க வேண்டிய பதிவு. அன்புடன்

  ReplyDelete
 14. ஒரு ஊருக்குச் செல்ல பலவித மார்க்கங்களும், பலவித வாகன வசதிகளும் இருப்பது போலவே,

  ஒரே பரமாத்மாவை அடையத்தான் பல மதங்களும் இருக்கின்றன என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

  ஹிந்துவாகப் பிறந்துள்ள ஒவ்வொருவனும், நம் முன்னோர்களின் விசால மனப்பான்மையைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

  யானைக்கு சிறுமலைப்பழம் கிடைத்தது போல எங்களுக்கும் கிடைத்துள்ளது.

  ReplyDelete
 15. "ஒரே பரமாத்மாவை அடையத்தான் பல மதங்களும் இருக்கின்றன என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்."

  அனைத்தும் அருமை.

  ReplyDelete

 16. “தனியா, பரம ரகசியமா நடந்த அந்தச்சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?” என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், அந்த சிஷ்யர். //

  ஒன்றுமில்லாத விஷயங்களைப் பற்றிப் பெருமை கொள்வது நமது குணம். ஆனால், உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மஹான்களின் குணம்.//
  அந்த அயல்நாட்டு பிரதமமந்திரி கையெழுத்திட்ட அந்த
  அயல்நாட்டு நேரம் சரியாக இந்திய நேரத்தின்
  மஹாசிவராத்திரியன்று சுந்தர்ராஜன் உலகெலாம் உரைந்து
  ஓதற்கரியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீபரமேஸ்வரரான பெரியவாளைத் தரிசித்து இதற்கான அனுக்ரஹம் வேண்டிய அதே நேரம்.//

  வியப்பளித்த விஷயங்கள்! அமுத மொழிகள் அருமை! நன்றி ஐயா!

  ReplyDelete
 17. மத ஒற்றுமை விளக்கம் அருமை.
  தீபாவளிக்கு பெண்மணிக்கு புது புடைவை வரவழைத்துக் கொடுத்தது அவர் பெருமையை பறைசாற்றுகிறது.
  திரு சுந்தரராஜனுக்கு சரியான சமயத்தில் பெரியவா அருளியது
  அவருக்கு எவ்வளவு மந்த்திருப்தியைக் கொடுத்திருக்கும் என்றுணர முடிகிறது. ஆனா மாலையாய் அமுதத்தை தொடுத்துள்ளீர்கள் . என்னை மிகவும் நெகிழ்த்தியது யானையின் முட்களை எடுப்பதற்கு உதவி, சிறுமலைப்பழம் கொடுத்தது தான். அவர் கருணையை என்னவென்று சொல்வது.
  வாழ்த்துக்கள்.... தொடருங்கள்....

  ReplyDelete
 18. யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலக வேண்டியதில்லை.
  நன்றாக அழுத்தி அடிகோடுஇட்டு சொல்லவேண்டிய விஷயம்.
  நன்றி ஐயா

  ReplyDelete
 19. மதம் பற்றி எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார். பந்தி விளக்கமும் இதுவரை அறியாதது. நிகழ்வுகள் அனைத்தும் நெகிழவைக்கும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி வை.கோ.சார்.

  ReplyDelete
 20. //உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மஹான்களின் குணம்.//

  சிறப்பான பகிர்வு...

  ReplyDelete
 21. மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் மத மாத்ஸர்யம் கூடாது அருமையான பதிவு.

  ReplyDelete
 22. குதிரைக்காரனுக்கு வேஷ்டி புடவை வழங்கிய கருணை அந்த பெண்மணிக்கும் புடவையை பெற்றுக்கொடுத்த விதம் அருமை ஜகத்குரு மாணவப்பருவத்தில் நடந்த சம்பவம் யானைப்பசிக்கு லாரி பழங்களை அளித்த கனிவு பிரமாதம் பங்த்தி பேதம் கூடாது நம் உணவே நம் குணங்களுக்கு காரணம் நல்ல பதிவு நன்றி

  ReplyDelete
 23. இந்தப் பதிவு என் டேஷ் போர்டில் வரவில்லை. பந்தி போஜனம் குறித்து என் ஆதங்கத்தை எழுதுகிறேன். கர்நாடகாவில் பெரும்பாலான கோவில்களில் எல்லோருக்கும் உணவு படைக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்றால் உணவு படைப்பதில் பேதம் காட்டுகிறார்கள். .பூணூல் அணிந்த அந்தணர்களுக்கு விசேஷ தனி பந்தி. அங்கு ஏனையோருக்கு அனுமதி இல்லை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 24. ஐயாவிற்கு வணக்கம்
  மனிதன் மாறி விட்டான் என்பதும் அவன் மதங்களில் சாய்ந்து விட்டான் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய கசப்பான உண்மை தான். இவையெல்லாம் நம் முன்னோர்கள் வகுத்த நெறியில் அடி தவறாமல் நடந்தால் தான் மாறும் என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் நல்லது. காஞ்சி பெரியாவாளின் அற்புதங்கள் தான் எத்தனை எத்தனை பெண்மணிக்கு தீபாவளி புடவை வரவழைத்து கொடுத்த அருள் கண்டு அசந்து விட்டோம். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

  ReplyDelete

 25. இந்த பதிவில் பந்தி என்பதன் வேர்ச்சொல்லைத் தெர்ந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி!
  பதிவைப் படித்து முடிந்ததும், ” பொங்கு பல சமயம் “ என்ற வள்ளலார் வார்த்தை ஞாபகம் வந்தது.

  ReplyDelete
 26. ஸ்ரீ சுந்தர்ராஜனின் அனுபவங்கள் படிக்கப்படிக்க வியப்பாக இருக்கிறது. யானையின் வலி தீர்த்து அதன் பசியையும் தீர்த்த சம்பவம் மனதை தொட்டது.

  ReplyDelete
 27. நல்ல பகிர்வு. இங்கே ஶ்ரீரங்கத்திலேயும் கோயில் யானை குறித்து இன்னிக்குச் செய்தி வந்திருக்கு. பாவம் யானைங்க. மனுஷங்களோடு வாழ்வதற்கு எத்தனை கஷ்டப்பட்டுண்டு ஒத்துப் போக வேண்டி இருக்கு! :(

  ReplyDelete
 28. ஸ்ரீ மஹாபெரியவா யானையைத்தொட்டுத் தடவிக் கொடுத்து விட்டு, தன் முன் இருந்த சிறுமலைப்பழங்களில் ஒரு சீப்பினை எடுத்து அதற்கு ஊட்டியதுடன், அந்த லாரியில் இருந்த பழங்களுடன், அப்படியே லாரியை யானைக்கு அருகே ஓட்டி வரச் சொன்னார்கள்.

  லாரியில் இருந்த பழங்கள் அத்தனையையும் அந்த யானை ஆர்வத்துடன் சந்தோஷமாகச் சாப்பிட ஆரம்பித்தது. லாரியும் காலியானது. யானைக்கும் பசியடங்கியது.//
  யானையின் வலியைப் போக்கி அதற்கு சிறுமலை பழத்தையும் கொடுத்த மஹானின் அற்புதத்தை என்னவென்று சொல்வது.!

  பகிர்வு அருமை.
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 29. லாரியில் இருந்த பழங்கள் அத்தனையும் யானைக்கு கொடுத்து பசி போக்கிய பெரிய மனம்......

  ஒவ்வொரு விஷயமும் அருமை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 30. நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் தெரியும்.

  இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான்.

  யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலக வேண்டியதில்லை.

  அருமையான தெளிவான விளக்கம்.
  ஆனால் கேட்பவர் யார்?

  ReplyDelete
 31. //ஒரு ஊருக்குச்செல்ல பலவித மார்க்கங்களும், பலவித வாகன வசதிகளும் இருப்பதுபோலவே, ஒரே பரமாத்மாவை அடையத்தான் பல மதங்களும் இருக்கின்றன என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். // அருமை!!
  பல்வேறு சிலிர்க்க வைக்கும் அனுபவங்களின் தொகுப்பு அருமை!! உயர்ந்த பதவியில் இருப்பவராயினும் ஐந்தறிவு யானையாயினும் கருணையே கருணை!!
  சிறு வயதில் நான் என் அப்பா கட்டளைப்படி சத்தம் போட்டு படித்தது என் தங்கைக்கு உபயோகமானது நினைவுக்கு வந்தது!! :-))

  ReplyDelete
 32. ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஆச்சர்யமா இருக்கு...நன்றி ஐயா!!

  ReplyDelete
 33. பந்தி விளக்கம் அறிந்து மகிழ்ந்தேன்! பக்தி நிகழ்வுகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 34. யானையின் துன்பத்தை அறிந்து அதைப் போக்கும் உபாயத்தையும் அறிந்தவர் பெரியவாள்.

  ReplyDelete
 35. ஒரே பரமாத்மாவை அணுகத்தான் நம் முனோர்கள் நன்குஉணர்ந்து இருக்கிறார்கள். அதற்கு மதங்கள் உதவி புரிகின்றன.

  ReplyDelete
 36. // எந்த மதத்தையும் விட மிக அதிகமான சடங்குகளைச் சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு பிற மதத்தவரை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக்காணோம். இதுவே நாம், மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.//

  உண்மைதான். எதற்கு மதம் மாற வேண்டும். நல்ல நட்புக்களாக இருந்தால் போதுமே.

  குதிரை வண்டிக்காரனையும் ரட்சித்து, அவன் மனைவிக்காகத் தன் புதுப்புடைவையைக் கொடுத்த பெண்மணியையும் ரட்சித்து, அற்புதம்

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 22, 2015 at 2:21 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   **எந்த மதத்தையும் விட மிக அதிகமான சடங்குகளைச் சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு பிற மதத்தவரை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக்காணோம். இதுவே நாம், மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.**

   //உண்மைதான். எதற்கு மதம் மாற வேண்டும். நல்ல நட்புக்களாக இருந்தால் போதுமே.//

   :) சந்தோஷம். ஆம். நல்ல நட்புக்களாக இருந்தாலே போதும்தான்.

   //குதிரை வண்டிக்காரனையும் ரட்சித்து, அவன் மனைவிக்காகத் தன் புதுப்புடைவையைக் கொடுத்த பெண்மணியையும் ரட்சித்து, அற்புதம்//

   அற்புதமான கருத்துக்கள். மிக்க மகிழ்ச்சி ஜெ.

   >>>>>

   Delete
 37. //அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர்” என்பர். //

  பந்தியைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.

  வாரியார் சுவாமிகளின் சிஷ்யை திருமதி மங்கையர்க்கரசி ஒரு முறை சொன்னார். சம்பந்தி என்பதற்கு அர்த்தம் சமமாக உட்கார்ந்து போஜம் செய்பவர் என்று. ஆனால் அதை நாம் சம்மந்தி - அதாவது சமமான குரங்கு எறு மாற்றி விட்டோம் என்று.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 22, 2015 at 2:23 PM

   **அப்படிப்பட்டவரை "பங்க்தி பாவனர்” என்பர்.**

   //பந்தியைப் பற்றித் தெரிந்து கொண்டேன். //

   மிக்க மகிழ்ச்சி.

   //வாரியார் சுவாமிகளின் சிஷ்யை திருமதி மங்கையர்க்கரசி ஒரு முறை சொன்னார். சம்பந்தி என்பதற்கு அர்த்தம் சமமாக உட்கார்ந்து போஜனம் செய்பவர் என்று. ஆனால் அதை நாம் சம்மந்தி - அதாவது சமமான குரங்கு என்று மாற்றி விட்டோம் என்று.//

   SOMEமந்தி !!!!!

   ரஸித்தேன் ... சிரித்தேன். :))))) தகவலுக்கு நன்றி, ஜெ.

   >>>>>

   Delete
 38. // ஒன்றுமில்லாத விஷயங்களைப் பற்றிப் பெருமை கொள்வது நமது குணம். ஆனால், உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மஹான்களின் குணம்.//

  ஆமாம் நாமதான் பெருமை பீத்தக் கலயமாச்சே.
  ஆனா மகா பெரியவா தெய்வம். அதான் அடக்கமாக சொல்லி இருக்கார்.

  திரு சுந்தரராஜனுக்கு அருளிய சம்பவங்கள் அருமை.

  யானைக்கு மலைவாழைப் பழம் (மலையாகக் குவித்த வாழைப் பழம்) கொடுத்ததும் அருமையோ அருமை.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 22, 2015 at 2:26 PM

   **ஒன்றுமில்லாத விஷயங்களைப் பற்றிப் பெருமை கொள்வது நமது குணம். ஆனால், உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயத்தை ஒதுக்கித் தள்ளுவது மஹான்களின் குணம்.**

   //ஆமாம் நாமதான் பெருமை பீத்தக் கலயமாச்சே.
   ஆனா மகா பெரியவா தெய்வம். அதான் அடக்கமாக சொல்லி இருக்கார்.//

   //திரு சுந்தரராஜனுக்கு அருளிய சம்பவங்கள் அருமை. //

   //யானைக்கு மலைவாழைப் பழம் (மலையாகக் குவித்த வாழைப் பழம்) கொடுத்ததும் அருமையோ அருமை.//

   தங்களின் அன்பான மும்முறை வருகைகளுக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா. :)))

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 39. அந்த குருசாமிக்கு தெரியாத ஏதுமே நடந்துகிடாதுபோல குதிர வண்டி காரன் பொஞ்சாதிக்கு அந்தம்மா பொடவ கொடுத்தது எப்பூடித்தா தெரிஞ்சிகிட்டாகளோ.

  ReplyDelete
 40. யானைகள் கொடுத்துவைத்தவை. வண்டிக்காரர்மனைவிக்கு இந்த அம்மா புடவை கொடுத்தது கூட பெரியவா திருஷ்டிலேந்து தப்பலையே.

  ReplyDelete
 41. யானைக்கும் பசி தீர்ந்ததே!!! இவரால்தான் இது சாத்தியம்..

  ReplyDelete
 42. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (28.11.2018) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-
  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=532852740550758

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 43. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ 27.11.2018 அன்று பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://www.facebook.com/groups/396189224217111/ ??

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 44. இந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (13.01.2019) பகிரப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு:-

  https://www.facebook.com/groups/396189224217111/permalink/560819784420720/

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete

 45. இந்தப்பதிவின் ஓர் பகுதியை, நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி அவர்கள்,
  தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று 13.02.2019 வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு:
  https://m.facebook.com/groups/396189224217111?view=permalink&id=579570655878966

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete