About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Saturday, April 12, 2014

VGK 11 / 03 / 03 THIRD PRIZE WINNER 'நாவினால் சுட்ட வடு’

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு : VGK 11 - ” நாவினால் சுட்ட வடு ” 

 

   

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்துஇந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:     மூன்றாம் பரிசினை 


வென்றுள்ளவர் 

திருமதி. ராதா பாலு   


அவர்கள்
வலைத்தளங்கள்: 

” எண்ணத்தின் வண்ணங்கள் ”
http://radhabaloo.blogspot.com/


“அறுசுவைக் களஞ்சியம் ”
http://arusuvaikkalanjiyam.blogspot.com/


“ என் மன ஊஞ்சலில் “
http://enmanaoonjalil.blogspot.com/
  

மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ராதா பாலு


 அவர்களின் விமர்சனம் இதோ:
குழந்தை பிறக்காத பெண்களின் மனநிலையையும், ஒரு சின்ன வார்த்தை வாய் தவறி கூறுவது அடுத்தவரின் மனதை எவ்வளவு காயப் படுத்தும் என்பதையே இக்கதையின் கருவாக ஆசிரியர் கூறியுள்ளார். 

இரண்டு பெண்களின் நட்பை மிக அழகாகக் கோடிகாட்டியுள்ள  ஆசிரியர், அதே தோழி குறும்புக்   குழந்தைகளுடன் வரும்போது, அதே நட்பு தொல்லையாக இருப்பதையும், நம் கதாநாயகிக்கு ரேவதியின் வருகை எவ்வளவு கலக்கத்தைக் கொடுக்கிறது என்பதையும்  மிக அழகாக எடுத்துச் சொல்கிறார். 

இரண்டு வயது கூட நிரம்பாத இரண்டுங்கெட்டானான இரட்டைக் குழந்தைகள் வரும்போதே இன்னிக்கு என்ன விஷமம் செய்யலாம் என்று வருவது வீட்டில் இருப்பவர்களுக்கு படு டென்ஷன் தான்! 

பொதுவாக குழந்தைகள் இல்லாத வீட்டில் எல்லா சாமான்களும் வைத்தது வைத்தபடித்தான் இருக்கும். வெள்ளை டைல்ஸ் தரையும், அடுக்கி வைத்த  புத்தகங்களும் வீட்டுக்கு அழகில்லையே?

'கோலம் அழிக்க ஒரு குழந்தை இல்லையே' என்று ஏங்குபவர்களுக்குதான் குழந்தைகளின் அருமை தெரியும். அதிலும்  குறும்பு செய்யாத குழந்தைகள் உண்டா என்ன? .  

தன்  வீட்டில் விஷமம் செய்வது சரி... அடுத்தவர் வீட்டில் சென்று அப்படி இருக்கக் கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒரு தாயின் பொறுப்பு. நம் வீட்டில் தொல்லை விட்டால் சரி என்று வெளியார் வீட்டுக்கு அனுப்பிவிடும் தாய்மார்களும் உண்டு! ரேவதியின் நாத்தனார் அந்த ரகம் போலும்! 

தனக்கு குழந்தை இல்லாத ஒரு பெண் எந்தக் குழந்தையாக இருந்தாலும் தன்னை அறியாமல் தூக்கிக் கொஞ்சுவாள்; குழந்தைக்கு ஆசையுடன் உணவு ஊட்டுவாள். ஆனால் நம் கதாநாயகிக்கு அந்தக் குழந்தைகளின் விஷமம்தான் பெரிய தலைவலியாக இருக்கிறது. மாறாக அந்தக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி அவற்றுடன் அன்புடன் நடந்து கொண்டால் அந்தக் குழந்தைகளும் அவளிடம் பிரியத்துடன், அவள் சொல்வதைக் கேட்டு நடக்குமே?அந்த வித்தை அவளுக்குத் தெரியவில்லை, பாவம்! 

தோழிகளின் அன்னியோன்னியத்திற்கு தடையாக இருக்கும் குழந்தைகளை அவள் விரும்பவில்லை. அன்று ஒரு குழந்தை மட்டுமே வந்ததால் இருவரும் பலநாட்களாகப்  பேசாத விஷயங்களை எல்லாம் மனம் விட்டுப் பேசமுடிந்தது. ரேவதியின் நாத்தனார் ஊருக்குப் போய்விட்டால் இந்தக் குழந்தைகள் அவளுடன் வராததுடன், அவற்றின் விஷம அலங்கோலங்களும் இருக்காது! தோழிகளும் வெகு நேரம் மனம் விட்டுப் பேசலாமே என்ற சந்தோஷம் நம் ஹீரோயினுக்கு! 

தனக்கு பதிலாக இந்த வீட்டிற்கு வாழ வந்திருக்க வேண்டியவள் தன்  தோழி என்று தெரிந்தும், அவளைத  தன்  வீட்டுக்கு வரச் சொல்லி நட்பைத் தொடர்வதும், தன் கணவருக்கு அவளைப் பார்த்ததும் ஒரு உற்சாகம் ஏற்படுவது தெரிந்தும் அவர்களை சந்தேகப் படாமல் தன் வீட்டில் அனுமதிப்பதும் கதாநாயகியின் உயர்ந்த குணங்களாகக் கூறுகிறார் கதாசிரியர்.

அதே நேரம் தன்னைப் போன்றே ரேவதிக்கும்  குழந்தை இல்லாதது சந்தோஷமாக இருப்பதையும், தங்கள் இருவருக்கும் ஒரு குழந்தை கூடப் பிறக்காதபோது ரேவதியின் நாத்தனாருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை சற்று மனத்தாங்கலாக (பொறாமை என்றுகூட சொல்லலாம்) இருவரும் பேசிக் கொள்வதையும்  ஒரு சராசரிப் பெண்ணின்  குணமாகக் கூறுகிறார் ஆசிரியர். பெரும்பாலான பெண்கள்   இந்தக் குணத்திற்கு  விதிவிலக்கல்ல.

வளைகாப்பின்  போது, ம று ம னை யில் அமர்த்தி வளைகாப்பு செய்வதும்,தொட்டில் போடும் அன்று அம்மிக்குழவியைக் குளிப்பாட்டச்    சொல்லி அலங்கரிக்கச் சொல்வதும்  இன்றும் கூட தொடரும் அநாகரீகமான செயல்கள். பெண்களைக் கேவலப் படுத்தும் இந்த வழக்கங்கள்  தடை செய்யப்பட வேண்டும் என்பதை ஆசிரியரின் ஹை  லைட்  எழுத்துக்களில் இருந்து அறிய முடிகிறது. 

லாப்டாப்பை தள்ளிவிட்டு குழந்தை கட்டில் விளிம்பிலிருந்து எட்டிப் பார்ப்பதை கற்பனை செய்யவே மிக அழகாக இருக்கிறது!

தன் கணவரிடம் குழந்தை லாப்டாப்பை தள்ளிவிட்டதைச் சொல்லியதுடன், அந்தப் பச்சைக் குழந்தைமேல் அவள் சரமாரியாகக் குற்றம் சொல்லி தன் மேல் எந்தக் குற்றமும் இல்லை என்று சொல்வது போல இருக்கிறது.

உனக்கு குழந்தைகளின் மதிப்பு தெரியவில்லை என்று சொன்ன கணவரின் மேல் எந்த மனைவிக்குதான் கோபமும், வருத்தமும்  வராது? தான் குழந்தைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும்போது அடுத்தவர்கள் பழிப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்வாள் ஒரு பெண். அதற்கு ஆறுதல் தேடுவது அவள் கணவரிடம்தானே? இது இருவரும் சம்பந்தப்பட்ட விஷயம் ஆச்சே? 

லாப்டாப் சரியாக வேலை செய்வதை ரேவதியிடம் தன் கணவர் சொன்னது அவர் மனைவிக்கு பிடிக்கவில்லை. அந்த விஷயத்தை அவர் தன்னுடைய மனைவியிடம் சொல்லி ரேவதியிடம் சொல்லும்படி சொல்லியிருக்கலாம். 

அவர் சாதாரணமாகப் பேசினாலும், அவரது பிரகாசமான முகம் மனைவிக்கு எரிச்சல் ஏற்படுத்துவதை, ஒரு சராசரி மனைவி தன்  கணவன் வேறு பெண்ணிடம் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகப் புரிய வைக்கிறார் ஆசிரியர்.

யதார்த்தமாக அவர் சொன்ன வார்த்தை 'கவலைப்படாதே ... லாப்டாப் உடையவும் இல்லை... நொறுங்கவும் இல்லை... ஒரு சின்ன கீறல் கூட இல்லை' என்பது. ஆனால் அந்தச் சின்ன வார்த்தை மனை வி யின் மனதில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தி விட்டதே.

உடைந்து நொறுங்கியதோடு பெரிய கீறலும் விழுந்துவிட்ட மனைவியின் மனதை இறைவன் விரைவில் ஒரு மழலைச் செல்வத்தைக் கொடுத்து சரியாக்க வேண்டும்.

அவள் தோழி ரேவதியும் தாய்மைப் பேறு அடைய வாழ்த்துவோம் 

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் 
மழலைச் சொல் கேளாதவர் 

இந்த வள்ளுவரின் வாக்கு தாம் பெற்ற குழந்தைகளுக்குதான் பொருந்தும் போலும்!

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினால் சுட்டவடு.

நாம் யாரிடமும், எதையும் யோசிக்காது பேசக் கூடாது என்பதை கணவர் தன் மனைவியிடம் வாய்தவறிச் சொன்ன சொல் அவள் மனம் உடைய காரணமாகிவிட்டதை ஆசிரியர் இக்கதை மூலம் மிக அருமையாகச் சொல்லிவிட்டார்.


ராதாபாலு  மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
        


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:


VGK-13” வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ  


புதிய கட்சி 


மூ.பொ.போ.மு.க. 


உதயம் ”

விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 


17.04.2014  


இந்திய நேரம் இரவு 8 மணிக்குள்.என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்


28 comments:

 1. திருமதி. ராதா பாலு அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!


  ReplyDelete
 2. நல்ல விமர்சனம்... திருமதி. ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. மூன்றாம் பரிசினை வென்றுள்ள : திருமதி. ராதா பாலு அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..

  அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 4. சிறப்பான விமர்சனம். மூன்றாம் பரிசுக்குரிய விமர்சனத்தினை எழுதிய திருமதி ராதா பாலு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. வாழ்த்துகள் திருமதி ராதா பாலு அவர்களே, தொடர்ந்து பல பரிசுகளை வெல்ல முன்கூட்டிய வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. தங்கள் சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாம் பரிசினை வென்றுள்ள சகோதரி ராதா பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மீண்டும் மீண்டும் பரிசுகள் அவருக்கு குவியட்டும்!


  ReplyDelete
 7. இருவருக்குமே குழந்தை பாக்கியம் இல்லை.

  அப்படியிருந்தும் அதில் ஒருவர் குழந்தையில்லாத குறையே தன்னில் படிந்து விடாதபடி குழந்தைகளின் நெருக்கத்தை தானே உருவாக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

  ஆனால் இன்னொருவரோ இந்த வித்தை தெரியாமல் தன்னையும் வருத்திக் கொண்டு அல்லாடுகிறார்.

  இந்த இருவரின் வாழ்க்கைப் போக்கை சொல்வது போல குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள் அந்தக் குறையின் அழுத்தம் குறைந்து மனசளவில் சந்தோஷம் பெறுவதற்கான உபாயத்தை இந்தக் கதை சொல்வதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

  பார்க்கலாம்.. பரிசு பெறுகிறவர்களில் என் கருத்தையே கொண்டிருக்கிறவர் யாராவது இல்லாமலா போய்விடப் போகிறார்கள்?..

  ReplyDelete
 8. இந்த இருவரின் வாழ்க்கைப் போக்கை சொல்வது போல குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள் அந்தக் குறையின் அழுத்தம் குறைந்து மனசளவில் சந்தோஷம் பெறுவதற்கான உபாயத்தை இந்தக் கதை சொல்வதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.//

  ம்ஹூம், கதையின் தலைப்போ, மையக்கருவோ அதுக்குப் பொருந்தலையே! இந்தக் கோணத்தில் சிந்திச்சேன் தான்! ஆனால்........:)))))

  ReplyDelete
  Replies
  1. அப்படியிருந்தும் அதில் ஒருவர் குழந்தையில்லாத குறையே தன்னில் படிந்து விடாதபடி குழந்தைகளின் நெருக்கத்தை தானே உருவாக்கிக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

   ஆனால் இன்னொருவரோ இந்த வித்தை தெரியாமல் தன்னையும் வருத்திக் கொண்டு அல்லாடுகிறார்.
   அவள் கணவரும் குஅந்தையின் சேட்டைகளை ஆர்வத்துடன் கேட்டு ரசிக்கிறார்..
   இந்தப்பகுதியை எனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்..

   Delete
 9. விமர்சனம் மிக அருமையாக உள்ளது. போட்டியாளர்களில் வெற்றி பெறுபவரைத் தேர்ந்தெடுக்க தாங்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது.

  ReplyDelete
 10. திருமதி ராதா பாலு அவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. //இந்தக் கோணத்தில் சிந்திச்சேன் தான்! ஆனால்........:))))) //

  கீதாம்மா.. 'படிப்பதில் தெரிவது பாதி; நாமா அதற்கு வியாக்கியானம் கொடுப்பது மீதி' என்று ஒரு விளக்கவுரை உண்டு.

  விமரிசனம் எழுதுபவர்களுக்கு உற்சாகம் ஊட்டுவது தான் எப்படி?.. வெறும் பரிசு பெறுகிற ....... அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்' என்று முடித்துக் கொண்டால் அவர்களுக்கும்
  போர் அடித்து விடாதா?.. எல்லாம் உங்களைப் போல இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு உற்சாகம் ஊட்டத் தான்.வெவ்வேறு கோணங்களில் சிந்திப்பதற்கு வாசல் திறந்து விட்டால், இனி வரப்போகும் விமரிசங்களில் ஜமாய்த்து விடமாட்டார்களா, என்ன?..

  கதாசிரியர் கோடு போட்டால் ரோடு போடுகிறவர்கள் தானே விமரிசகர்கள்?.. விமர்சகர்கள் என்றில்லாவிட்டாலும், பண்டைய இலக்கியங்களுக்கு பாஷ்யங்கள் எழுதியவர்களும் இந்த காரியத்தைத் தான் செய்திருக்கிறார்கள்..

  அடுத்த பின்னூட்டம் பாருங்கள். இராஜராஜேஸ்வரி மேடம்
  இதே மாதிரி யோசித்திருக்கிறார்களாம். தொடர்ந்து பரிசு பெறுபவர்களில் அவர்களும் ஒருவரல்லவா?.. அவர்கள் விமரிசனம் பரிசுக்குத் தேர்வானால் பார்த்துக் கொள்ளலாம்.
  இல்லேனாலும் அவர் வலைத் தளத்தில் வெளியிடச் சொல்லி
  வாசித்துக் கொள்ளலாம். இந்த மேட்டரை அவர் வழியில் எப்படி டீல் பண்ணியிருக்கிறார் என்று பார்க்க உங்களுக்கும் ஆர்வமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 12. தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, ராஜி மேடம்.

  உங்கள் விமரிசனத்தை படித்து ரசிக்கும் ஆவல் இப்போதே வந்து விட்டது. ஒருகால் பரிசு பெறும் வாய்ப்பை இழந்தாலும் உங்கள் தளத்தில் விமரிசனத்தை வெளியிட்டு விடுங்கள். சரியா?..

  ReplyDelete
 13. என் விமரிசனத்திற்கு இம்முறையும் பரிசு....என்னால் நம்பவே முடியவில்லை. திரு கோபு சார் அவர்களின் ஊக்கமும், உற்சாகமும்தான் எனக்கு விமரிசனம் எழுதும் ஆவலைத் தூண்டுகிறது.

  என்னை பரிசுக்குரியவராக்கிய நடுவருக்கும், கதாசிரியருக்கும்,வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 14. இந்த வெற்றியாளர், தாங்கள் பரிசுபெற்ற மகிழ்ச்சியினை தங்களின் வலைத்தளத்தில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  http://enmanaoonjalil.blogspot.com/2014/04/blog-post_12.html
  ’என் மன ஊஞ்சலில்’ - திருமதி ராதா பாலு அவர்கள்

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 15. மூன்றாம் பரிசுக்குரியவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி ராதா பாலு அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். விமர்சனங்களை விமர்சிக்கும் பின்னூட்டங்களும் மிகப் பயனுள்ளவையாய் உள்ளன. அனைவருக்கும் நன்றி. போட்டியை சிறப்புற நடத்தி தொடர் வெற்றி கண்டுகொண்டிருக்கும் கோபு சாருக்கும் இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
 16. // கோலம் அழிக்க ஒரு குழந்தை இல்லையே' என்று ஏங்குபவர்களுக்குதான் குழந்தைகளின் அருமை தெரியும். அதிலும் குறும்பு செய்யாத குழந்தைகள் உண்டா என்ன? . //

  அருமையான வரிகள் !

  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 17. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  இந்த முறையேனும் நானும் விமர்சனம் எழுதிப் பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. சே. குமார் April 13, 2014 at 7:23 PM

   வாருங்கள், வணக்கம்.

   //இந்த முறையேனும் நானும் விமர்சனம் எழுதிப் பார்க்கிறேன்...//

   எழுதிப்பார்த்தால் மட்டும் போதாது. எழுதியதை அப்படியே துரிதமாக இறுதி நாள் இறுதி நேரத்திற்குள் மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும். என்னிடமிருந்து தங்களுக்கு ஓர் STD. ACK. கிடைக்கவும் வேண்டும்.

   தங்களின் விமர்சனம் பரிசுக்குத் தேர்வானால் மட்டுமே, தாங்கள் போட்டியில் கலந்துகொண்ட விஷயம் பிறருக்குத் தெரியவரும்.

   எனவே கூச்சப்படாமல் தைர்யமாக பேரெழுச்சியுடன் மனதில் பட்டதைக் கோர்வையாக அழகாக விமர்சனமாக எழுதி அனுப்பி வைய்யுங்கோ.

   ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   அன்புடன் கோபு [VGK]

   Delete
 18. அன்பின் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 19. திருமதி ராதா பாலு அவர்களின் விமர்சனம் கதையை விட சுவாரஸ்யமாக இருந்தது.

  ReplyDelete
 20. விமரிசனம் வெகு சுவாரசியம் வாழ்த்துகள்

  ReplyDelete
 21. மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ராதா பாலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

  அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya September 28, 2015 at 6:48 PM

   //மூன்றாம் பரிசினை வென்றுள்ள திருமதி. ராதா பாலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ. :)

   அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்..!

   Delete
 22. வமரிசனம் ஜோராகீது. வாழ்த்துகள்

  ReplyDelete
 23. திருமதி ராதாபாலு அவர்களுக்கு வாழ்த்துகள் குழந்தைகள் உள்ளவீடுதான் சிறப்பு என்கிறார்கள். விமரிசனம் ரொம்ப நல்லா இருக்கு.

  ReplyDelete
 24. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
  நாவினால் சுட்டவடு.

  நாம் யாரிடமும், எதையும் யோசிக்காது பேசக் கூடாது என்பதை கணவர் தன் மனைவியிடம் வாய்தவறிச் சொன்ன சொல் அவள் மனம் உடைய காரணமாகிவிட்டதை ஆசிரியர் இக்கதை மூலம் மிக அருமையாகச் சொல்லிவிட்டார்.// பெண்மனம் படும்பாடு..எழுதியதை ஹைலைட் செய்தமைக்கு, பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 25. திருமதி. ராதா பாலு அவர்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete