என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 14 பிப்ரவரி, 2015

சந்தித்த வேளையில் ....... பகுதி 4 of 6



தொடரும் பதிவர் சந்திப்பு   

பகுதி-1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html
பகுதி-2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html
பகுதி-3 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html



03.07.2013

ROOM NO. 317, HOTEL PL.A. KRISHNA INN, 
[ NEAR TIRUCHI JUNCTION BUS STAND ]


 
 
 
 

திரு. GMB ஐயா அவர்கள்  
தன் மனைவியுடன் 
திருச்சிக்கு வருகை தந்திருந்தார்கள். 

என்னை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து 
அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு 
என்னை அழைத்திருந்தார்கள்.

 


இவர்களை சந்திக்க அன்று என்னுடன்கூட வந்தவர் 
திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் மட்டுமே.

சந்திப்பு பற்றிய மற்ற விபரங்களுக்கு:

http://gopu1949.blogspot.in/2013/07/20.html












03.10.2013

பவித்ராலயா


 

சேட்டைக்காரன் 
[ திரு. R. வேணுகோபாலன் அவர்கள் ]

அன்புடன் வருகை தந்திருந்தார்.



இவர் எனக்கு அன்புடன் அளித்த நூல்:
‘மொட்டைத்தலையும் முழங்காலும்’
அதன் முதல் பக்கத்தில் அவர் தன் கையால் எழுதி
கையொப்பமிட்டுள்ள வாசகம்:

”வை.கோ. என்னும் 
பாற்கடலுக்குப்
பரிசாக இந்த 
பாக்கெட் பால்”


- சே.கா 03/10/13 திருச்சி







மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த
இவரின் அபூர்வ வருகையைப் பற்றி
என் தொலைபேசி அழைப்பின் மூலம் அறிந்து,
இவரை சந்திக்கும் ஆவலில், 
 என் இல்லத்திற்கு ஓடோடி வந்து,
 சந்திப்பினை மேலும் இனிமையாக்கியவர்கள்

திரு. ரிஷபன் அவர்கள் +
ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்கள்.

இந்த இனிய சந்திப்பு பற்றிய 
மேலும் அதிக சுவாரஸ்யங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2013/10/60.html










06.10.2013


1) HOTEL FEMINA, TIRUCHI JUNCTION 

2) பவித்ராலயா 

3) ஸ்ரீரங்கம்



http://cheenakay.blogspot.in/2013/10/6-7-8-2013.html

அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள்

********************************

அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள், எனது வலைத்தளத்தினில் சமீபத்தில் நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ சிலவற்றில் மட்டும் கலந்துகொண்டுள்ளார்கள். 

அவ்வாறு கலந்துகொண்ட அவர்களின் 
ஓர் விமர்சனம் [VGK-29] பரிசுக்குத் தேர்வாகியுள்ளது 
என்பது குறிப்பிடத்தக்கது. 


’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பற்றிய ஒட்டுமொத்தமான 
பல்வேறு அலசல்களுக்கும் புள்ளிவிபரங்களுக்கும்  


 

 

என்னுடன் வருகை தந்த

திரு. தமிழ் இளங்கோ அவர்கள்

ஹோட்டலில் மட்டும்  இவர்களைச் 

சந்தித்துவிட்டு பிறகு சென்று விட்டார்.

 
 மேலேயுள்ளவை ^  
At Hotel Femina, Tiruchi Junction.

***************

கீழேயுள்ளவை
பவித்ராலயா

 
 அன்பின் திரு. சீனா ஐயா தன் துணைவியாருடன்
எங்கள் இல்லத்துக்கும் 

அன்புடன் வருகை தந்திருந்தார்

ஆத்தங்குடி 

திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார்


என்னும் 



அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் 


மற்றும் அவரின் துணைவியாரும் பதிவருமான 


திருமதி: மெய்யம்மை ஆச்சி அவர்கள்


ஆகிய இருவரும் 


எங்கள் இல்லத்துக்கு 


ஸ்வீட்டாக ஸ்வீட்டுடன்

வருகைதந்தது

மிகவும் மகிழ்ச்சியளித்தது.



*************** 




என் வீட்டிலிருந்து 

நானும் அவர்களுமாக காரில் புறப்பட்டு 




ஸ்ரீரங்கம் 

சென்றோம்  


முதலில் திருமதி. 

கீதா சாம்பசிவம் 


அம்மா அவர்களை, 

அன்றைய அம்மாத் தொகுதியில்,


அவர்களின் அம்மாமண்டபம்


வீட்டினில் சந்தித்தோம்.




அப்போது நவராத்திரி நாட்களாகையால் 
யார் வீட்டு கொலுவுக்கோ சென்று 
சுண்டல் சாப்பிட்டுவிட்டு, 
ஆனந்தமாக ஆற அமர 
புத்தாடை + புதுநகைகளுடன் 
புன்னகை புரிந்த வண்ணம் 
அமர்ந்திருந்தார்கள்.


திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுடன் 

எனக்கும் இதுவே முதல் சந்திப்பு


என்பதனால் அவர்கள் அனுமதியுடன் அவர்களை 


நான் ஓர் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.




CLOSE-UP இல் 


எடுத்துவிட்டேனோ என்னவோ !



நானே என் கேமராவில் எடுத்த புகைப்படம் 

 (மேலே காட்டியுள்ளது) 


சற்றே பெரியதாக 


அமைந்துவிட்டது !! :)



மற்றபடி என்னைப்போலவே 

அவர்களும் 

மிகவும் SLIM தானாக்கும் ! :)





oooooooooooooooooooooooooooooooooooooooo

திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களின் 
சமீபத்திய சாதனைகள்: 
எனது வலைத்தளத்தினில் சமீபத்தில் நடைபெற்ற 
‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ அனைத்திலும் 
(40 போட்டிகளிலும்) 
கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். 

அவ்வாறு கலந்துகொண்ட அவர்களின் விமர்சனங்கள் 
15 முறை வெவ்வேறு பரிசுகளுக்குத் 
தேர்வாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


’நடுவர் யார் ... யூகியுங்கள்’ என்ற 
போட்டிக்குள் போட்டியிலும் 
மிகச் சரியான விடை எழுதி 
பரிசினைப் பகிர்ந்து கொண்டார்கள். 


இவர்களின் சாதனையை மெச்சி 
‘ஜீவீ + வீஜீ விருது’ 
இவர்களுக்கு அளிக்கப்பட்டது.


இவர்களின் மற்றொரு சாதனைக்காக இவர்களுக்கு 
’கீதா விருது’ 
அளித்து கெளரவிக்கப்பட்டது.


VGK-31 to VGK-33 
தொடர் வெற்றிக்காக இவர்களுக்கு
ஹாட்-ட்ரிக் 
பரிசும் அளிக்கப்பட்டது.


’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பற்றிய ஒட்டுமொத்தமான 
பல்வேறு அலசல்களுக்கும் புள்ளிவிபரங்களுக்கும் : 


oooooooooooooooooooooooooooooooooooooooo

அதன்பிறகு 

அங்கிருந்து புறப்பட்டு .....


        


திருமதி. 

ஆதி வெங்கட் அவர்கள்  



செல்வி: ரோஷ்ணி அவர்கள் 


மற்றும் 


திரு. ரிஷபன் அவர்கள்


ஆகியோரை 


ஸ்ரீரங்கநாயகி தாயார் சன்னதி அருகேயுள்ள

செல்வி: ரோஷ்ணி அவர்களின்
 இல்லத்தில் சந்தித்தோம்.


 
                                                                                    

2013 and 2015
அன்றும் இன்றும் 
குழந்தை ரோஷ்ணி !

***************

அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் 
திருச்சி விஜயம் பற்றிய
மேலும் விபரங்களுக்கு இதோ சில இணைப்புகள்:







          
தொடரும்


இதன் தொடர்ச்சி பகுதி-5
16.02.2015 திங்கட்கிழமை 
வெளியிடப்படும்

32 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா..

    தங்களின் பணிக்கு இரு கரம் கூப்பி வணங்குகிறேன்.. முகம் அறியாத பதிவர்களை தங்களின் பதிவு வழி அறிந்தேன் ஐயா. அருமையான நினைவுகள்.. பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ஆஹா.. பிரமாதம்... எனக்கென்ன வியப்பு என்றால் எப்படி இந்த அளவுக்கு நேர்த்தியாகவும் பொறுமையாகவும் எல்லாத் தகவல்களையும் புகைப்படங்களையும் தொகுத்து இடையிடையே லிங்க்குகள் தொடுத்து ஆரம்ப சுவாரசியத்தோடு எல்லாப் பதிவுகளையும் தரமுடிகிறது என்பதுதான். இவ்வளவுக்குமான தங்கள் உழைப்போடு பதிவுலக நட்புகள் மீதான அன்பும் வெளிப்படுகிறது. இனிய பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  3. ஜி எம் பி தம்பதிகளை நானும் சந்தித்திருக்கிறேன்.

    சேட்டைக்காரன் வேணுஜி ஆளையே காணோமே என்று இப்போதுதான் பால கணேஷிடம் கேட்டேன். பதில் இதுவரை காணோம்!

    சந்திப்புகள் இனிமையானவை.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு... பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. என்னோட படத்தைப் பெரிசாகப் போட்டு அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். நன்றி. ஜிஎம்பி சாரையும், தமிழ் இளங்கோ அவர்களையும் தவிர மற்றவர்கள் அறிந்தவர்களே! :)))))

    பதிலளிநீக்கு
  6. சந்திப்புகள் ஒவ்வொன்றையும் அழகுற எழுதியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. சந்திப்புகள் பற்றிய விபரங்களைப் படங்களுடன் வெளியிட்டுள்ளமை அருமை. ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள் தாம். கீதா சாம்பசிவம் அவர்களது பரிசு வென்ற விமர்சனங்களைப் படித்திருக்கிறேன். தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  8. சந்திப்பு பற்றிய விவரங்களை அழகிய படத்துடன் அருமையாய் பகிர்கிறீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. சந்திப்புகள் அருமை. அதன் விவரங்கள் அதைவிட அருமை. போட்டோக்கள் அருமையோ அருமை.

    பதிலளிநீக்கு
  10. சிறப்புமிகு வலைத்தள பதிவர்களை தங்களுடன் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

    நட்புகளை நினைவு கூர்ந்து மலரும் நினைவுகளைத் தொகுத்து வழங்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!..

    பதிலளிநீக்கு
  11. உங்களுடனான தொடர்புதான் எனக்கு அன்பின் சீனா அவர்களையும், அய்யா G.M.B அவர்களையும் சந்திக்க வாய்ப்பு தந்தது. மீண்டும் மீண்டும் இனிய நினைவுகள். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. சந்திப்புகளின் விவரங்கள் அருமை. பதிவுகளின் இணைப்புகளையும் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    சீனா ஐயா தம்பதிகளை அழைத்து வந்த போது தான், எங்கள் இல்லத்துக்கு தங்களின் முதல் வருகை சார். மாமியை அழைத்துக் கொண்டு ஒருநாள் நிதானமாக வாங்க சார்.

    பதிலளிநீக்கு
  13. இன்றுதான் ஆறு நாட்களுக்குப் பின் வலைத்தளத்துக்கு வருகிறேன். என்னையும் சந்தித்த வேளையை நினைவு கூர்ந்துபதிவிட்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு பதிவரையும் சந்தித்த நினைவுகள்.. மிக அழகு..

    பதிலளிநீக்கு
  15. பதிவர்கள் சந்திப்பு பற்றிய சிறந்த தொகுப்பு...

    பதிலளிநீக்கு
  16. சந்தித்தவர்கள் குறித்து...
    சிந்தித்து...
    சிறப்பாய் எங்களுக்கு
    சீர் பரப்பினீர் ஐயா...

    கண்ட பொழுது
    கொண்டாடினோம் நாங்களும் மனதில்
    அவ்வுற்சாகம் பரவியதே இங்கும்...!!!

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  17. பழக இனிமையானவர்களின் சந்திப்பு.
    ஆதிவெங்கட், சீனா சார், பாலசிப்பிரமணியம் இவர்களை சந்தித்து இருக்கிறேன். அருமையான நட்பை போற்றுபவர்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. ’ரூம் போட்டு யோசிப்பரோ’ கோபு அண்ணா.

    அந்த மான் குட்டிகளைப் போல துள்ளிக்கொண்டு உங்க வீட்டுக்கு மீண்டும் ஒருமுறை வரணும். (வீட்டய்யாவும் ஒத்துக் கிட்டார். கரும்பு தின்னக் கூலியா அவருக்கு. ஆனா பேச ஆரம்பிச்சார்ன்னா அவ்வளவு தான் நிறுத்தவே மாட்டார்).

    உங்கள் நட்பு வட்டம் என்றும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  19. மிக இனிமையான சந்திப்புகள். ஜி எம் பி , சேட்டைக்காரன், சீனா சார், கீதா மேம் , ஆதி ரோஷ்ணி , ரிஷபன் என்று எல்லாருமே நான் வாசித்த எனக்குப் பிடித்த பதிவர்கள்.

    அழகான வார்த்தைகளில் பகிர்ந்துள்ளீர்கள். :) அடுத்த முறை திருச்சி வரும்போது கட்டாயம் நானும் பார்ப்பேன் :)

    பதிலளிநீக்கு
  20. இனிமையான சந்திப்பு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மீண்டும் மீண்டும் பதிவர் சந்திப்பா காதுல புகை:)))))))

    பதிலளிநீக்கு
  22. சுவாரஸ்யமான பதிவர்களின் சந்திப்புகள் இனிமை அளிக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:36 AM

      //சுவாரஸ்யமான பதிவர்களின் சந்திப்புகள் இனிமை அளிக்கின்றன...//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகையும் இனிமை அளிக்கும் கருத்துக்களும்கூட சுவாரஸ்யமாகவேதான் உள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
      .

      நீக்கு
  23. ஹாஹா நீங்களும் கீதாம்மாவங்களும் ரொம்பவே ஸ்லிம்முதானுங்கோ. அந்த போட்டோ படம் பாத்ததும் நானு அதுக்கு மேல போட்ட மானு படம் போல துள்ளி வெளியே ஓடிபுட்டேனுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. mru November 6, 2015 at 10:34 AM

      //ஹாஹா நீங்களும் கீதாம்மாவங்களும் ரொம்பவே ஸ்லிம்முதானுங்கோ.//

      நானு, நம்ம முருகாச்சேன்னு ஈஸியா இதை எடுத்துக்கொள்வேன். அவங்களுக்குத் தெரிஞ்சா போச்சு அங்கு புறப்பட்டு வந்து உங்களைப் பிச்சுப்பிடுவாங்க ... பிச்சு :)

      //அந்த போட்டோ படம் பாத்ததும் நானு அதுக்கு மேல போட்ட மானு படம் போல துள்ளி வெளியே ஓடிபுட்டேனுங்க.//

      ரசித்தேன். எனக்கு உடனே சிரிப்பாணி பொத்துக்கிச்சு :)

      நீக்கு
  24. பதிவர் சந்திப்புகளை அழகான படங்களுடனும் சுவாரசியமான வர்ணனைகளுடனும் சந்தோஷமாக பகிர்ந்து கொள்வது அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
  25. படங்களுடன் பதிவர் சந்திப்பை விளக்கிய பதிவு அருமை!

    பதிலளிநீக்கு
  26. இது என்ன பழைய சந்திப்புகளையும் புதிய சந்திப்புகளையும் கலந்துகட்டி எழுதியிருக்கீங்க. நீங்க சீனா சாரை 2013ல் சந்தித்தீங்களா இல்லை 2014,15லா?

    பதிலளிநீக்கு
  27. 16.10.1950 இல் பிறந்தவரும், ’அன்பின் திரு. சீனா ஐயா’ என்று வலையுலகில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரும், வலையுலக மூத்த பதிவருமான ’ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள் 16.03.2019 சனிக்கிழமையன்று அவரின் சொந்த ஊரான மதுரையில், காலமானார் என்ற அதிர்ச்சியும், துக்கமும் தரும் செய்திகள் பலரின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

    என்னுடன் மிகவும் பிரியமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்த அவரின் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட, அருமையான, மிகவும் நல்ல மனிதர் அவர்.

    அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

    அவரின் பிரிவினால் வாடும் அவரின் அன்பு மனைவி + இதர குடும்பத்தார் அனைவருடனும் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். :(

    பதிலளிநீக்கு