About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, April 4, 2014

VGK 12 - ’உண்மை சற்றே வெண்மை !’இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்: 10.04.2014 
வியாழக்கிழமை

இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 
valambal@gmail.com 

REFERENCE NUMBER:  VGK 12

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

உண்மை சற்றே வெண்மை

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


என் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் எப்போதும் குறைந்தபக்ஷம் ஒரு பசு மாடாவது கன்றுக்குட்டியுடன் இருந்து கொண்டே இருக்கும். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பசுக்களும், இரண்டு மூன்று கன்றுக்குட்டிகளும் கூட இருப்பதுண்டு.

என் அப்பாவும், அம்மாவும் பசு மாட்டை தினமும் நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அதன் நெற்றியிலும், முதுகுப்பகுதியிலும், வால் பகுதியிலும் மஞ்சள் குங்குமம் இட்டு, தெய்வமாக அவற்றைச் சுற்றி வந்து கும்பிடுவார்கள். 

மாட்டுத்தொழுவத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்து வருவார்கள்.  அகத்திக்கீரை, தவிடு, கடலைப்புண்ணாக்கு, வைக்கோல், அரிசி களைந்த கழுநீர், பருத்திக்கொட்டை, மாட்டுத்தீவனங்கள் என ஆரோக்கியமான சத்துணவுகள் அளித்து, பசுக்களை மிகவும் போஷாக்காக வளர்த்து வருவார்கள். 

வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் மாட்டுக்கொட்டகையில் சாம்பிராணி புகை மணம் கமழும். பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் கோமாதாக்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.  


 


கன்றுக்குட்டிகளுக்கு போக மீதி மிஞ்சும் பசும்பால் தான் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பசு மாட்டு சாணத்தில் தயாராகும் விராட்டி என அனைத்துப் பொருட்களும், எங்கள் குடும்பத் தேவைக்குப்போக விற்பனையும் செய்வதுண்டு.

என் பெற்றோருக்கு, மிகவும் அழகு தேவதையாகப் பிறந்துள்ள ஒரே பெண்ணான என்னை, நன்கு செல்லமாக வளர்த்து படிக்கவும் வைத்து விட்டனர். 

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்க இருந்த எனக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர். 
கல்லூரிப் படிப்பு முடிந்து வந்த எனக்கு இதுவரை மாப்பிள்ளை மட்டும் சரிவர அமையவில்லை. 

இதற்கிடையில், ஓரிரு பசுக்களே இருந்த என் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பல பசுமாடுகள் புதியதாக வந்து, சுமார் நாலு மாடுகளுக்கு பிரஸவங்கள் நிகழ்ந்து இன்று ஆறு பசுக்களும், எட்டு கன்றுக்குட்டிகளுமாக ஆகியுள்ளன.
இப்போது மாடுகளையும் கன்றுகளையும் பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் போட்டு, பால் வியாபாரமும் சக்கைபோடு போட்டு வருகிறது. எனக்கு இன்னும் மாப்பிள்ளை தான் சரியாக அமையவில்லை.

பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. 

”ஒரு சிறிய பசுமாட்டுப் பண்ணை நடத்துபவரின் பெண் தானே! பெரியதாக என்ன சீர் செலுத்தி செய்து விடப்போகிறார்கள்!” என்ற எண்ணமாகக்கூட இருக்கலாம் என் திருமணம் தடைபடுவதற்கு.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது முடிக்கணும் என்பார்கள். அதில் எனக்கோ என் பெற்றோருக்கோ கொஞ்சமும் விருப்பம் இல்லை. 

ஆயிரம் தடவையானாலும், திரும்பத்திரும்ப உண்மைகளைத்தான் சொல்ல ஆவலாக இருக்கிறோம். 

ஆனால், இந்தக்காலத்தில், உண்மையைச் சொன்னால் யாரும் உண்மையில் நம்புவதில்லையே!

இப்போதெல்லாம் ஒருசில பசுக்கள் இரவில் ஒரு மாதிரியாகக் கத்தும் போது, என் பெற்றோருக்கு, என்னைப்பற்றிய கவலை மிகவும் அதிகரிக்கிறது. நல்ல வரனாக இவளுக்கு சீக்கரம் அமையாமல் உள்ளதே என மிகவும் சங்கப்பட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால் வாயில்லாப் பிராணிகள் எனப்படும், அந்தப் பசுக்களைப்போல (என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டி) எனக்கு வாய் இருந்தும் நான் ஒன்றும் கத்துவதில்லை.

என்னவோ தெரியவில்லை, நான் சிறுமியாக இருந்தபோது, என்னிடம் மிகவும் பிரியமாக இருந்த என் பெற்றோர்கள், இப்போதெல்லாம் என்னிடமிருந்து மிகவும் விலகிச்செல்வதாகவே, எனக்குத் தோன்றுகிறது.

அன்று ஒரு நாள், இரவெல்லாம் ஒரு மாதிரியாகக் கத்திக்கொண்டிருந்த, ஒரு பசுவை காலையில் என் தந்தை எங்கோ ஓட்டிப்போகச்சொல்ல, மாட்டுக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த ஆளும், என் தந்தையிடம் ஏதோ பணம் வாங்கிக் கொண்டு அதை ஓட்டிச்செல்வதை கவனித்தேன்.தொடரும்
ஏதோ சிகிச்சைக்காக மாட்டு வைத்தியரிடம் 

கூட்டிச்செல்கிறார் என்று  நினைத்துக் கொண்டேன். 


சிகிச்சை முடிந்து வந்த அது பரம ஸாதுவாகி விட்டது. 


அதன் முகத்தில் ஒரு தனி அமைதியும் அழகும் 

குடிகொண்டிருந்தது. இப்போதெல்லாம் அது இரவில் கத்துவதே இல்லை.
மூன்று மாதங்கள் கழித்து அது சினையாக இருப்பதாகப் 


பேசிக்கொண்டார்கள். 


அந்தப் பசுமாட்டைப் பார்த்த எனக்கு, ஏதோ 

புரிந்தும் புரியாததுமாகவே இருந்து வந்தது.


சென்ற வாரம் என் அப்பாவைத்தேடி ஆறுமுகக்கோனார் 

என்பவர் வந்திருந்தார். 


அவருடன் ஒரு பெரிய பசுமாடும், கன்றுக்குட்டியும் 


வந்திருந்தன. 


“காராம் பசு” என்று பேசிக்கொண்டனர். 


உடம்பு பூராவும் ஆங்காங்கே நல்ல கருப்பு கலராகவும், 

இடைஇடையே திட்டுத்திட்டாக வெள்ளைக்கலராகவும், 

பார்க்கவே வெகு அழகாக, அவைகள் இரண்டும் 

தோற்றமளித்தன.


அவைகளைப்பார்த்த என் அப்பாவுக்கு 

மிகவும் பிடித்துப்போய் விட்டது. 


அம்மாவிடம் போய் ஏதோ ஆலோசனை செய்தார். 


எண்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அந்தக் காராம்பசுவும் 


கன்றுக்குட்டியும் அப்பாவுக்குச் சொந்தமாகி விடுமாம்.

“எண்பதாயிரம் ரூபாயா?” மிகவும் விலை 

ஜாஸ்தியாக உள்ளதே, என்று என் அம்மா 

வியந்து போனாள்.
“ஒரு வேளைக்கு பத்து லிட்டருக்குக் குறையாமல் 

பால் கறக்குமாம்; 


ஏழு அல்லது எட்டே மாதங்களில் போட்ட 


பணத்தை எடுத்து விடலாம்; 
காராம் பசு என்றால் சும்மாவா? அதன் உடம்பில் உள்ள இரட்டைக்கலருக்கே மதிப்பு அதிகம் தான்” 


என்று அப்பா அம்மாவிடம் சொல்வது, 

என் காதிலும் விழுந்து தொலைத்தது.
இப்போது இந்த மாட்டை ஆசைப்பட்டு, 

இவ்வளவு பணம் போட்டு வாங்கிவிட்டால், 

திடீரென என் கல்யாணம் குதிர்ந்து வந்தால், 

பணத்திற்கு என்ன செய்வது என்றும் யோசித்தனர் 

என் பெற்றோர்கள். கல்யாணச் செலவுகளைத்தவிர, நகைநட்டு, 

பாத்திரம் பண்டமெல்லாம் எப்பவோ சேகரித்து 

வைத்து விட்டாள், மிகவும் கெட்டிக்காரியான என் தாய்.

என்னைப்போலவே தளதளவென்று இருக்கும் 

இந்தக் காராம்பசுவுக்கு உடம்பிலும், மடியிலும்

வெவ்வேறு இரண்டு கலர்கள் இருப்பதால் 

மார்க்கெட்டில் மெளஸ் ஜாஸ்தியாக உள்ளது.
ஆனால் அதே போல எனக்கும், என் உடம்பின் 

அதே பகுதியில், சற்றே ஒரு ரூபாய் 

நாணயமளவுக்கு, வெண்மையாகவே உள்ளது. அதுவே எனக்கு சுத்தமாக மார்க்கெட்டே 

இல்லாமல் செய்து, என் திருமணத்திற்கு 

இடையூறாக இருந்து வருகிறது.இந்தக் காராம்பசு, தன் இயற்கை நிறத்தை 

ஆடை ஏதும் போட்டு மறைத்துக் 

கொள்ளாமல், உண்மையை 

உண்மையாக வெளிப்படுத்தும் பாக்யம் பெற்றுள்ளதால், 

அதற்கு மார்க்கெட்டில் நல்ல மதிப்பு உள்ளது.நாகரீகம் என்ற பெயரில் ஆடைகள் அணிந்து 

என் உடலையும், அந்தக்குறையையும் நான் 

மறைக்க வேண்டியுள்ளது. என்னுடைய  பொதுவான, மேலெழுந்தவாரியான, 

உருவ அழகைப்பார்த்து, மிகுந்த ஆர்வமுடன் பெண் 

கேட்டு வந்து போகும், பிள்ளையைப்பெற்ற 

மகராசிகளிடம், மிகுந்த கூச்சத்துடன் 

இந்த ஒரு சிறிய விஷயத்தை உள்ளது உள்ளபடி 

உண்மையாக கூற வேண்டியுள்ள, சங்கடமான 

துர்பாக்கிய நிலையில் இன்று நாங்கள் உள்ளோம்.உண்மையை இப்போது மறைத்துவிட்டு, 


பிறகு இந்த ஒரு மிகச்சிறிய வெண்மைப் பிரச்சனையால், 


என் இல்வாழ்க்கை கருமையாகி 


விடக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகிறோம்.”ஆனால் ஒன்று; என்னைக் கட்டிக் கொள்ளப் 

போகிறவன் இனி பிறந்து வரப்போவதில்லை;   


ஏற்கனவே எங்கோ பிறந்து வளர்ந்து வாழ்ந்து 

கொண்டு தான் இருக்க வேண்டும்; 


அவனை நமக்கு அந்த பகவான் தான் 

சீக்கரமாக அடையாளம் காட்ட வேண்டும்”, என்று என் அம்மா தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, 

தானும் ஆறுதல் அடைந்து, என்னையும் 

ஆறுதல் படுத்துவதாக நினைத்து வருகிறாள்.அந்தக்காளை இந்தக் காராம்பசுவை 

விரும்பி ஏற்றுக்கொள்ள பிராப்தம் 

வருவதற்குள், பட்டதாரியான எனக்கு, 

“முதிர்க்கன்னி” என்ற 

முதுகலைப்பட்டமளிப்பு விழா 

நடந்தாலும் நடந்து விடலாம்.
நான் என்ன செய்வது? காராம்பசுவாகப் பிறக்காமல், 


கன்னிப்பெண்ணாகப் 


பிறந்து விட்டேனே !


oooooOooooo

” VGK-10 மறக்க மனம் கூடுதில்லையே ” 


 ” VGK-10 மறக்க மனம் கூடுதில்லையே ”


என்ற சிறுகதைக்கு, 

கணிசமாக எண்ணிக்கையில் பலரும் 

’மறக்க மனம் இல்லாமல்’ அழகாக 

விமர்சனம் எழுதி அனுப்பி

சிறப்பித்துள்ளனர்.


அவர்கள் அனைவருக்கும் 


என் மனம் நிறைந்த 


னிய அன்பு நன்றிகள்.


நாளை சனி, ஞாயிறு, திங்களுக்குள்

போட்டிக்கான பரிசு அறிவிப்புகள்

முற்றிலுமாக வெளியிடப்படும்.
தனித்தனியாக 


மொத்தம் நான்கு பதிவுகள் ! 


ஞாபகம் இருக்கட்டும் !! 
 நான்காவது பதிவினில்  


 இதுவரை இந்தப்போட்டியில் 


 பரிசு வென்றுள்ளவர்கள் பற்றிய  


 பல்வேறு அலசல்கள் 


 இடம் பெற உள்ளன. 
 காணத்தவறாதீர்கள்  ! 

  
oooooOooooo
 ’எங்கோ படித்தது’ 

சிலருக்கு எதை எழுதினாலும் அல்லது சொன்னாலும் 'நான் கூட அப்படித்தான்' அல்லது 'இதே மாதிரி எனக்குக் கூட..' என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வது வழக்கம். எழுதுகிற விஷயத்தில் தன்னை எப்படியாவது நுழைத்துக் கொள்ளாவிட்டால் எழுதின மாதிரியே அவர்களுக்கு தோன்றாது.

கதைக்கும் கவிதைக்கும் தன்னையும் உள்ளே நுழைத்துக் கொண்டு கற்பனையில் ஆழ்வது எழுதுகிற விஷயத்திற்கு சுயதரிசன சிறப்பைக் கூட்டும்.

ஆனால் விமர்சனக் கட்டுரைகளுக்கு அப்படியல்ல. எழுதுகின்ற விமரிசனத்தில் தன்னையும் பொருத்திக் கொள்ளாமல் தப்பிப்பது, சொல்லப் போனால் பெரிய கலை. எதை விமரிசிக்கிறோமோ அதிலிருந்து விமரிசிப்பவர் விலகியிருந்து ஒரு மூன்றாம் மனித ஆராய்ச்சியில் நுணுக்கமாக எழுத எடுத்துக் கொண்ட விஷயத்தை அலசுவது எழுதப்படுகின்ற விமரிசனங்களுக்கு தனிச் சிறப்பைக் கூட்டும். விமரிசனம் செய்யக்  கூடிய விஷயம் மட்டுமே முன்னிலை படுத்தப்பட்டு தானும், எவரது எழுத்து பற்றி விமரிசிக்கிறோமோ அவரும் மனசில் மறைந்து போகின்ற உன்னத நிலை இது.  இந்த நிலையில் தான் தனிமனித ஆசாபாசங்கள் அழிந்து போய் விமரிசனம் செய்யக் கூடிய விஷயத்தோடு விமர்சனம் செய்பவனுக்கு ஓர் நேரடியான  தொடர்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் அர்சுனனின் அம்பைப் போல எய்யும் குறி தான் ஒரே கவனமாய் போய் எழுதும் பொருளில் உண்மையின் சுடலையும் பிரகாசத்தையும் ஒரு சேரக் குவிக்கும்.
 [ இதை நான் எங்கோ எதிலோ என்றோ படித்தது. 
விமர்சனம் எழுதி அனுப்பும் தங்களுக்கு 
இது இப்போது எந்த வகையிலாவது 
பயன்படுமானால் எனக்கும் மகிழ்ச்சியே ! ]

  
oooooOooooo


இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில்

அனைவரும் உற்சாகத்துடன் தொடர்ந்து

கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய்

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  
oooooOoooooஎன்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

31 comments:

 1. உண்மை சற்றே வெண்மை
  மனதை கலங்க அடித்துவிட்டது ஐயாங

  ReplyDelete
 2. வருத்தப்பட வைக்கும் முடிவு...

  "எங்கோ படித்தது" ஏற்ப படமும் அசத்தல்...

  ReplyDelete
 3. எதை விமரிசிக்கிறோமோ அதிலிருந்து விமரிசிப்பவர் விலகியிருந்து ஒரு மூன்றாம் மனித ஆராய்ச்சியில் நுணுக்கமாக எழுத எடுத்துக் கொண்ட விஷயத்தை அலசுவது எழுதப்படுகின்ற விமரிசனங்களுக்கு தனிச் சிறப்பைக் கூட்டும்.//

  விமர்சனக்கலையை சிறப்பாக
  விமர்சனம் செய்த வரிகள் பயனுள்ளது..!..

  ReplyDelete
 4. விமரிசனம் குறித்த கருத்து அருமையாக இருக்கிறது. அதற்கெனத் தேர்ந்தெடுத்த படமும் அருமை.

  ReplyDelete
 5. //நான் என்ன செய்வது?
  காராம்பசுவாகப் பிறக்காமல்,
  கன்னிப்பெண்ணாகப்
  பிறந்து விட்டேனே !//

  please know the other side of the real life

  http://ipc498a-victim.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. 498ஏ அப்பாவி April 4, 2014 at 1:12 PM

   **நான் என்ன செய்வது? காராம்பசுவாகப் பிறக்காமல், கன்னிப்பெண்ணாகப் பிறந்து விட்டேனே !**

   //please know the other side of the real life
   http://ipc498a-victim.blogspot.com//

   தங்களின் மேற்படி பதிவினை முற்றிலுமாக முழுவதுமாக பொறுமையாகப் படித்தேன்.

   இதுபோன்ற கஷ்டங்கள் வாழ்க்கையில் எந்தவொரு அப்பாவி ஆணுக்கும் ஏற்படவே கூடாது.

   ’ஆயிரம் காலத்துப்பயிர்’ எனச்சொல்லப்படும் திருமணங்கள், நன்கு தீர விசாரித்து, பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, அவர்களின் அனுபவம் + முழுத்திருப்தி + நல்லாசிகளுடன் நடந்தால் இதுபோன்ற சோதனைகள் இருக்காதோ என நினைக்கத்தோன்றுகிறது.

   சுழலில் மாட்டிய தாங்கள் எப்படியோ அதிலிருந்து, கடைசியில் தப்பித்து வந்தது கேட்க மகிழ்ச்சியே.

   Delete
 6. கதை கனக்க வைத்தது! விமரிசனம் எழுதுவோருக்கான குறிப்பு அசத்தல்! நன்றி!

  ReplyDelete
 7. முதிர் கன்னி. வருத்தம் ஒவ்வொரு எழுத்திலும் வடிகிறது..அருமையான கதை. மிகத் தீவிரமான பிரச்சினையை நெகிழ்வு தரும் விதத்தில் கையாளப்பட்டு இருக்கிறது. மிக நன்றி.

  ReplyDelete
 8. முதிர் கன்னி. காராம்பசுவின்,கலப்பு நிறமும், கன்னிப்பெண்ணின்
  வெண்மையும் எப்படி கோர்வையாக எழுத முடிந்தது. வியக்க வைத்தது. ஆண்களின் பிரச்சினை ஓரளவு தீர்ந்து விடுகிறது. ஏதோ ஒரு ஏழைப்பெண் மனமுவக்கிராள். பெண்கள் ? கேள்விக்குறிதான்.

  ReplyDelete
 9. வழக்கம் போல 'எங்கோ படித்தது' விமரிசனக் குறிப்புகள் அற்புதம்.
  இந்தப் பகுதிக்கு அந்த குறிப்புகள் ஓர் இலக்கிய அந்தஸ்த்தை கொடுப்பதும் தெரிகிறது. இன்னொன்றும் தெரிகிறது. பரிசு பெறும் விமரிசனக் கட்டுரையாளர்கள் இந்த குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மாதிரியும் தெரிகிறது.

  ReplyDelete
 10. //பரிசு பெறும் விமரிசனக் கட்டுரையாளர்கள் இந்த குறிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மாதிரியும் தெரிகிறது.//

  அப்படி எல்லாம் சொல்ல முடியாது ஜீவி ஐயா, அந்த அளவுக்குத் தன்னை மறந்து விமரிசிக்கும் அளவுக்கு இன்னும் யாருக்கும் இயலவில்லை என்பதே உண்மை. எல்லோருமே முயல்கிறோம். அதில் சிலர் வெற்றி அடைகின்றனர். நடுவரின் கண்ணோட்டமும் இருக்கிறது அல்லவா? அவரின் துலோக்கோல் தேர்ந்தெடுப்பது தானே பரிசு பெறுகிறது! :)))) அந்த நேரம் இவை எல்லாம் நினைவில் வருமா என்பதும் சந்தேகமே! :)))) இதுவும் ஒரு தன்னை மறந்த நிலைதான். :)

  ReplyDelete
 11. பின்னூட்டம் கொடுத்தேன் போச்சானு தெரியலை! :) எரர் வந்தது. திரும்பி எழுத முடியலை! :(

  ReplyDelete
 12. நல்ல வேளை போய்ச் சேர்ந்து விட்டது. என்ன தான் திரும்பி எழுதினாலும் அதே வார்த்தைகள், கருத்து வருமான்னு சொல்ல முடியாது. ஏன்னா ஒவ்வொரு தடவை மறுபடியும் எழுதும் பொழுதும் முந்தி எழுதினது நினைவில் இருந்தாலும் மனம் மாற்றி எழுதச் சொல்லும். Modify- பண்ணி எழுதத் தோன்றும். அதான் லேசில் திருப்தி அடையாத எழுத்து சிறப்பு.

  கல்கி அவர்கள் அச்சுக்கான ப்ரூப்பை 20 தடவைகளுக்கு மேல் திருத்துவாராம். 'கல்கி' அலுவலகத்தில் அச்சுக்கோப்பவராக இருந்த விந்தன் (கோவிந்தன்) சலித்துக் கொள்ளாமல் ஒவ்வொரு தடவை திருத்தலுக்கும் ஈடு கொடுத்து ப்ரூப் போட்டுக் கொடுத்து கல்கிக்கு ரொம்பவும் பிடித்தவராய் ஆனார். உண்மையில் கல்கி திருத்திக் கொடுப்பதே விந்தனுக்கு 'எழுத்துக் கல்வி' ஆகி பிற்காலத்தில் கல்கி பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் ஒருவராகிறார். அவரது 'பாலும் பாவையும்' அந்தக் காலத்தில் கல்கி சர்க்குலேஷனை எகிறச் செய்தது.

  நடுவரின் கண்ணோட்டம் ஒரு சிக்கலான விஷயம். இந்த போட்டிக்கு 'ஒன் மேன் ஜட்ஜ்' மாதிரி ஒரே ஒருத்தர் நடுவராக இருப்பதால் எளிதில் அவர் கண்ணோட்டத்தையும் கொஞ்சம் சிரமப்பட்டால் கண்டு கொள்ளலாம் போலிருக்கு. அதனாலேயே அவரும் தன் அளவுகோல்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதாகவும் தெரிகிறது; இது வரை அவர் தேர்ந்தெடுத்த விமரிசனக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்ததில் தெரிந்தது.
  இனி வர வர பரிசு பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பரிசு பெற்றாலும் அவர்களின் எழுத்துக்களிலேயே மெருகு கூடியிருப்பதும் தெரிகிறது. அவர்களும் ஒரே மாதிரி எழுதாமல் மாற்றி மாற்றி எழுதினால் விதவிதமான சோதனைகளை மேற்கொண்டால் இன்னும் சிறப்பாகி விடும். இன்னும் நிறைய புதிதாக வரவேண்டும். நிறைய பேருக்கு இந்த போட்டிச் செய்தி போய்ச் சேரவில்லையோ என்னவோ?..

  கோபு சாருக்கு இந்த ஐடியா எப்படி தோன்றியது தெரியவில்லை; புண்ணியம் கட்டிக் கொண்டார். இந்தத் தளத்தில் 'தமிழில் நல்ல விமரிசனக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?' என்பதற்கு ஒரு வகுப்பே நடக்கிற மாதிரி தெரிகிறது. அதனால் இந்தப் போட்டிக் கட்டுரைகளை மிஸ் பண்ணாமல் சுடச்சுட படித்து விடுகிறேன்.

  நீங்களும் தான் சக்கை போடு போடுகிறீர்கள். வாழ்த்துக்கள், கீதாம்மா.

  ReplyDelete
 13. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  முதிர்கன்னி பற்றிய கதை - படிக்கும்போதே மனதில் இது போன்ற எத்தனை எத்தனை முதிர் கன்னிகள் உண்டு என்று நினைவில் வந்து போனது. இப்போதெல்லாம் முதிர் கன்னிகள் போலவே ஆண்களின் நிலையும் என்று ஆகிவிட்டது.

  ReplyDelete
 14. வருத்தப்பட வைக்கும் முடிவு...

  ReplyDelete
 15. இந்த சிறுகதைக்கான விமர்சனப்போட்டியில் கலந்துகொண்ட திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் [அவர்களின் விமர்சனம் போட்டியின் நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகாமல் இருந்தும்கூட] அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனத்தைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்கள்.

  இணைப்பு: http://muhilneel.blogspot.com/2014/04/blog-post_20.html

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  ReplyDelete
 16. ’VGK-12 உண்மை சற்றே வெண்மை’

  இந்தக்கதைக்கு மாயவரத்தான் MGR என்கிற திரு. ரவிஜி அவர்கள் தான் எழுதிய விமர்சனத்தை போட்டிக்கான காலக்கெடுவுக்குள் சரிவர அனுப்ப இயலாத சூழ்நிலை ஏற்பட்டும்கூட, அதனை இன்று தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:

  http://mayavarathanmgr.blogspot.in/2014/11/12.html

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  போட்டியிலேயே பங்குகொள்ளாவிட்டாலும், தன் விமர்சனத்தினைத் தனிப்பதிவாக இன்று தன் வலைத்தளத்தினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள திரு. ரவிஜி அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete

 17. 'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'

  இந்த சிறுகதைக்கு பெரியவர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று [04.12.2014] அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு இதோ:

  http://swamysmusings.blogspot.com

  இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.

  நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ooooooooooooooooooooooooooo

  ReplyDelete
 18. கதை அல்ல, உண்மையில் நடப்பதுதான்.

  ReplyDelete
 19. விமரிசன போட்டியில் பரிசு பெற்றவர்களே மறுபடியும் பரிசுகளைப்பெற்று வருகிறார்கள்தான. ஆனாலும் வித்யாசமா யோசித்து பலவிதமாகவும் விமரிசனம் பண்ணுகிறார்கள். அதனாலேயே அவர்களின் கற்பனைத்திறனும் எழுத்து திறமையும் செம்மை படுகிறது.

  ReplyDelete
 20. உங்கள் கதைகளில் சிறப்பான கதை என்று எதை சொல்வது? எல்லா கதைகளுமே கரும்பாய் இனிக்கிறது.

  இதுவும் ஒரு முத்திரைக் கதை.

  முத்திரைக்கதைக்கு விமர்சனம் எழுதி பரிவு பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகளுக்கு அட்வானா வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 28, 2015 at 9:28 AM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   //உங்கள் கதைகளில் சிறப்பான கதை என்று எதை சொல்வது? எல்லா கதைகளுமே கரும்பாய் இனிக்கிறது.
   இதுவும் ஒரு முத்திரைக் கதை.//

   தங்களின் முத்திரை பதித்த கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   //முத்திரைக்கதைக்கு விமர்சனம் எழுதி பரிவு பெறப்போகும் அதிர்ஷ்டசாலிகளுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.//

   :) சந்தோஷம் :)

   Delete
 21. ஒங்க அல்லா கதயுமே படிச்சதும் மனசுலேயே சுத்தி வருது. இந்தக்கதயும் அப்பூடி இருக்குது. பசுவா பொறக்காம பொட்ட புள்ளியா பொறந்துட்டமேன்னு அந்த புள்ள இன்னா வேதன படுது.

  ReplyDelete
 22. பசுக்களை அவர்கள் போஷிக்கும் விதம் சிறப்பு தீவனம் சரியான நேரத்தில் அளித்து வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வது பற்றியெல்லாம் படிக்கவே சந்தோஷம்.

  ReplyDelete
 23. மிக அருமையான 'சுவாரசியமான' பதிவு. இதுவல்லவா எனக்கு மகத்தானதொரு நட்பினை பிணைப்பினை ஏற்படுத்திக்கொடுத்தது. valambal - balambal ஆகி ஜஸ்ட் மிஸ் ஆன இந்தக் கதைக்கான விமர்சனத்தை எனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன். என்றாலும் எனது முதல் விமர்சனப்போட்டிக்கான சிறுகதை என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...

  ReplyDelete
 24. பசுக்கள் வளர்ந்து, கருவுற்று, கன்றுகளை ஈன்று பண்ணையாகி விட்டாலும் தனக்கென்று ஒரு வரன் மட்டும் இன்னும் அமையவில்லை என அப்பெண் தன் உள்ளக் குமுறலை வெளிக்காட்டும் இடமும், இரவு நேரங்களில் சில பசுக்கள் ஒருமாதிரி கத்தும்போது அவைகளால் தம் உணர்வை வெளிப்படுத்த முடிவதாகவும், தன்னால் அவ்வாறு வெளிப்படுத்தமுடியாதென எண்ணும் இடமும் எல்லோர் மனதிலும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதே சமயம் பெற்றோர் தன் மகளுக்கு உரிய வரன் கிடைக்கவில்லையே என கவலைப்படுவதாக அமைத்ததிலிருந்து அவர்களின் பொறுப்புணர்ச்சியும் வெளிப்படுத்தப் படுகிறது.  "பார்க்க லக்ஷணமாக இருந்தும் எனக்கும் ஒரு சில குறைகள் என் ஜாதகத்திலும் கூட. " எனத் தொடங்கும் வரிகளில் கதையின் முடிச்சு ஆரம்பமாகிறது.

  சமுதாயத்தில் அதுவம் நடுத்தர மற்றும் வறுமையில் வாழ்பவர்களிடையே இதுபோன்ற குறைபாட்டுடையவர்களின் மனநிலையையும் அவர் படும் துயரங்க

  ளையும் விளக்கி இது ஒரு நோயே அல்ல, குறைபாடுதான் என்பதை விளங்க வைக்க முயற்சித்ததும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன. தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 25. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்:

  47 + 52 + 30 = 129

  அதற்கான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2011/09/1-of-2_6.html

  http://gopu1949.blogspot.in/2011/09/2-of-2.html

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_13.html

  ReplyDelete
 26. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 27. WHATS APP COMMENTS RECEIVED ON 31.08.2018 FROM Miss. DHIVYA my neighbor at BHEL Quarters, Tiruchi-14 during 1995 to 2000 ..... now at Chennai.

  -=-=-=-

  Nice story mama

  -=-=-=-

  Thanks a Lot திவ்யா !

  அன்புடன் கோபு மாமா !!🙏🤗🙏

  ReplyDelete
 28. WHATS-APP COMMENT RECEIVED ON 16.06.2019 FOR VGK-12

  Ref no.VGK-12 உண்மை சற்றே வெண்மை. -

  வெள்ளை மனதை கொள்ளை கொள்ள
  யார் கொடுத்து வைத்துள்ளாரோ!

  இப்படிக்கு,
  மணக்கால் மணி

  ReplyDelete