என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 2 ஏப்ரல், 2014

’கோபு’வைத்தேடி ........................ ’கோவை’யிலிருந்து ஒருவர் !

கோவையில் இருக்கும் நம் 
பிரபலமான மூத்த பதிவர் 
முனைவர் 


திரு.   பழனி கந்தசாமி  
ஐயா அவர்கள் 

”மன அலைகள்” }

இன்று 02.04.2014 புதன்கிழமை  
என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 
சுமார் ஒரு மணி நேரம் மனம் விட்டுபேசி 
மகிழ்வித்துச் சென்றார்கள்.


சந்தித்த வேளையில் .........

சிந்திக்கவே இல்லை .........தந்துவிட்டேன் என்னை ......*

பயந்துடாதீங்கோ !
முறைக்காதீங்கோ !!

அவர்கள் கொண்டு வந்திருந்த கேமராவில்
என்னைப்படம் எடுப்பதற்காக மட்டும்
தந்து விட்டேன் என்னை ......... * ;)

என் கேமராவில் எடுக்கப்பட்ட 
ஒருசில படங்கள் மட்டும் 
இந்த என் பதிவினில் 
இதோ ..... தங்கள் பார்வைக்காக


 [ பொன்னாடை அணிவித்து வரவேற்பு  ]


 [ நினைவுப்பரிசு அளித்தல் - 
எங்கெங்கும்... எப்போதும் ... என்னோடு... ”]

 

{ கட்டிப்பிடி வைத்தியம் }

-oOo-

மற்ற படங்களில் சில 
அவரின் வலைத்தளத்தினில்
விரைவில் வெளியிடுவார்கள் !

-oOo-

மிகவும் அற்புதமான மனிதர் !

நல்ல பழுத்த அனுபவசாலி !! 

மிகவும் சுறுசுறுப்பான இளைஞர் !!!

’கோவை’க்காரர் + 
Perfect Gentleman 
ஆன இவரை இன்று 
நேரில் சந்தித்ததில் எனக்கு 
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !

எனக்கு மிகவும் பிடித்தமான 
தின்பண்டங்கள் சிலவற்றை

மிகப்பிரபலமானதும் 
மிகத்தரமானதுமான 

கோவைக் கடைகளிலேயே , 
எனக்காக, ஸ்பெஷலாக,
ஏராளமாகவும், தாராளமாகவும் 
வாங்கி வந்து அசத்தியுள்ளதில் 

இவரின் திட்டமிடல் + பிரியத்தினை
என்னால் நன்கு உணர முடிந்தது.

Thank you very much 
Dr. Palani Kandaswamy Sir,
for your kind visit to our house.என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்


31 கருத்துகள்:

 1. ஆம். அவரும் உங்களைப் போலவே உற்சாகமான இளைஞர்தான். சந்திப்பைப் பற்றி இன்னும் சொல்வீர்கள் என்று பார்த்தால் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். April 2, 2014 at 7:25 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //ஆம். அவரும் உங்களைப் போலவே உற்சாகமான இளைஞர்தான். சந்திப்பைப் பற்றி இன்னும் சொல்வீர்கள் என்று பார்த்தால் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்! :)))//

   ஆவலுடன் கூடிய தங்களின் எதிர்பார்ப்புக்காக, இன்னும் சில விஷயங்களைப் பதிவினில் இப்போது புதிதாகச் சேர்த்துள்ளேன்.

   எல்லா விஷயங்களையும், [தலைவர்களின்] சந்திப்புப் பேச்சுவார்த்தை இரகசியங்களையும் பகிரங்கமாக வெளியிட முடியாது அல்லவா !

   அதனால் கொஞ்சம் EDIT செய்து வெளியிட்டுள்ளேன். ;)))))

   அன்புடன் கோபு

   நீக்கு
 2. எங்களுக்கும் பதிவைப் படிக்க
  மிக்க சந்தோஷம்
  சந்திப்புகள் தொடர நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவாளர்களுக்கு திருச்சி என்றாலே நினைவுக்கு வருவது நீங்கள்தான். மூத்த வலைப்பதிவர்களான அய்யா டாக்டர் பழனி கந்தசாமியும் நீங்களும் சந்தித்தது குறித்து மிக்க மக்ழ்ச்சி! வாழ்த்துக்கள்! திருச்சி வலைப்பதிவர்களை இணைப்பதிலும் தாங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை!

  பதிலளிநீக்கு
 4. மூத்த இரு பதிவர்களின் தித்திக்கும் சந்திப்பு மனதிற்கு மட்டில்லா மகிழ்ச்சி அளிக்கின்றது ஐயா

  பதிலளிநீக்கு
 5. நானும் டாக்டர் பழை கந்தசாமியைச் சந்தித்து இருக்கிறேன் . கோவை சென்றிருந்தபோது பழகுவதற்கு இனிமையானவர்.

  பதிலளிநீக்கு
 6. பதிவைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறென் ஐயா!

  பதிலளிநீக்கு
 7. பெரியவர்களைக் காணும்போது
  மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கின்றது..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 8. தங்கள் இரு பதிவர்களின் மூத்தவர்களை, இணைத்து, படங்களில் பார்ப்பது, மனதிற்கு மிக்க மகிழ்ச்சியளிப்பதாகவுள்ளது, ஐயா!

  பதிலளிநீக்கு
 9. இனிய சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி ஐயா... இருவருக்கும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. இரு நட்புள்ள‌ங்கள் சந்தித்த செய்தி மகிழ்வை அளித்தது!

  பதிலளிநீக்கு
 11. மிகவும் இனிமையான சந்திப்பு! படங்களுடன் வெளியிட்டமை சிறப்பு. இனிதே கோர்த்தபடி வலம்வரட்டும் வலையுலக நட்புக்கரங்கள்.

  பதிலளிநீக்கு
 12. மகிழ்ச்சியோ மகிழ்ச்சியான நட்புள்ளங்களின்
  சந்திப்புகளுக்கு வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 13. மகிழ்வான சந்திப்புக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. மிக்க மகிழ்ச்சி.நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 15. திரு கந்தசாமி சாருடனான தங்கள் சந்திப்பு மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது....

  பதிலளிநீக்கு
 16. இனிமையான சந்திப்பு. எங்க ஊர்க்காரான கந்தசாமி ஐயாவை பதிவர் திருவிழாவில் சந்தித்து பேசியிருக்கிறேன். உற்சாகமான இளைஞர். இது போல் சந்திப்புகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 17. இனிமையான சந்திப்பு .
  படங்கள் எல்லாம் மிக அழகு.
  இனிமையான சந்திப்புகள் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. பதிவர்களின் சந்திப்பு இனித்தது! பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு

 19. அவர்கள் கொண்டு வந்திருந்த கேமராவில்
  என்னைப்படம் எடுப்பதற்காக மட்டும்
  தந்து விட்டேன் என்னை ......... * ;)என்னே நகைச்சுவை!! தொடரட்டும் சந்திப்புகள்.

  பதிலளிநீக்கு
 20. இனிமையான சந்திப்பு.

  ஐயாவினை இரண்டு முறை சந்தித்து இருக்கிறேன் - தில்லியில் ஒரு முறையும் சென்னையில் ஒரு முறையும்......

  தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்.

  பதிலளிநீக்கு
 21. அருமை! அருமை.

  அப்படியே அந்த 'தின்பண்டங்களை' கோடி காட்டி இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 22. என்னையும் பெருமைப் படுத்திய வைகோ என்றும் வாழ்க.

  பதிலளிநீக்கு
 23. இனிமையான சந்திப்பு.தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 24. தேன் இருக்கும் இடத்தை நாடி வண்டுகள் வருவது போல் உங்களை நாடி பதிவர்கள் வருகிறோம்.

  அருமையான சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்.

  திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களைப் பற்றி நீங்கள் சொன்னவற்றைப் படித்தேன். அகத்தின் அழகு அவர் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya September 28, 2015 at 9:26 AM

   //தேன் இருக்கும் இடத்தை நாடி வண்டுகள் வருவது போல் உங்களை நாடி பதிவர்கள் வருகிறோம்.

   அருமையான சந்திப்பிற்கு வாழ்த்துக்கள்.

   திரு பழனி கந்தசாமி ஐயா அவர்களைப் பற்றி நீங்கள் சொன்னவற்றைப் படித்தேன். அகத்தின் அழகு அவர் முகத்தில் தெளிவாகத் தெரிகிறது.//

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   அவர் மிகவும் நல்ல மனிதர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத்தெரியாத, மிகவும் வெளிப்படையான + நகைச்சுவையான நண்பர். அதனால் எனக்கு அவரை மிகவும் பிடித்துப்போய்விட்டதில் ஆச்சர்யம் இல்லை.

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான இனிய இன்பமளிக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 25. படங்கலா நல்லா இருக்குது. பதிவர் சந்திப்புகள் தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 26. இனிமையான சந்தோஷமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. பதிவைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா!

  பதிலளிநீக்கு