About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, June 22, 2014

VGK 21 / 01 / 03 - FIRST PRIZE WINNERS .............. மூ க் கு த் தி




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 21 - ’ மூ க் கு த் தி 


இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html




 

 

 

 


 




மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 



நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  



ஐந்து









இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







    




முதல்  பரிசினை முத்தாக 


வென்றுள்ளவர்கள் இருவர் 


அதில் ஒருவர்


திருமதி



 ராஜலக்ஷ்மி பரமசிவம்  



அவர்கள்.





வலைத்தளம்: “அரட்டை”

rajalakshmiparamasivam.blogspot.com




 



முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள



திருமதி



 ராஜலக்ஷ்மி பரமசிவம்  

அவர்களின் விமர்சனம் இதோ:






கோபு சாரின்  " மூக்குத்தி " கதைப் படிக்க ஆரம்பித்தேன். பெரியவர் ஒருவர்  தான் மூக்குத்தி வாங்கிய அனுபவத்தை சொல்லப்போகிறார் என்பதை யூகிக்க முடிந்தது. நகைக்கடை அல்லவா.....நாமும்  நகைக் கடைக்குப் போய்  அவர் அனுபவத்தை நேரடியாகப் பார்த்து விமரிசனம் எழுதினால் என்ன என்று தோன்ற  நகைக் கடைக்கு  நானும் பயணமானேன்.  நகைக்கடை பற்றிய பெரியவருடைய எண்ண ஓட்டங்கள்,  அந்தக்கால நகைக்கடைக்கும், இப்போதைய நகைக்கடைக்கும் இருக்கும் இமாலய  வித்தியாசத்தை நமக்கு உணர்த்தத்  தவறவில்லை. அந்தக்காலத்தில் நுகர்வோருக்கு இருந்த மரியாதை, நகைக்கடைகளின் எண்ணிக்கை என்று  பல விஷயங்கள் நம் கண் முன் வந்து போகின்றன. முக்கியமாய நாணயம், நேர்மை இவற்றிற்கு  மரியாதை இருந்தக் காலம்  அது என்று பெரியவரின் மனதிற்குள்  ஓடுகிறது. நாணயமும், நேர்மையும் பற்றிய உண்மை எனக்கும்  புரிய,  பெரிய பெருமூச்சு  விட்டேன்.

பஸ்ஸில் பெரியவர் ஏறினார். பஸ்ஸில் கூட்டமான கூட்டம். பெரியவர் பணத்தைக்  களவு கொடுத்து விடுவாரோ என்கிற பதைபதைப்பு என்னுள் இருந்தது உண்மை. நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்க வில்லை. பத்திரமாக நகைக் கடைக்குள் நுழைந்து விட்டார் பெரியவர்.



கடையில் நுழைந்தவுடன் பெரியவர்  அசந்து போயிருப்பார்.  அவ்வளவுக் கூட்டம். தங்கத்தின் விலை என்னவோ ஏறிக்கொண்டே தான் போகிறது. ஆனால் அதைப்பற்றி யாருக்கும் கவலை இருப்பதாய் தெரியவில்லை. கிராமத்து விவசாயிக்கு இதெல்லாம் ஒரு ஆச்சர்யமே. பகட்டும், பளபள உடையலங்காரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நகைக்கடையினர் பெரியவரைக் கண்டு கொள்ளவேயில்லை. பெரியவரைப் பார்க்கப் பாவமாய் இருந்தது.  எல்லோருமாய் சேர்ந்து அவரை லிப்டில் தள்ளி விட்டு விட்டார்கள் கும்பலோடு கும்பலாய் நானும் லிப்டிற்குள்.



ஒவ்வொரு மாடியை எல்லோரும் ஏறவும் இறங்கவும்  இருக்க, நானோ பதைபதைப்புடன் பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். விவசாயி  மூக்குத்தி வாங்கப் போகிறாரே. பணம் பத்திரமாக இருக்க வேண்டுமே என்கிற கவலை மீண்டும் என்னுள். இருக்காதா.... . பின்னே..... நகைக்கடைக் கூட்டத்தையே கண் முன் நிறுத்தி விட்டாரே ஆசிரியர். பெரியவர் எப்படித்தான்  நகையை வாங்கப் போகிறார் என்கிற ஆவலுடன் நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். கும்பலில்  எப்படியோ  தாக்குப் பிடித்து விட்டாரே பெரியவர். விற்பனை  நபர்களுக்குத் தான் சற்று மரியாதைக் கொடுக்கத்தெரியவில்லை என்று தோன்றுகிறது. 
 "பெருசு" என்று சொல்வதைக் கேட்டு சங்கடமாக இருந்தது.  மரியாதை தெரியாதவர்களிடம் எதை சொல்வது? 



மூக்குத்தி  வாங்க ஆரம்பிக்கிறார் பெரியவர். மூக்குத்தி எல்லாமே காற்றைப் போலிருக்கிறது என்கிற ஆதங்கம் பெரியவரின் மனதுள். இந்தக்கால பேஷன் அது என்பதை  விற்பனையாளர்  விவரிக்க  வேறு வழியில்லாமல் வாங்க முற்படுகிறார்  பெரியவர்.



விலையைக் கேட்டதும் அவர்  மனம் பின்னோக்கி செல்கிறது. இரட்டை வடம் சங்கிலி வாங்கிய பணத்தில் இப்போது  துளியுண்டு  மூக்குத்தி. அவர் மட்டுமா இப்படி எண்ணினார். நானும் தான் என் திருமணத்தின் போது இருந்த பவுன் விலையை இன்றோடு ஒப்பிட்டுப் பார்த்ததில் ஆயாசமடைந்தேன் என்றே சொல்ல வேண்டும். படிக்கும் வாசகர்கள் எல்லோருமே இந்த ஒப்பீட்டை செய்திருப்பார்கள் . இதைக் கதாசிரியரின்  வெற்றி என்றே சொல்ல வேண்டும். மூக்குத்தி வாங்கிய பின் பணத்தை  தரைத்தளத்தில்  கட்ட வேண்டும் என்று விற்பனை ஆசாமி சொல்லவும், பில்லுடன் பணத்தை எடுத்துக் கொண்டு  கீழே போகிறார் பெரியவர்.



நானும் கீழ் தளத்திற்கு விரைந்தேன். அங்கே ஒரு ஆசாமியுடன் பேசிக் கொண்டிருக்கிறாரே பெரியவர் என்று ஆவலுடன் பார்த்தால், நான் எதிர்பார்த்த மாதிரி   //நம்ம ஊரு பக்கம் தான். நீங்க பஸ் ஏறிவரும்போதே பார்த்தேன்.// என்று சொல்லும் போதே பெரியவர் ஏமாந்து விடக் கூடாதே என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அந்த புளியங்கொட்டை கலரில் சட்டை அணிந்த அந்த வாலிபனைப் பார்க்கும் போதே இவன் முழி சரியில்லையே என்று எனக்குத் தோன்றியது. ஆனால் பெரியவரோ இந்தக் கடையின்  வருமானம் பற்றியெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்.



ஒரு வழியாய் பணத்தைக்கட்டி விட்டு  நகையை வாங்க  டெலிவரி கவுண்டரில் சந்தேகப்படும் வகையில்  புளியங்கொட்டை ஆசாமி மீண்டும் ஆஜராக நான் அலர்ட் ஆகிவிட்டேன். அங்கிருந்து சாப்பிட ஹோட்டலுக்குள்  பெரியவர் நுழைந்தபோதும், அவன்  ஆஜர். என் சந்தேகம் உறுதியாகி விட்டது. பெரியவர் பார்க்க அப்பாவியாய் தெரிகிறார். எப்படியாவது அவரிடமிருந்து நகையை திருடும் எண்ணத்துடன் இவரைத் தொடர்கிறான் என்பது புரிந்தது.



பஸ்ஸை விட்டு   நிறுத்தத்தில் இறங்கியதும் திரும்பவும் அதே வாலிபன் தரிசனம் தந்தான். ஆனால் முக வாட்டத்துடன் இருந்தான். காரணம் அவன் நகை திருட்டு போய் விட்டதாக சொல்கிறான். அத்தனையும் பொய். நமக்குத் தெரிகிறது. ஆனால் பெரியவர் தான் எப்படி நகையை பத்திரப்படுத்தி வந்தார்  என்பதை சொல்கிறார். . பிள்ளையார் கோவிலில் பெரியவருக்கு  அப்பட்டமாக உண்மைவிளங்குகிறது. இப்பவாவது புரிந்து கொண்டாரே  என்கிற அளவில் எனக்குத் திருப்தி.



ஒரு அப்பாவிப் பெரியவர் ஏமாந்து விடாமல் காப்பாற்றிக் கொடுத்தற்காக  கோபு சாருக்கு நன்றி.



உனக்கேன் இந்த வேலை. நகைக் கடைக்குப் போனால் தான் விமரிசனம் எழுத முடியுமா என்று கேட்பவர்களுக்கு  " நான் எங்கே நகைக் கடைக்கு சென்றேன். கதையைப் படிக்க ஆரம்பித்தவுடனேயே நானும் கதையோடு பயணமானேன்." அப்படிப் பயணித்ததில்  எனக்குள் ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்கிறேன்.



பவுன் விற்கும் விலையில் .. நகைக் கடைக்குப்  போவது அரிதாகிக் கொண்டு வரும் வேளையில், உங்கள் உபயத்தால் நகைக் கடைக்கு சென்று வந்தேன்.அதற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் கோபு சார். 

மூக்குத்தி திருட்டுப் போகாமல்  பார்த்துக் கொண்டதற்காக பாராட்டுக்கள்  சார்!


இப்படிக்கு,




ராஜலக்ஷ்மிபரமசிவம்.


  



    




முதல்  பரிசினை


முத்தாக வென்றுள்ள மற்றொருவர் 



திருமதி



 கீதா மதிவாணன்   



அவர்கள்.



வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in











 


முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள


திருமதி



 கீதா மதிவாணன்   



அவர்களின் விமர்சனம் இதோ:





அந்த மூக்குத்தியை அணிவதற்காகக் 

காத்திருக்கும் மூக்குக்குரியவர் யார்?


யார் யார் யார் அவள் யாரோ

ஊர் பேர் தான் தெரியாதோ !!


-oOo-



மூக்குத்தி கதையின் விமர்சனத்துக்குள் நுழையுமுன் முந்திக்கொண்டு நமக்குத் தோன்றுகின்றன சில கேள்விகள்ஒரு முதியவர் தள்ளாத வயதில் தன்னந்தனியாளாக கிராமத்திலிருந்து கிளம்பிபிதுங்கி வழியும் பேருந்தில் புறப்பட்டு ஒருமணி நேரம் பிரயாணித்துடவுனுக்குப் போய் மூக்குத்தி வாங்கவேண்டியதன் அவசியம்தான் என்னஅந்த மூக்குத்தியை அணிவதற்காகக் காத்திருக்கும் மூக்குக்குரியவர் யார்? அவருடைய புறப்பாட்டுக்குப் பின்னாலிருப்பது அன்பாஆசையாஅனுதாபமாகட்டளையா?

வாழும்போதுதான் எதுவும் வாய்க்கவில்லைசாகும்போதாவது பொட்டுத்தங்கத்தோடு போய்ச்சேரவேண்டும் என்று ஆதங்கப்படுகிறாளா மனைவி?

எண்ணெயிறங்கிப் போன மூக்குத்திக்கு மாற்றாய் வேறு வாங்கித்தரச்சொல்லி நித்தமும் மகனிடம் மோளாசை பண்ணுகிறாளா மருமகள்?

காதில் மூக்கில் கிடப்பதைக் கூட உருவிவிட்டு என்னை மூளியாக்கி மூலையில் நிறுத்திவிட்டார் உங்கள் மாப்பிள்ளை என்று தாய்வீடு வருந்தோறும் மூக்கைச் சிந்திக்கொண்டு முறையிடுகிறாளா மகள்?

தாத்தாநான் மூக்கு குத்திக்கப்போறேன்எனக்கொரு மூக்குத்தி வாங்கித்தருவியா என்று முகவாய்க்கட்டையைப் பிடித்து ஆசையாய்க் கேட்டாளா செல்லப் பேத்தி?

வறட்சியால் சரியான வெள்ளாமை இல்லாமல் அல்லல்படுவதாக அவரே சொல்கிறபடியால் இந்த தள்ளாத வயதில் மூக்குத்தி வாங்க அவருக்கு எங்கிருந்து பணம் கிடைத்திருக்கும்? சேமிப்பா? கடனா? சேமிப்பெனில் எப்படி சேர்த்தார்என்ன பாடுபட்டார்கடனாகடனென்றால் அதை எப்படித் திருப்புவார்அல்லது வீட்டுப்பொருள் எதையாவது விற்றுப் பணத்தைத் தேற்றினாரா?

முதியவர் வாங்கவிருக்கும் மூக்குத்திக்கான மூலாதாரம் பற்றிய நமது சிந்தனைகள் முடிவில்லாமல் விரிந்துகொண்டே போகின்றன. பின்னணி இன்னதுதான் என்று எதையும் கதாசிரியர் கோடி காட்டாமையால் முதியவரின் தன்னந்தனியாளாக நகைக்கடைக்குச் சென்றுவரும் அனுபவத்தின் பின்னால் இருக்கும் மர்மச்சூழல் வாசிக்கும் நமக்குள் ஒருவித பதைப்பையும் முதியவர்பால் பச்சாதாபத்தையும் உண்டாக்குவது உண்மை.

நாலும் அறிந்தவர்கள் கூட நகரங்களில் ஏமாற்றப்பட்டு பணத்தையோ பொருளையோ பறிகொடுக்கும்போது வெள்ளந்தியான கிராமத்து முதியவரின் நிலையை என்னவென்று சொல்வதுகொண்டுவந்திருக்கும் பணம் பறிபோய்விடக்கூடாதே என்று முதலில் பதைக்கும் மனம்பிறகு வாங்கிய மூக்குத்தி பறிபோய்விடக்கூடாதே என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகிறதுகூடவே பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடக்கூடாதே என்றும் பதைக்கிறதுஅந்த வகையில் கதாசிரியர் தன் எழுத்தின் மூலம் வாசக நெஞ்சங்களைப் படபடக்கவைத்துதான் நினைத்ததை சாதித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

நாற்பதாண்டு கால வித்தியாசத்தில் முதியவரின் அந்தக்கால இந்தக்கால நகைக்கடை ஒப்பீடுகள் மிக நேர்த்தியாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. அந்நாளைய நகைக்கடைகளில் எந்த மாதிரியான தனிநபர் கவனிப்புகளும் உபசாரங்களும் இருக்கும்இப்போது கூட்டநெரிசலில் எப்படி அலட்சியப்படுத்தப் படுகிறோம் போன்ற பல தகவல்கள் விவரிக்கப்படுகின்றன. இன்றைய தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு அவையெல்லாம் அறிந்திராத விஷயங்களாக இருக்கும்.

300 ரூபாய் சூட்கேஸூக்காக ஏற்கனவே செலவழித்த 90,000 ரூபாயோடு இன்னும் 10,000 ரூபாயை தன்னிடமிருந்து வழித்தெடுத்து செலவழிக்க முயலும் மனித மனத்தின் அல்பாசைகள் வெளிப்படுவதையும் கதையினூடாக காட்டியமை சிறப்பு.

கதையின் துவக்கம் முதல் இறுதி வரையிலும் எந்த அசம்பாவிதமும் பெரியவருக்கு நேர்ந்துவிடக்கூடாதே என்ற பயம் பத்திக்குப் பத்தி சஸ்பென்ஸாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது

மூக்குத்திக்கான பில்லைப் போடச்சொல்லிவிட்டு மஞ்சள் பைக்குள் கையை விட்டேன் என்று அவர் சொல்லும்போது ஒரு பகீர்… பணம் பறிபோயிருக்குமோஇல்லை.

அடுத்த பத்தியில் பணத்தை எடுத்து நீட்டப் போனேன்இங்கும் அடுத்த பகீர்புளியங்கொட்டை கலரில் முழுக்கை சட்டையணிந்தவன் என்னைப் பார்த்து சிரித்தான்.

இந்த இடத்தில் இளைஞனின் அறிமுகம் நமக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அவர் போகுமிடமெல்லாம் அவன் வருவது தற்செயல் போல் தெரியவில்லை. கதையை வாசித்துக்கொண்டிருக்கையில், ‘பெரியவரே... கவனமாக இருங்கள்அவன் உங்களிடமிருந்து களவாடிவிடப் போகிறான்’ என்று அவரை எச்சரிக்கவேண்டும்போல் மனம் கிடந்து தவியாய்த் தவிக்கிறது. நாம் எதிர்பாராத வகையில் அவனே அந்த எச்சரிக்கையை செய்வது நம்மை வியப்பில் ஆழ்த்தி அவன்பாலிருந்த பயத்தை சற்றே விலக்குகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பதைப்பில் இருக்கும் நமக்கு பார்ப்பவர்கள் எல்லோருமே வில்லன்கள் போல் தோன்றுவது இயல்புதானே என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

ஆனால் நம் நிம்மதியை நொடிப்பொழுதும் நீடிக்கவிடாமல் அடுத்தடுத்த பத்திகளில் பீதியின் அளவு கூடிக்கொண்டேபோகிறது.

பிறகு அவன் ஒருவித புன்சிரிப்பை உதிர்த்தவாறே என்னிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் என்ற வரிகளை வாசித்ததும் போச்சுடாப்பா.. இவ்வளவு நேரம் எதை நினைத்து பயந்தோமோ அது நடந்தே விட்டது’ என்று ஆயாசம் மேலிடுகிறதுஅட… இப்போதும் எதுவும் நடந்துவிடவில்லைஇப்படி அதிர்ச்சியும் ஆயாசமுமாக கதையோடு நம்மை நகர்த்திக்கொண்டு போகிறார் கதாசிரியர்.

ஒருவழியாக என் பில்லுக்கான பணத்தைச் செலுத்தினேன். இந்த வரிகளை வாசிக்கும்போது மனத்துக்குள் ஒரு மகிழ்ச்சிப் பிரவாகம். அப்படியென்றால்.. பணம் பறிபோகவில்லை. நல்லவேளை.. ஆனால் அந்த இளைஞன் அவரை அடிக்கடி தொடர்வது நல்லதாகத் தெரியவில்லையே.. 

வலிய வந்து பேசும் இளைஞன் மீது ஏன் பெரியவருக்கு சந்தேகம் வரவில்லைகாரணம், இளைஞர்கள் மேலுள்ள நம்பிக்கை. அவருக்காக ஒருவன் பேருந்தில் எழுந்துநின்று இடம் கொடுத்தானாமே… அப்படிப்பட்ட நல்ல இளைஞர்கள் இருக்கும்போது இவனும் நல்லவனாகநம்பிக்கைக்குரியவனாக இருப்பான் என்ற அவரது நம்பிக்கையை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. 

ஒரே ஊரைச் சார்ந்தவர்கள் என்று சொன்னாலே நம்மையறியாமலேயே ஒரு பாசம் உண்டாகும். அதிலும் தாங்கள் பிறந்து வாழ்ந்த கிராமமே கதியென்று வாழ்ந்துமுடித்து வாழ்க்கையில் அந்திமத்திலிருக்கும் பெரியவர்களுக்கு சொந்த கிராமத்தின்பால் இருக்கும் பற்றும் பாசமும் சொல்லில் அடங்காதது. இளைஞன் தானும் அதே கிராமம் என்று சொல்லி அவரது பாசத்தைப் பெறுகிறான். பொருள் பத்திரம் என்று சொல்லி கரிசனம் காட்டி அவரது நன்னம்பிக்கையைப் பெறுகிறான். பேருந்தில் பத்திரமாக ஏற்றிவிட்டு அவருடைய மனத்தை முற்றிலுமாக ஈர்த்துவிடுகிறான்.

மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்கும் என்பார்கள். இந்த சாமர்த்திய தாத்தாவோபையில் இருந்ததை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு பயமில்லாமல் ஊர் வந்து சேர்ந்துவிட்டாரே… எப்போது எப்படி செய்தார் என்பதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருந்தது கதாசிரியரின் திறமை. முன்பே தெரிந்திருந்தால் கதையின் சுவாரசியம் போயிருக்கும் அல்லவாஅதை யூகிக்கவும் முடியாத வகையில் கதையோட்டத்தைக் கொண்டுபோனது சிறப்பு.

ஓட்டலில் அதிகம் கும்பல் இல்லாமல் இருந்ததால் மீண்டும் நகையை பையிலிருந்து எடுத்துப்பார்த்துபத்திரப்படுத்திக்கொண்டேன்.

இந்த வரிகளில்தான் சூட்சுமத்தை ஒளித்துவைத்திருக்கிறார் கதாசிரியர்பெரியவர் நகையை எடுத்துப் பார்த்தார்பிறகு பத்திரப்படுத்தினார்எங்கு பத்திரப்படுத்தினார் என்பது மட்டும் நமது பார்வைக்கு மறைக்கப்பட்டுவிட்டது.  

நம்முடைய குழப்பம் தீரநாம் முதியவரைக் கேட்குமுன்னரே இளைஞன் வந்து நின்று அவரிடமிருந்து விஷயத்தை அறிந்துசெல்கிறான். இப்போது அவனைப் பற்றி நமக்கு நன்றாக தெரியுமாதலால்எங்கே இடுப்பு வேட்டியைப் பிடித்திழுத்தி மடியிலிருக்கும் மூக்குத்தியைப் பறித்துவிடப்போகிறானோ என்று பக் பக் என்றிருக்கிறது. நல்லவேளையாக அவன் போய்விடுகிறான். அவன் நினைத்திருந்தால் டவுனிலேயே பெரியவரின் மஞ்சள்பையைப் பிடுங்கிக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மறைந்துபோயிருக்கலாம்ஆனால் அவன் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று தெரியவில்லைஉண்மையிலேயே அவன் அவருடைய ஊர்க்காரனாக இருந்தால் அடையாளம் கண்டுகொள்ளப்படுவோம் என்ற பயம் காரணமாக இருக்கலாம் அல்லது கிழவனார்தானே.. மிகவும் எளிதாக ஏமாற்றிவிடலாம் என்ற அலட்சியம் காரணமாக இருக்கலாம்.  

அவனுடைய திட்டம் இப்படி அவன் வாயாலேயே முறியடிக்கப்பட்டுவிடும் என்று தெரிந்திருந்தால் பெரியவரை எச்சரித்திருக்கவே மாட்டான்அவனுடைய எண்ணம் என்னவாக இருக்கும்மூக்குத்தி தொலைந்துபோனால் பெரியவர் தன்னை சந்தேகிக்க மாட்டார் என்ற எண்ணமாக இருந்திருக்கலாம்ஆனால் அவனுடைய கணிப்பு தவறாப்போய்விட்டது.

முதியவரின் முன்யோசனை அவருக்குக் கைகொடுத்துவிட்டதுநுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் என் வாயாலேயே நான் கெட்டேனே என்று அந்த இளைஞன் இப்போது தன்னைத் தானே நொந்துகொண்டிருப்பான். நுனிநாவில் தேன் தடவிக் கொல்லும் வஞ்சகர்களும் உள்ளார்கள் என்பதை முதியவர் உணர்ந்து இனி எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார்

ஆரம்பம் முதல் இறுதிவரை அங்கிங்கு விழிகளை நகர்த்த இயலாமல் கதையோடு கட்டிப்போடும் தொய்வில்லாத எழுத்துநடைக்கும் தேர்ந்த கதைசொல்லியின் லாகவத்துடன் கதையை சுவாரசியம் குறையாமல் கொண்டுசென்ற திறமைக்கும் பாராட்டுகள்

 











 








முதல் பரிசினை முத்தாக வென்றதுடன்

தன் இரண்டாம் ஹாட்-ட்ரிக் பரிசினை

ஐந்தாம் சுற்றிலும் தக்க வைத்துக்கொண்டுள்ள



விமர்சன வித்தகி


திருமதி


கீதா மதிவாணன் 




அவர்களுக்கு நம் 

மனமார்ந்த பாராட்டுக்கள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


 [ VGK-17 To VGK-21 ]



 

  


Hat-Trick Prize Amount will be fixed later according to her

Continuous Further Success in VGK-22



    

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.





நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.





இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.


இணைப்புகள்:




காணத்தவறாதீர்கள் !



oooooOooooo



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-23 


 ’ யாதும் ஊரே யாவையும் கேளிர் ‘ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 



26 . 06. 2014



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.













என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

28 comments:

  1. மூக்குத்தி சிறுகதை விமர்சனத்தில் முதல் பரிசு கிடைத்ததில் அளவிலா மகிழ்ச்சி கோபு சார். பலதரப்பட்ட சிறுகதைகள் மூலம் விமர்சனத்துக்கான வாய்ப்பினை வழங்குவதோடு பரிசுகளையும் வழங்கி ஊக்கமளிக்கும் தங்கள் சாதனைப் பெருஞ்செயல் பாராட்டுக்கும் அப்பாற்பட்டது. மிகவும் நன்றி சார். பரிசுக்குரிய விமர்சனங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கும் நடுவர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

    மாறுபட்டதொரு விமர்சனமெழுதி என்னோடு முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டுள்ள திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அன்புள்ள கோபு சார், தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.
    http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html

    ReplyDelete
  3. முதல் பரிசினை வென்ற திருமதி கீத மஞ்சரி அவர்களுக்கும்
    திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. அன்பின் வை.கோ =

    இராஜலக்‌ஷ்மி பரமசிவம் மற்றும் கீத மஞ்சரி ஆகியோரின் விமரசனம் அருமை. மெதுவாகப் படித்து இரசித்து மகிழ்ந்தேன். பரிசுக்கு ஏற்ற பதிவுகள். நடுவர்கள் தேர்ந்தெடுத்துத் தான் பரிசு வழங்கி இருக்கிறார்கள். பரிசு பெற்ற இருவரும் பெண்களே ! இதுவும் பாராட்டுக்குரியது.

    பரிசு பெற்ற இராஜலக்‌ஷ்மி பரமசிவத்திற்கும் கீத மஞ்சரிக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. கதையோடு பயணமான திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அவர்களுக்கும், ஏகப்பட்ட கேள்விகளோடு பயணித்த சகோதரி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. அருமையான விமர்சனங்களை எழுதி முதற் பரிசினைப் பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அருமையான விமர்சனங்களை எழுதி முதற் பரிசினைப் பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! மேலும் பல பரிசுகளை வெல்ல வாழ்த்துகள்!

    ReplyDelete

  8. முதல் பரிசினை வென்ற சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் மற்றும் சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கரும்பையும் கொடுத்து , அதைத் தின்பதற்குக் கூலியும் கொடுக்கும் கோபு சாரின் பரந்த மனப்பாண்மை என்னை வியக்க வைக்கிறது. முதல் பரிசு கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதை விமரிசன வித்தகியுடன் பகிர்ந்து கொள்வதில் என் மகிழ்ச்சி பன்மடங்காகிறது. திருமதி கீதாவிற்கு என் வாழ்த்துக்கள், கேள்விகளாலேயே விமரிசனமும் செய்ய முடியும் என்று நிருபித்த அவருக்கு என் என் பாராட்டுக்கள்.

    பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் தெரிவித்த நண்பர்களுக்கும், தெரிவிக்கப் போகும் நண்பர்களுக்கும் என் இனிய நன்றிகள் பல.

    ReplyDelete
  10. மிக அருமையாக விமர்சனம் செய்து முதல் பரிசு பெற்ற திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்..

    நடுவர் குழுவில் உள்ளவர்களுக்கும், அருமையான கதையை எழுதி அதை விமர்சனம் செய்ய வாய்ப்பும் பரிசும் வழங்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  11. முதல் பரிசினை வென்றுள்ள திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் ,திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்! ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல இருக்கு முதல் இடத்த விடுறது இல்லன்னு! கலக்குங்க! அன்புடன் MGR

    ReplyDelete
  12. முதல் பரிசினை வென்றுள்ள
    திருமதி கீதா மதிவாணன்அவர்களுக்கும்
    திருமதி ராஜலட்சுமி பரமசிவம்
    மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத்
    தெரிவித்து மகிழ்கின்றேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  13. சுவையான விமர்சனம் எழுதி
    வெற்றி பெற்ற திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம்
    அவர்களுக்கும் ,
    திருமதி . மதிவாணன் அவர்களுக்கும்
    பாராட்டுக்கள் !

    ReplyDelete
  14. வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றி.

    ReplyDelete
  16. முதல் பரிசை வென்ற கீதமஞ்சரி அவர்களுக்கும், ராஜலஷ்மி மேடத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. முதல் பரிசினை வென்ற கீத மஞ்சரி அவர்களுக்கும்
    ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. முதல் பரிசுக்கான இரண்டு விமர்சனங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன.

    விமர்சனம் செய்த திருமதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  19. முதல் பரிசைப் பெற்ற திருமதி ராஜலக்ஷ்மிக்கும் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள். இரண்டுமே அருமையான விமரிசனங்கள்.

    ReplyDelete
  20. இரண்டு விமர்சனங்களும் மிக மிக அருமை
    திருமதி,ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும்
    திருமதி, கீதா மதிவாணன் அவர்களுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. திருமதி ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் திருமதி கீதமஞ்சரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  22. திருமதி ராஜலஷ்மி திருமதி கீதமஞ்சரி வாழ்த்துகள்

    ReplyDelete
  23. திருமதி,ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும், திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)

      Delete
  24. பரிசு வென்ற திருமதி ராஜலட்சுமிபரமசிவம் கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. திருமதி ராஜலட்சுமி பரமசிவம் திருமதி கீதா மேடம் வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. அன்புடையீர்,

    அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

    ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

    https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

    மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

    http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

    http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

    http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

    http://gopu1949.blogspot.com/2014/10/4.html

    http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete