About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, July 20, 2014

VGK 25 / 01 / 03 - FIRST PRIZE WINNERS ........ ’தேடி வந்த தேவதை’
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 25 - ’ தேடி வந்த தேவதை இணைப்பு:   
 


 


    


 


  

  மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 

நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  

ஐந்து
                                                                                                
'நடுவரின் பாராட்டு'

முதல் பரிசு பெற்ற இருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

எல்லா விமரிசனங்களும் இவை மாதிரி தேர்ந்த விமரிசனங்களாக அமைந்து விட்டால், பரிசுக்குரிய விமரிசனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வகைப்படுத்துவதற்குள் என் பாடு திணறிப் போய் விடும் என்பதும் உண்மை.

அதை விட பெரிய உண்மை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்தது தான்.

உண்மையிலேயே இது தான் அவர்கள் பெற்ற வெற்றியின் முத்திரை பதியலும் ஆகும்..

                                                                                                                                                                                                           -- நடுவர்
  

மிகுந்த உற்சாகம் ஊட்டும் விதமாக இவ்விரு விமரிசனதாரர்களைப் பற்றிய மனம் திறந்த பாராட்டுகளுக்கு, உயர்திரு நடுவர் ஐயா / அம்மா அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.  


  

- பிரியமுள்ள கோபு


 


  
 
    
     
  


 
மிக அருமையான எழுத்தாற்றலால், உயர்திரு நடுவர் அவர்களையே திணற வைக்க ஆரம்பித்துள்ள விமர்சனத் திலகங்களாகிய உங்கள் இருவருக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள். 

இதை .... இதை .... இதைத்தான் இந்த என் போட்டியின் மூலம் நானும் எதிர்பார்த்தேன். 

நாளுக்குநாள் போட்டியின் விறுவிறுப்புக் கூடிவருவதும், ஒவ்வொரு விமர்சனதாரர்களின் எழுத்துக்களும் நன்கு மெருகேறி, ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு ஜொலித்துவருவதும், எழுத்துலகுக்கு ஓர் ஆரோக்யமான சூழ்நிலையாக அமைந்து மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 

தொடர்ந்து கலக்குங்கோ ..... !  நாளை காலை அனைவருக்கும் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது

மீண்டும் என் நல்வாழ்த்துகள் !!

என்றும் அன்புடன் தங்கள்

கோபு [VGK] 
இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  
நல்வாழ்த்துகள். 

  


மற்றவர்களுக்கு:     முதல்  பரிசினை முத்தாக 


வென்றுள்ளவர்கள் இருவர் 


அதில் ஒருவர்


திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்  
அவர்கள்.

வலைத்தளம்: “அரட்டை”

rajalakshmiparamasivam.blogspot.com
 முதல் பரிசினை முத்தாக வென்றுள்ளதிருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம்  
அவர்களின் விமர்சனம் இதோ:
கதாபாத்திரங்கள்  என்ன நினைக்கிறது என்பதின் மூலமாக என் விமரிசனத்தை முன் வைக்கிறேன்.


இதோ முதலில் மரகதம் சொல்வதைக் கேட்போமா ?

"என்னைக் கதாசிரியர் ஏன் இவ்வளவு கொடுமையானவளாகக் காட்டி விட்டார் என்று எனக்குப் புரியவில்லை. என் மேல் அவருக்கென்ன கோபம். நான் வரதட்சினை எதிர்பார்ப்பவளாக, மகனைத் திருமணத்தின் விலை பொருளாக  நினைக்கும் ஒரு சராசரிக்கும் கீழான மாமியாராக சித்தரித்து விட்டார். அது தான் போகட்டும். என் மகனுக்கு உயிர் கொல்லி நோய் என்று தெரிந்த பின்னால்  ஒரு சராசரி தாயாக மனம் பதைக்க, புலம்புவளாக, கவலையின் உருவமாகக் காட்டியிருக்கலாமே. அதைபற்றிய சிந்தனையையே இல்லாத கல் மனம் கொண்ட தாயாக அல்லவா  சித்தரிக்கப் பட்டிருக்கிறேன். அந்த விதத்தில் உங்கள் மேல் எனக்கு மிகவும் வருத்தம் கோபு சார். என்  பையன் உயிருக்கு என்னவானாலும் பரவாயில்லை, மருமகள் கொண்டு வரும் சீர் செனத்தி தான் முக்கியம் என்று நினைப்பவளா நான். என்மேல் கொஞ்சம் கருணை காட்டியிருக்கக் கூடாதா? ஆனால் இறுதியில் என்னை மனம் மாறியவளாகவும். என் மகனுக்கு  உயிர்கொல்லி நோய் எதுவும் இல்லை என்று சொல்லி பெற்ற வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள் கோபு சார். அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் பல.  சுமதியை  அவள் மாமியார் போலில்லாமல்  அவளை என் மகளாகத் தான் நினைக்கப் போகிறேன். ஒரு சின்ன விண்ணப்பம், வேறு கதைகளில் மரகதம் என்கிற கதாபாத்திரம்  தாயாக சித்தரிக்கப் பட்டால் தயவு செய்து  மகனின்  நலம் ஒன்று தான் குறிக்கோள் அவளுக்கு என்று சித்தரித்தால் நான்  நன்றியுடையவளாக இருப்பேன்."


  


  

சுந்தர்  என்ன சொல்கிறான் பார்ப்போமா? " எல்லோரும் அவ்வப்பொழுது சின்ன சின்ன பொய் சொல்பவர்கள் தாம். என் தாயின் குணத்தை மாற்றுவதற்காக நானே எனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சொல்ல வைத்து விட்டீர்களே! பயந்தே போய் விட்டேன். நல்ல வேளை இறுதியில் அது எல்லாம் ஒரு நாடகமே என்று சொல்லி என் உயிரை எனக்குத் திருப்பி தந்து விட்டீர்கள். அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் கோபு சார். ஆனால் நான் சொன்னது இமாலயப் பொய்யல்லவா? இனி  வாழ்வில் சுமதி என்னை நம்ப வேண்டுமே என்கிற அச்சம் என் மனதுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி சுமதிக்கும் எனக்கும் பிணக்கு வந்தால் நான் உங்களைத் தான் மத்தியஸ்தம் செய்யக் கூப்பிடப் போகிறேன்.என் மூலமாக மாமியார்களின் அகங்காரத்தினால், பெற்ற பிள்ளைகள் படும் மனவேதனையை அழகாக  சொல்லி விட்டீர்கள்.  எப்படியாவது என் அம்மாவின் மனநிலையை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பதை உணர்ந்து தான் எய்ட்ஸ்  என் வாழ்க்கையில் விளையாடுமாறு செய்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. எப்படியோ எனக்கும், என் மனதைக் கவர்ந்த சுமதிக்கும் திருமணம் முடித்து வைத்த புண்ணியம் உங்களயே சேரும். பாராட்டுக்கள் கோபு சார்!டாக்டரின் எண்ணத்தைத் தெரிந்துக் கொள்ளலாமா ?


நோய் இருப்பவர்களிடம், "உங்களுக்கு ஒன்றுமில்லை. நீங்கள் நன்றாயிருக்கிறீர்கள்" என்று ஒரு நாளைக்கு பல  முறை சொல்லிப் பழக்கப்பட்ட நான் இன்று ஒரு நல்ல  விஷயத்திற்காக சுந்தருடன் சேர்ந்து ஒரு பொய் சொல்லியிருக்கிறேன். Mrs, மரகதமும் அவள் கணவரும் என்னை எப்படியெல்லாம் திட்டப் போகிறார்கள்  என்பதை நினைத்தால் கொஞ்சம் வெலவெலத்து  தான் போகிறது. ஆனாலும், இது ஒரு நன்மைக்காகத் தான் என்று நினைக்கும் போது, வரப்போவதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் உண்டாகிறது. ஒரு எளிய குடும்பத்துப் பெண்ணிற்கு திருமணம் நடக்க என்னையும் ஒரு கதா பாத்திரமாகப் படைத்த கோபு சாருக்கு என் நன்றிகள் பல.ஒரு டாக்டராக  நான் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கிறது. சுமதியின் வாயிலாக எய்ட்ஸ் பற்றி ஒரு சின்ன பிரசங்கமே செய்து விட்டாரே ஆசிரியர். அவருடைய சமுதாய விழிப்புணர்வு சிந்தனைக்கு நான் தலை வணங்குகிறேன். ஒழுக்கம்  தவறுவது  குற்றமே!. அது பெரிய  தவறில்லை என்று பொருள்படுவது போல் சுமதி பேசுவதில் மட்டும்  எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் எய்ட்ஸ் நோயாளிகள் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற சிந்தனை வரவேற்கப்பட வேண்டியதே.


    


சுமதி சொல்வதைக் கேட்போமா? தியாகத்தின் உருவமாகத் தான் நான் வாசகர்களுக்கு அறிமுகமாகிறேன்.. ஆனால்  நான் செய்வது தியாகமா, அசட்டுத்தனமா என்பதை என் மனம் பட்டி மன்றமே நடத்திப் பார்த்து விட்டது. ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த பெண் தான் நான். இந்தத் திருமண பந்தத்தினால் பெரிதாக என் குடும்பத்தின் பொருளாதாரம் ஒன்றும் உயர்ந்து விடப் போவதில்லை. "ஒரு வேளை குடும்பத்தினருக்கு  நல்லது நடக்கலாமோ" என்கிற  எதிர்பார்ப்பு மட்டுமே என் மனதில் இருப்பதை யூகிக்க  முடிகிறது. அப்படிப்பட்ட  சூழ்நிலையில் சுந்தருக்கு  எய்ட்ஸ்  என்று தெரிந்திருந்தும் மணக்க சம்மதிப்பது அவ்வளவு உசிதமாகப் படவில்லைதான். ஆனாலும் அதை செய்கிறேன்.

பிறகு சுந்தர் எய்ட்ஸ் என்று பொய் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்ததும் திருமணம் வேண்டாமா என்கிற நல்ல முடிவை     எடுத்து விட்டேன் என்று நிம்மதி பெருமூச்சுடன் இருந்தால், அவன் அம்மா மரகதம் மூலமாக கதாசிரியர் என் திருமணத்தை முடித்து விட்டார். அதற்காகப் பெரிதாக  வருந்தவில்லை நான். பணக்கார  வீட்டிற்குப் போகிறேன் என்கிற ஒரு சின்ன பயம் என் மனதுள் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

என் குடும்பத்திற்கு என்னாலான  ஒரு சின்ன உதவி என்னுடைய திருமணம். என் திருமணத்தை முடித்து உதவியதற்காக  என் நன்றிகள் கோபு சாருக்கு. நர்ஸ் என்கிற புனிதத் தொழிலில் இருக்கும் நான் எய்ட்ஸ் நோயாளியை திருமணம் செய்ய சம்மதித்து, சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாகி விட்டேன் என்பதில் எனக்குப் பெருமை தான். என்னை அப்படி சித்தரித்த கதாசிரியருக்கு  என் பாராட்டுக்கள்.

சுந்தர் இனிமேலாவது பொய் எதுவும் என்னிடம் சொல்லாமல் என் மகிழ்ச்சிக்கு  பங்கம் எதுவும் வராமலிருக்கவும்  ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.


                                            ---------------------------------------------------------------


சுமதியும் சுந்தரும்  எல்லா வகை செல்வமும் பெற்று நீடுழி வாழ  என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.


ராஜலக்ஷ்மி பரமசிவம்.  
மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.    
முதல்  பரிசினை


முத்தாக வென்றுள்ள மற்றொருவர் 


 மீண்டும் நம் திருமதி   கீதா மதிவாணன்     அவர்கள்.வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.in
 


முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள


திருமதி
   கீதா மதிவாணன்  


அவர்களின் விமர்சனம் இதோ:தேடி வந்த தேவதையாய் சுமதி. படித்தவளும் சராசரிக்கு மேலேயே நல்ல அழகானவளும் சுயமாய் சம்பாதிக்கும் நல்ல பணியிலிருப்பவளுமான சுமதிஎய்ட்ஸ் நோயாளியான சுந்தரை விஷயம் தெரிந்தே மணக்க சம்மதிப்பது யதார்த்தத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு விஷயம் இல்லைதான்ஆனாலும் நம்மை மறுபரிசீலனையின்றி ஏற்றுக்கொள்ள வைக்கிறார் கதாசிரியர்எப்படி என்பதற்கான காரணங்களைப் பார்ப்போமா?

1.   முதல் காரணம் - சுமதியின் குடும்ப சூழ்நிலை. சுமதியின் இந்த முடிவுக்கு தியாகம் என்று பெயரிட்டாலும் அத்தியாகத்தின் பின்னாலிருப்பது ஒருவகையான சுயநலம்எனலாம். அடிப்படையில் பார்த்தால் தியாகமும் சுயநலமும் எதிரெதிர் திசைகளை நோக்கி இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் சுமதியின் விஷயத்தில் இரண்டும் ஒரே புள்ளியில்தான் இணைந்துள்ளனதன்னைத்தானே ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு மனைவியாய் அர்ப்பணிப்பதன் மூலம் தன் நான்கு தங்கைகளையும் எப்படியாவது நல்லபடியாக கரைசேர்க்க இயலுமா என்ற நப்பாசை அவளுள் இருக்கிறது.தான் கெட்டாலும் தன்னைச் சார்ந்தவர்கள் நன்றாக இருக்க விரும்பும் இக்குணம் முழுச்சுயநலம் ஆகாது என்றாலும் நிச்சயமில்லாத ஒரு லாபநோக்கு இருப்பது புரிகிறது. 

மேலே சொன்ன காரணத்தைக் கொண்டுசுமதி பணத்தாசை பிடித்தவள் என்ற முடிவுக்கு வந்தால் அது மாபெரும் தவறுசுந்தர் கொடுத்திருக்கும் விளம்பரத்தில் எய்ட்ஸ் இருப்பதாகக் குறிப்பிடப்படாவிடில் சுமதி அந்த வரனை ஏறெடுத்தும் பார்த்திருக்கமாட்டாள். தகுதிக்கு மீறிய இடம் என்பதை அவள் அறிவாள்.

2.   இரண்டாவது காரணம்விளம்பரம் கொடுத்த சுந்தரின் நேர்மைபொதுவாகவே தந்தையிடம் பாசத்துடன் வளரும் பெண்பிள்ளைகள் தங்களுக்கு வரப்போகும் கணவன்தன் தந்தையைப் போலவே இருக்கவேண்டும் என்றும் தாயிடம் ஈர்ப்பு உள்ள பையன்கள் தாயைப் போலவே மனைவி அமையவேண்டும் என்றும் எதிர்பார்ப்பது சராசரி மனித இயல்புபிழைக்கத் தெரியாதவர் என்று பழிக்கப்பட்ட போதிலும் தந்தையின் நேர்மை குறித்து சுமதியின் ஆழ்மனதில் பெருமிதம் இருந்திருக்கலாம்அதனால்தான் நேர்மையாக ஒளிக்காமல் மறைக்காமல் தனக்கிருக்கும் ஒரு உயிர்க்கொல்லி நோயைப் பற்றி அறிவித்து மணப்பெண் தேடும் சுந்தர் மீது அவளை அறியாமலேயே ஈடுபாடு உண்டாகியிருக்கிறது. 

ஆனால் அவனுக்கு எய்ட்ஸ் இல்லை என்று அறிந்தபோது அவளால் மகிழ்ச்சியடைய இயலவில்லை. மாறாக திருமணத்தையே மறுக்கிறாள். எப்போது அவனது செய்கையில் நேர்மை இல்லை என்று தெரியவந்ததோ அப்போதே அவனை விலக்கவும் துணிந்துவிட்டாள்.

3.   மூன்றாவது காரணம்சுமதியின் பணி தொடர்புடையதுசுமதி பணிபுரிவது ஒரு நர்ஸாகசெவிலியருக்கு இயல்பாகவே நோயாளிகளிடத்து இருக்கக்கூடிய அன்பும் சகிப்புத் தன்மையும் பச்சாதாபமும் இவளிடத்து சற்று அதிகமாகவே உள்ளதுதன் வாழ்நாளில் ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு மனைவியாகி அவனுக்கு சேவை செய்து அவன் இருக்கும்வரை மகிழ்வாக வைத்திருக்கவேண்டுமென்று நினைப்பதில் வியப்பில்லை.

என்னதான் தன் வாழ்க்கையை தியாகம் செய்ய முன்வந்தாலும் அவள் ஒரு பற்றற்ற துறவி அல்லஇயல்பான பெண்மன ஆசைகளும் அவளுக்குள்ளும் உண்டு என்பதை எய்ட்ஸ் நோய்க்கு விரைவிலேயே மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் சுந்தரின் ஆயுள் அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கை அவள் வார்த்தைகளில் வெளிப்படுவதன் மூலம் அறிய முடிகிறது

எனவே கதையின் நாயகியான சுமதியின் கதாபாத்திரத்தைப் பொறுத்தவரை குறை கூற ஏதுமில்லைகூடக்குறைய இல்லாமல் அளவாக கச்சிதமாய் செதுக்கப்பட்ட அவள் உருவ அழகைப் போலவே கச்சிதமாய் செதுக்கப்பட்ட குணாதிசயமும் அழகு.

சுந்தர் பற்றி நிறைய சொல்லலாம். கொள்கையில் பிடிப்பிருக்கும் அளவுக்கு நெஞ்சத்தில் துணிவு இல்லை. பாம்பையும் அடிக்கவேண்டும், தடியும் முறியக்கூடாது என்பது போல் இரண்டுங்கெட்டானாய் தவிக்கும் இடைப்பட்ட மனம்.அன்பும் கண்டிப்புமான அம்மாவுக்கும் தான் கொண்ட லட்சியத்துக்கும் நடுவில் இருதலைக் கொள்ளி எறும்பாய் அவன்ஒன்று அம்மாவைத் தன்வழிக்குக் கொண்டுவர வேண்டும் அல்லது அவளைத் தன் வழியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும்முன்னதை விடவும் பின்னது எளிது என்ற எண்ணத்தால் உருவானதுதான் எய்ட்ஸ் திட்டம்.

ஏராளமான பணமிருந்தும் கண்ணுக்கு கண்ணான தன் ஒரே பிள்ளைக்கு எய்ட்ஸ் என்றால் எந்தத் தாய்தான் தாங்குவாள்மகன் செய்த இறந்தகாலத் தவறுஅவனது நிகழ்கால நிலைமைநிலையில்லா எதிர்காலம் என்று முக்காலமும் அவளை வறுத்தெடுக்கமனம் ஆற்றாது அல்லலுற்றுக் கொண்டிருப்பாள் அல்லவாதாய் மனம் வருந்தினாலும் பரவாயில்லைதன் கொள்கை மாறிவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருப்பவன்எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியேதானாய்க் கனியாத பழத்தை தடி கொண்டு அடித்துக் கனிய வைத்தாற்போல் குறுக்குவழியில் சென்று தாயின் மனத்தைக் கனியவைத்த சாமர்த்தியக்காரன்மரகதம் மாறுபட்ட முடிவு எடுத்திருந்தால் இந்த மகிழ்ச்சியும் நீடித்திருக்காதுதாய்க்கும் மகனுக்குமிடையில் இருக்கும் நல்லுறவும் அற்றுப்போயிருக்கும்.  

மரகதம் செல்வக்கொழிப்பில் ஊறிய படாடோபப் பேர்வழி என்பது அவரது பேச்சிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் நமக்கு நன்றாகத் தெரிகிறதுகொஞ்ச நேரம் கூட ஏசி இல்லாமல் உடல் புழுங்கித் தவிப்பதும்மருத்துவமனையில் சுமதிக்குக் காத்திருக்கும் நேரத்தில் தன் கழுத்தில் மின்னும் புத்தம்புதிய வைர அட்டிகை வெளியில் தெரிய வாய்ப்பில்லாமல் இழுத்துப் போர்த்த வேண்டியதை எண்ணி உள்ளுக்குள் புழுங்கித் தவிப்பதும் அவரது இயல்புக்குப் போதுமான உதாரணங்கள்பரம்பரைப் பணக்காரியான மரகதத்துக்கு ஏழ்மை நிலையில் உள்ள சுமதியைப் பிடித்திருந்தாலும் அவளை மருமகளாய் ஏற்றுக்கொள்ள மனம் எளிதில் ஒப்ப மறுக்கிறது. இரத்தத்தில் ஊறிய குணம். அவ்வளவு எளிதில் மாறிவிடுமா, என்ன? ஆனால்… தான் பெற்ற மகனை விடவும் யாரோ ஒருத்தி தன்னிடத்தில் காட்டும் மரியாதையும் அன்பும் அவள் மனத்தை மாற்றியதில் என்ன வியப்பு!

கதையை வாசிக்கையில் எழுந்த ஒன்றிரண்டு சிந்தனைகளை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்இந்தக் கதையில் சுந்தருக்கு எய்ட்ஸ் வந்ததற்கான காரணமாக தவறான உறவு என்பது மட்டுமே காட்டப்பட்டுள்ளதுபெரும்பாலானோர்க்கு அந்த முறையில் பரவுகிறது என்றாலும் அது மட்டுமல்லாமல்மருத்துவமனைகளில் சரியாக பராமரிக்கப்படாத சிரிஞ்சுகள்பல் மருத்துவ உபகரணங்கள்இரத்தமாற்று போன்ற காரணங்களாலும் ஹெச்..விகிருமிகள் பரவும் வாய்ப்புள்ளதுகதையில் சுந்தரை அக்மார்க் நல்லவன் என்று காட்ட முதல் காரணம் தவிர வேறெந்த வகையிலாவது பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.

இப்படியொரு விளம்பரத்தைக் கொடுத்ததன் மூலம் நண்பர்கள்உறவினர்கள்அறிந்தவர்கள்தெரிந்தவர்கள் மத்தியில் இச்செய்தி பரவிசுந்தரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாதா? பின்னாளில் என்னதான் பொய் என்று சாதித்தாலும் எத்தனைப் பேர் நம்புவார்கள்?

சுந்தரின் இந்த செயலுக்கு எந்த மருத்துவரும் தார்மீக அடிப்படையில்  ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்றே தோன்றுகிறதுஅது அவர்களது மருத்துவப்படிப்புக்கே இழுக்கு உண்டாக்கும் அல்லவாசுந்தரின் செயலுக்கு அவர்களது குடும்ப மருத்துவரும் உடந்தை என்பது என்றேனும் வெளியில் தெரியவராமலா போகும்அதனால் அவருடைய மருத்துவத் தொழிலும் பாதிக்கப்படும் அல்லவா?

யதார்த்தத்தில் யோசிக்கும்போது இப்படிப்பட்ட பின்விளைவுகளைப் பற்றியும் யோசனை எழுகிறதுஆனால் முன்பே சொன்னது போல் சுந்தரின் கொள்கைப் பிடிப்பின் முன் இவையெல்லாம் சாதாரணம் என்று தோன்றியிருக்கும் போலும்தாயை எதிர்கொள்வதை விடவும் உலகத்தை எதிர்கொள்வது எளிது என்று துணிந்தே தயாராகியிருக்கிறான் அந்த தனயன்

உண்மை தெரிந்தபின் சுமதி திருமணத்துக்கு சம்மதித்திருந்தால்சுந்தர் அந்தப் பொய்யுடனேயே வாழ்க்கையைக் கழித்திருக்க முடிவு செய்திருப்பானாஅல்லது திருமணத்துக்குப் பிறகு தாயிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு வேண்டியிருப்பானா? தாய் முழுமனத்தோடு மன்னித்திருப்பாரா? சுந்தரின் மேல் உள்ள கோபம் சுமதியின் மேல் திரும்பாதா? என்பதெல்லாம் தொடரும் புதிர்க்கேள்விகள்!

எனவே சுமதியின் நிராகரிப்பை நியாயப்படுத்த நமக்குள் பல்வேறு காரணங்கள் தோன்றி அவளுக்காய் வக்காலத்து வாங்குகின்றன. தன் லட்சியத்தை அடைய குறுக்குவழியில் முயன்ற சுந்தரை மாற்றி நேர்வழியிலேயே அடையச்செய்த சுமதியின் துணிச்சலைப் பாராட்டுவதோடு எடுத்துக்கொண்ட கருவை அழகானசுவாரசியமான கதையாக்கிய கதாசிரியருக்கும் நம் பாராட்டுகள்.


 


மனம் நிறைந்த பாராட்டுக்கள்


அன்பான இனிய நல்வாழ்த்துகள். முதல் பரிசினை முத்தாக வென்றதுடன்

மூன்றாம் முறையாக மீண்டும் 


ஒரு புது ஹாட்-ட்ரிக் அடித்துள்ள நம் விமர்சன வித்தகி


திருமதி
   கீதா மதிவாணன்  
அவர்களுக்கு நம் 

மனமார்ந்த பாராட்டுக்கள் +

அன்பான இனிய நல்வாழ்த்துகள்.  VGK-23  To  VGK-25 


   
  Hat-Trick Prize Amount will be fixed later according to Her

Continuous Further Success in VGK-26, VGK-27 and VGK-28    

   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.

நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்

சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இணைப்புகள்:


காணத்தவறாதீர்கள் !

oooooOoooooஅனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு: VGK-27 
 ’ அவன் போட்ட கணக்கு ‘ 
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை 24 . 07. 2014இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.
கலந்துகொள்ள மறவாதீர்கள்.


oooooOooooo 

ஓர் முக்கிய அறிவிப்பு’போட்டிக்குள் போட்டி’ என்று 


நாளை ஒரு புதுப்போட்டிக்கான பதிவு வெளியிடப்பட உள்ளது.
தனக்குத்தானே நீதிபதி !புதுமையான போட்டி !! 

மிகச்சுலபமான போட்டி !!!  வித்யாசமான, விசித்திரமான, மிகச்சுலபமான போட்டியாகும். 


 யார் வேண்டுமானாலும் அதில் சுலபமாகக் கலந்துகொண்டு 
 விமர்சனம் ஏதும் எழுதாமலேயே  மிகப்பெரிய பரிசினைத் தட்டிச்செல்லலாம். மேலும் விபரங்களுக்கு நாளைய பதிவினைக்காணத்தவறாதீர்கள்.
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

29 comments:

 1. அன்பின் வை.கோ - சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினைத் தட்டிச் சென்ற இராஜலக்‌ஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 2. அன்பின் வை.கோ - சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசினைத் தட்டிச் சென்ற இராஜலக்‌ஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.

  நட்புடன் சீனா

  ReplyDelete
 3. அன்பின் வை.கோ

  சிறுகதை விமர்சனப் போட்டியில் முதப் பரிசினைத் தட்டிச் சென்ற இரு பதிவர்களையும் நடுவர் அவர்கள் மனமாறப் பாராட்டி வாழ்த்தி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வெற்றி பெற்றவர்களைப் பாராட்டிய நடுவர் அவர்களுக்கும் பாராட்டுகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. அன்பின் வை.கோ

  சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இருவரில் ஒருவரான கீதா மதிவாணன் முதல் பரிசுடன் - ஹாட் ட்ரிக் பரிசினையும் பெற்றது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது - நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 5. சிறுகதை விமர்சனப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இருவரில் ஒருவரான கீதா மதிவாணன் முதல் பரிசுடன் - ஹாட் ட்ரிக் பரிசினையும் பெற்றது மிக்க மகிழ்ச்சியினைத் தருகிறது - நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன் - நட்புடன் சீனா

  ReplyDelete
 6. லட்சுமி பரமசிவன் மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கரந்தை ஜெயக்குமார் July 20, 2014 at 6:22 AM

   //லட்சுமி பரமசிவன் மற்றும் கீதா மதிவாணன் இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   //லட்சுமி பரமசிவன்// = தவறு

   அவர்கள் பெயர்:

   ”திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் ”
   என்பதே சரியாகும் என்பதை தயவுசெய்து தங்களின் கவனத்தில் கொள்ளவும்.

   Delete
 7. அருமையான முறையில் விமர்சனம் எழுதி முதல் பரிசினைப் பெற்றுள்ள திருமதி இராஜலக்‌ஷ்மி பரமசிவம் மற்றும் திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்

  ReplyDelete
 8. ராஜலட்சுமி அவர்கள் கதாபாத்திரங்களை பேசவைத்து அருமையான விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.
  வாழ்த்துக்கள் ராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கு.

  ReplyDelete
 9. கீதாமதிவாணன் அவர்கள் கதையில் வரும் பாத்திரங்கள் சொல்லும் பொய்களால் ஏற்படும் பின் விளைவுகளையும் அலசி ஆராய்ந்து அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறார.
  தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 10. நடுவர் குழுவில் உள்ளவர்களுக்கும், அனைவரையும் உற்சாகத்துடன் எழுத உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete


 11. முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
  திருமதி .ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கும்,

  கீதாமதிவாணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துகள்..  ReplyDelete
 12. வித்தியாசமான விமர்சனங்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் நடுவர் அவர்களுக்கும் , ஆசிரியருக்கும் பாராட்டுக்கள்.. நன்றிகள்..வாழ்த்துகள்..

  ReplyDelete
 13. முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ள சகோதரியர் இராஜலக்‌ஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள். நான் போட்ட கணக்குல ஒண்ணு சரியா இருக்கு! இன்னொண்ணு... அது நடுவர் போட்ட கணக்கு போலும்! வரும் வெற்றிகளைப்பெற காத்திருக்கும் அனைவருக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்!
  அன்புடன் உங்கள் - MGR

  ReplyDelete
 14. முதல் பரிசையும் ஹாட்ரிக் பரிசையும் ஒருசேரப் பெற்றது பெருமகிழ்ச்சி. அதை இருமடங்காக்குகிறது நடுவர் அவர்களின் கருத்துரை. நடுவர் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

  வாய்ப்பினை வழங்கி கரும்பு தின்னக் கூலியாய் பரிசுகளையும் அள்ளித்தரும் கோபு சார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி பல.

  கதாபாத்திரங்களே கதையை விமர்சிப்பது போல் வித்தியாசமான முறையில் விமர்சித்து என்னோடு பரிசு பெற்றுள்ள திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களுக்கு அன்பான பாராட்டுகள்.

  இங்கு எங்களை வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் மகிழ்வான நன்றிகள்.

  ReplyDelete
 15. முத்தான விமர்சனம் மூலம் முதல் பரிசினை வென்ற திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அம்மா அவர்களுக்கும், சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. முதல் பரிசினை வென்றுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி. அதை தோழி கீதாவுடன் பகிர்ந்து கொள்வதில் என் மகிழ்ச்சி பன்மடங்காகிறது .அவருக்கு என் இனிய வாழ்த்துக்கள். இந்த வாய்ப்பினை நல்கிய கோபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. கரும்பு சுவைக்கக் கூலியும் கொடுக்கும் அவர் பெருந்தண்மைக்கு என் பணிவான வணக்கம்.

  நடுவர் அவர்களின் பாராட்டுரை என் போன்றவர்களுக்கு பெரிய ஊக்குவிப்பு. என் விமரிசனத்திற்குப் பரிசு கொடுத்ததற்கும், அவருடைய மனம் திறந்த பாராட்டுரைக்கும் நன்றிகள் பல.

  எங்களை வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 17. தங்களது VGK 25 ஆவது சிறுகதை விமர்சனப் போட்டியில் முதற் பரிசினை வென்ற சகோதரிகள் ராஜலஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் – இருவருக்கும் எனது பாராட்டுக்கள்!

  நீங்கள் சொல்வது போல இந்த இருவரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் மட்டுமல்லாது வலைப்பக்கமும் நன்றாகவே ஜொலிக்கிறார்கள்!


  ReplyDelete
 18. http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/07/blog-post_20.html
  திருமதி இராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.

  இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக அதுவும் தனது வெற்றிகரமான 100வது பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 19. சிறப்பான விமர்சனங்கள். இருவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. திருமதிகள் ராஜலஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 21. முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ள சகோதரியர் இராஜலக்‌ஷ்மி பரமசிவம் மற்றும் கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் -

  ReplyDelete
 22. முதல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ள திருமதி இராஜலட்சுமி பரமசிவம் அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. பரிசு வென்ற திருமதி ராஜலட்சுமிபரமசிவம் திருமதி கீதாமதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. திருமதி ராஜலட்சுமிபரமசிவம் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. அருமையான முறையில் விமர்சனம் எழுதி முதல் பரிசினைப் பெற்றுள்ள திருமதி இராஜலக்‌ஷ்மி பரமசிவம் மற்றும் திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்

  ReplyDelete
 26. அன்புடையீர்,

  அனைவருக்கும் வணக்கம் + இனிய ‘பிள்ளையார் சதுர்த்தி’ நல்வாழ்த்துகள்.

  ‘அரட்டை’ வலைப்பதிவர் திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் நேற்று ‘பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி?’ என ஓர் சமையல் குறிப்புக்கான மிகச்சிறிய மூன்று நிமிடம் + 45 வினாடிகளுக்கான வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதனைக் கண்டு மகிழ இதோ ஓர் இணைப்பு:

  https://www.youtube.com/watch?v=t6va0K3KDtc&feature=youtu.be

  மேற்படி வீடியோவில் 0:55 முதல் 1:25 வரை சுமார் 30 வினாடிகள் மட்டும், திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் பற்றியும், அதன் அடிவாரத்தில் வசித்துவரும் அடியேனைப்பற்றியும் ஏதேதோ புகழ்ந்து சொல்லி மகிழ்ந்துள்ளார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 2014-ம் ஆண்டு, என் வலைத்தளத்தினில், 40 வாரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப் போட்டி’களில் கலந்து கொண்டு ஒன்பது முறைகள் (4 முதலிடம், 4 இரண்டாம் இடம், ஒரு மூன்றாம் இடம்) வெவ்வேறு பரிசுகளையும், கீதா விருதும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டிகளில் முதன் முறையாக, முதல் பரிசினைத் தட்டிச்சென்ற பெண் பதிவர் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு. மேலும் விபரங்களுக்கு சில இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.com/2014/02/vgk-02-01-03.html

  http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/03/vgk-05-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/05/vgk-15-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/05/vgk-17-03-03-third-prize-winner.html

  http://gopu1949.blogspot.com/2014/06/vgk-21-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/07/vgk-25-01-03-first-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/09/vgk-34-02-03-second-prize-winners.html

  http://gopu1949.blogspot.com/2014/11/part-3-of-4.html

  http://gopu1949.blogspot.com/2014/10/4.html

  http://gopu1949.blogspot.com/2014/11/vgk-31-to-vgk-40.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  ReplyDelete