என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 26 ஏப்ரல், 2014

VGK 13 / 02 / 03 SECOND PRIZE WINNERS - ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., - புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் !’


’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 


VGK 13 - ” ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., - 

புதிய கட்சி : மூ.பொ.போ.மு.க. உதயம் ! 


இணைப்பு:

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து


இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர் 


இம்முறை ஹாட்-ட்ரிக் பரிசினைப் பெற

முற்றிலும் தகுதி பெற்றுள்ளகளம்பூர் திரு.


 G. பெருமாள் செட்டியார் 


அவர்கள்
வலைத்தளம்

http://gperumal1974.blogspot.in/


இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள


புதிய ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்


களம்பூர் திரு.


 G. பெருமாள் செட்டியார் அவர்களின் விமர்சனம் இதோ:


கதாசிரியரின்  முழு    நீ......  நகைச்சுவை  கதை !
இது  சிரிக்க வைத்த  கதை மட்டுமல்ல,
என்னை  சிந்திக்கவும்  வைத்த  கதை !

மரத்தை  மறைத்தது  மாமத  யானை 
மரத்தின் மறைந்தது  மாமத  யானை 
என்று   திரு மூலர்   கூறியது   போல் ,
 ஒன்றில் ,  மற்றொன்றை மறைத்து,    நகைச்சுவையாய்
கதை எழுதிய  ஆசிரியருக்கு வாழ்த்துக்கள் !

கதாசிரியரின் நினைவில் , ,
நெஞ்சு  பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தரை  நினைத்து விட்டால்.
என்ற  பாரதியின்  வரிகள்    வந்திருக்க வேண்டும் ,
கொட்டிவிட்டார்தன்   மனக் குமுறலைநகைச்சுவையாக !

சிலர்  சிரிப்பார்,
சிலர்  அழுவார்,
நான் 
சிரித்துக் கொண்டே  அழுகின்றேன் -  என்ற
எண்ணத்துடன்மற்றவரை  சிரிக்க வைத்து,
வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும்  சிந்தனையாளருக்கு,
சிரம் தாழ்த்திய  வணக்கங்கள் !


என்னால  ஆகாதுன்னு  எனக்கு தெரியுமுங்க , 
ஆனா,  சொல்லறத  சொல்லிப்புட்டேன் ! " என்ற 
பட்டுக் கோட்டையாரைப் போல்
கொள்ளையடிப்பதில்  வல்லமை காட்டும் திருட்டு  உலகத்தையும்,
தட்டு கெட்ட மனிதர் கண்ணில்  பட்டதெல்லாம்  சொந்தம்,
என்ற நிலையினையும் கண்டு,  நெஞ்சு பொறுக்காமல் ,
இன்றைய  அரசியல் அவலங்களையும்அரசியல்  வாரிசுப்
போராட்டங்களையும்அர்த்தமில்லாத  வாக்குறுதிகளையும்,
இலவசங்களின்  குத்தாட்டத்தையும் , கோடிட்டு காட்டி,
சுவையாக  கதை எழுதிய ஆசிரியருக்கு  பாராட்டுக்கள் !


நித்தில  பூம்பந்தர் கீழ்,  
மாமுது பார்ப்பனன்  மறை வழி காட்டிட,
மாலையிட்டு,
மங்கள நாண் முடித்து ,
அம்மி மிதித்து,
அருந்ததி பார்த்து,     கைபிடித்த  நல்லாளை,

பொருத்தமாக வந்து,  
பொறுமையுடன்  வாழ்ந்துகொண்டிருக்கும்
பொண்டாட்டியை ,
செல்லமாக  சுருக்கி,
பொடி " யாக்கி ,
என்னை   சிரிக்க வைத்த   கதாசிரியருக்கு,   வாழ்த்துக்கள் !!

நெய் மணக்கும்  வெண் பொங்கலைப் போன்ற  இக்கதையின்
நடுவே,  விருப்பம் உள்ளவர்கள்  சுவைத்து  ரசியுங்கள்விருப்பம் இல்லாதவர்கள்  
ஒதுக்கி விடுங்கள்  என்ற  எண்ணத்துடன் ,
பளபளப்பான  பால் குடத்தையும் , பழைய சோத்துப்பானையையும் ,
செண்ட் வாசனையையும்பூண்டு   வாசனையையும்,
சூடான  கொழுக்கட்டையையும் , ஊசிப்போன கொழுக்கட்டையையும்
நெய்யில் வருத்த குறு மிளகுகளாக,   விதைத்த  விதம்  அருமை !

பொடி  போடாமலேயே,
இடியையும்தூரலையும் வரவழைத்து
பஞ்ச  அமிர்தம்  நிறைந்த கை குட்டையை கசக்குவதையும்
நாசிகா சூர்ணத்தின் மிருதங்க கச்சேரியையும் 
விவரித்த  விதம்     அருமை !

திருச்சி ,  மலை வாசல் கடையைப் பற்றிய வர்ணனைகளும்,
அங்கு ஓசிப் பொடிக்காக காத்திருக்கும்  கூட்டத்தைப்   பற்றிய வர்ணனைகளும் 
..... அடடா .... என்ன   பசுமையான    நினைவுகள் !!

“  
பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்      ”  
என்ற  ..ஸ்ரீ யின் குரல்  மூலம்,  
தொழுது,   உண்டு,     பின் செல்லும்    மாக்களை,
தக்க தருணத்தில்  நினைவு கூர வைத்திருக்கும்   
கதாசிரியருக்கு............   சபாஷ் !

அதிரடி  தள்ளுபடி , 
ஆடி  தள்ளுபடி
புத்தாண்டு தள்ளுபடி ,
பொங்கல் தள்ளுபடி , 
தீபாவளி தள்ளுபடி
கார்த்திகை  தள்ளுபடி,
கிறிஸ்துமஸ்  தள்ளுபடி,  
வருட முடிவு  தள்ளுபடி  என்று  பள்ளு பாடி,
என்  கையிருப்பை கரைக்கும் வியாபார யுக்திக்கும்,
இன்றைய  இலவச இணைப்புகளுக்கும்,
 "  ரிஷி மூலம்நதி மூலம்  "  ஆராய்ந்த   கதாசிரியருக்கு .....
மீண்டும்  ஒரு   சபாஷ்  !


அறிஞர்  அண்ணாவின்  உண்மையான வாரிசு யார் ?  என்ற  
கேள்வியை  எழுப்பி,  தலைமுறை தலைமுறையாய்,   அண்ணா 
உபயோகித்த  அதே பொடியை  உபயோகித்து வரும்  .ஸ்ரீயும்
அரசியல்  வாரிசு  போட்டிக்கு  தகுதியானவர்தான்  என்ற பதிலையும்
தந்து , என்னை  சிரிக்க வைத்து , சிரிக்கும்  என்னைப் பார்த்து  
சிரித்துக்  கொண்டிருக்கும்  கதாசிரியருக்கு ......  
மற்றுமொரு  சபாஷ் !


..ஸ்ரீ  என்ற  அரசியல் வாதியின்  சின்னம்  " பொ டி ட் டி ன் "
என்று கூறிஅந்த  அரசியல் வாதியின்   நோக்கமும்
குறிக்கோளும்  " பொ டி ட் டி ன் " தான்  என்று   தெளிவாகவும்
தீர்க்கமாகவும்  எனக்கு  எடுத்துரைத்த  கதாசிரியருக்கு  ...
மீண்டும் மீண்டும் .........ஒரு  சபாஷ் !

தாலிக்கு  தங்கம்  வேண்டாம் 
  தாளிக்க  வெங்காயமும் வேண்டாம் " 
என்ற கொள்கையும் , ஞானமும் வ,வ.ஸ்ரீ க்கு பிறப்பதற்காக, 
திருச்சிவெங்காய மண்டியில்நடுத்தெருவில்  குவிக்கபட்டிருந்த 
வெங்காயத்திற்கும், “இண்டர் நேஷனல் கோல்டு பஜார்” என்ற
இடத்தில் குவித்து வைத்திருந்த தங்க  மோதிரங்களுக்கும் 
முடிச்சு போட்டவிதம்  அருமை !  

சிட்டிசென்டர்’ என்ற இடத்தில் , நம்ம நாட்டு சோளக் கதிரைத் 
தின்றுவிட்டுபொடி கிடைக்காத ஏமாற்றத்தில் , 
பொடலங்காய் காம்ப்ளெக்ஸ் " என்று   ,ஸ்ரீ   எரிச்சல்
அடைவதாக  காட்டியிருப்பதும்  அருமை !

தாலிக்கு தங்கமும்தாளிக்க எண்ணையும்மற்றவையும்தான்  
உனக்கு  வசப்பட்டுவிட்டதே!   இன்னும் என்ன  ? என்று  என்னை  
திருமூலர்  பாணியில்  சாடியிருப்பது ........
இன்னும்  அருமை!

இந்த   கொள்கையைப் பரப்பகொள்கை பரப்பு  செயலாளர்
பதவிக்குஓர் குஜாலான  சினிமா  நடிகையைத் தேடும்
அரசியல்வாதியாக  ..ஸ்ரீ !

"  நான்  எட்டு  வருடங்களாக அலுவலகத்தில்  எந்த  
வேலையும் செய்யவில்லை!   நான் செய்த அந்த  
வேலையை  நீ  தொடர்ந்து செய்தால்அது உன்னுடைய  
பதவி உயர்வுக்கு  வழி வகுக்கும் "  என்று  கதாநாயகனுக்கு
அறிவுரையும்வாக்குறுதிகளும்  வழங்கும்  ..ஸ்ரீ.

கதா நாயகனை ,
அலுவலகத்தில்  சேர்ந்த முதல் நாளே  கேன்டீன் இருக்கும்
இடத்தைக்கூட தெரிந்து  கொள்ளாத  வழுவட்டையாகவும்,

இன்றைய  அரசியல் வாதிகள்  அள்ளி வீசும்  வாக்குறுதிகளை,
..."  என்று  வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருக்கும்
நம்  சாதாரணக்  குடிமகனைப்   போலவும்,  அமைத்த   விதம்
அருமை !

முற்போக்கு அணிக்கும்பிற்போக்கு அணிக்கும்
வியாக்கியானம்  அளித்துஎல்லாமே  சாக்கடையில்
போகும்  சமாச்சாரங்கள் என்று  முடித்திருப்பது
மிக மிக அருமை !

ஒரு  பேச்சாளின்  பேச்சு,   கேட்பவர் மனத்திலும் ,
ஒரு  எழுத்தாளனின்  எழுத்து,   வாசகனின்  மனத்திலும்
ஒரு  தாக்கத்தையும்ஏக்கத்தையும்
உண்டு பண்ண வேண்டும் ! !

ஒன்றைச் சொன்னால்மற்றொன்று  மனதில்  உதிக்கவேண்டும் !


இதைப் படித்த  வாசகர்களின் சிரிப்பு ,
 " என்னால  ஆகாதுன்னு  எனக்குதெரியுமுங்க "
என்ற பட்டுக் கோட்டையாரின் பாடலின் பிரதிபலிப்பாக ,

இதுதான்  உண்மை ,
ஆனால்,  நான் என்ன  செய்ய முடியும் "
என்ற  எண்ணத்திலும்ஏக்கத்திலும் வந்ததாகத்தான்
இருக்க முடியும் .

இதுவும்  ஓரு  தாக்கம்தான் !


என்னுடைய  பார்வையில் ,
இந்த  சுவையான  கதை ,
கதாசிரியரின்  மற்றுமொரு சாதனை ! !

One  more feather on  his  cap !!

வாழ்த்துக்கள் ! ! 
by

ளம்பூர்
G.பெருமாள்  செட்டியார் எழுச்சியுடன் விமர்சனம் 


எழுதியுள்ள தங்களுக்கு என்


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.    

இரண்டாம் பரிசினை 


வென்றுள்ள மற்றொருவர்திரு. J. அரவிந்த் குமார் 


அவர்கள்


வலைத்தள முகவரி


 

இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. J. அரவிந்த் குமார் 


 அவர்களின் விமர்சனம் இதோ:மணமணக்கும் பொடியில்லாமல் போனால் நொணநொணப்பு, முணுமுணுப்பு, தொணதொணப்பு எல்லாம் வரத்தானே செய்யும்? 


வழுவட்டை சார் துபாய் போய் வந்த நிகழ்வு சுவாரஸ்யம்.சிட்டி செண்டரில் பொடி தேடியது சிரிப்பை வரவழைத்தது. பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று மனதுக்குள் முணுமுணுத்தவாறே. கொஞ்சங்கூட மணம் குறையாமல் வளர்கிறதே.. நகைச்சுவை டப்பா! -கதாசிரியர் துபாய் போய் வந்ததை சாமார்த்தியமாக தன் கதாபாத்திரம் மூலமாக பறைசாற்றுகிறார்..! 

வெண் புறா நர்ஸ் /விமான பணிப்பெண்கள் என்று  வர்ணனைகள்  மிஸ்டர் பொடிமட்டை - வழுவட்டை சிறந்த கலாரசிகர் என்று கட்டியம் கூறுகின்றன..

ஒரு பழக்கத்தை தொடர்ந்தவர்கள் திடீரென்று அதை நிறுத்தினால் படும் அவஸ்தையை பார்க்கும்போது, உண்மையில் அவர்கள் மீது பரிதாபம்தான் உண்டாகிறது. பொடி போடும் பழக்கம் உள்ளவர்கள் அதை விட்டுவிட மனம் இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள்.

பழக்கம்னு ஆரம்பிச்சு நிறுத்த முடியாமல் தவிப்பதை அழகாகச் சொல்லி கதை நகர்த்தப்படுகிறது... பலருக்கும் இந்த அவஸ்தை இருக்கும். :

மேனேஜருக்குத் தண்ணி காட்டிவிட்டு# [#குடிக்க குளிர்ந்த ஜில் வாட்டர் கொடுத்துவிட்டு] வெளியே வந்த அட்டெண்டர் ஆறுமுகம், தன் வெற்றிலைபாக்குப் பன்னீர்ப்புகையிலை போட்ட வாயைக் குதப்பிக்கொண்டே,  ஏதேதோ சொல்லிப்போனதில், குருவி தலையிலே பனங்காயை வைத்தாற்போல - ஒவ்வொருவரும் ஒரு பழக்கத்திற்கு அடிமைதான் என்பதை திறம்பட நிறுவுகிறது கதை..!

நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும், அதில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும்  பொடி நெடி தாங்காமல்,  அவனவன் ஓட்டம் பிடித்து விடுவான்.  இதெல்லாம் நானும் இந்த ஆபீஸில் ஏதோ வேலை செய்கிறேன் என்று ஒரு பாவ்லா காட்ட மட்டும் தான் வைத்திருக்கிறேன்” என்று உள்ளதை உள்ளபடிச் சொல்லி, நமக்கு உற்சாகம் அளித்து சிலர் வெட்டிப்பொழுதுபோக்கி சம்பளம் வாங்குவதோடு தன்னை வானளாவப் புகழ்பவர்களை தனக்கு உதவியாளர்களாகவும் பட்டமளிப்பு வைபவம் நடத்துவதை கண்முன் காட்சிப்படுத்துகிறது கதை..!

எப்போதுமே சீட்டில் இருப்பவர் போல ஏதோ ஒரு ஃபைலை மேஜை மீது விரித்து வைத்து, அதன் மேல் ஒரு பேப்பர் வெயிட்டையும், மூக்குக்கண்ணாடியையும், மூக்குப்பொடி டப்பாவையும் வைத்து விட்டுச் சென்று விடுவது பார்ப்பவர்களுக்கு அவர் இங்கு எங்கோ தான் பாத் ரூம் போய் இருப்பார் என்று நினைத்துக்கொள்ள,  கையாளும் ஒரு டெக்னிக் எப்படி எல்லாம் அலுவலக வேலையில் ஏமாற்றலாம் என வழிகாட்டுகிறது..!

தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.  என தாளவாத்தியக்க்ச்சேரியும் இலவசமாக நடப்பது ரசிக்கவைக்கிறது..!


முகத்தை அஷ்ட கோணலாக்கிக்கொண்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாக பதினைந்து தும்மல்கள் தும்மினார். அவரின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டன.  அவரைச்சுற்றி மழைச்சாரல்போல சளித்தூறல்கள். கைகுட்டை முழுவதும் பஞ்சாமிர்தம்போல ஏதேதோ ஒழுகியவண்ணம்.  அவர் முதல் தும்மல் போட்டதுமே நம்மையும் அந்த இடத்தைவிட்டு ஓடவைக்கும் அருவருப்பான வர்ணனை..!

’பொண்டாட்டி’யின் சுருக்கமான ’பொ.........டி’யை, தீட்க்ஷையாகப் பெற்றுக் கொள்வதை தன் காலை முதல் மாலை வரை வெட்டி பேச்சு பேசுவதை அழகாக சொல்லியுள்ளார் கதை ஆசிரியர்..!

பொடி தயாரிப்பதை புகையிலையை வறுத்து அரைத்து என்று சமையல் குறிப்பு போல வ.வ.ஸ்ரீ சொல்கிறாரே !பொடித் தயாரிப்பு மட்டும் இல்லை .. பதிவுக்காகவும் எவ்வளவு தெரிந்து கொண்டு எழுதவேண்டியுள்ளது

பொடிக் கதை கேட்டே பிரமோசனுக்கு ரெக்கமெண்டேசனும் கிடைத்ததன் மூலம் .பொடிக் கதை கேட்டாலும் காரியத்தில் கண்ணாக கதை வளர்கிறது...

தொடர் தும்மலில் அந்தத்துப்பாக்கிகளே நடுநடுங்கிப் போய்விட்டன.

இந்த மல்லிகா பத்ரிநாத் நிகழ்ச்சிகளை டி.வி.யில் வ.வ.ஸ்ரீ. அடிக்கடி கேட்டிருப்பாரோ என்னவோ! அவருடைய விசித்திர குணாதிசயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, தன்னுடைய கற்பனைகளையும் நிறைய சேர்த்து இந்தக்கதையை எழுதப்பட்டுள்ளது கதை...

வயதாகி, வழுவட்டையானபின், “சீ சீ இந்தப்பழம் புளிக்கும்’ என்று உண்மையான வெறுப்பு தோன்றும் காலக்கட்டத்தில் மட்டுமே, மனதில் உதிக்கும் ஒரு ஞானோதயமும் கூட.

இந்தத் தொடரில் 'வழுவட்டை', 'எழுச்சி/பேரெழுச்சி' எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஏதேனும் போட்டி வைக்கும் எண்ணம் இருப்பதுபோல அதிகம் முறை பயன் படுத்தப்பட்டுள்ளது.. அத்தோடு பொடி டின் என்ற வார்த்தையும் ஐம்பத்தோரு முறை பயன் படுத்தியிருப்பதாக ஆசிரியர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்..!

சற்றும் ஒரு சங்கோஜமோ, சங்கடமோ, லஜ்ஜையோ இல்லாமல் - பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுவது புதுக்கொழுக்கட்டை - ‘ஊசிப்போன கொழுக்கட்டை’   உதாரணம் என்று தன் இல்வாழ்க்கையின் இரகசியங்களை  எடுத்துரைத்து தாம்பத்ய வாழ்க்கைப்பாடமும் நடக்கிறது..!


அநேகமாக தான் சந்தித்த ஒரு சில விசித்திர குணச்சித்திரங்கள், அவர்களின் நடை உடை பாவனைகள், பேச்சுக்கள், அனுபவங்கள், பாதிப்புகள், காயங்கள், வலிகள், சந்தோஷங்கள், சாதனைகள், சோதனைகள், வேதனைகள் இவற்றுடன் கொஞ்சம்  சொந்தக்கற்பனையும் முக்கியமாக நகைச்சுவையும் கலந்து தரப்பட்டிருக்கும்  படைப்புகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன..!

நகைச்சுவை என்னும் காரம், குணம், மணம் நிறைந்த எழுத்தால் எழுச்சியும் வழுவட்டையும் சம அளவில் கலந்து பொடி தர்மம் காக்கும் பேரெழுச்சியுடன் வழுவட்டைகளைக் கண்டிக்கும் விதமாக எழுச்சியுடன் கொண்டு செல்லும் பாங்கிற்கு பாராட்டுகள் ..!.

பல்பொடி..கோலப்பொடியில் ஆரம்பித்து தினமும் பொடிமயமான வாழ்க்கையே வாழ்கிறோம் என பொடி மகாத்மியம் உணரவைக்கப்படுகிறது..!

பொடி போடும் அப்பாவிற்கு பொடி வாங்கி வரும்  நீண்ட கதை. பருமன் - மீசை - பனியன் பொடி கட்டுபவரினை விவரிக்கும் விதம் மிக மிக இரசிக்கவைக்கிறது..!

பத்து படி டின் - புதிய பொடி - பெரிய கரண்டி - ஜாடி. தராசு - தங்கம் போல நிறுத்தல் - வாழைப்பட்டை - வெள்ளை நூல் - பஎடைகளில் கட்டுவது. அடடா - என்ன சிந்தனை - என்ன வர்ணனை - அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்து  மனதில். மகிழவைக்கிறது..!

குண்டான் முதலாளி - உடனுக்குடன் விற்று கை மேல் காசு - வெள்ளை வெளேர் கதர்ச் சட்டை - கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி - தங்க மோதிரங்கள் - புலி நகத்துடன் மைனர் செயின் - என வர்ணனைகள்  அற்புதம். 

கடை இக்கால ரேஷன் கடை போல் கூட்டம் - பொடி விற்பனை கொடி கட்டிப் பறந்த காலம். ஓசிப்பொடி - விரலை நீட்டினால் - இலவசப் பொடி - தாராள குணம்.

இழுக்க இழுக்க இன்பம் - 12 வயதில் இழுத்த மலரும் நினைவுகள் - வாழ்க அந்த பொடிக்கடைக்காரர். இன்றைய இலவச இணைப்புகள், ஆடித்தள்ளுபடி, அதிரடித்தள்ளுபடி என்பதெல்லாம் இந்த இலவசப் பொடியிலிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும்” என்ற சரித்திர உண்மைகளைச் சரமாரியாக எடுத்து விடுகிறது கதாபாத்திரம்..!

வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போடும் காட்சியில், ட்ராஜிகல் காமெடி!

கதையைப் படிக்கும் போதே பொடி வாசனை வருகிறது

தோசை பார்சல், பிடில் ..நகைச்சுவையின் உச்சக்கட்டம்.

அலுவலகத்தில் வேலையே பார்க்க மாட்டார்களோ என எண்ணம் வருகிறது..! - வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியினைக் கண்டு, கேட்டு, முகர்ந்து ( பக்த்திலேயே இருக்கும் போது முகராமல் இருக்க இயலுமா என்ன ), உணர்ந்து, மகிழ்ந்து, ( பொடி சுவைக்க இயலாதோ ) - நகைச்சுவை நிறைந்த கதை

வ.வ. டர்க்கி டவல் மற்றும் கர்சீஃப் பயன் படுத்தும் முறையினை சிரத்தையுடன் பார்த்து - அப்படியே விவரிக்கும் விதம்  கதாசிரியரின் நுணுக்கமான கவனிப்புத்திறனுக்குச்சான்று பகர்கிறது..!

கைக்குட்டையைத் தோசைப்பார்சல் போல முறுக்கி - மீசை இருக்கும் இடத்தில் வயலின் வாசிப்பது போல நீளமாக நீட்டிப் பிடித்து தலை - மூக்கு ஆட்டுதல் அவருக்கு பரம சுகம் - கண்டு இரசிக்கும் நமக்கு  மெத்த மகிழ்ச்சி

12 வயசுல ஆரம்பிச்சு 108 வயசு வரைக்கும் பொடி போட்டாராம்  வ.வ.ஸ்ரீ.யின் தாத்தா -  அப்பா 99 1/4 வயது வரைக்கும் பொடி போட்டார். ஆனா சட்டுன்னு நிப்பாட்டிட்டார் - மூச்சு நின்னதுலே இருந்து அவர் பொடியே போடறதில்ல - நல்ல நகைச்சுவை. 

வ.வ.ஸ்ரீ.யின்  99 வயது தந்தைக்கு அவர்கள் எல்லோரும் வாக்கரிசி .... இல்லை இல்லை .... மூக்கரிசி .... அதுவும் இல்லை .... மூக்குப்பொடி போட்டும், அவர் வைராக்கியத்துடன், அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் இறுதி மூச்சை விட்டதில், வ.வ.ஸ்ரீ.க்கும் மற்வர்களுக்கும் வருத்தம். கண்ணீர் மல்குகிறது ...

ஒவ்வொரு பகுதியில் தூவியுள்ள நகைச்சுவைப்பொடிகளை அருமையாக உள்ளிழுத்து முகர்ந்து பார்த்து, அனைத்து நகைச்சுவைகளையும் பொறுமையாகப் படித்து ரசிக்க, கதை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

வ.வ.ஸ்ரீ அழுது கொண்டே சொன்னாலும் படிப்பவர்களுக்கு ஒரு நல்ல நகைச்சுவை காட்சியை தந்துள்ளார் கதை ஆசிரியர்..!

பேசிப் பேசி அரும்பணி ஆற்றும் அலுவலர்களைப் பற்றி அருமையாச் சொல்லி இருக்கிறது கதை..!

நகைச்சுவையின் உச்சம்  இந்த கதை என தாராளமாக சொல்லலாம்..!

234 தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பணியாற்றும் வ.வ.ஸ்ரீ யின் பணி பாராட்டுக்குரியது. எக்கட்சியிலும் இல்லாமல் அத்தனை கட்சிகளையும் இவரை வேவு பார்க்க வைக்கும் துணிவே துணிவு. 

வேட்டுக்குழாய் போன்ற  புதிய சொல். புதுக்குறள் , பொடி காயத்ரி - பொடி டின் தும்மல் போடுமா - என எல்லாமே சிரித்து சிரித்து மகிழவைக்கிறது..!

சிவாஜி - தூக்குத் தூக்கி - கைக்குட்டை - தகுந்த இடத்தில் நல்ல எடுத்துக் காட்டு.

அஷ்ட கோணல் - 15 தும்மல் - புடைத்த நரம்புகள் - சளித் தூறல் - கைகுட்டையில் பஞ்சாமிர்தம் - இடி மின்னல் மழை - புயல் கரை கடக்க 15 நிமிடம். சனியன் சகுனத் தடை. மூக்குத் துவாரஙகளை மட்டுமல்ல - கைக்குட்டையினையும் கசக்கிப் பிழிந்து சுத்தமாக சுகாதாரம் பேணூம் வ.வ.ஸ்ரீ யின் பழக்கம் பாராட்டுக்குரியது. 

அடாது தும்மினாலும் விடாது படிக்கிறோம்..!
.
வரியெங்கும் நகைச்சுவைப் பொடியை அநாயாசமாகத்தூவி வெடிச்சிரிப்பை நொடியில் பரவவிட்ட ஆசிரியரின்  எழுத்துத்திறமை பராட்டத்தக்கது.

படித்து முடித்ததும், தும்ம வைக்கிறது  சூப்பர் நகைச்சுவை  கொடி கட்டிப் பறக்கிறது. 

வ.வ.ஸ்ரீயினைப் பார்க்க வரும் நண்பர்கள் அவரையும் அவரது எவர்சில்வர் பொடி டப்பாவினையும் மிக மிக இரசிப்பார்கள் போலும். 

அவர் இருக்கையில் இல்லாவிட்டால் இப்பொடி நண்பர்ளுக்கு பொழுதும் போகாது - தூக்கமும் வராது. ஓசியில் கிடைக்கும் பொடியினை நாசியில் போடும் சுகம் இல்லையே என அவர்கள் வருந்துவர்.

வழுவட்டையினையையும் எழுச்சியினையும் மறக்க இயலாது,

ஆசிரியரே  வரைந்த ஓவியமும், மூக்குப்பொடி டப்பி படமும் அருமை. 

கதையின் தொடக்கமும் சுவையாகவே ஆரம்பம். முடிவும் இன்றைய தேர்தல் களத்தில் அனல் பறக்கும் சூழ்நிலைக்குப் பொருத்தமாக  அமைந்து தேர்தல் காலத்தில் மட்டும் மனநலம் பாதிக்கப்படும் வ.வ.ஸ்ரீயினை காபந்து பண்ணும் மனைவி தான் பாவம்..!


 


  பேரெழுச்சியுடன் விமர்சனம் 


எழுதியுள்ள தங்களுக்கு என்


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


இனிய நல்வாழ்த்துகள்.
     


    


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் 

வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம்  பரிசுக்கான தொகை 

இவ்விருவருக்கும் 

சரிசமமாக பிரித்து வழங்கப்பட உள்ளது.-oOo-இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் 

வெளியிடப்பட்டு வருகின்றன.காணத்தவறாதீர்கள் !
    
’போனஸ் பரிசு’ பற்றிய 

மகிழ்ச்சியானதோர் தகவல்.


’VGK-13 வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ. 

புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !’ 

என்ற இந்தக் குறிப்பிட்ட சிறுகதைக்கு 

 விமர்சனம் எழுதி 

அனுப்பியுள்ள 

ஒவ்வொருவருக்குமே 

மூன்றாம் பரிசுக்குச் சமமான தொகை என்னால் 

 ’போனஸ் பரிசாக ’

அளிக்கப்பட உள்ளது என்பதை 

பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏன்? எதற்கு? எப்படி? என யாரும் குறுக்குக்கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.  ஒருசில கதைகளையும், அவை உருவாகக் காரணமாக இருந்த சூழ்நிலைகளையும் நினைக்கையில் மனதில் அவ்வப்போது ஏற்படும் ஏதோவொரு [ எழுத்தில் எடுத்துரைக்க இயலாத ] சந்தோஷம் மட்டுமே இதற்குக் காரணமாகும். 

உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்கு இங்கு இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களுகும் இந்த போனஸ் பரிசு என்னால் உபரியாக அளிக்கப்படும் என்பதையும் மேலும் மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுபோன்ற போனஸ் பரிசுகள் அவ்வப்போது மேலும் ஒருசில கதைகளுக்கு மட்டும் என்னால் அறிவிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த கதைகள் என்பது மட்டும் இப்போதைக்கு ’சஸ்பென்ஸ்’.

அதனால் இந்த ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான அனைத்துக் கதைகளுக்கும், அனைவருமே, இப்போது போலவே மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் போனஸ் பரிசு கிடைக்கும் வாய்ப்புக்களும் தங்களுக்கு அவ்வப்போது அமையக்கூடும்.

    

அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:” அழைப்பு 


விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


01.05.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

24 கருத்துகள்:

 1. இரண்டாம் பரிசினை


  வென்றுள்ள


  புதிய ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்
  களம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கு
  இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 2. இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 3. திரு. G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கும், சகோதரர் திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. புதிய ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் திரு. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் களம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயாஅவர்களுக்கும், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 6. இரண்டாம் பரிசினை வென்றுள்ள களம்பூர் G. பெருமாள் செட்டியார் மற்றும் தம்பி J. அரவிந்த் குமார் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. அருமையாக விமரிசனம் செய்து இரண்டாம் பரிசினைப் பெற்ற இருவருக்கும் வாழ்த்துகள். பெருமாள் செட்டியாரின் விமரிசனம் முற்றிலும் புதுமையாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 8. இரண்டாம் பரிசு மற்றும் ஹாட்ரிக் பரிசு பெறும் திரு பெருமாள் அவர்களுக்கும் இரண்டாம் பரிசு பெறும் திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. இரண்டாம் பரிசு பெற்றுள்ள திரு பெருமாள் செட்டியாருக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. பரிசு பெற்ற திரு. J . அரவிந்த் குமார் அவர்களுக்கு

  வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்திய அனைவருக்கும், என்னை பரிசுக்கு உரியவராக்கிய நடுவர் அவர்களுக்கும், திரு. VGK அவர்களுக்கும் , மனமார்ந்த நன்றிகள்

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா3 மே, 2014 அன்று PM 12:11

  இரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. J. அரவிந்த் குமார் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!
  Vetha.Elanagthilakam.

  பதிலளிநீக்கு
 13. http://gperumal74.blogspot.in/2014/05/blog-post_9541.html
  களம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்

  இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 14. அன்புடையீர்,

  வணக்கம்.

  மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல்:

  இந்த VGK-13 'வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ., புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம் !’ என்ற கதைக்கு விமர்சனம் எழுதி அனுப்பியிருந்த அனைவருக்குமே போனஸ் பரிசு அளிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அதற்கான புதிய அறிவிப்பு இந்தப்பகுதியில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தக்குறிப்பிட்ட போட்டியில் கலந்து கொண்டுள்ள அனைவரின் தகவல்களுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 15. இரண்டாம் பரிசினை வென்று இருவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (18.07.2015) கிடைத்துள்ள ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  அகஸ்மாத்தாக படிக்கக் கிடைத்தது தங்களின் நகைச்சுவை சிறுகதை. தலைப்பே 'தலையை கிறு கிறு ன்னு சுத்த வைக்குதே' உள்ளே எந்த வெங்காய அரசியல் வெந்துண்டு இருக்கோ தெரியலையே..... படிக்கலையின்னா தலை வெடிச்சுடும் போல ஒரு அவசரத்தில், நகைச்சுவையைத் தேடி மூச்சு முட்ட படிக்க ஆரம்பித்தேன்.

  அரசியலில் எனக்கு ஈடுபாடு கிடையாது. இருப்பினும், நகைச்சுவை மட்டுமே தூண்டில் போட்டது. வ.வ.ஸ்ரீ யின் எழுச்சியான போக்கு பொடி வைத்துப் போக்குக் காட்டிக் கொண்டே வந்தது.

  அதென்ன, 'கொழுக்கட்டை' கதை சொல்லி.... ஒரேடியா வாரிட்டேள். பார்த்து பார்த்து.... ஆத்துலேர்ந்து பூரிக்கட்டையோட.... வந்து நிக்கப் போறாங்க.

  'பட்டணம் பொடி' கூட விளம்பரப் படுத்தி இருக்காது... அவ்ளோ நிறம்... மணம் .... தரம் ...... தூள்.. ! பொடி டப்பாக்குள்ளே (கதைக்குள்ளே) புதுசாய் சொக்குப்பொடி சேர்த்திருக்கேள்... ஒரு அரசியல் வாதி பொடி போட்டுக் கொண்டே பேசும் 'பாணி’யைக் கூட சரியாக கதைக்குள்ளே ’போணி’ பண்ணியிருக்கேள் .

  மொத்தத்தில், ஒரு சின்னக் காலிட்டின் உள்ளே, கார சாரமாய், ஆபீஸ் அரசியல், வீட்டு அரசியல், துபாயும் அதன் பிரம்மாண்டமும், பொடி போடும் மூக்குப் படுத்தும் பாட்டையும் கதை (???!!!) சொல்லி அடைத்து விட்டு... படித்து முடித்ததும், வழுவட்டைக் 'கருவை' கம கமன்னு (!) 'பொடி டின்' முத்திரை பதித்து வெற்றி அடைந்து விட்டீர்கள்.

  முன்பே அறிந்திருந்தால், கதை விமரிசனப் போட்டியிலும் கலந்து கொண்டு இன்னும் கூடவே 'எழுச்சியான' விமரிசனத்தைத் தந்திருக்கலாம். என்று எண்ணுகிறேன்.

  இணையத்திலேயே... தன் கதைக்கு விமரிசனப் போட்டி வைத்த ஒருவர் என்னும் பெருமை உங்களையே சாருமோ? இது வரை நான் அப்படி ஒரு போட்டியையும் பார்க்கவில்லை. அதனால் எழுகிறது சந்தேகம். நல்ல ஆரம்பம் நல்லதொரு முடிவு.... கதை எழுச்சியானது.

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 17. பரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. பரிசு பெற்ற திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கும், அரவிந்த குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 28, 2015 at 7:14 PM

   //பரிசு பெற்ற திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கும், அரவிந்த குமார் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)

   நீக்கு
 19. பரிசு வென்ற திரு பெருமாள் செட்டியார் திரு அரவிந்தகுமாரவங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. திரு பெருமாள்செட்டியார் திரு அரவிந்த குமார் அவர்களுக்கு வாழ்த்துகள். மரத்தை மறைத்தது மதயானை மரத்தில் மறைந்தது மா மதயானை என்ற திருமூலர் வரிகளில் விமரிசனம் நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
 21. // சிட்டிசென்டர்’ என்ற இடத்தில் , நம்ம நாட்டு சோளக் கதிரைத்
  தின்றுவிட்டு, பொடி கிடைக்காத ஏமாற்றத்தில் ,
  " பொடலங்காய் காம்ப்ளெக்ஸ் " என்று வ,வ, ஸ்ரீ எரிச்சல்
  அடைவதாக காட்டியிருப்பதும் அருமை !//
  //ஒவ்வொரு பகுதியில் தூவியுள்ள நகைச்சுவைப்பொடிகளை அருமையாக உள்ளிழுத்து முகர்ந்து பார்த்து, அனைத்து நகைச்சுவைகளையும் பொறுமையாகப் படித்து ரசிக்க, கதை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.//
  ரசித்தேன். மகிழ்ந்தேன். வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 22. //ஹாட்-ட்ரிக் வெற்றியாளர் களம்பூர் திரு.G. பெருமாள் செட்டியார் ஐயாஅவர்களுக்கும், திரு அரவிந்த் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 23. WHATS-APP COMMENTS AT 15.49 Hrs. ON 21.05.2019 FROM Mrs. PADMA SURESH FOR MY STORY VGK-13


  👏👏👏👏👏👏
  Awesome comedy... I couldn't control my laughter when I was reading your (official) discussions... 😜 Enjoyed the whole story.... very interesting... throughout the story, there was a suspense about how you are going to combine it with politics and how it is going to end.... Well done. 👏👏👏👏

  Mrs. PADMA SURESH
  MDMT

  [MDMT = My Dear Maths Teacher]

  பதிலளிநீக்கு