என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-12/02/04என் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் மிகவும் ரஸித்துப்படித்து, அவற்றை ஓர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வதுண்டு. 

ஒரு சிலர் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து சிரத்தையாக அளிக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவே மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், மேலும் நாம் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலையும், பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.  

நான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் [January to June 2011] மட்டும், வெளியிட்டிருந்த என் 97 பதிவுகளிலிருந்து சுமார் 10 பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் வந்திருந்த பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு தினமும் கொஞ்சமாக இந்தத் தொடரினில் கொடுக்க விரும்புகிறேன்.

பொதுவாகவே அந்தக்காலக்கட்டத்தில் என் பதிவுகளுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள திருமதிகள்: மஞ்சுபாஷிணி, இராஜராஜேஸ்வரி, நுண்மதி, பூந்தளிர், ஆதிவெங்கட், ஸாதிகா, ஏஞ்ஜலின், அதிரா, ஆச்சி மற்றும் திருவாளர்கள்: அன்பின் சீனா ஐயா, தி. தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ், வெங்கட் நாகராஜ், ஹரணி, புலவர் இராமநுசம், திண்டுக்கல் தனபாலன் போன்ற பலரையும் விட்டுவிட்டு, குறிப்பிட்ட ஒரு சிலரின் பின்னூட்டங்களை மட்டுமே காட்டுவதாக உள்ளேன். இடநெருக்கடிக்காக மட்டுமே இவர்களை நான் இங்கு தவிர்த்துள்ளேன். அவர்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.


அன்று உரமிட்டவர்களில் ஒருசிலர்

அட,கதையில் இப்படியொரு திருப்பம் வரும் என்று தெரியாமல் 
கணக்கு போட்ட வாத்தியார் வாயடைத்து போய்விட்டாரே!
சே, இந்தக் காலத்து பிள்ளைகளை நம்ப முடியாது என்பதை 
சுட்டிக் காட்டியிருப்பது அருமை.

சாது மிரண்டால் கதையை வாசித்து விட்டு 
உங்க லின்க் பார்த்து வந்தால், அடப் பாவமே!
கஷ்டம் தான். இங்கே இப்படியா! நல்ல கருத்துள்ள கதை.சார்.
சிரிக்கவா அழவான்னு ஆகிப் போச்சு.“தம்பி ...... நான் இந்தத் தெருவுக்கே கொரியர் தபால்களை பட்டுவாடா செய்யும் ஆளு. 
தினமும் இந்த டாக்டருக்கு ஒரு நாலு கொரியர் தபாலாவது வந்துண்டே இருக்கும். 
தினமும் இங்கு தபால் கொண்டு வந்து தருவதும் நான் தான். 
என்னை இங்குள்ள நர்ஸ்ஸம்மாக்கள் எல்லோருக்குமே நன்றாகவே தெரியும்; 
இன்று கூட இந்த டாக்டரைப் பார்த்து, தபாலைக் கொடுத்து விட்டு, அவரிடம் 
கையெழுத்து வாங்கிக்கிட்டுப் போகத்தான் உட்கார்ந்திருக்கிறேன்.

இங்கு வரும் என்னையும் தினமும் சட்டையையும், 
பனியனையும் அவிழ்க்கச் சொல்லி விடுகிறார்கள், 
எல்லாவிதமான டெஸ்டுகளும் செய்து பேப்பரில் குறித்து விடுகிறார்கள், 
பிறகு வரிசை எண் உள்ள டோக்கனைக் கையில் கொடுத்து விடுகிறார்கள். 
நல்ல வேளையாக இன்று எனக்கு 20 ஆம் நம்பர் டோக்கன் கிடைத்துள்ளது. 
நேற்றைக்கு எனக்கு கிடைத்த நம்பர் 108.//

திரும்ப திரும்ப வாசித்து சிரித்த இடம்.

சூப்ப்ப்ப்பர் நகைச்சுவைக்கதை அண்ணா 
தலைப்புக்கு பொருத்தமா 
எனக்கிருந்த (இன்று காலை வந்த)தலைவலி நீங்க 
நம்பித்தான் ஆகனும் போயே போய்விட்டது. இட்ஸ்கான்.

இப்ப வந்திருக்கும் பயம் என்னவென்றால் 
"எப்படி நான் மிகுதியா இருக்கு நகைச்சுவை பதிவுகளை படிக்கப்போகிறேனோ... 
அந்த கோ...பாலாகிருஷ்ணனு...க்கே வெளிச்சம்.

இனி துயரம் இல்லை" 
உண்மையா அண்ணா எனக்கு நெஞ்சடைத்து, கண்ணீரே வந்துவிட்டது. சூப்பர் அண்ணா. 
அதில் நீங்க கொடுத்த "எரியும் விளக்கில் திரி முந்தியோ,எண்ணேய் முந்தியோ,
"அடிக்கும் காற்றில் மரத்திலிருந்து விழப்போகும் பழுத்த இலையைப்பார்த்து 
துளிர்விடும் பச்சை இலை கேலி செய்யலாமா" சூப்பர் உவமானம். 
இக்கதைக்கு பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

ஆரம்பத்திலேயே சிரித்த சிரிப்பில் எனக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. 


//பொறுமையில் பூமாதேவியான நம் பஞ்சாமியின் மனைவியே 
அவர் வாயில் அடித்த நாற்றத்தில், ஒரு நாள் மயக்கம் போட்டு கீழே விழுந்து, 
பிறகு மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் கண்டிப்புடன் சொல்லி விட்டாள்: 
“இனி பல்லிருக்கும் வரை நீர் என் பக்கத்திலேயே வரக்கூடாதென்று”//

மைகோட் ...... என்னா ஒரு நகைச்சுவை அண்ணா.

அடுத்த தொடர் படிக்கலாமா என யோசிக்கிறேன்.

பந்திக்கு பந்திக்கு எத்தகையதொரு உவமானங்கள் 
பாராட்டவார்த்தைகளே இல்லை.சூப்பர் அண்ணா.


//தாடையிலும் ஒரு வித வீக்கமும், பலகீனமும், வலியும் உணர முடிந்தது. 
கீழ் வரிசை கடவாய்ப் பற்கள் நான்கு பெயர்த்தெடுக்கப் பட்டிருந்ததால், 
மிகப் பெரிய குழிகள் ஏற்பட்டு விட்டது. 
நன்றியுள்ள நாக்கின் நுனி மட்டும் அடிக்கடி அவ்விடம் சென்று துழாவிய வண்ணம், 
மறைந்த அந்தப் பற்கள் வசித்த நினைவிடப் பகுதிகளில், 
தன் நினைவு அஞ்சலியை செலுத்தி கொண்டிருந்தது.//

திரும்ப வாசித்து ரசித்தேன்.:)

//இவரின் வாயைப் பிளக்கச் சொல்லி ஆராய்ந்த டாக்டர் 
எகிறுப் பகுதியில் நிறைய மேடு பள்ளங்கள் இருப்பதாகவும், 
அவற்றை சமன் படுத்தி ஒரு லெவலுக்குக் கொண்டுவர 
ஆங்காங்கே ராவு ராவு என்று ராவி மீண்டும் புண்ணாக்கி, 
ஒரு வாரம் கழித்து, புண் நன்றாக ஆறிய பிறகு 
வந்து பார்க்கச் சொல்லி அனுப்பி விட்டார்//


சாதாரணமாகவே இங்கு பல் டாக்டரிடம் போக பயம்.
லெட்டர் வந்தா பிறகுதான் விழுந்தடித்து ஓடுவோம்.
இப்படி ராவுராவினால் போவதெப்படி.

கண்ணிகளிலிருந்து வரும் கண்ணீரை 
கட்டுப்படுத்த இயலவில்லை.வாசித்ததால்.

ரெம்ப ரெம்ப நகைசுவை உணர்வு உள்ளவர் நீங்க 
என்பதை வரிக்கு வரி உணரமுடிகிறது.
அதை எழுதி எங்களையும் சிரிக்கவைக்கிறீங்க. 
நன்றி அண்ணா.

//தூக்கலான பற்களுடனும், சிரித்த முகத்துடனும், கலகலப்பாகவும் 
பஞ்சாமியைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, இப்போது அவர் 
கோபமாகவும், படு சீரியஸ் ஆகவும், உம்மென்று இருப்பது போலத் தோன்றியது.// 

இந்த உம்மாணாமூஞ்சியை கற்பனையில் பார்க்கத்தோன்றியது. 

பார்த்து ரசித்து சிரித்தேன்.


//அடுத்த ஒரு மாதத்தில், பல் செட் அணிவதால் ஏற்பட்ட 
கஷ்டங்களிலிருந்து நம் பஞ்சாமி விலகினார் என்பதை விட 
மிகவும் கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டங்களுடன் தன்னைப் 
பழக்கப் படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.//


இது பல்செட்டுக்கு மாத்திரமல்ல, 
தொடர் கஷ்டங்கள் வரும்போது அக்கஷ்டங்கள் 
எமக்கு பழகிவிடும் என்பதையும் உணர்த்துகிறது இவ்வரிகள்.

பஞ்சாமி பல்லால் பட்டபாடு பெரும்பாடு. 
மிகவும் அருமையான நகைச்சுவைத் தொடராகவும்,
விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருந்தது அண்ணா.
நன்றிகள்
முழுக்கதையையும் படித்தேன். 

ஏனோ காலங்காலமாய் குழந்தைப்பேறின்மைக்குப் பெண்களையே சாடும் நிலை தொடர்கிறது. 

இக்கதையில் ஒரு பெண்ணின் மன உணர்வுகளைப் பிரதிபலித்த விதம் கண்டு நெகிழ்கிறேன். 

ஊரார் பேசும்போதெல்லாம் உடையாத மனம் தன் உடையவன் பேசும்போது உடைந்துவிடுவது யதார்த்தம். 


ரேவதிக்கு இயல்பாகவே குழந்தைகள் மீதிருக்கும் வாஞ்சை, 
இவள் கணவனை அவள் பக்கம் அதிகமாய் ஈர்த்திருக்கலாம். 
அதன் காரணமே அவளுடன் பேசும்போது மட்டும் 
ஆயிரம் வாட்ஸ் பல்பு முகத்தில் எரியும் விந்தை. 


பாவம் இவளும் என்ன செய்வாள்? 

கணவனின் மனம் உடைந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு கவலைப்பட்டு 
முடிவில் அவன் நாவாலேயே தன்(மா)மனம் உடைந்து நிற்கிறாள். 

மனதை மிகவும் நெகிழ்த்திய கதை. 

என்னிலும் வலுவுடன் பிரச்சனையைப் பேசிய கதைக்கும் அது 
தேவி இதழில் வெளிவந்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் வை.கோ.சார்.


ரொம்ப அழகாக சொல்லியிருக்கீங்க ஐயா.

நீண்ட கதையாக இருந்தாலும் எதிர்பார்ப்புடனேயே அமைத்தமை அழகு.

இப்படியொரு பழமொழி இருப்பதை இன்றுதான் அறிந்தேன் ஐயா..கதை ரொம்ப நல்ல இருந்தது.

ஆனால் சீமாச்சு வின் ஏமாற்றம் தான் என்னவோ போல் இருக்கு,.

ஆனால் சில பெண்கள் சகஜமாக பேசுவதை சில ஆண்கள் 
இப்படி தான் எடுத்து கொள்கிறார்கள்.ஆஹா!!.. செம நகைச்சுவை. 

இதேமாதிரியான ஒரு அனுபவம் எனக்கும் ஏற்பட்டுச்சு. 
காய்கறி நறுக்கச்சே லேசா விரல் நகத்துல கொஞ்சம் ஆழமா கத்தி பதிஞ்சு, 

ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. 


ஐஸ்கட்டிகளை வெச்சு அதைக்குறைச்சுட்டு ஆஸ்பத்திரிக்கு போனா, 
எலும்புக்கு ஏதாவது சேதாரம் இருக்கான்னு பார்க்கணும்ன்னு தேவையில்லாம 
வலுக்கட்டாயமா ஒரு எக்ஸ்ரே எடுத்துட்டுதான் விட்டாங்க. 


இவ்வளவுக்கும் விரல் நுனிப்பகுதியில்தான் காயம் பட்டிருந்தது.
எலும்பு பாதிக்க சான்சே இல்லைன்னு சொல்றேன் ஒருத்தரும் கேக்கறாப்ல இல்லை. 


மெஷின் வாங்குன காசை இப்படி வசூல் பண்றாங்க. 


என்னத்தைன்னு சொல்றது :-))))

சுவாரஸ்யமான பெயர்க்காரண இடுகை :-))


ஊரையும் கோவில், குளத்தையும் வர்ணிக்கச்சே 


கண்முன்னால் நிறுத்திட்டீங்க..


அசத்தல் :-))ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !


அன்று நாம் அந்த சுகத்தை எண்ணிப் பார்த்திருக்க மாட்டோம். 

இன்று ஏங்குகிறோம்.

இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரை பச்சை.!

சம்பவம் சாதாரணமானது என்றாலும் சொல்லப் பட்டிருக்கும் விதம் 

வசீகரிக்கிறது. 

டீன் ஏஜில் தொண்ணூறு சதவிகிதத்தினர் அனுபவிக்கும் உணர்வுகள். 

கடைசியில் கதாநாயகனுக்காக சினிமாவில் வருவது போல 

ஒரு ட்விஸ்ட் வராதது ஒரு ட்விஸ்ட்!

பிரமாதம். பிரம்மாண்டம். ஒரு மிகப் பெரிய விருந்து சாப்பிட்ட திருப்தி. 


பாத்திரங்கள் பெயரும், பதார்த்தங்கள் பெயரும் 

ஒரு பயங்கர சொந்த உணர்வை ஏற்படுத்தி விட்டன. 


தஞ்சையில் வசித்த போது கம்மாக் கத்தரிக்க மிகப் பிரபலம். சுவை. 


அது போல சென்னையில் கிடைப்பதில்லை. 


எண்ணெய் ஊற்றிய மோர்க்களி, மிளகாய்ப் பொடி, பொரிச்ச கூட்டு, 

வத்தக் குழம்பு (மினுக்க வற்றல் - மிதுக்க வற்றல் இல்லை?) 

மாவடு, தஞ்சாவூர் குடை மிளகாய் மோர் மிளகாய்...ஒவ்வொறு விஷயத்தையும் என்னையும் அசை போட வைத்து விட்டீர்கள். 


ரசிகர் சார் நீங்கள்!


நினைவுகள் அழிவதில்லை. முதல் காதலை யாரும் மறப்பதுமில்லை. 

இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். 

மூன்றாம் நிலையில் சரியெனப் படும் இது தன் நிலையில் 

எந்த மாதிரி உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும் என்று அவ்வப்போது தோன்றும். 

ஆனாலும் அனுபவங்கள் பலவிதம். 


தோழைமை உணர்வு எப்போது காதலாய் மாறுகிறது, 

அது, அந்தக் காதல் உணர்வு மறுபடி தோழைமை மட்டும் என்ற 

கோட்டுக்குப் போக முடியுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. நல்லதொரு நினைவோடை. முடிவு என்ன ஆகிறது என்று பார்ப்போம். இந்த இருவரில் ஒருவரின் மகளைப் பார்த்து தானே நினைவுகள் 

பின்னோக்கிப் பயணித்திருக்கின்றன...!

சில விஷயங்கள் மிக எதிர்பார்க்க முடியாதவை. 


இதுவும் அது போல் ஒன்று. சில பேர் பெண்ணுக்கும் அம்மா போல 

பிற்காலத்தில் நோய் வரலாம் என்று மறுத்து விடுவார்கள். 


இங்கு கதையின் நாயகர் அப்படிச் செய்யாமல் அவர் 

முன்னாள் காதல் தடுக்கிறது. எதிர்பாரா முடிவுதான். 


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது எவ்வளவு உண்மை?

வச்சீங்களே கடைசி வரியில் பொடியை...! 


நான் கூட டிஸ்மிஸ் செய்து விட்டு வேறு ஆபீசில் மேனேஜர் 

என்றெல்லாம் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்! 


இந்த இடங்களில் இப்படி வேலை செய்வதுதான் பொருத்தம்! 


பாவம்தான் ரவி!

ஹா....ஹா... அருமை. இது போன்ற ஒரு காட்சி பழைய 

டி ஆர் ராமச்சந்திரன் நடித்த படமொன்றில் பார்த்த நினைவு. 

உடன் நடித்தவர் புளிமூட்டை ராமசாமி என்று ஞாபகம். 

நினைவு படுத்தி சிரிக்க வைத்தீர்கள்.


//"நகை வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டவுடன் 

கூல்டிரிங்க்ஸ் வழங்கி உபசரித்து தாஜா செய்தல்"//உண்மை...உண்மை...

மனதைப் பாதித்த சம்பவத்தை கதையாக எழுதி விட்டீர்கள். 

சுவையாக இருந்தது. 


சென்னை குரோம்பேட்டை அருகில் கூட சில வருடங்களுக்கு முன்னாள் 

இது போல ஒரு கோவில் சாலைப் போக்குவரத்துக்கு தடையாக உள்ளது 

என்று இடித்தார்கள். 


பக்தர்கள் சற்று தளளி மீண்டும் அதை ஏற்படுத்தி விட்டார்கள்.

ராத்திரி பதினோரு மணிக்கு கதவைத் தட்டி விசாரிக்கிறதா...

அடப் பாவமே....தொடருங்கள்...அப்புறம் என்னாச்சுன்னு பார்ப்போம்.

(கதர்ல முழுக்கை சட்டையை விட அரைக்கை பெட்டர் இல்லை...

அதுவும் ராத்திரி வேளையில்...!!)

//"இதைக்கேட்டதும், பொதுவாக ஒரு எழுத்தாளருக்கு 

ஏற்படும் எரிச்சலே எனக்கும் ஏற்பட்டது"//


நேர்மையான எழுத்துகள்..!


புதிர் கூடுகிறது. 
பகலில் எல்லோரும் அவரவர் வேலைக்குச் சென்று விட பேச ஆள் இல்லாமல் 

கஷ்டப்படும் அவர் இரவு ராஜ்ஜியம் நடத்துகிறார் போலும்!

ஒரு கதையின் மூலம் மிக அழகான கருத்தை வலியுறுத்தி உள்ளீர்கள். 

கதைக்குப் பிறகு எழுதப் பட்டுள்ள சிந்தனைகள் யாவுமே அருமை. கவனத்தில் கொள்ளப் பட வேண்டியவை. 

எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.

நாத்தனாரே மாமியாராவது தொடரும் துன்பம் போல. ஆனால் நம் ஊரில் பெண்களுக்கு சிறு வயது முதலே நாத்தனார், மாமியார் 

பற்றி சொல்லி பயமுறுத்தியே வளர்ப்பதால் நாத்தனாராகும் பெண்கள் அந்த 

குணாதிசயங்களைக் காட்ட வேண்டும் என்றும், நாத்தனார் 

முதலியோரை அடையும் பெண்கள் இவர்கள் தப்பாகத்தான் இருப்பார்கள் 

என்று ஒரு முன் தற்காப்புடனேயும் இருக்கிறார்களோ என்று தோன்றும்! இங்கு என்னாகிறது என்று அடுத்த கட்டத்தில் பார்ப்போம். நீங்கள் இதை அப்படியே வேறு திசையில் கொண்டு போய் 


ஏதாவது மெசேஜ் சொல்வதில் வல்லவர்.


ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர் துணை!


Mr Gopalakrishnan, I happened to stumble upon your writings. 

In one stretch, I have been reading all that you have penned. 
Every one of your stories - even the short ones - is so real, 

and almost all contain life's lessons. 

My appreciation to you. 
Keep going. Very best. Chandramouli
நல்ல நடை. உருவம் கண்டு எள்ளாமை முக்கியம் என்ற நீதி மறுபடியும் உங்கள் கதை மூலம். 
இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு நல்ல நடையில் எடுத்து சென்று உள்ளீர்கள்.

இதற்கு மேல் இதை விமர்சனம் செய்ய எனக்குத் தகுதி இல்லைஒரிஜினல் நகைச்சுவை என்பார்களே ! 

அது உம்முடையதுதான் சார்! வாழ்த்துக்கள்.

வை.கோ சார்! உங்க ஐம்பதுக்கு நல்வாழ்த்துக்கள்.. 

உங்கள் பலமே உங்கள் நகைச்சுவை உணர்வுதான். 

கலக்குங்க.. 

உங்கள் 'ப்ளாக்கி'யை மிக ரசித்தேன்..

பிரிய வைகோ சார்! ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.. 

பழக்கமில்லாமல் போட்ட பொடிபோல சர்ரென்று 


மண்டைக்குள் ஏறி ரொம்பவே எழுச்சியாகி விட்டது!


அருமையான படைப்பு...//சூரியன் மறைந்தாலும், சுட்டெரிக்கும் அந்த சூரியனை “கை” யே காக்க முயன்றாலும், 

இலைகள் உதிர்ந்தாலும், பம்பரமே படுத்தாலும், கொட்டும் முரசில் கொப்பளமே ஏற்பட்டாலும், 

மாம்பழமே புளித்தாலும், எழுச்சியுடன் நின்று, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறப்போவது 

எங்கள் அறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான அரசியல் வாரிசாகிய எங்களின் 

“பொடிட்டின்” சின்னமே என எடுத்துரைப்போம்”//


நிதி அமைச்ச‌ர் ப‌த‌விக்கு முன்பே, 


க‌ட்சியின் கொ.ப‌.செ க்கு 100% பொருத்த‌ம் சார் நீங்க.

வைகோ சார், நான் ஒன்று எழுத‌ நினைத்து, 

கீ போர்டைத் த‌ட்டினால், 

வேறு என்ன‌வோ ப‌திவாக வ‌ந்து நிற்கும். 
உங்க‌ளுக்கு ம‌ட்டும் எப்ப‌டி எண்ணுவ‌தெல்லாம் எழுத்தாய்? நடை அபார‌ம். சுரிதார் வாங்கும் சாக்கில் நல்லா க‌ல‌ர் பார்த்திருக்கிறீர்க‌ள். 


(ம‌னைவிக்குத் தெரியாம‌ல் ப‌டிக்க‌வும்)

உங்க‌ளை மாதிரியே, இந்த‌ கேர‌க்ட‌ரும் 

சாப்பாட்டு ர‌சிக‌ர இருந்த‌தால் 

வ‌ந்த‌ குழப்ப‌மாய் இருக்க‌லாம். ஆனாலும் ஆமை ந‌டையில் ஆமை வ‌டை 


நோக்கிய‌ அந்த‌ ந‌டை சூப்ப‌ர் ந‌டை,

நான் சொன்ன‌து உங்க‌ள் எழுத்து ந‌டையை.


http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html//முகச்சவரம் செய்யும் போது வெட்டுப்பட்டது 

போல ஒரு எரிச்சல்//

Your clean shaven face comes to my mind screen.

Excellent comparison.

நல்ல தரமான நகைச்சுவை உங்கள் எழுத்தில் 

வயதில் வேண்டுமானால் நீங்கள் பெரியவாராக இருக்கலாம் 

ஆனால் உள்ளத்தில் இன்னும் இளமையாக இருக்கிறீரகள் 

அது என்றென்றும் தொடர இந்த Madurai Tamil Guy- யின் வாழ்த்துகள்.உங்கள் ப்ளாக்கின் தலைப்பை வை.கோபாலகிருஷணன் 

என்பதிற்கு பதிலாக 

" குறும்புகார இளைஞன் " 

என்று மாற்றி கொள்ளுங்கள்

நீங்கள் நன்றாகவும் எழுதுகிறீர்கள்; 

தரமாகவும் எழுதுகிறீர்கள்; 


நகைச்சுவையாகவும் எழுதுகிறீர்கள். 
அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த 

பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்
அடுத்த பதிவினில் இடம்பெறப்போகும் 
பின்னூட்டங்கள் அளித்துள்ளவர்கள்: 

திருமதிகள்: விஜி பார்த்திபன் அவர்கள், ராதாபாலு அவர்கள், உமையாள் காயத்ரி அவர்கள், ஜெயந்தி ரமணி அவர்கள், ரஞ்ஜனி நாராயணன் அவர்கள், திருவாளர்கள்: செளதி G. கணேஷ் அவர்கள், VENKAT அவர்கள், GMB ஐயா அவர்கள், A.R. ராஜகோபாலன் அவர்கள் முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் மற்றும் மதுரை சரவணன் அவர்கள்.    
அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 

பட்டியல் எண்: 4  .... 60 GENTS

பட்டியல் எண்: 5 .... 70 LADIES

அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சம் வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும் இரண்டு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டியல் எண்: 7 ....  50 LADIES

பட்டியல் எண்: 8  ....  40 GENTS

இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  


 


பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 10 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 11 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 12/01/04 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/120104.html


பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.


 


பட்டியல் எண்: 12 [Part : 02 of  4] 
பின்னூட்ட எண்ணிக்கை : 270
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
அடடா ..... என்ன அழகு !
அடையைத் தின்னு பழகு !!

TOTAL NUMBER OF COMMENTS : 
2 7 0
THE HIGHEST ONE 
IN MY BLOG HISTORY !


 

இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 270 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப் பட்டுள்ளது. எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனித்தனியே நான்கு பகுதிகளாகப் பிரித்துக் காட்டிவிட நினைக்கிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.


 

COMMENT Nos: 213 TO 235


 1. எனது பதிவில் உங்கள் கருத்துரைக்கு நான் இட்ட மறுமொழி இது.

  // திரு VGK அவர்களுக்கு நன்றி! நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை என்று தெரியவில்லை. இந்த ஆண்டு உங்கள் பதிவுகளை இணைக்கவும். நீங்கள் இந்த ஆண்டு தமிழ் மணத்தில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பது எனது ஆசை. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்! //

  1. தி.தமிழ் இளங்கோ January 14, 2013 at 5:05 PM

   எனது பதிவில் உங்கள் கருத்துரைக்கு நான் இட்ட மறுமொழி இது.

   // திரு VGK அவர்களுக்கு நன்றி! நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை என்று தெரியவில்லை. இந்த ஆண்டு உங்கள் பதிவுகளை இணைக்கவும். நீங்கள் இந்த ஆண்டு தமிழ் மணத்தில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பது எனது ஆசை//

   ஐயா, வணக்கம். தங்கள் கேள்விக்கும் ஆசைக்கும் மிக்க நன்றி.

   இதற்கான என்னுடைய மனம் திறந்த வெளிப்படையான பதில்கள் சிறிய சிறிய 13 பின்னூட்டங்களாக தங்களின் பதிவினிலேயே கொடுத்துள்ளேன். தயவுசெய்து படித்துப் பாருங்கள்.

   மற்ற அனைவரின் தகவலுக்காக இதோ இணைப்பு:

   http://tthamizhelango.blogspot.com/2013/01/1-100-traffic-rank-2012.html

   தமிழ் மணம்: வலைப்பதிவுகளின் தர வரிசை முதல் நூறு
   (1 - 100) பட்டியல்((Traffic Rank-2012)

   அன்புடன்
   VGK 2. எனது பதிவில் உங்கள் கருத்துரைக்கு நான் இட்ட மறுமொழி இது.

  // திரு VGK அவர்களுக்கு நன்றி! நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை என்று தெரியவில்லை. இந்த ஆண்டு உங்கள் பதிவுகளை இணைக்கவும். நீங்கள் இந்த ஆண்டு தமிழ் மணத்தில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பது எனது ஆசை. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்! //

  1. தி.தமிழ் இளங்கோ January 14, 2013 at 5:07 PM

   //நீங்கள் ஏன் உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் இணைப்பதில்லை என்று தெரியவில்லை.//

   அது தெரியாமல் இருப்பதே நல்லது.

   இது சம்பந்தமாக நான் நிறைய முறை என் பதிவுகளின் பின்னூட்டங்களில், நிறையவே பேசிவிட்டேன்.

   இதோ சமீபத்திய என் பேச்சு [வலைச்சரப் பின்னூட்டத்தில்] என் அருமை நண்பர் திரு. ரியாஸ் அஹ்மது அவர்களுக்காக கொடுத்துள்ளேன்.

   http://blogintamil.blogspot.in/2013/01/2515.html

   தொடரும் .......

  2. [2]

   நான் இது சம்பந்தமாக மேலும் பேசினால் பலரின் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

   எங்கும் ஊழல் எதிலும் ஊழல் போல இதிலும் உள்ளது ஐயா.

   அதைப் பற்றியெல்லாம் நான் பிறகு தங்களுடன் நேரில் நாம் சந்திக்கும் போது தனியாக பேசுவேன்.
  3. [3]

   // இந்த ஆண்டு உங்கள் பதிவுகளை இணைக்கவும். //

   மாட்டேன் ஐயா, மாட்டேன். நானாக எதையும் எங்கும் இணைக்கவே மாட்டேன்.

   தேவைப்பட்டால் “தமிழ்மணம் நிர்வாகம்” அவர்களாகவே முன்வந்து இணைத்துக் கொள்ளட்டும்.  4. [4]

   //நீங்கள் இந்த ஆண்டு தமிழ் மணத்தில் முதல் இடத்தைப் பெறவேண்டும் என்பது எனது ஆசை. //

   தாங்கள் என் மீதும் என் எழுத்துக்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையினால் இதுபோல ஆசைப்படுகிறீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆனால் எனக்கு அந்த ஆசை ஏதும் இல்லை ஐயா.

   சென்ற ஆண்டு [2011 இல்] எனக்கு சிறப்பானதோர் இடம் அவர்களாகவே முன்வந்து தந்தார்களாம் ஐயா.

   அதாவது தமிழ்மணத்தில் 15th Rank out of 100 for the year 2011 என்று சொன்னார்கள்.

   இது நம் அன்புக்குரிய திரு ரமணி சார் சொல்லித்தான் எனக்கே தெரிய வந்தது.

   Please Refer:
   http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

   என் 200 ஆவது பதிவு

   “நான் ஏறி வந்த ஏணி தோணி கோணி” என்ற என் பதிவினில், திரு ரமணி சாரும் வேறு மூவரும் சேர்ந்து அடுத்தடுத்து ஒரே மாதியாக எழுதியுள்ள பின்னூட்டங்களுக்கு, நான் எழுதியுள்ள என் பதில்களை தயவுசெய்து பாருங்கள், ஐயா.

   கடைசியாகத் தாங்கள் கொடுத்துள்ள தங்கள் பின்னூட்டத்திற்கு மேலே ஒரு 10 பின்னூடங்களுக்கும் அது இருக்கும் ஐயா.


  5. [5]

   2011ம் ஆண்டில் என்னை ஒரு வாரம் [07.11.2011 முதல் 13.11.2011 வரை] தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராகவும் ஆக்கி கெளரவித்தார்கள் ஐயா.

   அந்த ஒரு வாரம் மட்டும் என்னால் கொடுக்கப்பட்ட 28 சிறப்புப்பதிவுகளும் முன்னனியில் வந்ததாகவும், அந்த வார HOT RELEASES களில் எனக்கு FIRST RANK கொடுத்திருந்ததாகவும் பிறர் சொல்லிக்கேள்விப்பட்டுள்ளேன், ஐயா.

   http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html

   இதில் Mr. Philosophy Prabhakaran என்பவரின் பின்னூட்டதையும், அதற்கான என் பதிலையும் தயவுசெய்து படித்துப்பாருங்கள், ஐயா.


  6. [6]

   2011 நவம்பருக்குப் பிறகு தான், நானே தமிழ்மணத்தில் வோட் அளிப்பது என்றால் என்ன, பிறர் நமக்கு வோட் அளிப்பது என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன தனிச்சிறப்பு? அதனால் நமக்குக் கிடைக்கும் லாபமோ சந்தோஷங்களோ என்ன என்றெல்லாம் என் நண்பர்கள் சிலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் ஐயா.

   அப்போது தான் இதில் நடக்கும் பல்வேறு தில்லுமுல்லுகளும் என் கவனத்திற்கு, என் நண்பர்கள் சிலரால் மின்னஞ்சல் மூலம் கொண்டுவரப்பட்டன, ஐயா.


  7. [7]

   நீங்கள் கூட கவனித்திருக்கலாம். சிலரின் பதிவுகள் வெளியிடப்பட்ட, ஒருசில மணித்துளிகளுக்குள், அவர்களுக்கு ஏதும் பின்னூட்டங்களே வராத நிலையிலும், அவர்களுக்கு 7 வோட்டுக்கு மேல் 20 வோட்டுக்கள் வரை வந்து குவிந்து விடும். [உண்மையில் குவிக்கப்படும்.]

   ஏனென்றால் குறைந்தது 7 வோட்டுக்களாவது பெற்றால் அது மிகச்சிறந்த படைப்பாக தமிழ்மணத்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விளம்பரப் படுத்தப்படும்.

   உண்மையில் வோட் அளித்த பதிவர் யார்?
   அவரின் வலைத்தளம் எது?
   அவருக்குத் தனியே ஏதும் வலைத்தளம் என்று உள்ளதா?
   அதில் அவர் ஏதேனும் படைப்புகள் இதுவரை வெளியிட்டுள்ளாரா?

   என்ற தகவல்களும் தமிழ்மணத்தால் வெளியிடப் படுமானால், இதில் உள்ள மர்மங்கள் வெளிப்படும் வாய்ப்பு உண்டு.  8. [8]

   நானும் நீங்களும் எதைப்பற்றி வேண்டுமானாலும், சுவையாக, தெளிவாக, திறமையாக, பிறர் ரஸிக்கும் படியாக, பின்னூட்டம் இட்டு நம்மை மகிழ்விக்கும் விதமாக, நம்மால் இன்றும் எழுத முடியும்.

   ஆனால் பிறரை வோட் அளிக்கக் கட்டாயப்படுத்தியோ அல்லது நமக்கு நாமே பல வோட்டுக்கள் அளித்துக்கொண்டோ நாம் முன்னனியில் வர வேண்டும் என்று நினைத்து, நம்மால் பிற வழிகளுக்கு [Out of the Way] செல்ல நம் மனம் என்றுமே விரும்பாது, தானே, ஐயா.


  9. [9]

   மேலும் சிலர், தங்களின் பதிவுகள் மூலமும், தனி மெயில் மூலமும், ”என் பதிவுக்கு வாருங்கள், படியுங்கள், படித்தாலும் படிக்காவிட்டாலும் ஏதாவது கருத்துக் கூறிவிட்டுச்செல்லுங்கள், மிகமுக்கியமாக மறக்காமல் வோட் அளித்து விட்டுச் செல்லுங்கள்” என்று நம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதையும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

   நம்மால் இதுபோலெல்லாம் பிறரைக் கெஞ்ச முடியுமா .... ஐயா?

   நம்மால் கெஞ்சிக்கூத்தாடவும் முடியாது ....

   நாமினி பெயரில் வலைப்பதிவுகள் பலவற்றை வைத்துக்கொண்டு,

   கள்ள வோட்டுக்கள் போடவும் முடியாது அல்லவா!  10. [10]

   இந்த எழுத்துலகத்தில் இது போலெல்லாம் புகழின் உச்சியை அடைய உழைக்கத்தெரிந்தால் மட்டும் போதாது ஐயா ....... பிழைக்கவும் வழி தெரிய வேண்டும்.

   அந்தப்பிழைப்பு நமக்கு வேண்டாம் என்று தான் தமிழ்மணத்திலிருந்தும், இன்ட்லியிலிருந்தும் என்னை நான் 01.01.2012 முதல் விலக்கிக்கொண்டு விட்டேன், ஐயா.

   அதனால் மட்டுமே 2012ம் ஆண்டு நான் வெளியிட்ட, 100க்கும் மேலான என் படைப்புகளில், எதுவுமே என்னால் தமிழ்மணத்திலோ அல்லது இன்ட்லியிலோ இணைக்கப்படவில்லை, என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


  11. [11]

   உலகளவு விளையாட்டுப்போட்டி பந்தயங்களில், முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வாங்கியும், சிலரை அதன் பிறகு மருத்துவப்பரிசோதனை செய்து, ஊக்க மருந்தும், உற்சாக பானமும் அருந்தி, போதை ஏற்றிக்கொண்டு, தவறான முறையில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார்கள் என்று சொல்லி அதைத்தட்டிப் பறிப்பதும், அவமானப்படுத்துவதும் உண்டல்லவா!

   அதன் பிறகு அவர்களை இதுபோன்ற பந்தயங்களிலேயே கலந்து கொள்ள முடியாதபடி செய்து விடுவதும் உண்டல்லவா!!

   அதே போலவே சிலரை தமிழ்மணமும் தண்டித்துள்ளதாகவும் அறிகிறோம், ஐயா.

   சென்ற ஆண்டுகளில் முதல் இடம் பெற்று முன்னனியில் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள சிலர் இப்போது சுத்தமாகவே காணாமலே போய் இருக்கிறார்கள், என்பதும் உண்மை தானே?


  12. [12]

   இன்று தங்களின் இந்தப்பதிவினில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுமே மிகவும் கடுமையாக உழைத்தே தங்கள் இடத்தினை பலத்த போட்டாப் போட்டியில் தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.

   அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

   இவர்களில் 80% உழைக்கத்தெரிந்தவர்களாகவும்,
   மீதி 20% பிழைக்கத் தெரிந்தவர்களாகவும் இருக்கக்கூடும் என்பது என் கருத்து.

   தங்கமான இந்தப்பதிவர்களை நிறுத்து எடை போட்டு நமக்குத்தரும் தராசு தான் சரியாக இல்லை;

   அது மிகத்துல்லியமாக எடை காட்டுவதும் இல்லை,

   அதில் சில LOOP HOLES உள்ளன என்பதே என் ஆதங்கம்.


  13. [13]

   இத்தகைய LOOP HOLES பல உள்ளதனாலேயே உங்களுக்கு 83 என்ற இடம் இதில் கிடைத்துள்ளது.

   இருப்பினும் நம் எழுத்துக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்து 100க்குள் வந்துள்ளோமே என நீங்கள் உண்மையிலேயே மகிழ்ந்து கொள்ளலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

   101 முதல் 120 க்குள் உள்ள தரமான பதிவர்கள் சிலர், அதாவது இந்த அழகான விமானத்தில் இடம்பெற வாய்ப்பு கிடைக்காமல் செய்யப்பட்ட சிலர், மட்டுமே துரதிஷ்டசாலிகள்.

   அவர்களே உழைக்க மட்டுமே தெரிந்து பிழைக்கத் தெரியாதவர்கள்.


  14. [14]

   நம் படைப்புகளை நுனிமுதல் அடிவரை ஆர்வத்துடன் முழுவதுமாகப் ரஸித்துப் படித்து விட்டு, ஆத்மார்த்தமாகக் கருத்துக்கள் சொல்லும் உங்களைப்போல, திரு. ஜீவி ஐயா போல, அன்பின் திரு. சீனா ஐயா போல, திருமதி மஞ்சு பாஷிணி போல, இதுபோன்றே வெகு அழகாக பின்னூட்டம் தரும் மேலும் சிலர் போல, அழகாக விமர்சனம் செய்து கருத்துச்சொல்பவர்கள் வருகை தந்து கருத்துக்கூறினால் போதும் என்று நினைப்பவன் நான்.

   அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாகவும், தங்கப்பதக்கமாகவும், வெற்றியாகவும், முதல் RANK ஆகவும் எண்ணி நான் மகிழ்கிறேன்.

   சும்மாவாவது பதிவை முழுவதுமாகப் படிக்காமலேயே, Just பார்த்தமாத்திரத்திலேயே ... வடை, பஜ்ஜி, பக்கோடா, போண்டா, அருமை, ஆஜர், VERY NICE, பார்த்தேன், ரசித்தேன், என்று ஒரே வரியில் பின்னூட்டமிடுபவர்களும், பிறர் எழுதியுள்ள பின்னூட்டத்தையே COPY and PASTE போடுபவர்களும் நம் பக்கம் வந்தாலும் ஒன்றுதான் வராவிட்டாலும் ஒன்று தான் என நினைப்பவன் நான்.

   இது சம்பந்தமாக மேலும் பேச நான் விரும்பாததால் இத்துடன் சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன், ஐயா. ;)

   அன்புடன்
   VGK

   ooooooooo


 3. வணக்கம் ஐயா.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும்
  என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.

  (ரொம்ம்ம்ப லேட்டு தான்... மன்னிச்சிடுங்கள்.)

  1. அருணா செல்வம் January 16, 2013 at 2:17 PM

   //வணக்கம் ஐயா.//

   வாங்கோ வாங்கோ ! வணக்கம்.

   //உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவருக்கும்
   என் இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்.//

   நன்றி.

   உங்களுக்கும் இதோ என் பொங்கல் வாழ்த்துகள்
   ஓர் சிறிய கவிதை வடிவில்:

   பொங்கல் வாழ்த்து:
   ===================

   செங்கரும்புச் சாறெடுத்து
   இதழினிலே தேக்கி,

   சிந்துகின்ற புன்னகையால்
   துன்பம் நீக்கி,

   மதமதத்த வளையணிந்த
   கைகள் வீசி,

   மங்களமாம “தை” என்னும்
   மங்கை வருவாள்!

   பொங்கியெழும் புத்தின்ப
   உணர்ச்சி தருவாள்!!

   (ரொம்ம்ம்ப லேட்டு தான்... மன்னிச்சிடுங்கள்.)

   அடடா, இதற்கு எதற்கு மன்னிப்பு என்ற மிகப்பெரிய வார்த்தைகளெல்லாம்? ரொம்ப லேட்டா இருந்தாலும் சுடச்சுட ஆவிபறக்க சர்க்கரைப்பொங்கல் போலல்லவா இனிமையாக வாழ்த்தியுள்ளீர்கள்!

   மேலே உள்ள என் கவிதையில் கடைசி இரண்டு வரிகளில் உள்ள “வருவாள்” என்பதை ”வந்தாள்” என்றும், ”தருவாள்” என்பதைத் ”தந்தாள்” எனவும் நாம் மாற்றிக்கொள்வோம்.

   சந்தோஷம் + நன்றிகள், மேடம், தங்கள் அன்பான வருகைக்கும், அழகான பொங்கல் வாழ்த்துகளுக்கும்.

   பிரியமுள்ள கோபு

 4. சார்,இன்று உங்களோட இந்த அருமையான அடையை சுட்டு அசத்தியாச்சு. அளவு, ருசி எல்லாம் கன கச்சிதம். எங்க வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. இனி வாரம் ஒரு முறை எங்க வீட்டில் நிச்சயம் இந்த அடை இடம் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!
  மிக்க நன்றி சார். விரைவில் என் வலைப்பூவில் பகிர்கிறேன். சர்ப்ப்ரைஸ் ஆக பகிரனும்னு நினைச்சேன், ஆனால்மிக திருப்தி என்பதால் அடை சாப்பிட்ட கையோடு உங்களுக்கு தெரிவித்து விட்டேன்.மிக்க மகிழ்ச்சி.

  1. Asiya Omar January 17, 2013 at 12:41 AM

   வாருங்கள் என் அன்புச்சகோதரி Mrs. ASIYA OMAR அவர்களே!

   வணக்கம், தங்களின் மீண்டும் வருகை எனக்கு மிகுந்த மகிழ்வளிக்கிறது.

   //சார், இன்று உங்களோட இந்த அருமையான அடையை சுட்டு அசத்தியாச்சு. அளவு,ருசி எல்லாம் கன கச்சிதம்.//

   ”சமைத்து அசத்தலாம்” என்ற வலைத்தளத்தின் அதிபதியாகிய தாங்களே இன்று வந்து என்னைப்பாராட்டியுள்ளது எனக்கு ஓர் வைரக்கிரீடம் வைத்தது போல உணரமுடிகிறது. நன்றியோ நன்றிகள்.

   ஏற்கனவே என் அன்புச்சகோதரியான திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்களும் [இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்கள்] இதையே தான் மேலே தன் பல்வேறு பின்னூட்டங்களில் சொல்லியுள்ளார்கள்.

   இது என் முதல் சமையல் குறிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் சமையல் குறிப்புக்கே இவ்வளவு பாராட்டுக்கள் குவியும் என நானே எதிர்பார்க்கவில்லை. பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் [என் பதில்கள் உள்பட] 230ஐத் தாண்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.  2. //எங்க வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.//

   ஆஹா, அடையைப்பிடிக்காதவர்கள், அகிலத்தில் உண்டோ
   என நானும் எண்ணுவது உண்டு.

   //இனி வாரம் ஒரு முறை எங்க வீட்டில் நிச்சயம் இந்த அடை இடம் பிடிக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ!//

   கேட்கவே சந்தோஷமாக உள்ளது. நன்றி.  3. VGK TO Mrs. ASIA OMAR Madam [3]

   //மிக்க நன்றி சார். விரைவில் என் வலைப்பூவில் பகிர்கிறேன்.//

   தங்கள் விருப்பப்படி செய்து கொள்ளுங்கள். மறக்காமல் எனக்கு மெயில் மூலம் லிங்க் அனுப்பி உதவுங்கள்.

   //சர்ப்ப்ரைஸ் ஆக பகிரனும்னு நினைச்சேன், ஆனால் மிக திருப்தி என்பதால், அடை சாப்பிட்ட கையோடு உங்களுக்கு தெரிவித்து விட்டேன்.//

   இந்த தங்களின் பின்னூட்டச் செய்தியே எனக்கு மிகவும் சர்ப்ப்ரைஸ் ஆகத்தான் உள்ளது.

   //மிக்க மகிழ்ச்சி.//

   அன்பான தங்களின் வருகைக்கும், அழகாக அனுபவித்து என் குறிப்புகளின் அடிப்படையில் “அடை”யையும் செய்துபார்த்து
   அதை இங்கு பின்னூட்டம் மூலம் தெரிவித்து, மகிழ்வித்துள்ளதற்கும் தங்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

   பிரியமுள்ள
   கோபு  
தொடரும்

என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

22 கருத்துகள்:

 1. பிறர் கருத்துகளுக்கு மிகுந்த மதிப்பளிக்கும் உங்கள் மனவளம் போற்றுதலுக்குரியது. அவற்றுக்கு ஒரு பதிவுக்கு போட்டுக் கொண்டாடும் உங்களை என்ன சொல்லிப் பாராட்ட? என் கருத்துக்களை மீண்டும் பார்த்ததில் சின்ன சந்தோஷம்... பழைய காதலியை பட்டணத்தில் பார்த்தது போல !!

  பதிலளிநீக்கு
 2. இன்றைய லிஸ்ட்டில் என் பின்னூட்டங்களும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  நம் எழுத்தை நாமே, அதுவும் நண்பர்கள் பதிவில் பார்ப்பது தனி சந்தோஷம்தான்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பதிவுகளின் நெம்பர்கள் குழப்புகின்றன.
  முழிவதும் படிக்க முடியவில்லை. எழுத்துகள் சின்னதாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 4. பழனி. கந்தசாமி March 29, 2015 at 5:37 PM

  வாங்கோ, வணக்கம்.

  //பதிவுகளின் நெம்பர்கள் குழப்புகின்றன.//

  இந்தத்தொடரில் மொத்தம் 12 பகுதிகள் மட்டுமே. முதல் 11 பகுதிகளின் நம்பர்களில் குழப்பம் ஏதும் இருக்காது. அவை 1 முதல் 11 வரை வரிசையாக நம்பர்கள் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

  இறுதிப்பகுதியான பகுதி எண்: 12 மட்டும் [200க்கும் மேற்பட்டு கிடைத்துள்ள பின்னூட்டங்களே 70 எண்ணிக்கைகள் வரை வெளியிடப்பட வேண்டி இருப்பதனால்] பிரித்து 4 உப பகுதிகளாக்கி வெளியிட்டு வருகிறேன்.

  அதாவது 12/01/04; 12/02/04; 12/03/04 and 12/04/04 என்று வெளியிட்டு வருகிறேன். நீங்கள் 12/01/04 என்பதை 12 ஆகவும், 12/02/04 என்பதை 13 ஆகவும், 12/03/04 என்பதை 14 ஆகவும், 12/04/04 என்பதை 15 ஆகவும் நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது குழப்பம் ஏதும் இருக்காது.

  //முழுவதும் படிக்க முடியவில்லை. எழுத்துகள் சின்னதாக இருக்கின்றன.//

  ஆம். எழுத்துக்களை மிகச்சிறிய FONT இல் வைத்து வெளியிட்டுள்ளேன். வேறு ஏதேனும் FONT இல் வைத்து வெளியிட்டால் அவற்றின் எழுத்துக்கள் ஒரு வரியும் அடுத்த வரியும் ஒட்டிக்கொண்டு, படிக்க முடியாமல் இருப்பதாக ஏற்கனவே இதற்கு முந்திய பதிவின் பின்னூட்டங்களில் பலர் கூறியுள்ளனர். அதனால் இவ்வாறு செய்யும்படி ஆகிவிட்டது.

  ஒவ்வொரு பின்னூட்டங்களின் அடியிலும் இணைப்புக் கொடுத்துள்ளேன். அவற்றை கிளிக்கினால் அந்தப்பதிவுக்கே உங்களை அழைத்துச் சென்று விடும். அங்குபோனால் தங்களால் முழுவதுமாக தெளிவாகப் படிக்க இயலும். இருப்பினும் எல்லாப் பதிவுகளுக்கும் சென்று எல்லாவற்றையும் படிப்பது என்பது எல்லோராலும் முடியாத காரியமே. நேரம் போதாதுதான். :)

  இன்னும் இரண்டு நாட்களில் இந்தத்தொடரும், இதுபோன்ற என் தொடர் தொல்லைகளும் அநேகமாக முடிந்துவிடும்.

  அதுவரை தயவுசெய்து பொறுத்துக்கொள்ளவும்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 5. Excellent Statistics..... உங்கள் பொறுமையும், கடுமையான உழைப்பும் ஆச்சரியப்படுத்துகிறது.....

  மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல பதிவுகளும், பின்னூட்டங்களும் உங்கள் தளத்தில் காணும் ஆர்வத்துடன் நானும்!

  பதிலளிநீக்கு
 6. அந்த அடையைப் போலவே...
  பின்னூட்டங்க்களின் கருத்துகளும் சுவைதான்...

  மற்ற பின்னூட்டங்கள் நாளை தொடருமா?

  பதிலளிநீக்கு
 7. எவ்வளவு அழகான பின்னூட்டங்கள்! பிளாக்கியும் அழகாக மிளிர்கின்றாள்! அருமை அனைத்துமே!

  பதிலளிநீக்கு
 8. //குறும்புகார இளைஞன்... // அட..!

  வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 9. எப்போதோ போட்ட பின்னூட்டங்களை நாங்களே மறந்த நிலையிலும் தாங்கள் மிகவும் அழகாக சிரத்தையாகத் தொகுத்தளித்து சிறப்பிக்கும் தங்கள் பாங்கு மிகவும் போற்றுதற்குரியது. பலருடைய பின்னூட்டங்களே படைப்புகளை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன என்பது உண்மை. தங்கள் உழைப்புக்குத் தலைவணங்கி வாழ்த்துகிறேன் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 10. மிக அருமையான சுவாரசியமான பின்னூடங்கள். சிறப்பான பதிவுகள் சார்.

  பதிலளிநீக்கு
 11. அருமையான உழைப்பு. படங்களெல்லாம் எங்கிருந்து தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றே தெரியவில்லை. நல்ல ரசனையோடு கூடிய படங்கள். இன்று இடம் பெற்ற நண்பர்களுக்கும், அவர்களைக் கௌரவித்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. ஆனாலும் டாக்டர் ஜோக் ரொம்பவும் அக்கிரமம்.

  பதிலளிநீக்கு
 13. கடுமையான உழைப்புதான். படங்கள போடுவதிலும் செம ரசனை.

  பதிலளிநீக்கு
 14. அனைத்து கதைகளையும் அசை போட வைத்து விட்ட அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:38 PM

   //அனைத்து கதைகளையும் அசை போட வைத்து விட்ட அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. //

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   நீக்கு
 15. ஒரு பதிவுக்குள் நுழைந்து வெளியே வர முடிகிறதா.
  ஒரு பதிவுக்குள் பதிவு, அந்த பதிவுக்குள் பதிவு, இப்படியே போகிறதே!

  ஓ, இதுதான் உங்கள் வலைத் தளத்திலேயே மற்றவர்களை கட்டிப் போடும் வித்தையா?

  இந்த வித்தையெல்லாம் உங்களைத் தவிர யாருக்கும் சுட்டுப் போட்டால் கூட வராது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya October 31, 2015 at 3:12 PM

   //ஒரு பதிவுக்குள் நுழைந்து வெளியே வர முடிகிறதா.
   ஒரு பதிவுக்குள் பதிவு, அந்த பதிவுக்குள் பதிவு, இப்படியே போகிறதே!

   ஓ, இதுதான் உங்கள் வலைத் தளத்திலேயே மற்றவர்களை கட்டிப் போடும் வித்தையா?

   இந்த வித்தையெல்லாம் உங்களைத் தவிர யாருக்கும் சுட்டுப் போட்டால் கூட வராது.//

   ஜெயா, மொசக்குட்டி (முயல்குட்டி) போன்ற உங்கள் சுறுசுறுப்புக்கும் ஸ்பீடுக்கும் ... ஆமை போன்ற வேகத்தில் மட்டும் செயல்பட முடிந்த என்னால் உடனுக்குடன் பதில் தரமுடியாமல் போய்விட்டது. கோச்சுக்காதீங்கோ, ஜெ.

   ஏற்கனவே நம் ‘பூந்தளிர்’க்காக என் வாய் என்னையறியாமலேயே, கடந்த ஒருமாதமாகவே, ஒரு பழைய சிவாஜி படப்பாடலை முணுமுணுத்து வருகிறது.

   ‘அவள் பறந்துபோனாளே ...........
   என்னை மறந்து போனாளே ......’

   என்பதுதான் அந்தப்பாட்டு.

   உங்களுக்கும் பின்னூட்டமிட இரண்டே இரண்டு பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன.

   அதன்பின் உங்களுக்காகவும் அதே பாட்டினை தினமும் மேலும் ஒருமுறை நான் பாட வேண்டியிருக்குமே என்ற கவலை இப்போதே எனக்கு ஆரம்பித்துவிட்டது. :(

   என்னவோ போங்கோ. சட்டுப்புட்டுன்னு அந்த இரண்டையும் முடிச்சுடுங்கோ, ஜெயா.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 16. கமண்டுக அல்லா படிச்சிகிட வெரி இன்ட்ரஸ்டிங்கு. இப்பூடி கமண்டு போட்டவங்களலாம் பாராட்டி பதிவு போடோணுமினு எப்பூடி தோணுச்சி.

  பதிலளிநீக்கு
 17. பின்னூட்ம் போடுகிறவர்களுக்கு போட்டி வைத்து பரிசு கொடுப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதில் கலந்து கொள்ள எனக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். எல்லா புகழும் கோபால் சாருக்கே.

  பதிலளிநீக்கு
 18. அருமைப்பதிவு..அழகிய படங்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. வியந்துபோய் நிற்கிறோம் தங்களின் விடாமுயற்சியையும் திரமையும் கண்டு!

  பதிலளிநீக்கு
 20. பின்னூட்டம் இடுவதற்காகப் பின்னோக்கிப் போகையில் சில பதிவுகளைப் படித்து இரசித்து மகிழ்ந்த தருணங்கள் மின்னலாய்த் தோன்றி மறைந்தன நெஞ்சத்தில்! அரிய வாய்ப்பை வழங்கிய திரு வைகோ அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

  பதிலளிநீக்கு