என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி 1

அன்புடையீர்,

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.




‘சந்தித்த வேளையில் .....’ என்ற தலைப்பினில் நான் இதுவரை நேரில் சந்தித்த பதிவர்களைப்பற்றி பல்வேறு படங்களுடன் ஆறு பதிவுகள் இந்த மாதமே 07.02.2015 முதல் 18.02.2015 வரை வெளியிட்டிருந்தேன். 

அதில் என்னால் இதுவரை நேரில் சந்திக்க நேர்ந்த பதிவர்கள் + ஒருசில பிரபல பத்திரிகை எழுத்தாளர்கள் + தனித்திறமை வாய்ந்தோர் என 38 நபர்களை அடையாளம் காட்டியிருந்தேன். அதற்கான இணைப்புகள்:


பகுதி-1 க்கான இணைப்பு:

பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:

பகுதி-4 க்கான இணைப்பு:

பகுதி-5 க்கான இணைப்பு:

பகுதி-6 க்கான இணைப்பு:


அந்தத்தொடரின் இறுதிப்பகுதியில் நான் கீழ்க்கண்ட வாசகத்தினை எழுதியிருந்தேன்:
ooooooOoooooo

இந்தத்தொடர் இப்போதைக்கு 

இத்துடன் நிறைவடைகிறது.



இதுவரை சந்திக்க நேர்ந்துள்ள 


பதிவுலக + எழுத்துலக 


சொந்தங்களான


[1] ....................  [2] .................... 


[3] .................... [38] ...................


ஆகிய அனைவருக்கும் 


மீண்டும் என் அன்பான நன்றிகள்.


 திருச்சியில் மீண்டும் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ
எப்படியும் ஒரு 10 பதிவர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்ளப்போகும் 

’குட்டியூண்டு பதிவர் மாநாடு’ நடைபெறப்போவதற்கான
அறிகுறிகள் இப்போதே தோன்றிவிட்டன. 

தேதி, நேரம், இடம் மட்டும்
இன்னும் முடிவாகாமல் உள்ளது.

ம்ம்ம்ம் ... பார்ப்போம் ! :)




சொந்தம் .....

எப்போதும் .....

தொடர்கதைதான் .....

முடிவே இல்லாதது !!!!!






ooooooOoooooo



நான் சொன்னதுபோலவே 


‘குட்டியூண்டு பதிவர் மாநாடு’ 


திருச்சி ஸ்ரீரங்கத்தில் நேற்று 


22.02.2015 ஞாயிறு மாலை 


மிகச்சரியாக 4.30 மணி 


முதல் 7.30 மணிவரை  


இனிதே வெற்றிகரமாக நடைபெற்றது.





இந்த இனிய சந்திப்பினில் 


கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் 


யார் யார் ?


அங்கு என்னதான் நடந்தது ?


அதைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.





தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்





26 கருத்துகள்:

  1. சந்திப்பு சிறப்புற நடைபெற்றது அறிந்து மகிழ்ச்சி.....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உடனுக்குடன் செயல்படும், அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! உங்களுடைய அடுத்த பதிவினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கீதா மாமி எழுதியதை படித்துவிட்டாலும், உங்களோட விவரமான பதிவுக்கும் படங்களுக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. உங்களின் ஈடுபாட்டுக்கு என் பணிவான வணக்கங்கள் சார். நான் இப்போது தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். கீதா மாமி நேற்றே வெளியிட்டு விட்டார். நீங்கள் அழகான தொடருக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளீர்கள்.....

    அருமையான மாலைப் பொழுதாக இருந்தது.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பாணியில் நீங்க எழுதுங்க. காத்திருக்கேன். :))

    பதிலளிநீக்கு
  6. அருமையான சந்திப்பு.. அழகானது அந்த மாலை !

    பதிலளிநீக்கு
  7. காத்திருக்கிறேன் ஐயா! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  8. உங்களது அடுத்தப் பதிவைப் படித்து விட்டு இங்கு வந்ததால் எனக்கு சந்திப்புப் பற்றிய செய்திகள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  9. "சந்தித்த வேலை.." தலைப்பைப் படிக்கும்போதே 'முத்தக்களோ கண்கள்' பாடல் மனதில் ஒலிக்கத் தொடங்கி விடும். 'நெஞ்சிருக்கும் வரை' மறக்காத நினைவுகளாய்ப் போற்றத்தக்க நினைவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை! இப்போது 'சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்' பாடல் மனதில் ஒலிக்க வைத்திருப்பது எங்கள் 'பிராப்தம்'தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'சந்தித்த வேளை' வாக்கியத்திலும், 'முத்துக்களோ கண்கள்' வாக்கியத்திலும் நேர்ந்திருக்கும் எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  10. அருமையான சொந்தங்கள் சந்திப்பு.

    பதிலளிநீக்கு
  11. இந்தத் தொடர்கதை எப்போதும் தொடர வாழ்த்துக்கள்! கழிந்த சில தினங்களாக வலைப்பக்கம் வர முடியவில்லை சாரி சார்

    பதிலளிநீக்கு

  12. சந்திப்புகள் மகிழ்வூட்டும்
    மகிழ்வூட்டும் பதிவர்கள் சந்திக்கையில்
    சந்திப்புகள் பயன்தருமே!

    பதிலளிநீக்கு
  13. சந்திச்சாச்சா (கொஞ்சம் புகையுடன்)

    அடடா! நானும் திருச்சி வாசியாக இருந்திருக்கலாமே. ம். நடக்க முடியாததைப் பற்றி நினைப்பானேன்.

    இப்படி கண்ணை மூடி திறப்பதற்குள் பதிவு போட்டு விடுகிறீர்களே. ஜீ பூம்பா வேலையை எனக்கும் சொல்லிக் கொடுங்களேன்.

    சரி அடுத்த பகுதிக்கு போறேன்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  14. ஆரம்பமே அமர்க்களம். அடுத்தடுத்தப் பகுதிகளுக்குப் போய்ப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. அடுத்து என்ன இல்லைனா யாருன்னு காத்திருக்கேன்

    பதிலளிநீக்கு


  17. இனிதே வெற்றிகரமாக நடைபெற்ற
    அமர்க்களமான பதிவர் சந்திப்பின் முன்னோட்டத்துக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 6:28 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இனிதே வெற்றிகரமாக நடைபெற்ற அமர்க்களமான பதிவர் சந்திப்பின் முன்னோட்டத்துக்கு வாழ்த்துகள்.//

      இந்த முன்னோட்டப்பதிவுக்கு அமர்க்களமான தங்களின் வருகைக்கும் வெற்றிகரமான வாழ்த்துகளைப் பின்னூட்டமாகக் கொடுத்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      நீக்கு
  18. திருச்சி பதிவர் சந்திப்பு பதிவுக்கு வெயிட்டிங்கு ஏன் இப்பவே போடலே. ரொம்ப பிஸி ஆகிட்டீகளோ.

    பதிலளிநீக்கு
  19. அடுத்த பதிவர் சந்திபுபுக்கும் திட்டம் போட்டாச்சா. நல்லது. யாரு அந்த அதிர்ஷ்டசாலிகள்.

    பதிலளிநீக்கு
  20. அந்த லிஸ்ட்ல நான் எங்கே இருக்கேன்னு தெரியலை..!! அயாம் வெய்டிங்...!!!

    பதிலளிநீக்கு