என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

VGK 10 / 02 / 04 SECOND PRIZE WINNERS - ’மறக்க மனம் கூடுதில்லையே !’

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 10 - 

” மறக்க மனம் கூடுதில்லையே “


மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு: 


    இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள்


மொத்தம் இருவர்:

அதில் ஒருவர்

திருமதிராதா பாலு 


அவர்கள்


வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”

http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”

http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “

http://enmanaoonjalil.blogspot.com/


இரண்டாம் பரிசினை வென்றுள்ள

திருமதி ராதா பாலு 


அவர்களின் விமர்சனம் இதோ:


கதையின் பெயரில்லாத கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்துவிட்டு அதன் பிறகே விமரிசனம் எழுத விரும்புகிறேன்! கதாசிரியர் பொறுத்தருள்க!!

கதாநாயகன்---ராமு 
ராமுவைக் காதலித்த மங்கை---சீதா 
ராமு காதலித்த அழகி---மைதிலி 
ராமுவின் மனைவி--ஜானகி 

'மன்மத லீலையை வென்றார் உண்டோ?'...காதல்  இல்லாத மனிதர் இந்த உலகத்தில் உண்டா....அதுவும் ஆண்கள்! எனக்குத் தெரிந்து கல்யாணத்துக்கு முன்னால்  காதல் செய்யாத ஆண் எவரும் இருக்க மாட்டார்! இளமையில் ஏற்படும் கண்மூடித்தனமான காதல்  ( infatuation ) கொள்ளாத ஆடவர் மிகக் குறைவு. 

சிலருக்கு அந்தக் காதல் வெற்றியடைந்து 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்று சந்தோஷமாக வாழ்வார். சிலருக்கு அது நடக்காமல் போவதும் உண்டு. இன்னும் சிலருக்கு  அந்த வாழ்க்கை கிடைத்தும் வெற்றி கிடைப்பதில்லை. 

மொத்தத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்'தான்! அதை கருத்தாகக் கொண்ட கதைதான் 'மறக்க மனம் கூடுதில்லையே'

காதலர்கள் கைகோத்து நடக்கும் மெரினாவுக்குச் செல்லும் யாருக்குமே தன்  துணையின் கையைப் பிடித்துக் கொண்டு நீரில் கால் நனைக்கும்  'சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை' இருக்கும். (நானும் அதற்கு விதிவிலக்கல்ல!) நம் கதாநாயகன் ராமுவுக்கும்  அவன் மனைவி ஜானகிக்கும்  அந்த ஆசை, அதோடு சேர்த்து நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்ததால் அவர்கள் மனம் ஒன்றிய இல்வாழ்வு வாழ்வது தெளிவாகிறது. காரிலிருந்து இறங்கியவளைப் பார்த்த ராமுவுக்கு 'எங்கேயோ பார்த்த முகம்'...'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே '...அது ஏன் என்று தெரிந்துகொள்ள நாமும் 40 வருடம் பின்னோக்கி செல்வோம். அந்நாளைய திருச்சியை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் கதாசிரியர். 'அப்பனே அப்பனே பிள்ளையாரப்பனே' என்று கணபதி ஆட்சி செய்யும் மலைக்கோட்டையைச் சுற்றி அன்று இருந்த பல ஸ்டோர்களின் நிலைமையை மிக அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இரவு பத்துமணி வரை கூடி இளைஞர்கள் பேச்சு அந்தத் தெருப் பெண்கள், தாம் பார்த்த பெண்கள், பழகிய பெண்கள், சினிமா கிசுகிசு என்று ஏகப்பட்ட விஷயங்கள் அவர்கள் உரையாடலில் இடம் பிடிக்கும். 

அந்த வீடுகளில் குடியிருக்கும் இளவயசுப் பையன்கள் கொல்லையில் கிணறு,பொதுக் குளியலறை, பொதுக் கழிப்பறைக்குப் போகும்போது எதிரில் வரும் பெண்களை  'அன்ன    நடை சின்ன இடை' , 'நடையா இது நடையா', 'என்ன பார்வை உந்தன் பார்வை' என்று முணுமுணுத்துக் கொண்டே,  நிமிர்ந்து பார்க்காமல் ஓரக்கண்ணால் மட்டுமே பார்த்துச் செல்வதும். அந்த பருவப் பெண்களும் பார்த்தும் பார்க்காமல் வளைந்து, நெளிந்து,  ஒரு அசட்டுச் சிரிப்புடன் கடந்து போவதும் அந்நாளைய காட்சிகள்!  

அந்நாளைய ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' என்ற இந்த அனுபவங்கள் நினைவில் இருக்கும்.அந்த குருவிக் கூண்டு போன்ற ஓட்டு வீடுகள் இன்று வானளாவ உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உயர்ந்து நிற்கின்றன. அன்றுபோல் இல்லாமல் இன்று சக வயது  இளைஞர்களும், பெண்களும் சகஜமாக ஹாய் ,ஹலோ என்று பேசிக் கொள்கிறார்கள்.

இன்று உச்சிப் பிள்ளையார் மட்டுமே மாறாமல் இருக்கிறார்! அவரும் பாவம் அத்தனை உயரத்தில் அமர்ந்து கொண்டு 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்று தாயுமானவரை வணங்கிக்கொண்டு அம்மா மாதிரி (பார்வதி தேவி!!) ஒரு அம்சமான பெண்ணை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார் போலும்! 


வேலை கிடைத்து கையில் காசு வந்த உடனேயே 'மனம் விரும்புதே உன்னை' என்று யாரைப் பார்த்தாலும் காதலிக்கத் தோன்றும் இயல்பான ஆண்மனம்! அதுவும் நிரந்தர வேலை... 300 ரூபாய் சம்பளம்... பெரிய தொகைதான் அந்தக் காலத்தில்! தான் ஒரு பெண்ணைக் காதலிக்க, மற்றொருவளோ ராமுவை ஒருதலையாகக் காதலித்திருக்கிறாள்.


'தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ' என்பது போல, ராமுவைக் காதலித்தவள் (சீதா) அழகில்லை என்றாலும், பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாக இருந்தாள்! ஆஹா...என்ன ரசனையாக  ஒரு பெண்ணின் அழகை நான்கு வார்த்தைகளில் நறுக்கு தெறித்தாற்போல் நாசூக்காக சொல்லிவிட்டார்  ஆசிரியர் ....... இதற்கே அவருக்கு ஒரு ’ஓ’ போட்டாச்சு!ராமுவிடம் அன்போடும், அரவணைப்போடும், ஆசையோடும் பழகியதோடு அவனுக்கு நாகரீகமும் சொல்லிக் கொடுத்தவள்  'உன்னை நான் சந்தித்தேன்...நீ ஆயிரத்தில் ஒருவன்' என்று மலரை வண்டு சுற்றுவது போல அவனையே சுற்றி வந்தாலும், அவனால் காதலிக்க முடியவில்லை. ஆனால் ராமுவுக்கோ தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காத  அழகி மேல்தான்'காதல் வந்திடுச்சு ஆசையில் ஓடிவந்தேன்' என்று  கவனம் முழுதும்!  காரணம் தான் எப்படியிருந்தாலும் தனக்கு வருபவள் ஐஸ்வர்யாராயாக...இல்லை இல்லை .... அந்த நாளில் பத்மினியா...வைஜயந்தி மாலாவா ... இருக்க வேண்டும் என்ற அடிமன ஆண்  ஆசை! 


அவன் காதலித்த பெண்ணோ (மைதிலி ) ராமுவை ஏறெடுத்தும் பார்க்காத ஏந்திழையாள். 'பொட்டு வைத்த முகமோ...கட்டி வைத்த குழலோ' என்று ரசிக்கும்படியான அவளின் அதியற்புத அழகும், செல்வநிலையுமே அவளை, எல்லோரையும் அலட்சியப் படுத்தும் எண்ணத்தை  ஏற்படுத்துகிறது. அந்தக் காலத்திலேயே ஸ்கூட்டரும், காரும் ஒட்டியவளை பருவ வயது ஆண்கள் 'ஆ' என்று பார்த்ததில் வியப்பென்ன? அதுவே அவள் மேலிருக்கும் காதலை இன்னும் அதிகரிக்கும். இந்த துணிச்சலான பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வதை பெருமையாக நினைக்கும் வயது!'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல' என்று தினமும் அவளைப் பார்க்கத் துடிக்கும் கண்கள்! 'ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது' என்று ஊசலாடும் மனது! ஆனால் அவளுடன் நேரில் பேசவோ, விருப்பத்தை வெளியிடவோ தயங்கும் பண்பாடு. தீபாவளியன்று ராமுவே எதிர்பார்க்காத ஒரு விஷயம் அவனை மைதிலி வீட்டில் கூப்பிட்டு பட்சணம் கொடுத்தது. 'கண்ணுக்கு மையழகு' என்று அவள் கண்களைப்  பார்க்க முயற்சித்தும் முடியாத தயக்கம் .'ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றது' என்று பாடத் துடிக்கும் மனசு! 'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா' என்று ஆச்சரியப்பட்டு பார்த்த கண்கள்!ஒரு பைங்கிளியை 'செல்லக் கிளியே...மெல்லப்பேசு' என்றபடி அதன் கூட்டுக்குள் சென்று பார்த்த பரவசம்...கதாசிரியரின் கற்பனை நயம் பொருந்திய அசத்தலான  வரிகள்!  தான் விரும்பும் பெண் நஞ்சைக் கொடுத்தாலும் அமிர்தமாக இருக்கும் வயதில் ரவா லாடும், மிக்சரும் தேவாமிர்தமாக இருக்குமே! அவளைப் பார்த்து ' நீ சிரித்தால்  தீபாவளி' என்றும் 'சுந்தரன் ஞானும், சுந்தரி நீயும் 'என்ற பாட்டைப் பாடத் தோன்றியது ராமுவுக்கு.

'கண்ணெதிரே தோன்றினாள்...கனிமுகத்தைக் காட்டினாள்'  என்று கவிதை பாடிய வண்ணம் நன்றி சொன்னபோதும் சலனம் காட்டாத அந்தப் பெண்ணின்  பெற்றோர் கேட்ட கேள்விகளில் ராமுவின் மனம் செல்லவில்லை. ஆனால் அவர்கள் ஆசீர்வதித்த போது மனத்தில் ஒரு சின்ன சலனம், இத்தனை விசாரித்தவர்கள் தன்னை மாப்பிள்ளையாக்கிக் கொள்வார்களோ என்று. 

அதற்கான வாய்ப்பே இல்லாமல் ராமு கைப்பிடித்தது  அவனுடைய பெற்றோர் பார்த்து வைத்த ஜானகி என்ற பெண்ணை! 'மத்தள மேளம் முரசொலிக்க' அவள் கழுத்தில் ராமு தாலி கட்டியபோது  'நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்'  என்ற பாட்டுதான் அவன் மனதில் தோன்றியது. 'வந்தாள்  மகாலட்சுமியே' என்று 'மணமகளே மருமகளே வா வா' என்று ஜானகியை ராமு வீட்டார் வரவேற்க, நாம் விரும்பியது கிடைக்காதபோது, கிடைத்ததை விரும்பும் ஒரு சாமானிய மனிதனாக வாழ்க்கை ஆரம்பமானது ராமுவுக்கு.

அன்று சீதாவைக் கண்ட ராமுவுக்கு அன்றைய சிரிப்பு மாறாத அவள் முகமும் உரிமையுடன் பர்சை எடுத்து பணத்தை எண்ணியதும், இஷ்டப்பட்டதை சாப்பிட்டதும், தனக்கு இவன் கணவனாகக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவளுள் இருப்பதை உணர முடிகிறது. ஒரு ரூபாய் நோட்டில் தன் கையெழுத்தைப் போட்டு அதை பத்திரமாக வைத்துக் கொள்ளச் சொன்னதும், ராமுவின் விசிட்டிங் கார்டை தன்  நெஞ்சில் வைத்ததிலிருந்தும் அவள் காதல் மாறவில்லை என்பதை 'நெஞ்சம் மறப்பதில்லை'  என மிக அழகாக சொல்லியிருக்கிறார் கதாசிரியர்.

வேறு விலை அதிகமான எந்தப் பொருளையும் வாங்காமல், ராமு பணத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லியும் அதை மறுத்த அவளின் தன்மானமும், 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ' என்று மல்லிகைப்பூவை மட்டும் வாங்கிக் கொண்ட அவளின் பெருந்தன்மையும்,  காதலின் ஆழமும் அவளிடம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

'சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய்' என்று அவள் தன் கஷ்டத்தையும் மறந்து எப்போதும் சிரித்து கொண்டிருப்பதும், ராமுவின் நாகரீகத்தில் அக்கறை கொண்டு விக் வைத்துக் கொள்ளச் சொன்னதும் அவளின் ஆசைகள் ஈடேறாத மனத்தைக் காட்டுகிறது.'எங்கேயோ பார்த்தமுகம்' என்று ராமு  யோசித்துக் கொண்டிருந்த அந்த கடற்கரைப் பெண்ணின் வீட்டிற்கு ராமுவும், ஜானகியும் சென்றபோது பணம் அங்கு தாண்டவமாடியதைக்  காண முடிந்தது. அதே நேரம், பெண்ணின் திருமணம் என்ற மகிழ்ச்சியில் வளைய வர வேண்டிய அந்தப் பெண்ணின் தாய் எங்கே?   அவள்தான் தான்  காதலித்த மைதிலி என்று தெரிந்தபோது ராமு எப்படி அதிர்ச்சியில் கலங்கிப் போயிருப்பான்? படிக்கும்போதே மனம் பதைக்கிறது.'விழியே கதை எழுது'' என்று தான் அன்று கற்பனை செய்த அந்த விழிகளில் இருந்து கண்ணீர். 'ஜல்ஜல்ஜல்லெனும்  சலங்கை ஒலி' என்று  'கொலுசு  ஒலித்த  பாதங்களில்கால்களில்  சங்கிலி; 'காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே' என்று எண்ணிய ராமு தன் நிலையை யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்த பரிதாபம் ஆசிரியரின் எழுத்துக்களில் நன்கு புரிகிறது.அந்த நேரத்திலும் அவர்களுடன் தன்  மனைவி ஜானகியை ஒப்பிட்டுப் பார்த்து 'நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்' என்று மனதில் எண்ணி, சீதாவையும்,, மைதிலியையும் ஒப்பிட்டுப் பார்த்து தன் அதிர்ஷ்டத்தை எண்ணி 'நீதானே என் பொன்வசந்தம்' என்று ஆசையுடன் ஜானகியைப் பார்த்தானோ!
இருந்தும் 'இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி' மைதிலியையும், 'கள்ள சிரிப்பழகி' சீதாவையும் நம் ஹீரோவுக்கு 'மறக்க மனம் கூடுதில்லையே!'பெண்ணின் தாயார் மனநிலை சரியில்லாதவள் என்பதற்காக அவள் பெண்ணை ஒதுக்குவது  சரியல்ல என்ற ராமுவின் எண்ணமும் அவளையும் சரியாக்கி விடலாம் என்ற நம்பிக்கையும் பாராட்டத் தக்கது.

இளமைக் காலம் இனிமையானது... நமக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை... நம் மனம் என்னென்னவோ எண்ணுகிறது... அவை நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகங்கள் இல்லாமல் சந்தோஷம் ஒன்றையே   கனவு காணும் காலம். அப்பொழுது நாம்  பெற்றோர், சுற்றியிருப்போர், நண்பர்கள் பற்றிக்  கவலைப்  படுவதில்லை.

'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை... என்னைச் சொல்லிக் குற்றமில்லை' என்று நமக்கு புரிய காலம் நமக்கு கொடுத்த நாட்கள் கிட்டத்தட்ட 30 க்கும் மேற்பட்ட வருடங்கள்.

அதிலும் காதல் பலரின் கண்களை மறைத்து விடுகிறது. அந்தப் பருவம் தாண்டி வந்து நாம் ஒரு நல்ல வாழ்க்கை வாழும்போதுதான் நாம் அந்தத் தவறை செய்யாதது சரிதான் என்று உணர முடிகிறது. நமக்கு நல்லதைச் செய்யும் பெற்றோரின் பெருமையை உணர முடிகிறது.

'காகித ஓடம் கடலலை மீதுபோவது போல'த்தான் நம் வாழ்வும்.

கதாசிரியர் சொல்வதுபோல இளமை, அழகு, ஆரோக்கியம் இவை அழியக் கூடியவை. என்றும் நிரந்தரமல்ல. என்றும் பணிவுடன், அடக்கத்துடன், அன்புடன்  நடந்து கொள்வதே ஒருவரை உயர்ந்த நிலையை அடையச் செய்யும். 

ராமுவின் மகனுக்கும், மைதிலியின் மகளுக்கும் திருமணம் நடக்கவும், மைதிலி விரைவில் குணமடையவும் இறைவன் அருள் புரியட்டும்.

'எந்நாளும் நலம் வாழ என் வாழ்த்துக்கள்!!'


ராதாபாலு  


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.    
இரண்டாம் பரிசினையும் வென்று 
மீண்டும் இரண்டாம் முறையாக 

ஓர் ஹாட்-ட்ரிக் பரிசு பெறும் 

வாய்ப்புக்கும் முற்றிலும் தேர்வாகியுள்ள

மற்றொரு வெற்றியாளர்
திருமதி. 


 இராஜராஜேஸ்வரி 


அவர்கள்http://jaghamani.blogspot.com/

வலைத்தளம் : “மணிராஜ்”

http://rjaghamani.blogspot.in/


"krishna"
  

இரண்டாம் பரிசினை வென்று


பகிர்ந்து கொண்டுள்ள இரட்டை 


ஹாட்-ட்ரிக் 


வெற்றியாளர் 
திருமதி. இராஜராஜேஸ்வரி 
அவர்களின் விமர்சனம் இதோ:

 

ஆரம்பமே இயற்கை அழகும் அன்புமாக அமர்க்களமாக தொடங்குகிறது!

அந்தக் கால எதார்த்தத்தை அழகான வர்ணனையுடன் சொல்லிய விதம் அருமை ...

 கதைகளில் வரும் சூழல்களை பற்றி ஆசிரியர்  விவரிக்கும் விதம் அலாதியானது 

 காதலின் இரு வேறு நிலைகளை தொட்டு தொடரவிட்டிருக்கிறார் கதை ஆசிரியர்..!

கதையின் தொடக்கம் மிகப் பரபரப்பாக உள்ளது! 

ஏதோ ஒரு மர்மக் கதை படிப்பது போன்ற உணர்வு! 

காரில் இருந்து இறங்கி வந்தவர்கள் யார்? 

அந்தப் பெண்ணைப் பார்த்ததும் எதற்காக திடுக்குற்றார்? 

கதையின் களத்தின் நடுவே ஆசிரியர்  அமர்ந்து கொண்டு, அத்தனை திசையிலும் அவர் பார்வை பதிகிறது..

இடம் பற்றிய வர்ணனைகள் வர வர, அந்தக் காட்சி மனக்கண் முன்னே விரிகிறது. 

 படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது.
நகைச்சுவை!

ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.
சஸ்பென்ஸ்!

நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன். 
அதிர்ச்சி!

பலதரப்பட்ட உணர்வுகளோடு விளையாடும்  எழுத்துக் கப்பலில் சொகுசுப்பயணமாக உல்லாசக்கப்பல் கடந்த காலத்தில் ஒரு கால். இன்றில் ஒருகால் என வாழ்க்கை கடலில் கம்பீரமாக கதை பயணிக்கத்தொடங்குகிறது..!

கதை ஸ்டோர் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்டு ராஜபாட்டையில் பயணிக்கிறது!

இளம் வயது வாலிபனின் உணர்வுகள், அவ‌னைச் சுற்றி தின‌ச‌ரி சுழ‌ன்ற‌ ய‌தார்த்த‌ நிக‌ழ்வுக‌ள் என்று ஒவ்வொரு வ‌ரியும் அனுப‌வித்து எழுதியிருக்கிறார் கதை ஆசிரியர்..!

ஒரு சின்ன‌ வ‌லியுட‌ன்  ... ஒண்டிக்குடித்தனமாக இருந்த ”அப்போதைய அங்கிருந்த நடுத்தர மக்களது சமூக நிலைமை, பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள், --அப்போதைய காலகட்டத்தில் ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் அவ்வளவு சுலபமாகப் பேசிவிட முடியாது - இவற்றை இயல்பாகச் சொல்லி அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்

கதை நடந்த காலகட்டத்திற்கும் இப்போதுள்ள நிலைக்கும் இருக்கும் வித்தியாசத்தினை அவ்வப்போது சொல்லிப் போகும் கதையின் பாங்கு அமர்க்களம்.

ஒரு கிராமத்து வாழ்வியல் அப்படியே மனக்கண்ணில் வந்து , இதயத்தில் பதிந்து விட்டது! 

எவரெல்லாம் காதலினால் காயமுற்றனரோ அவர்களுக்கெல்லாம் மருந்தாக அமைந்து, மிக அழகிய சமூகவியல் சிறுகதையாக தோற்றம் பெற்று, படிப்பவர்  மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது!

காதலுக்கு கண்ணில்லை

வளமான வர்ணனையில் வசீகரமாய்  வந்து விழும்  வார்த்தைகள் அமர்க்களம் ..

வாழ்வின் முக்கிய கட்டமான 21 வயதில் வாழ்வில் இரு பெண்கள் குறுக்கிட்டது பற்றிய பதிவு - நீண்ட வர்ணனைகள் - நடந்த நிகழ்வுகள் அத்தனையும் விளக்கமாக அளித்தது சுவையான கதையாகி மிளிர்கிரது..!

ஒரு காதலின் இரு பக்கங்களையும் அலசி ஆராய்ந்து அழகாய் அற்புத நடையில் எழுதிய கதை அமர்க்களம் ..! 

விலகிப்போனால் விரும்பி வருவதும் விரும்பிப்போனால் விலகிச்செல்வதும் மனித குணமாயிற்றே..!

முன்பல் தூக்கிய சராசரி அழகும் அற்ற தன்னைச்சுற்றிவரும் வெகுளிப்பெண் குழந்தையைக்கொஞ்சும் சாக்கில் உணர்ச்சிகளைத்தூண்டி விளையாடினாலும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துகிறான் கதாநாயகன்..
 ..
கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிலே பழுத்த பலா..!!
அவன் தோற்றத்தை  நாகரிமாக்க முயற்சிக்கிறாள்.. பலாப்பழம் போன்ற வெளித்தோற்றத்துடன் முன் பற்கள் தேங்காய் துருவி மாதிரி துருத்திய தன்னையே சுற்றிவந்து வெகுளிப் பெண் மனதை அன்பால், உரிமையால், பரிவால், நட்பால் இன்னும் பிரிவால் நெகிழவைக்கிறாள்..! 

எல்லாருக்கும் தங்களின் முதல்,பழைய அல்லது நிறைவேறாத காதலை ஞாபகப்படுத்தும் பகுதி, 

தன் மனதைச் சொல்வதில் வெளிப்படையான அணுகுமுறை - உரிமை கோரத் தயக்கம் - ஆனாலும் விடவும் மனமில்லாமல், அன்றைய நாளுக்கான சந்தோஷத்தை கேட்காமலேயே எடுத்துக்கொண்டது -இறுதியில் கொடுத்த உதவியை ஏற்க மறுத்த நாசூக்கு. என அந்த 40 நிமிடங்களுக்குள் கடந்த 40 வருட சமாசாரங்களையும் சரமாரியாக எடுத்துரைத்த மடை திறந்த வெள்ளமென மனம் திறந்த உரையாடல் மனம் நிறைக்கிறது.

வலுவில் வந்து பேசிப்பழகி,  கூச்ச சுபாவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி, எப்படிப்பழக வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும், எப்படி மிடுக்காக இருக்க வேண்டும் என  நாகரீகம் சொல்லிக் கொடுத்தவளும் கூட...

இள‌மையின் வசந்த கால நினைவலைகள் என்றுமே மனதுக்கு ரம்யமானவைதான்!!

அந்த நாயகிக்கும் அவளைச் செதுக்கிய காதாசிரியருக்கும் சபாஷ்.

மிகுந்த தன்மானம் உள்ளவர். படிக்கும் வாசகர் பார்வைக்கு அவர் ஒரு தேவதையாக தான் தெரிகின்றார் 

அந்தப் பணம் அவளுக்கு அத்யாவசியத் தேவை. ஆனால் கம்பீரமாக மறுத்து சென்றாளே ..... அதுதான் சுயகௌரவம்.. 

அவளின் உணர்வுகள் வெளிப்பட்ட காட்சியை கண்முன்னே நிறுத்தியது போல அருமையான காட்சி அமைப்பு ... அதீத பிரியம் அது ..

சரளமான நடை ... சிறப்பான கதையோட்டம் பாத்திரப் படைப்பை செதுக்கி வைத்தாற்போல் உருவாக்கியிருக்கிறார் கதை ஆசிரியர்..

எளிமையான நடையில் வலுவான ஒரு அற்புத கதை..

பணமே வாழ்க்கை அல்ல என்பதை அந்த பெண்ணின் கதாபாத்திரம் மூலம் உணர்த்துகின்றார் எழுத்தாளர்....

கதாநாயகன் மேல் அளவற்ற அன்பு வைத்துவிட்டு, உரிமை கொண்டாட முடியாத சூழ்நிலையில், சிக்கித்தவிக்கும் ஓர் பெண்ணின் உண்மையான மனநிலை ... மனப்போராட்டம். 

அவளின் தூய்மையான, தெளிவான, அன்புக்கும், பாசத்திற்கும், அவள் தன் மனதில் கோட்டைகட்டி எதிர்பார்த்துக் காத்திருந்த ஆவலுக்கும் முன்னால், பணமெல்லாம் ஓர் தூசு போலத்தான். 

ஆனால் இன்றைய யதார்த்த வாழ்க்கைச் சூழ்நிலையில் பணமில்லாமல் என்னதான் நம்மால் பெரிதாகச் செய்துவிட முடிகிற்து?

கதாசிரியரின் கற்பனை நாயகி கதாநாயகனைக் கற்பனைக் நாயகனாக்கி மகிழ்ந்தவளின் மனதை நெகிழ வைக்கும் கடந்த காலக் கதை. நாடகம் நடப்பது போலும், அந்த நாடகத்தைக் கண்ணெதிரே ரசித்துப் பார்ப்பது போலும் தோன்றுகிறது


சில விஷயங்கள் மிக எதிர்பார்க்க முடியாதவை. இதுவும் அது போல் ஒன்று. மனநிலை தவறிய வருங்கால மருமகளின் அம்மவைப்பார்த்தால் பெரும்பாலும் தங்கள் வாரிசுகளுக்குக்கோ அல்லது வரு மருமகளுக்கோ  கூட இந்த காணச்சகிக்கமுடியாத நோய் வரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக பயந்து திருமணத்தை மறுக்கும் சுயநல உலகம் இது.

சில பேர் பெண்ணுக்கும் அம்மா போல பிற்காலத்தில் நோய் வரலாம் என்று மறுத்து விடுவார்கள். இங்கு கதையின் நாயகர் அப்படிச் செய்யாமல் அவர் முன்னாள் காதல் தடுக்கிறது. எதிர்பாரா முடிவுதான். 

வாழ்க்கை தனக்குள் நிறைய புதிர்களை ஒளித்து வைத்திருந்து அவ்வப்போது விடுவிக்கும். அவற்றை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும்போது குழப்பங்கள் தீர்ந்து விடும்

தன் முன்னாள் காதலியை பார்ப்பதே கொடுமை அதுவும் இப்படி ஒரு நிலையில் பார்ப்பதென்பது மிககொடுமை மனம் ரணமாகிப் போன கணம் அது ...

அதே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வலிமையையும் அழகாக சொல்லிய விதமும் அருமை 

வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக இப்படித்தான் நாம் நம் சம்பத்தப்பட்டவர்களை சந்திக்க நேருகிறது

சிலர் ஜெயித்த நிலையிலும் சிலர் தோற்ற நிலையிலும் அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம் அது தெரிந்து என்ன ஆகப் போகிறது 

இந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி காரணங்களை விளக்காமல் போனது - வாசகர்களை இதைவிட கௌரவப்படுத்தமுடியுமா என சபாஷ் போட வைக்கிறது..!

மனதில் ஓடிய என்ணங்களை வாசகர் கற்பனைக்கே விட்டு வாசகர்களை கௌரவப்படுத்துகிறார் கதை ஆசிரியர்

கதையின் இறுதிப் பகுதி மனம் கனக்கச் செய்த போதிலும் நேர்மறையான சிந்தனையுடன் முடித்திருந்தது அருமை

மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்னே கசக்கும்.பின்னே இனிக்கும் அல்லவா?

truth is stranger than fiction - 

ஆன்மாவை நிறைக்கும். ஆன்மாவின் தவிப்பு அதை உணர்பவருக்கே உணர்த்தும்

அழகான  எழுத்தில் இயல்பாகவே மனசு சொக்கிப் போகிறது.

பேச்சே இல்லாமல் அப்படியே விவரங்களாய்க் கொண்டு போவது எத்தனை அழகு கதைக்கு சிகரம் வைக்கும் எழுத்துநடை வசீகரிக்கிறது..!

சுவை குன்றாமல் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல்.. தித்திக்கும் நினைவலைகள் அனாயாசமான எழுத்தோட்டத்தில் சொக்கி நிற்கவைக்கிறார் கதை ஆசிரியர்..!.

பொதுவாக, வார்த்தைப் பரிமாற்றங்கள் கதையெழுதுபவர்களுக்குக் கைகொடுக்கும். 

சுவாரஸ்யமாகக் கதையை நகர்த்திக் கொண்டுபோயிருப்பதிலிருந்து  எழுதுவதில் தான் கைதேர்ந்தவர் என்பதை முரசறைவிக்கிறது இந்த அருமையான கதை..!

இன்றைய செல்ஃபோன் போன்ற எந்த வசதி வாய்ப்புகள் அதிகம்  அன்று இல்லாததே,  நன்கு செம்மைப்படுத்தி,  வாழ்க்கையில், பட்டைதீட்டிய வைரமாக இன்று ஜொலிக்க வைத்திருக்கிறதோ, என்று  எண்ணிப்பார்த்து மகிழவைக்கிறது காலத்தின் கோலம்..!

எழுத்தை படித்துக் கொண்டு வந்தால் ஒரு நல்ல ஓவியர் அப்படியே ஓவியம் வடித்து விடுவார். அந்த அளவுக்கு வர்ணனைகளில் கலக்கியிருக்கிறார் கதை ஆசிரியர்..!

ஓவியத்திற்கு பதில் காவியமாக  கண் முன்னே காட்சிகள் விரிகின்றன ..
பலாச்சுளை நிறத்துடன் பாரதிகண்ட புதுமைப்பென்ணாக சைக்கிள் ஸ்கூட்டர், கார் என்று ஓட்டிப்பழகும் நாகரிக நங்கையை கதாநாயகனின் மனம் நாடுகிறது...

காதலித்த பெண்ணின் பெற்றோர் தங்களைப் பற்றி விசாரித்து - மாப்பிள்ளையாக்கலாமா எனச் சிந்தித்தபின், செயல்படவே சற்றே தாமதம் செய்திருக்க, சுப விவாகப் பிராப்திரஸ்து பலிக்காமல், அவர்கள் சொன்ன விவாகப்பிராப்தி மட்டும் உடனே பலித்து விட்டது 

ஆனாலும் அவர்கள் பெற்ற பைங்கிளியுடன் அல்ல. தங்கள் சொந்தத்தில் பெண் எடுக்க முடிவு செய்த கதாநாயகனின் பெற்றோர்  ஆசியுடன் திருமணம் உடனே நடந்து ..ஆச்சரியம் தான்..!

எல்லாம் இறைவன் செயல். இன்னாருக்கு இன்னார் என ப்ராப்தம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்களே, அதுவே தான், ..கடவுள் அமைத்துவைத்த கல்யாணமேடை சிறப்பாகவே அமைந்தது அதிர்ஷ்டம் தான்..! 

40 ஆண்டுகள் நலமுடனும் வளமுடனும் இல்லற வாழ்க்கை - பேரன் பேத்திகளோடு மகிழ்வாக வாழும் வாழ்க்கை - அனைத்துச் செயல்களுமே நன்றுதான்..

தான் விரும்பிய பெண்ணைவிட தன்னை விரும்பும் பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுத்தால் வாழ்வு சுகப்படும் என்பார்கள்..!

ஆயிரம்காலத்துப்பயிரல்லவா திருமணம்.. ஆயிரம் அர்த்தங்கள் பொங்க புதிதாய் இப்போதுதான் மனைவியின் - வாழ்க்கைத்துணைநலத்தின் மேன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. அதிகமில்லை .. திருமணமாகி நாற்பது ஆண்டுகள் தான் ஆகிறது ..

பேரன் பேத்திகள் எடுத்து மற்றொரு மகனுக்கு பெண்பார்க்கும் இடத்தில் தன் துணையின் அழகு பெரிதாகத்தோன்றுகிறது..

இருகோடுகள் தத்துவம் தான்..! சிந்திக்கவைக்கிறது..!
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள். 

    


   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.
-oOo-இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக 


பல மணி நேர இடைவெளிகளில் 


வெளியிடப்பட்டு வருகின்றன.
காணத்தவறாதீர்கள் !’போனஸ் பரிசு’ பற்றிய 
மகிழ்ச்சியானதோர் தகவல்’மறக்க மனம் கூடுதில்லையே’ 

என்ற இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 
பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

முதன் முதலில் என்  டும்.. டும்.. டும்.. டும்.. போட்டி அறிவிப்பினில் http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html தெரிவிக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுக்கும், இந்த போனஸ் பரிசுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. 

அது வேறு தனியாக ! இது வேறு போனஸாக !!

மகிழ்ச்சி தானே ! தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பதிவு செய்யுங்கள்.    


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo

இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:” உண்மை சற்றே வெண்மை 

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


10.04.2014 

 

இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

24 கருத்துகள்:

 1. திருமதி. ராதா பாலு அம்மா அவர்களுக்கும், இரட்டை ஹாட்-ட்ரிக் பெற்றுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. திரண்டாம் பரிசு வென்ற திருமதி. ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துகள்..

  அவரது அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி April 6, 2014 at 12:34 PM

   //திரண்டாம் பரிசு வென்ற திருமதி. ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துகள்..

   அவரது அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!//

   //திரண்டாம் பரிசு//

   திரண்டூளி போலவே படித்ததும் ஓர் இன்பப் பரவஸம் ஏற்படுத்தியது. இனிப்புப்புட்டு அனுப்புங்கோ ;))))) ப்ளீஸ்.

   நீக்கு
 3. எமது விமர்சனத்திற்கு இரண்டாம் பரிசு கிடைத்ததும் ,
  இரட்டை ஹாட்ட்ரிக் பரிசுக்கு தேர்வு பெற்றதும் ஆச்சரியம்தான்..

  இனிய நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 4. இரண்டு விமரிசனங்களுக்கும் இரண்டாம் பரிசு தான்! ஆனால் இந்த இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்?..

  பதிலளிநீக்கு
 5. மீண்டும் தங்களிடமிருந்து பரிசுபெறும் வலைப்பதிவர்கள்
  சகோதரி ராதா பாலு மற்றும் சகோதரி இராஜராஜேஸ்வரி இருவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. அருமையான விமர்சனங்கள் எழுதிய ராதாபாலு அவர்களுக்கும் இராஜராஜேஸ்வரிக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...

  பதிலளிநீக்கு
 7. இரண்டாம் பரிசு பெற்றுள்ள திருமதி ராதா பாலு அவர்களுக்கும் திருமதி ராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் மனங்கனிந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. இரண்டுமே அருமையான விமர்சனங்கள்... எழுதிய திருமதி ராதா பாலு அவர்களுக்கும் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது உள்ளங்கனிந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான விமர்சனங்கள்! பரிசு பெற்ற இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 10. /// மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்னே கசக்கும்.பின்னே இனிக்கும் அல்லவா?

  truth is stranger than fiction -

  ஆன்மாவை நிறைக்கும். ஆன்மாவின் தவிப்பு அதை உணர்பவருக்கே உணர்த்தும் //

  நிதர்சனமான, ஆணித்தரமான கருத்துக்கள்.
  இரண்டாவது முறையாக ஹாட் டிரிக்கும், இரண்டாவது பரிசு பெற்றிருக்கும் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  // உச்சிப் பிள்ளையார் மட்டுமே மாறாமல் இருக்கிறார்! அவரும் பாவம் அத்தனை உயரத்தில் அமர்ந்து கொண்டு 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று தாயுமானவரை வணங்கிக்கொண்டு அம்மா மாதிரி (பார்வதி தேவி!!) ஒரு அம்சமான பெண்ணை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார் போலும்! //

  நல்லதொரு கற்பனை ! பாராட்டுக்கள் .

  பரிசு பெற்ற திருமதி . ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. இரண்டாம் பரிசு பெற்ற திருமதி. ராதா பாலு அவர்களுக்கும், திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. 2-ஆம் பரிசு வெற்றியாளர்கள் திருமதி. ராதா பாலு,
  திருமதி. இராஜராஜேஸ்வரி இருவருக்கும் என்
  வாழ்த்துக்கள்! மேலும் பற்பல பரிசுகள் பெறட்டும்!

  பதிலளிநீக்கு
 13. நான் 15 நாட்களாக ஊரில் இல்லாததால், இன்றுதான் விபரம் அறிந்தேன்.


  என் விமரிசனத்தை இரண்டாம் பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவருக்கும், போனஸ் பரிசும் இணைத்துக் கொடுக்கும் கதாசிரியருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  என்னுடன் பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://enmanaoonjalil.blogspot.com/2014/04/blog-post.html
  ’என் மன ஊஞ்சலில்’ - திருமதி ராதா பாலு அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 15. இரண்டாம் பரிசை வென்ற இருவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. விமரிசனங்கள் இரண்டுமே நல்லா இருக்கு. இருவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 17. திருமதி ராதா பாலு அவர்களுக்கும், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  போனஸ் பரிசு வேறயா? அடடா

  வடை போச்சே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 28, 2015 at 12:02 PM

   //திருமதி ராதா பாலு அவர்களுக்கும், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)

   //போனஸ் பரிசு வேறயா? அடடா .... வடை போச்சே//

   பொதுவாகப் போட்டியில் பங்குகொள்வோருக்கு ஓர் உற்சாகம் ஏற்படவும், மேலும் அவர்கள் தொய்வின்றி தொடர்ந்து பங்குகொள்ளவும், புதியவர்களின் வருகைக்காகவும், நான் திட்டமிட்டு பல்வேறு புதிய பரிசுகளை அறிவித்திருந்தேன். அதில் இந்த ‘போனஸ் பரிசு’ என்பதும் ஒன்று.

   நேற்று முன்தினம் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சார்த்தி வடை சாப்பிட்டிருப்பீர்களே ! எனக்கு அந்த ‘வடை போச்சே’ என நான் தான் சொல்லவேண்டும். :)

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றியோ நன்றிகள், ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 18. பரிசு வாங்கின ரெண்டு பேருங்களோட விமரிசனமும் நல்லா இருக்குது. இருவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. திருமதி ராதாபாலு திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு வாழ்த்துகள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்னு சொல்லி இருக்காங்க.

  பதிலளிநீக்கு
 20. தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ' என்பது போல, ராமுவைக் காதலித்தவள் (சீதா) அழகில்லை என்றாலும், பருவ வயதிற்கேற்ற பதமான பக்குவத்தில் பளபளப்பாக இருந்தாள்! ஆஹா...என்ன ரசனையாக ஒரு பெண்ணின் அழகை நான்கு வார்த்தைகளில் நறுக்கு தெறித்தாற்போல் நாசூக்காக சொல்லிவிட்டார் ஆசிரியர் ....... இதற்கே அவருக்கு ஒரு ’ஓ’ போட்டாச்சு!///ஓஓஹோ...
  தான் விரும்பிய பெண்ணைவிட தன்னை விரும்பும் பெண்ணை மனைவியாகத் தேர்ந்தெடுத்தால் வாழ்வு சுகப்படும் என்பார்கள்..!

  ஆயிரம்காலத்துப்பயிரல்லவா திருமணம்.. ஆயிரம் அர்த்தங்கள் பொங்க புதிதாய் இப்போதுதான் மனைவியின் - வாழ்க்கைத்துணைநலத்தின் மேன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. அதிகமில்லை .. திருமணமாகி நாற்பது ஆண்டுகள் தான் ஆகிறது ..// அப்பதானே பலருக்கு புரியுது..  பதிலளிநீக்கு
 21. //அருமையான விமர்சனங்கள்! பரிசு பெற்ற இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 22. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

  அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
  http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு