About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, February 16, 2015

சந்தித்த வேளையில் ....... பகுதி 5 of 6



தொடரும் பதிவர் சந்திப்பு
         
பகுதி-1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html
பகுதி-2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html
பகுதி-3 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html
பகுதி-4 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html

பகுதி-5



25.02.2014

பவித்ராலயா





  

 

 

http://manammanamveesum.blogspot.in/
மணம் [மனம்] வீசும்
திருமதி. ஜெயந்தி ரமணி 
மற்றும் குடும்பத்தார்கள் 


நாங்க ... புதுசா ... 
நாங்க ... புதுசா ... 
கட்டிக்கிட்ட 
ஜோடிதானுங்க ... 
நல்லப் பாட்டுப் படிக்கும் 
வானம்பாடி தானுங்க ன்னு
பாட்டுப்பாடியபடியே


அன்புடனும் 
அதிரஸத்துடனும்
லாடு, முறுக்குடனும்
வருகை தந்திருந்தார்கள்.


 

**********

மேலும் பல சுவாரஸ்யமான
விஷயங்களுக்கு:


அறுபதிலும் ஆசை வரும்


பனை [பண] விசிறி

பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி 

 ஜெயந்தி ரமணியின் நேயர் கடிதம்-9



அறிமுகம் ஆனால் புதுமுகம் அல்ல


**********


  
வலைச்சரத்தில் என் 100வது அறிமுகம்
நம் ஜெயந்தியால் நிகழ்ந்ததில் மகிழ்ச்சி !

என் வீட்டுத்தோட்டத்தில் .... 
பகுதி-15 [95-100]

 







**********







02.04.2014
பவித்ராலயா


               
  
   

 

முனைவர் திரு. 
பழனி கந்தசாமி ஐயா 
அவர்கள்
அன்புடன் வருகை 
தந்திருந்தார்கள்.

எனக்கு மிகவும் பிடித்தமான  தின்பண்டங்கள் சிலவற்றை
மிகப்பிரபலமானதும், மிகத்தரமானதுமான 
கோவைக் கடைகளிலேயே , எனக்காக, ஸ்பெஷலாக,
ஏராளமாகவும், தாராளமாகவும் வாங்கி வந்து அசத்தியிருந்தார் .

இவர்களின் வருகை பற்றிய சுவாரஸ்யங்களுக்கு
http://gopu1949.blogspot.in/2014/04/blog-post.html

சந்தித்த வேளையில் .....
சிந்திக்கவே இல்லை .....
தந்துவிட்டேன் என்னை !
 

**********

பெரியவர் முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் எனது வலைத்தளத்தினில் சமீபத்தில் நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ அனைத்திலும்  (நாற்பது போட்டிகளிலும்) கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். 

அவ்வாறு கலந்துகொண்ட அவர்களின் விமர்சனம் ஒரே ஒருமுறை இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது. 

மூத்த பதிவரான இவரின் 
ஊக்கம் + உற்சாகம் + 
சாதனையை மெச்சி 
‘ஜீவீ + வீஜீ விருது’ 
இவர்களுக்கு அளிக்கப்பட்டது.



இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டி சம்பந்தமாக 
இவர் எனக்கு எழுதியுள்ள நகைச்சுவையான 
நேயர் கடிதம் குறிப்பிடத்தக்கதாகும். 

இணைப்பு:  

**********

’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பற்றிய ஒட்டுமொத்தமான 
பல்வேறு அலசல்களுக்கும் புள்ளிவிபரங்களுக்கும்  

**********
எதையும் சுருங்கச்சொல்லி விளங்க வைக்க வேண்டும் 
என்பது இவரின் கொள்கையாக உள்ளதாலும், 
அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளின் 
விதிமுறைகள் அதற்கு இடம் தராததாலும், 
இவரின் மிகச்சிறப்பான சில விமர்சனங்கள், 
பரிசுக்குத்தேர்வாகாமல் போய் விட்டன. 

எனினும் 
பரிசுக்குத் தேர்வாகாத 
தனது விமர்சனங்களையும்கூட
தனது வலைத்தளத்தினில் 
தொடர்ந்து பேரெழுச்சியுடன்
வெளியிட்டு வருவது
இவரின் தனிச்சிறப்பாக உள்ளது.



உதாரணமாக இவரின் சமீபத்திய வெளியீடு [ 13.02.2015 ] :
பூக்களைவிட .... அந்தப்பூக்காரி .... 
நல்ல அழகு !
காணத்தவறாதீர்கள்

அந்த என் சிறுகதைக்கான இணைப்பு:


மேற்படி கதை விமர்சனத்திற்கான 

பரிசு வென்றவர்கள் 
பற்றிய விபரங்களுக்கு








20.06.2014

பவித்ராலயா



http://aatchi.blogspot.in/

 


 




 

 

 


அன்புள்ள
ஆச்சி 
தன் குடும்பத்துடன்
வருகை தந்தது எனக்கு
மிகவும் மகிழ்ச்சியளித்தது.


 
பட்டாம் பூச்சிகளாக

 

இரு குழந்தைகள் 
அம்ருதா + யக்சிதாஸ்ரீ




ஆச்சி அவர்களின் வருகை + 
என் மீது காட்டிவரும் பேரன்பினைப் பற்றிய  
மேலும் அதிக சுவாரஸ்யங்களுக்கு:

http://gopu1949.blogspot.in/2015/01/20.html 

http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html


என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க !


 








தொடரும்


இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி {6 of 6}
நிறைந்த நாளும் அமாவாசையுமான
18.02.2015 புதன்கிழமை வெளியிடப்படும்

43 comments:

  1. என்னை இவ்வாறு மேல் தட்டிற்கு உயர்த்தினமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    கடைசி படம் மனதை அதிகம் கவர்ந்தது...

    ReplyDelete
  3. சிறப்பான சந்திப்புக்கள்.
    படங்கள் அனைத்தும் மிக அழகு.

    ReplyDelete
  4. கோபு அண்ணா

    மனமார்ந்த, நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த நன்றிகள்.

    திருப்பதிக்குப் போய் கால் கடுக்க (அப்படி சொல்லத்தான் கூடாது) வரிசையில் நின்று ஏழுமலையானின் தரிசனம் கிடைக்கும் நேரம் சில நொடிகள் தான். ஆனால் அந்த சில நொடிகளில் நமக்குக் கிடைக்கும் பேரானந்தம் சொல்லி முடியாது.

    அதே மாதிரி உங்கள் வீட்டில் நாங்கள் இருந்தது சில நிமிட நேரங்களே. ஆனாலும் நம் அனைவருக்கும் மறக்க முடியாத சந்திப்பாகி விட்டது. இன்றும் உங்களைப் பத்தி என்னவரோ, என் மகளோ யாராவது ஒருவர் அவ்வப்போது நினைத்து, நினைத்து மகிழ்வது வழக்கமாகி விட்டது.

    மீண்டும் ஒரு முறை உங்கள் வீட்டிற்கு வந்து சாவகாசமாக இருந்து பேச வேண்டும் என்பது என்னுடைய ஆத்மார்த்தமான ஆசை.

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

    ஆனந்தக் கண்ணீருடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  5. மூத்த பதிவர் திரு பழனி கந்த சாமி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

    முதல்ல ஆச்சின்னு படிச்சதும் பெரியவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். குட்டிப் பெண் ஆச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஜெயந்தி ரமணி

    ReplyDelete
  6. கந்தசாமி ஐயாவை சென்னையில் நடந்த பதிவர் மாநாட்டில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

    ஆச்சியை முதன்முதலாக தில்லியில் 2012ல் உலக புத்தக கண்காட்சியில் சந்தித்தேன். அப்போ இரண்டாவது மகள் 8 மாதம் வயிற்றில்....:) அதன் பின் அவங்க என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவராகி விட்டார்...:)

    ReplyDelete
  7. ஜெயந்தி ரமணி, ஐயா பழனி.கந்தசாமி, ஆச்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா. கடைசி படம் சூப்பர்...அதை பார்த்துக் கொண்டிருந்தேன் அலுக்கவில்லை.....!!!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நல்ல ஒரு சந்திப்பு நிகழ்வு . அதை நீங்கள் இவ்வளவு அருமையாக நினைவு கூர்ந்து தொகுத்து அளிப்பது இன்னும் அழகு. இறுதிப் படம் மனத்தைக் கவர்ந்தது.

    மிக்க நன்றி !

    கணினி பிரச்சனையால் அவர இயலவில்லை சார்! தயவு செய்து மன்னிக்கவும். இன்னும் சரியாகவில்லை. வேறு கணினியிலிருந்து. அதை உபயோகிக்க நேரம் கிடைக்கும் போது கருத்து இடுகின்றோம்.

    ReplyDelete
  9. சார் ஒரு தூக்குச் சட்டி நெல்லிக்காய் சாதம் கொண்டு வந்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....

    சாய்ராம் சாய்ராம்

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri February 16, 2015 at 1:18 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சார் ஒரு தூக்குச் சட்டி நெல்லிக்காய் சாதம் கொண்டு வந்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்....//

      மிக்க நன்றி. சந்தோஷம். மகிழ்ச்சி. தங்கள் கைபட்ட நெல்லிக்காய் சாதம் மிகுந்த ருசியோ ருசியாகத்தான் [என் கற்பனையில்] உள்ளது. மனம் நிறைந்த நன்றிகள்.

      அதற்கு பதிலாக எங்க வீட்டு நெல்லிக்காய்த்தொக்கினை நீங்களும் எடுத்துட்டுப்போங்கோ .... ஏற்கனவே தாங்கள் பலமுறை வருகை தந்து என்னை மகிழ்வித்துள்ள பதிவுதான் இது. இருப்பினும் இந்தத் தகவல் வேறு சிலருக்குப் பயன்படலாம் என்பதால் இங்கு இணைப்புக் கொடுத்துள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html

      அன்புடன் VGK

      Delete
  10. ஸந்திப்பெல்லாம் அழகுமிக்க உள்ளன்புடன் கூடிய ஸந்திப்புகள்.
    நேரில் பார்த்தால்தான் என்று இல்லை. சிலரை பார்க்காமல்கூட பழகுவதிலும் தெரியவரும். மனம் விட்டுப் பழகுவதிலும் ,இதைக் கண்டு பிடிக்கலாம். யாவரின் அன்பிற்கும் பாத்திரமான உங்களின் பழகும் விதமும், அன்பும் உங்களின் ஸந்திப்பும்
    மேன்மையாகவும்,அவர்களின், மேன்மையும் தெறியவருவதில் மிக்க ஸந்தோஷம். அன்புடன்

    ReplyDelete
  11. அருமை எல்லாப் படங்களும். கடைசிப் படம் மிக மிக அருமையாக உள்ளது. அனைவரின் அன்புக்குப் பாத்திரமான உங்களை எத்தனை பாராட்டினாலும் அது போதாது. இன்றைய அறிமுகங்களை உங்களால் ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. பழனி.கந்தசாமி ஸாரை மட்டும் அறிவேன், பதிவுகளின் வாயிலாக!

    தொடரட்டும் சந்திப்புகளின் உங்கள் சேமிப்பு!

    கடைசிப் படத்தை நானும் ரசித்தேன்.

    ReplyDelete
  13. ஜெயந்திரமணி பற்றிய முந்தைய பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆச்சியை நன்கறிவேன். துபாய் சென்று திரும்பியவுடன் தாங்கள் எழுதிய அவர் பற்றிய பதிவும் வாசித்ததே. பழனி கந்தசாமி ஐயாவையும் தெரியும். அழகான படங்கள்! மகிழ்ச்சியுடன் வாழ்கவென்று பூ மாரி பொழிந்து ஆசிர்வதிப்பது அருமை!

    ReplyDelete
    Replies
    1. Kalayarassy G February 16, 2015 at 8:40 PM

      வாங்கோ ... வணக்கம்.

      //அழகான படங்கள்! மகிழ்ச்சியுடன் வாழ்கவென்று பூ மாரி பொழிந்து ஆசிர்வதிப்பது அருமை!//

      இந்தக்கோணத்தில் தாங்கள் அதனை அழகுற எடுத்துச்சொல்லியுள்ளது, அந்தப்படத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டுவதாக உள்ளது. மிகவும் ரஸித்தேன்.

      நன்றியுடன் கோபு

      Delete
  14. கந்தசாமி சாரை பார்க்க வேண்டும் என்றொரு ஆவல்!
    ம்.....பார்ப்போம்!

    ReplyDelete
  15. சந்தித்த வேளை அருமை ஐயா...

    ReplyDelete
  16. அன்பான பதிவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்தவிபரம் பற்றி முன்பு படித்து இருக்கிறேன். மீண்டும் சந்தித்த வேளை தொக்குப்பு அருமை.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    ReplyDelete

  17. மீள் பதிவுகள். மீண்ட மலரும் நினைவுகள். படிக்கும்போதே அன்றைய சூழல் மனக்கண் முன் வந்து நிழலாடும். உங்கள் சிறுகதை விமர்சனப் போட்டிகளில் நடுவராக இருந்த ஜீவி அவர்களுடான சந்திப்பு உண்டா? இல்லையா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  18. Replies
    1. thirumathi bs sridhar February 17, 2015 at 5:04 PM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //kadaisi animating padam nellikkaavaa sir கடைசி அனிமேடட் படம் நெல்லிகாவா சார்//

      ஆரம்பத்தில் முதலில் தென்படும் படத்தில் ஏதோ மூன்று நெல்லிக்காய்கள் போலவே தொங்கிக்கொண்டு உள்ளன.

      பிறகு பூக்கள் போல ஏதேதோ மஞ்சள் நிறத்தில் குலுங்கிக் கொட்டுகின்றன.

      அது நெல்லிக்காய் மரமா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லையே ஆச்சி.

      நீங்க கேட்டிருந்த சிறிய சைஸ் அரிநெல்லிக்காய் கிடைக்கவில்லை ஆச்சி. இப்போ சீசன் இல்லையோ என்னவோ ! கிடைத்தால் வாங்கி அனுப்பலாம் என நினைத்தேன்.

      இப்போதைக்கு இந்தப்பதிவுகளில் போய்ப் பார்த்து திருப்திப் பட்டுக்கொள்ளுங்கோ:

      http://umayalgayathri.blogspot.com/2015/02/Indian-Goosberry-Rice-nellikkaai-sadham-.html#more நெல்லிக்காய் சாதம்

      http://thenkoodu.in/manage_blogs.php?blogid=71150&url=venkatnagaraj.blogspot.com/2014/03/blog-post_4.html நாவூற வைக்கும் அரிநெல்லிக்காய்....

      அன்புடன் கோபு

      Delete
  19. /முதல்ல ஆச்சின்னு படிச்சதும் பெரியவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். குட்டிப் பெண் ஆச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
    இதைப் படித்தவுடன் மிகவும் குஷியாகிட்டேன் ,நன்றி ஜெயந்தி மேடம் ,

    நன்றி ஆதி & மற்றவர்களுக்கும்

    சார், தன் பேருக்குத் தகுந்தாற் போல அனைவரின் மனம் கவர்ந்தவர் ...

    உறவுகளையும் ,உதவிகளையும் உதாசினப்படுத்துவோர் மத்தியில் எத்தனை முறை எங்களை உங்கள் வலைதளத்தில் பதிய வைத்து திகைக்க வைப்பிர்கள் ...... நடமாடும் தொந்திப் பிள்ளையாரை சந்தித்ததில் எங்களுக்கு நெகிழ்ச்சியே

    ReplyDelete
    Replies
    1. thirumathi bs sridhar February 17, 2015 at 5:22 PM
      **முதல்ல ஆச்சின்னு படிச்சதும் பெரியவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். குட்டிப் பெண் ஆச்சிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.** - ஜெயா

      ***இதைப் படித்தவுடன் மிகவும் குஷியாகிட்டேன் ,நன்றி ஜெயந்தி மேடம்.*** - ஆச்சி.

      குஷியான குட்டிப்பெண் ஆச்சிக்கும், ஆச்சியை குஷிப்படுத்திய ஜெயாவுக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

      உங்கள் இருவரையும் தராசு தட்டுகளில் வைத்தால் முள் சரியாகவே காட்டும். [ என்னை அடிக்கடி வம்பு இழுக்கும் குணத்தில் மட்டுமே .... ] மற்றபடி ஆச்சி பக்கமே முள் பயங்கரமாக சாயக்கூடும். :)

      >>>>>

      Delete
    2. ஆச்சிப் பொண்ணே

      உங்கள் இருவரையும் தராசு தட்டுகளில் வைத்தால் முள் சரியாகவே காட்டும். [ என்னை அடிக்கடி வம்பு இழுக்கும் குணத்தில் மட்டுமே .... ] மற்றபடி ஆச்சி பக்கமே முள் பயங்கரமாக சாயக்கூடும். :)


      கோபு அண்ணா என்ன சொல்ல வரார் தெரியுமா? நீங்க என்னை விட குண்டாம்.

      வம்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  20. கோபு >>>>> ஆச்சி [2]

    //நன்றி ஆதி & மற்றவர்களுக்கும் //

    அனைவர் சார்பிலும் ஆச்சிக்கு நன்றிகள்.

    //சார், தன் பேருக்குத் தகுந்தாற் போல அனைவரின் மனம் கவர்ந்தவர் ...//

    :))))) ஆரம்பிச்சுட்டீங்களே ...... ஆச்சி :)))))

    ReplyDelete
  21. கோபு >>>>> ஆச்சி [3]

    //உறவுகளையும், உதவிகளையும் உதாசினப்படுத்துவோர் மத்தியில் எத்தனை முறை எங்களை உங்கள் வலைதளத்தில் பதிய வைத்து திகைக்க வைப்பீர்கள் ...... //

    என் பதிவுகளில் ஏற்கனவே ஆங்காங்கே சிதறிக்கிடந்த நம் பதிவர் சந்திப்புக்களைத் தேடித்தேடி ஒருங்கிணைத்து ஒரே இடத்தினில் தொடர் பதிவாகக் கொடுத்து, எனக்கே பிற்காலத்தில் மறக்காமல் இருப்பதற்காக, இவ்வாறு செய்துகொண்டு வருகிறேன்.

    ஆச்சியின் அன்பின் ஆழம் மிகவும் அதிகம் என்பதால், உங்களுக்கும், என்னை இதுவரை சந்தித்துள்ள மற்ற அன்புமிக்க அனைவருக்கும் ஏதோ மீண்டும் மீண்டும் தங்களைப்பற்றியே நான் பதிவாக வெளியிடுவதுபோல ஒரு பிரமை ஏற்படத்தான்கூடும்.

    அதனால் திகைக்காதீங்கோ .... ஆச்சி.

    >>>>>

    ReplyDelete
  22. கோபு >>>>> ஆச்சி [4]

    //நடமாடும் தொந்திப் பிள்ளையாரை சந்தித்ததில் எங்களுக்கு நெகிழ்ச்சியே//

    :))))) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    இது தான்

    கொ _ _ _ எ _ _ _ கு _ _ _ யான

    ஆச்சி ஸ்டைல் :)))))

    மிக்க நன்றி.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. தொந்திப் பிள்ளையார்ன்னு சொன்னதுக்காக ஆச்சி பக்கம் முள் சாயும்ன்னு (எடை அதிகம் உள்ள பக்கம் தானே சாயும்) சொல்லிட்டீங்களோ?

      வம்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
    2. அன்புள்ள / வம்புள்ள ஜயா, வணக்கம்மா.

      எனக்கும் ஆச்சிக்கும் உள்ள நகைச்சுவை உணர்வுகளுடன் ஒருவரை ஒருவர் மனம் கொண்ட மட்டும் கேலியும் கிண்டலும் செய்து, எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பேசி/எழுதி மகிழ்ந்து கொண்டு விட்டோம்.

      எல்லோரும் வருகை தரும் இடமான இங்கு அதெல்லாம் வேண்டாமே என்பதால் 99.99% கருத்துக்களைத் தவிர்த்தும் விட்டோம்.

      இது ஜெயாவின் தகவலுக்காக மட்டுமே.

      பிரியமுள்ள கோபு

      Delete
  23. ஜெயந்தி, கந்தசாமி சார், ஆச்சி ஆகியோரைப் பற்றி அழகான விரிவான பகிர்வு. மூவரையும் நானும் அறிவேன்.

    அடுத்து நானும் மீட் பண்ண ப்லாகர்களை எல்லாம் போட்டு ஒரு போஸ்ட் போடலாமான்னு நினைக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் பூப்போல மலர்ந்து அழகூட்டுகிறது உங்கள் வலைத்தளத்தை.. :)

    ReplyDelete
    Replies
    1. Thenammai Lakshmanan February 19, 2015 at 11:06 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஜெயந்தி, கந்தசாமி சார், ஆச்சி ஆகியோரைப் பற்றி அழகான விரிவான பகிர்வு. மூவரையும் நானும் அறிவேன். //

      தாங்கள் அறியாத + குறிப்பாகத் தங்களை அறியாத பதிவர்களும் இந்தப் பாரினில் [Not BAR இனில்] உண்டோ ? !!!!!

      //அடுத்து நானும் மீட் பண்ண ப்லாகர்களை எல்லாம் போட்டு ஒரு போஸ்ட் போடலாமான்னு நினைக்கிறேன்.//

      போடுங்கோ. அவசியமாகப் போடுங்கோ. அதற்கு முன்பு ஹைதராபாத்துக்குப் ப்ளேன் ஏறி ஒரு ஃப்ளையிங் விஸிட் அடிக்கலாமா என எனக்கும் ஓர் எழுச்சி ஏற்படுகிறது :)

      //ஒவ்வொரு சந்திப்பும் பூப்போல மலர்ந்து அழகூட்டுகிறது உங்கள் வலைத்தளத்தை.. :) //

      ஒருவேளை, வருகை தந்தவர்களின் அழகினால் இருக்குமோ ..... இப்படிப் பூப்போல மலர்ந்து வலைத்தளத்தையே அழகூட்டியதாக நீங்கள் சொல்வது ? :)

      அன்பான வருகைக்கும், தேன் போன்ற இனிமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      Delete
  24. மிக அழகான சந்திப்பின் தொகுப்புகள். தங்களுடைய விமர்சனப்போட்டிகள் வாயிலாகவே பலர் எனக்கு அறிமுகமானார்கள். உங்களுடைய இந்த சந்திப்பின் தொகுப்பைப் பார்க்கும்போது ஏதோ நானே கலந்துகொண்டாற்போல் மனத்துக்குள் உற்சாகம் நிறைகிறது. ஆச்சியின் அன்பு அவரோடு பழகியவர்கள் அனைவரும் நன்கறிந்ததே. அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி February 20, 2015 at 5:11 AM

      வாங்கோ ... வணக்கம்.

      //மிக அழகான சந்திப்பின் தொகுப்புகள்.//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      // தங்களுடைய விமர்சனப்போட்டிகள் வாயிலாகவே பலர்
      எனக்கு அறிமுகமானார்கள்.//

      எனக்கும் அப்படியேதான். புதிது புதிதாக பலர் இந்தப்போட்டியின் மூலமே எனக்கும் அறிமுகம் ஆனார்கள். இருப்பினும் .....

      என் விமர்சனப்போட்டிகளில் தங்களின் முழு ஈடுபாடு +

      தங்களின் ஜொலிக்கும் எழுத்தாற்றல் +

      தங்களின் தொடர் வெற்றிகள் +

      ஒட்டுமொத்தப் போட்டிகளில் தாங்கள் இறுதிவரை
      முதலிடத்தினைத் தக்க வைத்துக்கொண்டது ....

      போன்றவைகளால் மட்டுமே நான் அறிவித்திருந்த என்
      சிறுகதை விமர்சனப்போட்டிக்கே ஒரு பெருமை ஏற்பட்டது
      என்பதை நான் இங்கு மிகவும் பெருமையுடன்
      கூறிக்கொள்கிறேன்.

      // உங்களுடைய இந்த சந்திப்பின் தொகுப்பைப் பார்க்கும்போது ஏதோ நானே கலந்துகொண்டாற்போல் மனத்துக்குள் உற்சாகம் நிறைகிறது.//

      இருக்கலாம். என் வலைத்தளத்தினில் சிறுகதை விமர்சனப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த 40 வார காலத்திலும் நாம் தினமும் எவ்வளவோ முறைகள் மெயில் மூலம் சந்திக்க நேர்ந்துள்ளதாலும், ஒருவருக்கொருவர் மனம் விட்டு அவ்வப்போது பல விஷயங்களைப் பகிர்ந்து பேசிக்கொண்டே இருந்ததாலும்,
      இங்கு இந்தத் தொடரினில் காட்டப்பட்டுள்ள 37 நபர்களை
      விட, தங்களை மிக அதிகமான முறைகள் சந்தித்து, மிக அதிகமான நேரங்கள், மிக அதிகமான விஷயங்களை மனம் விட்டுப் பகிர்ந்துகொண்டது போன்ற மகிழ்ச்சி எனக்குள்ளும் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை.

      நேரில் சில மணி நேரங்களோ அல்லது சில நிமிடங்களோ
      சந்தித்தால் கூட என்ன நம்மால் மிகப்பெரிதாக மனம்
      விட்டுப் பேசிவிட முடியும்? கோர்வையாக ஒன்றுமே பேசத்தோன்றாது அல்லவா !

      எழுத்தின் ஆற்றல் தான் நேரில் சந்திப்பதைவிட மிகவும் அன்பானது + ஆழமானது. :)))))

      // ஆச்சியின் அன்பு அவரோடு பழகியவர்கள் அனைவரும் நன்கறிந்ததே.//

      நம் போட்டிகளில் அநேகமாகக் கலந்துகொள்ளாத ஆச்சி,
      என்னிடம் இந்த நம் போட்டிகள் பற்றி அவ்வப்போது
      மனம் விட்டு பேசிய செய்திகள் ஏராளம்.

      ஆச்சி எப்போதுமே [இப்போது சற்று நேரம் முன்புகூட] என் தொடர்பு எல்லைக்குள் இருப்பவர் மட்டுமே.

      பாசத்துடன் உரிமை எடுத்துக்கொண்டு மிகவும் ஜாலியாகப் பழகுபவரும்கூட.

      தாங்கள் சொல்வது போல அவரின் அன்பு அவரோடு
      பழகியவர்கள் அனைவரும் நன்கறிந்ததே

      // அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.//

      அனைவர் சார்பிலும் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல்வேறு
      கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு
      நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  25. காணமல் போனவரை தேடுவது போல என் போட்டோ எம்புட்டுவை பப்ப்ளிக்குட்டி செய்திருக்கிங்க சார் .......
    ஜெயந்தி மேடம் உங்களை தராசில் ஏறவிட மாட்டேன் ,நானே ஒரு தட்டில் ஒரு காலும் மற்றொரு தட்டில் இன்னொரு காலையும் வச்சு நின்னுப்பேனே ...இப்ப எப்டி சாயும்னு பாப்போம் ........(நினைச்சு பாத்துடாதிங்க ...)

    ReplyDelete
    Replies
    1. thirumathi bs sridhar February 20, 2015 at 12:24 PM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //காணமல் போனவரை தேடுவது போல என் போட்டோ எம்புட்டுவை பப்ப்ளிக்குட்டி செய்திருக்கிங்க சார் .......//

      பப்ப்ளிக்குட்டி !!!!! அழகான சொல்லாடல்.

      பப்ளிமாஸ் போல அழகாக குண்டாக கொழு கொழுவென்று மிகவும் ரஸிக்கும் படியாகத்தான் உள்ளது. போட்டோவில் உள்ளப் பெண்குட்டியைக் குறிப்பிடவில்லை நான். ’பப்ப்ளிக்குட்டி’ என்ற சொல்லைத்தான் சொன்னேனாக்கும். ஹுக்க்க்கும் ! :)

      //ஜெயந்தி மேடம் உங்களை தராசில் ஏறவிட மாட்டேன்; நானே ஒரு தட்டில் ஒரு காலும் மற்றொரு தட்டில் இன்னொரு காலையும் வச்சு நின்னுப்பேனே ...இப்ப எப்டி சாயும்னு பாப்போம் ........(நினைச்சு பாத்துடாதிங்க ...)//

      இதனை ஜெயா நினைச்சுப்பார்க்காவிட்டாலும், நான்
      நினைச்சு கற்பனை செய்து பார்த்தேன் .... ஆச்சி. :)

      அந்தத் தராசே புட்டுக்கொண்டு கீழே விழுந்து பலத்த அடி
      பட்டுவிட்டது.

      அடி பட்டது ஆச்சிக்கு அல்ல.

      பாவம் அந்தத் தராசுக்கு மட்டுமே. :)))))

      பிரியமுள்ள கோபு

      Delete
  26. ஆச்சி மற்றும் பழனி. கந்தசாமி ஐயா ஆகிய இருவரையும் சந்தித்திருக்கிறேன்....

    இனிமையான சந்திப்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  27. இனிமை கலகலப்பு தொடரும் பதிவர்கள் சந்திப்புகள்

    ReplyDelete
  28. அருமையான பதிவர்கள் சந்திப்பும் ,கலகலப்பான பின்னூட்டங்களும் ரசிக்கவைத்தன...

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:42 AM

      //அருமையான பதிவர்கள் சந்திப்பும் ,கலகலப்பான பின்னூட்டங்களும் ரசிக்கவைத்தன...//

      வாங்கோ, வணக்கம்.

      ஆச்சி + ஜெயா + நான் ஆகியோர் ஒருவரையொருவர் எங்களுக்குள் கொஞ்சூண்டு கலாய்த்துக்கொண்டுள்ளதால் பின்னூட்டங்கள் கலகலப்பானதாகச் சொல்கிறீர்கள். அவற்றைத்தாங்கள் நன்கு ரசித்தும் உள்ளீர்கள் எனப் புரிந்து கொண்டேன். :)

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      Delete
  29. நடமாடும் தொந்தி புள்ளயாரு சூப்பரு சூப்பரு பதிவர் சந்திப்புகள் தொடருதுனால எங்க அல்லாருக்கும் செம்மயா தீனி கெடைக்கு.( இவ இந்த தீனிய விடவே மாட்டா)

    ReplyDelete
  30. சந்தித்தவேளைகள் படிக்க படிக்க சந்தோஷமாக இருக்கு பொருத்தமான படங்கள் நல்லா இருக்கு.

    ReplyDelete
  31. பதிவர் சந்திப்பு குறித்த பதிவும், பின்னூட்டங்களும் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன!

    ReplyDelete