About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, November 3, 2014

”சேஷ் விருது” - புதிய சில விருதுகள் [பரிசுகள்] அறிமுகம் ! [ Part-2 of 4 ]

 

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

தங்கள் அனைவரின் ஒத்துழைப்பினாலும், உற்சாகமான ஈடுபாடுகளினாலும், நமது சிறுகதை விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. 

இந்த மாபெரும் விழா வெகு அமர்க்களமாக நிறைவு பெற்றதில் எனக்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

இந்த மகிழ்ச்சியான என் மனநிலையில், புதிதாக மேலும் சில விருதுகளை [பரிசுகளை] அறிமுகப்படுத்தி இந்த மாபெரும் விழாவினை நிறைவுக்குக்கொண்டுவர விரும்புகிறேன்.

புதிதாகவும் கூடுதலாகவும் 

இப்போது அறிமுகப்படுத்தும் நான்கு விதமான

விருதுகளின் மொத்தப் பரிசுத்தொகை :

ரூபாய்:


 






முதல் அறிவிப்பான 
ஜீவீ  + வீஜீ விருது 
நேற்று வெளியிடப்பட்டுள்ளது
அதற்கான இணைப்பு: 

http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html




இரண்டாம் அறிவிப்பு


  ’சேஷ் ’ விருது  

 


VGK-25 முதல் VGK-40 வரை 
தொடர்ச்சியாக ஏதோவொரு 
பரிசுக்குத்தேர்வாகி வந்துள்ள
திரு E.S. சேஷாத்ரி அவர்களின் 
விமர்சன சாதனையை 
கெளரவிக்கும் விதமாக 
இந்த விருதுக்கு
‘சேஷ் விருது’
என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

-oOo-




VGK-01 முதல் VGK-40 
வரையிலான 40 கதைகளில், 
ஏதாவது 30 க்கு மேல் 39 
கதைகள் வரை விமர்சனம் எழுதி அனுப்பியுள்ளவர்களுக்கு மட்டும்
இந்த விருது வழங்கப்படுகிறது. 


ஒவ்வொருவருக்கும் 
பரிசுத்தொகை 
ரூ. 75 [ரூபாய் எழுபத்து ஐந்து ]


இந்த ’சேஷ்’ விருதினைப் பெற 
தகுதியுடையோர் பட்டியல் இதோ:

 

[ 1 ]

  

'காரஞ்சன் (சேஷ்)’ 
 திரு. 

 E.S. சேஷாத்ரி 
அவர்கள்.

 39 out of 40 

 

[ 2 ] 
    

’கீதமஞ்சரி’
திருமதி.
கீதா மதிவாணன்
அவர்கள்

 38 out of 40 


 

[ 3 ] 

    
   

திருநிறைச்செல்வன்:
அரவிந்த் குமார். J
அவர்கள்

 37 out of 40 


 





மற்ற இரண்டு  
’புதிய கூடுதல் விருதுகள் ’
பற்றிய அறிவிப்புகள் மேலும் தொடர உள்ளன.

அதில் ஒன்று இன்று மாலையே வெளியிடப்படும்.
நாளை 04.11.2014 இரவு வரை 
இந்த வலைத்தளத்தினில்
அது முன்னிலையில் காட்சியளிக்கும்.

காணத்தவறாதீர்கள் !



என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

25 comments:

  1. பதிவர்களின் பெயரிலேயே விருது
    பாராட்டிற்குரிய செயல் ஐயா

    ReplyDelete
  2. ஷேஷ் விருது
    கேஷ் ஆகப்பெற்றவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!



    ReplyDelete
  3. நேற்று நம் பதிவினில் ’ஜீவீ + வீஜீ விருது’ பெற்ற சாதனையாளர்களில் ஒருவரான நம் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு. ரமணி சார் அவர்கள், தான் பெற்ற இந்த விருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டதோடு, அதனை இன்று அவர்களின் வலைத்தளத்தினில் பெருமையுடன் தனிப்பதிவாகவே வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இணைப்பு: http://yaathoramani.blogspot.in/2014/11/part-1-of-4_2.html

    தலைப்பு: ’பதிவுலகப் பிதாமகர் தந்த உற்சாக டானிக்’

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    இதனை இன்று தனிப்பதிவாக அவர்களின் வலைத்தளத்தினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள பெருந்தன்மைக்கும், மிகச்சிறியதோர் விருதாகினும் அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு கெளரவித்த அவர்களின் அன்புள்ளத்திற்கும், திரு. யாதோ ரமணி சார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
  4. பரிசுகள் அளிக்கும் உங்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிறுகதை விமர்சனப்போட்டிகள், திட்டமிட்டபடி வெகு அழகாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. //

    சாதனையாளர் தான் நீங்கள் ! வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. சேஷ் விருது என்ற பேரில் கேஷ் !பேஷ் பேஷ்!!!ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு இன்னும் என்னவெல்லாம் வருதுன்னு பாக்கலாம்!!! வென்றவர்களுக்கு என் வாழ்த்துகள்! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

    ReplyDelete
  7. சேஷ் விருது என்ற பேரில் கேஷ் !பேஷ் பேஷ்!!!ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லா இருக்கு இன்னும் என்னவெல்லாம் வருதுன்னு பாக்கலாம்!!! வென்றவர்களுக்கு என் வாழ்த்துகள்! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

    ReplyDelete
  8. பார்த்துப் பார்த்து விருதுகளைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தங்கள் பெருந்தன்மைக்கு மறுபடியும் என் வந்தனம் கோபு சார்.

    சேஷ் விருது என்ற புதிய விருதினை உருவாக்கி எனக்கும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தங்களுக்கு. தன் பெயராலேயே விருதினைப் பெற்ற திரு. சேஷாத்ரி அவர்களுக்கும், சளைக்காமல் 37 போட்டிகளில் பங்கேற்ற திரு. அரவிந்த்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

    சொன்ன சொல்லையே காப்பாற்ற முடியாத பலருக்கு மத்தியில் சொல்லாததையும் செய்துகாட்டி அசத்தும் தங்கள் செயலாக்கத் திறன் வியப்பூட்டும் ஒரு விஷயம். தங்களுக்கு என் அன்பான பாராட்டுகளும் நன்றியும் சார்.

    ReplyDelete
  9. சேஷ் விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். புதுமையான விருதுகளை அறிவிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். கடுமையான உழைப்பு.

    ReplyDelete
  10. பேஷ்! பதிவர் பெயரில் விருது... அருமை!

    ReplyDelete
  11. 39 வாரங்கள் பங்கேற்று ஏதோ ஒருவாரம் விட்டுவிட்டோமே என சற்று வருத்தமடைந்தேன்! என் பெயரில் ஒரு விருதை அறிவித்த தங்களின் பெருந்தன்மை மற்றும் கருணை உள்ளத்திற்குத் தலை வணங்குகிறேன். என்னுடன் விருதுபெறும் திருமதி கீதா மதிவாணன் மற்றும் திருநிறைச்செல்வன் அரவிந்த்குமார் ஆகிஒருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! விடாத மழை வெளியில் என்றால் பரிசுமழை நம் வைகோ சார் வலைத்தளத்தில் ! தொடரட்டும் தங்களின் சாதனைகள் வைகோ சார்! எல்லாம் வல்ல இறையருள் தங்களுக்குத் துணையிருக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  12. 39 வாரங்கள் பங்கேற்று ஏதோ ஒருவாரம் விட்டுவிட்டோமே என சற்று வருத்தமடைந்தேன்! என் பெயரில் ஒரு விருதை அறிவித்த தங்களின் பெருந்தன்மை மற்றும் கருணை உள்ளத்திற்குத் தலை வணங்குகிறேன். என்னுடன் விருதுபெறும் திருமதி கீதா மதிவாணன் மற்றும் திருநிறைச்செல்வன் அரவிந்த்குமார் ஆகிஒருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! விடாத மழை வெளியில் என்றால் பரிசுமழை நம் வைகோ சார் வலைத்தளத்தில் ! தொடரட்டும் தங்களின் சாதனைகள் வைகோ சார்! எல்லாம் வல்ல இறையருள் தங்களுக்குத் துணையிருக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
  13. புதுமை!
    பெருந்தன்மை!
    பதிவர் பெயரிலேயே விருது!
    பரிசளித்து மகிழ்வடையும் மனம்!
    வாழ்க! வளமுடன்!

    விருது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நண்பர் சேஷாத்ரியின் பெயரில் ஒரு விருது - அவருக்கே அது கிடைத்ததும் மகிழ்ச்சி. விருது பெற்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வெற்றி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு அன்புடன் வருகை தந்து சிறப்பித்துள்ளோர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அடுத்தடுத்த, இந்த வெற்றிவிழா நிகழ்ச்சிகள் வெளியீட்டு வேலைகளிலும், அதையடுத்து உடனடியாக வரவிருக்கும் என் வெளிநாட்டுச்சுற்றுலா வேலைகளிலுமான பல்வேறு ஆயத்தப்பணிகளில் மூழ்க வேண்டியிருப்பதால், அன்புடன் வருகை தந்துள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளித்து கெளரவிக்க மனதில் நான் நினைத்தும்கூட அது PRACTICALLY NOT POSSIBLE ஆகவே உள்ளது.

    இது உங்கள் வீட்டு விழா என்பதையும், நம் வீட்டு விழா என்பதையும் யாரும் தயவுசெய்து மறக்காதீங்கோ. நமக்குள் FORMALITIES எல்லாம் எதற்கு?

    தினமும் வருகை தந்து, மனம் திறந்துபேசி, கருத்துக்கள் அளித்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் தங்கள் கோபு [VGK]

    ReplyDelete
  16. சேஷ் விருது’ அருமை.
    எல்லாவற்றிலும் புதுமை. விருது அளிப்பதிலும் புதுமை.

    திரு.சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    சேஷ் விருது’ பெறும் கீதமஞ்சரி, அரவிந்குமார் இருவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. பரிசு மழை பொழிகிறது.

    ReplyDelete
  18. விருது பெறும திருமதி கீத மஞ்சரி திரு அரவிந்தகுமாருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  19. எப்படி எல்லாம் யோசித்து பரிசு வழங்கறீங்க.

    சான்சே இல்லை. எங்கும் காணாத, கேட்டிராத விருதுகள்.

    ReplyDelete
  20. விருது பெறும் திருமதி கீதமஞ்சரி திரு அரவிந்தகமாரவங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. mru November 3, 2015 at 5:09 PM

      வாங்கோ அவசரக்குடுக்கை முருகு, வணக்கம்மா.

      //விருது பெறும் திருமதி கீதமஞ்சரி திரு அரவிந்தகமாரவங்களுக்கு வாழ்த்துகள்.//

      இந்த விருது பெற்றுள்ளவர்கள் மொத்தம் மூவர். அதில் முக்கியமான ஒருவர் பெயரையே விட்டுவிட்டு இருவரை மட்டுமே வாழ்த்தியுள்ளீர்களே ! :(

      தலையில் ஒரு குட்டு போட்டுக்கோங்கோ, முருகு.

      அன்புடன் குருஜி

      Delete
  21. புதுசு புதுசா யோசித்து விருது கொடுத்து வருகிறீர்கள். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. 39 வாரங்கள் பங்கேற்று ஏதோ ஒருவாரம் விட்டுவிட்டோமே என சற்று வருத்தமடைந்தேன்! என் பெயரில் ஒரு விருதை அறிவித்த தங்களின் பெருந்தன்மை மற்றும் கருணை உள்ளத்திற்குத் தலை வணங்குகிறேன். என்னுடன் விருதுபெறும் திருமதி கீதா மதிவாணன் மற்றும் திருநிறைச்செல்வன் அரவிந்த்குமார் ஆகிஒருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்! விடாத மழை வெளியில் என்றால் பரிசுமழை நம் வைகோ சார் வலைத்தளத்தில் ! தொடரட்டும் தங்களின் சாதனைகள் வைகோ சார்! எல்லாம் வல்ல இறையருள் தங்களுக்குத் துணையிருக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. December 20, 2015 at 2:30 PM

      //39 வாரங்கள் பங்கேற்று ஏதோ ஒருவாரம் விட்டுவிட்டோமே என சற்று வருத்தமடைந்தேன்! என் பெயரில் ஒரு விருதை அறிவித்த தங்களின் பெருந்தன்மை மற்றும் கருணை உள்ளத்திற்குத் தலை வணங்குகிறேன். என் மனமார்ந்த பாராட்டுகள்! விடாத மழை வெளியில் என்றால் பரிசுமழை நம் வைகோ சார் வலைத்தளத்தில் ! தொடரட்டும் தங்களின் சாதனைகள் வைகோ சார்! எல்லாம் வல்ல இறையருள் தங்களுக்குத் துணையிருக்க வேண்டுகிறேன்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

      Delete
  23. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    ReplyDelete