About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 19, 2014

VGK 12 / 03 / 03 THIRD PRIZE WINNER - 'உண்மை சற்றே வெண்மை’





’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 12 - ” உண்மை சற்றே வெண்மை “


இணைப்பு:



மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 







நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து


















இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    

மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 






களம்பூர் திரு.



 G. பெருமாள் செட்டியார் 


அவர்கள்



வலைத்தளம்

http://gperumal1974.blogspot.in/









  





மூன்றாம் பரிசினை வென்றுள்ள 



 களம்பூர் திரு.



 G. பெருமாள் செட்டியார் 


 அவர்களின் விமர்சனம் இதோ:




ஒரு  பெண்ணைப்  பற்றிய   கதை .

அவளின்  திருமண  (தே)க்கத்தைக்  காட்டும்   சூழ் நிலை .

இந்நிலையில்,  

ஒரு  பெண்ணின்  மனதில்   தோன்றும்  எண்ணங்களைக்
கொச்சைப்படுத்தாமல் ,  லாவகமாக,  நேர்த்தியாக  வெளியே
கொணர்வது   என்பது,  கம்பியின்  மேல்

இல்லை,  இல்லை,

கூரான   கத்தியின்  மேல்   காயம்  படாமல்
நடப்பதைப்  போன்றது !

சாதித்துவிட்டார் கதாசிரியர் ! ! .  

ஆரம்பமே   அட்டகாசம்தான்.

மாட்டிற்கு  தேவையான  அகத்திக் கீரை முதல்   
கழுநீர்  தண்ணீர் வரை ....ஒரு  கிராமியச்   சூழ் நிலையைக் கண் முன்னே கொண்டு வந்து  
நிறுத்திவிட்டார், 
(  அந்தகாலத்து   பாரதி ராஜாவைப் போல ).

நாயகியின்  படிப்பு  கல்லூரியில்  வளர,வளர,
பெற்றோர்களின்  கவலையும்  வளர்கிறது,  
சரியான  வரன்  அமையாததால்.

காரணம், ஜாதகத்திலும் குறை, நாயகியின் உடம்பிலும் குறை.

நாயகியின்  குறையை  விவரிக்ககாராம்பசுவை  
கதைக்குள்  கொண்டு வந்தது ,  சரியான   யுக்தி.

நாயகி,   தன்  மேல்  கொண்ட கழிவிரக்கத்தினால்
"  நான்  என்ன  செய்வது ?  காராம்  பசுவாகப் பிறக்காமல் ,  கன்னிப் பெண்ணாகப்  பிறந்து  விட்டேனே  !! "
என்று   சொல்லிய    வார்த்தைகள்  மூலம்,
இரு  நிறம்  கொண்ட  காராம்  பசுவை மேன்மை  படுத்தி,
ஒரு  பெண்ணுக்கு  தெரியாததெரியக்கூடாத  இடத்தில்  
இருக்கும்   சிறிய  வெள்ளைத்   தழும்பை   காரணம்   காட்டி,
பெண்மையை  தாழ்மைப்  படுத்தும் பேதைகளைசவுக்கு  
கொண்டு சாடியிருக்கிறார்,  கதாசிரியர்.

கடல்  போல்  ஆர்ப்பரிக்கும்   ஒரு பெண்ணின்   மன  ஓட்டத்தை,  
தெளிந்த நீரோடை போன்ற வார்த்தைகளைக் கொண்டு  
" உண்மை  சற்றே வெண்மை "
என்ற மிக அழகான கவிதை  பாடியிருக்கிறார்,  கதாசிரியர் .  

வாழ்த்துக்கள்  ! !


திருமணத்தை  எண்ணி   ஏங்கிடும் பெண்ணே !

அதன்  ரகசியத்தைச் சொல்வேன் !

மானிடர்  திருமணம்  என்றோ நிச்சயிக்கப்பட்டது.

எங்கோ  ஒளிந்திருக்கும் !

ஏக்கத்தைக் கொல்வாய் !  மனதினை வெல்வாய் !

உன் குணத்தில்  அதுவும் ஒன்று !

நீயே  விட்டுவிட்டாலும் நிச்சயிக்கப்பட்டவன் 

வந்தே  தீருவான்  ஓர்  நாள் ...

சொன்னவன்  கண்ணன் !  சொல்பவன் கண்ணன் !! 

by
G . பெருமாள்  செட்டியார்


 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



” நீ ..... முன்னாலே போனா ....

நா ..... பின்னாலே வாரேன் ! 





விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


24.04.2014  


இந்திய நேரம் 



இரவு 8 மணிக்குள்.















என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

24 comments:

  1. பரிசு பெற்ற விமர்சன கர்த்தாவுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. சுருக்கமான ஆயினும்
    கதையின் ஆன்மாவைப் புரிந்து
    அற்புதமாக விமர்சனம் செய்துள்ள
    பதிவர்.ஜிபெருமாள் செட்டியார் அவர்களுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஐயாவின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து பங்கேற்றுப் பல பரிசுகளை வென்றிடவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மூன்றாம் பரிசினை வென்றுள்ள
    களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..

    தொடர்ந்து பரிசுகள் வென்றிட வாழ்த்துகள்...

    ஐயா அவர்களின் அருமையான
    விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  7. மூன்றாம் பரிசு பெற்றுள்ள திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பல பரிசுகளை வெல்ல வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //சாதித்து விட்டார் கதாசிரியர்...//

    எப்படி, எவ்வாறு சாதித்து விட்டார் என்று விவரித்து சொல்லியிருந்தால் (உண்மையில் அது தானே விமரிசனம்!)
    முதல் பரிசு கிடைத்திருக்கலாமோ?..

    சொன்னவன், சொல்பவன் கண்ணனாய் இருந்ததினால் (மாற்றங்களுடனான அந்த கவிதை வரிகள்) நடுவரின் கவனத்தைக் கவர்ந்து விட்டது போலும்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தினை அறிந்தேன் .
      வழிகாட்டியமைக்கு நன்றிகள் !

      Delete
  9. சிறுகதை விமர்சனப் போட்டியில் 3-ஆவது பரிசினை வென்றுள்ள களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. Congratulations to the winners,happy Tamil new year :)

    ReplyDelete
  11. வாழ்த்திய அனைவருக்கும், என்னை பரிசுக்கு உரியவராக்கிய
    நடுவர் அவர்களுக்கும், திரு. VGK அவர்களுக்கும் , மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  12. பரிசு பெற்ற திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. சுருக்கமான விமர்சனம் என்றாலும் சிறப்பான விமர்சனம்.....

    மூன்றாம் பரிசு பெற்ற திரு பெருமாள் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வெற்றி பெற்றவர்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_10.html
    களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்

    இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  16. களம்பூர் திரு. பெருமாள் செட்டியாரின் அருமையான விமரிசனத்திற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  17. வெற்றி பெற்றவருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  18. களம்பூர் திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya September 28, 2015 at 6:56 PM

      //களம்பூர் திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ. :)

      Delete
    2. பரிசு வென்ற திரு பெருமாள் செட்டியாரவங்களுக்கு வாழ்த்துகள்.

      Delete
  19. திரு பெருமாள் செட்டியாருக்கு வாழ்த்துகள் திருமணவயதில் இருக்கும் இளம் பெண்ணின் மன உணர்வுகளை கதாசிரியர் சொன்ன விதத்தை ரசித்து சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete
  20. // ஒரு பெண்ணின் மனதில் தோன்றும் எண்ணங்களைக்
    கொச்சைப்படுத்தாமல் , லாவகமாக, நேர்த்தியாக வெளியே
    கொணர்வது என்பது, கம்பியின் மேல்

    இல்லை, இல்லை,

    கூரான கத்தியின் மேல் காயம் படாமல்
    நடப்பதைப் போன்றது !

    சாதித்துவிட்டார் கதாசிரியர் ! ! . // உண்மைதான் ஐயா. இந்தப்பரிசின் மூலம் நீங்களும்கூட...

    ReplyDelete
  21. பரிசு வென்ற திரு பெருமாள் செட்டியாரவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete